கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஒரு கவியை கவி கொண்டு பாட........ மனசு வரிகளுக்காய் .......... வரண்ட வயலாய் ...இன்னும் சிந்தனைக்கு ஏதும் வராது சிறு மெளனம்.....கொள்கிறது! ஐயா........எல்லா கவிஞனும்......... எழுது கோலுக்கு நிறநீர் மட்டுமே......... நிரப்புவான்........நீரோ......... உயிர் உம்மோடு இருந்தவரை......... கண்ணீர் பாதி செந்நீர் பாதி கொண்டே...... இந்த கைவிடபட்ட இனத்துக்காய்.......... எழுத்தால் போர் செய்து காலமானீர்! என்ன சொல்லி உம்மை பாட? நரைத்த தலை தாடி உம்முருவம்........ அதனுள் நரை விழாத விடுதலை உணர்வு....... இது-இளமை கொண்டவர்கூட ........ எட்டப்பராய் திரியும் காலம்........ முதுமையின் சாயல் முகத்தில் விழுந்தும்..... கடைசிவரை எம் தேச தாகம் தீர்க்க.......…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழன் !! ஒருவன் உழைப்பில் ஒன்பது பேர் உண்பான் தள்ளாடி அவர் விழும்வரை தந்தை உழைப்பில் வாழ்வான்! காதோரம் நரைமுடி தெரிகையில்தான் வேலை செய்ய நினைப்பான் ! காதலித்த பெண்ணை கூட கைபிடிக்க சீதனம் கேட்பான்! வெற்றிலை கடை யாரும் யாரும் திறந்தால் - தானும் அதையே செய்வான் - ! பாக்கு விற்க நினைக்கான் - ! செய்தால் இருவருக்கும் நன்மை .. என்று எண்ணான் - அவன் அழிந்தால் மட்டும் போதுமென்றே அசிங்கமாய் ஒரு சிந்தனை கொள்வான்! வீதி போட குவித்த - கல்லை அள்ளி தன் வீட்டுக்கு -வெள்ளம் வராமல் செய்வான் ! பள்ளம் வருமே - விழுவானே யாரும் என்றால் ....... எவனாவது செத்து போகட்டும் எனக்கென்ன என்பான்! பச்சை குழந்த…
-
- 10 replies
- 1.7k views
-
-
செடிவாழ நீர் தேவை... நான் வாழ-நீதேவை.. நீ வாழ வாழ்த்தி-இங்கு நான் வாழப் பார்க்கிறேனோ...? இல்லை..இல்லை... நீ வாழ நான் தேவை நான் வாழ நீ தேவை அதனால்.... "வாழ்த்துக்கள்" உனக்கு...அதனால்... எனக்கும்.....நானே... அத்துடன் ..அனைவரிற்கும்-தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
-
- 7 replies
- 1.6k views
-
-
-
நிலவதனை தழுவிநின்ற முகிலவன் -ஏன் கண்ணீரைச் சொரிகின்றான்....? இன்று.... மதியதனைக் காணாது அவனும் -(நிம்)மதி இழந்து போனானா..
