கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அம்மா, இனி நீ இறந்து விடு.. பயமும் பட்டினியும் நோயும் என இன்னமும் எத்தனை காலத்திற்கு நீ செத்துக் கொண்டேயிருக்கப் போகிறாய் ? ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்கும் ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரிற்கும் ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கும் ஒரு நோயிலிருந்து இன்னொரு நோயிற்கும் ஒரு பசியிலிருந்து இன்னொரு பசியிற்குமென ஒரு பொதியையும் காவிக்கொண்டு இன்னமும்எத்தனை காலத்திற்கு அலையப் போகிறாய்? உன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கழுகுகள் காவிக்கொண்டு செல்வதையும் கண்டுவிட்டுத்தான் மடிவேன் என ஏன் அடம்பிடிக்கிறாய்? அம்மா, இனி நீ இறந்து விடு... அனைத்தும் பயனற்றுப் போய்விட்டது என்பதை அறிந்த பின்தான் போகவேண்டும் என நீ அட…
-
- 1 reply
- 799 views
-
-
இதய அறைக்குள் புதைந்து கிடந்த என் சந்தோசங்களை மீட்டுக்கொண்டது உன் முத்தங்கள். என்இதழ் தந்த முத்தங்களும் என் மொழி தந்த கவிதைகளும் நீ..பருகிடும்போதா.. என்னை குயில் என அழைத்து இந்த குயிலில் முத்தங்களை வருடிச்சென்றாய். உன் முத்தப்புயலின் வேகத்தில் அவஸ்தைப்படும் நான். தித்திக்கும் முத்தங்கள் நித்தம் நித்தம் உன்னிடம் இருந்து கிடைக்குமானால் என் வாழ்வையே.. உன்னிடம் அர்ப்பணித்து கொள்வேன்.
-
- 5 replies
- 1.6k views
-
-
வானமே இல்லாத நிலவாய் தென்றலே தொடாத மலராய் எழுதப்பட்ட புத்தகத்தில் வர்ணிக்கப்படாத கவிதையாய் கண்களின் கண்ணீரைப் புரிந்து கொள்ளா உறவுகளின் சுமைதாங்கியாய் மூடநம்பிக்கையின் ஆணிவேரில் தொலைந்து விட்ட சந்தோஷங்ககளாய் இரவின் வரவிற்காய் காத்திருக்கும் அல்லிமலராய் கனவுக்குள் நிஜத்தை தோடுபவளாய் தலையணைக்கு மட்டும் தெரிந்த கண்ணீரின் ஈரத்தை சொல்ல யாருமில்லாத அவள் யார்?
-
- 9 replies
- 1.9k views
-
-
கைபிடித்து நடந்த கால்தடங்கள் என் பின்னால் வருகின்றன! ஆனால்... நான் இறுக பிடித்த கையையும் காணவில்லை.. ஊரி குத்தும் எனதூர் தெருக்களையும் காணவில்லை! காலமாகிப்போன தெருக்கள்.. ஊனமாகிப்போன உறவுகள்.. என் கண்தேடும் எனதூரின் அழகை காணமுடியவில்லை! கவிபாடும் பனைமரங்கள் தலையறுந்த முண்டங்களாக.... பேயாட்டம் ஆடும் தென்னைகள் பேச்சு மூச்சற்று உறங்குகின்றன! ஊர் அரண்மனையாக திகழ்ந்த கோவில் வௌவால்களின் இருப்பிடமாக.... மழைக்காலத்தில் கூட புல் முளைக்காத எனதூர் மைதானங்கள் பற்றைகளாக.... கோவில் தேர்முட்டியில் குடியிருக்கும் ஆட்டுக் கூட்டம் எங்கே.. மடிந்து விட்டதா.......? கோவில் மடத்தில் கச்சான் விக்கும் ஆச்சியின் குரல் எங்கே..... ஓய்ந்து …
-
- 18 replies
- 2.1k views
-
-
விரிகின்ற எந்தன் நினைவதிலே திரிகின்ற ஒர் உரு உன்னையன்றி வேறெது குவிகின்ற உந்தன் இதழ்தனை இமைக்காமல் நோக்குங்கால் அவிகின்றதம்மா எந்தன் மனது! நடக்கின்ற நிலாவோ நீ? அட.... ட... ட... சுவைக்கின்ற பலாவோ நீ? தவிக்கின்ற மனமெங்கும் நீ தவிக்க விடலாமோ என்னை இனி? பிறக்கின்ற கவிக்குள்ளே உள்ள கரு நீ துடிக்கின்ற இதயத் துடிப்பினிலுள்ள சுதி நீ கடக்கின்ற ஒவ்வெரு நாழியும் நான் நினைக்கின்ற பாவையம்மா நீ மொத்தத்தில் மன்மதன் மனதில் நின்று விளையாடும் ரதிக்கு ஒப்பான மதி நீ!
