கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
விடுத்திடுக வீண் கவலை விழித்தெழுக புலத்தமிழா நிலத்தமிழன் அங்கு நிட்டூர பகைவனுடன் கலக்கம் சிறிதுமின்றி களமாடி வருகின்றான் வலக்கரமாய் நின்றவற்கு வலுவூட்டும் பொறுப்பில்லுள்ள புலத்தமிழர் நாம் புலம்பிச் சுருண்டிடவோ? ஈன தமிழர்களாய் இன்னமும் வாழாமல் மான தமிழர்களாய் மார் தட்டி எழுந்திடுவோம்! ஓயார்,உண்ணார்,உறங்கார் பகலிரவாய்ப் பேயாய் அலைவார்! பிணி நடுவும் களமாடி மடிந்தார் இருபத்தையாயிரம் மாவீரர்! விடுமோ, இத்தியாகம் வீழ்ந்திடநம் விடுதலைபோர்? ஒரு பாவம் அறியா ஒருலட்சம் தமிழ் மக்கள் மரணித்து காத்த அறம் மண்கவ்வ நேர்ந்திடுமோ? பரம்பரை தமிழர்மண் பறிபோகாமற் காக்கும் பெரும் தர்ம போராட்டம் பெற்றிடுமோ தோல்விதனை? மற்றவரின் மண்ணை வன்பறிப்புச் செய…
-
- 0 replies
- 888 views
-
-
வன்னி வெடிகளுக்காய் உனக்கு இடிகள் காத்திருக்கு..... கவிதை.... சுனாமியில் அன்று வெள்ளத்தில் மிதந்தோம்..... சுட்டெரித்த பிணங்களாய்;வன்னியிலே இரத்தத்தில் மிதக்கின்றோம்.... பிணக்கும்பலின் மத்தியிலே மழலையொன்று தன் தாய் தேட சிதறிவிட்ட சதைக் கும்பலிலே தாயும் தன் பிள்ளை தேடும் ; இந்த அழிவை எங்கும் கண்டதில்லை எதிலும் பார்த்ததில்லை திரைப்படத்தில் பார்தால் கூட தேம்பி அழுததுண்டு... வீதியிலே பதுங்கு குழி; அதில் உயிருக்காய் பதுங்கிவிட்டு ஓட்டத்தை தொடரவென்றால்; வீதியிலே உறவுகளின் சிதறல்கள்.... எந்தப் பிள்ளை இறந்ததென்று பார்ப்பதற்கும் நேரமில்லை..... எந்த உடை உடுத்ததென்று கண்டுவிட முடியவில்லை; காரணம் எங்குமே சிவப்பு நிறம் எல்லாமே ச…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
கடல் சீறி எழுவது போல் நீயும் சீறிய் எழுந்துடு தமிழா.... தமிழ் இனத்தவரின் சீற்றத்தை கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்கட்டும் நம்மை கண்டு சிங்கள வெறியர்கள்.. நாடு விட்டு நாடு செல்லட்டும் எழுந்து வா தமிழா..... களத்தில் போராடும் நம்ம சாகோதரர் சாகோதரிக்கு தோள் கொடுப்போம் எழுந்து வா தமிழா.... நம் இனத்தவரை அழிக்கும்... சிங்கள வெறியர்களை நாம் கூண்டோடு அழித்து நம் தழிழ் ஈழத்தை நாமே கட்டி எழுப்புவோம்.. நம் வீரத்தை கண்டு மகிந்த அரசு பயந்து நடுங்கி காடு காடாய் இரவோடு இராவாய் முட்டை முடிச்சுகளுடன் நாடு விட்டு நாடு செல்லட்டும் தமிழனின் வீரத்தை உலகம் எங்கும் பறை சாற்றி தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா என்று பெயர் கே…
-
- 0 replies
- 1.4k views
-
-
காதலின் மறுபக்கம் பாழடைந்த காவலரணில் கைவிடப்பட்ட வெடிகுண்டாக காத்துக் கிடக்கிறது உன்னை குதறிக் கடித்;து உமிழ்ந்து துப்ப ஒரு கூட்டம் மன்மத பாணங்களை ஏவமுடியாமல் மனதுக்குள் பூட்டி மகிழ்ந்தவர்கள் இன்று உனக்கு கிடைத்த மண மாலையும் மலர்ப் பஞ்சணையும் கண்டு புழுங்கித் தவிக்கிறார்கள் சொல்லம்புகளால் வேள்வித்தீ செய்தவர்கள் இருந்தும் சவமாக உலவுகிறார் பூமியிலே பாவம் அவர்கள் பயித்தியக்காரர்கள் என்று அசதியாக இருந்து விடாதே கைக்கெட்டாப் பொருள் என்று தெரிந்து கொண்டதால் வெடிகுண்டையும் ஏவத் தயங்க மாட்டார்கள் கவனமாயிரு.
