கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பூங்கா மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம் பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம் சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம் காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம் இவை மட்டுமா? மரம், செடி, கொடிகள் அசையும் இனிய கீதங்கள் அத்துடன் கூடியே அழகிய பூக்களின் நறுமணங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர் அழகிய இடம் பூங்கா!
-
- 16 replies
- 3.1k views
-
-
இளமைக்காலம் இதுவொரு இனிய காலம் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் பட்டாம் பூச்சி போன்று படபடத்து திரியும் காலம் பட்டென்று பாசமும் சட்டென்று காதலும் நச்சென்று கோபமும் கூடியே வரும் காலம் துடி துடிப்புடனே உற்சாகத்துடன் துள்ளித் திரியும் -ஒரு இனிமையான காலமது
-
- 8 replies
- 2.2k views
-
-
தை திருநாளா? தை திரு நாளா? இல்லை.. எங்கள் வாழ்வதை ஊசியாய் .. சிங்களம் தைக்கின்ற போதில் வரும் ஒரு நாளா! பானையில் பால் பொங்கி வழிந்தால் ... உழவர் திருநாள் என்கிறோம்... இதயம் எல்லாம் இரத்தம் வழியும் ஒரு நாளாய் போனதே.. எம் வாழ்வு.... இந்நாளதில்... இதை என்ன பெயர் கொண்டு சொல்லியழைப்போம்?? மனங்கள் பொங்கி வழியும் நாளில் ............... பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா? சிறகில் தீ பிடித்தாலும் ... அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்! வருக தை பொங்கலே...!! அனைத்து கள உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
-
- 9 replies
- 2k views
-
-
வரண்டுபோனதொரு பூமி வானத்தை பார்த்து மழைக்காய் தேடல் கொண்டு தேகம் வாடி நிற்கிறது! பசியென்ற ஒன்று இருப்பதால்தான் உழைப்பின் தேடல் தொடர்கிறது.... பருவம் என்ற ஒன்று இருப்பதால்தான் காதல் என்ற ஒன்று இன்னும் காணாமல் போய்விடாமல் தவிக்கிறது! பகுத்தறிவென்ற ஐந்தோடு சேர்ந்த ஓரறிவு வாழ்வதானாலே அநியாயங்களை காண்கையில் உள்ளம் ஆக்ரோசம் என்ற தேடல் கொள்கிறது! இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தான் இறைவனை இடைக்கிடையாவது நினைக்கும் தேடல் வாழ்கிறது! எதிர்காலம் பற்றிய பயம் எம்மோடு இருப்பதானால்தான் சேமிப்பு என்ற தேடல் உயிர்கொள்கிறது! தேசியம் என்ற ஒன்று நிமிர்ந்து நிற்பதால்தான் -இனமானம் பற்றிய தேடல் இன்னும் உன்னுள் இருக்கிறது! தெரியாதவனிடம் எல்லாம் அடிவாங்கும் …
-
- 5 replies
- 2.3k views
-
-
இரண்டடிக்குள் இரண்டரை கோடி! நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்..... குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்! அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு.. மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு... ஆடம்பரம் ஏதுமற்ற வீடு... அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை... மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை.. மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை... பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்.. அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட.. தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற ஒரு அள்ளு உணவுக்குள் நான்கு உயிர்கள் பசியாறுமா? அழகில்லைத்தான்..அசிங்கம்தான் .. ஒளித்திருந்து பிறர் வாழ்வை பார்ப்பது.. உதவாத பழக்கம் தான்... இருந்தும் மனம் ஏங்கியது........... …
