கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஆண்டுகள் ஏழு கடந்தும்.. சுவடுகளாய் கட்டிய சேலைகளும் காவிய பொம்மைகளும் சீன அமிலத்தில் கரைந்து போன எலும்புக்கூடுகளுக்கு மாற்றீடாய்..! இலட்சியம் சுமந்த மறவர் பின் விடுதலைக் கனவோடு பாதம் பதித்த நம்பிக்கைகள்... எதிரியின் உயிர்ப்பிச்சைக்காய் ஏங்கியே ஒதுங்கிய அந்த மணற்றரையில் உப்பில் கலந்து உடல் கரைவார் என்று யார் நினைத்தார்..! கந்தகக் குண்டுகளோடு பொஸ்பரஸ் அதுஇதென்று ஆவர்த்தன அட்டவணையில் அடங்கியவை எல்லாம் கொட்டி உலகம் எல்லாம் ஒன்றாய்க் கூடி ஓர் இனத்தின் தலைவிதியை தலையறுத்து சன்னங்களால் சன்னதம் ஆடிய பூமி அது..! இலைகள் உதிரலாம் கி…
-
- 5 replies
- 1k views
-
-
அன்னையர் தினம்..! அகிலத்தின் அன்னையர்களுக்கு…, இது ஒரு தினம் ! என் தேசத்து அன்னையருக்கு.., இது ஒரு செய்தி! எம்மை ஈன்றவளை ஒரு நிமிடம், நினைத்துப் பார்க்கையில்…! இதயத்தின் ஆழத்தில் …, எங்கோ ஒரு மூலையில், இலேசாக வலிக்கின்றது! அப்பா என்னும் ஆண் சிங்கம், பிடரி சிலிர்க்கும் போதெல்லாம்.., அடங்கிப் போன அம்மா! பிரசவங்களின் போதெல்லாம்,, மரணத்தைத் தரிசித்து…, மீண்டு வருகின்ற அம்மா! ஆண் என்றாலும். பெண் என்றாலும், ஆண்டவன் தானே தருகின்றான் என்று, ஆறுதல் கொள்ளும் அம்மா! அவளுக்கென ஆஸ்பத்திரியும் இல்லை, ஆறுதல் சொல்லத் தாதிகள் இல்ல…
-
- 12 replies
- 5.8k views
-
-
நீ பிரிந்தபோது ... உறைந்துபோன ... இதயம் - நீ தந்துவிட்டு போன ... நினைவுகளால் .... மீண்டும் துடிக்கிறது ....!!! & காதல் எஸ் எம் எஸ் கே இனியவன் LOVE SMS
-
- 3 replies
- 822 views
-
-
இந்த வார ஆனந்தவிகடனில் (11.5.16) வெளியாகியுள்ள எனது கவிதை "முடிவற்ற பாதையின் முடிவில் இருக்கும் வீடு!", யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! முடிவற்ற பாதையின் முடிவிலிருக்கும் வீடு! போய்க்கொண்டே இருந்தோம் வெகுதூரம் “எங்கே எங்கே?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் அஸ்மிதா. ஒரு திருப்பத்தில் சூரியனில் முடியும் ஒரு பாதைக்கு மாறியதும், “ஹைய்யா! நாம சூரியனின் வீட்டுக்குத்தானே போகிறோம்?” கண்டுபிடித்த மகிழ்ச்சியில் துள்ளினாள் அஸ்மி. முடிவற்ற பாதையின் முடிவிலிருந்த சூரியனின் வீட்டுக்கு …
-
- 0 replies
- 537 views
-
-