-
- 12 replies
- 2.7k views
-
-
மாவீரர்கள் காவியங்கள் பல படைத்திட வங்கக் கடல்தனிலே வேங்கைகளாகப் புறப்பட்ட மாசற்ற மறவர்கள் அண்ணன் வழி சென்றே அவன் ஆணையை நிறைவேற்றியவர்கள் தாய் தந்தை மறந்தார்கள் தாய் நாட்டை நேசித்தார்கள் தாய் நாட்டை தம் தாயாக கருதியவர்கள் தமிழ் மக்களையும் தாய் மண்ணையும் காத்திடவே கரும் புலியாய்! கடற் புலியாய்! பல்வேறு வடிவங்களில் புயலாகப் புறப்பட்டு - இன்று எல்லோர் மனதிலும் வாழுகின்ற உன்னதப் புருசர்கள் மாவீரர்கள்
-
- 14 replies
- 2.8k views
-
-
நான் இரசித்த கவிதை இது. உங்களுக்காக இங்கு இணைக்கிறேன். எழுதியவரின் பெயர் சிந்து. அடிமைச்சிறை தகர்... பிறப்பிலிருந்து மரணம் வரை அறியாமை உனது வாழ்வானதோ? மழைக்குத் தோன்றி மாண்டு போகும் மண்புழுவா நீ? மலர்களும் காயப்படுத்தாத தென்றல் தான் பெண்கள் புயலாய் மாற்றம் கொண்டால் மலைகளையும் சாய்த்திடுவர் இடுப்பொடிந்து நீயும் தலைவணங்கியது போதும் கொஞ்சம் நிமிர்ந்து நீயும் வாழும் உலகைப் பார் எல்லாமே உனக்குள் அடங்குமடி பெண்ணே பெண்கள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை ஆண்கள் இச்சை தீர்ந்தபின் சுருக்குக் கயிற்றில் இறுகிச் சாகும் விலங்கினமா பெண்கள்? அடிமை சிறை தகர்த்து சிறகுகள் முளைத்து சுதந்திர வானில் நீயும் பறந்திட வேண்டா…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒரு நாளில் நாலில் ஒரு பங்கை நான் ஒவ்வொரு நாளும் கணணிக்கு படையல் செய்கிறேன் பதிலுக்கு கணணி பாடல்களையும் பல்சுவைத்தகவல்களையும் பரந்துபட்ட செய்திகளையும் பரிசளிக்கின்றது. என்னவென்று சொல்ல ஜங்கரனின் அருளை! பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் அளித்த ஒளவையாருக்கு ஆனை வடிவில்! எனக்கு எலி உருவில்.!!
-
- 4 replies
- 1.6k views
-
-
எண்பது தமிழனை கொன்றுவிட்டு நான் அவனில்லை - என்றே சிங்களன் கால் கழுவு! குத்தரிசி சோறு வேணாம் ஈர பலாக்கை போதுமென்றே அலை- அலைந்து திரிந்து அசிங்கமாய் திரி! அப்பனையும் ஆத்தாளையும் ஐந்து பத்திற்காய் கொல்லு! கொன்றபின் பன்சலைக்கு சென்று சிங்களனுடன் சேர்ந்து ப்ரீதும் ஓது! புலியை அழித்தால் புது வாழ்வா உனக்கு? புலி அழிந்து போகும் ஒரு நாள் வந்தால் உன் குரல் வளையே சிங்களனுக்கு அடுத்த இலக்கு - இதை நம்பினால் நீ நம்பு! தமிழீழ விடுதலை புலியை அழிப்பதா அவன் குறி? அட தடுமாற்றகாரா தமிழன் தலை எடுப்பதுதாண்டா அவன் வெறி! மரத்தோடு மரமாய் ஒட்டி தேவாங்கு போல தூங்கு! செருப்புக்கு ஆசை படுறாய் உன் கால் மெதுவாய் அறுந்துபோகுது! கவனி- !…
-
- 15 replies
- 3.6k views
-
-
