கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
காதலின் வடிவங்கள்....... மேல் நாட்டுக் காதலும் நம் நாட்டுக் காதலும்.... ஆர்ப்பரிக்கும் கடலலையில் வேகப்படகில் நின்று விளையாடும் உணர்ச்சியது இந்த மேல் நாட்டுக்காதல் ! அமைதியான ஆற்றினிலே அந்திப் பொழுதினிலே அமைதியாகப் படகுதனில் பயணிக்கும் உணர்ச்சியது நம் நாட்டுக் காதல் ! நெரிசலான கூட்டத்தினில் நகரத்தின் வீதியிலே நிற மின் குமிழின் வெளிச்சத்திலே உலா வரும் உணர்ச்சியது மேல் நாட்டுக்காதல் ! வெண்ணிலவு பார்த்திருக்க வெண் மணலில் கால் பதித்து மின்மினிகள் ரசித்தபடி உலாவரும் உணர்ச்சியது நம் நாட்டுக்காதல் ! வாகனங்கள் சத்தத்திலே இரவில் உறங்கும் உணர்ச்சி அது ! இரவின் நிசப்தத்தில் அமைதியான உறக்கம் …
-
- 0 replies
- 554 views
-
-
விடுதலையின் விளிம்பில் நாம்..... நம் தாயக மீட்பு வாசல் வரை வந்துவிட்டோம் விடுதலைக்காய் வழிதேடி கண்முன்னே தெரிகிறது காலையது உன் விடியலுக்காய் ! வந்த வழி பார்க்காதே வலி நிறைந்த வாழ்வு அது வடுக்களாலும் வலிகளாலும் நிரம்பி நின்ற சோகமது ! முயற்ச்சியினால் முன்னேறு முழு நிலவைத் தொடுவதற்கு முடிந்துவிட்டால் முழு வசந்தம் உனக்காக காத்திருக்கு ! வாள் நுனியில் நிற்கின்றாய் உன் வசந்தம் ஒரு பக்கம் ? அடிமை வாழ்வோ மறுபக்கம் ? வசந்தந்தான் உன் தேர்வு அடிமை வாழ்வை உன்மனம் தேடாது ! நீரில் மூழ்க மறுத்துவிட்டால் முத்துக்கள் உன் சொந்தமல்ல ! முயற்ச்சியற்று இருந்துவிட்டால் உன் தாய் நாடோ உன் மக்களின் சொந்தமல்…
-
- 2 replies
- 827 views
-
-
என் அழகான ராட்சஷி கவிதை ஆசை காட்டி மோசம் செய்த அழகான ராட்சஷி ! அவள் அழகின் சிலையல்ல அனாலும் என் மனதின் மொழியானாள் ! அவள் சொல் கேட்டு நான் மகிழ்ந்திருந்தேன் ! அவள் நடை பார்த்து நான் நெகிழ்ந்திருந்தேன் ! அவள் புன்னகை பார்த்து நான் மலர்ந்திருந்தேன் ! இருந்தும் அவள் குணம் பார்க்க நான் மறந்து விட்டேன் பின்னால் அவள் மனம் பார்த்து நான் உடைந்து விட்டேன் ! நீதான் தன் மனம் என்றாள் நீயில்லா வாழ்வு தனக்கு மரணமென்றாள் அவள் சொல் கேட்டு மகிழ்ந்திருந்தேன் என் கண்களை மழையாக்கி காணாமல் சென்றுவிட்டாள் ! சென்ற பின்னர் ஓர் தடவை என் கண்ணில் தரிசனம் தரவந்தாள் ! அவளை கண்டதுமே என்னை பிரிந்ததற்க்கு காரணம் கே…
-
- 19 replies
- 2.6k views
-
-
வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது. எழுச்சி கொள்க கவிஞர்களே! தாயகமூச்சு எமக்கில்லையா? ஆயிரம் தடைகளை ஆரும் போட்டாலென்ன? உன்னிப் பெருமூச்செடுத்து உறவணைக்க எழுந்திடுக. நோயுண்ணும் உடல் நலித்தும், பேயுண்ணும் உணர்வொழித்தும், தாய் நிலத்தின் வேதனையை - எம் தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா? கூடாது... கூடவே கூடாது. முற்றத்து மணற்பரப்பில் முழுமதியின் எழிலொளியில், சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி, அடிவளவு மூலையிலே படர்ந்த முல்லைச் சொதி மணக்கும் கவளச் சோறெண்ணி, ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி, பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே.... விட்டுவிடுவோமா? தாய்நிலத்தி…
-
- 8 replies
- 1.4k views
-
-
வான் பரணி -வ.ஐ.ச.ஜெயபாலன் மழையே வா என்கிறது என் தாய் மண். வருணா வருணா என்ற பாடல்களுடன். ஓடைகள் வற்றி வரால் மீன்கள் மூக்குளிக்கும்போது எதிரி தாங்கிகளில் நுழைந்துவிட்டான். ஜாதிய அரக்கனுக்கெதிராக நானும் தோழர்களும் எழுந்த ஊர்களில் காவல் தெய்வங்களாய் எம் பிள்ளைகள், நாம் தரத் தவறிய இரத்ததுக்கு அவர்களிடம் கந்து வட்டியும் கேட்கிறது வரலாறு, கூந்தலுட் பேனாய் யானைகள் ஊருமென் வன்னிக் காட்டு வழிகளில் தூங்கும் மலைப்பாம்புகளாய் கிடக்கும் கோடை ஆறுகள் மீது அதிருது வானம், தட்டி எழுப்புது மின்னல். இனி பறங்கி, பாலி ஆறுகள்கூட விழித்திடும். போர்கள் வென்ற கும்பகர்ணனாய் வாகைகள் பூத்த கனகராயன் ஆறு சோம்பல் முறிப்பதை போருக்கெழுமென் பிள்ளைகள…
-
- 11 replies
- 2.8k views
-
-
நட்பு நாளொரு பொழுதாய் நடைமுறை உலகை நானும் அவளும் காணப் புறப்பட்டோம். நல்ல நண்பர்களாய்… ஒரு நாள்… நிலவை ரசிக்க நினைத்தோம். ஆனால்.. இரவுவரை தனித்திருக்கும் தைரியம் நமக்கிருக்கவில்லை. நிலவு வரும் வரை நாமிருக்க நம் கலாச்சார கண்களும் நம்மை விட்டுவைக்கவில்லை. இன்னொரு நாள்… கடற்கரை சென்று காலாற நடந்து காற்று வாங்க நினைத்தோம். ஆனால்… நம் கைகளைக் கோர்த்தபடி காலடி பதித்து அலை நுரை ரசிக்க முடியவில்லை. அவள் தடுமாறி அலைக்குள் விழுந்த போதும் என்னால் அவளை அணைக்க முடியவில்லை. கடலோ அவளை நனைத்துப் போனது. மூழ்கப் போனவளை மீட்டு வந்தது கண்டும் எங்களுக்குள் ஊடல் என்று ஊர் சொன்னது. அலை கூட அ…
-
- 6 replies
- 2.3k views
-
-
முதல் இரவின் சங்கமத்தில்....... நம் காலைப்பொழுது இவர்களுக்கு முதலிரவு எங்கே தெரியுமா ! கோடி கண்கள் பார்த்திருக்கும் ஓர் வெட்ட வெளியில் ! அவளின் வருகைக்காய் நீண்ட நேரம் காத்திருந்தான் ? நேரமும் நெருங்கியது காத்திருந்து காத்திருந்து கலங்கிவிட்டான் - காரணம் இவர்கள் பொருத்தமில்லா யோடிகள் நிறத்திலும் ஏன் குணத்திலும் தான் ! இவளோ பால் வெள்ளை அவனோ கறுப்பின் மறு உருவம் அவளும் வந்துவிட பறவைகளின் இன்னிசை பூச்சிகளின் ரீங்காரம் மரத்தின் இலைகளின் சல சலப்பு கடல் நீரின் அலையோசை இத்தனையும் சேர்ந்தொலிக்க இணைகிறது முதலிரவில் இவர்களின் உடல் இரண்டும் ! இவளின் ஆதீக்கம் அவனை அடியோடு மறைத்துவிட பார்த்தோர்கள் பர…