-
- 0 replies
- 928 views
-
-
காதலை பூ என்று நினைத்தேன் பெண்ணே நீ தொட்டவுடன் வெடித்துவிட மிதிவெடியா அல்லது சீறிவந்து உயிர் குடிக்கும் ஆட்லறியா கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் கதையை முடித்துவிடும் கண்ணி வெடியா சன்னமாய் போகின்றாய் மின்னலாய் ஒளி வீசுகின்றாய் பல்குழல் பீரங்கி போல படபடென்று பேசுகின்றாய் உன்னைப் பக்கத்தில் வந்து பார்க்க மனம் ஏவுதடி கால்கள்தான் ஏனோ தடை சொல்லுதடி
-
- 13 replies
- 2.4k views
-
-
இந்த உலகம் உனக்கு சிறையல்ல நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய் ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது * வியர்வை சிந்தாத உன்னாலும் மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது * தடை தாண்டி ஓடிக் கொண்டிருப்பவனுக்கு தடைகள் கண்ணுக்குத் தெரியாது நீ நினைப்பது போல வாழ்க்கை ஒன்றும் மரதன் ஓட்டமல்ல அது தடைதாண்டும் ஒட்டமே * பெருமை என்பது உன்னைவிட திறமைசாலிக்கு நீ கைதட்டுவதில் அல்ல அவனையும் உனக்காக கைதட்ட வைப்பதுதான் * இந்த உலகம் பூந்தோட்டமல்ல நீ வளர தண்ணிர் ஊற்ற இந்த உலகம் பெருங்காடு நீயாத்தான் வளரவேண்டும் * உனக்கு நண்பன் இருக்கிறானோ இல்லையோ உனக்கு எதிரி இருக்க வே…
-
- 2 replies
- 1.2k views
-
-
கோபம் கொண்டு எழு தமிழா.. கொலை வெறி கொண்ட சிங்களவர்களை கடல் வந்து நம் இனத்தவரை அள்ளி சென்றது போல்.. நாம் அவர்களை அள்ளி செல்ல வா தமிழழா.. நம் தமிழ் மண் காக்க சென்ற நம் மாவீரர் வழியில்.. நாமும் செல்வோம் எழுந்து வா தமிழா.. நம் மண் காக்க போராடும் நம் போரளிகளுக்காக எழுந்து வா தமிழா.. நம் இனத்தவரின் அலறல் ஓசை உன் காதில் கேட்கவில்லையா? எழுந்து வா தமிழா.. நம்மை கண்டு அஞ்சி நடுங்கும் சிங்கள படைகளை அடித்து விரட்டுவோம் எழுந்து வா தமிழா.. நம் இனத்தவரின் வீரத்தை கண்டு இந்த உலகம் வியப்பில் ஆளட்டும் எழுந்து வா தமிழா.. நம் தலைவன் வழியில் நாமும் செல்வோம் எழுந்து வா தமிழா.. . அன்புடன் சுஜி
-
- 0 replies
- 1.2k views
-
-
நாலுலட்சம் பேரின் கண்ணீர் அணையுடைந்து வருகிறது. வல்லரசப் பலம் திரட்டி வன்னிக்குப் படையனுப்பிக் கொன்றதும் குறையுயிரில் துடிதுடிதுடிக்கக் குண்டள்ளி வீசியதும் கொன்றே முடிப்போமென்று கொழுப்பெடுத்து எழுந்ததுவும் பஞ்சாய்ப் பறக்காதோ ? பாவியர் பாடையில் ஏறாரோ ? பழியோ இதுவெங்கள் பாவமோ என்றெம் விழியுடைந்த நேரம் கல்மடுவில் கதவுடைந்ததாம் காணொளியும் கண்ணால் பார்த்தது போல் காதுகளில் எட்டிவிடும் செய்திகள் பொய்க்காமல் போகாதோ ? எமக்காய்ப் பொழுதொன்று விடியாதோ ? புலியைக் கொன்று முடித்துக் கடலில் தள்ளிவிட்டுப்படை திரும்பச் சிங்களர் வீடெங்கும் சிங்கக் கொடியேற்றுவோம் என்றெம் இதயங்கள் நோக வஞ்சம் வைத்து நஞ்சு துப்பியவன…
