Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 27.8.15 ஆனந்தவிகடனில் சொல்வனம் பகுதியில் "மந்திரக்காரி" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, தளத்தின் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். மந்திரக்காரி! என்னை ஒரு நாய்க்குட்டியாக இருட்டில் உருட்டும் திருட்டுப் பூனையாக தலையணை மெத்தையாக கண்ணீர்த்துளிகளை ஒற்றி மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாக மாற்றிக்கொள்ளும் மந்திரக்கோல் அவளிடம் இருக்கிறது. பிறர் காணும்போது அவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதியாகவும் என்னை மாற்றிக்காட்டும் மாயவித்தைக்காரி அவள். வார நாட்களில் என்னை நானாக்கி வாசல் நிலையில் சாய்ந்து நின்று வழியனுப்பிவைப்பாள் மந்திரக்கோலை முதுகில் மறைத்து! - சேயோன் யாழ்வேந்தன் நன்றி: ஆனந்த விகடன்

  2. என்னணை அப்பு? இடிஞ்சு போய் இருக்கிறாய்! எல்லாம் முடிஞ்சுது...! அது தான் இப்படி! என்னப்பு நடந்தது? ஆரம்பப் புள்ளிக்கே.., திரும்ப வந்திருக்கிறம்! இல்லை...இல்லை..! இன்னும் கொஞ்சம் சறுக்கியிருக்கிறம்! என்னப்பு.. கள்ளுத் தத்துவமோ? கள்ளில முன்னேற்றம் ! அதை விடு..! பிளாவிலை குடிச்சனாங்கள், இப்ப..., கிளாசில குடிக்கிறம்! ஆயிரமாய்த் துலைச்சு..., அலங்கோலங்கள் சுமந்து..., விலாசங்கள் கலைந்து,,, தலையில துண்டோட...! என்னப்பு நடந்தது? கொஞ்சம் விளக்கமாய் சொல்லணை! அது தானே சொல்லிறன்.., ஆரம்பப் புள்ளிக்கே.., திரும்ப வந்திருக்கிறம்!

  3. காட்சியும் கவிதையும் உயரக் கூடு கட்டி உல்லாசமாக வாழ்ந்தாலும் நிலம் நோக்கிய வாழ்வில்லாமல் நின்மதி கிட்டாது.

    • 109 replies
    • 9.1k views
  4. மலரே என்பான் அவன் வண்டே என்பாள் அவள் மலர் மீது வண்டு உறவாட மலரும் உறவுக்குள் விளையும் குண்டுமணிகள் விடப்படுவது குப்பையில்...! கடைசியில்.. தகாத உறவென்று பெயர் வைக்கும் சமூகம்... மனிதம் குப்பையில் சேர்வது அறிவதில்லை.!!!

  5. ஏன் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறோம் நாங்கள் இன்னும் ஏன் எரிந்து கொண்டிருக்கிறோம் என்ன பாவம் செய்தோமென்று எங்களுக்குப் புரியவில்லை வாசலில் சுடுகலனேந்திய அன்னியப் படை அடக்குமுறை அரசு சொல்கிறது பாதுகாப்பென்று.. காணாமற் போதல்கள் கைதுகள் பாலியல் வன்புணர்வுகள் அடையாளமற்ற கொலைகள் தொடர்கிறது.. மக்களைப் பேசாத ஊமைகளாக்க முகாம்கள் முளைக்கின்றன புதிய அணிகள் புதிய திசைகாட்டுவதாக உறுமுகின்றன. விசையிருந்தால் பறக்க முயற்சிப்பதாய் சிறகசைக்கின்றன! நாமே ஆசீர்வதிக்கப்படவர்கள் நாமே அனுபவமுள்ளவர்கள் நாமே ஆற்றலாளர்கள் முடிநரைத்துக் கூன்விழுந்தாலும் முடியும் வரை தொடர்வோம் தீர்வுதேடித் தருவோம்…..! சிங்களமும் தொடர்கிறது புதிது புதியாய் நடுகிறது சித்தார்த்தன் சிலைகளை.. வீதி முலையில் இருந்து எங்களுக…