-
- 10 replies
- 1.7k views
-
-
கவிதை பிறந்த கதை : மாமன் மகள் பூப்பெய்திய செய்தி கேட்டு மலைப்பதியிலே (மலையகத்திலே) இருக்கும் மச்சாளை நினைந்து பிறந்த கவிதை ((கற்பனைக்)கவிதையை ரசிக்க உதவும் என்பதால் சொன்னேன்) மலைப் பதியிலே என் மனங்கவர்ந்த மங்கை மலந்திருக்கின்றாள் மணிப் புறாவே உன்ணணிப் பறவை - என் மனங்கவர் இளமை உற்றவள் பால் தூது ஏகாயோ? மல்லிகை சூடி மனதில் என்னை நிறுத்தக் கூறாயோ? சந்தனத்தின் சாயல் எடுத்து வெண்மதியில் முகமெடுத்து ஆனந்தத்தின் சுளையெடுத்து அழகூற இலங்கும் மங்கையவள் என் அண்டை வந்து இன்ப மூட்ட வேண்டும் காதல் கொண்ட ஏழை நெஞ்சம் பாவையவள் படுத்துறங்கும் மஞ்சமாக வேண்டும் காதல் கொண்டு அர்ச்சிக்க கன்னியவள் கருத்தொருமிக்க வேண்டும் காளை எந்தன் நெஞ்சம்…
-
- 9 replies
- 1.8k views
-
-
ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே அந்தப் பொருளுக்கு ஏகக் கிராக்கி தான்.. ஹைக்கூ கவிதைக்கு மட்டும் இருக்காதா என்ன ஹைக்கூ என்ற மூன்று வரிக் குறுங்கவிதை கருக்கொண்டது ஜப்பானிய மண்ணில் தான். 1. ஹைக்கூவின் தோற்றம் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு அதில் ஒன்று நமது தமிழ், மற்றொன்று ப்ரெஞ்ச். தமிழ் இலக்கிய வரலாற்றை சங்கத்தின் அடிப்படையில் முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனப் பிரிக்கிறார்கள். ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலை நகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். பிரிவு 1 : நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை) இக்காலத்தில் சோக்கா என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த அடிகள் 5,7 என்ற அச…
-
- 10 replies
- 8.4k views
-
-
-
- 22 replies
- 3.8k views
-
-
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ! காராரும் வானத்தில் காணும் முழுநிலவே! நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே! ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே! ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே! உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில் பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே! சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய் கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு! நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச் சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில் கனலேற்ற வந்த களிறே, எனது மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே! தேக்குமரம் கடைந்து செய்ததொரு தொட்டிலிலே ஈக்கள் நுழையாமல் இட்ட திரைநடுவில், பொன்முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச் சின்னமணிக் கண்ணை இமைக்கதவால் ம…
