Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஹைகூக்கள் பொருமி தவித்தன ஏதிலியாகா ஏதிலிகள் சாவகாசமாக செருமிக்கொண்டிருக்கிறது சர்வதேசம் எட்டி எட்டி பறிக்கின்றாள் கனியை எட்டவில்லை ஏங்கியது கன்னிக்காய் மனது. கொடுத்துக்கொண்டிருக்கிறேன் தீரவில்லை திகட்டவில்லை முத்தங்கள். வைக்கோல் கன்று காட்டி ஏமாற்றிய பால்க்காரனுக்கு நிஜக் குழந்தை காட்டப்பட்டது சிக்னல் பிச்சைக்காரி. பிடியின் வழி வளைந்து வளர்கின்றன பானைகளும் குழந்தைகளும். பிடியின் வழி வளைந்து வளர்கின்றன பானைகளும் குழந்தைகளும். கிளறுகின்றது கோழி குப்பையோடு குடலையும் - பசி மனிதாபிமானம் அற்றவர்களெனப்பட்டவர்களுக்கு(???!!!) மனிதாபிமானம் உள்ளவர்களெனப்பட்டவர்கள்(???!!!) வழங்குவது மரணம்!!!. இடைவிடாத அடை மழை சுக…

  2. கல்லறை கருக்கள் கண்திறக்கும் காலம் காத்திருக்கின்றோம் வாருங்கள்.

  3. இலக்கியமே நீ தூங்கு இழப்புக்கள் எமக்குப் புதிதல்ல இருந்தும் இம் மாவீரனின் இழப்பறிந்து ஏனோ? ஏங்கோ? வலிக்கிறதே ஏன் என்று தெரிகிறதா? மத்தாப் பூவாக மனங்களிலே மலர்ந்திருக்கும் சித்திரச் சிரிப்பொன்று நித்திரையாகியதா? வரலாற்றில் நிலைத்திட்ட வண்ணத் தமிழ் காவியமே மரணத்தை வென்றிட்ட மாவீர மன்னவனே சித்தமெல்லாம் தமிழீழக் கனவோடு உறவாடி வித்தாகி விதையான சத்தியனே நீ தூங்கு காற்றைவிட வேகமாய் கடுகிவரும் வேகமெங்கே? களத்தினில் புயலாக புகுந்திடும் தீரமெங்கே? சீற்றமுறும் சிறுத்தையாய் சினந்தெழும் வீரமெங்கே? மாபெரும் சபைகளில தோள் சேர்ந்த மாலையெங்கே? இலட்சியத்தின் வேட்கையுடன் இறுதிவரை போராடும் இலக்கணங்கள் இங்குண்டு இலக்கியமே …

  4. எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ. சுற்றி நிற்கும் இந்தியப்படைகளின் முற்றுகைக்குள்ளால் நீயும் உனது தோழர்களும் இருள் கனத்த பொழுதொன்றில் - எங்கள் ஊரிலிறங்கினாய்....! சிகரங்கள் தொடவல்ல வீரர்களின் முகமாய் அந்த நாட்களில் எங்களின் சூரியன் எங்களின் தோழன் எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ. பூவிதழ் விரியும் அழகாய் புன்னகை யாரெவரெனினும் சினேகப் பார்வை ஊரிலே உனக்காயொரு சிறுவர் படை அங்கே நீயும் சிறுவனாய் ஆசானாய் வீடுகளில் உனக்காயென்றும் காத்திருந்து எரியும் விளக்குகளின் கீழ் உன் வரவைத் தேடும் நாங்கள்....! எப்படியெல்லாமோ எங்கள் மனங்களில் வந்து குடியேறிய புலி எங்கள் அன்புக்குரிய றோயண்ணா உங்களின் வரவில் மகிழ்ந்ததும் உங்களின் அன்பில் நனைந்ததும் இன்று போலவ…

