கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வாழ்வு தொடர்பான கவிதை சூன்ய வாழ்வுகள் எல்லாவற்றிலும் இது அமைகிறதாக்கும். அடரிருள். தெளிவின்மைக்குள் தோற்றுப் போகின்ற ஒவ்வொரு நொடிகளும் மிக மிகக் கனமானவை. பொழுத ஒவ்வொன்றும் கடந்து கடந்து போகையில் செங்குருதியாய், மரணமாய், அச்சமாய், சோகமாய் தெரிகிறது. அதுவேதான். எல்லா சோகங்களுக்குமப்பால் காலம் மனிதனை அறுத்து வீசுகிறது. வாழ்தல் தொடர்பான எல்லா நம்பிக்கைகளும் துடைத்தெறியப் படுகின்ற நிமிஷங்கள் மட்டுமே முன்னாலும் எதிர்காலத்திலும் தெரிகிறது. வாழ்தலைத் தீர்மானிக்கிறவர்கள் அவர்கள், மற்றும் துப்பாக்கிகள், சன்னங்கள் எல்லா நகர்வுகளையும் அவதானிக்கின்றன மரணத்தின் கண்கள். பாதையில், வீட்டில், வாழ்விடத்தில் இருட்டில், பகலில் என்று …
-
- 4 replies
- 1.6k views
-
-
பாவலனா நீ..?...சீ....துா... தோளிலே துண்டிட்டு தோழனாகி நீ வந்தால் கட்சி தலைவனா நீ- உன்னில் காறி உமிழாரா..? குப்பைகளை கூட்டி உன்- இதய கூடையிலே போட்டு விட்டு நாற்றம் அடிக்குதென்றால்-உன்னில் நாறாமல் என் செய்யும்..? பட்டாடை கட்டி வந்த பா வரியை உதறிவிட்டு கவிதை இதுவென்று கருநெஞ்சே நீயுரைத்தால்- உன்னை கல்லால் அடிக்காரா காறி உமிழாரா..? சிலித்தெழுந்த வரிகளிற்கு சிரச் சேதம் செய்பவனே உன்னையா கவிஞனென்று-நீ உலகேறி பறையடிதாய்...?? நல்ல நாடகம் தான் நல்லாய் அரங்கேற்று கண்முன்னே நீ வந்தால்-உன்னை கல்லால் நானடிப்பேன்....! குறிப்பு..- ஒரு பத்திரிகைக்கு எழுதிய கவிதையை-அங்குள்ளவர் அதன் பொருளை வரிகளை சிதைத…
-
- 6 replies
- 2.3k views
-
-
இனி வருமா டோறா...??? ஆழக் கடல் ஏறி... ஆடி வந்த டோறா பாதி வழி வந்து பாதியானதே..... தமிழ் ஈழமது காற்றில் சேதி யானதே...இன்று சேதியானதே.... பாயும் புலி வேங்கை படை தனை அழிக்க ஓடி வந்த டோறா ஒய்ந்து போனதே - இன்று ஓய்ந்து போனதே.... அண்ணனவர் சொல்லில்- வேங்கை அலையதில் நடக்க பாய்ந்து வந்த டோறா பாதியானதே சுக்குநுாறாய் போனதே... எங்கள் புலி வீரரை ஏளனங்கள் செய்தவன் அஞ்சி ..அஞ்சி ..போனான்- இன்று அஞ்சி..அஞ்சி..போனான்... எங்கள் கடலேறி இன்னும் பகை வரு..மா..? வந்தால் அடி முழங்கும்- வானில் வேங்கை கொடி ஆடும்... //// ஆழக் கடல் ஏறி... ஆடி வந்த டோறா பாதி வழி வந்து பாதியானதே..... தமிழ் ஈழமது காற்றி…
-
- 6 replies
- 2.1k views
-
-