-
- 2 replies
- 1.3k views
-
-
மரண அடி விழுந்தவுடன் ஒழிந்தானே பகைவன்-அங்கு கரணம் இட்டு புகை எழவே புலம்பி நின்றான் மகிந்தன் இரணை மடுவில் குண்டெறிந்து தேடுகிறார் எலிகள்-இனி சரணம் சொல்லி கதை முடிப்பார் சீறிவரும் புலிகள் விடுதலைக்கு வானோடும் அது தாயகத்தின் அடிப்படை-அதை தடுப்பார் எவருண்டு அது தலைவனுக்கே வெளிப்படை கொடுப்பார் பல வெற்றிகளை தமிழீழ வான்படை-அவர் விடுப்பாரே போர்முரசம் எதிரியின் உயிர்பறித்து ஒப்படை உலகமெல்லாம் போற்றிடவே புவியாளும் புலிப்படை-நாம் கலக்கமின்றி வாழ்ந்திடலாம் தலைவன் மனம் தங்கம் எடை மறத்தமிழா நுகர்ந்திடுவாய் தாய்மண்ணின் நல் வாடை-அதை மறந்தால் நீ பிணந்தானே உன் மேனிக்கு ஏன் ஆடை ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த திருநாடு-இது வேண்டாத பேருக்கும் வாழ்வளித்த சி…
-
- 2 replies
- 1.1k views
-
-
பூ விழுந்த மனசு கவிதைத்தொகுப்பிலிருந்து......... - காலையில் நான் காணும் வாசல் கோலம் நீயே ! காரிருளில் துணையாகும் ஓளி தீபமும் நீயே ! கண் திரைக்குள் தினம் தோன்றும் கனாவும் நீயே ! என் வாழ்விற்கு வாசம் தரும் பூ வனமும் நீயே ! - உறவெனும் பந்தத்தில் உயிராய் இணைந்தவளே வாழ்க்கை என்னும் கணக்கில் வரவாய் வந்தவளே கானல் நீராய் தோன்றி மறைந்து போகாமல் - என் தாகம் தீர்த்தவளே ! - பனித்துளி தொட்டு சிலிர்க்கும் புல்நுனிபோல் - உன் பார்வையால் தவிக்கின்Nறுன் பாலைவன ஓட்டகம்போல் உன் காதல் தேக்கி வாழ்கின்றேன் மழைமேகமாய் வருவாயா ? என் மனத்தோப்பினுள் சிறு தூறல் வீசிப்போவாயா ? என்.பரணீதரன்
-
- 6 replies
- 1.6k views
-
-
-
- 11 replies
- 1.8k views
-
-
உன் நட்பினை சுவாசிக்கின்றேன், உன் அகத்தை நேசிக்கின்றேன், உன் நினைவுகளை ஏற்கின்றேன், உன் இலட்சியத்தை மதிக்கின்றேன், உன் உறவில் வாழ்கின்றேன்...
-
- 1 reply
- 857 views
-
-
