Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நிர்வாணமாக கொலையுண்டவர்களின் பின்பக்கம் தேங்கிய நீரில் துடித்து மிதந்து கொண்டிருக்கின்றன பிடரிகளும் கண்களும் கைகளும். நிருவாணம் எல்லோரது உடைகளையும் களைந்து விடுகிறது. மிகவும் அஞ்ச வைத்தபடி கோணல் துவக்கு தலையின் பின்பக்கம் துளையிடுகிறது. நிலம் பரிதாபமான குருதியால் நனைகிறது. யாருடைய முகமும் தெரியவில்லை. எல்லோரிடமும் எங்கும் குருதி கொட்டிக்கொண்டிருக்கிறது. பேரூந்திலும் நகரத்தின் உள் தெருக்களிலும் வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டியிலிரு

  2. Started by theeya,

    ஒற்றை வார்த்தை வேலை முடித்து மாலை வேளையில் சாலை நெரிசலில் சிக்கித் தவித்து விரையும் வண்டியில் வீடு விரைந்து இருட்டும் பொழுதிலே கட்டியணைத்து நெஞ்சில் புதைத்து முத்தம் கொடுத்து ஆரத் தழுவி உச்சி மோர்ந்து உள்ளம் குளிர என் செல்லக் குழந்தை சொல்லி அழைக்கும் "அம்மா" என்ற ஒற்றை வார்த்தையில் அத்தனை களைப்பும் அமுங்கிப் போகும்

    • 0 replies
    • 596 views
  3. எமக்கொரு நாடு கேடா.... வெறுப்பு உமிழும் காலம் மீது வாழ்வு சூழ் கொள்கின்றது ஒரு கண்ணை மறு கண் பிடுங்குது தான் பார்க்கா காட்சிதனை நீ பார்த்தல் ஆகாது என ஆவேசம் கொள்ளுது எதிரியின் தணல் எடுத்து மறுகண்ணை சுடுது இது எம் சாபம் யுகங்கள் தோறும் நாம் இப்படி தான் இருந்தோம் ஒரே காட்சியை ஒவ்வொருவரும் வர்ணம் பூசி பார்த்தோம் என் வர்ணம் பார்க்காத கண்னை வீதியின் முடிவில் குச்சொழுங்கையில் குடி வைத்தோம் எம் கண்ணை நாமே குருடாக்குவோம் எம் கைகளில் நாமே விலங்கிடுவோம் வரலாற்றின் நீண்ட பக்கம் எங்கும் எம் தோல்வியை நாமே எழுதிக் கொள்வோம் எம் முதுகெலும்பில் எதிரியின் மாட்டுச் சாணத்தை அப்பியது நாம் எம் குடிசைகளி…

  4. Started by காவியன்,

    நெருப்பு தமிழனின் வாழ்வை கருக்க வந்த பிறப்பு..... முள்ளிவாய்க்காலில் பரிசளித்தாய் வகை தொகையின்றி இறப்பு.... தமிழரின் அடிவயிற்றில் நின்றெரியும் வெறுப்பு.... தமிழன் பட்டினியாம் நீயோ சிங்களனின் அடுக்களையில் நின்றெரிவாய் சிரித்து.... எங்கள் எதிரிக்கு அமைந்துவிட்டாய் அவன் சொல்கேட்கும் செருப்பு.... மறுபடியும் ஓர் நாள் எதிரிகளின் படையெரிக்க அக்கினிக்குஞ்சாய் பிறந்திடுவாய்.... அதைப் பார்த்து எதிரி ஓடிடுவான் உன்னை வெறுத்து.... காவியனின் சிந்தனைகளில் இருந்து.... அன்புடன் காவியன்

  5. Started by theeya,

    உலகம் இப்போ ஒரு உருண்டை வீடு அதில் மனிதர் எல்லாம் -தினம் அலையும் வெறும் கூடு இயந்திரங்கள் மனிதராகி வேர்வை சிந்தாது உழைக்கலாம் மனிதரெல்லாம் ஒன்று கூடி இயந்திரமாய்ப் பிளைக்கலாம் காலம் போற போக்கில் நாளை கலியாணங்கள் நடக்கலாம் ஒற்றைப் பிள்ளை பெற்றிடாத தம்பதியர் கூடியே தத்துப் பிள்ளை தத்தெடுக்க இயந்திரங்கள் சமைக்கலாம் வீட்டுக் காவல் வேலைகென இயந்திரத்தில் நாய்களாய் தோட்டம் முதல் தொலைவு வரை ஓடியோடி உழைத்திட இயந்திரமாய் மனிதனை சந்தையிலும் வாங்கலாம் .

