வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
அதிமுகவில் இணையும் நயன்தாரா நடிகை நயன்தாரா விரைவில் அதிமுகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பொதுவாக எந்த விழாவிலும் பங்குபற்றாத நயன்தாரா அண்மையில் அதிமுக சார்பில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கும் விழாவில் சிறப்பு அதிதியாக பங்குபற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அத்துடன் அன்றைய விழாவில் எளிமையான உடையில் வந்து அனைவரையும் வசீகரிக்கவும் செய்திருக்கிறார். இந்த தகவல் அதிமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டதாம். அவர்களும் நயன்தாரா கட்சியில் இணைந்து பணியாற்ற எந்த தடையும் இல்லை என்று சொல்…
-
- 8 replies
- 913 views
-
-
டென்ஷனில் இருக்கிறது திரையுலகம்.இன்னும் யார் யார் பெயர்கள் எல்லாம் வெளிவரப் போகிறதோ என்று பயந்து கிடக்கிறது. காரணம்,ஹைதராபாத்தில் பிடிபட்ட போதை ஆசாமிகள்.தெலுங்கில் பிரபல நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் இருவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட,அவர்களுடன் நைஜீரிய ஆசாமி ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது லேப்டாப்பில் பல நடிகர், நடிகைகளின், வி.ஐ.பி. மகன்களின் தொலைபேசி எண்கள். த்ரிஷா, சார்மி, மதுஷாலினி,காம்னா என்று நடிகைகளின் லிஸ்ட் நீளுகிறது.இந்த நடிகைகள் கடுமையாக இதை மறுத்திருக்கிறார்கள். ‘‘சமீப காலமாகவே திரையுலகில் ராத்திரி பார்ட்டிகளும் ரகசிய விருந்துகளும் அதிகமாகிவிட்டன. இந்த போதை பயங்கரத்துக்கு இதுதான் அடிப்படை காரணம்’’ என்கிறார் திரையுலக…
-
- 0 replies
- 913 views
-
-
சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சுருதிஹாசன் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம். நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். எனது தந்தை உனக்கு எது பிடிக்கிறதோ அதை சுதந்திரமாக செய் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோல் சுதந்திரமாக இருக்கிறேன். அதற்காக கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவது இல்லை. சுதந்திரத்தை நல்லபடியாகவே பயன்படுத்துகிறேன். இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமா…
-
- 0 replies
- 912 views
-
-
நிஜவாழ்க்கை கற்பனையைவிட கிளர்வூட்டுவது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை முழுமையாக உணரவேண்டும் என்றால் உண்மைச் சம்பவங்களில் இருந்து திரையில் விரிந்த ரஷ் பார்க்கவேண்டும். இயக்குனர் ரான் ஹோவர்டின் ஆகச் சிறந்த படம் என்று யு.எஸ்.ஏ டுடே சொல்லியிருக்கிறது. பார்த்தல்தான் புரியும். இரண்டு பார்முலா ஒன் ஓட்டுனர்களுக்கிடையே நிகழும் ஆரோக்கியமான போட்டி விரைந்தோடும் கார்களில் சடுதியில் வரும் மரணம் என படம் தொய்வின்றி பறக்கிறது. இயக்குனர் ரான் ஹோவர்ட் நிக்கி லௌடா என்கிற ஆஸ்திரிய ஓட்டுனருக்கும், ஜேம்ஸ் ஹன்ட் என்கிற பிரிட்டன் ஓட்டுனருக்கும் நடக்கும் தொழில் போட்டியே படம். என்ன விசயம் ஒருவரியில் இப்படி சொல்லிவிட்டு போய்விடாத வண்ணம் செதுக்கப்பட்ட திரைப்படம். …
-
- 0 replies
- 912 views
-
-
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ஆகிய இரண்டு படங்களுமே குறைந்த பட்ஜெட்டில் படமெடுப்பவர்களை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்து இருக்கிறது, குறிப்பாக தயாரிப்பாளர்களை! 50 கோடி, 90 கோடி, 150 கோடி என்கிற ரூபாய் கணக்கில் தயாரிப்பு செலவு எகிறும் படியாக படங்கள் தயாரிக்கப் பட்டு, அவைகள்தான் வெற்றி பெறுகின்றன என்று சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருந்த போதுதான் வெளிவந்தது, மிக குறைந்த பட்ஜெட் செலவுப் படங்களான பீட்சாவும் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படமும். இந்த இரண்டு படமும் வெளிவந்து படம் சூப்பர் ஹிட்டாக, வெற்றிப்பட நாயகனாகி விட்டார் விஜய் சேதுபதி. அதோடு, குறைந்த சம்பளம்தான் விஜய் சேதுபதி கேட்பதுவாம். இதையெல்லாம் விட இன்னொரு விஷயம் விஜய் சேதுபதி பிரபலமான…