-
- 39 replies
- 6.2k views
-
-
வரிப்புலி ஊர்வலம்! ----------------- ஆடிவரும் கடலையே - சொல்லு எங்கள் தேச ஆளூமை கொண்டவனை -எங்கே ஒளித்து வைத்தாய்? காற்றே வா மெல்ல எம் கதவு திற- பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும் சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை- எங்காவது பார்த்தீயா? சொல்லி போ! சிங்களத்தின் மடியில் ஒரு இடியாய் வெடித்தவன் - சிறுத்தை இனத்தின் தலையில் மணிமுடியாய் உயிர்த்தவன் படை நடத்தும் வீரர்கெல்லாம் ஒரு பாடமாய் இருந்தவன் அவனை வெல்வதற்கு யார்க்கும் ஒரு வழியுமில்லை- விடை சொல்லாமல் போனானே அதுதான் - ஏனென்று இன்னும் தெரியவில்லை! எம்மை அடித்தவனை அடியோடு எரித்த பெரு நெருப்பு- எங்கள் அண்ணன் அணைத்து வளர்த்த அக்கினி குஞ்சு- கிட்டண்ணா - தமிழன்…
-
- 14 replies
- 3.1k views
-
-
நாற்றோடு காற்றுவந்து மோதும் - - கரைகழுவிபோகும் அலைகள் ஏதோ ராகம் பாடும்- - பூ ஒன்றின் இதழெடுத்து பொட்டிடு தோழி- - பொன்மாலையதன் வண்ணம் அள்ளிவந்து வாயிலை அலங்கரி! இராவென்ன பகல் என்ன சொல்லு? நீ இரவுக்குள் பகலாகி நில்லு! மழையென்ன வெய்யில் என்ன -சீ போ! வாழ்வென்ன பலமுறை வருமா? உந்தன் வாழ்வு முடிந்து போனால் -பூமி அதை உனக்கு திருப்பி தருமா? வானத்தை பாரடி தோழி- நீல நிறத்தை கரைத்தூத்தியங்கே நிலவுக்குள் பின்னால் சென்று ஒழிந்து கொண்டதாரடி? வானம் குடைபிடிக்கிறது பார்-பார்! அதன்கீழ் எனக்காய் நானொருமுறை - உனக்காய் நீ ஒருமுறை- - வாழ்ந்து பார்ப்போமே?- வா வா! வரைமுறையென்ற தாலிகட்ட பிறர்யார்? உந்தன் வாழ்வதற்க்கு வேலி போட அவர் யார்? புன்னகைக்க…
-
- 6 replies
- 2.3k views
-
-
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் -சினேகிதி- அளவில்லா ஆனந்தத்தோடு அண்ணன் படை சேர்ந்தாய் அண்ணாவே பூநகரி மணலாறு கிளிநொச்சி எனக்களம்பல கண்டாய் இன்று நீயும் மாவீரன் வீட்டருகில் நீ வெடித்துச் சிதறினாய் உள்ளம் வலிக்கத்தான் செய்தது உன் சோதரர்கள் உனக்குச் சொல்லவில்லையா அது இராணுவம் ரோந்து வரும் நேரமென்று யார்யாரோவெல்லாம் ஆறுதல் சொன்னார்கள் அம்மாவும் விசும்பல்களை நிறுத்திவிட்டாள் அழுது ஆற்றாமை தீர்த்தால் இராணுவ இராஜமரியாதையையும் ஏற்கவேண்டி இருக்குமே ஐயர் வந்து சாந்தி செய்தார் - நீ சிதறிப்போன சந்தில் எங்களுக்குத் தெரியும் தமிழீழம் ஒன்றுதான் உங்களுக்கு ஆத்ம சாந்தியென்று இரு தசாப்தங்கள் ஆகிவிட்டன ஆனாலும் உங்கள் கனவுகள் நனவாகவில்ல…
-
- 32 replies
- 5.2k views
-
-