    • 2 replies
    • 872 views
  5. போரியலின் அடிப்படை படைகளின் அணி ஒழுங்கு தகமைகளின் நெறி வழி ஒரு சிறந்த போரியல் ஆசான் .. ஆரம்பிப்பவன் சிப்பாய் ஆனால் கட்டளை பீடம் அரசன் நோக்கம் எல்லாம் தன் தலைவனை காப்பது மட்டுமே சூழ்சி வலையில் இருந்து .. இத்தனைக்கும் படையை ஒழுங்கு படுத்தி பகையை நிலைகுலைய செய்வதும் வைப்பதும் ராணியாம் உதவிக்கு மந்திரி நெடுக்க வழிநடக்க .. முன்னேருவோர் வீழ்வார் என தெரியும் ஆனாலும் அடுத்த கணம் நிலையை பலப்படுத்தி பதில் தாக்குதல் நடக்கும் இறப்பு பெறுமதி வீழ்ந்தவர் பொறுத்து கணிக்கப்படும் ... ஆனாலும் சதுரங்கம் வாழ்க்கையின் மிக சிறந்த ஆசான் போரியலின் ஆசிரியன் களங்களை மாற்றி அமைக்கும் வல்லமை தந்திரங்களை உடைத்து வெளி வரும் கெட்டித்தனம் .. காப்பு தாக்குதல் திறன்களை…

  6. உறவின் வாசனை உன்னால் தானடா உணர்வில் இன்னும் மாலைநேரத்து வெயிலில் காய்ந்து வழியும் இலுப்படி நிழல் உனது அமைதியின் இருப்பிடம் அங்கே தான் நீ அதிக நேரத்தைச் செலவிடுவாய் அங்கே தான் நாங்களிருவரும் அறிமுகமாகினோம். சோளகம் உருவிப்போகும் இலுப்பம் இலைகளின் உதிர்வில் வசந்தத்தின் வரவைப் புதுப்பித்துக் கதைகள் சொல்வாய் உதிர்ந்து காயும் இலுப்பம் இலைகளின் மறைவிலிருந்து துளிர்க்கும் குருத்துகளின் உயிர்ப்பைக் காட்டித் தைரியம் தந்தாய் தலைநிமிரச் செய்தாய். விடியலைக் காணவிடாத சமூகச்சாவியை உடைத்துவரும் வீரத்தையூட்டினாய் விழியுடைந்துருகிக் கன்னம் தொடும் நீர் துடைக்கும் தோழமை விரலாய் வெற்றியைக் காட்டினாய்....! அந்தக் குழந்தைக் காலத்த…

  7. கல்லறைத் தெரு என் தெருவின் பெயர் மரித்தவர் நடுவே நான் வசிக்கிறேன்... சோகமும் கண்ணீரும் என் கொடி இலச்சினைகள் இரவில் மட்டுமே என் உரையாடல்கள் அதுவும் அவர்களுடன் மட்டுமே ஒவ்வொரு நாளும் இறக்கிறேன் மறுநாள் உயிர்த்தெழுவதும்கூட அன்றிரவு மரிப்பதற்கே பாழ்நிலத்தில் விருப்பமுள்ளவர்கள் வாழட்டும் நான் அப்பால் ஏகுகிறேன் என்னுடன் உரையாடுபவர்களுடன் எருக்கம்பூக்களின் வாசம் மனத்துக்கு இதமாய் மரமல்லியை விடவும் இருளும் வெற்றிடமும் சூழ்ந்திருக்கும் இவ்விடத்திற்கு நாளை நீங்கள் வருவீர்கள். * தி. பரமேசுவரி