குழந்தைகள் அலையபூமியில் வெளிச்சம் அணைந்த பொழுது ஒரு யுகத்தின் தாய் இறந்திருந்தாள்பூமி பேரதிர்ச்சியில் நடுங்கியதுதாய்மாருக்காய் அழுதழுது கண்ணீர் விடும்குழந்தைகள் வாழும் யுகத்தில் கனத்தன வீடுகள்குழந்தைகளுக்காய் அழுதழுது கண்ணீர் விடும் தாய்மார்கள் வாழும் யுகத்தில் கனமடைகிறது பூமி தாய் கட்டிய சுவர்களில் கனவின் காட்சிகள் நெளிந்தன நிலம் மெழுகும் தாயின் விரல்களில் சிக்காத புதல்வர்களின் பதச்சுவடுகள் தொலை தூரத்தில் தவித்தன அடுப்பில் பொங்கியது துயரம் இலட்சம் குழந்தைகள்தாய்மாரை இழக்க இலட்சம் தாய்மார் குழந்தைகளை இழந்தனர் தாய்மார்கள் குழந்தைகளாகி அழும் யுகத்தை சபித்தது யார்? ஏங்கும் விழிகளை துடிக்கும் வார்த்தைகளை கண்ணீர் படிந்த முக…
-
- 0 replies
- 735 views
-
-
நெஞ்சம் எங்கும்நினைவாலே நிலைத்தவள்நித்தம் என் நினைப்பினில்நீர்க்கமற நிறைந்தவள்உடல் முழுதும் தழுவிஉவகை தருபவள்உதடுகளின் இடை புகுந்துஉல்லாசமாய் நுழைந்தவள்நாசி வழி புகுந்துநாபிக் கமலத்தை நிறைப்பவள்துள்ளி ஓடும் குருதியிலும்தீர்க்கமாய் நிறைந்தவள்அள்ளி ஆசையோடு முத்தமிடும்அழகுச் செவ்வண்ண மேனியாள்நிகரில்லா அவள் வனப்பின்நினைவுகளைச் சுமக்கிறேன்நித்தமும் அவள் மடி துயிலவேதகிக்கிறேன் தவிக்கிறேன்நாடிச் சென்று அவள் மேனி தழுவநாதியற்று நிற்கிறேன்...#ஈழத்துப்பித்தன்06.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post.html
-
- 0 replies
- 1.7k views
-
-
சித்திரையில் கதிரோன் சிரித்திடுவான் நாளும் என எண் திசையும் விழி வைத்து எதிர் நோக்கிக் காத்திருந்தால் பெண்ணவள் நாளும் விழி உடைத்து பெய்திடும் கண்ணீர் போல் மூக்கை சிந்தி வான மகள் முகம் கறுத்துக் கிடக்கிறாள் புவி பூப்பெய்தும் காலமதில் - பனி பூத்து சொரியுது இங்கு காலம் தப்பி காலம் மாறி காலாகாலமா இருந்த கால நிலை மாறுவது காலத்தின் கோலமன்றோ... #ஈழத்துப்பித்தன் 26.04.2016
-
- 3 replies
- 735 views
-
-
உன்னிடம் இல்லாதபோதும் நட்பு,சொந்தஞ் சொல்லி வருபவருக்கு கேட்பதைக் கொடுத்து உறவைக் காத்துவிடு. உனது „கடன் பட்ட நெஞ்சு“ கலங்கிக் கரையும்போது உன்னை விட்டகன்ற தடங்களின் பின்னே வெறித்துப் பார்ப்பதைத்தவிர உன்னால் என்ன செய்ய முடியும்? இருபது ஆண்டுக்கு முன் தங்கையின் „பட்டப்படிப்பு வெற்றிக்கு“ (ப்) பரிசு அளிக்க கவிஞ நண்பனுக்கு நீ கடன் கொடுத்தாய், சில ஆயிரம்டொச்சு மார்க்கோடு அவனது கவிதை முகமும் கலைந்துபோச்சு! வேலையிழப்பு நஷ்ட ஈட்டுப் பணத்தைக் கண்டபோது கை நீட்டியவர்களை நீ மறக்கவில்லை! நீட்டிய கையை நிறைத்தே உனது அந்த 24000 யூரோவும் கரைந்து காணாமற் போச்சு! அண்ணனுக்குத் தம்பிக்கு,மாமாவுக்கு மச்சாளுக்கென… இப்போ, உனக்குக் கடன் தந்த …
-
- 0 replies
- 983 views
-
-
