கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
கொடும் தீ வந்தெம்மைத் தீண்டும் சுடும் போதெல்லாம் உண்மை தூங்கும் வெறும் வார்த்தை ஜாலத்தில் அறிக்கை பறக்கும்! உலகும் இவர் பேடித்தனம் கண்டு மெல்லச் சிரிக்கும்! அழும் குழந்தையின் கண்ணீர் கண்டும் விழும் தலைகளின் வணங்காமை கண்டும் வெ(ல்)லும் எம் பகை என்றெம் வீரர் குரல் கேட்டும் உதடு சுளிப்பார் உண்மை மறப்பார் கடும் கோபம் கிளறிவிட்டார் எம் குலப் பெண்மை பறிக்க வந்தார் போலிச் சமரசம் செய்து நின்றார் பொல்லாத போர்தன்னை வேர் ஊண்டித் தளைக்கச் செய்தார் சாயம் மாறும் ஒரு நாள் ஞானம் வரும் பின்னாள்(ல்) ஈழம் வரும் பொன்னாள் காயம் மாறும் அந்நாள் எம் கனவு பலிக்கும் திருநாள்
-
- 7 replies
- 1.5k views
-
-
இல்லாதவனுக்கு வயிறு நிறைந்தவனுக்கு மூளை கனத்தவனுக்கு ஆன்மா தேடும் இடம் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தனிமையும் ஒரு பறவையும் தூக்கம் தொலைந்த ஓர் அகாலம் அடர்ந்து படர்ந்திருந்தது இரவின் கரிய கூந்தல் தனிமைக் குகையின் நினைவுப் பாதையில் படுத்துக் கிடக்கிறேன் விழித்தவாறு மென்மையான நிசப்தத்தைப் பிளந்து கொண்டு வன்மையாக ஒலிக்கிறது ஒரு பறவையின் கதறல் எப்போதும் கேட்டிராத பெயர் தெரியாத ஒரு பறவையின் குரல் அது தன் தனிமை தவிர்க்க விட்டு விட்டு விடாது கத்துகிறது கரைந்து புதைந்த அந்தப் பறவையின் குரல் ஆழ்ந்த மௌனத்திலிருந்து எழுந்து ஒலிக்கிறது அதன் வலியோடு பின்னாளில் என் தூக்கம் தொலைந்த அகாலங்களில் எல்லாம் நட்சத்திர ஒளி இந்த ஒளி ந…
-
- 4 replies
- 1.1k views
-
-
அன்பே.... உனது வாழ்க்கை இடிந்து போகாமல் இருப்பதற்காகவே உனக்காக கட்டிய தாஜ்மஹாலை இடிக்கிறேன்... ஏனெனில் நீ இப்பொழுது இன்னொருவனின் மனைவி அல்லவா...?
-
- 3 replies
- 1k views
-
-
தேசத் தேர் நிலைக்கு வராமல் சிலருடைய சிலைக்குக் கீழே சிறைப்பட்டு விட்டது! எங்கள் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு வடமிழுக்கச் சொல்கிறார்கள் இந்த வல்லவர்கள் தண்ரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது தாய் நாடு- எங்களுக்கே தாகம் இன்னும் தணி‘யமல் இருக்கிறது! B)
-
- 3 replies
- 995 views
-
-
கரைகளே... நெருப்பாய் இருந்தால் நதிக்கொன்றும் நஷ்டம் இல்லை... நண்பர் உனக்கு நம்பிக்கை இருந்தால் தடைகளொன்றும் கஷ்டம் இல்லை B)
-
- 3 replies
- 1.1k views
-
-
உயர்ந்த மரம் அடியோடு -சாய குஞ்சுக் காகம் தொடர்ந்து -கரைய தோகை மயில் அழகாய்- ஆட ஆனால் இந்த ரோஜா மலரே எப்போது பூப் பூத்தது ? ரோஜாக்குள் அந்த முள் - அந்த முள்ளுக்குள் - நீ உனக்குள் நான் எதற்குள் நாம் ?
