கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இன்று காதலர் தினம். காதலர் தினம் என்ன அவர்களுக்கு மட்டும்தானா நமக்கில்லையா? வாழ்வில் இணைந்து கொண்ட தம்பதிகளுக்கும் காதலுண்டல்லவா! ஆனால் அதன் இயல்புதான் சற்று வேறாயிருக்கும். அந்த வேறுபட்ட இயல்பைச் சில வருடங்களுக்கு முன் கவிதையாக்கினேன். அதனைக் கீழே தருகிறேன். தாய்க்குப்பின் வந்த தாரம் வாய்க்குச் சுவைதருவாள் என்றும் வாழ்விற் துணைவருவாள் - காம நோய்க்கு மருந்தாவாள் துயர் போக்கும் அருள் தருவாள் அள்ளி அணைக்கையிலே மனம் ஆறும் பரிசத்திலே உள்ள நிறைவினிலே துன்பம் ஓடிடும் தூரத்திலே அன்னையிருந்த இடம் இன்று அவள் அரியணையாம் என்னைக் கலந்துவிட்டாள் இன்று எனதென்றொன்றுமில்லை வட்ட நிலாவொளிரும் அவள் வதனப் புன் சிரிப்பில் கெட்டதெல்லாமழியும் அவள் கிட்டநிற்கும்…
-
- 0 replies
- 2.3k views
-
-
பல்லிக்கு வால் பிடிப்பது - பிடிக்காது ....வால் அறுந்தாலும் வாழும் ...வால் பிடிக்காதே மனிதா ...!!!^^^ஓடி ஓடி உழைக்கணும்...முகிலைப்போல் ....ஊருக்கே கொடுக்கணும் ...முகிலைப்போல்.....!!!^^^கெட்டிக்காரமகனையும் ....கெட்டு போன மகனையும் ....ஒன்றாகவே பார்க்கும் குணம் ....அம்மா ........!!!^^^தண்ணீருக்காக போராடினோம் ....கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ...வெள்ள காடு ....!!!^^^தனியே வாழ்ந்தபோது ...தன் அறையை கூட்டாதவன் ...கல்யாணம் செய்தபின் ...வீடு கூட்டுவான் ....!!!&.....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை..................கவி நாட்டியரசர்..........................கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................
-
- 9 replies
- 1.7k views
-
-
நீ.. எனக்கு ஒரு ஏஞ்சல் (கெஞ்சல்) நான்.. உனக்கு ஒரு வலன்ரைன் கிவ்ட் சுத்திய கஞ்சல். (கஞ்சல்) ஓசில வந்ததென்று கிவ்டை கவ்விக்கிட்ட நீ கஞ்சலை.. தூசென.. தூக்கி வீச முன் கண் திறந்து பார்.. அங்கு.. கசங்கிக் கிடப்பது நானும் என் அன்பும்..!(காதல்)
-
- 4 replies
- 1k views
-
-
-
ஒப்பாரி வீட்டிலும் அழகு ஒன்றுகூடலிலும் அழகு -------மலர் மாலை--------- @@@ தொண்டனுக்கு பிழைப்பு தலைவனுக்கு உழைப்பு -------தேர்தல் ----------- @@@ உடல் முழுதும் நெருப்பு த்துளை வருத்தினாலும் இன்பம் தருகிறது -------புல்லாங்குழல் ------- @@@ இன்பமென நினைத்து இன்பத்தை இழக்கிறான் -----குடிகாரன் ----- @@@ வானம் திரவமாய் தரும் தங்கம் நிலம் தங்கமாய் மாற்றும் திரவம் -----பருவ மழை ------
-
- 9 replies
- 1.8k views
-
-
அப்பா மின்னல் அம்மா மழை குடும்பசண்டை ^^^ அம்மாவுக்கு குரங்கு அவனுக்கு தெய்வம் அவன் காதலி ^^^ இருந்தால் மனிதன் இறந்தால் பேய் உயிர் ^^^ உறவினருக்கு தேனீர் இடைக்கிடையே பேச்சு விளம்பர இடைவேளை ^^^ சந்தோசமாக இருப்பது எப்படி ..? தம்பதிக்கு கற்று கொடுக்கிறது தொலைக்காட்சி ^^^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ
-
- 11 replies
- 1.1k views
-
-
நீயல்லவோ உயிரே ....!!!***பத்து மாதம் என்னை சுமந்து பெற்றவள்என் உயிர் தாய் ....!!!வாழ்நாள் முழுதும் உன்னைசுமக்க இருக்கும்என்னை என்னவென்று ...அழைப்பாய் உயிரே ...?உயிரை உயிரால் எடுத்து ...என் உயிரை சுமப்பவளே ....தாயின் இன்னொரு பிறப்பு ....நீயல்லவோ உயிரே ....!!!+கே இனியவன் காதல் கவிதைகள் உன்னை வயிற்றில்சுமக்கும் பாக்கியம்தாய்க்கு கொடுத்தாய் ....!!!உன்னை தோளில்...சுமக்கும் பாக்கியம்தந்தைக்கு கொடுத்தாய் ...!!!உன்னை இதயத்தில் ....சுமக்கும் பாக்கியத்தை ...எனக்கு கொடுத்தாய் .....!!!வாழ்க்கை முழுவதும் ....ஏதோ ஒருவகை சுமை ....காதல் எல்லா சுமைகளின் ....கூட்டு மொத்தம் ....!!!+கே இனியவன் காதல் கவிதைகள் வளர விட்டேன் காதலை ....மனதில் அதுவே இன்றுஎன்னை மாற்றி சுற்றவைத்து விட்டது....!…