-
- 8 replies
- 2.5k views
-
-
-
என் காதல் தேவதை மனதுகளின் சங்கமத்தில் மலர்ந்திடும் ஓர் உறவு குருவிகளின் கொஞ்சல்களில் கொஞ்சமாய் கண்விழித்து ஜன்னலோரம் பார்க்கிறேன். பூ மரங்கள் மேல் பனித்துளியில் தங்க நிற வளையங்களாய் மினுங்கிடும் நீர்துளிகள். அரைத்தூக்கம் கண்களிலே ஆசையாய் இருந்துவிட அவசரமாய் ஜன்னல் கதவுகளை திறக்கின்றேன் பளீரென்று ஓர் வெளிச்சம் என் பார்வையதை பறித்துவிட்டு சில வினாடிகளில் மறைகிறது மறுபடியும் பார்த்தால் புரிந்தது என் புத்திக்கு ஆம்! சூரியனின் விம்பம் சோடி வளையல்களில் எதிரொலித்து ஜன்னல்களின் இடைவெளியால் என் கண்களை தாக்கியது முகம் பார்ப்போம் என்றால் முடியவில்லை பூமரத்தால் அன்று முடிவெடுத்தேன் ஓர் கொள்கை மரம் வளக்கும் கொள்கைவிட்டு மர…
-
- 8 replies
- 1.5k views
-
-
கடவுளுக்கு ....கேட்குமா ?.... என் குஞ்சுகளும் நானும் பசியால் துஞ்சுகின்றோம் பாவி படுபாதகன் ,குண்டு மழையாக பொழிகின்றான் இரவினில் ,காடுகளில் ,பாம்பு பூச்சிகள் நடு , நடுவே உறக்கமோ , கோழியுரக்கம் ,குடிநீருக்கும் தொலை தூரம் என்னவனை கொன்றது உன் கொடிய செல்வீச்சு ஊர்விட்டு ,ஊர் மாறி , நடந்த காலும் சோர்ந்து போச்சு அக்கினி பிழம்பாக ,கொட்டும் வான வேடிக்கை கண்டு குஞ்சுகள் கலங்கி அழ ,என் நெஞ்சம் படும் பாடு உண்ணவும் முடியவில்லை ,உறங்கவும் முடியவில்லை இன்னும் தான் விடிவுமில்லை ,கொஞ்சமும் இரக்கமில்லை ஏனிந்த வேதனையோ ? எவ்வளவு காலத்துக்கோ இந்த நெஞ்சு கூடு வேகமுன் ,கொஞ்சமேனும் இரக்கம் உண்டா தாய் இழந்தேன் தந்தை இழந்தேன் ஊர் இழந்தேன் உற்றார் …
-
- 7 replies
- 1.4k views
-
-
விடுதலை போராளிகள் எதிரியின் சிம்ம சொப்பனங்கள் நம் தமிழீழ எல்லைகளில் எமை தாக்கவரும் எதிரியினை வீரம் எனும் வேல் கொண்டு வீழ்த்திடும் வேங்கைகள். சிந்தனையில் நம் விடுதலையும் சிரத்தினிலே எதிரியினை வீழ்த்தும் பொறிமுறையும் தம் கடமையென நினைத்து கண்ணியமாய் நடப்பவர்கள். துப்பாக்கி ரவைகள் இவர்களின் சொல் கேட்கும் குழந்தைகள் கிரனேட் குண்டுகள் இவர்கள் கைகோர்த்த நண்பர்கள் ஆர் பி ஜி குண்டுகளோ இவர்களின் அடியாட்கள் எதிரியை அழியென்றால் அழித்துவிடும் இவர் அனுப்பும் வெடியாட்கள் ! தமிழ் போராளிகள் ! இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் போரிட மட்டும்தான் - ஆம் எதிரி புற முதுகு காட்டி ஓடும் வரை அவர்களுடன் போரிட மட்டும் தான். துப்பாக்கி …
-
- 0 replies
- 783 views
-
-
