கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
நன்றி முகநூல்.
-
- 22 replies
- 2.8k views
-
-
அகதிப்பொன்னியும்..தனித்துப்போன அவளின் கனவுகளும்.... தனிச்சு ஒருத்தியாய்க் காடுவெட்டிக் கல்லுடைத்து வேலிபோட்டுக் கூடுகட்டி கோழிவளர்த்து ஆடுவளர்த்து சிறுகச்சிறுகச் சேமித்துக் கட்டிய அந்தவீட்டில்த்தான் ஊர்விட்டுப்போயும் போகாமல் வேர்விட்டுக் கிளைபரப்பி எங்கும் வியாபித்திருக்கின்றன போரிற்கு இடம்பெயர்ந்த பொன்னியின் கனவுகள்.... புழுதிவாசம் காற்றிலெழப் புழுங்கிக்கிடக்கும் முற்றத்தில்தான் அகதியாக்கப்பட்ட பொன்னியின் வியர்வைகள் ஆவியாகின.. புழுங்கலும் ஒடியலுமாய்க்காய்ந்த புழுதி முற்றத்தில்தான் சுழிப்பும் முனுமுனுப்புமெனக் கலைக்கும் பொன்னிக்கு அலைத்துத் தண்ணிகாட்டிப் புன்னகையும் சிரிப்புமெனப் புறாக்கள் மேய்ந்துசெல்லும்... ஊற்ற…
-
- 0 replies
- 914 views
-
-
வயல்காட்டில் ஒருநாள்...... ஊரின் ஒதுக்குப்புறம்-அமைதி உறங்கிக் கிடக்குமிடம் தென்றல் தழுவிச்செல்ல-பூக்கள் தெம்மாங்கு பாடுமிடம் ஆசை நோய்பிடித்த-உலகின் அசிங்கங்கள் தீண்டாமல் இயந்திர இரைச்சல்விட்டு-அமைதியாய் இயற்கை உறையுமிடம் போலி மனிதர்களின் -பெருமை போற்றும் உலகைவிட்டு நாடி நின்மதியை-ஒருநாள் தேடி இங்குவந்தேன் ஓடிக் கவலையெல்லாம்-எனைவிட்டு ஒருநொடியில் போகக்கண்டேன் மனிதர் தேடும்நின்மதியோ-இங்கே மலைபோல்க் குவிந்துகண்டேன் கானம் இசைத்தபடி-வண்டுகள் கவிதை படிக்கக்கண்டு நானும் ஒருவனாகி-இயற்கை நதியில் கரைந்துவிட்டேன் வானம் இறங்கிவந்து-இந்த வயற்காட்டில் நடக்கக்கண்டு ஞானம் பெற்றதைப்போல்-எனக்குள் மோனநிலை அடையக்கண்டேன் …
-
- 3 replies
- 1.2k views
-
-
வாழும் பூமி, வைகறை கவ்வும் சாகும் போதினில் தன்னிலை எண்ணும் வாசம் செய்ததும், வனத்தில் சாகசம் புரிந்ததும் ஏன் இன்னம் அடக்கம்? காசு இல்லையே! கைகளில் காசு இல்லையே!! காத்திட வாடா தமிழா!!! மறத்தமிழன் நீயோ மரத்தமிழனாகின்றாய் குறைத்தமிழ் ஏனோ கதைத்து தமிழ்க் குடும்பத்தை அழிக்கின்றாய் வெட்டுவேனாம், பின்பு காட்டுவேனாம் அதிலும் ஆயிரம் முறைகள் நொட்டுவேனாம் கத்துவேனாம், கூடவிருந்துவிட்டு குத்துவேனாம் என்று சொன்னவனெல்லாம் கூடு கூட இன்றி குறுகிக் காய்கின்றனர். வாழவிடம் இன்றி வசைபட்டு சாகின்றனர். ஆயிரம் பாயிரம் எழுதினாலும் ஆசைகள் குறைவதில்லை ஆசைகள் எட்டித்தான் வானத்திற் பறந்தாலும் மழைகளும் பொழிவதில்லை காலத்தின்…
-
- 7 replies
- 1.9k views
-
-
