Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கங்காருவின் மைந்தர்களே களிப்பெமக்குத் தாருங்கள் சிங்கத்தின் குழந்தைகளை சிதறடிக்க விரட்டுங்கள் தடுப்பரண் போட்டெம்மை படுத்துகின்ற சிங்களத்தை துடுப்பாட்டக் களத்தினிலே கடுப்பாக்கி அனுப்புங்கள் மைதானம் வந்திருக்கும் மனிதக் கொலைகாரன் மகிந்த முகத்தினிலே மண்கவ்வ வையுங்கள் சிங்கக் கொடிதாங்கி சிரித்துக் கூத்தாட சீமைக்கு வந்தவனைப் - பார்த்துச் சிரித்துநிற்க உதவுங்கள்

    • 5 replies
    • 1.4k views
  2. ;;மகிந்தாவிற்கு எச்சரிக்கை ..;; எங்கள் புலி வானமதை ஏளனங்கள் செய்தவரே கையேந்தி உலகமதில் கை பிச்சை எடுக்கிறீரோ...?? வேண்டி வந்த போர் கருவி வேளையின்றி கிடைக்கையிலே எங்கள் புலி வானமதை எட்ட நின்று முடிப்பீரோ....??? கம்பெடுத்து நாங்கள் வந்தால் களைந்தோடும் படைகளய்யா உங்களது கோட்டைகளை இன்றுயிவை காக்குமாய்யா....??? பகலிரவாய் வானமேறி பாவி உயிர் பறித்தவரே உந்தன் உயிர் காவெடுக்கா உறுமும் புலி அடங்கிடுமோ...?? எங்கள் புலி வீரரை என்னவென்று நீ நினைத்தாய்...? காத்திருந்தோம் உனையழிக்க கள முனைகள் திறந்து விட்டோம்... ஏற்றமுடன் நாம் நிமிர்வோம்- இனி ஏழரையே உனக்கு காண்- உன் கோட்டைகளே இனி சரியும் உனக்கு கோவணமும் இல்லை போ... …

  3. உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள். http://www.kaasi.info/pages/kavithai.htm

  4. என்னைக் கவர்ந்த சங்ககாலம் இதுவரை நான் படித்துச்சுவைத்த சுவைத்துக்கொண்டிருக்கின்ற சங்ககாலப்பாடல்களை அவற்றிற்கான சிறு சிறு விளக்க்கங்களுடன். . .

    • 1 reply
    • 1.2k views
  5. துணிந்து எழு!துடுப்பு எடு! என் இளைய தோழா! இரு கைகளிலும் இருப்பது உளியென விரல் கொண்ட தோழா! நீ எழுந்து வாடா! "எட்டாத பழம் புளிக்கும்" என்பதும் கிட்டாதாயின் வெட்டென மற"ப்பதும் உன் முயற்சிக்கு முட்டாள்கள் போட்ட முட்டுக்கட்டைகள்! எங்கே தவறை நீ தட்டிக்கேட்க துணிந்து விடுவாயோ என தம்மட்டம் அடித்து தற்பெருமைபேசும் வெட்டி மனிதர்கள் போட்ட சட்டங்கள் 'அடிபடு! வாழ்க்கையில் அனுபவத்தால் அடிபடு! சுடச்சுட பொன் மிளிரும் புண்படப்படத்தான் பண் பட்டு மனம் உறுதியில் திகழும்! வெட்டுப்பட்டாலும் மரம் தளிர்கிறதே முட்டிமுட்டி மோதி போட்ட வித்தும் விண்ணை எட்டி விடத்துடிக்கிறதே! என் தோழா! ஒரு தோல்வியில் நீ கலங்கலாமா? விழும் ஒவ்வொரு …

  6. நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ -யாழ்_அகத்தியன்

  7. Started by kaviya,

    எல்லாமும் நீயே அன்பாலே கவர்ந்திட்ட கண்மணியும் நீயே ஆவியுடன் இரண்டாகக் கலந்தவளும் நீயே இல்வாழ்வை இனிதாக்க வந்தவளும் நீயே ஈருடலில் ஓருயிராய் இணைந்தவளும் நீயே உணர்வுக்கு உயிரூட்டம் தந்தவளும் நீயே ஊடல்கள் செய்கின்ற முழுநிலவும் நீயே என்மனதை எளிதாகச் சரித்தவளும் நீயே ஏக்கத்தைக் களைந்திட்ட பெருநிதியும் நீயே ஐயங்கள் தீர்க்கின்ற அறிவணங்கும் நீயே ஓன்றித்துப்; போய்விட்ட எனதுயிரும் நீயே ஓயாமல் துன்பத்தைத் துடைத்தவளும் நீயே ஓளசதமாய் வந்திட்ட ஆரணங்கும் நீயே நீயே இனியெனக்கு எல்லாமும் நீயே