ஊடக காரனா நீ...? மக்களின் தொண்டனாய் மன்றேறி வந்தவரே நீதியை கொன்றிங்கே நின்றென்ன உரைக்கின்றாய்..? பிழைகள் செய்தாரென்று பிழையாய் உரைக்கின்றாய் வதைகள் செய்வதற்கா வந்தாய் நீயிங்கே...? கும்பிடு போட்டுனக்கு குலவி வந்தால் தான் சந்திக்கு விடுவாயா சம்பந்த காறனே...? மறையது கழன்றாரென்று மன்றில் நீயுரைத்தால் செருப்பதை எறியாமல்- என்ன செங்கம்பளமா விரிப்பார்...? சுதந்திர தா்மத்தை சுடு காடனுப்பி விட்டு மன்ரேறி என் செய்வாய் மடையனே நீ சொல்லு...? விதி முறை போட்டென்ன விலையா பேசுகின்றாய்..? சீா் கேடி என்செய்வான்- அவன் சிந்தை இது காண்... மதியது தானிழந்தாய் மறையது நீ கழன்றாய் உடையில்லா அல…
-
- 5 replies
- 1.7k views
-
-
செல்லாதா எங்கள் பா...?? துடுப்பை பறித்து- நீ தூர எறிந்தால் கரைக்கு போகாதா எம் கவிதை படகு...?? இடுப்பை உடைத்து- எம்மை இருத்தி வைத்தால் நடந்து போகாதா- எங்கள் நறுக்கு வரிகள்...?? குப்பி விளக்கதில்- நாம் குத்தும் வரிகள் எட்டி பார்க்காதா எங்கள் தேசம்...? எழுது முனையை- பறித்து சிறையில் இட்டால் பறந்து போகாதா- எங்கள் பா வரிகள்...?? -வன்னி மைந்தன்-
-
- 8 replies
- 1.7k views
-
-
கட்டபொம்மன் காலத்தில் மட்டுமல்ல எட்டப்பர்கள் இன்றும் இருக்கின்றனர் தமிழனே! இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான் கண்ணீர் வடிப்பாயோ? விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே நரகிற் கிடந்துழலும் விதியை எவனடா எழுதினான் உன் தலையில்? விடுதலைக்காக நீ விழி திறக்கும் போதெல்லாம் கூடப்பிறப்பொன்றே உனக்குக் குழி பறிக்கும். நீ படை வைத்து அரசாண்ட காலத்தில் இன்று சந்திரனுக்குச் சென்று சாதனை படைத்தானே, அவன் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தான். செவ்விந்தியனைக் கொன்று சிம்மாசனம் பிடித்தவன் இன்று "சர்வதேசப் பொலிஸ்காரன்" ஆகிவிட்டான். கோட்டைகட்டியாண்ட குலத்துக்குரிய நீ மட்டும் மாட்டைப் பூட்டியே இன்றும் மண்ணைக் கிளறுகின்றாய். நீ கப்பலேறிக் 'கடோரம்' வென்றபோது ஜப்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தெந்தமிழீழத் தாயவள் செருக்களம் போயினள் உடலினில் குண்டு சுமந்தல்ல.. வயிற்றினில் பசி சுமந்து.. நெஞ்சினில் புதல்வர் தம் உணர்வோடு..! தமிழீழ விடுதலைக்காய் மாமாங்கம் தனில் மங்கை அவள் தனித்து நின்று துணிந்து திறந்தாள் சாத்வீகப் போர்க்களம். காந்திய தேசத்தின் ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழீழ மகளிர் தம் மானம் குதறுகையில் பொங்கினள் பூபதி அம்மா நேருவின் பேரனிடம் நீதி கேட்டு..! தாயவள் பசியினில் துடிக்கையில் நேருவின் பேரன் நெஞ்சினில் களிப்புடன் தமிழின அழிப்பினில் கழித்தனன் காலத்தை டில்லியில்..! நாட்கள் கழிகையில் பொங்கிய பூவவள் பூகம்பமாய் சிதறினள் சாவினில் சரித்திரம் படைத்திட்ட தமிழீழத் தாயவளாய் மின்னினள் தமிழீழ வானில்.…