-
- 0 replies
- 912 views
-
-
மீண்டும் கோபிகாவை நாடியுள்ளாராம் சேரன். சேரன், சமீபத்தில் மாயக்கண்ணாடி மூலம் பெரும் சரிவைச் சந்தித்தார். இதையடுத்து தனது திறமையை மீண்டும் நிரூபிக்க ஆட்டோகிராப் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தில் மொத்தம் நான்கு நாயகிகள் இருந்தனர். மல்லிகா, கோபிகா, சினேகா, கெஸ்ட் ரோலில் கனிகா என நான்கு பேருடன் நடித்திருந்தார் சேரன். ஆனால் 2ம் பாகத்தில் 2 பேர் மட்டுமே இருப்பார்களாம். கோபிகாவும், கனிகாவும் வருவது போல கதையை உருவாக்கியுள்ளாராம் சேரன். 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும் என கோபிகாவை அணுகியுள்ளாராம். ஆனால் கோபிகா தரப்பிலிருந்து இன்னும் பதில் வரவில்லையாம். வரும் என்ற நம்பிக்கை சேரனுக்கு உள்ளதாம். கோபிகா இப்போது வீராப்பு படத…
-
- 0 replies
- 911 views
-
-
நடைபெற்றுக்கொண்டிருக்கும் 5வது ஐ.பி.எல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஷாருக்கான் மதுபோதையில் சண்டையிட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு மும்பை வான்கடே மைதானத்திற்குள் செல்வற்கு 5 ஆண்டுகள் தடைவிதிக்கப் பட்டுள்ளமைக்கு ஹிந்தி சினிமாத் துறையினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 0 replies
- 910 views
-
-
செவ்வாய்க்கிழமை, 24, மே 2011 (8:29 IST) செல்வராகவனுக்கு பதில் கமல்ஹாசன் டைரக்டு செய்கிறார் கமல்ஹாசன் நடிக்கும் `விஸ்வரூபம்' என்ற புதிய படத்தை செல்வராகவன் டைரக்ஷனில், டெலி போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டது. செல்வராகவன் இப்போது, அவருடைய தம்பி தனுஷ் நடிக்கும் புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் `பிஸி'யாக இருப்பதால், `விஸ்வரூபம்' படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டு வருகிறது. தனுஷ் படத்தை முடிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று செல்வராகவன் உறுதியாக கூறிவிட்டார். அதுவரை கமல்ஹாசனை காத்திருக்க வைப்பதில், தயாரிப்பாளருக்கு உடன்பாடு இல்லாததால், `விஸ்வரூபம்' படத்தை கமல்ஹாசன் டைரக்ஷனில் தயாரிக்க முடிவு செய்தா…
-
- 0 replies
- 910 views
-
-
நல்ல காரியம் ஒன்றிற்காக திருமணத்திற்கு போன் எடுத்து வர வேண்டாம் என அழைப்பு விடுத்த ஜார்ஜ் க்ளுனி !! அமெரிக்க நடிகர் ஜார்ஜ் க்ளுனியும் பிரிட்டனைச் சேர்ந்த அலாமுதீன் ஆகியோரின் திருமணம் வெனிஸ் நகரத்தில் மூன்று நாட்கள் கோலாகளமாக நடைபெற உள்ளது. திருமணத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்களான பிராட் பிட்,ஆஞ்சலினா ஜொலி,டாம் க்ரூஸ் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் மாப்பிள்ளை ஒரு கட்டளை விடுத்துள்ளார். யாரும் செல்போன் எடுத்து வர வேண்டாம் என்பதே அவரின் வேண்டுகோள். திருமணத்தில் எடுக்கப்படும் அனைத்து புகைப்பட உரிமைகளையும் அமெரிக்கன் வோக் என்னும் வார இதழுக்கு விற்றுள்ளார். இதில் கிடைக்கும் பணம் அங்குள்ள சேரிடிக்கு நன்கொடையாக சேறும் என்று தெரிவித்துள்ளா…
-
- 3 replies
- 910 views
-
-
