Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஓவியா - சிம்புவின் ’மரண மட்ட' பாடல்! சிம்பு - ஓவியா இணைந்து, புத்தாண்டு ஸ்பெஷல் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். சிம்பு இசையமைத்திருக்கும் இந்த புத்தாண்டுப் பாடலை ஓவியா மற்றும் ஹரிஷ் பாடியுள்ளனர். இப்பாடலின் வரிகளை சிம்பு, மிர்ச்சி விஜய் இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலுக்கு ’மரண மட்ட' என்று தலைப்பு கொடுத்துள்ளார் சிம்பு! https://www.vikatan.com/news/cinema/112386-oviya-simbus-newyear-album.html

    • 1 reply
    • 291 views
  2. Started by akootha,

    தமிழ் திரையுலகில் இனி அமலா அலை அடித்தாலும் ஆச்சர்யமில்லை! மைனா படத்திற்கு பிறகு முக்கியமான படங்களில் எல்லாம் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் அமலா. களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்கவிருக்கிற புதுப்படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பது தெரிந்தது. இப்போது மேலும் ஒரு முக்கியமான படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் இவர். மதராசப்பட்டினம் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில்தான் இந்த சந்தர்ப்பம். விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இன்னொரு முக்கியமான கதாபாத்தில் நடிக்க அமலாவை கேட்டாராம் விஜய். இது விக்ரமின் ஒப்புதலோடுதான் நடந்திருக்கிறது. சிந்து சமவெளி பார்த்த பின் இந்த கதாபாத்திரத்தற்கு இவர் பொருத்தம் என்றாராம் வ…

    • 7 replies
    • 1.6k views
  3. தங்கள் காதலை வளர்க்க சென்னையை விரும்பும் ஐஸ்வர்யாராய்-அபிஷேக்பச்சான் ஜோடி! சென்னையில்., ஒரே திரையரங்கில் அடுத்தடுத்து இரண்டு படம் பார்த்து ரசித்துள்ளது!! முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயும், இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகனும் இந்தி நடிகருமான அபிஷேக்பச்சனும் ஒருவரையருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர். மும்பை நகரில் ஏதாவது ஒரு விழாவில் ஐஸ்வர்யாராய் கலந்து கொ£ள்கிறார் என்றால் அங்கே அபிஷேக்பச்சனும் தவறாமல் ஆஜராகி விடுவார். "ஐஸ்-அபிஷேக் ஜோடி, நாகரீக ரசிகர்கள்(!) நிரம்பிய சென்னையை இடையூறு இல்லாமல் தங்கள் காதலை வளர்க்கவே தேர்ந்தெடுத்துள்ளதாக மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..." இதே போன்று அமிதாப் வீட்டு விசேஷங்களிலும் ஐஸ்வர்யாராய்…

  4. மைனா - தன் முகவரியை தேடி அலைந்த மைனா இன்று ராட்சஸ சிறகுகள் விரித்து வெற்றி வானில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதுவரை ஆறு படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் தன் ஏழாவது படத்தில் முதல் முறையாக வெற்றியின் விரல்களை முத்தமிட்டுள்ளார். மைனா ரீலிசுக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்திய படம். இந்தப் படம் பார்த்ததும் நான் இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னதும்... தூங்க முடியாத அளவிற்கு அப்படி என்ன படம் ? என்று கேள்விகள் கிளம்பின. மைனா இசை வெளியீட்டில், படம் பார்த்ததும் ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியில் நான் நிம்மதியாக தூங்கினேன் என்று கமல்ஹாசன் சொன்னார். இதன் சிறப்புக் காட்சியில், படம் பார்த்து வெளியே வந்த பாலா என்னால் பேச முடியவில்லை தொண்டை அடைக்கிறது என்று ச…

