கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
கண்ணே இதுவரை துப்பாக்கியும் தோட்டாவும் போல் இணைந்திருந்த எம்காதல் இத்துடன் முடிந்ததா என்று எண்ணாதே இது என்ன சாதாரண காதலா தண்ணீரும் உரமும் இட்டா எம்காதலை வளர்த்தோம் இரத்தமும் தசையும் இட்டல்லவா எம்காதலை வளர்த்தோம் எல்லாளன் துட்டகைமுனு காலத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக வேர்விட்டு தளிர்விட்டு பூவிட்டு கனிவிட்ட காதலல்லவா இத்தனை இலகுவில் அழிந்துவிடுமா என்ன என்மேல் நீ கொண்ட காதல் மாறாதிருப்பது போல உன்மேல் நான் கொண்ட காதலும் அப்படியே இருக்கும் காலம் வரும் வரை காத்திரு கண்ணே நான் மீண்டும் உன்காட்டில் புலியாக வருவேன் அதுவரை உன்காலில் முள்ளாகவாவது இருப்பேன் http://gkanthan.wordpress.com/index/eelam/kaathal/
-
- 8 replies
- 5k views
-
-
-
என் தேசத்து உறவுகளே நாசமாகி கொண்டிருக்கும் -ஒரு நகரத்தின் குரல் இது இப்போ பேரம் பேசப் படுவது - அங்கே உயிர்களும் உடல்களும் நாடு விட்டு நாடு வந்து கூடு இழந்தவர் நாம் -பெரும் பாடு பட்டு நாம் வளர்த்த -நல் தேசியத்தில் பிறந்தவர் நாம் காடு வெட்டி களனி ஆக்கி -நெற் சுடு அடித்து வாழ்ந்தவர் நாம் -இப்போ அநாதியற்று இப்புமியிலே அனாதைகளாகி விட்டோம் - நம் தேசம் ஒன்றின் விடிவிக்காய் பாசங்களை தொலைத்தவர் நாம் கூடு இழந்த குருவிகள் போல் - இத் தெரு கோடியிலே கதறுகிறோம் காப்பரும் ஒபாமாவும் என்ன மகிந்கவின் கைப் பொம்மைகளா...? சிங்களவன் மகிந்கனுக்கு சின்ன வீடா எங்கள் மண் அடிக்கடி அங்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு வாயிருந்தும் கண்ணிருந்தும் -…
-
- 0 replies
- 766 views
-
-
உடல்கள் புதைந்தாலும் உணர்வு புதையவில்லை.... இளங்கவியின் - கவிதை..... முற்றத்தில் வேப்பம் பூ கோலமிட... வாசலுக்கு வெற்றிலைகள் மாலையிட... செம்பருத்தி பூ வருவொரை வரவேற்க ஆச்சியின் எடுப்பான வெளிப்பல்லு சொந்தங்களை அன்பாக வரவேற்ற.... எங்கள் அன்பான தமிழீழம் அழிந்து அடிமண்ணில் புதைந்ததுவே..... இடப்பெயர்வில் தொடங்கி பட்டினியில் தொடர்ந்து பயத்திலே வாழ்ந்து பாதியாய் செத்து; பின்னர் மீதியும் செத்த; மானமுள்ள தமிழினமாம்..! ;இன்று மண்ணோடு மண்ணாக மரணப் புதைகுழியில்.... கடைசிக் கதறலும் கயவனுக்கு கேட்கவில்லை கண்ணீரில் பல குழந்தை அவர்கட்கு காயமும் வலிக்கவில்லை ஆனாலும் தன் மரணம் ஏனென்றுதான் புரியவில்லை உயிருடன் உள் …
-
- 4 replies
- 1.2k views
-
-