காதல் அம்மாவின் மார்புக்குள் அப்பாவை தொட்டபடி விளையாட்டுப் பொம்மையுடன் தூங்குகிறேன். வெளியில் நான் இலைபோட்டுக் காப்பாற்றிய மழைவெள்ளத்தில் நனைந்த எறும்பு குளிருக்கு என்ன செய்யும்? ஐயோ பாவம்! எல்லாமே என் சொந்தம் சொந்தங்கள் எல்லாமே எனக்காக என்கிறது குழந்தை எனக்குப் பசித்திருக்கும் அவனுக்குப் பால் கொடுப்பேன். எனக்குத் தூக்கம் வரும் அவனைத் தாலாட்டுவேன். தந்தைக்குச் சேமித்த நேரத்தையும் அவனுக்குச் செலவு செய்வேன் என்கிறாள் தாய் என் வலிய தோள்களே வலிபெறுமளவுக்கு சுமப்பேன். முடமான கால்களால்கூட அவனைச் சுமந்து நடப்பேன். வீட்டுக்கொரு கொலுசுச் சத்தம் கூட்டி வந்த பின்பும் கண்ணை இமைபோல அவனை நான் காப்பேன். என்கிறார் தந்தை. …
-
- 3 replies
- 1.7k views
-
-
அகதியானவர்கள்... சுதந்திரமடையா இந்தியாவின் தண்டகாரன்யக்காடுகளிலும் பாலஸ்த்தீனத்தின் இடிந்தகட்டிடங்களிலும் குர்தீஸின் குக்கிராமங்களிலும் ஈராக்கின் வீதிகளிலும் விடுதலைக்காக வீழ்ந்தவர்களின் ஆன்மாக்கள் வீடுகளை விட்டு புழுதித்தெருக்களை விட்டு சுதந்திரமாக ஊளையிடும் தெருநாய்களை விட்டு ஞாபகங்களை மட்டும் எடுத்துச்செல்லும்படி விரட்டப்பட்டவர்களின் முகாம்களில் தங்கியிருக்கின்றன ஈராக்கின் எண்ணெய் ஊற்றுக்கள் இல்லாதுபோகும்படியும் வன்னியின் வனங்கள் வாடிப்போகும்படியும் ஆப்கானின் மலைகள் பொடியாகும்படியும் காக்ஷ்மீரின் வீதிகள் பிளந்துபோகும்படியும் ஆகியிருக்கிறது அகதியாக்கப்பட்டவர்களின் துயர்ச்சுமையால் விரட்டப்பட்டவர்களின் …
-
- 6 replies
- 2.1k views
-
-
மௌனக்காதல்...... ஒத்தையடிப் பாதையில ஒதுங்கிநான் நடக்கையில ஓரக்கண்ணாலே என் உசிர்குடிச்சுப் போனவளே அப்போ போனஉசிர் அப்புறமா திரும்பலையே இப்போ தனிச்சுஎன் உடல்மட்டும் நிக்கிறதே சின்னச் சிரிப்பாலே சிதறவிட்ட புன்னகையால் கன்னக் குழியோரம் கவுத்துஎனைப் போட்டவளே கன்னங் கருங்கூந்தல் காற்றிலாடும் ரட்டைஜடை கண்ணில் இளசுகளை கட்டிவைக்கும் பேரழகு என்னை ஒருசிரிப்பில் எங்கோ தொலைச்சுப்புட்டேன் இன்னும் தேடுகிறேன் இருக்குமிடம் நீயறிவாய் கரும்புப் பார்வையொன்றை காட்டிவிட்டுச் சென்றுவிட்டாய் கலைஞ்ச எம்மனசு இப்போ காற்றிலாடும் இலவம்பஞ்சு *** ஊரும் ஒறங்கிருச்சு ஊர்க்குருவி தூங்கிருச்சு பச்சைப் பாய்விரிச்சு பயிர்கூடத் தூங…
-
- 22 replies
- 2.1k views
-
-
இவர்களை எப்போ புரியப்போகின்றாய்? கழுவும் துடைக்கும் அந்த கண்ணியவான்களை... கலோ என்றால் கிலோ அனுப்பும் அந்த கருணையாளர்களை.... எலும்பு தெரிய உமக்காய் எரியும் தீபங்களை.... எதையுமே தமக்கென தேடாத பாரிகளை.... தலைமுடி துறந்தும் பருவ வயது கடந்தும் தலைவிதியென்று ஓடும் உன்னதமானவர்களை..... புலம் பெயர் தேசத்தை நுகராத இந்த புடுங்கி எறியப்பட்ட அந்த கனவான்களை..... புலம் பெயர் எமது புருசர்களை... இவர்களை எப்போ புரியப்போகின்றாய்?