-
- 15 replies
- 3.2k views
-
-
நிழல்!! அழகிய நந்தவனத்தில் அநாதையான பறவை நான் சிறகுகள் எனக்கிருந்தும் சிறகடிக்க தெரியாது தவித்தேன் வானத்தில் பறக்க ஆசை வந்தும் தனிமையில் பறக்க வெறுத்தேன்..!! பறக்கும் பறவைகளை கண்டு பலநாட்கள் ஏங்கினேன். என் ஏக்கம் அறிந்து ஒரு பறவை என்னிடம் பதுங்கி பதுங்கி வந்தது.. எனக்கு பறவை மொழி கற்று தந்தது நானும் கற்றேன் மொழியை... மறந்தேன் என் தாய் மொழியை இறக்கைவிரித்து பறந்தேன் வானத்தில் பறந்த போது என் கண்களுக்கு தெரிந்த எல்லாமே சின்னதாகவே இருந்தன.. நிஜத்தை தொலைத்தேன் நிழலாக பறந்தேன் வானத்தில்.. நிஜம் எது நிழல் எது என குழம்பினேன் நானும்.. நந்தவனத்தில் இருந்த இனிமை எனக்கு கிடைக்கவில்லை வானில் நிஜத்தை தொ…
-
- 42 replies
- 8.8k views
-
-
ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த மெத்தையில் படுத்திருக்கிறேன் உன் இருகையில் மட்டும்தான் தூங்கி இருக்கிறேன் * அம்மா உனக்கு அவ்வளவு பாரமாய் இருந்தேன் என்றா பால் கொடுத்து என்னை வளர்த்தாய் நீ தூக்கவே முடியாதளவுக்கு * வெற்றி பெற்றால் தேடி வந்து வாழ்த்த ஆயிரம் உறவுகள் தோற்றுப்போனால் தேடி வந்து அணைக்க உன்னைத் தவிர யார் எனக்கு * ஆயிரம் முறை தலை சீவிய சந்தோசம் நீ ஒரே ஒரு தடவை தலை கோதிவிடும் போது * எல்லாம் சேலைதான் எனினும் நீ கட்டிய சேலையில்தான் என் நிம்மதியான தூக்கம் அவிழ்ந்து கிடக்கிறது * என்னை நடக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட …
-
- 5 replies
- 1.4k views
-
-
சமத்துவ உறவொப்பந்தம் ----------------------------------------------------------- வாசுதேவன். பெண்ணே, உன்னில் எத்தனை விழுக்காடு ஆணுண்டென்பதையும் என்னில் எத்தனை விழுக்காடு பெண்ணுன்டென்பதையும் அளவிடுவதற்கு இன்னமும் உயிரியற் கருவிகளேதும் கண்டுபிடிக்கப்படவில்லையென்
-
- 12 replies
- 2.4k views
-
-
தாயே அன்று உந்தன் மடியில் மறந்து போன என் எல்லா சோகமும் ஒன்று சேர்ந்து என்னைக் கொல்கிறது எனைத் தூங்க வைக்க தூரத்தில் நீ என்பதால் * இந்த உலகில் எந்த மூலையிலும் கிடைக்கவில்லை உந்தன் கருவறையில் கிடைத்த எனக்கான பாதுகாப்பு * என் மேலான உந்தன் கவனத்துக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தையாய் பிறக்கலாம் உனக்கு நான் * எந்தப் பாசப்படியைக் கொண்டு நிறுத்தாயோ தெரியவில்லை உன் எல்லா குழந்தைக்கும் ஒரே அளவிலான அன்பையே காட்டுகிறாயே * என் தாரத்தின் மறுபிறவியில் உணர்ந்து கொண்டேன் நான் பிறக்க நீ தாங்கிய பிரசவ வலியை * உன்னில் தடுக்கி நான் விழுந்தபோதும்…
-
- 8 replies
- 1.5k views
-
-