-
- 0 replies
- 1k views
-
-
இந்த திரியிலே நான் எழுதிய கவிதைகளை இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.புதிய கவிதைகளையும் நான் இதுவரை களத்திலே எழுதிய கவிதைகளையும் தொகுக்கலாம் என்று எண்ணுகிறேன்.நான் இங்கு எழுதிய கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்றது ஆகவே அவற்றை ஒன்றாக சேர்த்தால் பிரயோசனமாக இருக்கும் . முதலில பெண் தெய்வங்களை வணங்கி தொடங்குவம் என்ன. பெண் தெய்வம் சொல்லாதே பெண்ணே நீயும் உன் -சொல்லுக்கு பொருளில்லை இங்கு பொற்சிலையாக நீயிருந்த நேரம் மொய்த்ததோ -ஆண்கள் கூட்டம் சிந்தையிலே திடம் கொள்ளு தாயே நீ -புகட்டிடு …
-
- 54 replies
- 8.1k views
-
-
மீளும் எம் நிலங்கள். வீரம் உடுத்த மண் விடுதலையைப் பெற்ற மண் தீரம் மிகக்கொண்டு திக்கெட்டும் முரசறைந்து - சந்ததிக்காய் போரை ஏற்று போர்க்களத்தில் வாழ்வமைத்து பாரம் சுமக்கும் மண் பரம பிதா வாழும் மண் - நாம் மானமிழக்க மாட்டோம் ஒருபோதும் மண்டியிடோம் ஒதுங்க இடமின்றி ஒரு கோடி இடப்பெயர்வு நெருங்கி நின்று - எம் நெஞ்சை உதைத்தாலும் மருந்து மாத்திரைகள் மண்ணெண்ணெய்த்தடை இருந்து வருத்தும் இயற்கையின் சீற்றங்கள் வாட்டி வதைத்தெம்மை வாழ்விழக்கச்செய்தாலும் எண்ணத்தில் விடுதலையை எப்போதும் இழக்கமாட்டோம் வண்ணத்தில் மண்ணெடுத்து வரலாற்றைக் குழைத்து எண்ணற்ற வியர்வை சிந்தி எழுப்பிய விடுதலையை எம்மின மண்பற்றை சன்னத்தால் சரிக்கேலா சர…
-
- 3 replies
- 2.8k views
-
-
மரணத்தில் தொடங்கும் காலை எனது காலை மரணம் பற்றிய செய்திகளில் விடிகின்றது நாள் முழுதும் அவலத்தின் கூக்குரல் எனது கண்களை ஆயிரம் கைகளால் பொத்தி விடுங்கள் என் காதுகளை அறுப்பதற்காய் வாட்களை கொண்டு வாருங்கள் என்னை நான் ஒளிப்பதற்கு பாதாளங்களை திறந்து விடுங்கள் இறந்த குழந்தையின் தலையை வருடி விடுகின்றாள் தாய் சிதைந்த மகனின் உடலை அள்ளி கொள்கின்றான் தந்தை நொடியில் அழிந்து போன தன் அம்மாவின் கைகளை பற்றிக் கொள்கின்றான் ஒரு சிறுவன் வேண்டாம் இவை எதையும் எனக்கு இனி சொல்லாதீர்கள் ஒற்றைச் கையில் தாயின் கபாலம் ஏந்தி ஒரு குழந்தை கனவில் வருகின்றது என் கோப்பையில் போடும் உணவில் பிஞ்சு ஒன்றின் இரத்தம் கசிகின்றது …
-
- 15 replies
- 2.2k views
-
-