-
- 14 replies
- 9k views
-
-
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!அகம் முழுதும் நிறைந்தவளே .....அகமதியால் காதலை இழந்தவளே....அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!அச்சப்படாதேயடா என்னவனே .....அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....அகந்தையும் அகமதியுமில்லை ....அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!அடைமழை போல் இன்பம் தந்தவளே ....அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!…
-
- 2 replies
- 1.5k views
-
-
காதல் பரம்பரை சொத்துமல்ல பரம்பரை கடத்தியுமல்ல ^ ---- நான் காதலாக இருந்து பயனில்லை நாம் காதலாய் இருக்க வேண்டும் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்
-
- 3 replies
- 2.5k views
-
-
மழைக்காலம் துவங்கும் மேய்ச்சல் நிலங்களை புற்கள் போர்த்தியிருக்கும் எல்லாம் எரிந்த சாம்பலிலிருந்து மூங்கில் துளிர்க்கும் நொண்டி நாய் தங்க நிறகுட்டிகள் நான்கை ஈனும் நீண்ட குரலெடுத்து பாடும் ஒற்றை வால்க்குருவி கூடடைந்திருக்கும் வண்ணத்து பூச்சியொன்றின் நிறங்கள் குலைந்திருக்கும் தூறல் நின்றபின் வெளிக்கிடும் தவளைக்காக நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும் குயவனின் கனவுகளுக்குள் தலைபிரட்டை நீந்த கற்றிருக்கும் சம்பா நாற்று நீரில் மிதந்திருக்கும் பெருங்கிழவன் உளம் விளைந்திருக்கும் செப்பனிடாத கூரைவழியோடும் மழையருவி சிலந்தியின் பின்னலில் சன்னல்களை வரைந்திருக்கும் விட்டில…
-
- 14 replies
- 1.7k views
-
-
பொங்கலுக்கு தேவையான பொருட்களெல்லாம் வாங்கிவிட்டேன்.. பொங்கலிட முற்றமதை எங்கே போய் வாங்குவேன் .. சிங்களனின் பாசறையாம் என் வீடு அவனாடும் மைதானம் என் முற்றம் . எங்க போய் பொங்கலிட ??? ««««««««««««°»»»»»»»»»»»»»» "பொங்கலிட முற்றமில்லை.. சொந்தமென யாருமில்லை .. வெந்தமனம் நொந்துதினம் வாடுகையில்.. எங்குபோய் இவர் பொங்கலிட தைத்திங்களதில் ? தை பிறந்தால் வழிபிறக்கும்.., பொய்யானால் மனம் சலிக்கும்.., இருபத்தைந்தாண்டுகள் ஆண்டுகள் நொந்தகதை யாரறிவார்? போர் ஓய்ந்து ஏழாண்டு.., பொய்மட்டும் ஒளியாண்டு... …
-
- 2 replies
- 714 views
-
-
காதலின்,,,, வாழ்நாள் மூலதனம்....நினைவுகள் தான் ....!சுகமான நினைவுகள் ...இதயத்தில் தென்றல் ...!சோகமான நினைவுகள் ...இதயத்தின் முற்கள் ...!காதலில் நினைவுகளின் வலியே அதிகம் ....!!! +காதல் நினைவுகளின் வலி என் கற்பனை வலிகள் ( 01)
-
- 6 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் எழுத்தாளர் இணைய அகம் எமது வேணடுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்ற ஆதரவு தந்த தங்கள் அனைவருக்கும் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் சார்பாக பணிவன்பான நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்து இத்திட்டத்தில் இணைந்துள்ள படைப்பாளிகளின் பெயளர்களை இங்கே மகிழ்வோடு பதிவு செய்கின்றோம். திரு.பொலிகை ஜெயா - சுவிஸ் திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் - ஜேர்மனி திருமதி.சுமதி பாலசசந்தர் - பிஜித்தீவு திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க் திருமதி. ரஜனி அன்ரன் - ஜேர்மனி திரு. ஆதவன் கதிரேசர்பிள்ளை – டென்மார்க் திருமதி. பாமா இதயகுமார் - வன்கூவர், கனடா திருமதி.வேதா இலங்காதிலகம் - டென்மார்க் திருமதி. மாலினி மாலா – ஜேர்மனி செல்வி. சறீகா சிவநாதன் - ஜேர்மனி திரு. நோர்வே நக்கீரா – நோர்வே திரும…