  8. Started by Sembagan,

    மறுவாழ்வு பச்சை வர்ண ஆடைகட்டி பல நிறத்தில் மலர்கள் சூடி பார்ப்பவர்கள் நெஞ்சத்தினை பறித்திழுக்கும் அழகிகள் காலம் செய்த கோலத்தால் கட்டழகு தளர்ந்து பூவிழந்து பொலிவிழந்து போர்த்திருந்த போர்வை கழன்று ஆண்டிக்கோலம் கொண்டு: அல்லவையாய் நின்றபோது வெள்ளாடை கொடுத்து விதவைக்கோலம் ஆக்கினான் ஒருவன். ஏன் இந்த நிலையென்று ஏக்கமாய் நான் பார்த்தபோது வேடிக்கை பார்க்காதீர்; - நாங்கள் விதவையாக்கப்பட்டவர்கள் பூத்துக் குலுங்கி புதுப்பொலிவு பெற காலம் கைகொடுக்கும் அதுவரை காத்திருப்போம் என்றார்கள். செண்பகன் 23.10.13

    • 11 replies
    • 1.2k views
  9. ஏமாற்றி அணிவிக்கப்பட்ட சங்கிலியுடன் வறட்டு ஓலமிடும் நாய் எப்போதேனும் எலும்புத்துண்டுகள் அவ்வப்போது மிச்ச சோறும்... சில அடிகளும் ஏமாந்த வெறியுடன் பகைத்துக் குரைக்கும் நாய் சுதந்திரமாய் விடப்படும் சில நாழிகையில் மூளைச்சலவையில் எஜமானனுக்கு வாலாட்டியபடி அவனது பின்புறம் பம்மிப் பதுங்கும் சங்கிலி மாட்டிய த்ருணத்தில் இழந்த சுதந்திரமெண்ணி வெற்றாய் முனகும் மீண்டும் அடுத்த எலும்புத்துண்டுக்காய்க் காத்திருக்கும் வாலாட்டி. * தி. பரமேசுவரி

  10. Started by poet,

    Dear Yarl, Please kindly remove this

    • 0 replies
    • 803 views
  11. Started by nedukkalapoovan,

    அணிலே அணிலே கொய்யாப்பழத்தை தூக்கி வீசிட்டு சொக்கிலேட் கிரீம் பிஸ்கட் சாப்பிடும் குண்டு அணிலே கிட்டவா.. நீ ஒரு obesity தெரிந்தும் உன்னை ஓடிவரக் கேட்கமாட்டேன் பயந்திடாமல் பைய நடந்தே வா..! களவெடுத்து நீ தின்னும் பிஸ்கட்டில் பாதி பறக்க திணறும் குண்டுப் புறாவுக்கும் கொடுக்கலாம் கொண்டு வா..! கமராவால் அதைக் கண்ணடித்தே இணையத்தில் போட ஆசை மெல்ல பத்திரமாய் ஊர்ந்து வா. ஊரில் என்றால் மிளகாய்த் தூள் தூவிய நல்ல பொரியலாய் சட்டிக்குள் நீ ஆகி இருப்பாய் தெரிந்து வா..!

  12. மடியில் கிடத்தி இப்போதும் தலை கோதுகிறாள் அம்மா தன் செல்லப் பிள்ளையென குழந்‌தையென உறங்குகிறேன் நான் கைவிரல் பதியும் அப்பாவின் முரட்டு அடி இப்போதும் பயம் தான் எப்போதும் ஓரடி தள்ளியே நிற்கிறேன் அன்பாய் சொல்கையிலும் அதட்டலாய் தொனிக்கும் பாட்டியின் சொல்லை இப்போதும் மறுப்பதில்லை பழுத்து தழுத்த போதும் நரைத்த என் தலைக்கு பின்னிருந்‌து கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கும் என் பிள்ளை பிறந்‌தது நேற்றெனவே தோன்றும் ஆனால் ஒரு நமட்டுச் சிரிப்பில் சட்டென உணர்த்தி விடுகிறாள் மனைவி எனக்குக் கழுதை வயதாவதை கழுதையின் வயதென்னவோதான் தெரிவதில்லை லோ.கார்த்திகேசன்