அந்தா பிள்ளையள் அம்மா பிறந்த வீடு. -சாந்தி ரமேஷ் வவுனியன் - கால்களுக்கடியில் மிதிபட்டுக் கொண்டிருந்த சருகுகளை விலக்கிக் கொள்கிறேன். பதின்னான்காண்டுத் தவம் கலைத்த மிதப்பில் சருகுகளுக்கடியிலிருந்து என் சிறுவயது ஞாபகங்கள் மெல்ல மெல்லப் பொலிவு பெறுகிறது. 'சடான்ரை மோளெல்ல' பழுத்துக் கிழப்பவருவத்தையண்டிய நாகேசு ஆச்சியின் கேள்வியில் இன்னும் ஞாபகம் மறவாது நினைவுகளில் நினைபடும் ஒருத்தியென்பதில் உள்ளுக்குள் புழுகம் சொல்லுக்குள் அடங்காச் செருக்கு. மழையரித்த செம்பாட்டுப் புழுதிக்குள்ளிருந்து பெயராத மண்வாசமாய் என் சின்னக் கிராமத்துச் சீரெல்லாம் எழுந்துவர ஆமியும் அவர்களின் வாகனங்களும் எவரங்கே ? கேள்விக்குப் பதிலிறுக்க …
-
- 4 replies
- 1.7k views
-
-
எங்கிருந்தோ ஒரு பட்சி வந்து சொன்னது மங்குவது போலிருக்கும் யாவும் மங்குவது கிடையாதென்று! எத்திசையும் எக்காளச் சிரிப்பு... சுற்றி வரப் பகைவனின் இருப்பு... வீழ்ந்துவிட்டோம் என்று இவர் நினைப்பு விழ விழ எழுந்த கதை பல இருக்கு! அப்போது தெளியும் மகிந்தனின் கிறுக்கு! கால காலமாய் நாமிருந்த மண் வேழம் போல் பொருதும் வீரம் நிறைந்த மண் நாணல் போல் விழுவதும் நேரம் பார்த்து எழுவதும் கூனல் வீரம் கொண்ட பகைவனுக்குப் புரியாது! புரியும் போது அவனுடலில் உயிர் தரியாது! அப்பாவிகள் பலர் இப்ப ஆவிகள்! புலி வேட்டையென்ற பெயரில் ஹெலியில் கூட வந்து குண்டு போடுகின்றீர் ஹெகலிய ரம்புக்வல்லவிற்கு தீனி போடுகின்றீர்! …
-
- 0 replies
- 730 views
-
-
சர்வதேசமே! 1948இல் இலங்கைக்கு சுதந்திரம் தந்தாய் பத்து ஆண்டுகள் கூட தமிழனால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியவில்லை பேரினவாத சிங்களவனின் சுரண்டலுக்கு ஆளானோம் தமிழ்மண்ணில் சிங்களக் குடியேற்றம் செய்தான் பொறுத்தோம் எம் வளங்களைச் சுரண்டினான் பொறுத்தோம் எம் உயிரிலும் மேலான கல்வியைப் பறிக்க தரப்படுத்தல் சட்டம் அமுலாக்கினான் இனியும் பொறுக்க முடியாமல் அஹிம்சை வழியில் கேட்டோம் கிடைக்கவில்லை ஆயுதம் ஏந்திக்கேட்டோம் பயங்கரவாதிகள் என்றா(றீர்)ன் இலட்சக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து விட்டு இன்றும் கேட்கிறோம் நீ தானே சொன்னாய் எந்த ஒரு சமூகமும் தனித்துவமான மொழி கலை,பண்பாடு கொண்ட இனம் தனது சுயநிர்ணய …
-
- 1 reply
- 910 views
-
-
இரத்தத்தில் தோய்ந்த நிலா....... கவிதை..... ஓர் அம்மாவின் அழுகுரல் அவளருகே தலையிழந்த அத்தாயின் மகனின் சிதறுண்ட ஓர் உடல்..... அந்த அம்மாவைத் தேற்ற நம் போராளிகள் சிலர் எதற்கும் தேறாத மரணத்தின் அழுகுரல்..... நான் கண்டது கனவல்ல காணொளியில் அது நிஜம்.... இது ஓர் நாளின் ஒரு நிமிடக் காட்சி.... வன்னியில் என் நாளும் எத்தனை நிமிடங்கள் அங்கே என் நாளும் கொலையின் பின் கொலையாக எத்தனை மரணங்கள்.... காட்சிகளை காண முடியாமல் மூச்சு முட்டிடவும் முன் எழுந்து சென்று ஜன்னலின் திரையை விலக்குகிறேன்..... நிலாக் கூட நிறம்மாறி சிவப்பாகத் தெரிகிறது... வன்னியில் இரத்தத்தில் குளித்துவிட்டு எங்கள் பார்வைக்கு …