-
- 19 replies
- 2.2k views
-
-
அன்னை மடிதொட்டு தந்தை கரம்தொட்டு மாமன்உறவைத்தொட்டு மாமியின்பாசம் தொட்டதால் அன்பே உனைத்தொட்டு இன்பம் எனைத்தொட்டு மழலைகள் வாழ்வைத்தொட்டு சொர்கம் எனைத்தொட்ட வேளை சோதனை நமைத்தொட்டு இறப்புக்கள் வாழ்வைத்தொட்டு பிரிவுகள் எனைத்தொட்டதால் இதயம்வலியைத்தொட்டு கண்கள் நீரைத் தொட்டு கவிதைசோகம்தொட்டு தவிப்புகள்எனைத் தொட்டு துடிக்கின்றேன் உன்னால் இதுதான் விதியா?
-
- 24 replies
- 3.8k views
-
-
குள்ளமானவர்களே.. குறுக்கு வழியிற் செல்பவர்களே... கதிரவனை நெஞ்சில் சுமந்து விண்ணில் பயணிக்கும் என்னை உங்களுக்கு தெரிகிறதா? எனக்கு சுற்றி வளைத்து பேசத் தெரியாது... என்னால் உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லவும் முடியாது.. நான் நடக்கும் பாதை நேர்கோடு... வானுயர்ந்த சோலை... நீண்ட தென்னை, பனைகமுகு... தொடுவானம்... இவை எந்தன் விம்பங்கள்! கண்களில் ஒளி.. கைகளில் உறுதி... நான் நெடுக்காலபோவான் வந்திருக்கின்றேன்!
-
- 12 replies
- 2.1k views
-
-
உள்ளம் பயந்து ஊமையாகுது கள்ளப் பெண்ணவளிடம் காதல் கொள்ளுது கொடி முல்லையென ஆடி வருவாள் குயிலின் நாதமெனக் கூவி வருவாள் செம்பருத்தி அவளென்னை ஊடல் செருமுனைக்கு* அழைப்பாள் பின்னே ஓடி வந்து என்னைக் கட்டி அணைப்பாள் நீள் முடி கோதி நிம்மதி நாடி புன்னகை செய்வாள் பின்னே பெருநகை செய்து என்னை ஏளனம் செய்வாள் முகத்திரண்டு கருவண்டு என்னை கிறங்கடிக்க வைக்கும் மூக்குத்தி மின்னொளியை மழுங்கடிக்கச் செய்யும் பேனாவை எடுத்து சிந்தனைக் குதிரையை தட்டிக் கொடுத்து புதுக் கவிதை ஒன்று எழுத்தில் வடிப்பேன் பூவை அணைத்து உயிர்க் கவிதை ஒன்று …
-
- 14 replies
- 2.1k views
-
-
நரை விழ பதறியடிச்சு.. பூசிட கரிக்கறை தேடும் உலகம்.. எனக்கு இட்ட பெயர் கறுப்பி...! நான் தவறியியும் இட்டதில்ல கறுப்பாய் ஒரு முட்டை..! தலைக்கனத்தில்.. கறை பிடிச்ச படிமானங்கள் சுமந்திடும் மானிடன் மனசெங்கும் இருள்..! இருளில் வாழும் நீ... தோலில் மட்டும் தேடுவது...??! நிறமணிகள் தொலைத்த பின்னடைவுகள் கூட நிறைவடா அங்குனக்கு...! நிறமணிகள் காவும் உன் கண்மணி நானடா.. புரிந்து கொள்..!