எல்லாமே மூன்று எழுத்து எல்லா இடத்திலும் பின்பற்று … எல்லோர் இடத்திலும் செலுத்து … நீயும் ஞானியாவாய் …. அன்பு ….!!! ####### உறவுகளிடம் சிக்கி தவிக்கும்…. உதறிவிட்டால் வாழ்க்கை வெறுக்கும்… இதுவும் ஒரு அழியாத கல்லறைதான் … பாசம் …..!!! ####### உள்ளவன் இல்லாதவனுக்கும் …. இருப்பவன் அனைவருக்கும் …. வற்றாத ஊற்றாய் கொடுக்கணும் … கருணை ….!!! ######## இல்லாதவன் இருப்பதுபோல் … இருப்பவன் பிரபல்யத்துக்காகவும் மாறி மாறி போடுவது …. வேசம் …..!!! ######### சந்தித்தால் வேதனையை தரும் சந்திக்காமல் சாதித்தவர்கள் இல்லை …
-
- 11 replies
- 5.6k views
-
-
கடற் குழந்தை - தீபச்செல்வன்:- பேரலையை தின்று பெருங்கரையில் துயில்கிறது உறங்க ஓரிடமற்ற கடற் குழந்தை செய்வதறியாது திகைத்துப்போயின பொம்மைகள் பறந்தலைந்தன அவன் ஊதிய பலூன்கள் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் கவிழ்ந்து மிதக்கிறது அவன் செய்த காகிதப் படகு அவனருகில் வாடிக்கிடந்தன மீன்களும் கணவாய்களும் யாருமற்று அநாதரவாக கிடப்பனுக்காய் தலை குனிந்தன இறால்களும் நண்டுகளும் பெருங்காற்றே நீயா அவனின் படகை கவிழ்த்தாய்? …
-
- 0 replies
- 1.8k views
-
-
சாளரத்தில் மோதி விழுகின்ற மழைத்துளிகள்-அட யார் இங்கு தடை போட்டது தூக்கப் பொழுதுகளில் தலை கோதும் என் தாயின் கரங்களுக்கு.
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
ஒரு .... தலை காதலர்களே .... காதலில் தோற்றவர்களே .... கவலையே வேண்டாம் .... காதல் கவிதையை .... ரசியுங்கள் .... காதல் நிச்சயம் .... வெற்றிபெறும் .... கவிதை காதலின் தூதுவன் ....!!! & கவிதை காதலின் தூதுவன் காதலருக்கான சிறப்பு கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 3 replies
- 1.8k views
-
-
அவன் ..... இல்லாவிட்டால் .... நான் இல்லை ... நான் இல்லாவிட்டால் .... அவனுமில்லை .... நாங்கள் இரட்டை .... பிறவிகள் இல்லை .... அப்போ நாங்கள் .... யார் ...................? & & & & & விடை ; உடலும் உயிரும் ...!!! ^ சிறுவர்களுக்கான கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 1 reply
- 648 views
-
-
இந்த காதல் மழை 50 துளிகளாய் விழப்போகிறது ஒவ்வொரும் தனிரகம் நீ சூரிய உதய நேரம் .... பிறந்திருக்கிறாய் .... உன்னை காணும் .... போதெலாம் சூரியனை .... கண்ட தாமரைபோல் .... என் .... இதயத்துக்குள்ளும் .... மலர்வு ஏற்படுகிறது ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 01
-
- 18 replies
- 1.3k views
-
-