-
- 5 replies
- 1.1k views
-
-
ஒற்றை இரவு எத்தனை பிணங்களைச் சுமக்கிறது எத்தனை பேரை விதவையாக்கிறது எத்தனை பேரை அநாதையாக்கிறது இத்தனையும் சுமக்கிறது தமிழீழம் இது மட்டுமா................? பத்துமாதம் தவமிருந்து பெற்ற பிள்ளையை ஷெல்லுக்கு பறிகொடுத்துவிட்டு தேம்பி அழும் தாயின் மனநிலை கண்டு பாலுக்கு அழுத பிள்ளைக்கு தாய்(ப்) பால் கொடுக்கும் போதே பாவிமகன் வானிலிருந்து போட்ட குண்டால் வாழ்விழந்துபோன தாய்,சேய் நிலை கண்டு சோற்றுக் கோப்பைக்குள் கை வைக்கும் போதே சொல்லாமல்ப் போன உயிர்களைக் கண்டு விடியலே தெரியாது விழி கூட மூடாது வாழும் உறவுகளின் நிலை கண்டு மரம்,செடி,கொடிக்கு கூட வாயிருந்தால் அழுதுவிடும் ஓநாய்கள் கூட ஒப்பாரி இசைக்கிறது இரவு வானில் நிலவு கூட சிவக்கிறது ஈ…
-
- 0 replies
- 1.2k views
-
-
நான் நல்ல நடிகன் நான் ஒரு நடிகன் அம்மாவுக்கு நல்ல மகன் ஆசானுக்கு வல்ல சீடன் பள்ளியில் நல்ல ஆசான் ஊருக்கு பேர்பெற்ற சமூகத் தொண்டன் மாமாவுக்கு நல்ல மருமகன் மனைவிக்கு ஏற்ற கணவன் என் குழந்தைக்கு செல்ல அப்பா பாட்டிக்கு அன்புப் பேரன் உற்ற தோழன் அவனுக்கு நல்ல நண்பன் தங்கைக்கு ஒரு அண்ணன் அண்ணாக்கு நான் தம்பி நான் நல்ல நடிகன்
-
- 0 replies
- 674 views
-
-
-
தாயகம்பற்றிப் பேசவா? யார் முந்தி நானா?...... நீயா? உணர்வெடுத்து, உரிமைக் குரலெடுத்து ஆகாய வெளிகளை அதிர வைப்போம்..!!!!! திட்டங்களும், கருத்தாடல்களும் கேட்கக் கேட்க உற்சாகம் பிறக்கும். ஆகா இனிக் கவலையில்லை எவ்வளவு குரல்கள்…! உலக அங்கிகாரம் எதற்கு? நாங்களே இராசாங்கம் இதோ தாயகம் எங்கள் கைகளில் இதனைச் சீராட்டுவோம் பாராட்டுவோம். சிரசின்மேல் சுமப்போம். வானலைகள் கதவுதட்டி வார்த்தைகளை குவித்தெறியும்! நம்பி நம்பிக்கை கொண்டேன் வானலை வந்த என்னருந் தோழருடன் பேச தொலைபேசி எடுத்தேன்.. ஆகா நான் கதைத்தது கேட்டீரா? எப்படி இருந்தது? உணர்வாய் இருந்ததா? என ஆயிரம் வினாக்கள். அடுத்ததென்ன? அப்ப நாளை காலையில் செயலாற்றும் இடத்தில் சந்…
-
- 1 reply
- 967 views
-
-
நான் நினைத்தேன் பெரிய கனவு ஒன்று.. என் கனவில் பெரிய நட்சத்திரம் ஒன்று வெளியானாது அது என் வாழ்வின் தூரம் என்று புத்தி கெட்ட என் மனசுக்கு அவன் என்னை விட்டு சென்ற பின்புதான் புரிந்தது ..