மகாத்மாவுக்கு ஒரு மனிதனின் அஞ்சலி. மகானே! மீண்டும் பிறந்து வா! குண்டுகளுக்கும் தோட்டாகளுக்கும் பயப்படாதவன் நீ! ஆகையால் மீண்டும் பிறந்து வா! தலைவனை இழந்து துயரப்படும் குழந்தைகள் நாங்கள்! 'இன்று' எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தருகிறது அம்மை அப்பனை முதியோர் இல்லத்தில் சேர்க்க! சகோதரனை சொத்துக்காக ஹர சம்ஹாரம் செய்ய! மனைவியை மந்தையாக்க! எதிரிகளை முதுகில் குத்த! என எல்லாவற்றையும் இன்றைய இன்று எங்களுக்குக் கற்றுத்தருகிறது. விலைமகளிடம் போய்விட்டு விலை போகாமல் வந்தவன் நீ! இன்று விலைமகளிடம் போய்விட்டு விலைகொடுத்து வாங்கி வருகிறோம் நாங்கள்! காலத்தைப் பார்த்தாயா மகானே! வா! வந்து படித்த சிலருக்கேனும் வாழு…
-
- 2 replies
- 1k views
-
-
வா..வா!! ----------------------- கை குட்டையை கண்ணீரில் சலவை செய்த ஆண்டே 2005 போய்வா தோழா! சுனாமி என்று ஆரம்பித்தாய் ஜோசப் பரராஜசிங்கம் வரை கொன்று தொலைத்தாய்! என்ன உனக்கு நாம் செய்தோம் ஏன் இப்படி? இருந்தாலும் போய்வா! 2006 ஏ வா வா ! வண்ணப்பூக்கள் கொண்டு எம் வாசலில் கோலம் போடுவாயா? வாழ நினைக்கும் எங்கள் நெஞ்சில் கூரிய வாளதை.. பிறர் போல் மீண்டும் பாய்ச்சுவாயா? கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்! வாய் மூடிபோன பீரங்கி வாய்களை ஒலிவம் கிளைகள் கொண்டு அடைத்துள்ளோம்! அதன் இலைகளை நெருப்பு கரம் கொண்டு இனியும் எரித்திடாதே.. அணைத்திடாதே! தர்மம் வெல்லும் என்று நினைத்தோம்-…
-
- 15 replies
- 2.9k views
-
-
அர்த்தமுள்ள காதல்....... பெண்ணே.......... நீ... என் இதயத்தில் இல்லாமல் போயிருந்தால் உறக்கம் என் உயிரை உருவிக்கொண்டு போயிருக்கும்...... நீ....என் உணர்வில் உதிக்காது போயிருந்தால் காற்று என் உடலை கரைத்துக் கொண்டு போயிருக்கும்.... நீ.... என்னோடு வாழாமல் போனால் நான் வாழ்வதில் அர்த்தமே யாருக்கும் தெரியாமல் போய் விடும்........ >>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<<
-
- 2 replies
- 1.3k views
-
-
மலர்ந்தது புத்தாண்டு !! காலமகள் பெற்றெடுத்தாள் மீண்டும்ஒரு மழலை - நம் கண்ணெதிரே தவழவிட்டாள் புதியதொரு வரவை! ஞாலமெலாம் மகிழ்ந்திருக்க மலர்ந்தது புத்தாண்டு - எழு ஞாயிறுபோல் உதித்ததம்மா நம்மையெலாம் ஆண்டு! ஆண்டுதொறும் அவனிதனை ஆண்டுகொள்வ தால்தான் - இதை "ஆண்டு"எனநாம் அழைத்தோமோ! அரியதொரு பேர்தான்! மீண்டுமொரு படிக்கல்லைத் தாண்டுகின்ற தால்தான் - நாம் மென்மேலும் புத்"தாண்டு"என் றழைத்தோமோ? நேர்தான்!... வான்புகழ்சால் தமிழா,நீ தாண்டுவதற் கென்று - இவ் வையகத்து வாழ்க்கைதனில் எத்தனையோ உண்டு! தான்பிறந்த மண்சிறக்க, தடைகளெலாம் வென்று - நீ தாண்டிடுவாய்! தழைத்திடுவாய், சாதனைகள் கண்டு!…
-
- 6 replies
- 2.5k views
-
-
என்னை அழித்து விடுவாயா? முதல் வார்த்தையில் என் இதயத்தை துடி துடிக்க வைத்தாய்!!! ஒவ்வரு நாளும் உன் பேச்சால் என்னை சாகடித்தாய்!!!! தென்றல் காற்றாக என் மனதுக்குள் நுழைந்து விட்டாய்!!!!! உன் சுவாசமே என் மூச்சுக் காற்றில் கலந்துள்ளது!!! உன்னில் ஒன்றாக நான் கலந்துவிட்டேன்!!! நீ தொலைது}ரம் இருந்தாலும் என் பக்கத்தில் இருப்பதாகவே உணர்கின்றேன்...!!! உன்னுடன் பேசிய ஒரு நொடி போதும் எனக்கு.. கேட்கும் ஓசையெல்லாம் உன் குரலாகவே கேட்கின்றது!!! பிரியமானவளே.........!!!! என்னை ஏற்றுக் கொள்வாயா? இல்லை என்னை அழித்து விடுவாயா? >>>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்…
