கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வதையின் மொழி வதை என்பது ஈழத்தமிழனின் வாழ் வென்றானது -இன்று உயிர்த் தமிழுக்கும் தமிழனுக்கும் அதுவே மொழியானது சிறை என்றும்,சித்திரவதை என்றும்- அது இலக்கணம் சொன்னது கொலை என்றும்,கொடும் அவலம் என்றும் நா கூசாமல் பேசியது என்ன இது ? பெண்னென்றும் ஆணென்றும் அது பேதமற்று வதைத்தது.. தெருவில் வாழும் உயிருக்கும் கருவில் வளரும் உயிருக்கும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டன ... ஏன் என்றார்கள் மக்கள் ...?நீ தமிழன் ! அதனால் என்றது வதைமொழி .. தமிழ்த் தாயின் கருவறையில் உயிர் பெற்றதால் -தனக்கென கல்லறை கூட இல்லாது போனான் தமிழன் ...! கலங்கி தவிக்கின்றன- ஈழத்தில் கருவறைகளும் கல்லறைகளும் ...! உயிர் தாங்க கருவறைகளும், உடல் தாங்க கல்லறைகளும் மௌனமாய் மறுக்கின்றன- இருந்து வாழ்வ…
-
- 1 reply
- 1k views
-
-
வாழ்வுண்டோ? மண்ணை இழந்து மனையைத் துறந்து வருந்தியும் வாழ்வுண்டு! பொன்னை இழந்து பொருளைத் துறந்து புழுங்கியும் வாழ்வுண்டு! கண்ணை இழந்து கருத்துச் சிதைந்து கலங்கியும் வாழ்வுண்டு! உன்னை இழந்தால் தமிழே உலகில் ஒருநொடி வாழ்வுண்டோ? இன்பத் தமிழே! இயக்கும் இறையே! இனிமை படைத்தவளே! துன்பப் பொழுதில் துணிவைக் கொடுத்துக் துயரைத் துடைத்தவளே! அன்பாம் நெறியை அமிழ்தாம் சுவையை அளிக்கும் அருந்தமிழே! உன்றன் புகழை உலகில் பரப்ப ஒருநாள் மறவேனோ! ஒன்றே குலமாம்! ஒருவனே தேவாம்! உயர்மிகு நன…
-
- 0 replies
- 460 views
-
-
அப்பா எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என… கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கை…
-
- 14 replies
- 6.3k views
-
-
இந்த பிஞ்சு வயதினிலே உனக்கு நேர்ந்த கொடுரம் நினைக்கும் போது வாழ்வே வெறுகுதே நெஞ்சு முழுதும் சோகம் கண்களில் எல்லாம் ஈரம் இமைகள் மூடித் தூங்கும் வேளை பகை மீது கோபம் (முகநூல்)
-
- 0 replies
- 475 views
-
-
எல்லோரும் அவரவர் மனைவியைப் புரிந்து கொள்ள வேண்டும். உதவி செய்ய வேண்டும். பணத்தால்.. வசதியால் மட்டும் மனிதருக்கு மகிழ்ச்சி வந்து விடாது.. நம் செயல்களால்தான் இல்லறம் இனிக்கும்... பெண்களின உடல் சார்ந்த பலவீனங்கள்.. தொல்லைகள் எத்தனை ஆண்களுக்குத் தெரிகிறது...? “அனாசின் போட்டுக் கொண்டு வேலையைக் கவனி...” என்று சொல்லி விட்டு டி.வி பார்க்கும் என் அன்புக் கணவனே... மாத்திரை எதற்கு...? அலறும் டி.வி சப்தத்தைக் குறைத்து விட்டு நிறையப் போச்சா.. சோர்வா இருக்கா என்று அன்புடன் கேளேன்... உதடு கடித்து.. கண்மூடி சாய கொஞ்சம் உன் தோள் கொடேன்.. வயிறு வலியால் பெருகும் கண்ணீரைத் துடைத்து விடேன்... சுமை இறக்கும் குழந்தையை அலம்பி விட்டு..உடை மாற்றி தொட்டிலாட்டி கொஞ்சம் தூங்க …
-
- 1 reply
- 461 views
-
-
எனக்கும் உனக்கும் நீதி சொல்லும் பிரதம நீதி தேவதை இன்று நீதி கேட்டு புத்தரிடம் தமிழர்களுக்கு நீதி மறுக்கும் புத்தர் கண் திறப்பாரோ ?