எம்.ஜி.ஆர். படங்களின் பெயர்களுக்கு இன்றும் நல்ல டிமாண்ட். தனது புதிய படத்திற்கு விஜய் எம்.ஜி.ஆர். படத்தின் பெயரையே தேர்வு செய்துள்ளார். விஜய் எம்.ஜி.ஆர்.ரசிகர். அவரது ரசிகராகவே ஒரு படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் பந்தயம் படத்தில் விஜய் நடிக்கவில்லையென்றாலும், விஜய்யின் ரசிகராக வரும் பந்தயம் ஹ“ரோ நிதின்சத்யா விஜய்யின் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்கும் காட்சியொன்று இடம் பெறுகிறது. இதில், விஜய்யை இயக்குனர் பேரரசு இயக்குவதுபோலவும், நிதின்சத்யா அதனை வேடிக்கை பார்ப்பதாகவும் காட்சி அமைத்துள்ளார் எஸ்.ஏ.சி. குறிப்பிட்ட காட்சியில் விஜய் இடம்பெறும் படத்திற்கு எம்.ஜி.ஆர். என்று பெயர் வைத்திருந்தார் எஸ்.ஏ.சி. நிற்க நமது விஷயத்திற்கு வருவோம். வில்லு …
-
- 0 replies
- 910 views
-
-
''பிக்பாஸ் பத்தி இதுவரை தெரியாத ஓர் உண்மை சொல்லவா?’’ - சுஜா சர்ப்ரைஸ் (Video) #BiggBossTamil பலத்த எதிர்பார்ப்புடன் ரசிகர்களை 100 நாள்கள் கட்டிப்போட்ட 'பிக் பாஸ்' வீட்டிலிருந்த ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்தனர். 'பிக் பாஸ்' வீட்டை நம்மால் அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாது. இதில், நமது பார்வைக்குச் சுயநலமானப் பெண்ணாகவும் கடினமான போட்டியாளராகவும் தெரிந்தவர் சுஜா. ஓவியா மாதிரி நடந்துகொள்ள முயற்சி செய்கிறார் என்ற விமர்சனம் சுஜாவை வெகுவாகக் காயப்படுத்தியது. ''ஒருத்தர் இடத்தில் நான் இருக்கேன்னா, அதுக்காக அவரை மாதிரியே நடிக்கிறேன்னு அர்த்தம் கிடையாது. நான் நானாக இருக்கேன். யாரை மாதிரியும்…
-
- 0 replies
- 910 views
-
-
டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்கிறார். இதற்காகத்தான் குறளரசன் சமீபத்தில் தானும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது. டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கினார். 2016-ல் இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்யவுள்ளார் குறளரசன். அதற்காகத்தான் கடந்த பிப்ரவரி …
-
- 2 replies
- 910 views
-
-
ஒரு குப்பை கதை திரை விமர்சனம் வாரம் வாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. ஆனால் பெரிதளவில் சில படங்களுக்கு விளம்பரம் இல்லையென்றாலும் கதையால் ஈர்க்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு குப்பை கதை வெளியாகியுள்ளது. வாருங்கள் குப்பைக்குள் என்ன கிடக்கிறது என கிண்டி பார்க்கலாம். கதைக்களம் படத்தின் ஹீரோ தினேஷ் ஒரு சாதாரண கார்ப்பொரேஷன் தொழிலாளி. குப்பை அள்ளும் தொழில் செய்து வருகிறது. ஒரே ஒரு அம்மாவுடன் கூவத்தில் வாழ்ந்து வருகிறார். எங்கெங்கோ பெண் தேடி அலைந்த இவருக்கு கடைசியில் மலைவாழ் கிராம பெண் மனைவியாகிறார். அதுவும் எப்படி? ஆயிரம் பொய்களை சொல்லி கல்யாணம் செய்வார்களே அது போல தான். தன் கணவர் மீதான வேறொர…
-
- 0 replies
- 909 views
-
-
மனோபாலாஇ சுலக்ஷனாவின் மகன் வினோத். அவரை வினோதமான நோய் தாக்குகிறது. அதாவதுஇ இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துஇ காலம் முழுக்க கற்பனையிலேயே வாழ்வதுதான் இந்நோய். தான் அழகானவன் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் வினோத்தை வாட்டுகிறது. கல்லூரி தோழிகளில் ஒருவர்கூட தன்னைக் காதலிக்கவில்லையே என புழுங்கித் தவிக்கிறார். வினோத்இ திடீரென்று கற்பனையாக ஒரு காதலியை நினைத்துஇ அவருடன் வாழத் தொடங்குகிறார். தங்கள் மகன் இப்படி ஆகிவிட்டானே என்று பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். வினோத்தைப் பரிசோதிக்கும் டாக்டர் நிழல்கள் ரவிஇ ‘இவரை தனியாகவே விடக்கூடாது’ என்று நண்பர்களிடம் எச்சரிக்கிறார். இவரது நோய் குணமாக வேண்டும் என்றால்இ கற்பனையாக உருவகித்துள்ள காதலியின் சாயலில் இருக்கும் பெண்ணைக் கண்முன்…
-
- 0 replies
- 909 views
-
-