  13. காகித எழுதி. தேர்ந்த கவி ஒருவனின் கைகளில் சிக்கிக்கொண்ட காகித எழுதி கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது காகிதத்தின் வெற்றிடங்களை கனமான பொருளோடு... சிறந்த சிந்தனாச் சிப்பியின் கைகளில் சிக்கிய சிறிய தூரிகை கிறுக்கிய அகண்ட நெடிய ஓவியத்தைப்போல் நிறைத்து வழிந்தன கவிதைகள் வெற்றிடத்தில் இருந்து வெற்றிடத்தைப் பற்றியதாக... சூனியத்தில் இருந்து வெறுமையில் இருந்து பிறந்துகொண்டிருந்தது பெருமைகளின் சிந்தனை பிரசவிக்கும் தாயின் முக்கலும் முனகலும் இல்லாமலே பிரசவித்துக்கொண்டிருந்தது காகித எழுதி கவிதையை நியாங்களில் இருந்து நிஜங்களில் இருந்து வெறுமையை நிரம்பிக்கொண்டு பிறந்துகொண்டிருந்தது அந்தக் கவிதை தேன் நிறைந்த பூவின் வாசமாக கிறங்க வைத்தன வெற்றிடத்தைப் பற்றி …

  14. யார் இவர்கள்? இவர்கள் ஏன் சாகவேணும்? ஏன்? ஏன்? இவர்கள் உயிராயுதம் எடுத்துக் களமாடுகையில் நாமெல்லாம் ஸ்கோர் பார்த்துக்கொண்டிருந்தோம்.! அனைவருமே ஆட்டமிழந்து வெளியேறினர்! பாவம் இவர்களைச் சுமந்த உதரங்கள்! அவை இன்னும் ஆட்டமிழக்கவில்லை இயலாமை எனும் செருக்களத்தில்! நாங்களும் தான் மாறவில்லை காத்திருக்கோம் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கும் வரை! அநுராதபுரம் வான்படை தாக்குதலின் காவியமான கரும்புலிகள் நினைவாக.

  15. அடங்கிக்கிடக்கிறது. என்றும் இப்படி கிடந்ததில்லை இறகுகோதும் ஓசையாவது கேட்கும். எதுவுமில்லை. நேரம் அறியக்கூட பர்ப்பதுண்டு காலம் தப்பியதில்லை ஒருபோதும். காலம்...?? எங்கே போயிருக்கும், இரைபோதாமல் இன்னும் தூரம் போயிருக்குமோ இணைகூடி இடம் மாறி இருக்குமோ இரையாகி இருக்குமோ இறகு உருத்தியும், எச்சமிட்டும், சுள்ளித்தடிகளை விழுத்தியும், தூண் விட்டத்தில் குறுகுறுத்து தலை புதைத்தும், எங்கே போய் தொலைந்திருக்கும். "சனியன்" என்று வாய்விட்டு திட்டவேண்டும் போல ஒரு உணர்வு. காலம் காத்திருப்பை சேமிப்பதில்லை. சிக்கிக்கிடந்த ஓரிரு இறகுகளும் தவறி அலைகின்றன. எச்சங்கள் காய்ந்து துகளாகி இல்லாமல் போகின்றன. சந்தங்களால், குதூகலித்துக்கிடந்த கூட்டிலிருந்து வெற…