-
- 25 replies
- 3.1k views
-
-
நீ காதலா....? நீ நட்பா....? --------- இலட்சியங்களை..... இலக்காக்கும் காதல்....!!! இலட்சியங்களை..... இயக்க வைக்கும் ... நட்பு....!!! கட்டுப்பாடுகளை..... கண்ணியமாக்கும் ... காதல்....!!! கட்டுப்பாடுகளை ... கற்று தரும் நட்பு.....!!! இதயத்தை.... பறி கொடுப்பது.... காதல்...!!! இதயத்தையே .... பரிசளிப்பது.... நட்பு...!!! கஷ்டங்களில்..... கைகொடுப்பது .... காதல்....!!! கஷ்டங்களில் தோள் கொடுப்பது ... நட்பு....!!! துயரங்களை தூக்கி எறியும் காதல்.....!!! துயரங்களில் .... பங்கெடுக்கும் ... நட்பு....!!! காதலின் வெற்றி..... இருவரும் இணைவது நட்பின் வெற்றி இருவரும் உயர்வது ....!!! காத்திரு…
-
- 1 reply
- 8k views
-
-
காதல் ... வெற்றி பெற இதய... பரிமாற்றம் போதாது இதயமாக .... மாறவேண்டும்.....!!! ^ காதல் துளிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 709 views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (20.1.16) "மனசுக்குள் பனித்துளி" என்ற எனது கவிதை தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ளது, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மனசுக்குள் பனித்துளி ஒரு குழந்தையைக் கைப்பிடித்துக் கூட்டிவருவதைப்போல் இந்தக் குளிர்க்காலத்தை என்னிடம் கொண்டுவந்துவிட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டது மழைக்காலம். நெற்பயிரின் நுனியில் ஒரு பனித்துளி முழு வயலையும் வானத்தையும் தலைகீழாகப் பிரதிபலிக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக கதிரின் வெம்மையில்ஆவியாகிறது. மறுநாளும் அதே நெற்பயிரில் அதேபோல் பனித்துளி …
-
- 2 replies
- 996 views
-
-
லிமரைக்கூ ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5 அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாக வேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலிய உணர்வோடு இயங்கக் கூடியது. தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார். தமிழில் முதன்முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார். இவ்வடிவமே தமிழின் லிமரைக்கூ வடிவமாக அமைந்து விட்டது. அரச துறையில் தனியார் தொழ…
-
- 3 replies
- 1.2k views
-
-
தை - திருமகளே வருக வருக .... தைரியம் துணிவு சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி உம்மை அழைக்கிறேன் தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே .... தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை
-
- 6 replies
- 17.1k views
-
-
பூமி சூரியனைச் சுற்றினால் வருஷம்! தேர் ஊரைச் சுற்றினால் திருவிழா! தீ திரியைச் சுற்றினால் வெளிச்சம்! காற்று உடலுக்குள் சுற்றினால் உயிர்! உயிர் உயிரைச் சுற்றினால் காதல்! நீ என்னையும் நான் உன்னையும் சுற்றுவதே வாழ்க்கை! தாய்ச் அவர்களின் ஒரு கவிதை சிங்களம் தமிழைச் சுத்தினால் மங்களம்!!
