கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
உதயப் பொழுதில் கானத் தமிழில் காதோரம் நனைய களிப்பில் என்மனம்! உலகில் பரந்த தமிழின் செழுமை நிலைத்து நிற்க இறைவா பாராய்!! http://www.esnips.com/doc/15947adc-758f-4b...2256/kavikkuyil கவிக்குயில் பாடுது - குரல்:சங்கீதபூஷணம் (அமரர்) எம்.ஏ.குலசீலநாதன் - இசை: எஸ்.கே.பஞ்ச் - வரிகள்:தீரன் - நாடு: பிரான்ஸ் கொழும்பைக் காட்டிய இரதமே இன்று நீ எங்கே? சமத்துவம் சொன்ன சடப்பொருளே சட்டென நீயும் மறைந்ததென்ன? தினமொரு காட்சி நிதமொரு உணர்வு எவ்வளவற்றைக் கண்டிருப்பாய் அன்றைய பொழுதுகள் உன்னுள் நானும் உறைந்ததும் இன்றும் மனச்சுமையாய்!! http://www.esnips.com/doc/effe271b-e9fe-45...6b/Yarltheviyil யாழ்தேவி - குரல்:சாம் பி.கீர்த்தன் -…
-
- 0 replies
- 623 views
-
-
ஆட்களை இழந்த வெளி வானம் நேற்றுக் காலைவரை உறைந்திருந்தது இப்பொழுது சிதறி கொட்டிக்கொண்டிருக்கிறது வானம் அழுகிறதென யாரோ சொல்லிக்கொண்டு போகிறார்கள் இப்பொழுதுவரை எந்தத் தகவலும் இல்லை சனம் தகர்ந்து அடங்கிப்போயிறுக்கின்றனர் குடி எரிந்து முடிகிறது. ஹெலிஹொப்டர்கள் அலைந்து கூடாரங்களின் சிதைவுகளை படம் பிடிக்கிறது எரிந்த வாகனங்களை மீட்டுக் கொண்டு போகிறது ஐ.நா எல்லாம் நசிந்துபோக அடங்கிக் கிடக்கிறது ஆட்களை இழந்த வெளி. கைப்பற்றப்பட்டவர்களாக குழந்தைகளை தொலைக் காட்சிகள் நாள் முழுவதும் தின்று கொண்டிருந்தன நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நந்திக்கடலில் பறவை விழுந்து மிதக்கிறது பறவைதான் சனங்களை தின்றது என்றனர் படைகள் நந்திக்கடல் உனத…
-
- 0 replies
- 529 views
-
-
"படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன" "நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க" வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், க…
-
- 0 replies
- 205 views
-
-
"பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா" "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா பிள்ளையை அணைத்து போறாள் ஒருநிலா வள்ளி தெய்வானை திருமண விழா துள்ளி குதித்து கொண்டாடினம் தம்பதியர்." "குட்டி எலியில் தொந்தி பிள்ளையார் முட்டி உடையுமோ ஏங்குது குழந்தை? கொட்டி மேளத்துடன் இரு மனவியரை தட்டி வாழ்த்துறாள் ஒரு கண்ணகி ?" "மஞ்சு விரட்டு ஒரு மிருகவதை அஞ்சி நசுங்கும் எலி தெய்வவாகனம்? பஞ்ச பாண்டவருக்கு ஒரு திரெளபதி நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 151 views
-
-