  5. ஒரு வழியாக 3 இடியட்ஸ் திரைப்படத்தை மீளாக்கம் செய்வதை உறுதி செய்துள்ளார் சங்கர். இந்தப் படத்துக்கான முதல் பாடல் முடிந்துவிட்டது. ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு, சங்கர் இயக்கத்தில் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், கிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தை விஜய்யை வைத்து சங்கர் மீளாக்கம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனாலும் சங்கர் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தார். இப்போது இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட், படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலரும் இந்தப் படத்தில் தங்கள் பங்களிப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சங்கரும் இந்தப் படத்தை இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ளா…

    • 0 replies
    • 603 views
  6. - சென்னை உயர் நீதிமன்றத்தில் நாட்டுக்கு மிக முக்கியமான ஒரு வழக்கு போடப்பட்டது. “இனிமேல் 18 வயதுக்குக் குறைவான பெண்களை ஹீரோயினாக போட்டு படம் எடுக்கக் கூடாது’ என்பதே அது. அந்த ஹீரோயின்களை முத்தக் காட்சிகளில் நடிக்க வைப்பதும் கிளாமர் காட்ட வைப்பதும் “பெண்களை தவறாகக் காட்டுவதை தடை செய்யும் சட்டத்தின்’ கீழ் வருமாம் (என்னமா யோசிக்கிறாங்கப்பா?) - ஆனால் அந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. சரி, அதெல்லாம் நமக்கு எதுக்கு? நம்ம ஹீரோயின்களோட பர்த்டேட் என்னனு ஆராய்ச்சி பண்ணினோம். (வேற வேலையே இல்லையானு கேட்கக் கூடாது. வேணா ஒரு பேங்க் வெச்சுக் கொடுங்க பார்த்துக்குறோம்.) - லட்சுமி மேனன்: 19.05.1996 (18) கார்த்திகா: 27.06.1992 (22) துளசி: 25.10.1997 (17) (இவர்கள் மூவர் பேரும…

  7. "நயன்தாரா, த்ரிஷா எடுத்த முடிவு சரிதான்!" - கீர்த்தி சுரேஷ் ''இந்தப் படத்துக்குப் பிறகு இனி சீரியஸாதான் நடிப்பீங்களானு கேட்கிறாங்க. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் சார் படத்துல நடிக்கிறேன், 'சண்டக்கோழி 2', 'சாமி 2' ஷூட்டிங் முடியிற ஸ்டேஜ்ல இருக்கு. அதேசமயம், 'நடிகையர் திலகம்' மாதிரி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் கிடைக்கிறது கஷ்டம். ரெண்டும் இருக்கட்டும்னுதான் நினைப்பேன்!" - 'சாவித்திரி' கேரக்டர் கொடுத்திருக்கும் உற்சாகம், கீர்த்தி சுரேஷ் முகம் முழுக்கத் தெரிகிறது. யெஸ்... கமர்ஷியல் கதைகளிலேயே பார்த்துப் பழகிவிட்ட கீர்த்தி சுரேஷை 'நடிகையர் திலகம்' மூலம் நாம் சாவித்திரியாகப் பார்க்கப்போகிறோம். "இன்றைய தலைமுறையினருக்கு நடிகை சாவி…

  8. ரஜினிகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை! monishaJan 28, 2023 21:55PM நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக பல்வேறு படங்களில் நடித்து என்றும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெயர், புகைப்படங்கள், குரலை அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என ரஜினிகாந்த சார்பில் அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பரிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய சினிமாவில் குறிப்பாகத் தென் இந்திய சினிமாவில் சிற…

  9. சரத்குமாருக்கு நேற்று பாராட்டு விழா! நடத்தியது அரிமா சங்கம். நூறு படங்களில் நடித்ததற்காக நடத்தப்பட்ட இந்த விழா மினி குடும்ப விழாவாக அரங்கேறியது. விழாவில் சரத்குமாருக்கும் ராதாரவிக்கும் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன. "என் கணவரைப் பற்றி நானே புகழ்ந்து கூறக் கூடாது" என்று ஆரம்பித்த ராதிகா சரத்குமார் பற்றி புகழ்மாலை படிக்கத் தொடங்கினார். விமானநிலையத்தில் ராதிகா சரத்குமாரை சந்தித்தது, நீங்களே ஹீரோ போலதான் இருக்கீங்க, நீங்களே நடிக்கலாமே என்று அட்வைஸ் செய்தது என பல மலரும் நினைவுகள் ராதிகாவின் பேச்சில் இடம் பெற்றது. "சரத்குமாரால்தான் 'வேட்டையாடு விளையாடு'படம் ரிலீஸானது" எனறு கமல் முன்பு குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய ராதிகா, நிஜவாழ்க்கையிலும் சரத் நாட்டமைதான் என்று கூற சரத் முக…