    • 0 replies
    • 676 views
  6. சிறையை உடை சிறகை விரி இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் காற்றோட்டமான அறை பெரிய மண்டபம் செயற்கைப் பூந்தோட்டம் பார்த்துப் பார்த்துக் கவனிக்க பலர் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கங்களையும் பார்த்துப் பார்த்து சுமைகளை எமதாக்கி சுகங்களை உமதாக்கி தோளிலும் மாப்பிலும் தூக்கிச் சுமந்தோம் எந்த உணவு பிடிக்கும் எந்த உடை பொருத்தமாக இருக்கும் எந்தப் பாடசாலை உங்களை உயர்த்தும் எந்தப் படிப்பு உங்களுக்கு இலகுவாக அமையும் ஆம், பார்த்துப் பார்த்து படியேற்றி விட்டோம் அதற்கு பிரதியுபகாரமாக நீங்கள் எம்மை இங்கு படியேற்றி விட்டுள்ளீர்கள் நேரத்திற்கு உணவு நாளுக்கோர் உடை வசதியான படுக்கை வளமான இருக்கை பிரயாணிக்க சொகுசு வண்டி கூப்பிட்ட குரலுக்கு செவிலி குறிப்பறிந்து கவனிக்க தாதி எல்லாமே எல்லாமே இருக்கும…

  7. போரடிக்கும் கருவி. எல்லாமே முடிந்து போனதாக இறுகிப்போனது மனசு. இருப்பினும் ஏதோவொரு தொடக்கத்தை நோக்கியே சஞ்சரிக்கிறது சிந்தனை. ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு மௌனமாயிருக்கவும், பேசவும், பகைக்கவும், சிநேகிக்கவும். அதினதன் காலத்தில் அத்தனையையும் நேர்த்தியாக நகர்த்திச் செல்கிறது காலம். முந்தினதும் பிந்தினதுமாக சுழலும் காலத்தின் கைகளில் நானும் ஒரு போரடிக்கும் கருவிதான். 01.08.2015. தமிழினி ஜெயக்குமரன்

  8. சமீபத்தில் நடந்த பேஸ்புக் சந்த வசந்தக் குழுமத்தின் காணொளிக் கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதை.

    • 0 replies
    • 661 views
  9. தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள் ------------------------------------------------------------------------விஞ்ஞான தந்தை மெய்ஞான தந்தை கலாம் --------இளமையிலும் மாணவன் இறப்புவரை மாணவன் கலாம் --------கிராமத்தில் பிறந்து கிரகத்தை ஆராய்ந்தவர் கலாம் ---------இளைஞனின் கனவு விஞ்ஞானத்தின் அறிவு கலாம் --------அறிவியலின் அற்புதம் அரசியலின் தியாகம் கலாம்

  10. மனசு போல வாழலாம் கலகலன்னு சிரிக்கலாம் காலமெல்லாம் சிறக்கலாம் நிலவிலேறிக் குதிக்கலாம் நிம்மதியாய் இருக்கலாம் வழ வழன்னு கதைக்கலாம் வண்டு போலப் பறக்கலாம் மலையிலேறி இறங்கலாம் மழையிலேயும் நனையலாம் மழலையாகப் பேசலாம் மரங்கள் மீது ஏறலாம் பனித்துளிகள் சேர்க்கலாம் பறவையோடு பாடலாம் கலைகளிலே திளைக்கலாம் தென்றலோடு நடக்கலாம் மலர்களிலே உறங்கலாம் மனசு போல வாழலாம் http://www.lankasripoems.com/?conp=poem&pidp=214612

  11. (இராஜரட்டையின்) கொடு வனம் புகு படலம். காரிருள் சாமம் ஒன்றிற் கரு வரியுடை தரித்த தமிழ் மறவர் படையணி ஒன்று, கரந்து, கானகம் நடுவே எதிரி வானகப் பாசறை புகுந்து, வானிடை ஏகி வல்ஈய எச்சமிடும் கொடிய எந்திரப் பறவைகள் வாழும் கூட்டினைச் சிதைத்து எரித்துத், தாமும் அக் களமிடை ஆகுதி ஆகியே, தம் மக்கள் இடர்தனைக் களைந்து வீரகாவியம் ஆகினர். (நினைவுகள்) -------------------------------------- அருண்டனர், பகைவரெல்லாம் மெய் விதிர்த்திட அஞ்சியேயோடி ஒளிந்தனர் நிலவறை தேடிக் கண்ணுறு இடமெலாம் மண்தூர் நிறைய மாண்டதம் மாந்தர் யாக்கை நில வரை பழித்து நிறைய நாலிரு திக்கும் அதிரக் கானகக் காவல் தகரக் கருவரியுடை கண்ணிடை தெரிய. ஊடுடிடைப் புகுந்த புலியோ உறுமியே எழுந்து பாய்ந்து வானிடையேக…