.......'கலையாத கனவுகள்' கண்ணீரில் பிறந்தேனோ? மின்னல் போல் உதித்தாய் பின்...... திரைகள் போட்டு சூரியனை மறைத்தாய் காலம் கடந்தும் ......... --மீண்டும் மேகம் வடிவாய் பூத்தாய்....... உன்னை வாசலில் வந்து பார்த்தேன்....... ஆனால் மூச்சு காத்து தான் ....... அடித்தது ஏன் பனி வீசி பாளத்தை உடைத்து தேடும் விழியே வைத்து விட்டு சென்றாய்.......? விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 4 replies
- 1.8k views
-
-
விலகி விலகிப் போனாலும்...... அழகாய் இருக்கிறாய் ... பயமாய் இருக்கிறது!! காதல் இது தானா? விலகி விலகிப் போனாலும்...... மனசுக்கு பிடிததால் சந்தோசம் என்கிற தீபம் திறந்து விழிகள் இருண்டும் வியக்கிறது... ஆனால்.... இன்னும் ஒரு பயம்.. ஒரு வார்த்தை போதுமே சொல்லிவிட்டு தொடர்ந்து........., கடந்துப் போனது ....தடம்!! மனதுக்குள் மறைந்திருக்கிறதோ என் காதல்? இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது
-
- 2 replies
- 1.3k views
-
-
ஏக்கம் ஏக்கம் ஏக்கம் மனிதன் வாழ்வில் என்றும் ஏக்கம் தாய் நாட்டைப் பிரிந்த ஏக்கம் தாய் தந்தையைப் பிரிந்த ஏக்கம் தங்கை தம்பியைப் பிரிந்த ஏக்கம் வெளி நாடு போய் சேர்ந்து விட வேண்டும் என்ற ஏக்கம் வெளி மொழியைக் கற்று விட வேண்டும் என்ற ஏக்கம் வேலை ஒன்று கிடைத்து விட வேண்டும் என்ற ஏக்கம் வீடு ஒன்று வாங்கி விட வேண்டும் என்ற ஏக்கம் உறவுகளை மறந்து ஏக்கத்துடனே வேலைக்கு ஓட்டம் ஏக்கத்துடனையே எததனையோ மனதுகள் தூக்கம் ஏக்கம் ஏக்கம் மனிதனின் கடைசி மூச்சு வரை ஏக்கம் துளசி
-
- 11 replies
- 2.5k views
-
-
எச்சரிக்கை துன்பம் மனித வாழ்வில் ஓர் பக்கம் துன்பம் ஈழத்தமிழன் வாழ்வின் முழுப்பக்கம் அன்னையை அழிப்பினும் வேட்டுக்கள் தாலாட்ட வளர்ந்திவோம் பள்ளிக்கு குண்டு போட்டினும் பதுங்கு குழியில்ப் படித்திடுவோம் பட்டினி நீர் போட்டினும் பசியுடனே படித்திடுவோம் குண்டு நீர் போட்டினும் குப்பி விளக்கில் படித்திடுவோம் புத்தகம் நீர் அனுப்பாவிடினும் நம் தமிழ்ப் பண்டிதரிடம் படித்திடுவோம் வெட்டுப் புள்ளி அதிகரிப்பினும் வீறுடனே படித்திடுவோம் வேலை வாய்ப்பு அளிக்கா விட்டால் வேளாண்மையுடன் பிழைத்திடுவோம் மலையே நீர் போட்டாலும் மாய்ந்து நாம் மடிய மாட்டோம் துளசி
-
- 3 replies
- 1.4k views
-
-
நாலெழுத்து படித்து விட்டால் நானே ஊருக்கு நாட்டாமை என்பான் கோர்ட்டும்- சூட்டும் அணிந்து விட்டால் நான் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை என்பான் அவன் பாட்டன் - கோவணத்துடன் திரிந்ததை ஒருவருக்கும் சொல்லான் மறைப்பான் -மகிழ்ச்சி வேறு கொள்வான்! ஏனடா நீ இப்பிடி? வெள்ளையும் சுள்ளையுமாகி நீ இங்கு திரிந்தாலும் வெள்ளைகாரனுக்கு நிகர் என்று சொன்னாலும் கிளிந்த சேலையுடன் இருந்த போதும் உன் அப்பன் இருக்க உன் தாய் தாலி அடைவு வைத்து தாயகத்தை பழிப்பவனே- உன்னை அனுப்பி இருப்பாள் உணர்ந்ததுண்டா-உறைக்காதா சீ போடா- மூடா !!