-
- 6 replies
- 1.4k views
-
-
எது ஈடு இதற்கு...? மனதைத் தாலாட்டும் மாலைத் தென்றல் சுள்ளென எரிக்கா மெல்லிய வெயில் சில்லெனப் பரவும் இரவுக் குளிர் கதகதப்பாக்கும் போர்வைத் துணி இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? இரவில் நிலவு இரையும் மழை பருகத்தேநீர் பாயில் தூக்கம் கனவில் சுகம் கவலையற்ற மனம் இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? கலையும் இருள் காலை நிசப்தம் கண்ணைக் குத்தா கதிரவன் ஒளி விழித்தபடி தூங்கும் சுகம் இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? குளையல் சோறு குளிக்க வெந்நீர் துவட்ட முந்தானை தூங்க உன் மடி இவை போதும் எனக்கு வேறு எது ஈடு இதற்கு...? ஒழுகும் மழை ஒற்றைக் குடை புழுதி வீசும் பூமி வாசம்…
-
- 6 replies
- 1k views
-
-
துரோகங்களையெப்போ புரியப்போகிறாய்…? புனிதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தந்தவன் நீ. அடர்வனப் புதர்களோடும் ஆயுதங்களோடும் ஆறாத்தவம் செய்த அற்புதம் நீ. பெயர்கள் யாருக்கோ பதியப்பட நீ பெயரின்றிப் புகழின்றிக் கடமையை மட்டும் கவனித்த களமாண்ட கடவுள் நீ. ஆயிரங்களாய் புதிய புதிய அவதாரங்களைச் சிருஸ்டித்த சிற்பி நீ. ஆயுதங்கள் மெளனித்து அனைத்தும் ஒரு கனவின் கணங்கள் போல காய்ந்து போனது களவாசம். நீ இன்னும் கனவுகளுக்காகக் கரைந்து கொண்டிருக்கிறாய். உன்னைத் தேடும் முகங்களுக்குள் நீ மூழ்கடிக்கப்படுகிறாய். உனது மனிதம் மிக்க இதயத்தை அவர்கள் மிருகத்தனமாய் மிதிப்பதைக் கூடப் புரிந்து கொள்ளாத ஒரு குழந்தையின் இதயம் உனக்குப் படைக்கப்பட்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
அகதிப்பெருந்துயர்... வாடி இலை சொரிந்து வனப்பிழந்து கூடிக்குலாவிடக்குருவிகளற்று ஆடையிழந்து அம்மணமாய் நின்ற மரஞ்செடிகொடிகள் எல்லாம் வாடைக்காற்று வருடிட வலிமை பெற்று பூவும் கனியுமாய் பூத்துக்குலுங்கி புன்னகை செய்யும் இளவேனிற் காலங்களில் நீலம் ஒளித்திட நிலைகொண்ட இருள்கிளித்து பால்வெளி விந்தைகளாய் பரவிக்கிடக்கும் விண்மீன்களும் பால்நிலவும் வானில் உலாவரும் வசந்தகால இரவுகளில் நீலம் உடுத்திவந்து நிலவுடன் கொஞ்சிடும் நீரலைகள் தாலாட்டும் பேரழகுக்கடலின் பெருநீளக்கரைகளில் ஊரே கூடியிருக்கும் உல்லாச நாட்களில் உணர்வுகள் கிளர்ந்தெழுந்து உயரப்பறக்கும் இனிமைகள் நிறைந்த இரவுப்பொழுதுகளில் நான்மட்டும் தனித்திருந்து உயிர் வத…
-
- 0 replies
- 943 views
-
-