பிரபாகரனைத் தொலைத்து விட்டுத் தேடிக்கொண்டிருக்கும் சிங்கள அரசே பிரபாகரனை உனக்கு நான் காட்டுகிறேன் உன் தடுப்பு முகாம்களின் முள் வேலிகளுக்கு மேலாய் சற்றே எட்டிப்பார். அங்கே தாய் தந்தையரை இழந்து பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் நாளைய பிரபாகரன்கள் அவர்கள் பொங்கி எழும் வேளையில் உன் ஆணவம் பிணமாகும் http://gkanthan.wordpress.com/index/eelam/where/
-
- 5 replies
- 9k views
-
-
தரணியில் தலை (குனிந்த) சிறந்த இராணுவம்....... வல்லரசு நாடுகள் அனைத்திலும் மானத்தை விற்று மண்டியிட்டு பொய்களை அவிட்டு விட்டு ஆயுதத்தையும் ஆள்பலத்தையும் அளவு கணக்கின்றிப் பெற்றுக் கொண்டு பயங்கர வாதத்தை ஒழிக்கிறோம் என வான் பிளக்க பரப்புரை செய்து கொண்டு ஒன்றும் அறியா அப்பாவி பொது மக்களை இரக்கம் இன்றி குலை குலையாக கொன்று குவித்துவிட்டு போர் விதி முறைகளை புதைகுழிக்குள் போட்டு புதைத்து விட்டு சில நாட்கில்; போர் முடியும் என சொல்லி பல மாதங்கள் தொடர்ந்து முட்டாள் தனமான ஆதாரங்கள் பல புனையப்பட்ட அப்பட்டமான பொய்யுடன் வெற்றி வாகை சுhடி நிற்கும் இராணுவமே தரணியில் தலை சிறந்த இராணுவம்
-
- 0 replies
- 1.5k views
-
-
சூரியப்பேரொளியைச் சுற்றிக் காவியப்போராளிகள் வருவர் இயலாப்பொழுதின் புலர்வாய் ஒளிசொட்டிய சூரியக் கதிர்களுக்குள் இருள் முட்டி இதயம் முட்டி எதுவெனச்சொல்ல இயலாமல்…. எதை இழக்க எதை மறக்க ? எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை…. எல்லாம் முடிந்துவிட்டாற்போன பிரமை கண்ணுக்குள் வந்து மறையும் காட்சிகளாய் கடைசிக்கணங்களின் நுனியில் சாவின் நொடிகளை நுர்கின்றன…. சந்திப்புகள் சரித்திரக் கதைகள் சாதனைகளின் நீளமாய் ஒவ்வோர் நினைவும் முகமும் கலங்கிய விழிக்கனவோடு கரைந்து கரைந்து கடல் வற்றிக் காய்ந்து பாழங்கள் நிறையும் மயானக் காட்டின் நெடிலின் நுகர்வோடு கவிதையும் கடந்தகால நினைவுகளும் கசங்கிக் காற்றள்ள முன்னம் கடைசியாய் ஏவப்பட்ட …
-
- 0 replies
- 916 views
-
-
கனத்த இதயம் இன்று கனத்த இதயத்துடன் கண்விழித்த எனக்கு, என் இதயம் அடிபட்டு நொந்து கிடப்பதையும், அதன் வலியையும் உணரக்கூடியதாக இருந்தது. எதுவரை இது தொடரப்போகிறது. ஈழத்தமிழனின் வலிமையை அழித்துத் துடைக்கவும், உலகத் தமிழனின் ஆற்றலை முடமாக்கவும் எங்கள் பிராந்திய வல்லரசு சிங்கள ஏகாதிபத்தியத்துடன் இணைந்து வித்தை காட்டிவிட்டது. இதையும் ஒரு சுனாமியாக உலகத் தமிழினம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் விசேடமாக இந்திய இலங்கையின் கூற்றுப்படி நாலாம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இந்த வல்லரசுகள் செய்த, செய்து கொண்டிருக்கும் திருவிளையாடல்களை மறைக்க இப்போதும் பிரபாகரனின் கதை என்னும் படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்திற்கு நல்ல படம் காட்டிய அநேகர…