  8. Started by saki,

    chating ( தமிழ் ஆக்கம் தெரியாது ) முகங்கள் புதைத்து முகவரி கள் தொலைத்து வயதுகள் மறைத்து உணர்ச்சி விளையாட்டில் பறிபோனது இங்கே இதயங்கள் பண்பாடு தொலைத்து காதல் மொழி பேசி உணர்ச்சி விளையாட்டில் பிரிந்தது குடும்பங்கள் நிஜத்தை தொலைத்துவிட்டு போலி வாழ்க்கைக்காய் வழக்காடு மன்றத்தில் பிரிவுக்காய் தவிக்க குழந்தையோ வீதியில் அனாதையாக தத்தளிக்குது. நாகரிக வளர்ச்சியால் தமிழ் பண்பாடு அகதியாய் அலைகின்றது எம்மைப் போல். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  9. அகதியாய் அலைந்து ஆழ்கடல் கடந்து இன்னல்கள் சுமந்து ஈழத்தைப் பிரிந்து உறவுகளைத் தேடி ஊட்டி வரை ஓடி எல்லாம் இழந்து ஏங்கித் தவித்து ஐயோ அம்மாவென ஒரு பாத்திரம் கொண்டு ஓடும் எங்கள் நிலை கண்டால் ஒளவைப் பாட்டி மட்டும் ஃமாய் நிற்பார் !

  10. நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ -யாழ்_அகத்தியன்

  11. என்னருமைத் தமிழகமே ஏனிந்த தடுமாற்றம் ? என்னருமை உடன்பிறப்புக்கள் ஏதிலியாய் உங்கள் மண்ணில் ஓடோடி வருவதுவும் ஒன்றும் புதிதல்லவே .. உங்களுக்கு ! எத்தனை காலத்துக்கு எங்களின மக்களுக்கு அகதி என்ற முத்திரையும் அரிசி .. இத்தியாதிகளை கொடுப்பதாகத் திட்டம் .. என்று கொதித்துப் போனேன் .. நேற்றுவரை ஆனால் .. இன்று உங்கள் நடவடிக்கை ! இடியேறு கேட்ட நாகமானேன் ! என்காதை வந்தடைந்தால் .. எப்படி .. எழுதாமல் இருப்பேன் ? ஈழமண்ணின் விடுதலைக்கு இந்தியாவால் முடியாதென்றால் .. உதவத்தான் முடியலைன்றாலும் உபத்திரவம் தான் கொடுப்பதுமேன் ?

  12. பரீட்சை(பிரசவம்!) தாய்மார்கள் மாத்திரமே பிரசவ வலியுடன் பிள்ளைகள் பெறுவதாய் எவர் சொன்னார்? பள்ளியில் கற்கின்ற மாணவர் நாமுந்தான் வருடத்தில் மூன்றுமுறை மகப்பேறு அடைகின்றோம்! கற்பிணிப் பெண்களிற்கு இருக்கையைவிட்டு எழுந்தால் மட்டும் வேதனை! மாணவர்களிற்கோ இருந்தாலும் வேதனை! எழுந்தாலும் வேதனை! தைமாதம் பள்ளியில் தொடங்கும் தேனிலவு சித்திரை புது வருடத்தில் பிரசவ வலியாகி எமது உயிரைக் கொல்லும்! தொடர்ந்து தேனிலவு தொழிலாளர் தினத்துடன் தொடங்கி மூன்று மாதங்களில் எமக்கு மறுபடியும் பிரசவம்! மார்கழியில் குழந்தை யேசுவின் பிறப்பு வரும்வரை தேனிலவும் பிரசவமும் பள்ளியில் எமைச் சக்கரமாய் சுற்றிவரும்! மூன்று மாதங்களில் வருந்த…