-
- 28 replies
- 4.8k views
-
-
தாயகத்தில் ஓர் அன்புறவு என் தாயகத்தில் ஒர் அன்புறவு நான் இங்கு வந்தேன் அவளைத் துறந்து என் மனம் முழுதும் அவளின் இருப்பு நான் பாடுகிறேன் என்னை மறந்து. குங்குமப் பூப்போல் செவ்விதழும் - அதில் பூத்துக் குலுங்கும் புன்சிரிப்பும் பல கவிதைகள் பேசும் கயல் விழியும் - என்னை வாட்டுதம்மா அவை இன்றளவும். வானம்பாடிபோல் பாடுகிறாள் - அவள் தோகை மயில் போல் ஆடுகிறாள் - தென்றல் காற்று போல் என்னைத் தழுவுகிறாள் - நம் பிரிவினால் தினம் வாடுகிறாள். வானில் ஒளி விடும் விண்மீனாய் - என் மனதில் இனிக்கிறாள் செந்தேனாய் உடல் வாடிப் போனது ஒரு சருகாய் - நான் காலம் கழிக்கின்றேன் அவள் நினைவாய்.
-
- 12 replies
- 2.2k views
-
-
நானும் நோக்கினேன் அவளும் நோக்கினாள் அவள் கண்ணுக்குள் காதலைத்தேடினேன் கானகத்துக்குத்தான் வழி காட்டின
-
- 15 replies
- 3.9k views
-
-
என் குடும்பம்..! மீசை அரும்ப ஆசை முளை விட அலை பாயும் ஆண் மனம் பெண் மனம் பொழுதொரு காதல் காமம் கண்டு கரங்கோர்க்க அற்ப சுகம் தேடிய உடலிணைவின் கதறலில் அழுகையில் உறவுகள் பிறக்கும் அதுவே குடும்பமாக.. மானிட வாழ்வு அடங்குகிறது குறுகிய விட்டமுடன் வட்டமாக..! ஓமோன்களின் ஆசைக்கு அடங்கும் சுயநலப் பொதிகளாய் எங்கும் மானிடர் மனங்கள். எல்லைகள் கடந்து.. தீட்டிய சம்பிரதாயங்கள் தாண்டி.. சிந்தனை விரித்துப் பறந்து வா... மனதை அகட்டி வா.. காண்பாய்.. அன்பின் பரிசாய் அளந்து கட்டி அன்பளிக்கப்பட்டவை.. அன்புக்கு ஏங்கும் குழவிகளாய்.. தந்தை தாயிருந்தும் அநாதைகளாய்... போர்களின் உச்சரிப்பில் உறவுகள் சிதைய …
-
- 16 replies
- 3.8k views
-
-
வேண்டும், வேண்டும் இவன் இதயம் வேண்டும் அவன் அதை கேடுக்க மருத்தான் கேடுக்க மருத்ததை, எடுக்கநினைத்து அவன் இல்லத்தின் வாசலில் நடத்தினேன் என் காதல் உண்ணாவிரத்தை
-
- 19 replies
- 2.9k views
-
-
விரிக்கப்பட்ட ஒரு துண்டின் மேல் விழும் எச்சில்களுக்கு இரத்தம் வருத்த ஆடுகிறான் தன் பிஞ்சுகளோடு கனத்த உடலும் கால் தெரியும் அமைப்பும் ரசிக்கத்தான் கூட்டமுண்டு காலணா வீச ஆளில்லை கரணம் அடிக்கும் பூக்களை ரசிக்கத் தெரிகிறது சிந்தும் துளி ரத்தங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை உழைக்கப் பல தொழில்கள் பிழைக்கப் பல தொழில்கள் பிச்சைக்குத் தொழிலுண்டா? வீசுங்கள் உங்கள் சட்டைப்பை காசுகளை. ஆகாயத்தின் மத்தியில் ஆடும் இவர்களின் வாழ்க்கையும் அடிக்கடி கலையும் மேகங்கள் கயிறின் நுனியில் உயிரை வைத்து பூக்கள் வாடும் மஞ்சள் வெயிலில் உதடுகள் வெடிக்க இவர்கள் ஆடுகிறார்கள் இறைவனின் கூத்து இறைவன் ஆடுகிறான் இவர்களின் வாழ்க்கையில் கூத்து.…