-
- 0 replies
- 1.7k views
-
-
எமக்குத் தெரியும் எங்கு நீ இருக்கிறாய் என்பது அவர்கள் காட்டிய முகம் அவர்கள் காட்டிய உடல் இதிலெல்லாம் இல்லாதவன் எங்கிருப்பாய் என்பது எமக்குமட்டுமே தெரிகிறது நீ அடிக்கடி சொல்வாயே எங்கெல்லாம் பேரினவாதம் நடக்கிறதோ அங்கெல்லாம் இருப்பேன் என அப்படியெனில் இங்குதான் இருக்கிறார் பின் எவனுக்கும் தெரியவில்லையே... அதெப்படி தெரிவேன் பகையை மூட்டியவனுக்கும் புகையை மூட்டியவனுக்கும் என்கிறாய். அவர்கள் காட்டிய படத்தில் ஈழத்தை தவிர்த்து வானத்தைப் பார்க்கிறது உன் கண்கள் அப்போதே தெரிந்துக்கொண்டோம் அது நீ இல்லையென நீ இருக்கும் துணிவில் அனைத்தையும் உன்னிடமே விட்டுவிட்டோம் இப்போதுதான் புரிகிறது நாங்கள் என்னசெய்ய வேண்டுமென்பது …
-
- 3 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய் வீரத்தின் உள்ளக் குமுறல்கள் உண்ண உணவின்றி உறங்க இடமின்றி உடுக்க உடையின்றி ஊனுக்கு மருந்தின்றி உள்ளம் ஒன்றே உறுதியென்று உயிரை தம் உடலுள் புதைத்து வாழ்ந்தால் மானத்துடன் வாழ்ந்திடுவோம் அஃதின்றேல் அழிந்திடுவோம் அரக்கன் சிங்களவன் உலகத்துணைகொண்டு நெருங்கி வந்து தடைகொண்ட ஆயுதத்தால் போர்விதி மீறி அழித்தபோது மௌனித்த இவ்வுலகில் வாழ்வென்னும் வளம் ஒன்று தேவைதானா? ஈழமது எங்கள் தேசம் அதில் சுதந்திரமா வாழ்வது தான் எங்கள் தாகம் இன்றேல் நீதியற்ற உலகத்திலே இதுவே நீதியற்ற விதியென்றால் எம்முயிரை மாய்ப்பது எங்கள் திண்ணம் முள்ளிவாய்தனில் எழு அழுவோசை காப்பாற்று காப்பாற்று எனும் அபயக்குரலெல்லாம் வானெழுந்து உலகமெல்லாம் ஒலித்தபோது …
-
- 1 reply
- 1.3k views
-
-
எல்லாம் இனிதே நடக்கிறது. இன்னும் சில மணிகளில் முற்றிலும் மயானமாகிவிடும் புகை மண்டலத்தினுள்ளிருந்து சிங்கக் கொடி உயரும் நிலத்தில் வீழ்ந்து இறந்துகொண்டிருப்பவர்கள் ஏலவே இறந்துபோனவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்
-
- 4 replies
- 1.2k views
-
-
அஞ்சலி அஞ்சலி கண்ணீர் அஞ்சலி மண் மீட்க புறப்பட்ட மாவீரருக்கு அஞ்சலி மாவீரராகிவிட்ட வன்னி மக்களுக்கு அஞ்சலி அஞ்சலி செலுத்தி கடன் முடிக்க அருகதை சிறிதும் எனக்கோ இல்லை தளபதிகளுக்கு என் தாள் பணிந்து அஞ்சலி இனம் தெரியாத உறவுக்கும் இளையோருக்கும் அஞ்சலி கருவறையில் உலகம்கானாத கண்மணிக்கு அஞ்சலி கருவாகி உருவாகி மண் மீது தவளாத பாலகருக்கு அஞ்சலி வீரப்பெண் போராளிகளுக்கு அஞ்சலி உணவின்றி குடிக்க நீரின்றி உடுத்திய உடைகளுடன் துஞ்சிய உயிர்களுக்கு அஞ்சலி வெறி கொண்ட படையின் தடையற்ற வல் வளைப்பில் அழுகுரலோடு கற்பழிந்த பெண்களுக்கு அஞ்சலி சித்திரவதையில் சிதைந்த இளையோருக்கு அஞ்சலி "பேரர்களுடன் சாகிறேன் "என்ற பாட்டி மார்களுக்கு அஞ்சலி இரவென்றும் …