    • 2 replies
    • 874 views
  6. இனிய வணக்கங்கள், வடலிபதிப்பகம் மூலம் வாங்கிய வசீகரனின் 'தமிழர் திருநாள்' புத்தகத்தை வாசித்தேன். வாசிச்ச அரைவாசியில... உணவு அருந்தச்சென்றபோது சுமார் பத்துவருசங்களின் முன்னர் நான் 'பகிடிவதை' எனும் தலைப்பில எழுதின கவிதை ஒன்று திடீரெண்டு நினைவில வந்திச்சிது. அதை உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன். பகிடிவதை ஆவென்ற ஆகாசம் வாயினுற் போய்ப்புத்தி பாவென்று பன்னீரால் கால்கழுவிக் கலையாட பூவொன்று தோன்றி புத்தாடை தான்கேட்கச் சோவென்று பெய்தமழை சொக்கிப்போய் நின்றது! நீர்கண்டு மாங்கன்று கிளைவிட்டுப் பழஞ்சொரிய ஊர்நண்டு உயில்காட்டி வேரினுள் இடம்தேட பார்வண்டுப் பிள்ளைகளும் விதையுள் விளையாட சீர்கொண்டு வந்தகன்று கண்ணீர் விடுகிறது! வாழா வெட்டியிவன்! வாடிய மட…

  7. Started by analai theevaan,

    தோற்று விட்டோம் நேற்றய தோல்விகண்டு விழ்ந்து விட்டோம் கலைத்து விட்டோம் நாளைய கனவும் தொலைத்து விட்டோம் இதயம் மட்டும் துடிக்கிறது என்றோ ஒரு நாள் எம்மக்கள் விடிவுக்காய்

  8. விழவிழ எழுதிய வீரவணக்கம் என்னவானது ? விழவிழ நீங்கள் வீரவணக்கம் எழுதினோம் நாங்கள். அழஅழக் கவிதையும் ஆறாத்துயர் நிறையக் கண்ணீருமாய் கடைசிச் சொட்டு வீழ்ந்து காயும் வரையுமாய் நினைவள்ளி நினைவள்ளி நீண்ட தூரமெங்கும் நெருப்பு மூட்டினோம். இழந்தவை யாவையும் எழுகையும் நிமிர்வும் என்றெம் எழுத்துகள் யாவிலும் எழுதியே அழிந்தோம். பரணி பாடினோம் பாவினால் உங்களைப் பரவசப்படுத்தியும் பாடையின் முன்னின்று போர் முரசு கொட்டியும் சோடித்து மறைத்துச் சுதந்திரம் பாடினோம். ஈரம் சொட்டச் சொட்ட நீங்கள் சிந்திய குருதியில் எழுதினோம் ஏராளம் ஏராளம்…… கட்டாயங்களை மறைத்து அவை கட்டாயமென்று எழுதினோம்…. காதல் வாழ்வு குழந்தைகள் உறவு முழுவதும் காப்பரண் தேட…

  9. Started by kulir,

    நான் வாழ்ந்த மண்னை நினைதத்துப் பார்த்தேன் . சுடும் வெயிலில். நடைசெய்தாலும் மரநிலலின் காற்றின் குளிர்மை. நெடும் துரம் நடை செய்தாலும் அந் கால் பட்டமண்ணின் ஒருசுகம். வியர்வை சிந்த சிந்த . தாகத்தை தேடி போனேன் தரைகளில் இருந்த மரத்தின் கனிகளை உண்டேன். தண்ணீரே தேவை இல்லை . திரும்ப வீடு வந்தேன். சுவையுடன் சமைத்துக்கிடந்த உணவை சுவையாகவே உண்டேன்: மாமரகிளையில் ஊஞ்சல் கட்டி கால் மேல் கால் போட்டு விசுகின்ற காற்றின் ஒளியில் நித்திரை செய்த நாள் அந்தநாள். இன்று என்மண்ணையும் உறவுகளையும் நினைத்து நினைத்து உள்ளம் வருகி உருகிபோகிற மொளுகு திரி போல் என் மனம் உருகிறதம்மா . நான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்கை . திரும்ப வருமா திரும்ப வருமா