-
- 7 replies
- 1.5k views
-
-
தைத்திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ்ப்பொங்கல் கூவி அழைத்திடும் சேவல் குதித்தெழுவோம் குளிப்போம் பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள் கோலமிட்டு விளக்கேற்றிக் கும்பிடுவாள் அம்மா பாலெடுத்துப் பொங்கலுக்குப் பானை வைப்பார் அப்பா விரும்பிய மா வாழை பலா விதவிதமாய்க் கனிகள் கரும்பிளனீர் படைத்து மனம் களித்திடுவோம் நாங்கள் வெண்ணிறப்பால் பொங்கி வர வெடி சுடுவோம் நாங்கள் இன்னமுதப் பொங்கலுண்ண இணைந்து நிற்போம் நாங்கள்
-
- 1 reply
- 5k views
-
-
புத்துணர்ச்சியூட்டிப் புதுவாழ்வைக் காட்டுத்காய் பொங்கல் நன்னாள் எம்முன் புன்னகைத்து வருகிறது. வாருங்கள் நண்பர்களே வரவேற்போம் புத்தாண்டை நீர்மேல் எழுத்தாகி நிலைகுலைந்து எம் வாழ்வு போரால் அழிந்ததனைப் புதுப்பிக்க, எங்களது இன்னல்கள் நீங்கி இனியதொரு பொற்காலம் மின்னி ஒளிர விளக்கேற்றி வாருங்கள். போனதெல்லாம் போகட்டும் புது வாழ்வு இனிவேண்டும் காய்ந்து நிலம்பிழந்து கட்டாந்தரையாகி ஓய்ந்ததனால் எல்லா உயிர்ப்பும், எம் தாயகத்தில் சாய்ந்தவைகள் மீண்டும் சாம்பரிலே நின்றெழும்ப பாடிடுவோம் தோழர்களே பண்ணெடுத்துப் பாடிடுவோம் வேதமுதல்வன் விழிதிறந்து நெற்றியிலே ஊதிப் பொறிசிதற உள்ளங்கள் ஒன்றிணையச் சந்தமெடுத்துத் தமிழினிக்கப் பாடிடுவோம். ஆதிசிவன் பெற…
-
- 0 replies
- 929 views
-
-
என் கண்ணில் பட்டவளே.....!!! நீ பிரம்மனின் .... தங்க தேவதையா ....? தெய்வீக தேவதையா ...? தோகை மயில் அழகியா ...? மானிட பெண் தாரகையா ...? என்னை கொல்லும் யார் நீ ...? +++ குறள் - 1081 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. +++ திருக்குறள் வசனக்கவிதை
-
- 3 replies
- 1.1k views
-
-
காத்திருப்பேன் அவள் வருவாள் ..பக்கத்தில் அவள் அண்ணன் ...சைக்கிளில் வருவார் ..அருகிலே செல்வேன் ..கண்ணால் கதைப்பேன் ..அவள் யாடையால் கதைப்பாள் ..அண்ணன் கிட்டவரும் போது..என் நடை வேகமாகும் ...பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..கொப்பியை பரிமாறும் போது ..கடிதமும் பரிமாறும் ...விழுந்தது கடிதம் நிலத்தில் ..கண்டார் ஆசிரியர் தந்தார் ..முதுகில் நல்ல பூசை ..நண்பர்கள் கிண்டல் நண்பிகள் அவளை கிண்டல் ..காலம் காதலாகியது ..கல்வி கரைக்கு வந்தது ..காதலும் கரைக்கு வந்தது ...^பள்ளி காதல் தொடரும் பள்ளிவரை இல்லை பள்ளி படலைவரை --------------------------------------------------------------------------------------------------------- தாத்தா நான் நல்லா சைக்கிள் ஒடுறானா ..? என்ற பூட்டனின் க…
-
- 2 replies
- 1.7k views
-
-
கணையாழி ஜனவரி 2016 இதழில் வெளிவந்த எனது “கறுப்பு வெள்ளி” என்ற கவிதையை, யாழ் களத் தோழர்களுடன் தோழர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கணையாழி ஆசிரியர் குழுவுக்கும், யாழ் களத் தோழர்களுக்கும் நன்றி! கறுப்பு வெள்ளி அந்தப் புதன்கிழமை என் நண்பனின் யாதுமாகிய காதலிக்குத் திருமணம். முகூர்த்த நேரத்தில் மலைக்கோட்டை மீதேறி அந்தத் திருமண மண்டபத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடன் பேசிய அலைபேசியை ஒரு பாறையில் மோதிச் சிதறிடச் செய்தான். இறங்கி வருகையில் ஒவ்வொரு படியிலும் நின்று சங்கல்பம் எடுப்பதுபோல் எதையோ முணுமுணுத்தான். திரும்பி வருகையில் திருச்சி சாரதாஸில் அம்மாவுக்கு நூல்ப…
-
- 0 replies
- 1k views
-