-
- 6 replies
- 6k views
-
-
சத்தியம் செய்வோம் இந்த நாளிலே! ------------------------------------------------------ சுக்குநூறாக வெடித்துப் பறக்கும் இதயங்களான எம் தமிழ் உறவே துயரம் நிறைந்த இந்த நாட்களை எப்படி மறப்போம் எங்கே தீர்ப்போம்! மனிதாபிமானம் பேசிடும் உலகோ மனித அழிவுக்கு மகிழ்வு பகிருது தமிழர் குருதியில் கைகளை நனைத்து விருந்தினையுண்டு சிரித்து மகிழுது ! சிறுமை நிறைந்த சீரற்ற உலகை நம்பியதாலே எம் தாயகமிழந்தோம் தாயகம் வாழ்ந்த உறவுகளிழந்தோம் உலகை நம்புதல் நன்மையல்லவே என்பதையல்லவா உலகு சொன்னது எம்மை நம்புவோம் தாயகம் மீட்க தாயமல்லவோ நாம் செய்யும் காணிக்கை மண்ணுள் புதைந்தோர் வேண்டுதல் அதுவே ! கண்ணீர் துடைத்து நாம் கைகளைக் கோர்த்து சத்தியம் செய்வோம் இந்த நாளிலே !…
-
- 3 replies
- 1.1k views
-
-
நம் தலைவன் வரவுக்குகாய் காத்திருப்போம் கவிதை - இளங்கவி தமிழினத்தின் இன அழிப்பின் உச்சமான இவ்வருடத்தில் வைகாசி பதினெட்டு; வழமைபோல் மகிழ்வின்று விடிகிறது..... உலகத்தின் குரலொன்று தமிழனுக்காய் ஒலிக்காதா; எனும் சின்னஞ்சிறு நம்பிக்கையில் காலை கடனுமின்றி கணனியை தட்டுகிறேன்..... அதிர்ச்சி செய்தியொன்றில்; என் அனைத்துலகும் இருள்கிறது...! ஆம்..! தளபதிகள் நால்வர் மண்ணுக்காய் மரணிப்பு...! பதைபதைக்கும் நெஞ்சுடனே நண்பனும் நானுமாய் பாராளமன்ற சதுக்கம் விரைகின்றோம்..... கையடக்கத் தொலைபேசியில் மறுபடியும் கவலையுடன் ஓர் செய்தி..... எம் தலைவனையும் கொன்றுவிட்டார் அவன் சடலமுமெடுத்துவிட்டார்..... ஆம்...! இதுதான் அச்செய்தி தமிழர் உலகெல்லாம்…
-
- 18 replies
- 4.4k views
-
-
கொடிய ஸ்ரீலங்கா அரச அதிபர் மஹிந்த என்று அழைக்கப்படும் அரக்கன் ராஜபக்ஷே விமானத்தில் இருந்து இறங்கி மண்ணை முத்தமிட்ட வேளையில் கால் தடுக்கி விழுந்தான். அவன் தனது இரத்தவெறியை அடையாளப்படுத்தும் முகமாக அணிதுள்ள அவனது சிவப்பு துண்டே அவனுக்கு தூக்கு கயிறாக மாறி அந்த இடத்தில மாண்டான். இறந்தது மஹிந்த இல்லை என்று அவன் உடன்பிறந்த இன வெறியன் கோதபாய DNA test பின்னர் தாம் அதை உறுதிபடுத்துவதாக இன்று லங்க புவத் செய்தி நிறுவனத்திற்கு அறிவித்தான். அரகர் கூட்டம் தமது ரத்த துளிகளில் இருந்து பெருகி வருவதாக புராணங்கள் கூறுகிறது .அதைபோல தான் புத்த மதத்தின் புனித மஹா வம்சம் கூறுகிறது.. இது எனது உடன் பிறப்பு இல்லை என்றும்..அவனை போல plastic surgery மூலம் முகம் மாற்றப்பட்ட யாரோ என்றும் கோதபாய அறி…
-
- 0 replies
- 2.4k views