  10. Started by sathiri,

    Tuesday, September 20, 2005 அவள் அவள் வீட்டு கதவு தானே திறக்கும் உள்ளே அணைப்பதற் கென்றே ஏற்றப்பட்ட விளக்கெளியில் உரிவதற்காய் உடுத்திய சேலையில் கலைப்பதற்கென்றே செய்த ஒப்பனையில் கசக்குவதற்காக சில மலர்களை காதேரம் வைத்து அழிப்பதற்காக வைத்த அகன்ற அழகிய பொட்டுடன் காத்திருக்கிறாள். உடம்பில் எங்கும் உணர்சியில்லை வயிற்றைதவிர என்வாயிற்று இன்று ஆணினமே அழிந்துவிட்டதா சுனாமி வந்து சுத்திக்கொண்டுபோய்வட்டதா படுக்கைவிரிப்பு பத்திரமாய் இருக்கிறதே வைத்தபொட்டு வைத்தபடியே இருக்கிறதே அதுஅழியா விட்டால் அவளிற்கு அமங்கலமல்லவா செல்லாத இராத்திரி சிறுகச் சிறுக விடியும்பகல் ஜயோ..பட்டினிப்பகலா?? எங்கோ ஒருகட்சி தலைவன் …

    • 4 replies
    • 816 views
  11. அ. எலும்பும் தோலுமாக தூரத்தில் முட்கம்பி ஒனறில் அம்மா கொழுவப்பட்டிருந்தாள். இருவரது முகங்களையும் முட்கமபி கிழித்துத்கொண்டிருக்கிறது. மெலிந்த கைகள் முட்கம்பிகளுக்குள புகுந்து கலந்துகொண்டிருக்க நடுவில் இரண்டு முட்கம்பிச் சுருள்கள் ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கப்பட்டிருக்கிறது. அம்மா புன்னகையை இழந்துபோயிருக்கிறாள். தாழ்ந்து மறைந்துவிட்ட கண்களுக்குள் படிந்த புழுதியை கண்ணீர் கரைக்கிறது. காலத்தின் பெருந்துயர் நிரம்பி பிள்ளைகளுக்காக ஏங்கும் அம்மாக்கள் பலர் என் அம்மாவின் பின்னால் வரிசையில் நிற்கின்றனர். எல்லா அழுகைகளும் எல்லா விசாரிப்புக்களும் பரிமாறல்களின் துயரங்களும் ஓலைக்கொட்டிலினுள் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அம்மாவி…

  12. சுதந்திரத்தைத் தேடி….ஓடி….டயானா!........ மனிதநேயங்கள் உன்னுள் நிறைய இருந்தன -உன் மலர்ச்சிரிப்பினால் அவை உலகை மயக்கின!..... பிரபலங்களோ என்றும் உன்னை பின்தொடர்ந்தன உன்பிரிவினிற்கும் ஏனோ அவை துணையாய்ப் போயின!...... தாய்மை கொண்ட பெண்மையாலே பலர் பெருமை கொண்டனர் தாரமாகி உலகை நீயும் உன்பால் கொண்டனை! கோடி கொடுக்கும் அரண்மனையில் கூடி வாழந்;தனை-இரு குழந்தைகளைப் பெற்றுநீயும் அந்த தாய்மை கண்டனை! ஆண்இனத்தின் உரிமைகளோ ஆதிகமானவை-அதிலும் அரண்மனையில் வாழ்ந்துவிட்டால் அவை புனிதமானவை! பெண்மையிலும் உணர்வுகள் தான் பள்ளிகொள்வதால்-அதைப் புரிந்துகொண:டு பின்நாள் நீயும் வுpலகி வாழ்ந்தனை! பெற்றுவிட்ட…

  13. இங்கு விசமாகிபோகும் மனிதர்களும் உண்டு உணர்வுகளை புரிந்துகொள்ளாத மனிதர்களும் உண்டு உடுத்தியிருக்கும் உடையின் உள்ளிருக்கும் பாகத்தை பார்க்க துடிப்பவர்களும் உண்டு சக மனிதனை தாக்கி அளிக்க துடிப்பவர்களும் உண்டு சக மனிதனின் உணர்வுகளை கொச்சைபடுத்தும் மனிதர்களும் உண்டு ஆறறிவு படைத்த மனிதனுக்குள்ளே எத்தனை விதமான எண்ணங்கள் ஐந்தறிவு படைத்த விலங்கினங்களுக்கு இல்லாத அத்தனை குணமும் இங்கு மனிதர்களுக்கு இருக்கிறது அத்தனையும் வன்முறையா? இல்லை குரூரமா? புரியாத புதிராய்!