-
- 6 replies
- 598 views
-
-
இனி என்ன வாழ்க்கை என்ற சோகம் ராகம் வேண்டாமே விடுதலை தீயினை அணைத்திடும் துரோக எண்ணங்கள் வேண்டாமே உணர்வுகள் அழுவதால் வசந்தங்கள் விடியாதே உறவினை இழந்ததால் உறவுகள் முடியாதே நம்பிக்கை ஒன்றே வாழ்வை வெல்லும் நாணயம் ஆகிறதே கண்ணீரைத் துடை மனமே புதுக் காலம் இசை மனமே வெல்லும் நெஞ்சை உருவாக்கு வெற்றி வாழ்வை அரங்கேற்று !!!! (நன்றி முகநூல்)
-
- 0 replies
- 383 views
-
-
கொஞ்சி பேசத்தான் தெரிகிறது சிறை பிடித்தவர்களிடமும் உனக்கு இனி போர் பறையாய் முழங்கு விடுதலை பிறக்கும் உனக்கு kaaraimainden.blogspot.com
-
- 0 replies
- 446 views
-
-
நேற்றிருந்த வாழ்வகற்றி புதியதோர் ஒளியைத் தேடி விரைந்து மாணவனாக தமிழீழ மண்ணில் விடுதலை வேண்டி உயர்ந்த கரங்களால் உலகின் புருவங்கள் விரிந்தன !!!
-
- 1 reply
- 407 views
-
-
ஆண்டான் அடிமை விடும் நிலை தன்னை பூண்டோடு ஒழித்து இங்கு நாம் மாற்றுவோம் நீண்ட நெடுங்கலாம் தொடரும் மடமைக் கருத்தினை களை எடுப்போம் ஒரு சாதி சமய பேதங்கள் இல்லாத சமூக நீதி படிப்போம் ! (முகநூல்)
-
- 1 reply
- 488 views
-
-
மூடிய கனவை இமையா பறிக்கும் சூரியப் பகலை முகிலா மறைக்கும் ஆடிய தெருவை சுவடா மறக்கும் ஆணவம் அதனை அறிவா மதிக்கும் நேரிய வழியை நிழலா தடுக்கும் நித்தியா தாமரையின் நிஜமா பொறுக்கும் மூழ்கிய படகை கரையான் அரிக்கும் முற்றிய பகையை மனமா சலிக்கும் நம்மை நாமே பழுது பார்க்கலாம் நாளை உண்டு சபதம் ஏற்கலாம் முகநூல்
-
- 1 reply
- 755 views
-
-
இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்பதால் வரமாட்டார் என்கிறார்கள் இல்லை என்பதற்கான ஆதாரம் இல்லை என்பதால் வருவார் என்கிறோம் எதுவானாலும் சரி அந்த வார்த்தையை சொனால் தான் எம்மினத்திற்கு உயிரோட்டமும் எதிர் இனத்திற்கு வயிரோட்டமும் ஏற்ப்ப்படுமானால் உரக்க சொல்வோம் வருவார் Fb
-
- 1 reply
- 558 views
-
-
அழகிய வன்னிக்காடு அழிந்து விடவில்லை அதன் விதைகளை சுமந்து திசை எங்கும் பறக்கின்றன பறவைகள் முள்ளிவாய்க்கால் வற்றி விடவில்லை மேகமாய் வானத்தில் நிறைந்திருக்கின்றன முல்லை பூக்கும் உட்சி தளைக்கும் யாழின் இசை உலகம் கேட்கும் காந்தள் வாசம் காற்று மணக்கு புலிக்கொடி ஏந்தி திசைகள் நடக்கும் !!! (முகநூல்)
-
- 1 reply
- 594 views
-
-