-
- 15 replies
- 2.5k views
-
-
மீண்டும்....எப்போ...? ****************************** அன்பே... தேடுகிறேன் உன்னை-இன்று நீ தந்த பொருழதனை திருப்பி நான் தருவதற்கு... என்னவென்று கேட்கிறியா...? அன்றொருனாள்.... நாமணைத்துக் கொள்கையிலே உன் தலையின் பேனொன்று... எந்தலையே தஞ்சமென்று.. என் தலையில் புகுந்ததுவே... அதை நீ அறியாயோ...? ஓ........ நீ அறிய நியாயமில்லை அன்றோ....... நாமறியும் நிலையிலில்லை.. இன்றதனை உணருகின்றேன்.. கடிக்கையிலே.. கதறுகின்றேன்... கொன்றிடவே எண்ணுகின்றேன் உன் தலையின் பேனதால் மனமேனோ வரவில்லை.... so அன்பே... நீ வந்திடுவாய்... அதை நீயே பெற்றிடுவாய்......
-
- 7 replies
- 1.5k views
-
-
மறந்து விட்டாயா.........? கண்களால் கைது செய்து காதல் விதை விதைத்தவளே... ஏழேழு ஜென்மமும் உன்னோடுதான் என்றாயே.... இன்பத்திலும் துன்பத்திலும் என்னோடு உறவாடியவளே.... காலம் மாறினாலும் - என்றும் மாறாதது நம் - காதல் என்றாயே......! மொத்தத்தில் நீ இன்றி நான் இல்லை என்றாயே இது அத்தனையும் பொய்யாக்கிவிட்டு - நீ மட்டும் ஏன் என்னை மறந்து பிரிந்து சென்றாய் - இதுதான் உன் முதல் ஜென்ம பந்தமா.........! முகவரி தெரியாத காதலனாய் உன் முகம் காணாத ஏக்கத்தில் - ஊன் இன்றி உறக்கம் இன்றி - உயிரற்ற நிலையில் உருகிப் போய் கிடக்கின்றேன்......! கடைசியாக என்றாவது -என் மரணச் செய்தியை கேட்டால் ஒரு துளி கண்ணீராவது விடு - அதுவே நம் காதலுக்கு -…
-
- 8 replies
- 1.7k views
-
-
வாழ்க் ஈழத் தமிழகம், வாழ்க இனிது வாழ்கவே மலை நிகர்த்திவ்வுலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே முடிப்புகள் அமிழ்தை வென்ற மொழியினள் அருள் கனிந்த விழியினள் அரிய பண்பு நிதியினள் அவனி மெச்சும் மதியினள் மமதை கொண்ட பகைவரும் வணங்கும் அன்பு விதியினள் மக்கள் கொண்ட பதியினள் ... வாழ்க வானம் பாடி போல்மீன் கானம் பாடும் வாவிகள் மலர்க் கனி க்ய்லுங்கிடும் எழில் மிகுந்த சோலைகள் தேனும் பாலும் பாய்ந்திடச் செந்நெல் பொலியும் கழனிகள் உய்வ ளிக்கும் மாநிலம் ... வாழ்க பட்டிப் பளை, மகாவலி, பயில் அருவிமுத் தாறுகள் பல வனங்கள் பொலியவே எழில் நடஞ்செய் துலவிடும் மட்ட களப்பு, யாழ்நகர், மாந்தை, வன்னி, திருமலை, …
-
- 7 replies
- 2.3k views
-
-
என் முகம் தீய்ந்து போனாலும் மோசமில்லை - மோட்சமே உழைக்காமல் வரும் ஊதியமே சொர்க்கம் என்று ஆனாயேடா மொக்கா மொக்கா! என்ன சொல்ல ........... எரியும் சிதையினிடையே கைவிட்டு ..தகனம் கொள் பிணத்திடையிருந்து தங்கம் உருவ நினைக்குது மானிடம்! காலை எழுந்தவுடன் தேநீர் வேண்டும் கை கால் அமுக்கவும்.. அவளே வேண்டும்.. அடடா அடடா கை கால் அலம்பியதும் துடைக்க துண்டும் தந்து நீ கலையாத அழகு கொள்ள சுருங்கா ஆடையும் தந்து... நீ கல்யாணம் கொள்கையில் காலில் விழவும் செய்து... யோசி ... யோசி மலரை கசக்கி எறிய மடி நிறைய .. பொருள் கேட்குது..மானிடம்!! அடுப்படியில் ஒருத்தியை குந்த வைக்க... முற்பணமாய்- ஐம்பது இலட்சம் கேட்பது …
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கவிதை யாழ் இணையத்தின் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் இணையம் பற்றிய உங்கள் கவிதைகளை, வாழ்த்துக்கவிதைகளை இப்பகுதியில் இணையுங்கள்.