  14. பிணக் காடுகளில்..... கவிதை - இளங்கவி.... பிணக் காடுகளில் பேய்களின் ஊர்வலம் நடக்க..... நாம் பிறந்த தேசம் நாயின் வாயில் கேவலமாய்க் கிடக்க..... ஈழத்து வளங்களெல்லாம் எதிரியின் காலடியில் நசுங்க.... எம் உறவின் எலும்புகளை அவன் நாய்கள் திண்டு ருசிக்க.... ஆடுகிறான் பேயாட்டம் அதை அடக்க இல்லை ஓர் கூட்டம் உலகத்தின் அசிங்க அரசியலில் அழிந்தது எம் உயிரோட்டம்.... அன்றொரு நாள் இரவில்.... ஓலைக்குடிசை இடுக்கினிலே ஒற்றை நிலவைப் பார்த்துக்கொண்டு மயங்கிய பூவினிலே மது அருந்தும் வன்னிவண்டு.... இன்றைய இரவினிலே..... இரவின் கோரப்பல்லின் இடுக்கினிலே கொடிமல்லிகைகள் சிக்கிக்கொண்டு எதிரியின் கோரப்பசிக்கு சிதையும் நம் மலர்கள் இன…

  15. சாம்பலாக்கப்பட்ட நிலத்தின் நடுவிலிருக்கிற சிதைக்கப்பட்ட நகரம் ‐ தீபச்செல்வன்: :தீபச்செல்வன் 01 மாடுகள் அலைந்து திரிந்து கண்ணிவெடிகளையும் மண்ணையும் மேய்ந்து கொண்டு சாணியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக நகரத்திற்கு வேறு பக்கம் திரும்புகின்றன. எரிந்து கருகிப்போயிருக்கிறது சனங்களின் நிலம். அழிந்து சமதரையாகிப்போன வெளியில் பேய்கள் வாழ்ந்து திரிகிறது. நிலம் எரிந்து சாம்பல் பூத்திருக்க தலைகள் பிடுங்கப்பட்ட மரங்கள் மண்ணில் குத்துண்டு நிற்கின்றன. தலையிழந்த பனைகளால் மிகுந்த வெளியில் நோடட்மிடுகிற காவலரண்களை சுமந்து நிற்கிறது வேர் பட்ட பனங்குத்திகள். உப்பு விழைந்த வாடிகளில் இல்லாத சனங்களின் குருதியும் துயரும் சேர்ந்து விளைந்து…

  16. யார் இவர்கள்..... கவிதை - இளங்கவி தமிழர்களை அழவைத்த அந்தக் கொலைக்காட்சி இதுவும் போதாதா உலகத்துக்கு எங்கள் இனப்படுகொலைக்குச் சாட்சி.... இறந்த உடல்களெல்லாம் நிர்வாணமாய் கிடக்க உயிருள்ள ஓர் உறவின் உயிர் குடிக்கிறது துப்பாக்கி..... அவர் உதிரம் நிலம் நனைக்க அவன் சிர்ப்போசை கேட்கிறது.... நாம் சிந்திய இரத்தத்தில் அவன் சந்தோசம் மிதக்கிறது..... யார் இவர்கள்....? எமைக் காத்த தெய்வங்களா.... இல்லை..ஈழத்து இளம் மயிலா... அல்லது... எம் ஊரு காளைகளா.... எம் மொட்டுக்களின் பெற்றோரா...? புலியாக இருந்தாலும் பொதுமகனாக இருந்தாலும் அவன் இறந்தது உனக்காக..... உன் தேச மீட்புக்காக....... கண்ணீரும் வற்றி விட்டோம் கலங்க நேரமில்லை... ப…