ஒரு கூதல் மாலை ............. குளிருக்குப் பயந்து ஒதுங்கிய பகலவன். இருட்டின் அரசாட்சி. பனி மூடிய மலைகள் வழிய வழி இல்லை. நாட்கள் விறைத்தபடி. காற்றில் ஈரம் இறுகி பனிப் பாதையாகி, வழுக்கி வழுக்கி தெருவில் திரிவதோ செப்படி வித்தையாய். உடைகள் பாதணிகள் பாரமாய் மனம் அதைவிட கனமாய். என்றாலும் ஓர் இதம் பனியின் உறைதலில். பனி கிழித்து சாணகம் தெளித்து கோலம் வரைய நினைக்கிறேன். நிமிடங்கள் சேமித்து ரசிக்க மறுக்கும் தெருப்பாடகனின் பாடலாய், அவரவர்க்கான அவசர அழைப்புக்களாய் அலுவல்கள். கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள். பூச்சாண்டி மனிதர்கள். பனி ரசித்து பார்வைகள் கண்ணாடி உடைக்கும் படியோடு நடை நிறுத்தும் பூனைக…
-
- 4 replies
- 762 views
-
-
மாவீரர் தினம் 2012 எதிரி புலத்தில் களத்தில் மாணவர்கள் நேற்று அழித்தோம் இன்று உருவாக்கினோம் ஆண்கள் மேல் தடை பெண்கள் விளக்கால் உடை கைப்புலிகளை அழித்து உணர்வுப்புலிகளை உசுப்பித்து உலகத்திற்கும் சிங்களத்திற்கும் வெல்ல முடியாது தமிழன் விடுதலை உணர்வை !!!!!!!
-
- 0 replies
- 311 views
-
-
நிலம்கீறி வெளிவரும் முளையங்களாய் புலன்கீறி விழுமென் வார்த்தைகள் _என்றுமே யாதொன்றினதும் கைதிகள் அல்ல, ஒப்புக்காகவும் ஒப்பனைக்காகவும் அலங்கரித்துக்கொண்டவை என்றோ, கற்பனைகள், சுமந்த கனவுகள் என்றோ, தேவதைகளின் ஆசீர்வாதங்கள் என்றோ, சட்டமிடவும் இயலவில்லை. சில இரவுகளில் நிகழுமிந்த ஒளிப்பகுப்பில்_என் அந்தரங்க நிர்வாணத்தை ரசிக்கமுடிகிறது. அந்த கணங்களில், அம்மணமாய் கிடக்குமென் மனவெளியில் தேவதைகளின் கொலுசுகள் ஒசைலயமிடுகின்றன. ஆழ்ந்த பெருமூச்சுக்களை வெளியேற்றும்_இந்த பிரசவிப்பின் பின்னான வெற்றிடத்தில் குடியேறும் ஆத்மதிருப்தியின் வாசம் அலாதியானது. அமைதியானது. இதுவெல்லாம் எனக்கானது. நீ என் இடத்தில் இருந்தால் உனக்கானது. இப்படி…
-
- 11 replies
- 897 views
-
-
ஒற்றையடிப் பாதை கன்னங் கரிய இருட்டு சில் வண்டின் ரீங்காரம் உடலை சிலிர்க்க வைக்கும் குளிர் தூரத்தில் கோட்டானின் கதறல் பக்கத்தில் இருந்த பதிந்த மரக்கிளையில் தொங்கி விழிகளை உருட்டிய வௌவால் எதிரே தெரிந்த நிமிர்ந்த மரம் தந்த ஏகாந்தப் பேயை ஏற்றிடும் தோற்றம் எதையும் இவன் இலட்சியம் செய்யவில்லை இலட்சியம் எல்லாம் எதிரே தூரத்தில் ஏதிலியாய் நின்ற ஒற்றைக் குடிசை. இன்றோ நாளையோ இடிந்து விழுவேன் என்றே சொல்லிய குடிசை மண் மதில் அந்த சுவரில் ஊதுபத்தி சூட்டில் எரிந்தும் எரியாததுமான மங்கலான கலண்டர் முருகன் படம் விடிந்தால் சூரியன் விழுந்தடித்து உள்ளே வரும் வித்தியாசமான ஓலைக் கூரை மூலையில் கிடந்த முழுசாய் கிழிந்த ஓலைப் பாயில் முழங்கால் முகத்துக்கு நேரே நீட்டி முழுவட்டமாய் …
-
- 2 replies
- 1.3k views
-
-