  10. தமிழ்ப்பட உலகின் தந்தை கே.சுப்பிரமணியம் பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரியை அறிமுகப்படுத்தியவர். கே.சுப்பிரமணியம் "காளிதாஸ்" படம் வெளிவந்தபின், வரிசையாகப் படங்கள் வரத்தொடங்கின. தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் கட்டப்பட்டன. புகழ் பெற்ற நாடகங்களையெல்லாம் சினிமாவாகத் தயாரிக்கத் தொடங்கினார்கள். அவை பெரும்பாலும் புராணக் கதைகள். சினிமா என்பது சக்தி வாய்ந்த சாதனம். புகழும், பணமும் ஒருங்கே வரக்கூடிய துறை. எனவே, படத்தயாரிப்பில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம், படித்த இளைஞர்கள் சிலருக்கும் ஏற்பட்டது. அப்படி படத்தொழில் மீது ஆர்வம் கொண்டவர்களில் கே.சுப்பிரமணியமும் ஒருவர். தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் 1904_ம் ஆண்டு …

    • 4 replies
    • 2.3k views
  11. முதல் பார்வை: டுலெட் உதிரன்சென்னை வாடகைக்கு வீடு தேடும் படலத்தில் அவதிப்படும் ஒரு குடும்பத்தின் கதையே 'டுலெட்'. சினிமா துறையில் உதவி இயக்குநராக இருப்பவர் சந்தோஷ். அவரது மனைவி ஷீலா. இவர்களின் 5 வயது மகன் தருண் யு.கே.ஜி. படிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஆதிரா அடுத்த மாதத்துக்குள் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று கறாராகச் சொல்கிறார். சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சந்தோஷ்- ஷீலா தம்பதியினர் சென்னை முழுக்க வாடகை வீடு தேடி அலைகிறார்கள். சாதி, மதம், உணவுப் பழக்கம், வேலையின் நிமித்தம் என்று பல்வேறு காரணங்களால் வீடு கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பரின் ஆலோசனைப்படி சினிமாவில் வேலை செய்வதை மறைத்து வீடு தேடுகிறார் சந்தோஷ். ஆனால், அப்போதும் ஒரு…

  12. இளம் இயக்குநர்களில் தமிழ்ப்பற்று உடைய ஒரே ஒரு இயக்குநர் சீமான் என்பது தெரிந்ததே. தற்போது தமிழில் வரும் பல படங்கள் தமிழ் படங்களாகவே இருப்பதிலை என்பது இவரின் பெரிய வருத்தம். இவர் மாதவன், பாவனாவை வைத்து இயக்கி வரும் படம் வாழ்த்துகள். இப்படத்தில் ஆங்கில வசனங்களே இல்லை என்பது தெரிந்த விஷயமே. 'ஹலோ, குட் மார்னிங்!' என்ற ஆங்கில வார்த்தைகள் மட்டும் படத்தில் ஒரே ஒரு முறை வருகின்றனவாம். படப்பிடிப்பு தளத்தில் கூட சீமான் தமிழையே பயன்படுத்துகிறார். ஸ்டார்ட் கேமரா, கட் என்பதையும் ஆரம்பி, நிறுத்து என்றே சொல்லி வருகிறார். இதனால் பாவனா ஒன்றும் புரியாமல் இருந்து வருகிறார். இப்படியாவது நாயகிகள் நல்ல தமிழை தெரிந்து கொள்ளட்டும். (நல்ல விஷயம்தானே!) நன்றி நக்கீரன்