நம்பிக்கை கொண்டு நடவுங்கள் ஏய்! முணு முணுக்கும் வாய்களே! கொஞ்சம் நிறுத்துங்கள். படலைக்கு உள்ளே தெருநாய் வருவதால் உன் முற்றம் தொலையுதென்று எவன் சொன்னான்? தெருக்கள் எங்கும் நீ கை வீசி நடக்கணும். உன் இருப்பை எப்போதும் உறுதி செய்யணும். உண்மைதான் உருப்படியாய் என்ன செய்தாய் இதற்கு? ஊருக்கு சொல்ல உன்னிடம் நிறைய உண்டாயினும் உன்னிடம் சொல்ல ஏதேனும் உண்டாவென உன் மனச்சாட்சியைக் கேள் ஆமெனில்.. நீ கரைவதை தொடர் ஆயினும் சில வார்த்தைகளைத் தவிர் அதைப் பின் காலம் சொல்லும் இல்லையெனில்.. இனியாவது சிந்தனைகொள் மானிடப் பேரவலம் கண்டாவது உன் மனக்கதவு திறக்கட்டும் இரும்புச் சிறையுடைத்து புது மனிதனாய…
-
- 11 replies
- 1.9k views
-
-
போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள் ---------------------------------------------------------------- கவிதை:தீபச்செல்வன் _______________________________ 01 போராளிகள் மடுவைவிட்டு பின் வாங்கினர். நஞ்சூறிய உணவை தின்ற குழந்தைகளின் கனவில் நிரம்பியிருந்த இராணுவ நடவடிக்கைகளிலிருந்து போர் தொடங்குகிறது. நகர முடியாத இடைஞ்சலில் நிகழ்ந்து வருகிற எண்ணிக்கையற்ற இடப்பெயர்வுகளில் கைதவறிய உடுப்புப்பெட்டிகளை விட்டு மரங்களுடன் ஒதுங்கியிருக்கின்றன சனங்கள். போர் இன்னும் தொடங்கவில்லை. 02 போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு பின் வாங்கினர். பயங்கரவாதிகளை துரத்திக்கொண்டு வருகிறது அரச யுத்தம். மரத்தின் கீழ் தடிக்கூரைகளில் வ…
-
- 29 replies
- 7.7k views
-
-
ஓய்வு நாள் ஒன்றின் மாலை நேரம் சோகச் சுமைகளால் மனதில் பாரம் இரு மருங்கும் மரங்கள் நிறைந்த வீதி ஓரம் என் கால்கள் நடந்தன வெகு தூரம். 'ஏ... கால்களே, நாம் போகும் இடம் எதோ?' வேதனையான மனம் கால்களைக் கேட்டது. 'ஏதுமறியா என்னை மூளை தான் ஏவியது' வேலையாள் கால்கள் சொன்ன பதிலிது. எண்ணிவிட்ட கருமத்தில் மூளை முழு மூச்சாக, புண்பட்ட மனமோ வேதனையில் சோர்வாக, நீண்ட தூர பயணத்தால் கால்களும் தடுமாற விண்ணுயர்ந்த மலைச்சாரலை அடைந்தது என் பயணம். நுரை ததும்ப சலசலத்துப் பாயும் மலையருவி, இலையுதிர்த்து பூக்களை மட்டும் தாங்கி நிற்கும் மரங்கள், இவற்றிடையே மனதை வருடும் சிரு குருவிகளின் இனிய கானம் இயற்கையின் இவ்வெழிலில் தனை மறந்தது எந்தன் மனம்! 'என் சோகத்தை மறக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
பட்டும் படாமல் இருப்போரை எல்லாம் தட்டிக் கொடுத்து தன் பக்கம் ஈர்க்காமல் - தலைகனத்து கொட்டிடும் தேல் எனவே கொட்டி கொட்டி வெட்டி விடுவதுதான் விடுதலைக்கு பங்களிப்பா? பெயருக்கு தலைவராக இருப்போரெல்லாம் பெரிய தலைவர்களை எல்லாம் சரியாக பகைத்து கொண்டே இருந்தால் யார் பக்கம் சாய்வார் அவர்? பட்ட மரமென்று ஒன்று இருந்தால் விட்டு வெட்டினால், வேர் விட்டு வெட்டினால் சட்டெனெ பெய்யும் மழையில் சடுதியில் துளிர்த்துவிடும் ஒட்ட வெட்டினால் நட்டம் நமக்கல்லவா? உயிர் காக்கும் பிரச்சனைகள் இருக்கும் போது மயிர் காட்டி கட்டுரை வரைவதும் - பதிலுக்கு வயிற்று பிழைப்பிற்க்கெ வக்காலத்து வாங்குகிறார் என்பதும் உயிர் காக்குமா? நம் தமிழர் உயிர் காக்குமா? எலி கூட்டமல்ல க…