-
- 10 replies
- 2.4k views
-
-
ஏங்குகின்றேன்! உன்னை எப்பொழுது கண்டேனோ அன்று முதல் நான் என்னிடம் இல்லை உன்னால் பசிஇ உறக்கம் ஏன் நிதானத்தை கூட இழந்தேன்! எனக்குள் நானே சிரித்துக் கொள்கின்றேன்! எனக்குள்ளே ஏதேதோ பேசுகின்றேன் இதெல்லாம் உன்னாலடா! நான் எதற்கும் ஏங்கியதில்லை உன்னனக் கண்ட பின் நீ எனக்கு கிடைக்க வேண்டும் என ஏங்குகின்றேனடா! உண்மையில் காதல் என்பது ஒரு நோய் அது எப்போ வரும்இ போகும் என புரியாது என்னுள்வந்துவிட்டது அந்தநோய்! என்னை குணமாக்குவாயா? நீ எனக்கு கிடைப்பாயா? சொல்லடா சொல்!!! :roll: :roll: :roll: (சுட்டது) நன்றி லங்காசிறி.கொம்
-
- 12 replies
- 2.9k views
-
-
ஒரே வயிற்றில் பிறந்தோம் ஒரே உடுப்பை போட்டோம் ஒரே கோப்பையில் சாப்பிட்டோம் ஒரே படுக்கையில் படுத்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் ஒன்றாய் படித்தோம் எச்சில் கடி கடித்து ஏப்பம் விட்டு சாப்பிட்டோம் இவ்வளவும் எமக்கு அறியாப் பருவத்தில் வாழ்க்கையை புரியத்தொடங்கினோம் - தனி வழி போக தொடங்கினோம் காலிற்கு கட்டு போடும் வயதும் வந்தது தனி குடித்தனம் போனோம் அத்துடன் எல்லை சண்டையும் பக்கென்று வந்தது உன் மகளின் கலியாண கோலத்தை என் மகள் மதிலால் ஏட்டி பார்க்கும் அவலம் அக்கா என்று ஆசையுடன் அழைக்க வேண்டியவர்கள் கோபக்காரார் என்று எரிசலுடன் பார்க்கிறார்கள் இன்று நீ யாரோ நான் யாரோ வீதியில் போகும் போது முகம் பாராத நாங்கள் கோட்டில் ப…
-
- 18 replies
- 2.8k views
-
-
என்ன செய்ய போகிறோம்? ----------------------------------------- எவ்வளவு அழகிய பூமி.....என்னை சுற்றி இருப்பது! என்னதான் வாழ்கை பெரிய சுமையாக தெரிந்தாலும்.. கொட்டுகின்ற பனியும்...அதனை கொஞ்சுகின்ற புல் தரையும் .. நான் நட்டு வைத்த செடியில் முதல் முதலாய் பூத்து.... நாணத்துடன் சிரிப்பது போன்ற பூவும்... சின்ன குழந்தை முத்தமாய்.. என் தேகம் நனைக்கும் மழை துளியும்.. என்றோ பிரிந்து வந்தாலும்.. இன்னும் என் இதயத்தின் வலி கொண்ட சிறகாய்......... இன்றும் என் உயிர் பிசையும்..... வாழ்ந்து விட்டு வந்த என் தேசத்து வசந்தமும்.. ம்ம் எண்ணியே பார்க்கிறேன்.. இன்னும் ஏதோ இருப்பது போல்த்தான் இருக்கு வாழ்வில்..! ஆயினும்.. நான் இரசித்த அழகுகள் எல்லா…
-
- 14 replies
- 3.6k views
-
-
±ô§À¡Ðõ ±ý ¸Å¢¨¾¸¨Ç - ¦ÁîÍõ ¬Éó¾¢ ¿¡ý Åó¾ §ÀÕóÐ ¿¢ü¸¡¾ ¿¢Úò¾ò¾¢ø ¿¢ü¸¢È¡û - ¨¸Â¢ø ÌÆó¨¾Ô¼ý þô§À¡Ðõ «ýÚ «ÅÙì¦¸É ±Ø¾¢Â ¸Å¢¨¾¸û -¯Â¢÷òÐ ¸¡üÈ¢ø À¼À¼ì¸¢ýÈÉ ±ý Å£ðÊø ±ýɧ𠏢Ú츢¢ÚìÌÐ ±É- §¾¡Æ¢Â¢¼õ ¦º¡øÄ¢ º¢Ã¢ò¾ Ãò¾¢É¡ - ¨¸Â¢ø ̨¼Ô¼ý ¿¢¾Óõ §Å¨ÄìÌ §À¡¸¢È¡û ±ý Å¡ºø ¸¼óÐ Å¡úÅ¢ý ¿¨¸ÓÃñ- «Åû þô§À¡ ¾Á¢ú ËîºÃ¡õ,Å¡ú¸ ¾Á¢ú ¿¡ý ¸øÅ¢ ¸üÚ ÓÊò¾¨¾§Â þýÛõ- ¿õÀ ÁÚìÌõ…
-
- 13 replies
- 2.6k views
-
-