தமிழீழ புலனாய்துறையினரின்வெளியீடு விழித்திருப்போம் கேட்டுப்பாருங்கள் http://www.esnips.com/doc/eab937d6-453d-48...et=documentIcon
-
- 5 replies
- 1.7k views
-
-
தேடல் உனக்காக நானும் எனக்காக நீயும் எம் மழலைகளுக்காக நாமும் எத்தனை இரவுகள் தூக்கத்தைத் தொலைத்தோம் ஆனாலும் நீ நிரந்தரமாய் தூங்கிய அந்த இரவில் மட்டும் நான் நிரந்தரமாய்த் தொலைத்தது என் தூக்கத்தை மட்டுமா? நிரந்தர இருளுக்குள் நித்தமும் தேடுகின்றேன் உன்னை மட்டுமல்ல என்னையும் தான்
-
- 3 replies
- 1.2k views
-
-
ஏனிந்தப் புன்னகை? கண்ணே என் கண்ணின் மணியே பொன்னே என் சின்னத் தமிழ்ப் பெண்ணே உன் புன்னகையின் எண்ணங்களை என்னால் புரிய முடியவில்லை... ஏனிந்தப் புன்னகை? யாரைப் பார்த்து தாய்நாட்டில் குண்டுகளின் மத்தியில் அன்னை பிச்சையெடுக்க ஐரோப்பாவில் மகன் இந்திய நடிகைக்கு பொன் நகை அணிவிக்கிறான். அதைக் கண்டா இப்புன்னகை? எண்ணமும் நினைவும் எம் மூச்சும் உதிரமும் உடலும் என்றும் எம் தமிழிற்கே என்று அரசியல் மேடையில் முழங்கியவர்கள் இங்கு - பெற்றபிள்ளையது தமிழை அறிந்திடுமோ அது தவறு என்று தடுப்பவர்களைப் பார்த்தா இப்புன்னகை? இன்னொரு எத்தியோப்பியா ஈழத்தில் உருவாகிக் கொண்டிருக்க இங்கே பக்தி வெள்ளம் பல கோடி பணம் செலவு செய்து …
-
- 2 replies
- 1.4k views
-
-
கவிஞனுடன் உரையாடல்....! பாவலனே உன்னை பாவால் வணங்குகிறேன்- உந்தன் பு வாிகள் கோர்த்து- உனக்கு பு மாலை சாத்துகிறேன்... வேண்டாம் இதுவென்று வௌியில் எறியாதே ஏழை நானென்று எட்டி உதையாதே... உயர்ந்த மாளிகைக்கு உழைத்தவர் வீதியிலே வாடகைக்கு வந்தவர்கள் வானத்து வீதியிலே... ஆகா என் வாிகள் அர்த்தங்கள் ஆயிரங்கள் என்னை விட மேலானாய் எழுதிடவே எழுதிடவே... ஆட்டங்கள் போடுகிறார் ஆடுகிறார் பாடுகிறார் வீழ்வோமா நாமென்று வீராப்பு பேசுகின்றார்.. மமதையில் மிதப்பவர் மனிதரா நீ சொல்லு..? இவருள்ளம் அழுக்காகி இருப்பதனை நீ காணு.. தன்னிலை மறந்ததினால் தலைக்கணத்தில் சுற்றுகிறார் இவர் ஆயுள் எதுவரையோ இவைதன…
-
- 1 reply
- 1.1k views
-
-
குருதி படிந்த சுவடுகள் கழுமரம் கூடப் பூத்தது புதுமை கவ்வாரியில் அன்பு பெருகிய மகிமை பகைவரின் மனமும் கனிந்திடும் இனிமை பார்த்தவர் கண்களும் பகர்ந்திடும் எளிமை சிந்திய குருதியால் சிவந்தது வானம் சிதறிய வார்த்தையால் பிறந்தது கானம் முந்திய மானிடம் இழந்தது ஊனம் முகவரி இழக்குமோ முதல்வனின் மானம் தனிமையின் வேளையில் துணையாக வருவார் தடுமாறும் வேளையில் தாங்கியே சுமப்பார் அவமான நேரத்தில் ஆறுதல் தருவார் அன்பினால் அனைத்தையும் ஆற்றியே மறப்பார் வருத்தங்கள் வாழ்வில் திருத்தங்கள் தரலாம் நெருக்கடிகள் எம்மை நெறிப்படுத்திடலாம் அழுகைகள் அகத்தில் அமைதியைத் தரலாம் வறுமைகள் வாழ்வில் திறமைகள் பெறலாம் குருதியில் குளித்து இக் குவலயம் சிறக்க இறுதிவரை இ…