    • 0 replies
    • 958 views
  13. அல்டிமேட் ஸ்டார் அஜீத்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 2008ம் ஆண்டு அஜீத்துக்கு அட்டகாசமான ஆண்டாக மலர்ந்துள்ளது. கர்ப்பிணியாக இருந்த அஜீத்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினிக்கு சென்னை மருத்துவமனையில் இன்று (ஜனவரி 3) அதிகாலை அழகான பெண் குழந்தை பிறந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த ஷாலினி, அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று மாலை 6 மணிக்கு அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு இரவுக்குள் குழந்தை பிறக்கலாம் என டாக்டர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஷாலினி. சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நல்ல நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பிற…

    • 13 replies
    • 4.5k views
  14. மேலும் புதிய படங்கள்நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ள கே.எஸ்.அதியமான், மீண்டும் ஒரு சென்டிமென்ட் கதையுடன் களம் இறங்கியுள்ளார். ஆனால் திரைக்கதை என்ற ஏணி சரியாக இல்லாததால் சறுக்கியிருக்கிறார். அழகிய லண்டன் நகரப் பின்னணியில் கதை நகருகிறது. அழகான மனைவிக்கும், முன்னாள் காதலிக்கும் இடையே சிக்கி தவிக்கும் நாயகனாக ஷாம். அழகிய மனைவியாக சந்தியா, முன்னாள் காதலியாக குத்து ரம்யா. லண்டன் நகரின் இளம் மாடல் அழகிகளில் ஒருவர்தான் குத்து ரம்யா. எதேச்சயாக சாப்ட்வேர் என்ஜீனியரான ஷாமை சந்திக்கிறார். காதல் கொள்கிறார். உலகின் நம்பர் ஒன் மாடலாக வர வேண்டும் என்பதே குத்து ரம்யாவின் லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறும் வாய்ப்பும் வருகிறது. ஆனால் அதற்கு ரம்யாவின் க…

  15. பட மூலாதாரம்,NUTAN AUDIO KANNADA படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட கன்னட மொழி திரைப்படம் 'லவ் யூ' கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 21 மே 2025, 03:08 GMT செயற்கை நுண்ணறிவின் பயன்கள் குறித்து பல்வேறு பட்டியல்கள் போடப்பட்டாலும், வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில், எத்தனை பேரின் வேலைகள் இந்த தொழில்நுட்பத்தால் பறிபோகும் என்ற அச்சமே ஏ.ஐ (AI) தொடர்பான விவாதங்களின் முக்கிய அம்சமாக உள்ளது. அப்படியிருக்க, முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் உதவியால் உருவாக்கப்பட்ட ஒரு கன்னட மொழி திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. 'லவ் யூ' எனப்படும் அந்த திரைப்படம், வெறும் 10 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்டது. 95 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படத்தில், ஏஐ இசையம…

  16. விமர்சனம் : மதராஸி! 7 Sep 2025, 11:07 AM சிவகார்த்திகேயன் – முருகதாஸ் ‘காம்பினேஷன்’ திருப்தியளிக்கிறதா? முதல் படமான ‘தீனா’வில் தொடங்கி ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘ஏழாம் அறிவு’ என்று வித்தியாசமான ‘ஆக்‌ஷன்’ படங்களைத் தந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இடையே ‘கத்தி’, ‘சர்கார்’ என்று ‘ப்ளாக்பஸ்டர்’கள் தந்தாலும் ‘ஸ்பைடர்’, ‘தர்பார்’ படங்களில் சரிவைச் சந்தித்தார். சமீபத்தில் இந்தியில் சல்மான்கானை நாயகனாகக் கொண்டு இவர் தந்த ‘சிக்கந்தர்’ பெருந்தோல்விக்கு உள்ளானது. இந்த நிலையில் தற்போது தியேட்டர்களில் ‘மதராஸி’ வெளியாகியிருக்கிறது. இதில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இவர்களது காம்பினேஷன் எதிர்பார்ப்பை உருவாக்கினாலும், அது மிகப்பெரியதாக மாறவில்லை. அது ஏன்? தியேட்ட…