  16. மீட்பரினாலும் மீட்கப்படாமல்போன ஈராயிரத்து ஒன்பது வருடங்கள் கழித்து... ஒரு இனத்தையே ஒட்டுமொத்தமாய் சிலுவையில் அறைந்தது சர்வதேசம்! அன்றுதான்... ஈழத்தின் கிழக்குக்கரை வாய்க்காலில் செந்நிறநீர்... ஆறாய் ஓடியது! பரலோகத்தில் இருந்த எங்கள் பிதாவுக்கு காது செவிடானதும் அன்றைக்குத்தான்!! ஒரு கல்வாரிப் பயணத்தை முப்பது வருடங்களாய் சுமந்து களைத்த மீட்பர், அன்றுதான் காணாமல்போனார்! பல யூதாஸ்கள் தோன்றினார்கள்!! ஆட்டுமந்தைகள் எல்லாம் பட்டியில் அடைக்கப்பட்டன! காணாமல் போன பல ஆடுகளை புலிதான் வேட்டையாடியதாய் ஊருக்குள் கதைப்பதாக உலகச் சந்தியின் மதவடியில் உட்கார்ந்து, பரமசிவமும் பான்கீமூனும் பம்பலாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்! ஆனால் அதேநேரம்... எல்லாம் புரிந்தும்…

  17. புரியாத புரிதல். புரிதல்கள் இரண்டு தமக்குள் சந்தித்துக்கொண்டன தமக்குள் புரிந்துணர்வில்லாமலே பேசிக்கொள்ள ஆரம்பித்ததன புரிதல்கள்; புரிதல் பற்றியே புரிதல்கள் பற்றிய சர்ச்சை புரிதல்கள் இல்லாததால் புரிதல்களுக்குள் முற்றிக்கொண்டிருந்தது ஒரு புரிதல் தன் பங்குக்கு புரிதல் பற்றிய தன் விளக்கத்தினை பல்வேறுவகையில் புரியவைக்க முயற்சித்தது இன்னொரு புரிதலிடம் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியாத இரண்டாம் புரிதல் முதலாம் புரிதலின் புரிதல் பற்றிய கொள்கைகளை புரிதல் இல்லாமலே விமர்சித்துக் கொண்டது. இந்த முறை புதிய கொள்கைகளோடு இரண்டாம் புரிதல் தன் பங்குக்கு ஆரம்பித்தது. முதலாம் புரிதலின் புரிதல் பற்றிய கொள்கைகள் எப்படி…

  18. சீ.. தனம் என்னும் அறையில் பூட்டப்படும் கன்னிகள் பல ஆயிரம் ஓதிடும் மந்திரம் பொய்யாகி போகும் தர்மத்தை மறந்து நீ வாழ்வே .. . புரட்சி செய்பவர் நாங்களே ஆதாரம் பல உண்டு பூமியில் வேதனைப் பிடியில் வாழ்க்கை ஏன் ? நீ பூட்டினை உடைத்திட வேண்டும் .. ஜாதிகள் சொல்லி தரம் பார்த்து ஊரினில் அவர்கள் உயர்ந்து நின்றனர் சமத்துவம் சொல்லி இவர்கள் இருக்க சத்தம் இல்லாமல் மனங்களை கொன்றனர் ... புரட்சி குணம் கொண்டு ஒரு மாற்றம் சீ....தனம் கொடுப்பதில் கொண்டுவா ஈழ விழுமியம் காத்திட பேணிட நீ . ஆங்காரம் கொண்டு உன்னை மாற்றிக்கொள் .. பென்னும் பெருளும் வாழ்க்கை என்றால் ஆண் அவைகளை கட்டிட்டு அலையட்டும் நான் முதிர்கன்னியா வாழ்ந்திட்டு போகிறேன் என்னில் தொடங்கட்டும் முதல் பு…

  19. பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று.. ------------------------------------------ இப்போதெல்லாம் நாம் சந்தித்த இடங்களில் யாருமே இருப்பதில்லை... சிந்திக்கிடக்கின்றன காய்ந்துபோன சில மஞ்சள் பூக்களும் நம் நினைவுகளும்.... காதலும் கவிதைகளுமாய் மாறி மாறி துலங்கிய அந்நாட்கள் தொலைந்துவிட்டன.. மாலை வெய்யில் தன் மஞ்சள் நிறமிழந்த ஒரு கோடையில்தான் நேசிப்பை விற்று காய்ந்துபோனது உன் இதயம்... நினைத்துப்பார்க்கையில் நெஞ்சத்தின் ஆழத்துள் மெல்ல இறங்குமொரு முள்.. அந்தரவெளியும் கலவர நிழலுமாய் நூறாயிரம் கதைகளை சுமந்தலையும் இதயத்தை உடைத்துவிடுகிறது ஒற்றைக்கண்ணீர்த்துளி.. பொழுதில்லை அழுவதற்கும்.. நினைத்துக் கவலையுற்று துன்புற்றுவிட்டு பனிக்குளிரில் வேலைக்கு இறங்கிச்செல்ல…