கவிதை தேடி...? இரவின் சுவர்களில் வண்ணமின்றி - எழுதப் படுகின்றன நம் கனவுகள்.. எவனோ ஒருவன் வெறும் - இருட்டென்று சொல்லிவிட்டுப் போகிறானதை.. ----------- ஆம்; நிறையப் பேர் அப்படித் தான் இருக்கிறார்கள், நாம் எப்படி வேண்டாமென்று நினைக்கிறோமோ அப்படி; காரணம் நாமும் – அப்படியென்பதால்!! ----------- நட்பினால் - பெரிய தேச மாற்றம் எல்லாம் வேண்டாம்; நம் அருகாமை நண்பனை முதலில் காப்போம்; அவனிலிருந்து துவங்கும் – நம் தேசமாற்றம்!! ----------- விடியலின் அலாதியில் ஈரம் சேர்த்த கொடூரங்களால் சமூகத்தை குற்றவாளியெனக் கூறி தேடி அலைகிறது மனசு.. கள்ளச் சமூகம்; மனசிடம் பிடிபடுவதே இல்லை!! ----------- காலையில் ஒர…
-
- 2 replies
- 1.4k views
-
-
கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம். போராடித் தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் - ஊர்திரும்பா வேதனையில் ஈழக்கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட - ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி - மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் - சொட்டிய ரத்தம் எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ? விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல் எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ? வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில் துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும் மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே.. சிரிக்கும் சிரிப்பில்…
-
- 2 replies
- 1.3k views
-
-
அந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா! கவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா புலி ஆகாயம் தானே பாய்ந்ததடா வென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே குன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை சென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை களம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை வெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை பாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட துளைக்கவில்லை சாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை பாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை சென்றிடும் போதும் சிரித்திடும் முகம் பகை கொன்றிடும் போது கலங்குது மனம் என்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ …
-
- 22 replies
- 4.3k views
-
-
நான் ஒர் முற்போக்குவாதி வேண்டாம் தனி மனித வழிபாடு மார்க்ஸ் எனது மானசீக குரு மாவோ சித்தாந்தம் மானிடத்தின் சிறப்பு பெடல் கஸ்ரோ பெருந்தலைவன் நவயுகத்தின் செகுவாரா புரட்சியின் செந்தணல் அம்பேத்கார் தலித்களின் அழியாச் சுடர் நான் முற்போக்குவாதி வேண்டாம் தனி மனித வழிபாடு கவிக்கோர் கண்ணதாசன் கதைக்கோர் சுஜாதா கலைக்கோர் கமல் கடவுளுகோர் பாபா புலிகளின் தோல்விக்கு காரணம் தனிமனித வழிபாடு
-
- 7 replies
- 2.3k views
-
-