-
- 10 replies
- 2.9k views
-
-
இந்த திரியிலே நான் எழுதிய கவிதைகளை இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.புதிய கவிதைகளையும் நான் இதுவரை களத்திலே எழுதிய கவிதைகளையும் தொகுக்கலாம் என்று எண்ணுகிறேன்.நான் இங்கு எழுதிய கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்றது ஆகவே அவற்றை ஒன்றாக சேர்த்தால் பிரயோசனமாக இருக்கும் . முதலில பெண் தெய்வங்களை வணங்கி தொடங்குவம் என்ன. பெண் தெய்வம் சொல்லாதே பெண்ணே நீயும் உன் -சொல்லுக்கு பொருளில்லை இங்கு பொற்சிலையாக நீயிருந்த நேரம் மொய்த்ததோ -ஆண்கள் கூட்டம் சிந்தையிலே திடம் கொள்ளு தாயே நீ -புகட்டிடு …
-
- 54 replies
- 8.1k views
-
-
அள்ளித் தெளிக்கும் அழகு அளவாய் கொண்டு ஆடம்பரமில்லா அலங்காரமிட்டு ஆரவாரமில்லா பேச்சொடு இரவலற்ற புன்னகை தந்து இரங்கும் பார்வை கொட்டி ஈயும் இதயம் காட்டி ஈர்ந்தாள் என்னை உருளும் கரு விழி கொண்டு. உள்ளத்தில் உவகை பொங்க ஊரின் சாயலில் பேசி ஊடலற்ற பொழுதுகள் தந்து எழிமை நடை பயில எழில் கொண்டு வந்தாள் ஏடு தூக்கும் கரத்தால் ஏக்கம் தீர ஐயுறவின்றித் தழுவி ஐக்கியமாகும் எண்ணத்தில்..! ஒரு தரம் என் கரம் பற்றினாள் ஒரு பெரும் பொறி பிறந்தது ஓராயிரம் உணர்வுகள் பொங்க ஓரமாய் உடலெங்கும் பற்றியெரிந்தது ஒளடதம் தேட ஒளவையின் அடுக்குமொழி தந்தாள். அடுத்து என்ன.. அகேனம் விதி வழி சேர அடுக்கிய கனவுகள் அனைத்தும் ஒடிந்தன விழிகள் விழிக்கையில்..…
-
- 133 replies
- 14.3k views
-
-
வன்னிக் குழந்தைகளின் கதறல்கள் தாய் நாட்டில் உதவி வேண்டி நிற்கும் உறவுகளுக்காய்...... அனைத்துலகம் எங்கிருக்கும் எம் அனைத்துலக உறவுகளே ! எங்கள் வன்னியின் அவலங்களை இன்று உலகமெங்கும் அறிவீர்கள் வாழ்விழந்து போன எங்கள் நிலைமையையும் அறிவீர்கள் இன்று மரங்கள்தான் நம் வீடு மணல்தரை தான் நம் படுக்கை காட்டு மிருகங்கள் தான் நம் உறவு குண்டுபோடும் கழுகுகள்தான் நம் எதிரி. எமக்கு வீடு இருந்தும் எம் வாழ்வை காட்டில்தான் வாழ்கின்றோம் காரணம் புரியவில்லை கண்டபடி ஓடுகின்றோம். காலையில் எழுந்தபின்னர் தண்ணீர் தான் நம் உணவு அதன் பின்னர் பசிக்காய் அழுவதுதான் நம் கவலை. பசியின் கொடுமையினால் பழைய உணவை உண்டுவிட்டு புசித்த பின்னர் சிலவேளை …
-
- 12 replies
- 1.7k views
-
-