-
-
நாம் செய்த தியாகமெல்லாம் ஓட்டைக் குடத்தில் பால் தானா நாம் சிந்திய ரத்தமெல்லாம் கடலில் பெய்த மழை தானா நாம் பட்ட பாடெல்லாம் காற்றில் செதுக்கிய சிலை தானா நாம் கொண்ட நினைவெல்லாம் ஊமை கண்ட கனவு தானா நாம் எழுதிய மடலெல்லாம் தண்ணீரில் இட்ட கோலம் தானா நாம் போட்ட கூச்சலெல்லாம் செவிடன் காதில் ராகம் தானா நாம் அழுத அழுகையெல்லாம் தண்ணீரில் மீன்விட்ட கண்ணீர் தானா நாம் எல்லோரும் மொத்தத்தில் கவனிப்பார் அற்ற இனம் தானா http://gkanthan.wordpress.com/index/eelam/inam/
-
- 5 replies
- 1.7k views
-
-
எழுந்திருங்கள் எழுந்திருங்கள் சோர்வதற்கான நேரமல்ல இது உறுதி கொள்ளுங்கள் சபதமெடுங்கள் மரணித்துப்போன மாவீரர்கள் மீது மாண்டுபோன மக்களின் மீது அவர்களின் தியாகத்தின் மீது சபதமெடுத்துக்கொள்ளுங்கள் உயிருள்ளவரை தமிழீழம் காண உழைப்போமென்று போராடுவோமென்று அழுதது போதும் விம்மியது போதும் துடித்தது போதும் துவண்டது போதும் இழந்தது போதும் நம்பிக்கை இழக்காதீர்கள் தலை நிமிருங்கள் புலியாக மாறுங்கள்............. முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள் தமிழீழம் காணவேண்டும் இப்போது விட்டால் எப்போதும் இல்லை எம் விடிவு புறப்படுங்கள் நீதி கேளுங்கள் ஐநாவிடம் உலகநாடுகளிடம் பார்க்கவில்லையா? உணரவில்லையா? இவர்கள் என்ன செய்தார்களென்று எம்மினத்தை…
-
- 0 replies
- 2k views
-
-
உலகே உனக்கு கண் இல்லையா? என் இனமே நாம் போராடினால் தோற்றுபோகோம்.துரோகிகளின் துரோகத்தினால் அல்லவா எம் இனம் அழிந்துகொண்டிருக்கிறது. வீரபாண்டிய கட்டபோமனுகே ஒரு எட்டப்பன் இருக்கும் போது பதவிக்கும் பணத்துக்கும் விலை போகாத நம் தேசிய தலைவனுக்கு ஆயிரம் எட்டபர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. யேசுவிற்கு கூட ஒரு யூதாஸ் துரோகிகளே இல்லாத வரலாறே இருக்காதா? கூட இருப்பவர்கள் தானே குழி பறிகிறார்கள் இறைவா இன்னுமா இவர்களை நீ பார்த்துக்கொண்டு இருக்கிறாய்? அழித்துவிடு அழிந்துகொண்டிருக்கும் எம் இனத்தை இவர்கள் இன்னமும் அழித்துக்கொண்டு இருக்கும் எம் இனத்தை அழிபவர்களை அழித்துவிடு எங்கள் போராளிகளே உங்கள் மனத்துணிவும் ஆற்றலும் எமக்க எம் சந்ததிக்காக நீங்கள் சிந்திய ஒவொரு து…
-
- 0 replies
- 6.6k views
-
-
இனி என்னிடம் கவிதைக்கான எந்த ஒரு இலக்கிய வார்த்தையும் மிச்சம் இல்லை என் வார்த்தைகள் பிண வாடையுடன் தான் இனி வரும் *************** எனது மகன் mc donalds MC chicken கேட்கின்றான் அவனது சகோதரங்கள் அரைவாசி எரிந்த உடலுடன் கிடக்கின்றார்கள் என்பதை அவன் அறிய நான் விடவில்லை தமிழ் குழந்தைகளின் இரத்தம் இனியது என்கின்றான் என் சிங்கள நண்பன் அவை உப்பு கரிப்பது இல்லையாம் நேற்றும் எதிரியின் பரம்பரை தமிழ் குழந்தையின் பிஞ்சு போன சதையின் வழி ஊறிய இரத்தத்தை குடித்த பின் சொன்னார்களாம் தமிழ் குழந்தையின் இரத்தம் அதிக யுத்த போதை ஊற்றும் என்று *************** என் மகன் pizza கேட்கின்றான் அவன் அறிய நான் விடவில்லை அவனின் அதே …