  20. கண்ணீரால் முடியும் என் கவிதைகள்... --------------------- காதல் வெளியில் தூக்கம் தொலைத்த இலையுதிர்கால இரவொன்று ஒளிர்கின்றது... இதயத்தில் இருக்கும் பிரிவுத்துயர் தணல்கின்ற எரிமலைகள் எரித்துவிடுகின்றன ஒளிர்கின்ற இரவை.. அறையெங்கும் நிரம்பிக்கிடக்கும் விளக்கொளியின் நடுவே கண்களுக்கு தெரியாமல் குறுக்கும் மறுக்குமாய் அலைகின்றன நினைவுகள்... பாறையெனக் கிடந்த உன் பொழுதுகளின் மீது பக்குவமாய் நான் வரைந்த காதல் ஓவியத்தை நீ கிழித்தெறிந்த போது சிதறியவைகளாக இருக்கலாம்.. புன்னகை எழுதிய முகத்தை கண்ணீர் மூடிமுடிக்கும் முன் நினைவுச்சிதறல்கள் சுழன்றெழும் வீச்சில் சிறைப்பிடிக்க வேண்டும் கவிதைகளில்... பாதைகள் எங்கும் காதலுடன் பரவிக்கிடந்த பூக்களை வாரி அணைக்க சேர்த்துவைத்த அன்ப…

  21. ரொம்பக் குளிருதடி... கொஞ்சம் பாரேன்டி! தேகம் நடுங்குதடி... பக்கம் வாயேன்டி! வெள்ளை நிறத் தேவதையே... வண்ண முலாம் பூசுறியே! கிட்ட வந்து முட்டுறியே... தட்டி விட்டுப் போகிறியே! தொட்டுப் பார்க்க முன்னால... கட்டிப் போடுறாய் கண்ணால! ஓரங்கட்டுறாய் தன்னால... ஒண்ணும் முடியல என்னால! கண்ணைச் சிமிட்டாதே... கடித்துக் குதறுதடி! என்னை மிரட்டாதே... எண்ணம் சேர்ந்து மிரளுதடி! என்னைத் தூண்டி இழுக்கிறாய்... எல்லை தாண்ட அழைக்கிறாய்! இன்பத் தொல்லை தருகிறாய்... தீண்டும் முன்பே மறைகிறாய்! வண்ணம் தந்த வானவில்லே... எங்கேயுன்னைக் காணவில்லை! கனவில் வந்து போறவளே! -உன் நினைவில் நொந்து போகிறேன்டி!

  22. உளி பல வலிதாங்கி அடிதாங்கி மெய் வருத்தி கோணம் பாகை என எல்லா பக்கமும் தட்டுப்பட்டு தெறிபட்டு மெதுவா செதுக்கிய பாறை ... மெல்ல உருவம் பெற்று பல கை இரத்தம் சிந்தி துடைத்து எடுத்து மேல் அலங்காரம் பூசி வண்ணம் இட்டு மென்மையா கரம் கோர்த்து தூக்கி நிமிர்த்தி அவ் உருவத்தை தோற்றத்தை .. எல்லோரும் அழகு பார்த்து வியந்து நிக்க நாம் செதுக்கிய சிற்பம் என இறுமாந்து நடந்து எம் திமிரை நெஞ்சின் உறுதியை உலகம் பார்த்து வாய் பிளந்து நிக்க நம்மை மிஞ்சிய ஒரு சிற்பியா இருக்க கூடாது என முடிவெடுத்து செய்த சதி .... சிற்பம் முடியமுன் சிற்பியை காணவில்லை உளி பட்ட வலிக்கு கூலியும் இல்லை இதுதான் உருவம் என சொன்னதை வைத்து சிலர் அதை தாமே செய்ததாய் சொல்லி தலையில் கீரிடம் தோளில் மலை…

