கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
காற்றின் காத்திருப்பு பிணவறையின் மருந்து நெடி நடுவே அந்த உடல் ஆண் என்பது தவிர வேறெதுவும் தெரியவில்லை முகத்தைத் தேடினேன் கைகளைத் தேடினேன் நெஞ்சுக் கூட்டுக்குள் நினைவெதுவும் மீந்திருந்தால் கொண்டுசெல்லக் குனிந்து தேடினேன் காட்சியின் கொடூரம் மூச்சை அடைத்தது கால்கள் நடுங்கிற்று முத்துக்குமார் அவன் பெயர் என்றார்கள். அவனைத் தின்ற நெருப்பு எங்கிருந்து வந்தது? கூராய்வுச் சோதனையில் கண்டறிய முடியாது. இப்போது அது எங்கே போனது? ஒற்றர்கள் முயன்றாலும் அதன் தடயம் தெரியாது. கண்ணீர் வரவில்லை கதறல் எழவில்லை சொல்லிப் புலம்ப ஒரு சொல்லும் கிடைக்கவில்லை வெளியே வந்தேன் கூடியிருந்தனர் இளைஞர் பலபேர் கண்களில் கோபம் கைகளில் நடு…
-
- 0 replies
- 746 views
-
-
முத்துக்குமரா! முகம் தெரியாப்போதினிலும் செத்துக்கிடக்கின்றாய் எமக்காக, எனவறிந்து தேகம் பதறுகிறதே திருமகனே! உந்தனது, ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில் அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள். உன் மேனியில் மூண்ட நெருப்பு உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார் நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன். சின்ன அக்கினிக்குஞ்சே! உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய் அந்தச்சோதிப்பெருவெளிச்சம் எமக்குச்சக்தி தரும் வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும். உன் இறுதி மூச்சு புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும். எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி உனக்கு…
-
- 9 replies
- 2.4k views
-
-
உலகத்தமிழா உணர்வுகொண்டு எழுடா.. ] எத்தனை காலம் செவிகள் கேட்டு கொண்டிருப்பது கண்கள் பார்த்து கொண்டிருப்பது அறியாமை மறந்து போன சிங்கள மனிதனின் யுத்தம் தன்நிலை மறந்து போன முட்டாள்களின் வெடிகுண்டு பெருக்கம்.. புவி அறிய பிறக்கும் பிறப்புகள் கூட பிறக்கமலே கருவறைக்குள் இறக்கும் அவலம்.. தப்பி தவறி பிறந்தாலும் வான்படை குண்டுகளின் குறிக்கு குதறப்படும் பரிதாபம்.. இன அழிப்பு அருவடைஎன்று ... எம்தமிழீழ கன்னிப்பெண்களின் கன்னித்திரை கிழித்தெறியும் சிங்கள காமுகனின் வெறிசெயல்.. போதுமடா உப்பிட்டு தின்பவனே காம உறுப்புகளை அறுத்தெறிய உணர்வுகொண்டு எழுடா.. சம உரிமை கேட்டதன் சன்மானம்தான் .. என் தமிழனின் உயிர் சிதைகப்படுகின்றது .. இதயமில்லா…
-
- 0 replies
- 814 views
-
-
நீ ஒரு துரோகி!! சிங்களத்தின் வாழை பிடித்துகொண்டு போகும் கருணா ..!! அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் ..அவனின் அரசவையில் உனக்கொரு பதவி!! வீரத்திற்கு பேர் போன தமிழச்சியும் ஒரு வேங்கை! துரோகியாக ஓடி ஓளிந்த நீ ..அவர்களின் சேலையை வாங்கி கட்டிக்கொள்! உன் பெயரை சொன்னாலே கன்னத்தில் அறைகிறதாய் படுகிறது! எதிரியின் கோட்டையில் உனக்கொரு புகலிடம்.. ச்சீ!! ஈழ தமிழரிடத்தில் இப்படியொரு கேவல மனிதனா?! தமிழர்களை அழிப்பதற்கு நீ ஒரு கேடயம்.. உன் பெயரை சொன்னாலே உலகமே காரி துப்பும் அளவிற்கு நீ ஓர் அசிங்கம்!! இனபடுகொலைக்கு வழிகாட்டும் நீயொரு துரோகி!! இலங்கை தமிழனிடத்தில் அழிக்க வேண்டிய பேர் நீ!! ஆக்கம் : - மீனலோஷினி