பள்ளி காதலை நினைத்துப் பார்க்கிறேன் அமைதியான ஒடையின் - சிறு அலையெழுப்பும் சத்தங்களாய் என் மனதில் சிறு சலனங்கள். ஆரம்ப கல்வியின் பின் அடுத்ததாய் ஆறாம் வகுப்பு முதல் சில நாட்களில் முன் அறியா பல முகங்கள் பல்வேறு திசையிருந்தும் பாடசாலையை மொய்த்திருக்க என் வகுப்பிலே பளிச்சென்று ஒர் முகம் பட்டாம் பூச்சிபோல் என்கண்களில் ! பயமொரு பக்கம் மீண்டும் பார்க்க துடித்தது என் முகம் காரணம் புரியவில்லை அவளை பட்டாம் பூச்சியென்பதா பால் நிலவு என்பதா பயமறியாது துள்ளி ஓடும் மான்குட்டி என்பதா? அவளின் பார்வையொன்று என்மேல் விழுவதற்கு கண்களை மூடிக்கொன்று கணபதிக்கு கற்பூர நேத்தி வைக்கிறேன் மூடிய கண்களை மறுபடியும் திறப்பதற்குள் உணர்கிறேன…
-
- 7 replies
- 5.3k views
-
-
இனித் தமிழர் அடிமையென தலை பணிவதில்லை என்ற பாடலை உங்களோடு சேர்ந்து பாடவேண்டுமென்று எனது மனம் விரும்புகிறது. பாலை இசை குறுந்தகட்டில் மிகவும் பிரபலமான 10வது படல் அது. வாசுகியுடன் சேர்ந்து பாலை இசை தட்டு வெளியிட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது. திரும்பிப் பார்க்கிறபோது பாலையாகிப்போன காலங்கள் வயிற்றினுள் பாம்புபோல நெழிகிறது. பழம்கனவாய்ப்போன இனத்தின் வாழ்வும் பாலையாகிவிட்டது. தனிப்பட என்னை அமுக்கிய பாலை கடன் சுமையை அடைக்க திரைத் துறைக்கு போக நேர்ந்ததது. என்னினும் 1996ல் ஆரம்பித்தது போலவே, ஜெயசுக்குறு தருணத்தில் தீவிரப் பட்டதுபோல எனது ஆய்வுப் பணிகளும் அறிக்கைகளும் தொடர்ந்தன. ஏனோ முன்போலலாமல் என் தோழர்கள் கேட்க்கவிம் பார்க்கவும் தவறிவிட்டனர். தைமாதமே தீப்பற்றிய புல்வெளியாய் என் தயகம் சா…
-
- 47 replies
- 14.1k views
-
-
நம் தமிழீழ மண் வீரம் விழைந்த மண் வீரம் விழைந்த மண்ணிது வீரமறவரும் வாழ்ந்த மண்ணிது அம் வீர மன்னர்களின் வீர சாம்ராச்சியம் அன்னியன் சதியினால் வீழ்ந்த போது எம் வீரச்சரித்திரம் சாய்ந்த மண்ணிது. ஆங்கிலேயர் நம் மண்ணைவிட்டு அகன்ற போது ஆட்சி உள்ளூர் எதிரிக்கு மாறிய மண்ணிது. ஐம்பது வருட அடக்கு முறைக்கு அப்பாவி உயிர்கள் பலியான மண்ணிது. எம் அடிமைச் சரித்திரம் மாற்றி எழுதிட சூரியத்தேவன் தோன்றிய மண்ணிது. சூரியத்தேவன் தோன்றியததனால் சாய்ந்த வீரமும் நிமிர்ந்த மண்ணிது. எதிரியின் பிடியிலுள்ள் எம் சரித்திரம் மீட்டிட வேங்கைகள் பாய நம் எதிரியும் வீழ நம் வீரமும் உலகின் கண்களில் தெரிய உலகமே பார்த்து வியந்த மண்ணிது. …
-
- 7 replies
- 1.6k views
-
-
இங்கு இணைந்திருக்கும் பலரைப்போல நானும் தமிழீழ பாடல்கள் விரும்பி கேட்பேன்.. சில பாடல்கள் எழுதியும் வைப்பேன்.... சினிமா பாடல்வரிகள் தான் முழுதும் எழுதி நிறைய இணையத்தளங்கள் உள்ளன. இது போல் தமிழீழ பாடல்வரிகள் உள்ள எந்த இணையத்தளமும் யாருக்கும் தெரிந்தால் எனக்கும் அந்த இடத்தை காட்ட முடியுமா? நான் றொம்ப தேடிப் பார்த்தேன்...எனக்கு எங்கயும் கிட்டுது இல்லையே...