-
- 24 replies
- 4.1k views
-
-
முற்றத்து மல்லிகையே முற்றத்து மல்லிகையே நான் எங்கே என்று தேடினாயா? வேலியோர மாதுளையே நான் விரும்பி நீர் வார்த்த குறோட்டன் செடியே நான் இல்லையென்றே நீ வாடினாயா? கிணற்றடி துலாவே கிணற்றடி துலாவே உன் கழுத்தில் கயிறு மாட்டி நாளும் இழுத்தவன் காணலயே என்று தேடினாயா? வேப்ப மரமே வேப்ப மரமே உன் தோழ்வலிக்க ஊஞ்சலாடி தொல்லை தந்தவன் இப்போ எங்கேயென்று எப்போதாவது எண்ணினாயா? குயிலக்கா - குயிலக்கா நீ ...............கூவ மறைந்திருந்து நான் குரலெழுப்ப உன் - உறவுதான் அதுவென்று எண்ணி ஓயாமல் கூவினாயே இந்த ஏமாற்றுகாரன் எங்கே என்று எண்ணி எபோதாவது ஏங்கினாயா? கருங்குயிலென்று ஆனாலும் சொந்த நாட்டிலிருந்தாய் சுத்த வெள்ளை - நீ! …
-
- 10 replies
- 2.1k views
-
-
இன்னுயிர்தன்னை நெய்யெனச்சொரிந்து இலட்சியத்தீச்சுடர் காத்தவரே-உங்கள் புகழுடல் உறங்கும் பூமியில்-வெற்றி மலர்களைத்தூவிநாம் வணங்கிடுவோம். விதையெனமண்ணில் வீழ்ந்தவரே-உங்கள் விதைகுழிகளில் வேர்பாய்ச்சி வான்வெளி எங்கும் கிளைபரப்பி விழுதெறிந்து வளர்வோம் இனியென்றும் வீழ மாட்டோம் காலக்கிண்ணமதில்-இனியும் கனவுகளையா குடிப்போம் இல்லை...இல்லை... தலைவனின் தடங்களில்-விடுதலை தேரிற்கு வடம் பிடிப்போம். நாமாண்ட மண்ணும் எமையாண்ட தமிழும் இனியொன்றும் மாழாது-எம் உறவுகளைக்கொன்றபகை இனியென்றும் வாழாது. இது....., தமிழ்த்தென்றலின் வீடு புலிப்புயல்கள் உலவும்காடு பகையே....நீ..., …
-
- 9 replies
- 2.9k views
-
-
என் காதலனே!! கவிதை வரைந்தேன் உண்மை மூடி காதல் கொண்டேன் கண்ணை மூடி படிக்கச் சென்றேன் பையை மூடி பட்டம் பெற்றேன் பைத்தியம் என்று என் காதலனே!! உன்னையே உலகமென நினைத்தேன் - ஆகையால் உன்மீது பாசத்தைப் பொழிந்தேன் உன்னையே வாழ்க்கையையென நினைத்தேன் - ஆகையால் உன்மீது ஆதரவாக நடந்தேன் என் காதலனே!! காதலிக்கும் போது உன் வயதை மறைத்தாய் - என்னைக் காண வரும் போது உன் நரையை மறைத்தாய் கதைக்க வரும்; போது உண்மையை மறைத்தாய் - என்னைக் காரில் ஏற்றும் போது கண்ணாடியை மறைத்தாய் என் காதலனே!! காதல் து}ய்மையானதென்று அடிக்கடி கூறுவாய் காதல் இனிமையானதென்று அடிக்கடி சொல்வாய் காதல் சுகமானதென்று அடிக்கடி அறிவாய் காதல் பலமானதென்று அடிக்கடி விளக்கினாய் …