-
- 0 replies
- 1.8k views
-
-
மனசுக்கு மட்டும்... சரித்திர சுவடுதான் கல்லறை பேசும் இலங்கையின் இலக்கை..! காக்கையும் ஏற்க்கும் குயில் முட்டை மனசுக்கு மட்டும்-ஏன் முட்டுக்கட்டை...!! உத்திர மழையில் நனைந்த வீதிகள் .. உயிர்த்துடிப்பின் ஓசைகள்.. தரிசு நிலத்து உர மேடுகளாய் சவமலர்கள்!! காலம் ஓடும் வரை கடந்து வருமா யுத்தம்.. நீதியின் தலைமகளே! கருப்பு கயிறு கட்டிய விழிகள் அவிழும் வரையிலுமா?!! ஆக்கம் : - மீனலோஷினி
-
- 0 replies
- 761 views
-
-
தீயதை தீய்த்தி டு! வேண்டாம் தீக்குளிப்புகள் உங்களை நாங்கள் சந்தேகப்படவில்லையே?! ஏன் உறவுகளே எங்களுக்காய் ஒலிக்கின்ற உங்கள் குரல்களை நெருப்புக்கு வார்க்கின்றீர்கள்?! நாடற்று நாதியற்று கதியென்று தாயக உறவுகளே உமைத்தானே நம்புகின்றோம் தீயிட்டு உங்களை நீங்களே எரித்திட்டால்! நாம் இனி எங்கு போவோம்?! தமிழர் வாழ்வழித்து கொக்கரிக்கும் சிங்கள அரசுக்கு எம் உணர்வுகள் புரியுமா?! தீ வைத்து உங்களை நீங்களே கொளுத்தினால் தாயக விடுதலை பிறக்குமா?! நியாயத்தை நீதியை மனிதாபிமானத்தை நேசிக்கும் இனமான உணர்வுகள் எரிந்திட்டால்!... நஞ்சினை மட்டுமே கக்கிடும் துரோகிகள் மட்டுமே மிஞ்சுவர் தாயக உறவுகள் என்றிங்கு சொல்வது வெறும் வார்த்தைக்காக …
-
- 0 replies
- 685 views
-
-
சூரனை வதம் செய்தான் அந்த முத்துகுமரன் அதுவும் திருச்செந்தூரன் தன்னையே வதம் செய்தான் இந்த முத்துகுமரன் இதுவும் திருச்செந்தூரன் போன பொழுது உனக்குத் தெரிந்திருக்கும் எம் மாவீரர்களும் மக்களும் உனக்களித்த வரவேற்பு சாவின் நிமிடம் தெரிந்த சத்தியவான்களில் கரும்புலிகளுக்கு அடுத்து நீதானையா! மக்கள் எழுச்சியின் சிகரம் நீ ஈழ மக்களின் மகரம் நீ உனக்காக வருந்தாது மத்திய அரசு உனக்காக அழுகிறது தமிழ் ஈழ அரசு பிரபாவுக்கு சொல்லென்றாய் சொல்லிவிட்டோம் திருமாவுக்கு சொல்லென்றாய் சொல்லிவிட்டோம் பிரமாவுக்கு ஒரு முறை சொல்லிவிடு - உன்னை படைத்ததற்கு கோடி நன்றி என்று தமிழ் ஈழ புல்லும் தமிழ் உயிர்கள் அத்தனையும் உனக்காக அழுவதனை ஒருதரம் கேளாயோ? போய்வா எம…
-
- 5 replies
- 1.6k views
-
-
தீயைத்தின்னும் வயதில் தீ தின்று எம் நெஞ்சில் நிறைந்தவனே முள்படுக்கை அறிந்தயோ எம் முற்றத்து மணலில் புரண்டுதான் படுத்தாயோ கல்லெறிகள் கண்டு வந்தவனே எங்கள் ஊர் செல் எறிகள் உணர்ந்தாயோ எதற்காக மடிந்தாய் நாமெல்லாம் இரைமீட்க நீ உணவானாயே நேரத்திற்கு உணவு நீட்டியமர வீடு கால்மேலே கால்போட்டு கட்டணை உடைத்ததாம் கரைந்து எதிரி மடிந்தானாம் கட்டுக்கதைகள் பேசி காலத்தை ஓட்டுகின்றோம் நீயோ எட்டாத உயரத்தில் ஏறி சென்றுவிட்டாய் சத்தமே இல்லாமல் சட்டென்று பற்றிவிட்டாய் புண்ணிய மனிதா நீ பூஜையறையில் வாழ்பவன் புனிதமண்ணாம் எம்மண்ணில் புகழ் பரப்பவேண்டியவன் சொல்லாமல் ஏன் சென்றாய் செல்லெறி அறிவாயோ ஓரடி அகலத்தில் நான்கடி ஆழத்தில் கிடங்கு வெட்டி…