  13. எங்கே இவர்கள் எங்கே....? இரண்டாயிரத்து நான்கில் இனிய யாழ்களத்தில் இணைந்த என்னோடு இன்புடன் பழகிய உறவுகள் பலரை சோக உணர்வோடு தேடுகின்றேன் எங்கே இவர்கள் எங்கே ஏங்குகின்றேன் பதில் கூறுங்கள் குதூகலமாக பறக்கும் குருவி எங்கே தட்டிக்கொடுக்கும் தமிழினி எங்கே கவிவடிக்கும் கவிதன் எங்கே மழலை பேசும் மழலை எங்கே இளங்கவிஞன் இளைஞன் எங்கே இளகிய மனம் கொண்ட இளங்கோ எங்கே சிரிக்க வைக்கும் சின்னப்பு எங்கே வியக்க வைக்கும் விகடகவி எங்கே மதிமுகம் கொண்ட மதிவதனன் எங்கே முகம் மலரவைக்கும் முகத்தார் எங்கே வீரமுள்ள வினீத் எங்கே விளையாட்டுபிள்ளை விஷ்ணு எங்கே பறந்து திரியும் பறவைகள் எங்கே பெருமூச்சுவிடும் பெரியப்பு எங்கே கலகத்தோடு வரும்…

  14. வாசித்ததில் பிடித்தது.... I Love You! I யப்படாதே கண்ணே! L லோர்க்கும் கிடைக்காது நம்மைப் போல O ருங்கிணைந்த இதயம் இருந்தும் V தியால் பிரிந்தோம், கவலைப்படாதே! E திகாசத்தில் அம்பிகாபதி அமராவதி போல இடம்பெறும் நம்காதல் Y யாரக் கன்னியே O ருநாள் இந்த U கத்தின் சரித்திரத்தில் நம்காதல் இடம்பெறும்!

    • 23 replies
    • 3.1k views
  15. நீ எப்படி.. அவன் என்றும் இவன் என்றும் அடுத்தார் வாழ்வை எடை போடும் மனிதா நீ எப்படி-உன் வாழ்வெப்படி.. அடுக்கடுக்காய் ஊர்வம்பை அளக்கின்ற போது.. ஆனந்தம் கடலாய் அலைமோதுகிறதோ.. அழ்மனத்து சகதியை வெண்திரை மூடுகின்றதோ.. உன்னைத்திருத்திக் கொள் உலகம் திருந்துமென்றார்... உண்மை அது மெய்..- நீ உன் வாயை உளறவிட்டு ஊர் வாயை அலறவிட்டாய்.. ஊரார் வம்பை ஊட்டி வளர்த்து தன் வம்பை தானே வளர்ததாய்.. வந்த நாள் நல்ல நாள் வாழும் நாள் கொஞ்ச நாள்-அதற்குள் ஆயிரம் பேர் தலையை உருட்ட நினைக்கும் அபூர்வ சிந்தாமணியே.. துன்பத்தில் வீழ்ந்தோரை வம்புக்குள் இழுத்து இன்பத்தைக் காண்பதுமேன்.. பிறர் துன்பத்தில் இன்பத்தை கண்டு களித்து வாழ்வுக் க…

  16. காதல் காதலே உனக்கு கண்கள் இல்லை உண்மைதான் நீ பாதை மாறி முறை கெட்டு வாழ்கின்றாய் காதலே காதலுக்காய் காதலர்களை சிதைத்து சேகத்தின் கடலில் முழ்கடித்து கரையில் நின்று சிரிக்கின்றாய் காதலே உன்னால் குடும்பம் பகையாகி உறவு தூரமாகி தனிமை கொடுமையாகி வாழ்க்கை சுமையாகி வாழ வைக்கின்றாய் காதலே காதலை வாழவைக்க காதலை சாகடித்து கண்ணீரில் முழ்கடித்து எதிர்காலம் வீணாவதேன் காதலே கணவனுக்கோர் காதல் மனைவி க்கோர் காதல் குழந்தை அநாதையாய் வாழ்விழந்து நிற்பதேன் காதலே நீ யே வாழ்க்கையல்ல வாழ்க்கையே போராட்டம் போராட்டமே நீயானால் வாழ்க்கை வெறுமையாய் வெறுத்து போவதேன் காதலே உண்மையே நீயானால் வந்துவிடு பொல…

  17. Started by Jenany,

    நான் கவிதை எழுதியது நிஜம் அவன் உள்ளம் கவர்ந்ததும் நிஜம் அவன் சிந்தனைகளுக்கு சவால் விட்டதும் நிஜம் நான் காதல் கொண்டது நிஜம் அவனால் நேசிக்கப்பட்டதும் நிஜம் காதல் அன்பு பார்த்து வந்ததும் நிஜம் என் காதல் கல்லறைக்குப் பூத்ததும் நிஜம் நான் கண்ணீர்க்கு வாக்கப்பட்டதும் நிஜம் என் காதலன் நேசமானவன் என்பதும் நிஜம் ஆனால் நேசத்தை நிரூபிக்க காதல் நிஜமில்லாமல் போனதும்... நிஜம்..!! நன்றி: நித்தியா www.suduvanam.blogspot.com