-
- 3 replies
- 1.6k views
-
-
[url=http://g.imageshack.us/g.php?h=177&i=flower1yp8.jpg] பூவே உன் வயது என்ன....? சற்று முன் பிறந்த குழந்தை போல் அழகாக சிரிக்கிறாய் ஆனால் நான் சொல்கிறேன் உன் வயதோ பதினைந்து எப்படி என்று கேட்டால் காரணமும் நான் சொல்கிறேன் என் ஒளிப்பெட்டியில் பதினைந்து வருடங்கள் முன் உன்னை குழந்தையாய் பெற்றெடுத்தேன் - ஆனால் இன்றோ குமரியாய் மாறிவிட்டாய் உன் குழந்தை சிரிப்பு இன்னமும் மாறவில்லை. இளங்கவி
-
- 4 replies
- 1.3k views
-
-
நெஞ்சிலே ஈரம் கொஞ்சம் இருக்கா ? நம் தாயகத்தில் ,பாலுக்கு அழும் பாலகனை எண்ணிப பார் ,நீ சாப்பிடும் கேக்கு வேண்டாம் ஒரு நேர கஞ்சி யாவது ,கிடைக்கிறதா ? இங்கு அலங்கார கோவில்களுக்கு ,தினந்தோறும் அபிஷகம் , விசேட தினத்தில் விசேடமாக , அங்கு குடியிருக்க குடிசை இல்லை இங்கு பசி வர மாத்திரைகள் அங்கு பட்டினியால் யாத்திரைகள் நீ எதோ தப்பி வந்து விட்டாய் என்று எண்ணாதே , கோழை நீ ? , என்ன செய்வாய் ? போராடி பெறும் தாயகத்தில் என்ன உரிமையிருக்கிறது உனக்கு ? ஒவொரு துளி வியர்வையும் அவன் சிந்தும் ரத்தம் அல்லவா ? அள்ளி கொடுக்க வேண்டாம் கிள்ளியாவது கொடுத்தாயா? ,ஒரு நாள் என் அக்காவின் பேரன் ,என் தாயக திரை படத்தை பார்த்து ,கேள்விகளை கேட்டுவிடு , தன் உண்டியலை (piggy …
-
- 0 replies
- 746 views
-
-
அக்கினி குஞ்சுகள் காலத்தை வென்ற கதாநாயகர்கள் நம் தமிழினத்தை காக்கும் காவல் தெய்வங்கள்; கப்டன் ------- எனும் முதல் விதையில் முளைத்த அரும்புகள் இன்று எதிரியின் மூச்சையே திணறடிக்கும் முழு விருட்சங்கள். பெரும் கடலையே விழுங்கிவிடும் கருப்புச் சூரியர்கள் பெரும் தணலில் கூட உயிர்வாழும் ஃபீனிக்ஸ் பறவைகள் உங்கள் கண் முன்னே ஒர் தெரிவு மரணமா எதிரியா? மரணத்தை வென்று எதிரியை அழித்திடும் இரும்பின் உறுதிகொண்ட இரும்பு பாறைகள். புற்றீசலாய் புறப்படும் எதிரியின் படைகளை பூண்டோடு அழித்திடும் புயல் காற்று நீங்கள் எதிரிகளை நடுங்கவைக்கும் தமிழ் ஈழத்தின் பிரம்மாஸ்திரம் தமிழ் மக்களின் உயிர்காக்கும் மார்புக்கவசங்கள். ஐம்பது…
-
- 5 replies
- 1.3k views
-