  17. இலைமறைகாயாக…தமிழ் சினிமாவும் பாலியல் கதையாடல்களும் - மோனிகா 1998ம் வருடம் கும்பகோணத்தில் “நிறப்பிரிகை” பத்திரிக்கையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில் சினிமா சம்பந்தப்பட்ட பல்வேறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட சில அமர்வுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் “கவர்ச்சி” நடிகைகளைப் பற்றி பேச்சு எழுந்தது. அந்த நிகழ்வுக்கு சமீபத்தில் நடிகை சிலுக்கு சுமிதாவும் மரணமடைந்திருந்ததால் கட்டுரையாளர்களும் பங்கேற்பாளர்களுமான ஆண்கள் பலர் எழுந்து கவர்ச்சி என்னும் அம்சம் பாலியல் தகவமைப்புகளுக்கு எவ்வளவு அவசியமானது என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது கவர்ச்சி நடிகைகளுக்கு மறுக்கப்பட்டுவரும் அங்கீகாரமும் அவர்கள் குறித்த எள்ளலும் குறித…

  18. சென்னையில் நாளை ரஹ்மானின் இசை மழை! ஜெயா டிவிக்காக நாளை 29-ம் திகதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான். தாய் மண்ணே வணக்கம் என்ற பெயரில் நடக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. ஆஸ்கர் விருது பெற்ற பின் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயா தொலைக்காட்சிக்காக உள்ளூரில் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுவே. இதற்கு முன் தரமணியில் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் ரஹ்மான். அதன் பிறகு இப்போதுதான் தமிழகத்தில் நடத்துகிறார். இந்நிகழ்ச்சியில் உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ரோஜா முத…

  19. ஒரு படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்துவிட்டு மீடியாக்காரர்களுக்கு திடீரென முத்தம் கொடுத்த நடிகை சார்மி குறித்துதான் தற்போது ஆந்திர படவுலகம் முழுவதும் பேச்சு. என்ற படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்த நடிகை சார்மி, மேடையில் ஏறினதும் திடீரென மீடியாக்காரர்கள் பக்கம் திரும்பி, பறக்கும் முத்தத்தை கொடுத்தார். சிறிது நேரம் மீடியா நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தான் மீடியா நபர்களை மிகவும் விரும்புவதாகவும், அவர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகவும் கூறிய சார்மி, மீடியாவின் தயவில்தான் தான் இவ்வளவு பெரிய நடிகையாக உயர்ந்ததாகவும் குறிப்பிட்டார். நடிகை சார்மி நடித்த நான்கு படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே மீடியாவின் கடுமையான விமர்சனம்தான். இ…

    • 1 reply
    • 664 views
  20. பெரிய அளவிலான பர்பாமென்ஸ் இல்லை என்றபோதும், எப்படியோ முன்னணி நடிகை இடத்தை எட்டிப்பிடித்து விட்டார் ஹன்சிகா. அதோடு முன்னணி நடிகர்களின் படங்களாகவும் கைவசம் வைத்திருக்கிறார். அதிலும் சில நடிகர்கள் ஹன்சிகா வேண்டும் என்று அவருக்காக நேரடியாகவே சிபாரிசு செய்கிறார்களாம். அதன்காரணமாக, இங்குள்ள நடிகைகள் ஹன்சிகாவை நெருங்கவே முடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அதோடு, அவருக்கு போட்டியாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளும் தெலுங்கு தேசத்தில் ஐக்கியமாகி விட்டதால், இப்போது போட்டியே இல்லாத களத்தில் வாள் வீசிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. ஆனால், அவருக்கு ஆபத்து காஜல் உருவத்தில் விரைவில் வரப்போகிறது, துப்பாக்கியைத் தொடர்ந்து ஆல் இன் ஆ…