இந்தக் கண்கள் கண்ணீர் கவிதை எழுதுதே... ஏன் இந்த வலி உதிரியானது? சுமையை தாங்க முடியாமலா? அல்ல இதயம் உடைந்ததாலா? பூக் காதல் தீயில் குளிக்குதே வீசிய பூ மேகத்தில் பாவ வாழ்க்கை தொலைக்கவா? சொல் ஏன்? நிஜம் எங்கே.....? மீண்டும் மீண்டும் திரைக்குள் செல்கிறதே ஓசையின் துளி தெறிக்கவா ? அல்லது பூட்டிய அன்பு வாசிக்கவா? சாப அலை வந்து வீசுதே அது அடித்து செல்கிறதே இன்று உடைத்து பார்த்து விட்டதால் பெருகிற கண்ணீர் கவிதை இந்த கண்கள் எழுதுதே நீர்க் குளத்தில் கண்ணீர் பொங்கிப்பொங்கி ... நிலவின் ஒளியில் அருவி வழியில் வடியிது உயிர் இழந்தும் பாடாமல் துடிக்கிறது ......போராடுமா? இலையும் கிளையும் ! இக்கண்ணீர் கவிதையால்..காதல்......சேரும…
-
- 6 replies
- 4.2k views
-
-
கனவும்...கவியும்... நல்ல கவிதை வரி ஒன்று கனவில் வந்தது! எழுந்து பக்கத்தில் கிடந்த தாளில் குறிப்பெழுதி வைத்து உறங்கிப் போனேன்! காலையில் தாள் காணமல் போயிருந்தது! அடுத்தநாள் கனவில் வந்தது அதே வரி! இந்த முறை நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்! அதனால் எழுந்து ஓட முடியாது என்ற தைரியத்தில்! காலையில் நாட்குறிப்பு இருந்தது! வரிகள் இல்லை! - அடடா பேனாவில் மையில்லை! அதற்கு அடுத்த நாளும் அதே கனவு அதே வரி குறிப்பெடுத்து வைத்தேன் என்பதை கண்ணாடிப் போட்டு உறுதிப்படுத்தியப் பின் உறங்கிப் போனேன்! மறுநாள் காலையில் என் கையெழுத்து எனக்கே புரியவில்லை! இன்றைக்கு அந்த வரிகளை கனவில் கண்டவுடன் எழுந்து அமர்ந்து …
-
- 12 replies
- 2.5k views
-
-
அம்மம்மா அம்மா என்று அறிமுகம் ஆனவரே அம்மாவின் அன்பையும் சேர்த்து தந்தவரே அம்மாக்கு நிகர் அம்மாம்மா என்ற புதிய மொழியை சொல்ல வைத்தவரே ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு அன்னை பிரியும் போது உங்கள் மடியில் கிடத்தினாள் நீங்கள் எம்மை உமது முதுகில் அல்லவா சுமந்தீர்கள் ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள ஆனாலும் மனம் உங்கள் அன்பைக்காவே ஏங்கின்றது ஆயிரம் புத்திமதிகள் அன்புடனே கூறும் நீங்கள் ஆதரவாய் அரவணைப்பீர்களே நாம் தோற்கும் போதும் எத்தனை அடிகள் வாங்கினாலும் குட்டி நாய்கள் போல் உங்கள் காலடியையே சுற்றி சுற்றியே வருவோம் காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர் நீர் கண் மூடு…
-
- 30 replies
- 16.8k views
-
-
இப்ப தான் ஏடு தொடங்குறேன்...பிழைகளை மன்னித்து பொருத்தருளவும். நன்றி இனிப்பும் கசப்புமாய் என் காதல் காதலுக்கு பல எதிரிகள் இங்குண்டு மற்றவர்களுக்கு? ஏனோ எனக்கு என் காதலே எதிரியாய் போனதேன்? அன்பாய் தான் இருக்கிறான் அழகாய் தான் எனை ரசிக்கிறான் நிறைவாய் தான் தருகிறான் நிறைமதியாய் எனை தாங்குறான் இருந்தும் எனக்கேனோ நிம்மதியாய் ஒருநாளும் உறங்கமுடியவில்லை.. என்னவனின் அன்பு முகம் இதுவெனில் அவன் அடுத்த முகம்... நண்பர்கள் உனக்கெதுக்கு வேண்டாம் என விட்டுவிட்டேன் நானிருக்க சுற்றம் ஏன் அதை கூட விட்டு விட்டேன் படிப்பெதற்கு, வேலை எதற்கு நான் உன்னை பார்த்துக்கொள்வேன் அவன் மேல் உள்ள அன்பில் அத்தனையும் துறந்துவிட்டேன் கடைசியில் வ…
-
- 60 replies
- 7.6k views
-
-
கடல் நீரிலே துள்ளும் மீனினம் போல், என் மனதிலே துள்ளும் உணர்வுகளுக்கு, உயிர் கொடுத்து உலவிட வந்துள்ளேன்.