-
- 0 replies
- 622 views
-
-
கு.முத்துக்குமாரனுக்கு ஈழத்தமிழரின் வீரவணக்கம்... (முத்துக்குமரனின் வீரவணக்க மேடையில் வினியோகிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம்) ஈழத்தமிழர்களின் விடிவிற்காய் ஈழமைந்தர்கள் குருதி சிந்தி இலங்கையில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடி இன்னுயிர்கள் பல வேள்வியாகி விட்டன உன் உயிர் தியாகம் இன்று உலகையே எட்டிப்பார்க்க வைத்திருக்கிறது. உனக்காக ஒரு கவிதை எழுத - நம் பேனாக்களுக்கு பலமில்லை - ஏனெனில் எம் உணர்வுகள் என்றோ மரணித்து விட்டன. ஈழத்தமிழர்களெல்லாம் இன்று நடைப்பிணங்கள் கண்ணீரில் எழுந்த பல புரட்சிகள் காற்றோடு காற்றாய் பறந்து விட்டன மறத்தமிழனாய் இன்று - நீ ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில்.... ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களிலிருந்து - முத்துக்குமாரனே …
-
- 0 replies
- 979 views
-
-
முத்துக்குமரன் எனும் மாவீரன்..... கவிதை அஞ்சலி.... தமிழ் நாட்டின் செல்வமே நம் முத்துக்குமரனே முத்தான உன் உயிர்தந்து நம் மூச்சையே நிறுத்திவிட்டாய்.... காலையில் செய்திகேட்டோம் கண்ணீரால் நம் உடல் நனைந்தோம் உன் உடலைக் கருக்கிய உன் உறுதி கண்டு மனதளவில் உருக்குலைந்தோம் ..... உயிர்பிரியும் நேரத்திலும் பிரபாகரன் என்றாய் பின்னர் உயிரையே போக்கிவிட்டு தமிழன் பிரபஞ்சதையே நீ வென்றாய்... முத்துக் குழிக்கும் ஊரிலே பிறந்தவனே...... தமிழன் மனங்களிலே முத்தாக உன் உயிர் தந்தவனே..... தமிழ் நாட்டிலே விதையாகி தமிழர் மனங்களிலே முளைத்து விட்டாய்...... உன் மூச்சு அடங்கமுதல் உன் கொள்கைகளை எரியவைத்தாய்.... …
-
- 4 replies
- 1.6k views
-
-
முத்துக்குமரனுக்கு ஒரு அஞ்சலி ................ தாய் தமிழகம் தந்த முத்து தரணியில் வந்துதித்து தொப்புள் கொடி உறவுகளுக்காய் ஈந்த மாபெரும் பரிசு தன் இனிய உயிர் , பத்திரிகையாளனாய் சாதித்தது போதாதென்று தமிழ் ஈழ சரித்திரத்திலே முத்தாக பதிந்து விடான் தமிழக முத்துக்குமரன் ஐயா முத்துக்குமரா .... நட்புக்கு இலக்கணம் உயிர் கொடுத்தல் இதை மிஞ்சியும் ஒரு கொடை உண்டோ ? உன் ஆன்மா சாந்தியடையட்டும் , உன் எண்ணம் நிறைவேறும் , ஆழ் துயிலில் ,நீ சாந்தி அடைவாய் சாந்தி... சாந்தி ...சாந்தி ........... ,
-
- 1 reply
- 954 views
-
-
தூத்துக்குடி முத்தே தென்பாண்டி துறைமுத்தே ஆத்தூர் கொழுவநல்லூர் ஆண்மை தமிழ் மகனே காத்து தமிழ் இந்தக் காசினியில் நிமிர வைக்கத் தீய்த்து வதை தீயில் சிதைந்து துடித்து இறந்தாய் சோத்தி உதிரிகளும் துணிந்தேழுந்தோம் மறவர்களாய் கோத்து கைமோதி குவலயத்தில் தமிழ் அரசு பூத்திடவே வைப்போம் புலியே முத்துகுமரா ஏத்தி தொழும் ஈழம் என்றும் ஒளிக் கோபுரம் நீ தமிழோசைக்காக கணியன் நன்றி www.Tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...7&Itemid=68
-
- 0 replies