-
- 6 replies
- 1.4k views
-
-
-
உன் மௌனங்கள் என்னை, வாட்டும் போது விழிகளில் பொங்குகின்றன , கண்ணீர்த் துளிகள் உன் மௌனத்தோடு சிதைந்துவிடுமா என் ஞாபகங்கள்
-
- 9 replies
- 2.5k views
-
-
*** பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் - அந்தக் காலம் பாலுக்காய் பாலகனே கால் கடுக்க பாதையில் நிற்பது - இந்தக் காலம் *** மங்கைக்கு மாலையிட சுயம்வரம் நடப்பது - அந்தக் காலம் மங்கைக்கு மாலையிட பணவரம் கொடுப்பது - இந்தக் காலம்
-
- 4 replies
- 1.4k views
-
-
கோயில் வாசலில் காத்திருக்கும் பிச்சைக்காரனாய் காத்திருக்கிறேன் உன் வீட்டு வாசலில் உன் புன்னகைக்காய் * தயவு செய்து இனி நீ குளிக்கும்போது பஞ்சாயத்தில் அறிவித்தல் கொடுத்து விட்டு குளி ஏனெனில் நீ குளிக்கும் போது ஊர் கிணறு எல்லாம் வைற்றி விடுகிறது * நீ ஊர் கோயிலில் பாடிய தேவாரத்தை கேட்டு சாமியாக ஆசைபட்டதில்லை நீ யாரோ ஒரு அனாதையின் இறந்த வீட்டில் பாடிய புராணத்தை கேட்டுத்தான் அனாதையாய் இறந்து போக ஆசைப்பட்டேன் * நீ படிக்கும் கல்லூரியில் ஆண்களும் சேர்ந்துதான் படிக்கிறார்கள் நீ வராத நாட்களில் மட்டும்தான் பெண்கள் கல்லூரியாய் மாறுகிறது * களைப்பில் எந்த இடத்திலும் இளைப்பாறி விடாதே அந்த இடத்தில் இளைப்பாறியே களைத்து …
-
- 7 replies
- 1.3k views
-
-
எனது ஆன்மா காணாமல் போய்விட்டது... நேற்றுவரை என்னுடன்... இருந்த ஆன்மா.. இன்று தூக்கத்தால் எழுந்து பார்த்தபோது காணாமல் போய்விட்டது... இரவில் உறங்கும்போது தொலையக்கூடிய என் ஆன்மா பார்ப்பதற்கு பின்வருமாறு இருக்கும்... அன்பானது... அறிவானது... அமைதியானது... இனிமையானது... இரக்கம் மிக்கது... குழந்தை போன்றது.. குழப்பம் விளைவிக்காதது... விளக்கங்கள் கேட்காதது... ஆன்மா கடைசியாக உடுத்தியிருந்த உடை பேரன்பில் நெய்த நிறமற்ற ஆடை... அன்பனின் ஆன்மாவை ஒன்லைனில் கண்டவர்கள் ஒப்படைக்கவேண்டிய முகவரி... கலைஞன், ஆண்டவன் சந்நிதி.... தேடிக் கண்டுபிடித்து தருபவரிற்கு குடியிருக்க இதயம் ஒன்று பரிசாகத் தரப்படும்... ஓடிவிட…
-
- 13 replies
- 3.3k views
-
-
* காதலும் வாழைபோல் வெட்ட வெட்ட வளரும். **திருமணம் நாணயங்களால் தீர்மானிக்கப்படுவதால் நாணயமான காதல்கூட செல்லாதகாசாகி விடுகிறது. ***நேற்று மலைமேல் கண்களால் பேசினோம் மறுநாள் மாதா கோவிலில் மனங்களால் பேசினோம் பின்பு கடற்கரை மணலில் கைகோர்த்து பேசினோம் இன்று தனித்தனியாய் வாழ்கிறோம் ஊமைகளாய். இதுதான் காதலா?