-
- 0 replies
- 534 views
-
-
அன்பே விழியாக நான் இருக்க இமைகளாக நீ வர வேண்டும் மலராக நான் இருக்க மணமாக நீ வர வேண்டும் கடலாக நான் இருக்க புயலாக நீ வர வேண்டும் ஒவியமா நான் இருக்க ஒவியனாய் நீ வர வேண்டும் மேகம்களாய் நன் இருக்க மழயாக நீ வர வேண்டும் வானவில்லாய் நான் இருக்க நிறங்களாய் நீ வர வேண்டும் உன் நினைவகா நான் இருக்க உயிராக நீ வர வேண்டும் சுஜி நண்பி எழுதினது
-
- 12 replies
- 2k views
-
-
நான் தூங்க உன் மடி தேவை...... கவிதை.... என் காதலியின் நினைவில் கண்கள் கலங்கிட அவளை மனதின் முன் நிறுத்தி மறுபடியும் நினைக்கிறேன்..... என் நினைவுதெரிந்த முதல்கொண்டே அவளை நேசித்தேன்..... காலை தூக்கம் கலைந்தமுதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை என் சுவாசமும் அவள் தான்... என் குருதிச் சுற்றோட்டமும் அவள்தான்.... காலையில் கண்டால் பொன்னாக மினுங்கிடுவாள் மதியத்தில் பார்த்தால் நெருப்பாகக் கொதித்திடுவாள்... மாலையிலே மறுபடியும் மனதைக் கவர்ந்திடுவாள்.... இரவு என்றதும்; குளிர் நிலவைப்போல் குளிர்ந்திடுவாள்.... இயற்கையின் அனைத்து அழகையும் உள்வாங்கி மலர்ந்திடுவாள் என் மனதின் சோகத்துக்கு மருந்தாக அமைந்தி…
-
- 4 replies
- 4.9k views
-
-
திருமாவளவன் அண்ணாவிற்கு... திலீபனை இழந்தோம் பூபதி அம்மாவையும் இழந்தோம் மறைமலை நகரிலே உண்ணாநிலையில் உங்களையும் இழப்பதா? அறவழிப் பாதையில் விழுந்து ஆயுதப் போரிலே எழுந்தோம் அதுபோதும் மீண்டும் அறவழிப் பாதையில் வீழ்வதா? இலங்கையில் போரை நிறுத்த இறுதி வழியாக நினைத்து உறுதியாய் எழுந்த உங்களை எங்கள் இதயங்களில் சுமக்கிறோம். உங்கள் கருத்துகள் வெல்லட்டும் நாங்கள் வாழ்த்துகிறோம் உங்களை இழந்த பிறகு நாங்கள் வெல்வதை விரும்பவில்லை! வடக்கு வாசலில் குந்தியிருந்து வயிறு நிறைய உண்டு மனம் மகிழும் மந்திரிகளுக்கு உங்கள் பசியின் அருமை புரியாது! நீர்த் தடாகங்களில் நீச்சலடிக்கும் மீன்களால் நெருப்புக் கடலில் நீச்சலடிக்க எப்படி முடி…
-
- 0 replies
- 872 views
-
-
மனதுக்குள் பெய்த மழை கண்ணோடு கலந்ததுவும் கருத்தோடு இணைந்ததுவும் என்னோடு கரம்பற்றி இணைந்தேதான் வாழ்ந்ததுவும் உள்ளான அன்போடு உயிராக இருந்ததுவும் தண்ணான நிலவாக தரணியிலே குளிர்ந்ததுவும் விண்ணோடு மேகமதாய் உறவாடி மகிழ்ந்ததுவும் தூரத்துக் காற்றினிலே தூதுசொல்லி அழைத்ததுவும் மெல்இறகாய் எனைஅணைத்து மேனியினை வருடியதும் காயமுற்ற வேளைகளில் கண்ணீரைத் துடைத்ததுவும் நேயமுற்ற நெஞ்சுடனே நிறையவே பேசியதும் வாடிநின்ற நேரமெல்லாம் தேடிஎன்னைத் தேற்றியதும் கண்மணியின் மென்இமையாய் கருத்தோடு காத்ததுவும் மழலையாய் எனைஎண்ணி மருவியே அணைத்ததுவும் நோயுற்ற வேளைகளில் தாயைப்போல் தேற்றியதும் இனிமையாய் பேசி என்னில் இறுதிவரை நிலைத்ததுவும் சீராட்டிப…
-
- 7 replies
- 1.5k views
-