ஏன் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறோம் நாங்கள் இன்னும் ஏன் எரிந்து கொண்டிருக்கிறோம் என்ன பாவம் செய்தோமென்று எங்களுக்குப் புரியவில்லை வாசலில் சுடுகலனேந்திய அன்னியப் படை அடக்குமுறை அரசு சொல்கிறது பாதுகாப்பென்று.. காணாமற் போதல்கள் கைதுகள் பாலியல் வன்புணர்வுகள் அடையாளமற்ற கொலைகள் தொடர்கிறது.. மக்களைப் பேசாத ஊமைகளாக்க முகாம்கள் முளைக்கின்றன புதிய அணிகள் புதிய திசைகாட்டுவதாக உறுமுகின்றன. விசையிருந்தால் பறக்க முயற்சிப்பதாய் சிறகசைக்கின்றன! நாமே ஆசீர்வதிக்கப்படவர்கள் நாமே அனுபவமுள்ளவர்கள் நாமே ஆற்றலாளர்கள் முடிநரைத்துக் கூன்விழுந்தாலும் முடியும் வரை தொடர்வோம் தீர்வுதேடித் தருவோம்…..! சிங்களமும் தொடர்கிறது புதிது புதியாய் நடுகிறது சித்தார்த்தன் சிலைகளை.. வீதி முலையில் இருந்து எங்களுக…
-
- 0 replies
- 674 views
-
-
நெஞ்சில் இனித்த நினைப்பு --------------------------------- -மு.கருணாநிதி தொங்கு சதை கிழவிஜெயா அறிக்கை புலி மங்கு சனிக்குணமும் பொங்கு பசிவயிறும் தங்கு தனியிடமும் தழுவுகலா சேவையும் வங்கு ரோத்துதனமும் வறட்சிமிகு மூளையும் கொண்டதனால் குழப்பமிகு அரசியல் ஆட்சி தந்தபணால் பன்னிகளும் புடைசூழ நின்று வெந்தபுண்ணாய் மக்கள் வெதும்பி அழுதிட வந்தமாற்றம் என்னிடம் அரசு ஆட்சியாய் ரெண்டுரூபாய் அரிசிக்காய் ரெட்டையிலை தூக்கி கூவத்தில்வீசும் கலர்டீவிகாட்ட கைநாட்டு போடும் பாமரத்தமிழன் பாராளுங்கனவோடு பசிவயிறு மேல் ஈரத்துணி போட்டு இரந்துவாழ் நாள்மட்டும் எந்தனாட்சி என்வீட்டு ஆட்சியாய்வரு சாட்சியாய் ஒன்றுரெண்டு மூன்றுமனுசி பெத்தவாரிசு ஆட…
-
- 0 replies
- 1.1k views
-
-
போயகலும் பொல்லாப் பொழுது விடுதலைப் போரில் விழுந்த உறவுகளே! மண் பட்ட வேதனையை மாற்றத் துடித்தெழுந்து புண்பட்டு மண்ணில் பூவாய் உதிர்ந்தோரே! நெஞ்சுருகி உங்கள் நினைவைச் சுமக்கின்றோம் அஞ்சாத நெஞ்சோடு அந்நியர் தமைத் துரத்த வெஞ்சமர்கள் செய்தீர் வெற்றி பல கண்டீர் ஆனாலு மந்தோ! அடைந்த பல வெற்றியெல்லாம் போனதென்ன மண்ணாய் புகழழிந்து தோற்றதென்ன? எங்கள் சரித்திரத்தை எழுதிடவே உங்களது செங்குருதி தன்னையன்றோ தீந்தையாய்த் தந்தீர்கள் சிதைந்த உடல்களன்றோ சித்திரங்களாயிற்று நீர்மேலெழுத்தாகி நிலைகுலைந்து உங்கள் புகழ் பார்மீதில் இன்று பழங்கதையாயப் போவதனை விட்டு விடலாமோ! வீணே எமையழித்த துட்டர்களெம் முன்னே தோளுயர்த்தி நிற்பதுவோ! தோற்றான் தமிழன் இனித் தொல்லையழிந்ததென்று ம…
-
- 0 replies
- 644 views
-
-
கனிவான கன்னி என்று உன்னை நினைக்க நீ, என்னை கண் கலங்க வைத்தாயடி. உதிரம் எல்லாமே உனக்காக என்றிருந்த என்னை, உயிரோடு வதம் செய்தாயடி . ஒரு முறையேனும் உன் இன்முகம் காட்டி கனிமொழி கேட்க நான் , ஏங்கியிருந்து , வாடியிருந்து , இளமைதனை இழந்து ஏமாந்து போனனடி. என்னுயிர் நீ என்று தன்னுயிர் பாராது கண்ணீருடன் இருந்த என் தாயன்பினை நான் உணர்ந்து , பாசம் உள்ள அன்னையவள் அன்பு மட்டும் எனக்கு இப்போ ஈசன் தந்த சொர்க்கமடி. உன் நினைப்பு எனக்கு தந்தது வெறும் வெட்கமடி . சிந்தை கலங்குதடி எந்தன் சிறுபிள்ளை தனத்தை எண்ணி …..கலை http://www.siruppiddy.net/?p=7317