- 937 views
-
-
தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன் தொப்புள் கொடியில் உயிர்க் கொடி ஏற்றிய தோழா ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா! இணையத்திலே உன் அழகிய முகம் பார்த்தோம் இதயத்திலே கருகிப் போனது எங்கள் மனம்! எவ்வளவு இளகிய மனம் கொண்டவன் நீ எங்களுக்காய்... ஏன் கருகிப் போனாய்? தூத்துக்குடியில் முத்துக் குளித்தவன் நீ சாஸ்திரி பவனில் ஏனையா தீக்குளித்தாய்? குடம் குடமாய் நாங்கள் அழுது வடித்த எங்கள் கண்ணீரில் உன் முகமே பூக்கிறது! எம் தமிழ்மீது நீ கொண்ட பற்றுக்கு எல்லையே இல்லை என்பதை இப்படியா உணர்த்துவது! தமிழினத் தலைவர்கள் என்று சொல்லத் துடிக்கும் எங்கள் தலைவர்களின் நாக்கை அறுத்தாய் நீ! கையாலாகாத பரம்பரை என …
-
- 1 reply
- 1.2k views
-
-
முத்துக்குமாரா! முத்துக்குமாரா! தொப்புள் கொடி தந்த உறவே! நீ செத்துவிட்டதாகத்தான் சொல்கின்றார்கள் எல்லோரும்! இல்லைத்தம்பி நீ சாகவில்லை! உயிர்கொண்டும் பிணமாகத் திரிகின்ற பலரில் உணர்வோடு தமிழானாய் உயிரும் மானமும் எனத் தமிழ் விடுதலைக்கோர் கருவானாய்! தியாகத்தின் தீபமே உன்னைத் தீ எரிக்குமா? நீ மூட்டிய தீயிலே குருடர் கண் திறக்குமா? இருட்டிய கிழக்கது இனியாயினும் வெளிக்குமா?! உயிருன்னைச் சுடும் என உணர்ந்திட்ட பொழுதிலும் உண்மையை உரத்துச்சொன்னாய் உயிராயுதம் ஆகியே உன்னதம் ஆகிவிட்டாய்! தமிழ் அது உடையல்ல உணர்வென்று நீ உலகுக்கு காட்டிவிட்டாய்! தன்மான நெருப்பிற்கு எங்கள் தம்பியே நீ நெய் ஊறிவிட்டாய்! ஆட்சியே பெரிதென்று எண்ணுவோர் மத்தியில் தமிழன் மானத்தை நாட்டிவிட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
எழுந்து வாருங்கள் இனியும் ஒதுங்கி நிற்கும் சாபம் வேண்டாம் எழுந்து வாருங்கள்! சந்து, பொந்து எங்கிருந்தாலும் வாண்டு, பெண்டு அனைவரும் சேர்ந்து முந்தி வாருங்கள் முழு மனசாய் வாருங்கள்! அந்திவானச் சிவப்பை அள்ளி விழிகளில் பூசுங்கள்... ஆதவன் வெப்பம் அள்ளி நாக்கினில் தடவுங்கள்... அடி மேல் அடி அடித்தால் அம்மி நகருமெனில் மனசும் மாறும் எனும் மந்திரம் பழகுங்கள்! தலை ஆறு போல் நீவீர் திரண்டு வந்தால் வரலாறு இதனைப் பதிவு செய்யும் வற்றாத வெள்ளம் போல் எங்கு போய் உற்றாலும் வற்றாத ஈழ வேட்கை கண்டு உலகோரும் புரிந்து கொள்வர் உதவிட முன்வருவர்! முற்றாக எம்மினத்தை அழிக்கின்ற முட்டாள்கள் நட்டாற்றில் நிற்கவேணும் நமக்கொரு நீத…
-
- 0 replies
- 814 views
-
-
நரம்பு நாடிகள் துடித்து இரத்தம் கசிந்து உறவுகளின் உயிர் பிரிந்தாலும் தளர்ந்து விடதே தமிழா... வருவான் புலி வீரன் பொங்கி எழுவான் உமை காக்க.. உம்மை கொன்ற சிங்கள காடையர்களை கொன்று குவிக்க... கண்ணீரை சிந்தாதே தமிழா உன் கண்ணில் மகிழ்ச்சியை உரு வாக்க புலி வீரன் இருப்பன் உன்னுடன் உன் இறுதி முடிவிலும் நம்பிக்கையை இழந்து விடாதே தமிழா.. உம் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற புலி வீரன் இருப்பான் தமிழிழம் ஒரு நாள் மலரும் சோகம் கொள்ளாதே தமிழா...