-
- 3 replies
- 2.2k views
-
-
ஈழமும் சுகாதாரமும் உடல் நலம் சுகாதாரமாக இருந்தால் மன பலம் வலுவாக இருக்கும் நோயானது ஒரு சில நொடியில் பல வடிவத்தில் எம்மை ஆண்டு எம் வாழ்க்கைப் பயணத்தை குறிகிய கட்டத்தில் நிறுத்திவிடும் சிங்களவன் சில தசாப்த காலங்களாக பாரம்பரிய தமிழினத்தை பரிதவிக்க வைக்கின்றான் இரசாயனக் குண்டுகளால் முத்தான ஈழத்தின் இயற்கைக் காட்சிகளை நாசமாக்கி அசுத்தமான வாயுக்களை எம்மினம் சுவாசித்து பலவகை சுவாச நோய்களால் பரிதவிக்கின்றனர் இயற்கையான காற்றோட்டத்தில் சுதந்திரமாக சுய தொழிலில் வாழ்ந்த தமிழினம் செயற்கையான காற்றோட்டத்தில் மூச்சுத்திணறி செய்வதறியாது தவிக்கின்றது நோய்களால் திலீபன் நடமாடும் மருத்துவமனை- தன் சேவையைச் சிறப்பாகச் செய்தாலும் போதிய தமிழ் மருத்து…
-
- 11 replies
- 1.8k views
-
-
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் -சினேகிதி- அளவில்லா ஆனந்தத்தோடு அண்ணன் படை சேர்ந்தாய் அண்ணாவே பூநகரி மணலாறு கிளிநொச்சி எனக்களம்பல கண்டாய் இன்று நீயும் மாவீரன் வீட்டருகில் நீ வெடித்துச் சிதறினாய் உள்ளம் வலிக்கத்தான் செய்தது உன் சோதரர்கள் உனக்குச் சொல்லவில்லையா அது இராணுவம் ரோந்து வரும் நேரமென்று யார்யாரோவெல்லாம் ஆறுதல் சொன்னார்கள் அம்மாவும் விசும்பல்களை நிறுத்திவிட்டாள் அழுது ஆற்றாமை தீர்த்தால் இராணுவ இராஜமரியாதையையும் ஏற்கவேண்டி இருக்குமே ஐயர் வந்து சாந்தி செய்தார் - நீ சிதறிப்போன சந்தில் எங்களுக்குத் தெரியும் தமிழீழம் ஒன்றுதான் உங்களுக்கு ஆத்ம சாந்தியென்று இரு தசாப்தங்கள் ஆகிவிட்டன ஆனாலும் உங்கள் கனவுகள் நனவாகவில்ல…
-
- 32 replies
- 5.2k views
-
-
உருகுதே உருகுதே... கண்டேன் கண்டேன் சூரியனைக் கண்டு உருகி உச்சி குளிர்ந்த வெண் பனிப்பாறையாறு சிலிர்க்க கண்டேன் -அது ஆதவன் அணைப்பில் சிணுங்கவும் கண்டேன் சினேகிதின்ர குட்டிக்கவிதை எப்பிடி இருக்கு :?:
-
- 14 replies
- 2.3k views
-