  17. நான் துரோகி! நீயும் துரோகி! என்னையும் உன்னையும் பெற்ற பெற்றோர் துரோகி! பெற்றவரைப் பெற்ற பேரன்,பூட்டன் முப்பாட்டனாரும் துரோகி! அவன் துரோகி! இவன் துரோகி! அவனைத் தெரிந்த அவள் துரோகி! அவளுக்கு தெரியாமல் தெரிந்த அதுவும் துரோகி! கடல் துரோகி! காற்று துரோகி! கடலையும் காற்றையும் இணைக்கின்ற கதிரவன் துரோகி! கதிரவனை சுற்றிவருகின்ற பூமியும் துரோகி! கடவுள் துரோகி! கடவுளுக்கு கோயில்கட்டிய பக்தன் துரோகி! பக்தனுக்கு சோறுபோட்ட பக்தை துரோகி! பக்தையுக்கு பின்னால் அலைந்த பித்தனும் துரோகி! புத்தனும் துரோகி! பறவைகள் பல்லி பாம்பு பூச்சி புழுக்கள் அனைத்தும் துரோகி! நினைத்துப்பார்க்க நினைவில் வருகின்ற நினைப்பும் துரோகி! நினைப்பைத் தூண்டுகின்ற நரம்பு துரோகி!…

  18. Started by nochchi,

    புதிய பௌத்தம் யு9 பாதை திறந்தாயிற்று ஈழத்தமிழர்களின் வாழ்வுபோல் தலை இல்லாத் தென்னையும் பனையும் தான் தெருவெங்கும் தோற்றுன்றன. துக்கத்திலும் அவமானத்திலும் தலைகுனிந்து நிற்கும் மரங்களுக்கும் எம்மக்களுக்கும் துப்பாக்கி காட்டியே ஆறுதல் சொல்கிறார்கள் படைகளும் அவர்களின் குடைகளும். துப்பாக்கி தூக்கிய கைகள் வெறுமையாக உயர்த்தப்பட்டபோது வெளிநாட்டில் எம்தமிழ் மனங்கள் விதைவையாய் போயின. மாறிநின்றவர்களுக்குக் கூட மாண்டவர்கள் தமிழரின் அடையாளமாய் போயினரே. திவசத்துக்குக் கூட அடையாளம் இன்றி வன்னி வடுவின்றி எலும்புகள் கூட எரியத்தொடங்கிவிட்டன- ஆனால் …

    • 2 replies
    • 946 views
  19. படுக்கையில் கிடந்தபடி பாதை கேட்காதே எழு….. உடல் முறித்து, பத்தடி நட. பாதை தெரியும். குப்புறக் கிடந்தால் சுவாசமே சுமைதான். திரும்பிப் பார். விடுதலைக்காக கடந்த தணற்காடுகளும், சதுப்பு நிலங்களும் பார்வையில் புலப்படும். தணற்காடுகளில் தீய்ந்தபோது நெஞ்சம் வேகியது சதுப்பு நிலங்களில் புதைந்தபோது சலனம் ஆடியது. மீள எழவில்லையா? களத்திலேயே மீண்டெழுந்த உனக்கு புலத்திலேன் தடுமாற்றம்? போராட்டக்களம் மாறியிருக்கிறது. இப்போது சூறாவளி அவ்வளவே. ஒட்டுமொத்த இன அழிப்பை உலகம் கணக்கெடுக்கிறது. துயர் கொல்லுதென்று நீ முடங்கிவிட்டால் இழப்புகள் கூட மௌனித்துப் போகும். அழுவதாகிலும்... அம்பலத்தில் நின்று அழு. இது உனக்கு மட்…

  20. எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன எங்கள் இமைகள் கவிந்துள்ளன எங்கள் உதடுகள் அண்டியுள்ளன எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம் எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக எங்கள் முதுகில் கசையால் அடிக்குக எங்கள் முதுகுத் தோல் பிய்ந்துரிந்து போகட்டும் தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும் கவிந்த இமைகள் ஒருநாள் உயரும் இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும் கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும் அதுவரை நீங்கள் எங்களை ஆள்க அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக சண்முகம் சிவலிங்கத்தின் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பிலிருந்து (பலர் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள். இருந்தாலும் இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதாகத் …

  21. கண்ணெதிரே கலையுமா கனவு? மண்ணெனவே உதிருமா மனது? நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம் ஒப்பேற முன்னரே உருகியா போகும்? இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை? இது காலச்சுழி சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது. சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும். தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும். நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும். மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும். மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும். உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும். இன்றைய பொழுதுகள் எமக்கானவை. ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர் முக்காற்சுற்று முடித்துவிட்டது. சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ள…