-
- 5 replies
- 1.4k views
-
-
அன்பின் நன்பர்களே, இது தோல்வியல்ல, சிறிய பின்னடைவு மட்டுமே, இது முடிவல்ல, ஒரு விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமே, நாங்கள் விழுந்தோம், ஆனால் மீண்டும் எழுவோம், நாங்கள் ஒன்றுபடுவோம், போராட்டத்தைத் தொடருவோம், களத்திற் சிந்திய ஈழத்தமிழர்களின் இரத்தத் துளிகளைக், கயவர்கள் கண்களில் இருந்து வழிய வைப்போம். தமிழர் தாகம், தமிழீழ தாயகம்.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
எனக்கு மின்னஞ்சலில் வந்தது ஈழத்துப் பாப்பா பாடல் ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
மரணம் இப்பொழுதெல்லாம் எந்த சந்தடியுமில்லாமல் வருவது இது ஒன்றுதான் ஊமத்தங்கூவை,நாய்,ஆந்தை,பிராந
-
- 0 replies
- 972 views
-
-
மின்னஞ்சல் பெட்டியில் மிதக்கின்றன ஓலைகள் அவலங்களாகவும் வாக்குகளிற்காகவும்..! என்னுணர்வுகளிற்கு அழக்கூட ஆசையில்லை அழுதழுது மரத்துப்போனதால்..! யாராவது ஒருவர் மனமிரங்காராவென வாக்குப்போடுகிறேன் இணையத்தளங்களை நாடி.. வருகிறார்களில்லையே!! கண்டிப்பும் எச்சரிக்கையும் வெறும் சேதிகளாகவல்லவா வருகின்றன கைகட்டிக் கொண்டு!! அவரை நம்பி இவரை நம்பி ஆறுதல் தேடலாமென்றால் ஆறுதலுக்கான அன்பளிப்புகள் வேகும் புண்ணில் பாயும் வேல்களாகின்றனவே!! மனிதாபிமான முகமூடிகளுள் முகத்தைத் தேடித்தேடியே என் மின்னஞ்சல்பெட்டியுள் நேரத்தைத் தொலைக்கிறேன்.
-
- 3 replies
- 1.2k views
-
-
இறைவா இது நியாயம் தானா? தமிழினம் இனி அடிமை தானா? டிக் டிக் டிக்கென நொடிகள் நகருது திக் திக் திக்கென இதயம் துடிக்குது பக் பக் பக்கென பயமாய் உள்ளது இத்தனை காலம் நாம் போராடியது வீண்தானா? நாம் தோற்கப்போகிறோமா? இன்பமான நாட்கள் இனி எம் வாழ்வில் இல்லையா? உலகையே திரும்பி பார்த்து திகைக்க வைத்த தானைத்தலைவனை இழந்து விடுவோமா? அடிமைவிலங்கு உடையாதா? தலைகுனிந்து நாமினி வாழவேண்டுமா? அடுத்தவர் இகழ்ச்சிக்கு நாமினி இலக்கா? தமிழினத்தைக் காக்க யாருமில்லையா? கயவர்களிடமும் எடடப்பர்களிடமும் துரோகிகளிடமும் தமிழர்கள் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியது தானா? இனி தமிழினம் ஆண்டாண்டு காலத்திற்கும் அடிமைகள் தானா? இறைவா இது நியாயம் தானா?
-
- 2 replies
- 1.1k views
-