கைவிடப்பட்ட மந்தைகளும், கரணம் போடும் மேய்ப்பர்களும்.... -பிடுங்கி - கோடைஇடியிடித்து வானம் மின்னியது. பூமி நடுங்கியது. கரு நாகங்கள் மேலெழுந்து ஊரத்தொடங்கின!! நரிகள் பிலாக்கணமிட்டழுதன! மந்தைக் கூட்டம் சிதறியது....... எது திசை??? எது போகுமிடம்??? தெரியாது திகைத்தன மந்தைகள். மேய்ப்பர்களின் கையசைவிற்காய் ஏங்கித் தவித்தன அவை. மேய்ப்பர்களைக் காணவில்லை கைவிட மாட்டார்கள். நம்பிக்கையோடு, மேய்ப்பர்களைத்தேடத் தொடங்கின மந்தைகள்!!! வனாந்தரங்களில்..... கட்டாந்தரைகளில்.... முகாம்களில்.... காடுகளில்..... சுடலை வெளிகளில்..... தெருவோரங்களில்...... எங்கு மேய்ப்பர்கள்???,எங்கு மேய்ப்பர்கள்???…
-
- 6 replies
- 1.6k views
-
-
-
கடுப்பில் இருக்கும் டி ராஜேந்தரிடமும் வாலியிடமும் டக்குவப்பற்றி கவிதை பாடச்சொன்னா எப்புடி இருக்கும்...ஒரு கற்பனை முதலில் டி ராஜேந்தர்... உன்முகத்தில் வளந்திருக்கு தாடி உங்கூட உள்ளதெல்லாம் கேடி மகிந்தயிடம் போயிடுவா ஓடி வாலாட்டி வாங்கிடுவா கோடி ஊரைச்சுத்தி உலையில் போடும் தாடி நீ மகிந்தைக்கு வாச்ச உலை மூடி சிங்களவன் கோடியினை தேடி பதுங்கிடும் நீ ஒரு பேடி பாடையில போகணும் உம் பாடி அதைப்பாக்கணும் நான் சந்தோசத்தில் ஆடி ஏய்..டண்டணக்கா..ஏய்..டணக்கணக்கா.... இப்ப வாலி.. சனியனே...சனியனே... சனிக்கே...சனியனே... எங்களைப்பிடிச்ச... ஏழரைச்சனியனே... மங்காச்சனியனே... மானங்கெட்ட சனியனே... எந்தக்கோயில் போய் எள்ளெண்ணெய் எரிச்சாலும் எங்களைத…
-
- 0 replies
- 1.2k views
-
-
தோழர் பாட்டு எட்டூரும் பாத்திருக்க என் ஆத்தா உச்சி மோர நான் வளர்ந்தேன் புழுதிக்காட்டில் எங்கூட அவன் வளர்ந்தான் சிற்றோடை போல சிலுசிலுக்கும் தென்றல்போல பற்றாடை வரிசைபோல பஞ்சு வண்ண மேகம்போல பட்டாலே மனதிலே படபடக்கும் காலங்கள் சுட்டாலும் எரிக்கேலா சுவையான கனவுகள் வற்றாமல் வரிசையாய் வந்து குதிச்சு நெஞ்சார சுழன்றடிச்சு நினைவுகள் பறக்கிறதே சிற்றாடை கட்டி சிலிர்த்துக்கொண்டு பேசும் உற்றாரும் ஊராரும் உரிமை கொண்டாடா பொற்றாமரை குளத்தடி பொதிகை மர நிழலில் பொழுது விழும் நேரம் பொரி உறுண்டை வாங்கி வந்து பொத்திப்பொத்தி நீ திண்ண பொறுக்காமல் நான் பொங்க பத்திரமாய் மறைத்து பையிலே வாங்கி வந்து பரிவுடனே நீ தர பணிவுடன் நான் ஏற்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
"என்னதான் நகைச்”வை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்''... என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு... 30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு... இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க.. கமல் படம். மன்மதன் அம்பு. மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு வந்து விட்@டா@மா என்கிற அளவிற்கு ஒரே கமலஹாஸன் களும்! கமல ஹாஸிகளும்! அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில் பதுங்கிக் கொண்டு நூல்தனம் காட்டும் அவரை பரமக்குடி பையன் என்றும் பெரியாரின் பிள்ளை என்றும் பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள் இந்த அம்பு... இராம பக்தர்களின் கைகளிலிருந்து …