-
- 30 replies
- 4.3k views
-
-
கவிதைகள் ----------------------------------------------- எனக்கு வந்த கடிதம்---------------------------------- அன்பானவளே நீ நலமாக இருக்கின்றாயா---- நீ எப்பவும் படிப்புபடிப்பு என்று செல்கின்றாய்- நான் நீ போகுமிடமெல்லாம் வருகின்றேன் அது உனக்குத் தெரியாது ஆனால் நீ நல்ல பெண் ஏதோ உன் அழகு என்னை மயக்கியது? உன் நல்ல குணம் நடைகள் எனக்குப் படித்தது எவ்வளவோ பணம் இருந்தும் நீ ஒரு சராசரி மனிதர் போல இருப்பாய் --- என் காதலை என்னிடம் நேரில் சொல்ல எனக்குப் பயமாக இருக்கின்றது என் காதலை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய் என எனக்குத் தெரியும் இருந்தாலும் நான் நேரில் சொல்லாட்டியும் கடிதம் முலமாக எழுதி அனுப்புகின்றேன் நீ அத…
-
- 141 replies
- 17.7k views
-
-
இன்னொரு பக்கம் ஜெயபாஸ்கரன் தெளிவாகவே தெரிகிறது நிகழ்வுகளின் இன்னொரு பக்கம் கண்களை கவரும் வண்ண வண்ண கடவுள் படங்களின் மீது, அச்சு இயந்திரங்களின் ஓசையும் 'முருகனுக்கு மெஜந்தா போதாது' என்றொரு குரலும் கேட்கிறது எனக்கு. திரையரங்குகளில் கிடந்து வெளியேறும் போது சொல்கிறார்கள் 'அப்பாசாமி நடிப்பு அற்புதம்' உள்ளுக்குள் உறுமுகிறேன் நான். 'அடபாவிகளே' எடுத்தத்தில் தேறியதை காட்டுகிறார்கள் நமக்கு. எடுத்து எடுத்து வெட்டி வீசப்பட்டதைக் குறித்து ஏதாவது தெரியுமா உனக்கு? இங்கிலாந்து ராணி இந்தியா வந்தபோது எல்லோரும் பார்த்தார்கள் அவரை. நான் பார்த்தது அவருக்காகவே அங்கிருந்தே கொண்டு வரப்பட்ட காரை. என்னவோ போங…
-
- 24 replies
- 4.1k views
-
-
அம்மா அம்மா என்காத உயிர் இல்லையே அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே! எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள் எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்! எம்மை காக்க அரும்பாடுபட்டாள் எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்! திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள் நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்! எம்மை காக்க இரவினில் விழித்திருப்பாள் எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்! தன் வயிறு பசித்திருந்து எம் வயிறு புசிக்க தன் உணவு சேர்த்து எம் வட்டிலில் போட்டு! நாம் உண்ணும் அழகு கண்டு தான் திருப்தி கொண்டு உள்ளம் களித்திருப்பாள்! தன் உயிர் கொடுத்து எம் உயிர் வளர்த்தாள் அன்னை! அவள்தான் நான் உலகில் வந்து கண்ட முதல் தெய்வம்.
-
- 101 replies
- 11k views
-