-
- 0 replies
- 594 views
-
-
-
"சாக்காட்டின் சரிதை" அவர்கள் தமது உரிமைக்காக உடமைகளை மட்டுமல்ல உடலுறுப்புக்களையும் ஒப்பற்ற "உயிரையும்" ஒப்புக்கொடுத்திருந்தனர். அவர்களது தியாக வேள்வி நியாயத்தின் அடிப்படையில் நம்பிக்கையை முதலீடாக்கி நடத்தப்படுவதாக அவர்கள் மட்டுமல்ல உலகமும் நம்புகிறது. ஆனாலும் அவர்களது வேகத்தை நம்பிக்கையை மழுங்கடிக்க, ஒரு வர்க்கக் கூட்டம் பல இடங்களில் ஒளிந்திருந்து ஓங்காரமாக பூசை செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் சுயமாக நாட்டி வளர்த்த மரங்களும், கட்டி வாழ்ந்த வீடும், வாழ்வாதாரங்களும், அடிக்கடி கொடிய விலங்குகளால் சுடுகாடாக்கப்பட்டபோது, ஏன் என்று ஒருவரும் கேட்கவில்லை. அவர்கள் ஒருமுகமாக ஒப்பற்ற தலைமையுடன் எதிர்கொண்டு எழுந…
-
- 0 replies
- 816 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்னும் எலும்புகள் - சுகுமாரன் எனது கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும். மரணத்தால் விறைத்திருக்கிறது என் வீடு நான் உனக்குத் தரும் சொற்களில் மிருகங்களின் கோரைப் பற்கள் முளைத்திருக்கலாம் உன்னுடன் பகிர்ந்து கொள்ளும் சிகரெட்டில் விஷத்தின் துகள்கள் இருக்கலாம் உன்னுடைய தட்டில் பரிமாறும் உணவில் சகோதரர்களின் மாமிசம் கலந்திருக்கலாம் உனக்குத் தயாரிக்கும் தேநீரில் கண்ணீரின் உப்பு கரைந்திருக்கலாம் இந்த நாட்கள் காக்கிநிறப் பேய்களால் நிர்வகிக்கப்படுகின்றன இன்று பூககளும் பறவைகளும் குழந்தைகளின் புன்னகைகளும் பெண்களும் எரிந்து போயினர் உறுப்புக்கள் வெட்டப்பட்டவர்களின் குரல்கள் …
-
- 0 replies
- 503 views
-
-
யார் மீட்பாரோ! --------------------- எம்மை அழித்த இன்னொரு ஆமியாய் வந்த சுனாமியே எந்தனை உயிர்களை காவு கொண்டாய்! சாவுகள் சூழ்ந்து சாய்ந்த மனங்களை சாவுகளாலே மீண்டும் சாய்த்தாய்! ஆண்டுகள் கடந்து போகின்ற போதிலும் எம்முடன் வாழ்ந்தவர் நினைவுகள் வாழுமெம்முடன் என்பதை அறிவே அறியுமல்லவா! துயரங்களாலே நிறைந்த வாழ்விலே தோள்கொடுத்த எம் மீட்பரும் இன்றி தொலைகின்ற வாழ்வினை யார் மீட்பாரோ! மீடபராய் யாரும் இல்லாவிடினும் துட்டராயேனும் இல்லாதிருக்கும் நிலையொன்று வேண்டும் நிம்மதிகான வழியொன்றும் வேண்டும் வலிகளைக் கடந்து நிமிர்ந்திட வேண்டும் உலகிலே தமிழினம் நிலைபெற வேண்டும்! சுனாமியில் சாய்ந்த உறவுகள் நினைவோடு கடலிலே மீண்டும் இறங்கியது போல் கரைகளைத் தேடப் புதிய திசைகளைத் தேடுவோம் நாமே!