  23. Started by வாலி,

    காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! ஒவ்வொரு இரவுகளிலும் உன் நினைவுகளைப் பத்திரம்பண்ணி இதயக் கருவறையில் பதுக்கி வைத்திருந்தேன் அந்த இரவுகளில் - நீயோ கருவறையைக் கல்லறையாக்கும் பாடம் படித்துக்கொண்டிருந்தாய்! காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! ஒற்றைச் சந்திரனாய் என்னினைவுகள் உன்னையே சுற்றிச் சுழன்றுகொண்டிருக்க - நீயோ நட்சத்திரங்களை நெஞ்சில் வைத்து உனக்காக மட்டும் எடைபோட்டுக்கொண்டிருந்தாய்! காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! ஒவ்வொரு முறையும் காதலால் - உன்னுடன் உயிர்மொழி தொடுத்துப் பேசிக்கொண்டிருந்தேன் - நீயோ வெறும் உதடுகளால் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாய்! காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்…

  24. கோபம்கொண்டு குமைந்தபோதும் துரோகம்கண்டு துவண்டபோதும் வறுமைகொண்டு வாடியபோதும் வெறுமைகொண்டு ஓடியபோதும் நறவுண்டு களித்தபோதும் உறவுகண்டு புளித்தபோதும் வாடைதழுவி உறைந்தபோதும் பேடைதழுவி கறைந்தபோதும் புலவிநீண்டு தீய்ந்தபோதும் கலவிநீண்டு ஓய்ந்தபோதும் - இன்பதுன்பங்களில் இருப்பை உணர்த்திய நிழலே மெல்ல உயிர்கொல்வதுதான் உன் செயலோ !! இரத்தம்கெட்டு சத்தம்கெட்டு எயிறுகெட்டு வயிறுகெட்டு வாசம்கெட்டு சுவாசம்கெட்டு இதயம்கெட்டு இதழ்கெட்டு ஊன்கெட்டு உறக்கம்கெட்டு உருவம்கெட்டு பருவம்கெட்டு அலம்பலில் ஆரம்பித்து புலம்பலில் நிறுத்துமிந்த உணர்ச்சிப்போலியை உணரும் காலம் எதுவோ ?

  25. இக்கவிதையை எழுதியவன் ஒரு முன்னாள் போராளி. இவனது பெயர் யோ.புரட்சி. சிறைகள் வதைகள் யாவும் சென்று வந்தும் தனது எழுத்துப்பயணத்தை தொடர்கிறான். அண்மைய மாகாணசபை பதவியேற்பு அடிபிடிகள் பற்றி பேசிய போது தனது எண்ணத்தை எழுத்தாக்கி அஞ்சலிட்டிருந்தான். அடிவாங்கியும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்த இளைஞனின் கனவுகள் இன்னும் நீண்டபடியேதான். அவனது கவிதையை யாழ்கள வாசகர்களுக்காக எடுத்து வந்திருக்கிறேன். பத்திரிகைகள் வானொலிகளில் இவன் எழுதிய எழுதிக் கொண்டிருக்கும் படைப்புகளையும் இனி யாழ் வாசகர்களுக்கும் எடுத்து வருவேன். இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயராத நாய் என்றொரு கவிதைத் தொகுதியை இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்டுள்ளான். புத்தகத்தை பெற்றுக் கொள்ள விரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.