-
- 8 replies
- 2k views
-
-
குருதி படிந்த சுவடுகள் கல்லறைக்குள் அடங்காத கவிதை இவர் எவர் கண்களிலும் பொங்குகின்ற கவிதை இவர் கல்வாரியின் அன்புச் சுனையும் இவர் அன்புக் கடலினிலே சங்கமிக்கம் நதியும் இவர் பிறரன்பு புரியவைத்த பெருமை இவர் அன்று பிறருக்காய் உயிரீந்த வள்ளல் இவர் மனிதத்தை மலர வைத்த மாண்பும் இவர் மனித நேயத்தைத் தேடவைத்த தேடல் இவர் ஆற்றலாய் அறிவதுவாய் அருமருந்தாய் தேற்றரவாளனாய் தினம் உணவாய் நேற்றைய தினம் போல இன்றும் என்றும் மாற்றமே இல்லாத மகிமை இவர் மனிதனைப் புனிதனாய் மாற்றுதற்காய் புனிதனின் அவதார விந்தை இவர் துன்பத்தில் துவண்டுவிடும் எம்மவர்க்காய் துன்னையே அர்ப்பண்pத்த தியாகம் இவர் தூய மனத்தவர்கள் பேறுபெற்றோர் என்று துயருற்றோர் துயர் களைந்த சு…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 15 replies
- 2.3k views
-
-
எனக்காக நீதான் உனக்காக நான் தான் இது தானே நீ சொன்ன முதல் வாக்கியம் இப்போது எங்கே உன் சொல் ஓவியம் கவி எழுத மறந்தேன் - உன் கதை தனை யாசித்தேன் -இப்போ காணாமல் நானும் பூஜித்தேன் ஆனாலும் உனக்காக காத்திருப்பேன்
-
- 10 replies
- 2.4k views
-
-
உலகமே அஞ்சும்.... ஏடெடுத்து கவியெழுத எழுகவடி பெண்ணே- நீ அடிமையில்லை யென்றுரைக்க அகிலம் எழு பெண்ணே... தீயோடு சண்டையிட்டாய் திரூதடி பெண்ணே- நீ தீயாகி எழுந்து பாரில் தீயை வை பெண்ணே.. செக்கிழுத்த மாடாகி-சமையல் செக்கிழுத்தாய் போதுமடி புதிய உலக விதிமுறையில் புரட்சி பெண்ணாய் எழுகவடி ... பிரசவத்து இயந்திரமாய் பரிதவித்தாய் போதும்- இந்த பீத்தலிற்கு தையலிட்டு- கணை பிரிதிவியாய் பாயடி.. அடக்கு முறை உனக்கு இனி அகிலமதில் இல்லையடி- நீ அகல விழி திறந்தெழுந்தால் அவையே உனக்கு அஞ்சுமடி... விழுந்தழுதாய் போதுமடி வெகுண்டே இன்று எழுகவடி எழுந்து விட்டால் போதுமடி ஏழ் உலகும் அஞ்சுமடி..! வன்னி மைந்தன்.////…
-
- 2 replies
- 1.3k views
-
-
நட்பு அவனும் அவளும் நட்பின் பரந்த வெளியில் கைகோர்த்து நடந்தனர். ஆண், பெண் பால்நிலைக்கு அப்பால் உன்னதப் பொருளின் விரிதளத்தில், கிண்டலாய், கலகலப்பாய், சண்டைகளாய் அவ்விருவரின் முன் விரிந்தது உலகம். ஆயிரங்கண்கள் அவர்களின் புனிதத்தை அறியாமல் இழிவாகப் பார்த்தன. ஆண்,பெண் பிம்பங்களுக்கு அப்பால் நட்பின் வளர்வைச் சமுதாயம் ஏற்கவில்லை. ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் மோகிக்கும் பாலியல் கண்கொண்டே பார்த்துப் பழக்கப்பட்ட சமுதாயம் வேறென்ன செய்யும்? மீள எண்ணாத சமூக எச்சங்களாக, அவன் காதல் மனையாளின் கண்ணீரும், அவள் வாழ்க்கைத் துணைவனின் சந்தேகமும் நெய்யிட்ட பெருந்தீயாய் சுவாலை வீசிற்று. கனத்த மனங்களுடன்... சுருங்காத உன்னத விரிதளத்தி…