-
- 0 replies
- 565 views
-
-
தமிழினத்தை உலகறிய ..... உச்சத்துக்கு கொண்டுசென்ற ..... உத்தம மனிதர்களில் ஒருவர் ..... மேன்மை தங்கிய தமிழ் .... விஞ்ஞான தந்தையே கலாமே ...! உங்கள் பங்கும் வற்றாத நதி அய்யனே .....!!! அடுத்த வேளை உணவுக்கு .... அல்லல் பட்டாலும் நம்பிக்கையை .... தளராமல் விடாமல் முன் செல் ... வெற்றி நிச்சயம் சாதனை நிச்சயம் .... வாழ்துகாட்டிய எம் தந்தையே ... அய்யனே .....!!! எப்போது எதிர்காலம் உங்கள் ... கையில் இளைஞர்களே மாணவர்களே .....! உச்சாகம் ஊட்டுவதில் உம்மை தாண்டிய .... எவரையும் நாம் பார்தத்தில்லை -சான்று ..!!! உயிர் பிரியும் வேளையிலும் மாணவர்களின் .... அருகிலேயே உயிரையும் விட்டீர்களே ....!!! அய்யனே ..... நீங்ககள் விதையை ஊன்றிவிட்டு .... சென்றுள்ளீர்கள் - நிச்சயம் ... மரமாகும்... தோப்பாகும் …
-
- 0 replies
- 1.4k views
-
-
-
வாக்காளனே! இன்னுமா நீ விழித்துக் கொள்ள வில்லை? உன் விழிகளில் வெளிச்சத்தை ஏற்றி உன்னெதிரே நிற்கும் இம் மனிதனைப் பார்! ஏன்? அடையாளம் தெரியவில்லையா? பாவம் ஐந்தாண்டு இடைவெளியல்லவா? நீ மறந்து போயி(விட்டாய்)ருப்பாய்! ஆனால் உனக்கு வணக்கம் கூறும் இம்மனிதன்தான் ஐந்தாண்டுகளுக்குமுன் உனக்கு வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு தன் ஓட்டைப்பெற்று உன்னை – மறவாமல் வந்திருக்கிறான்! உனக்கு ஞாபகமிருக்காது ஏனென்றால் ஐந்தாண்டு இடைவெளியல்லவா? உனக்கு ஞாபகமில்லையென்றாலும் இதோ இந்த அரசியல்வாதிக்கு உன்னைமட்டுமல்ல பதினெட…
-
- 0 replies
- 492 views
-
-
ரத்தக்காட்டேறி ராஜபக்ஷே! கவிதை, குரல் - பா.விஜய் இசை - தாஜ்நூர் கோர்வை - கார்த்திகேயன் ஆக்கம் - வா.கௌதமன்
-
- 0 replies
- 803 views
-
-
மூன்றாம் அறிவு -------------------------- "அ" எழுதியவுடன்...... ஆரம்பமாகிவிடும்..... ஏட்டறிவு........! ஏட்டறிவில்..... ஏற்றம் கண்டவரும்........ உள்ளனர்...... ஏட்டறிவு எட்டாதவரும்..... உள்ளனர்.........! ஒவ்வொரு வயதுக்கும்..... ஒவ்வொரு பட்டறிவு....... ஏட்டறிவில்லாமல்....... பட்டறிவால் வாழ்வியலில்..... பட்டதாரியானவர்களும்..... ஏராளம்.........! ஏட்டறிவும் பட்டறிவும்..... போராட்டத்தாலேயே....... பெறப்படுகிறது.......! ஏட்டறிவும் பட்டறிவும்..... ஏதோ ஒருவகையில்..... யாரோ ஒருவரின் சாயல்.... அல்லது நிழலாகவே..... இருக்கிறது...........! சாயல்களும் நிழல்களும்..... காலத்தால் மறைந்துவிடும்... இல்லையேல் அவரவர்...... காலத…
-
- 0 replies
- 945 views
-
-
எனக்கும் அவளுக்கும் .... உயிர் பிரியும்வரை .... காதல் பிரியாத காதல் .... இருக்கிறது .....!!! அவளூக்கு ஏதும் நடந்தால் .... நான் இறந்து பிறப்பேன் .... எனக்கு ஒன்றென்றால்.... அவளும் இறந்து பிறப்பாள்.....!!! நாம் ஒருவரை ஒருவர் .... சந்திக்கும்போது ..... கீறியும் பாம்புமாய் .... இருப்போம் -காதல் நகமும் சதையும்போல் இனிமையாய் இருக்கும் ....!!! + கே இனியவன் ஈகோ காதல் கவிதை
-
- 0 replies
- 2.4k views
-
-
இனவாதச் சிங்கள அரசின் - தமிழ் இனப் படுகொலைப் பாதிப்பால் ஐ.நா.சபையில் நீதி தேவதை தற்கொலை மரணவிசாரணை மட்டும் தொடர்கிறது.