    • 0 replies
    • 1.8k views
  12. தமிழினத்தை உலகறிய ..... உச்சத்துக்கு கொண்டுசென்ற ..... உத்தம மனிதர்களில் ஒருவர் ..... மேன்மை தங்கிய தமிழ் .... விஞ்ஞான தந்தையே கலாமே ...! உங்கள் பங்கும் வற்றாத நதி அய்யனே .....!!! அடுத்த வேளை உணவுக்கு .... அல்லல் பட்டாலும் நம்பிக்கையை .... தளராமல் விடாமல் முன் செல் ... வெற்றி நிச்சயம் சாதனை நிச்சயம் .... வாழ்துகாட்டிய எம் தந்தையே ... அய்யனே .....!!! எப்போது எதிர்காலம் உங்கள் ... கையில் இளைஞர்களே மாணவர்களே .....! உச்சாகம் ஊட்டுவதில் உம்மை தாண்டிய .... எவரையும் நாம் பார்தத்தில்லை -சான்று ..!!! உயிர் பிரியும் வேளையிலும் மாணவர்களின் .... அருகிலேயே உயிரையும் விட்டீர்களே ....!!! அய்யனே ..... நீங்ககள் விதையை ஊன்றிவிட்டு .... சென்றுள்ளீர்கள் - நிச்சயம் ... மரமாகும்... தோப்பாகும் …

  13. யூலை 1983... படித்துக்கொண்டிருந்த என்னை தெருவில் ஓடத்துரத்தியநாள் இலங்கையனாக இருந்த என்னை தமிழனாக மாற்றியநாள் இலங்கை என் தாய்நாடு என்பதை வடக்கு கிழக்கு என்றநாள் தமிழன் என்று அடையாளமிட்டு கொல்லப்படவேண்டியவனாக்கியநாள்.. இசுலாமிய சகோதரர்களின் சுயரூபத்தை நான் தரிசித்தநாள் அகப்பட்டிருந்தால் இன்று 31வது நினைவஞ்சலி நாள்............

  14. எனக்கும் அவளுக்கும் .... உயிர் பிரியும்வரை .... காதல் பிரியாத காதல் .... இருக்கிறது .....!!! அவளூக்கு ஏதும் நடந்தால் .... நான் இறந்து பிறப்பேன் .... எனக்கு ஒன்றென்றால்.... அவளும் இறந்து பிறப்பாள்.....!!! நாம் ஒருவரை ஒருவர் .... சந்திக்கும்போது ..... கீறியும் பாம்புமாய் .... இருப்போம் -காதல் நகமும் சதையும்போல் இனிமையாய் இருக்கும் ....!!! + கே இனியவன் ஈகோ காதல் கவிதை

  15. மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (விரல்கள் )------வலது கை விரல்கள் மெருமை காட்டியது " மோதிரவிரல் "-----கும்பிடுகிறேன் பெருமை படுகிறது "சின்ன விரல்கள் "----கோபத்தின் தொடக்கி சண்டையில் தொடக்கி "சுட்டுவிரல் "----குட்டை கவலையில்லை அம்பு எய்வேன் "கட்டை விரல் "---நான் தான் வீமன் உயரமானவனும் "நடுவிரல் "