அருவி ஊற்றெனஅழுது வடித்தவள்அடங்கிக் கிடக்கிறாள்பொருமி வெடித்திடபுழுங்கித் தவிக்கிறாள்தழுவித் தகித்தவள்தயங்கி நிற்கிறாள்ஒற்றைநாள்ஒருதலைப்பட்சயுத்த நிறுத்தமாம்சத்தம் இன்றிசலனம் இன்றிஇப்போதான்சற்று சிரித்துச்சிவக்கிறாள்சிவக்கிறாள்சிரிக்கிறாள் இவளெனசிந்தை தெளிந்துசிரிக்க முடியவில்லைஒருதலைப்பட்சஒருநாள்யுத்த நிறுத்தம் தானாம்யுத்தம் எப்பவும்சத்தத்தோடு வெடிக்கலாம்பாதிப்பு முன்னதை விடபலமாயும் இருக்கலாம்யுத்த நிறுத்தம்காலவரையற்றுநீடிக்கவும் படலாம்எதற்கும் தயாராய்த்தான்இருப்பை நிலை நிறுத்தஎடுத்தடி வைக்கிறேன்...#ஈழத்துப்பித்தன்19.04.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/04/blog-post_19.html
-
- 7 replies
- 1k views
-
-
எரியும் விளக்கே அணையாமல் நீ இரு என் தோழி உறங்குகின்றாள் துணையாக நீ இரு சுத்தும் மணியே சத்தங்கள் போடாதே தூக்கத்தில் எழுந்துவிட்டால் என் உள்ளம் தாங்காதே கைகளை பிடித்து உள்ளத்தை நீ அணைத்தாய் தோள்மீது தலைசாய்த்து உன் சுமையை இறக்கிவைத்தாய் உன் உதட்டின் வெப்பத்தில் என் கன்னம் உருகிபோக மெய்மறந்து நான் நின்றேன் இன்னும் இறுக்கி அணைத்தாயே உன் கண்ணின் நீர்துளி கைகளிலே ஏந்திவைத்தோன் உன் கையில் என் இதயம் பத்திரமா சொல் தோழி உயிரை பகிர்ந்தாய் உறவை பகிர்ந்தாய் காலம் முழுதும் என்னோடு துணையாக வரவேண்டும் எரியும் விளக்கே அணையாமல் நீ இரு என் தோழி உறங்குகின்றாள் துணையாக நீ இரு சுத்தும் மணியே சத்தங்கள் போடாதே தூக்கத்தில் எழுந்…
-
- 1 reply
- 954 views
-
-
இந்த வார குங்குமம் இதழில் (25.4.16) வெளியாகியுள்ள எனது குறுங்கவிதை "சொல்", யாழ்களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சொல் ஆயிரம் இருந்தாலும் நான் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்கிறார்கள். நமக்குள்ளே இருப்பது ஆயிரம் இல்லை ஒன்றுதான், அதை வேறெப்படிச் சொல்வது?
-
- 5 replies
- 2.2k views
-
-
நீ சொன்ன ஒரு வார்த்தை.... ஆயிரம் கஸல் கவிதையை ... தோற்றிவிட்டது ....!!! சுதந்திர பறவைகளை ... திறந்த சிறைச்சாலைக்குள் .... அடைத்துவிடும் .... காதல் ......!!! இதயங்களை .... இணைக்கும் .... சங்கிலி -காதல் ... துருப்பிடிக்காமல் .... பார்த்துக்கொள் .....!!! முள் மேல் பூ அழகானது ..... என் இதயத்தில் பூத்த .... முள் பூ நீ ................!!!! நீ காதலோடு...... விளையாட வில்லை .... என் மரணத்தோடு ..... விளையாடுகிறாய் ......!!! ^ இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் உளமான நன்றி ^ அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன் ^ " முள்ளில் மலரும் பூக்கள் " க…
-
- 1 reply
- 642 views
-
-
யாழ் இணையத்தின் சமூக, இலக்கியப் பணி, தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணி போற்றுதலுக்குரியது. யாழ் இணையம் மேன்மேலும் வளர்க!