முன்னாள் பாலியல் பட நடிகை சன்னி லியோன் பொலிவூட் திரையுலகை தனது கவர்ச்சியினால் கிறங்கடிக்க வைத்துள்ளார். ஜிஸ்ம் 2 திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான சன்னி லியோன் நடிப்பில் அண்மையில் வெளியான ராகினி எம்.எம்.எஸ் 2 திரைப்படம் பெரு வெற்றி பெற்றது. இதனால் சன்னி லியோனுக்கு பொலிவூட் மாத்திரமன்றி தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட படங்கள் குவிகின்றன. ஆனாலும் இப்படங்கள் அனைத்திலும் சன்னி லியோனுக்கு கவர்ச்சிக்கு பயன்படுத்தவே இயக்குனர்கள் விரும்புகின்றனர். இதனால் நடிப்புக்கு முக்கியதுவமிக்க படங்களில் நடிக்க விரும்புவதாக சன்னி லியோன் கூறிவருகிறார். இந்நிலையில் சன்னி லியோனை ராணியாக சிம்மாசனத்தில் அமர வைக்க ஆசைப்பட்டுள்ளார் இயக்குநர் பொபி கான். இவர் இயக்கவுள்ள புதிய படமான லீலாவில் சன…
-
- 3 replies
- 908 views
-
-
‘இனம் காக்க போரிட்ட என் தம்பி கொடியவனா?’இப்படி ஒரு கேள்வியை வைகோ கேட்டிருந்தால் அது அரசியல். கீரா கேட்டால்? ஆமாம்.. இந்த கீரா ‘பச்சை என்கிற காத்து’ படத்தின் இயக்குனர். படத்தில் வரும் ஒரு பாடலில்தான் இப்படி ஒரு வரி. அது மட்டுமல்ல, இன்னொரு பாடலில் ‘தரை தட்டி நிக்குது வணங்காமண் கப்பல்’ என்று இன்னொரு வரி. படத்தின் பாடல்களும், காட்சிகளும் இது வேறு மாதிரியான படம் என்கிற உணர்வை வரவழைக்கிற அதே நேரத்தில் இப்படியெல்லாம் பாடல் வரிகள் வருகிறதே, படம் இலங்கை பிரச்சனை பற்றியதா என்ற கேள்வியை எழுப்ப தோன்றும்தானே? தோன்றியது. ஆனால் கீராவின் பதிலில் ஆவேசம் சற்று துக்கலாகவே இருந்தது. நாமெல்லாம் தமிழர்கள். கொஞ்சம் சூடு சுரணை மிச்சம் இருக்கு என்பதை காட்டதான் அந்த வரிகள். மற்றபடி இந்த …
-
- 0 replies
- 908 views
-
-
-
- 3 replies
- 908 views
-
-
நவம்பர் 26ம் தேதி ராகுல்சர்மா - அசின் திருமணம் பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மா மற்றும் நடிகை அசின் இருவருக்குமான திருமணம் நவம்பர் 26ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அசின். அப்படத்தைத் தொடர்ந்து 'சிவகாசி', 'மஜா', 'வரலாறு', 'போக்கிரி', 'கஜினி' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். 'கஜினி' இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட போது தமிழில் நடித்த அதே பாத்திரத்தில் இந்தியிலும் நடித்தார். 'கஜினி' இந்தி ரீமேக்கைத் தொடர்ந்து, இந்தியில் பல வாய்ப்புகள் வரவே அங்கேயே நடித்து வந்தார். அப்போது பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவுக்கும் அசினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. …
-
- 6 replies
- 908 views
- 1 follower
-
-
விமர்சனம்: இறுதிப் போரில் பாலை உலகம் முழுவதும் நிகழும் முக்கிய நிகழ்வுகளை, கடந்த காலப் பதிவுகளை உடனுக்குடன் பதிவு செய்வதில் ஹாலிவுட் திரைக்கலைஞர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பவர்கள் என்றாலும் அவர்களுக்கு நாமும் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்திருக்கிறது ம.செந்தமிழனின் “பாலை’ திரைப்படம். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடி தமிழினத்தின் வரலாற்றைப் பேசும் இந்தப் படத்தில் உட்கருவாக ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சொல்லியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். காட்சிக்கு காட்சி விரியும் பழந்தமிழர்களின் பண்பாடும் வாழ்வியலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. உலகின் பெரும்பாலான பகுதிகளில் விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடிக்க…
-
- 1 reply
- 908 views
-
-
விபச்சார விடுதி சென்னைக்கு தேவையா??