    • 7 replies
    • 1.8k views
  18. இணைய உறவு இனிய உறவு இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு இருபத்தோராம் திகதி இதே சித்திரை மாதத்தில் இதோ பசுமையாக அவ்நினைவுகள் இன்றும் என் நெஞ்சில்; இனிமையான காலைப்பொழுதில் இயக்கினேன் கணனியை இணைந்தேன் அரட்டைக்குள் இயற்பெயர் வெண்ணிலாவாக இவளுக்காகவே காத்திருப்பதுபோல்; இன்முகத்துடன் அரட்டைக்குள் இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய் இதமாக கதைக்க நினைத்து இதழ்விரித்துக் கேட்டேன் இருக்கின்றீர்களா நலமா என்று இதயத்தை தொடுவது போல் இயம்பினாய் ஆம் நலமே என இலங்கையில் வசிக்கின்றேன் நான் இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில் இருநாடுகளில் வாழ்ந்தாலும் இணைபிரியாது வாழ எண்ணி இருவரும் கலந்தாலோசித்…

  19. Started by yaal_ahaththiyan,

    என்னவனே.. உன்னை நினைத்து நினைத்து வாழ வேண்டும் உந்தன் மடியில் உயிர் துறக்க வேண்டும் வருவாயா? காலை மாலையாவதும் மாலை காலையாவதும் உந்தன் ஆசைக்குள் மறைய வேண்டும் வருவாயா? எந்தன் கோட்டையை விட்டு நீ போனாலும் நீ போட்டு விட்டு போன கோடுகள் ஆறவில்லை அதற்காகவேனும் வருவாயா? கோழி கூவினாலும் கோயில் மணி அடித்தாலும் கோலம் போட மறந்தாலும் உந்தன் மடியில் மறக்க வேண்டும் அதற்காகவேனும் வருவாயா? கனவில் நான் குளித்து நினைவில் காய்கிறேன் என்னை உடுத்திக்கொள்ள உண்ர்வோடு வருவாயா? அங்கத்தில் இடம் பிடித்தாய் ஆசையை தூண்டி விட்டாய் அனுபவத்தை கொளுத்தி விட்டாய் அணையாமல் எரிகிறேன் அதற்காகவேனும் வர…

  20. Started by கஜந்தி,

    அனுமதி யாழ்கவிகளே இந்தவெள்ளைரோஜாவின் சின்னமொட்டுக்கள் உங்கள்கவிதைப்பூக்களுடன் அனுமதியின்றி பூக்கலானது உலகெங்கும் மனித நேயங்கள் அழிந்து போனதால் பறிபோன உணர்வால் வலிகொண்ட இதயங்களின் கவிதைத் தோட்டத்தை நான் ரசித்திட்டதால் இங்கே அனுமதியின்றி பூவானேன் யுத்தத்தின் கொடுமைகள் தென்றலெங்கும் இரத்ததை வீசியதால் அதை சுவாசித்த இதயங்கள் கல்லாய் மாறியதால் பாசங்கள் எங்கே காணமல் போனதால் வலிகொண்டு இங்கே அனுமதியின்றி பூவானேன் அழிவுகளை ரசித்திடும் மனிதன் என் க ண்களில் அரக்கனாய் தோன்றியதால் வெறுந்திடும் உலகை மறந்திடும் நிமிடங்கள் இந்தகவிதைத் தோட்டத்தில் அனுமதியின்றி பூவானேன்

  21. கவிதைக்குள் எழுத வரவில்லை ஏன் என்று தெரியவில்லை அதனால் தான் இதனுடாக அனுப்புகின்றேன் காதல் காதல் புனிதமானது அற்புதமானது முறையாக உண்மையாக காதலிக்கும் போதுஃ ஆனால் தற்போது காதல் மலிந்து முறை கெட்டு விட்டது அதுவும் வெளிநாடுகளில் காதல் சீர்குலைந்து விட்டது காதலர்கள் சோடி மாறியது அல்ல அதிசயம் கணவன் மனைவி குழந்தைகளை அநாதையாக்கி சோடி மாறுவதுதான் ஆச்சரியம் வேதனை அதுமட்டுமா தாயகத்தில் நிச்சயிக்கப்பட்டு ஏன் திருமணமும் செய்து கொண்டு வெளிநாடு வந்து அவர்களை ஏமாற்றி விடுவது கொடுமையல்லவா அதுவும் இப்பொழுது நடக்கின்றது ஒருவர் காதலித்து விட்டு அல்லது திருமணம் செய்துவிட்டது அதை உதறி எறிந்து விட்டு இன்னொருவரை காதலிப்பதாக அவர்…