யாழில் கலவரம் நீ யாரென நினைத்தால் யானென்ன செய்வேன் நீ உரைத்தே குரைத்தால்- நானென்ன உறங்கியா போவேன்?? நீ நினைத்ததை திணிக்கின்ற நினைப்பதை மறந்திடு கருத்து சுதந்திர கன்னியம் காத்திடு. தலைமேலே ஆணவம் தலைமேலே அமர்ந்தால் தடக்கியே விழுவாய் தடமது அழிவாய்... யாழது நிலவரம் யாழினில் என்றால் அன்னியன் நீயுமே- உனை அடித்தே உதைப்போம்.... தட்டியே கேட்காமல் தவறதை விட்டால் வருந்தியே அழுகின்ற வம்சமாய் ஆவோம்.. காத்த பொறுமைகள் காற்றோடு பறக்கட்டும் இனியும் பொறுத்தால் இமயங்கள் தகரும்... சுதந்திர ஊடக சுதந்திரம் மிதித்தால் - உனை சுடுகாடு அனுப்பாது விடுவது முறையோ...??? - வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1k views
-
-
கை வந்த கழுகுகள் இறக்கை வைத்த விரியன்கள் கண் கொத்தும் கழுகள் பிணந்தின்னிப் பேய்கள் உயிர் காவும் வேதாளங்கள் இன்னும் பல பேர் தெரியா பிரகிருதிகள் - எல்லோருக்கும் வேணுமாம் விளையாட எம் குழந்தைகள் வீசிய குண்டுகளில் அவை காவிய உயிர்கள் எத்தனை - சென் பீட்டர்ஸ், செஞ்சோலை என தொடர்கதை அவர் தம் வெறியாட்டங்கள் காயங்கள் கண்டதும் காற்று மறு திசை வீசியதும் பழங் கதை ஆயின இன்று திறமையையும் பலத்தையும் பரீட்சிக்கும் புதுக் கதை, ஆம் எங்களிடமும் கழுகுகள். இப்போதெல்லாம் இருட்டினாலே சிவராத்திரியாமே உங்களுக்கு? எத்தனை இரவுகள் தொலைத்திருப்போம் எம் தூக்கங்களை. கொஞ்சம் அனுபவித்து தான் பாருங்களேன் நாம் பட்ட வலிகளையும். வாங்…
-
- 10 replies
- 1.6k views
-
-
சிலையாக வடித்த சிற்பம் தான் அவளோ இப்பொழுது மலர்ந்த மல்லிகைதான் இவளோ கண்கள் இரண்டும் கதைகள் பேசின காதலின் விரசம் இதழ்களில் தவழ்ந்தன வகுப்பறையில்.... பாடங்கள் மறக்க பாடம் கற்பித்தாய் நீ ஆசான் நான் மாணாக்கன் ம்ம்ம்..... பாடம் நடத்து
-
- 7 replies
- 1.5k views
-
-
துருவத்து வடலிகள் தாய்மடி தேடும் கன்றினைப்போல் தாய் மொழி தேடி அலைகின்றேன். ஏண்டியம்மா கருப்பாயி எனக்கு மட்டும் இந்த நிலை பட்டாம் பூச்சியாய் பறந்து திரிஞ்ச என்னை ஆட்டு மந்தையாய் இண்டைக்கு அங்கும் இங்கும் அலைய வைச்சாய் ஆத்தா மடியிலே அன்புச் சூட்டில் உறங்கியவன் பனிபடிஞ்ச தேசத்திலை பட்டினியிலை கிடக்கிறன் தாய்மொழியை காதலிச்சு தனி மரமாய் வாடுகிறன் அம்மாவை காதலிச்சா அகதிதான் பெயரெண்டால் பூமியிலை எல்லாமே பொய்யான வாழ்க்கையன்றோ ? விழிதிறந்து பார்க்க முன்னம் மொழிகேட்டு மகிழ்ந்தவன் விழிமூடிக் கிடந்தாலும் கனவில் மொழித்தாகம் வாட்டுதடி வளரும்............
-
- 1 reply
- 834 views
-
-
இந்த இனைப்பை கொஞ்சம் பாருங்களேன் http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=2335 நன்றி சிவராஜா
-
- 6 replies
- 1.4k views
-
-
இருட்டின் அறையில், விளக்கின் ஒளியில், எனது ஒளிமயமான வாழ்வைத் தேடுகின்றேன்...