அணைக்கப்பட்ட ஒளியில் பிணைக்கப்பட்ட நிலையில் ஆண்மையின் வன்மையிலும் பெண்மையின் மென்மையிலும் அலைக்கழிந்து களித்தன அந்தரங்கங்கள்! செளித்து வளர்ந்த புல்வெளியும்... அதில் வளைந்து நெளிந்த நீராறும்... நெடிதுயர்ந்த மலைமுகடும்... கொஞ்சும் இயற்கை எழிலை விஞ்சிய பெண்மையின் நிர்வாணத்துக்குள் ஆழப்புதைந்து களிக்கத் துடித்தது ஆண்மை! மங்கிய ஒளியில் நிகழும்... மங்களமான நிகழ்வுகளெல்லாம் மயங்கிய நிலைகொடுக்க, தயங்கியே தஞ்சமடைவதாய் ஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை! இயங்கிய ஈருடலும்... கிறங்கிய நால்விழியும்... காரிருள் கானகத்தை உரசி... சூடேற்றிப் பற்றவைக்க, அடித்தோய்ந்த மழையில் நனைந்து நின்ற மரக்கிளைகள்போல் ஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்!!! …
-
- 15 replies
- 1.1k views
-
-
சோல்ஜர் @ சொறிநாய் சொறிநாயைப் பிடித்து “சோல்ஜர்” எனப் பெயர் வைத்து கறியோடு சோறும் வெறியேற அபினும் குழைத்துண்ணக் கொடுத்து வடக்கே போ என்றான் வேட்டைக்கு காவாலி சோல்ஜர் கடைசித் தெருதாண்டி முக்கி முணகி மோப்பம் பிடித்தபடி கால்தூக்கி எல்லை வரைகின்றான் என் வீட்டுச் சுவரில் அடித்து விரட்ட ஆளில்லா வீடொன்றில் நாநீட்ட தாகம் தணித்தவளின் கைநக்கி கோரைப்பல் தெரியச் சிரித்தான் வேட்டை நாயில்லா வீடொன்றாய்ப் பார்த்து கோழி இரண்டையும் -தென்னங் குலை நான்கையும் தேசியச் சொத்தாக்கினான் சிதறுண்ட கால்கொண்ட சிறுபுலியின் கதவுடைத்து பெண்மையை அரசுடைமையாக்கினான் காலம் பொறுமையாய் காத்திருக்கிறது காலம் வருவதற்காய் http://www.eelavayal.com/2012/12/blog-post.html
-
- 0 replies
- 625 views
-
-
"அந்த பிள்ளையைத் தெரியுமாடா? " நண்பனிடம் கேட்டேன் "நந்தினியைத்தானே சொல்கிறாய்? பாவப்பட்ட குடும்பமடா ஒரு அண்ணன் வீரச்சாவு அக்கா போராளியாய் போய் இறுதி யுத்தத்தோடே இல்லாமல் போய் விட்டாள் இவள் மட்டும் தான்டா மிச்சமாயிருந்தாள் தகப்பனைக்கூட இந்தியாமி தனங்கிளப்பில் வைத்து சுட்டுட்டான் இவளையும் நாய்கள் விடவில்லையே" ஈரவிழிகளோடு சொல்லி முடித்தான் நண்பன் இவளுக்கு ஏதோ நடந்திருக்கிறது இல்லையென்றால் ஏனந்த பிஞ்சு தன்னையே கருக்கிக் கொண்டிருக்கும் நண்பனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் நாலு வீடு தள்ளித்தானே இருக்கிறான் "என்னடா நடந்தது அவளுக்கு?" "எதையடா சொல்வது? எப்படியடா சொல்வது? எங்கட தெருவின் செல்லப்பிள்ளை அவள் அழகாய் இருப்பாள் என்ட மூத்த…
-
- 2 replies
- 424 views
-
-
ஈழத் தமிழர்களின் அவலத்தை பற்றிய சிங்களக் கவிதைகள். தற்பொழுது ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக புலம்பெயர்ந்து வாழும் சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன எழுதியவை. "தமிழர்கள் ஒடுக்கப்படும் பொழுது சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை", என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்தக் கவிதைகளை