-
- 0 replies
- 803 views
-
-
மரணம் இப்பொழுதெல்லாம் எந்த சந்தடியுமில்லாமல் வருவது இது ஒன்றுதான் ஊமத்தங்கூவை,நாய்,ஆந்தை,பிராந
-
- 0 replies
- 967 views
-
-
http://inioru.com/?p=37023 ஆதாரங்களை அழி சேதாரங்களை துடை துயிலுமில்லங்களைக் கிளறு நடுகற்களை நாசமாக்கு வாசனைத்திரவியங்களைத் தெளி நாற்றத்தை மறை வருக வருக ஆசியாவின் அதிசயத்தை பார்க்க வந்த அம்மையே வருக நான்காண்டுக்குப் பிறகு நாடு பார்க்கவந்துள்ளார் வருக கொத்தாகக் குண்டு போட்டு குற்றுயிராய் குறையுயிராய் அக்கினிக் காட்டிடை கிடந்து நாம் துடிக்கையிலே பன்றிக்கு பால் கொடுத்த பரசிவனாரும் வரவில்லை பாரம் சுமப்பவரே வாருமென்ற பரமபிதாவும் வரவில்லை அயலவனும் அடுத்தவனும் அழித்தவனுக்கே வழி மொழிந்தனர் அம்மையே ஆண்டு நாலு போய் திங்கள் மூன்று ஆனபின் இப்போதாகிலும் வந்துள்ளீர்கள் பிணம் புணரும் தேசம் உங்களை வரவேற்கிறது கண்ணீரும் ரத்தமும் காய்ந்துவிட்டதென்ற நம்பிக்கையுடன் வந்திருப்பீர்கள் வந்து பா…
-
- 0 replies
- 609 views
-
-
கால் மாறுதல் ...!! என்ன இருக்கிறது பார்ப்பதற்கு அந்த மாளிகையில்... அதிமேதகு தூங்காமல் புரண்ட கதையை அந்த மெத்தையிடம் கேட்பதற்குப் பொழுதில்லை எனக்கு. என் குழந்தைக்கு வாங்கியாக வேண்டும் பால்மா. மன அழுக்கு மென்மேலும் சேர, உடலைக் கழுவிக் குளித்த தடாகத்திடம் இல்லை இப்போதைக்கு நான் அவாவும் குளிர்ச்சி. நெருப்பில் நிற்கிறேன் அடுத்த வேளைச் சமையலுக்கு இல்லை எரிவாயு அகிம்சையின் சைகைமொழி. புரிவதில்லை ஒருபொழுதும் ஆயுதச் சீரூடைக்கு. அது உட்கார்ந்த ஆடம்பரச் சிம்மாசனத்…
-
- 0 replies
- 772 views
-
-
வைரமுத்துவின் உதவியாளர் ஆர். அபிலாஷ் - எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் போது நான் கவிதை வெறியனாக இருந்தேன். அக்கட்டத்தில் நான் கல்கி, அகிலன் போன்றோரின் தலையணை நாவல்கள் வாசித்திருந்தாலும் கவிதை மட்டுமே என்னை உன்மத்தம் கொள்ள செய்தது. துரதிஷ்டவசமாய் என் வீட்டில் அவ்வளவாய் கவிதை நூல்கள் இல்லை. ஊரில் நல்ல நூலகங்கள் இல்லை. ஒரே புத்தகக் கடை நாகர்கோயிலில் இருந்தது. என்னால் அவ்வளவு தூரம் பயணிக்க முடியாது. பள்ளி முடிந்த வந்த பின் கணிசமான நேரம் இருக்கும். தனியாக கையில் கிடைத்த ஏதாவது காகிதங்களை திரும்ப திரும்ப வாசித்தபடி இருப்பேன். என் பிறந்த நாள் ஒன்றுக்கு அக்கா எனக்கு பாரதியார் கவிதைகள் தொகுப்பு வாங்கித் தந்தார். அதை நான் விவிலியம் போல மனனம் செய்தே…
-
- 0 replies
- 2.6k views
-
-
நான் ஸ்ரீலங்கன் இல்லை - கவிஞர் தீபச்செல்வன் வழிகளை கடக்க என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது.. பாலஸ்தீனரின் கையிலிருக்கும் இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல.. சோதனைச்சாவடிகளை கடக்க என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது.. ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும் அமெரிக்க அடையாள அட்டையைப்போல.. செலவு செய்ய என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன.. சிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும் பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல.. என்னுடைய மண்ணில் ஒரு தேசிய கீதம் ஒலிபரப்படுகிறது.. மணிப்பூரில் ஒலிக்கும் இந்திய கீதம்போல .. என்னுடைய தேசத்தில் ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது.. திபெத்தில் பறக்கும் சீனக் கொடி போல.. என்னுடைய விரலில் நாடற்ற அகதிய…
-
- 0 replies
- 466 views
-