-
- 0 replies
- 907 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 57 நிமிடங்களுக்கு முன்னர் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீர' பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை செலுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் தொடந்த வழக்கில் இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான வழக்கில் என்ன நடந்தது? காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் தொடர்வது ஏன்? டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் (Faiyaz Wasifuddin Dagar) மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 'சிவ ஸ்துதி…
-
-
- 15 replies
- 907 views
- 1 follower
-
-
”என் காதல் உண்மையானது” தற்கொலை செய்த சாய் பிரசாந்தின் உருக்கமான கடிதம்! சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்கத் தொடங்கியவர் சாய்பிரசாந்த். நேரம், வடகறி என முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடிக்கத் துவங்கிய நிலையில் அவரது தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தனது மனைவி சுஜிதாவின் மீது வைத்திருந்த அதீத காதலும், மனைவியின் பிரிவுமே அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது. தற்கொலை செய…
-
- 3 replies
- 907 views
-
-
இயக்குனர் சங்கருக்கு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதை தட்டிச் சென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிஎன்என் ஐபிஎன் லைவ் நியூஸ் ஏஜென்ஸி சிறந்த இந்தியர்கள் என்ற பெயரில் விருதுகளை அளித்துவருகிறது. அரசியல், விளையாட்டு, வர்த்தகம், பொது சேவை, மற்றும் பொழுதுபோக்கு என ஐந்து துறைகளுக்கும் தனித்தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 6 பேருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. பின்பு வாக்குகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். இந்த ஆண்டு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதுக்கு, அமீர் கான், ரஜினிகாந்த். சல்மான் கான், இயக்குனர் ஷங்கர், ஷிலாங் செம்பர் நிறுவனம் மற்றும் விக்ரம் ஆதித்தியா பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் இந்திய சினிமாவை உலக அளவிற்…
-
- 1 reply
- 906 views
-
-
2006ம் ஆண்டுக்கான சினிமா முடிவுகள், அஜீத் முன்னிலையில். Thursday, 11 January 2007 ஒவ்வொரு வருடமும் தமிழ்சினிமா.காம் இணையதளம் நடத்தி வரும் சினிமா தேர்தல் அனைத்து தரப்பினராலும் கவனிக்கப்படுவதை வாசகர்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த முறையும் 2006-ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரைப்பட துறையின் பல்வேறு அங்கங்கள் குறித்து இவ் இணையதள ரசிகர்களின் எண்ணங்களை பதிவு செய்துள்ளனர். கடல் அலை போல் வந்து குவிந்த வாக்குகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம் கீழே வருமாறு- சிறந்த நடிகர் அஜீத் குமார் 49.9 சதவீதம் விஜய் 19.8 சதவீதம் சூர்யா 6.4 சதவீதம் மற்றவர்கள் 26 சதவீதம் சிறந்த நடிகை அசின…
-
- 0 replies
- 906 views
-
-
ஆட்டோகிராஃப் என்பது வெறும் கையெழுத்தல்ல. அது ஓர் ஆவணம். ஒரு மனிதன் பற்றிய ஞாபகங்களைக் கிளறிவிடும் அடையாளச் சின்ன பொதுவாக, மனதுக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின்களிடோமோ அல்லது பிரபலங்களிடமோ ஆட்டோகிராஃப் வாங்க விரும்புவது நமது இயல்பு மட்டுமல்ல, கனவும்கூட. என்றாலும், நம் எல்லோருக்குமே அந்த கனவு எளிதில் நிறைவேறிவிடுவதில்லை. அதிலும் குறிப்பாக, எந்நேரமும் ஷூட்டிங், ஷூட்டிங் என்றே ஓடிக்கொண்டிருக்கும் சினிமா ஸ்டார்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. ஆனால், அபிமான நட்சத்திரங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க …
-
- 0 replies
- 906 views
-