-
- 34 replies
- 5.4k views
-
-
அரோகரா! அரோகரா! அரோகரா அரோகரா நல்லூர்க் கந்தனுக்கு அரோகரா வண்ணமயில் ஏறிவரும் வடிவேலனுக்கு அரோகரா முருகா! என்னப்பா இது? இனம் மொழி தாண்டி உன்ர வாசலிலை நிறையுது பக்தர்கள் வெள்ளம் கடையில விக்கிற பிள்ளையார் சிலையில மேடின் சைனா இருக்கு கடைக்குட்டிக்கு வாங்கிற அம்மம்மா குழலை வடக்கத்தையான் விற்கிறான் ஐப்பான் காரன் வந்து “சோ” றூம் போடுறான் பாகிஸ்தான் காரன் வந்து பாய் வி(ரி)க்கிறான் கண்ணுக்கு தெரியிற இடமெல்லாம் துரோகிகள் கூட்டம் கண்கட்டி வித்தை காட்டுது சிங்கள தேசம் வெள்ளை வேட்டி கட்டி சுது மாத்தையாக்கள் வெறும் மேலோட களு பண்டாக்கள் போதாக்குறைக்கு விமானச் சீட்டுக்கு…
-
- 8 replies
- 2.6k views
-
-
எங்களுக்காக தங்கள் இசை வாழ்வையே அர்ப்பணம் செய்யும் தேனிசை ஜயா அவர்கள் facebook ல் வலம் வருவது சும்மா தட்டிய போது கிடைத்தது. அனைவரும் அங்கம் ஆகி மற்றைய பாடகர்கள் போல் பெரும் அங்கத்தவர்களை பெற ஊக்குவிப்போம். http://www.facebook.com/pages/Thenisai-Sellappa/73859321965#!/pages/Thenisai-Sellappa/73859321965
-
- 0 replies
- 1.5k views
-
-
தொலைந்த மனிதனை தேடிக்கொள்... உன்னுடைய பாதைகளை நீயே அமைத்துக்கொள் அடுத்தவன் பாதைகளில் ஆசைப்படாதே.. உன்னுடைய சிலுவைகளை நீயே சுமந்துகொள் அடுத்தவன் தோளுக்கு அதிகாரமிடாதே.. உன்னுடைய செடிகளை நீயே வளர்த்துக்கொள் அடுத்தவன் தோட்டத்தில் பூக்களைப்பறிக்காதே.. உன்னுடைய குறைகளை நீயே சொறிந்துகொள் அடுத்தவன் குறைகளை சொறிய நினைக்காதே.. உன்னுடையா மதத்தில் உண்மகளை தேடிச்செல் அடுத்தவன் மதத்தில் ஓட்டைகளைத்தேடாதே.. உன்னையே நீ தேடி உண்மைகளைக்கண்டு உன்னுள் தொலைந்த மனிதனை மீட்டுக்கொள்
-
- 0 replies
- 1.3k views
-
-
வருக புத்தாண்டே... வரும் புத்தாண்டே வசந்தங்களோடு வாழ்த்துக்களையும் சுமந்துவரும்-உன் வரக்கரங்கள் தாய்மொழியை மறந்து தன்மானம் இழந்து வரலாற்றைத்தொலைத்து வளைந்து போன எம் மக்களின் கூன் விழுந்த முதுகுகளை நிமிர்த்திப்போடட்டும் சந்திகளில் நின்று சதிராட்டம் போடும் எங்கள் இளைஞர்களின் மூளைகளில் தன்மானச்சுடரெழுப்பும் தாய்நிலப்பற்றமைக்கும் அக்கினி விதைகளை அள்ளித்தூவி-அந்த உக்கிர வெம்மையிலே உன்கரங்கள் உலகைப்புடம்போடட்டும் கஞ்சிக்காய் கையேந்தும் ஏழைகளின் கரம்பற்றி அஞ்சக என்றழைத்து அவர்களுக்கோர் வழியமைத்து உன்கரங்கள் வஞ்சனையற்ற அவர் வயிறுகளில் சிறிதமிழ்தத்தை வார்த்துச்செல்லட்டும் உறவுக…
-
- 0 replies
- 2.2k views
-