-
- 0 replies
- 796 views
-
-
இன்றைய நாள்: அன்று அண்ணன் திலீபன் சொன்னது போல "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்" "விடுதலை வேண்டும் தமிழினமே விடுதலை சும்மா விளைவதில்லை" "அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதோ அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ" தமிழ் உறவுகளே : எங்களிடம் நாங்களே கேட்போம் இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்? அதை பிடித்து விட்டான் இதை பிடித்து விட்டான் என்று அங்கும் இங்கும் ஆர்ப்பரிக்காமல் ஆகவேண்டியதை பார்ப்போமா? இன்னும் பிந்தவில்லை இனியும் வெல்லலாம் ,இன்றே தொடங்குங்கள் அவன் செய்வான் இவன் செய்வான் என்று ஆறி இருக்காமல் நான் செய்வேன் என்று நகருங்கள் முன்னே நன்றி www.tamiloosai.com Source Li…
-
- 0 replies
- 932 views
-
-
நம் யாழ் நகரத்தில் நம் மாவீரரின் கல்லறைகளை அடித்து உடைத்த சிங்கள காடையர்களை கொன்று ஒழிக்க புறப்படு தமிழா நம் இனத்தவரை கொன்று ஒளித்த சிங்கள பேய்களை கொன்று ஒழித்து நம் நாட்டை காப்பாற்றி புலி கொடியை பறக்க விட்டு புலி வீரன் என்று பெயர் எடுத்து புலி வீரன் எவருக்கும் அடி பணியான் என்று பெயர் எடுப்போம்
-
- 17 replies
- 4k views
-
-
மறைவதில்லை ! -------------------------- அந்தச் சின்னஞ் சிறு நட்சத்திரமோ விடியலுக்குக் கட்டியம் கூறியவாறு எப்போதும் மறையாது ஒளிர்கிறது அந்தப் பெரிய நிலாவுக்கு அண்மையாக ஆனால் நிலாவோ அப்பப்போ மறைகிறது நட்சத்திரமோ என்றுமே மறைவதில்லை ! இவண் நொச்சியான்
-
- 0 replies
- 637 views
-
-
உணர்வாய் என் தமிழா! இடர்கள் இடர வைக்கும் தடைகள் தளர வைக்கும் நம்பிக்கை ஒன்றே கொண்டால் நல்ல வழி பிறக்கும்! 'வெற்றி" ஒன்றே என்றும் சொந்தம் என்ற திமிர் கூடாது! தோல்விகளே பாடம் சொல்லும் அதனால் உடையக் கூடாது! "நேற்று" நடந்த கசப்புநிகழ்வு இறந்த காலம் ஆயாச்சு இந்த நொடி உந்தன் கையில்! எழுந்து நின்று போராடு! வாழ்க்கைச் சுழலில் இன்பதுன்பம் எல்லாம் உந்தன் கையோடு! மனதில் தளரா உறுதி கொண்டால்! என்றும் வெற்றி உன்னோடு!!
-
- 0 replies
- 623 views
-
-
நம்பிக்கை ------------------- நீண்டு நிமிர்ந்திருந்த புத்தனின் கண்கள் மூடியபடி சாரையாய் நீண்ட பக்தர்களின் கைகளில் வெள்ளைத்தாமரைகள் புத்தம் சரணம் கச்சாமி வழிபடுங்கள் நம்பிக்கையோடு கீழ்ப்படிதலோடு மீண்டும் மீண்டும் இந்த நாடு உங்களுக்கே உரித்தாகும் இதைக் கேட்ட புத்தர் பரிகசிப்போடு தனக்குள் சொல்லிக் கொண்டார் இந்த முட்டாள் மனிதர்களின் குருட்டு நம்பிக்கைகளுக்கு அளவில்லாமல் போயிற்றே.. எனது விதிப்பின் படியும் விதியின் கணக்குப் படியும் வழிபாட்டுடனும் நம்பிக்கையுடனும் என்னை அதிகம் அழைத்தவர்களுக்கே இந்த நாடு சொந்தமாகும் என்பதை அறியாதிருக்கிறார்களே (ஹலீல் ஹிப்ரானின் கவிதை ஒன்றை வாசித்த போது எனக்குள் ஏற்பட்ட தாக்கம்)
-
- 0 replies
- 641 views
-
-
ஆடி பாடி திரிந்த குழந்தைகளை நம் நாட்டின் வருங்கால முத்துக்குகளை கொலை வெறி கொண்ட சிங்கள அரசு கொன்று குவிக்குறது எத்தனை குழந்தைகள் ஆனதைகளாய்.. எத்தனை குழந்தைகள் ஊனமாய்.. அலயோசை அடித்து சத்தம் கேட்பது போல் நம் குழந்தைகளின் அலறல் ஓசை உங்கள் காதில் விழ வில்லயா உலக நாடுகளே?