-
- 12 replies
- 1.7k views
-
-
சமாதான தேவதை - நீ சமர் கண்டு சோர்வதா? அவமான அர்ச்சனை - நீ அருகிராமல் எங்கெங்கோ போவதே! சுகமான வாழ்வது சுடராமல் அணைவதா? சாவின் கரத்தில் உயிர் சடுகுடு விளையாடி மாய்வதா? நிழலாக எம் கழல் தனை தொடர்கின்ற சுற்றமது சுவர்க்கமதை அணைப்பதா? இமையாக நின்றெமை சுமையாக நினையாத அன்னை, அப்பனை அடுத்தடுத்து அவலமாய் இணைப்பதா? தமையனாய் நின்றவர் தம்பியாய் வந்தவர் தமக்கையாய் அணைத்தவர் தங்கையாய்ச் சிரித்தவர் நீட்டி முழங்கிப் போக அனுமன் வாலாய் நீள்பவர் கவலை மறந்து, சிரித்து மகிழ்ந்து இந்நாட்டு மன்னராய் நின்றவர் அன்பென்னும் ஆகுதியில் உயிர்தனைச் சலவை செய்து அவலம் எதுவென மறந்தவர் பட்... பட்... எனப் பறக்கும் வேட்டுக்கு சட்... ச…
-
- 9 replies
- 1.7k views
-
-
உன் கண்களில் மிதக்க ஆசைபட்டு மூழ்கிப்போனது யார் யாரோ கண்களில் என் கவிதைகள் * என்னைக் காட்டிக் கொடுப்பவன் தான் தூரோகி என்றால் என்னவளைக் காட்டிக் கொடுக்கும் என் கண்களை யார் என்பேன் * நீ அழகாய் கிழித்தெறிவதை ரசிப்பதற்காகவே அழகான கவிதைகளாய் எழுதிக் கொண்டுவருகிறேன் * சாண் ஏற முழம் சறுக்கிறது உன் வீட்டு வாசல்படி எனக்கு * என் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல் போனது நீ என்னை மறந்ததை நான் இன்னும் நம்பவில்லை * அவளைச் சிரிக்கவைத்து அழாமல் எடுத்துக் கொடுத்தேன் என் செத்தவீட்டு புகைபடக்காரனாய் அவளின் கல்யாணவீட்டுப் புகைப்படத்தை * உன் வீட்டுச் சுவரில் எனக்கு யாரோ எழுதிய இரங்கல் கவிதை இன்…
-
- 9 replies
- 1.5k views
-
-
தபால் காரனுக்கு என் மீது இரக்கம் அதுதான் எவர் வீட்டு கடிதத்தையோ என் வீட்டில் போடுகிறான் நீ தான் இரக்கமில்லாம இருக்கிறாய் எனக்கு தர வேண்டிய கடிதத்தை இன்னும் எழுதாமல் எழுது எனக்கொரு கடிதம் என்னை நேசிக்கின்றாய் என்றல்ல நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்று அதுவும் உன்னால் முடியாதுவிடில் கையொப்பத்தை மட்டும் நீ போடு கடிதத்தை நானே எழுதுகிறேன் நண்பண் ஒருவனின்ட காதல் சக்சஸ் இல்லாம போச்சு அவன் என்னிடம் ஒரு கவிதை எழுதி தரும்படி கேட்க நம்மளுக்கு தெரிந்த அளவில இதை எழுதி கொடுத்து 2பேரும் சேர்ந்து விட்டார்கள் அது தான் யாழிலையும் போட்டேன் கவிதை மாதிரி தெரியுதா,இல்லாட்டி நக்கல் அடிக்க வேண்டாம்.
-
- 28 replies
- 4k views
-