    • 16 replies
    • 4.7k views
  22. Started by kavi_ruban,

    கண்ணெதிரே வந்து நின்று களிப்பூட்டும் காதலியைக் காணவில்லை வெறிச்சோடிக் கிடக்கும் ஊரின் நிலை மாறவில்லை தேரில் வரும் சாமியைக் கும்பிட வழியில்லை ஆமி செய்யும் அட்டகாசம் ஓயவில்லை சமாதானம் சமாதானம் என்று வீண் கோஷம் போடுவதில் அர்த்தமில்லை எல்லோரும் சமமென்று நினைக்கும் வரை நிம்மதியொன்றில்லை விண்மதியின் ஒளியினில் குளிர்ச்சியில்லை தன் மதி தான் தனக்குதவி என்று உணரும் வரை வளர்ச்சியில்லை விலைவாசி குறையவில்லை மலைவாசி சிறப்புடன் வாழவில்லை எந்தவாசியும் எமக்கில்லை - சிவன் ஆசி மட்டும் இருந்தால் தொல்லையினி இல்லை மனிதனை மனிதன் புரிந்து கொண்டால் ஓர் சண்டையில்லை எல்லை கேட்டு போரிடவும் தேவையில்லை சாதிகள் ஆதியில் இருந்து வந்தவையில…

  23. Started by கிருபன்,

    வடலி சி.சிவசேகரம் இந்தக் கருப்பனைகள் இங்கேதான் முளைக்கும் இடம்பெயரச் சொல்லி எவர் வேரோடு கல்லி வெளியே எறிந்தாலும் வடலி வளரமுதல் வெட்டிச் சரித்தாலும் கிழங்கு முளைவிடுமுன் கீறி எடுத்தாலும் இந்தக் கரும்பனைகள் எப்போதோ என்றோ இங்கேதான் முளைக்கும் எத்தனையோ பெரும் புயல்கள், இடிமழைகள், சுடுவேனில் எல்லாமே எத்தனையோ நூற்றாண்டாய்க் கண்டவைதாம். பொன்னில் முடி புனைந்து ஆண்ட பரம்பரையார் போயழிந்தார். ஆனாலும் எங்கள் கரும் பனைகள் எங்கள் வெளிகளிலே ஓலையிலே முடி புனைந்து ஓங்கி அரசாளும் எனவேதான் எத்தனை நாட்போனாலும் எத்தனை தான் கடிதாய் நீவிர் முயன்றாலும் எங்கள் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும். பனைவடலி அல்லவே எங்களது பாலகர்கள் என…

  24. Started by இனியவள்,

    உனைச் சந்திச்சு பிரியும் ஒவ்வொரு நாளும் நான் நானாக வந்து நீயாக மாறுவதும் உன்கூட நடந்து சென்ற பாதைகள் எங்கும் தனியாய் நடந்து பழகுவதுமாய் மாறிப்போனேன் நான் இதுதான் காதலா...... இல்ல இதைத்தான் காதல் எங்கிறார்களா எதுவும் புரியாதவளாய் உன் மார்போடு தினம் தூங்கும் மரத்தடியில் நாளைய உனக்காய் இன்றைய என்னை செலவழித்தபடி காத்திருக்கும் இவள்

  25. அண்மையில் ஒரு நீண்ட நாளைய நண்பன் ஒருவன் கதைக்கும்போது என்னிடம் கேட்டான் என்னடா முந்தி ஒரு காலத்திலை கனக்க கவிதையள் கதையள் எண்டு எழதுவாய் இப்ப வர வர உன்ரை எழுத்து இப்பிடி மோசமாய் பேச்சு தமிழிலையும் அதுவும் ஊர்வம்பு மற்றவர்கள் வம்பு என்று போய் கொண்டிருக்கு என்ன நடந்தது வயசு போட்டுதா? என்றான். அவன் திட்டினது எனக்கு கோபம் வரேல்லை ஆனால் வயது போட்டுதா எண்று கேட்டதுதான் கோபம் வந்திட்டுது அதுதான் வழைமையை விட ஒரு மாறுதலுக்கு இந்த வரிகள் கண்கள் பார்த்தால் காதல் வரும் கண்கள் பார்க்காமலும் காதல் வரும் காலத்தின் கோலம் கணணிக் காலம் இனிக்கும் மணக்கும் இதமாய் இருக்கும் இதுவல்லவோ உலகமென்று இவ்வுலகமும் மறக்கும் தடைபோட்டு தடைபோட்டு தாய் தந்தை த…

    • 18 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.