-
- 54 replies
- 12.6k views
-
-
புறப்பட்ட இடத்திற்கு "மீளவரல்" பற்றிய கவிதையை வாசித்தவர்க்கும்இ அபிப்பிராயம் தெரிவித்தவர்க்கும் எனது மனமாரந்த நன்றிகள். ஒரு கவிதையின் விளக்கம் அல்லது புரிந்துணர்வு இன்னொரு கவிதைக்குள் பொதிந்து கிடக்கக்கூடும், புலப்படாது தப்பித்துச் செல்லவும் கூடும். ஒரு கவிதையிலிருந்து இன்னொரு கவிதைக்கு அழைத்துச் செல்லும் பாலத்தின் கீழ் படந்தோடிக்கொண்டிருக்ககிற
-
- 5 replies
- 1.6k views
-
-
மான்புலிக்கிளிகள் "வட்டம்பூ" விபரித்த ஆண்டாங்குளம் "குமாரபுரம்" வர்ணித்த அரியாத்தை இவ்விரண்டும் குழைந்த கலவையாக மாலதி படையணி... மலைத்துப் போனேன் நாட்காட்டியில்...புத்தகத்தில
-
- 7 replies
- 2k views
-
-
அனைத்துலக பெண்கள் நாள் பங்குனி 8. மகளிர்தினத்தை முன்னிட்டு நான் ரசித்த இந்த கவிதை இதோ. 'பெண்' பெண்ணே உலகின் ஆதாரம் அவளற்ற ஆண் வெறும் தளமற்ற கட்டிடம் உள்ளத் தவிப்புக்கு மருந்தும் உயிரின் துடிப்புக்குச் சமாதானமும் பெண்ணே இன்றி பெறுவதுதான் எப்படி கலையா கணினியா இலக்கியமா இராணுவமா நாட்டுத் தலைமையா விண்வெளிப் புரட்சியா எங்கே இல்லை அவள் சொல்லுங்களேன் உயிரைச் சுமக்கும் ஒரே உயிர் உலகில் பெண்தானே? துவண்ட மனதுக்கு மடிதந்து தலைகோத ஒரு பெண்ணற்றுப் போயின் மனித இனம் மொத்தமும் சுடுகாட்டுப் பிணங்கள்தானே எல்லாச் சுகங்களும் எங்கும் கிடந்தாலும் ஒரு பெண்ணில்லா பூமியில் சிறு பொழுதேனும் நகருமா அந்தப் பூமியும் கூட ஓர் …
-
- 5 replies
- 1.9k views
-
-
அம்மா இங்கே வா வா!! அம்மா இங்கே வா வா! Arrest Warrant தா தா! வேலூர் ஜெயிலில் போட்டு கண்ணுல தண்ணியும் காட்டு! அப்புவும் ரவியும் கூட்டு சின்ன 'சாமி'க்கும் வேட்டு குடுத்தாங்க மாமீங்க பேட்டி சாயம் போச்சுது காவி வேட்டி பெருசுங்க பொருளுங்க குட்தாங்க கூடவே போட்டாவும் புட்ச்சாங்க எதிராளிய குத்தம் சொன்னாங்க மீதிய அமுக்கினு போனாங்க போஸ்டரு நோட்டிசு அடிப்பாங்க கட்டவுடுக்கு பாலும் ஊத்துவாங்க அந்த 'ஸ்டாரோட' குஞ்சு-கல காணோங்க பாலில்ல! ஒருபுள்ள போச்சுதுங்க அபலைங்க சோகமும் பார்த்தாச்சி அனுதாபமும் எரக்கமும் பட்டாச்சி பழய துணிமணி கொடுத்தாச்சி சுனாமி சோகமும் போயாச்சி மிருனாள் சென் -ஆ! யாருங்க? ஜெயலச்சுமி செரினா தெரியுங்க ஐயோ! '…
-
- 6 replies
- 1.8k views
-