-
- 7 replies
- 1.4k views
-
-
- கருணாநிதி, தி.மு.க. தலைவர் கடற்கரையோரம் நின்று கவிதைப் பயிர் விளைக்க கற்பனைக் கலப்பை பிடித்து கடல் அலையில் கவின் நிலவொளியில் ஏரோட்டிய பாராட்டுக்குரிய கவிஞர்களே! சீராட்டும் தமிழில் என்னை கொள்ளையழகு காட்டுகின்ற கோலப்பெண்ணால் என்றும்... அலைச் சிரிப்புக்காரி ஆடவர் பெண்டிர் மழலையர் அனைவரையும் நனைத்து மகிழும் நாட்டியக்காரி என்றும் கிலுகிலுப்பை ஆட்டி ஒலி எழுப்பிக் குதிக்கும் குழந்தைகளின் கலகலப்புச் சிரிப்புக்குப் போட்டியாக கிளிஞ்சல்களால் ஒலியெழுப்பும் தரங்கம்பாடி யென்றும் தழுவிடுவீர் எனைத் தமிழ்க் கவியால்! கொஞ்சு மொழி இப்படி அந்த நாள் பேசியதெல்லாம் ஏடெடுத்துப் பாட்டெழுதி என் எழிலைப் புகழ்ந்ததெல்லாம் திடீரென ஒரு நாள் தீப்பிடித்த கற்பூரம் போல் …
-
- 13 replies
- 2.1k views
-
-
என்னைக் கவர்ந்த மலர்களே நான் சண்டை போடுவதும் பொறாமை கொள்வதும் உங்கள் மீது மட்டுமே அதெப்படி ஒர் நாளைக்கூட அழகாய் வாழ்கின்றீர்கள் என்னால் ஒர் மணித்தியாலத்தைகூட வாழ முடியவில்லையே இதனால் நித்தமும் தோற்றுப் போகின்றேன் உங்களிடத்தில் என்றாலும் உங்களின் மென்மையை எனக்குள் சேகரித்து வெற்றி கொண்டேன் இதற்காக என்னை தண்டித்து விட்டதே உங்கள் விதி உங்களைப் போல் நானும் சருகாய் காய்கிறேன் எனை கவர்ந்த மலர்களே உங்களின் மெளனச் சிரிப்பபை எனதாக்கி உங்கள் மென்மைக்குள் இன்னும் வாசம் செய்கிறேன் என்றோ ஒர் நாள் …
-
- 7 replies
- 1.5k views
-
-
-
யாராவது கவிஞருக்கு சிலேடையாக கவிதை எழுதமுடியும் என்றால் தயவு செய்து பதில் அனுப்பவும். எனக்கு ஓரளவுக்கு Rap பாடல்கள் பாடத்தெரியும் ஆனால் கவிதை வருது இல்லை ஆகவே உங்களால் முடிந்தால் எனக்கு உதவவும் ஒரு விடயம் எனக்கு புலிகளின் வான்படை தொடர்பாக கவிதை வேண்டும்
-
- 18 replies
- 3.1k views
-
-
நான் ஒரு கவிஞை அல்ல. பெற்றெடுத்து அதை உலகத்தில் சிறப்பிக்க ஆனால் கவிஞை ஆக்கப்படுவேன் இருட்டில் நடக்கும் எண்ணங்களால் என் நெஞ்சில் கருவொன்று திணிக்க முயன்றான் ஒருவன் எண்ணங்களை உடைத்து துளிகளின் மேலமர்ந்து கசங்கிய நிலையில் விதைத்துப் போனான் ஒரு கவிதை மட்டுமே விளையும் கருவை. ஆள் அரவமின்றி காய்ந்து கிடக்கும் ஒரு தாளில் அழுத்தமாய் புள்ளியிட்டு சென்றுவிட்டான். என் கரங்களில் வலிமை இல்லை வலி ஏற்பட்ட நேரத்தில் என் கரங்களும் என்னிடமில்லை என்னை அறியாமல் திணிக்கப்பட்ட எண்ணக்கருவால் ஊற்றெடுத்தது கவிதை ஒன்று ஆம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். கரு என்ன என்பது அறியேன் ஆனால் கவிதை நிச்சயம். யாவருக்கும் ஏற்பட்ட அதே காலத்தில் கவ…
-
- 9 replies
- 1.7k views
-
-
உன் ஆதரவாய் நான் இருந்தேன் நீ என் ஆதரவாய் இருந்தாயா?? நம் உறவுக்குள் பல வீழ்ச்சிகள் இருந்தாலும் அதை தாங்கி பிடித்தேன் இருந்தாலும் நமது காதலை தாக்கியது ஒரு சுனாமி அதையும் தாங்கியது என் காதல் ஏன்? நீ என் அருகில் இருந்ததால் வந்த நம்பிக்கை நம் காதலுக்காக எதையும் செய்ய துணிந்தேன் என் துணிவுக்கு தந்தாயடா தண்டனை என்னும் அழகிய பரிசு பாசம் வைப்பது பாவமா??? என் காதல் தப்பாகி போனதோ?? ஏன், இந்த வேசமடா?? உண்மைப் பாசத்துக்கு இந்த உலகில் கண்ணீர் தான் பரிசா????
-
- 59 replies
- 7.5k views
-