  16. தகுதி இல்லை விழுந்து விட்டேன் பதவி கிடைத்தது நான் பணக்காரன் பாலில் குளிப்பேன் சுவாமி சிலை நான் இரட்டை பிறவி உருவத்தில் வேறுபாடில்லை முன் கண்ணாடி சின்ன உரசல் உடல் சூடாகியது தீக்குச்சி அழகில் கிள்ளினேன் மயங்கி விழுத்தது மலர் நாம் பிரிந்து வாழ்கிறோம் இணைந்து வாழ்ந்தால் இறப்பீர் தண்டவாளம் தீயில் எரிகிறேன் சாம்பலகமாட்டேன் மெழுகுதிரி கண்ணீர் வருகிறது கவிதை வருகிறது வலி பிணியில் பணி செய்தவர் பிணியிலும் பணி செய்தவர் அன்னை திரேசா சிறகடித்து பறக்குறது சிறு கருவியால் பிறக்கிறது கற்பனை இல்லாவிட்டாலும் பிரச்சனை இருந்தாலும் பிரச்சனை பணம் உடல் சுத்தம் உள்ளச்சுத்தம்தியானம் மழலைகளிடம்மூட நம்பிக்கை விதைப்புசரஸ்வதி இலை படிப்பு தரும் பரவசம் அடைந்தனர்பார்க்கும் மனிதர்கள்கவலையில் கூ…

  17. நினைத்து பார்க்கிறேன் கோயில் திருவிழாவை பத்து நாள் திருவிழாவில் படாத பாடு பட்டத்தை ...!!! முதல் நாள் திருவிழாவிற்கு குளித்து திருநீறணிந்து பக்திப்பழமாய் சென்றேன் பார்ப்பவர்கள் கண் படுமளவிற்கு....!!! இரண்டாம் நாள் திருவிழாவில் நண்பர்களுடன் கோயில் வீதி முழுவதும் ஓடித்திரிவதே வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் திட்டும் வரை ....!!! மூன்றாம் நாள் திருவிழாவில் மூண்டது சண்டை நண்பர்கள் மத்தியில் - கூட்டத்துக்குள் மறைந்து விளையாட்டு ....!!! நாளாம் நாள் திருவிழாவில் நாலாதிசையும் காரணமில்லாது அலைந்து திரிவேன் ...!!! ஐந்தாம் நாள் திருவிழாவில் சேர்த்துவைத்த காசை செலவளித்து விட்டு வெறும் கையோடு இருப்பேன் ...!!! ஆறாம் நாள் திருவிழாவை ஆறுதலான நாளாக கருதி வீட்டிலேயே இர…

  18. அதிகாலையில் துயில் எழுந்து ... தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் ... தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை ... கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ... தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே காட்டும் விவசாய பாரதி -நீ யாருக்கு வரும் இந்த தைரியம் ....? கொட்டும் மழையில் உடல்விறைக்க... உழைப்பாய் - வாட்டும் வெயிலில் ... குருதியே வியர்வையாய் வெளிவர .... உழைப்பாய் - நட்டுநடு ராத்திரியில் ... காவல் செய்யவும் புறப்படுவாய் .. யாருக்கு வரும் இந்த தைரியம் ....? பட்ட விவசாய கடனை அடைக்க பட்டையாய் உடல் கருகி .... விற்று வந்த வருவாயை .. கடனுக்கே கொடுத்துவிட்டு ... அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!! அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு யாருக்கு வரும் இந்த தைரியம் ....? உச்ச அறுவடை பொழுதினிலே …

  19. கண்டதையும் கேட்டதையும் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? பயணம் பல செல்கிறேன் பயணத்தில் பல பார்க்கிறேன் பட்ட பார்த்த அனுபவத்தை வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது என் மனதில் இரத்தம் வடியும் எழும் என் உணர்வை சமுதாய கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? அடிமாடாக அடித்து அடுத்த வேளை உணவுக்கு அல்லல் படும் குடும்பங்களை பார்ப்பேன் மனம் வருந்தும் பொருளாதார கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? காதோரம் கைபேசியை வைத்து கண்ணாலும் சைகையாலும் தன்னை ம…

  20. நீ ஒருமுறை கண் சிமிட்டினால் ஓராயிரம் கவிதை எழுதும் நான் - ஒரு நொடி பேசாது இருந்தால் ஆயிரம் முறை இறந்து பிறக்கிறேன் ....!!! உயிரே மௌனத்தால் கொல்லாதே ...!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் *********************** உன் வீட்டு முககண்ணாடியாய் இருந்திருக்க வேண்டும் உன் அத்தனை அழகையும் ரசிக்கும் பாக்கியத்தை பெற்றிருப்பேன் ...!!! உன் உதடு பூசும் மையாக இருந்திருந்தால் ஒயாத முத்தம் தந்திருப்பேன் .....!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் *********************** காற்றுக்கு வாசனை இல்லை ஆனால் நீ வரும் போது உணர்கிறேன் காற்றில் வாசனையை ....!!! நீருக்கு நிறம் இல்லை நீ நீராடும் போது பார்கிறேன் அதன் நிறத்தை .....!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் ************************…