-
- 0 replies
- 683 views
-
-
என்ன தேசமோ .......... செந்நீரால் ஒரு தேசம் , எழுதப்பட்டு கொண்டு இருக்கிறது . கால மாற்றத்தின் தண்ணீர் வெள்ளம் காலன் மகிந்து ஏவும் ,கொத்துக்குண்டு, கிளஸ்டர் அகோரம் , தாயை இழந்த பிள்ளை ,தலை சிதறிய தந்தை , பங்கருக்குள் அம்மம்மா ஐயோ என்னும் அவலக்குரல் கால் வயிறுககும் கஞ்சி இல்லை கை குழந்தையை தவறவிட்ட தாய் தாயும் மூன்று மாத குழந்தையும் , ஒரு பக்கம் தந்தை மண் மீட்க அக்காவை இழந்த தம்பி , ஊரை உறவை தொலைத்த சொந்தங்கள். இப்படி உங்கள் வாழ்வில் கேட்டதுண்டா ? தலை சிதறி ,தசை துண்டங்களாக வீதி யோரம் , உருக்குலைந்து , அடையாளமற்று , இறந்தவனை புதைக்க , இப்படி ஒரு அவலம் கண்ட தேசம் உண்டா? கிளியை பிடித்தோம் முல்லையை பிடித்தோம் , ஆன…
-
- 0 replies
- 656 views
-
-
கல்மடுக்குளத்தில் காத்திருந்த கண்ணீர் கண்களிலே அடக்கி வைத்த தமிழனின் கண்ணீர் கல்மடுக் குளமாய் உடைந்து ஓடுகிறது. குண்டு மழை கிழித்த உயிர்களின் நெடுநாள் சாபமாய் இதய நெருப்பு அங்கே எரிமலையாய் எரிகிறது எம் தேசத்தைப் போல அதிர்ந்து போய் உலகத் தெருக்களில் நமது வாழ்க்கையும் நடக்கிறது அடி வயிறு வெடிக்க ஐயோ என்று கத்தும் தாய் ஐந்து வயதுப் பிள்ளையை துண்டு துண்டாய் தேடுகிறாள் விலங்குகளின் கைகளில் வில்லான ஏவுகணை எல்லா நாடுகளின் ஒப்பந்தமாய் பொழிகிறது முந்நூறு தமிழர் பலி பலநூறு பேர் படுகாயம் பாதுகாப்பு வலயத்தை பீரங்கி கேலி செய்கிறது. புதுக்குடியிருப்பின் புன்னகை சுதந்திரபுரச் சந்தியில் உடையார் கட்டாகி வல்லிபுன…
-
- 0 replies
- 1.3k views
-
-
கலவரம் உனக்கெதற்கு ! -------------------------------- கலவரம் கொள்ளாதே நிலவரம் நிச்சயமாய் தலை கீழாய் மாறுமடா ! பலமென்பது என்னவென்று பதுங்கும் புலி காட்டும் உளம்தனிலே உறுதியை நீ உரமாக்கி நடமாடு ! இடப்பெயர்வை ஏற்படுத்தி எம்மினத்தை வதைப்பவர்க்கு இருந்துபார் நடப்பதை தனித்தனி ஊரெல்லாம் ஒன்றாகித் திரள்கிறது அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அரற்றிக் கொள்ளாது அடைந்திருக்கா தெழுவாய் நீ ! பலமற்ற கொழு கொம்பில் பரவிப் படர்கின்ற சிங்களப் படைகளது சிதறிச் சிதைவதற்கு அகலப் படர்கிறது ! நிலங்கள் கை மாறும் களங்கள் பின்வாங்கும் காலம் அது கூட கலைப்போம் சிங்களத்தை என்றே சிந்தை கொண்டால் சிறுமை உனக்கில்லையடா ! பெருந் தலைவன் இருக்கையில…
-
- 0 replies
- 688 views
-