-
- 2 replies
- 699 views
-
-
கூடு திறந்தால் காடு ----- அந்த மரண வீட்டில் .... அப்படி ஒரு சனக்கூட்டம் .... ஆராவாரமான மரணவீடு .... ஓலமிடுபவர்கள் ஒப்பாரி ... சொல்பவர்கள் நிறைந்து ... காணப்பட்டனர் ..... மூன்று நாட்களாக ... கண்ணீர் விழா ....!!! சடலம் இருக்கும் பெட்டி ... அலங்காரத்தால் ஜொலிக்கிறது .... குளிரூட்ட பட்ட ஊர்தியில் ... சடலம் வைக்கப்படுகிறது .... மந்திரி வந்து அஞ்சலி செலுத்த .... வீதியெங்கும் வாகன நெரிசல் .... வீதி எங்கும் நிறுத்தி நிறுத்தி ... பறை சத்தம் காதை கிழித்தது ....!!! சடலம் போகும் பாதையில் .... விபத்தில் இறந்த எருமைமாட்டு ... சடலத்தை நாய்களும் காகங்களும் .... குதறி எடுத்தபடி இருந்தன ... இறந்தபின்னும் மற்றவைக்கு ... உதவும் அந்த எருமைய…
-
- 6 replies
- 2.3k views
-
-
இந்த வார ஆனந்தவிகடனில் (20.4.16) வெளியாகியுள்ள எனது கவிதை "மீள வரும் குளம் ... ", யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! மீள வரும் குளம்..... நீர் உரசிப் பறக்கும் தட்டான்கள் தாழ்வான மரக்கிளையில் ஒரு மீன்கொத்தி மறைந்திருந்து கூவும் ஒரு போர்க்குயில் வளைந்த மொட்டைப் பனையில் ஒரு கிளி மரச்சரிவில் ஒரு மரங்கொத்தி.... பதிவுசெய்து வைத்திருந்த காட்சிகள் மீளவருகின்றன மனக்கண்ணில் வற்றிய இந்தக் குளக்கரையில். -சேயோன் யாழ்வேந்தன் (நன்றி: ஆனந்த விகடன் 20.4.16)
-
- 10 replies
- 2.2k views
-
-
ஒரு அகவையை தாண்டுவதே ..... இயந்திர வாழ்கையில் .... சாதனையாக காணப்படும் .... காலத்தில் பதினெட்டாவது .... அகவையை அடையும் - யாழ் .... இணையத்தை பாராட்டாமல் .... இருக்கவே முடியாது .....!!! மண்ணுக்காக மடிந்த .... மைந்தர்களை மாவீரர் நினைவுகள் ... பகுதியிலும் .....!!! உள்ளூர் புதினங்களை ஊர் புதினம் பகுதியிலும் ..... வெளியூர் புதினத்தை ... உலகச்செய்தி பகுதியிலும் ..... சமூக பிரச்சனைகளை .... சமூக சாரளம் பகுதியிலும் .....!!! கவிஞருக்கு கவிதை பூங்காடு .... கதாசிரியருக்கு கதை கதையாம் ... தனியாக வகுத்து செய்திதரும் .... யாழ் இணையத்தை பாராட்டாமல் .... இருக்கவே முடியாது .....!!! யாழ் மண்ணுக்கு மகிமையுண்டு .... யாழ் இணையத்துக்கு வ…
-
- 1 reply
- 689 views
-
-
இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. லட்டு மாதிரி இருப்பது காலையில் வேலைக்குக் கிளம்புகையில் இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி ‘அங்கிள், லட்டு மாதிரி இருக்கீங்க!’ என அதிரடித்தாள். ‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று சொல்லிவிட்டு வரும் வழியில், பருத்த உடலா, மஞ்சள் சட்டையா என் கொஞ்சல் பேச்சா லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி, லட்டுகள் உருளும் சாலையில் ஓடி லட்டைக் குடித்து லட்டை உண்டு, லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில்…
-
- 13 replies
- 1.6k views
-
-
போகின்ற தமிழகம் எலி நிகர்த்த நெஞ்சினாய் போ போ போ ஏழ்மை தன்னில் மிஞ்சினாய் போ போ போ பழி முடிக்க அஞ்சினாய் போ போ போ படையிலாது துஞ்சினாய் போ போ போ வலி மிகுந்த தமிழரை நம்பாது வடவர் தன்னை நம்பினாய் போ போ போ கிலி மிகுந்த மதியினால் மென் மேலும் கீழ்மையில் உழன்றனை போ போ போ விதி கெடுத்த மதியினாய் போ போ போ வீணிலே உறங்கினாய் போ போ போ சதி நிறைத்த உறவினாய் போ போ போ சாவிழிம்பில் நின்றனை போ போ போ பொதி நிறைத்த பொய்மைகள் மேல் ஆர்வம் போக்கி நின்று தேங்கினாய் போ போ போ எதிரி தன்னை நம்பினாய் போ போ போ இழிமை வாழ்வு கூட்டினாய் போ போ போ பலமிழந்த தோளினாய் போ போ போ பழமை பேசு தொழிலினாய் போ போ போ குலமிழந்த நிலையினாய் போ போ போ குருதி கண்டு…
-
- 2 replies
- 891 views
-