  21. அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை - உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ....!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ......!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் ... செருப்பில்லாத பாதங்களேடு.... இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே .....!!! அ - வரிசையில் சொற்கள் சொல்லடா அம்மா என…

  22. உயிருடன் இறந்து விட்டேன் ஒரு நொடி கண் சிமிட்டல் ...!!!sms கவிதை ///////சின்ன சின்ன வலி வார்த்தைகள் பழகிவிட்டேன் வலியை தாங்க sms கவிதை சந்தோசம் நீ நினைக்கும் இடத்தில் இல்லை..நீ இருக்கும் இடத்தில் உண்டும் +sms கவிதை காதல்எல்லோருக்கும் வரும்எனக்கு போய்விட்டது +sms கவிதை பூக்கள் வாசனைக்காக பூக்கவில்லை தன் வாழ்க்கைக்காக பூக்கிறது - காதலும் அப்படித்தான் ....!!!+sms கவிதை நீ காதலிக்காதுவிட்டாலும் எனக்குகாதல் வந்திருக்கும்உன்னை பற்றிய கவிதை ...!!!+sms கவிதை கவிதைக்கு கற்பனை.....வேண்டும் -உன்னை....நினைத்தால் கற்பனை.....வரமுன் கண்ணீர் ....வருகிறது ....!!!+sms கவிதை

  23. பொய் சொல்லவத்தில்லை உண்மையை மறைத்திருகிறோம் இதை விட கொடுமை பாதி உண்மை பேசியிருக்கிறோம் - கொடுமையில் கொடுமை பாதி உண்மை பேசுவதுதான் -இதை எல்லாம் செய்து விட்டு நல்லவனாக வேஷம் போடுகிறோம் நடிக்கிறோம் .....!!! @@@@@@ தப்பு என்று தெரிந்து கொண்டு தப்பு செய்திருக்கிறோம் -ஆனால் மற்றவர்கள் செய்யாத தப்பையா நான் செய்கிறேன் என்று சமுதாயத்தை அடமானம் வைத்து தப்பு செய்கிறோம் நல்லவனாக நன்றாக நடிக்கிறோம் .....!!! @@@@@@@ திட்ட மிட்டு பிறர் காசை திருடியது இல்லை ஆனால் வழியில் கிடந்த பணப்பையை யாரும் உரிமை கோராதபோது எம் பணமாக்கி செலவு செய்கிறோம் மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம் வழியில் கிடந்த காசு பொது சொத்து யாரும் பயன்படுத்தலாம் என்று நமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ... நன்றாக நடிக்கிறோம் .…

  24. உனக்காக எதையும் தாங்குவேன் நான் சுயநலவாதி இல்லை உன் இன்பத்தில் மட்டும் பங்குகொள்ள ......!!! நீ காதலில் ஒரு நாணயம் இரண்டு பக்கமும் விழுகிறாய் நீ எந்த பக்கம் விழுவாய் என்ற ஏக்கத்துடன் வாழ்கிறேன் அதிலும் சுகமுண்டு ....!!! உன்னுடன் பேச வேண்டும் உன்னுடன் மட்டும் பேச வேண்டும் உள்ளத்தில் இருப்பதை எல்லாம் உள்ளதை உள்ளபடி பேசவேண்டும் உண்மையுடன் பேசவேண்டும் ...!!! என்ன பேசப்போகிறாய் ..? என்கிறாயா ..? எப்போது ..? என்னை பற்றி பேசியிருக்கிறேன் ..? எல்லாம் உன்னை பற்றி தானே எப்போதும் பேசுவேன் என் உயிர் நீ தானே உயிரே ...!!! படையில் எல்லாம் இழந்து ... நிற்கும் வீரனைப்போல்... உன்னிடம் எல்லாவற்றையும் ... வழங்கி இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் ...!!! என்று இழக்கமாட்டேன…

  25. அறத்துப்பால்-கடவுள் வாழ்த்து -அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (01)கே இனியவனின் திருக்குறள்-சென்ரியூ எழுத்தின் தாய் உலகின் தாய் -அகரம் - -

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.