சமர்ப்பிக்கிறேன். துவாரகா உந்துல, சந்திரமண்டலமெனத் தலை சாய்த்திருந்த சிறையில் ... தண்ணீர் மென்மையானதா நொந்ததா மனவெளி சுரங்கங்களில் கலகத்தின் அழிவுண்டான இரவொன்றில் தமிழ்ச் சகோதரியைப் பற்றி எதற்காக கலவரம்? கனவுகளின் முன்னணிக்கு உண்மையாகவே வெடி பட்ட நாளில் கண்ணீர் வரிசையிட்டதோ வழி நீளவும் பிக்குவின் காவியுடையைப் போல காத்திருந்த செங்கொடி யாருடைய குருதியால் சிவந்ததென்பது ம…
-
- 2 replies
- 884 views
-
-
-
ஈழப் பண்ணையில் கந்தன் என்ற கமக்காரன் கட்டி வளர்த்த காளை மாடுகள்.. பண்பட்டு மண் பண்படுத்தி மக்களுக்காய் உழைத்தன ஓர் காலம். இன்றோ.. கட்டறுத்து சொந்த நிலங்கள் மேயும் கட்டாக்காலிகளாய்..! வளர்த்தவரையே மூர்க்கம் கொண்டு முட்டி மோதி சாகடிக்கும் நிலையும் காணீர். விசமிகளும் கரடிகளும் விசயத்தோடு பழி தீர்க்கும் படலம் தொடர்பில்.. எதிரிகளின் கைப்பாவைகளாய் மூர்க்கம் கூட்ட கட்டாக்காலிகளிடம் சாராய வெறியூட்டும் நிலையும் காணீர்..! எச்சரிக்கை..! எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
-
- 11 replies
- 1k views
-
-
அகழிகள் சுற்றிப் படர்ந்த கோட்டையின் மதில்களுக்கப்பால் சிம்மாசனத்தில் நீ! மானுட நேயமேதும் சுவாசத்தில் கலக்காமலிருக்க நரமாமிசம் தின்னும் முதலைகளை மிதக்கவிட்டிருகிறாய் எச்சரிக்கை முயற்சியாக... நானாய் இறங்கி மீனாய் மாறி நானாகவே கரையேறுகிறேன் நாக்கில் சொட்டும் நீரோடு பின் தொடருமவற்றின் பசி தீருமுன் வாயிலைத் திறந்துவிடு வாழ்க்கை என்பதன் அர்த்ததைக் கற்பித்துவிட்டு இரையாகிப் போகிறேன் என்றேனுமொரு நாள் தெளிவுற்ற நீ உப்பரிகையில் என்னை நினைத்து கண்ணீர் சிந்தலாம் வந்தேறிய நோக்கத்தை வரலாற்றில் வரவு வைத்துவிட்டு கூட்டுக்குள் உடல் சுருக்கிக் கொள்ளும் என் கவிதை! http://kayalsm.blogspot.fr/2012/11/blog-post_30.html
-
- 0 replies
- 367 views
-
-
பாவி இவனை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே இறக்க வைக்காதே பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே இவனைப்போல் பாவிகளை இனியேனும் படைத்து வைக்காதே வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ வாய் நிறைந்த பொய்யனுக்கு மூலம் வர வேண்டாமோ கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ காதகனைக் கண்டு மக்கள் காறித்துப்ப வேண்டாமோ கோடி வகை நோய் கொடய்யா சாகும் வரை அழ விடய்யா இப்பிறவி முடிவதற்குள் இவன் கணக்கை முடித்திடய்யா உச்சி மரக்கிளையில் நின்று உயிர் வேரை அறுத்தவன் இவன் பச்சை இளங்கொளுந்தைக்கிள்ளி பாழ் நெருப்பில் எறிந்தவன் இவன் பாவி இவனை மறுபடியும் பிறக்க வைக்காதே ! முகநூல்
-
- 4 replies
- 4.1k views
-