  22. Started by Thamilthangai,

    சூரியனாய் இரு! சூரியனாய் இரு! சூரியனாய் இருப்பதில் பெரும் சுகம் பூமியும் கூடவே சுற்றிச்சுற்றிவரும்! கொடும் வெம்மை என்று வைதாலும் தன் பாதையை விட்டு விலகுவதில்லை "பரிதி" என்பதுதான் எத்தனை பொருத்தம் துவைத்து வைத்த ஆடைக்கும் - வற்றல் வடாம் மிளகாய் என நாக்குக்கு சுவைதேடும் பல இங்கு உலர்த்தவும் மழைக்கும் இவனே காரணமாகவும் மலர்கள் மலைகள் செழிப்பின் வண்ணமும்! உடலின் உறுதி சுறு சுறுப்புக்கும் இவனே காரணம் ஆம் இவனெம் தாமரையின் காதலன்! மேகம் மறைக்க கூடும் நாயும் குரைத்து ஓடும்! இவன் சிரிப்பின் ஒளிர்வே கதிராய்! என்றும் தன் கடமை விட்டு விலகா சூரியனாய் இருப்பதன்றோ பெரும் சுகம்!

  23. மே 17 இன் பின்னரான முடிவில் எங்காவது ஒமு முகாமில் நீ அடைந்திருப்பாய் ஆராவது கொண்டு வரும் மொபைலில் தொடர்பு கொள்வாய் இருக்கிறேன்……, என்ற செய்தி வரும் சந்திப்போம் மீண்டுமெனக் காத்திருந்த காத்திருப்பு காலாவதியாகிறது தோழா….. நீண்டநாளின் பின்னர் நேற்றிரவு வந்த அழைப்பில் உன் அக்கா பேசினாள்……. ‚‘அவனைப்பற்றி ஏதும் அறிஞ்சியளோ…..? எங்கினையும் இருந்தா என்ர தம்பி தொடர்பு கொண்டிருப்பான்…. எங்கையிருக்கிறானோ‘‘…..? ஏதாவது தெரியுமோ….? அவளது இனிமைக்குமாறான கதையிலிருந்தும் அம்மாவின் வளமைக்கு மாறான பேச்சிலிருந்தும் நான் புரிந்து கொள்வது….. இல்லையோ நீயென்று அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பத் தொடங்குகிறார்கள்…… அதிகம் கவலையுறுகின்றார்கள் …

    • 4 replies
    • 1.3k views
  24. Started by theeya,

    மூன்று கவிதைகள் இங்கு மூன்று கவிதைகள் பற்றிய தொகுப்பினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். உங்களின் கருத்துக்களினை முன்வையுங்கள். சங்ககாலத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய பாரி வஞ்சனையால் இறந்தபின்னர் பாரிமகளிரின் நிலைகண்டு எழுதப்பட்ட ஐந்து வரிகளில் அமைந்த கண்ணீர்க் காவியத்தின் தொடர்ச்சி இன்றுவரை நீண்டுகொண்டிக்கின்றது. "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே" (கலித்தொகை - முல்லை - 13) நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வரும் இன்றைய கவிதைகளிலும் சங்க காலத்தின் சாயலைக் க…

    • 0 replies
    • 899 views
  25. எங்கோ பார்த்தேன் அங்கே தொலைந்தேன் என்பேனே அது இவளைத்தான் என்றோ பார்த்தேன் அன்றே தொடர்ந்தேன் என்பேனே அது இவள் காலடித்தடம் தான் நான் மெல்லிசை ரசித்த முதல் பொழுதொன்று சொல்வேனே அது பிறந்தது இவள் கொலுசில் இருந்துதான் நான் தினம் தினம் இசைத்திடும் பல்லவி இருக்கிறதே அது பிறந்தது இவள் மொனத்தில் இருந்துதான் சூரிய தேவன் ஏவிய கதிராய் எனைச் சுட்டெரித்த கதை சொல்வேனே அது இந்தக் கண்கள் தான் வண்டுக்கு மலர்ந்த வாசமலரையெல்லாம் சூடிக்கொள்ளும் வசியக்காரி என்பேனே அவள் இவள்தான் உன் புன்னகை என்பது என்ன விலை என எனைப் பிறர் கேட்பதெல்லாம் இவள் எனைப் பார்த்துச் சிரித்த பிறகுதான் அப்பாவிய் நான் அன்று அழுது புரண்ட கதை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.