    • 0 replies
    • 394 views
  21. தமிழ் சினிமா 2016: இணையத்தைக் கலக்கிய 15 ட்ரெய்லர்கள் 2016-ம் ஆண்டில் சமூக வலைதளத்தில் பலராலும் பேசப்பட்டு, பகிரப்பட்ட கவனம் ஈர்த்த ட்ரெய்லர்களின் பட்டியல் இது. தமிழ் சினிமா 2016-ல் கமல், அஜித் இருவரைத் தவிர இதர நடிகர்களின் படங்கள் வெளியாகின. ஒரு படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவதே ட்ரெய்லர்கள்தான். அந்த வகையில் ட்ரெய்லர் மூலமாக பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய படங்களின் பட்டியல் ட்ரெய்லர்களுடன்... ஜில் ஜங் ஜக் மிருதன் காதலும் கடந்து போகும் தெறி 24 இறைவி …

  22. பிரபாகரன்-துசரா பீரிஸின் திரைப்படம்:யமுனா ராஜேந்திரன் I பிரபாகரன் (Pirabakaran : in sihalese language : 2007) திரைப்படம் அதனது தகுதிக்கும் மீறிய விளம்பரம் பெற்ற திரைப்படமாக இருக்கிறது. தமிழகத்தில் சென்னையின் பிரசாத் ஸ்டூடியோவில் இந்தத் திரைப்படம் பிராஸஸிங்கில் இருந்தபோது, அதனது இயக்குனர் துசரா பீரிஸ், தமிழக திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையில் சென்ற தமிழீழ ஆதரவாளர்கள் குழவினரால் தாக்கப்பட்டார். உடைகள் கிழிபட்டு இரத்தக் காயப்படுத்தப்பட்ட அவர் மருத்துவமனையில் மார்பின் குறுக்கே உடலுக்குக் கட்டுப் போட்டபடியிலான போஸில் தமிழகப் பத்திரிக்கைகளுக்கும் இலங்கைப் பத்திரிக்கைகளுக்கும் நேர்முகங்கள் கொடுத்தார். பிரபாகரன் படத்தின் பிரதிகள் சென்னையிலிருந்து வெளியேறக் கூடாது…

  23. காமசூத்ரா வழங்கிய இந்தியாவுக்கு நிர்வாணம் ஒன்றும் புதிதில்லையே!: பிளேபாய் புகழ் செர்லின் சோப்ரா ஸ்டேட்மெண்ட்! செர்லின் சோப்ராவைத் தெரியாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா? இருந்தால் அது அதிசயம்... செர்லின் ஒரு மாடல், பாடகி, பாலிவுட் நடிகை என்பதைத் தாண்டி 2012 ஆம் ஆண்டில் உலகப் பிரசித்தி பெற்ற பிளே பாய் பத்திரிகையின் அட்டையில் இடம்பெற்ற முதலும் கடைசியுமான ஒரே இந்திய நடிகை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். பிளேபாய் பத்திரிகையின் அட்டையில் ஷெர்லின் அளித்த நிர்வாண போஸுக்குப் பின் உலகம் முழுக்க ஷெர்லின் புகழ் பரவியது. அதைத் தொடர்ந்து 2013, டிசம்பர் மாதம் எம…

  24. 'ஜல்சா' திரைப்படம்: செரிப்ரல் பால்சியுடன் பாலிவுட்டில் ஜொலிக்கும் சூர்யா காசிபட்லா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PRIME VIDEO படக்குறிப்பு, ஜல்சா திரைப்படத்தில் நடித்த வித்யா பாலன் மற்றும் ரோஹிணி அத்தங்காடியுடன் சூர்யா காசிபட்லா. சமீபத்தில் வெளியான 'ஜல்சா' பாலிவுட் திரில்லர் திரைப்படத்தில் செரிப்ரல் பால்சியால் (பெருமூளை வாத நோய்) பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா காசிபட்லா, தன் நிஜ வாழ்க்கையில் தினந்தோறும் அத்தகைய பாதிப்புடன் வாழ்ந்து வருபவர். ஆனால், உலகின் மிகப்பெரிய திரைத்துறையான பாலிவுட்டில் அவரை நடிக்க வைப்பதென்பது, எல்லோருக்கும் வாய்ப்பளிப்பதில் அரிதான ஒரு நிக…

  25. நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி.. கவலைக்கிடம்! Posted by: Shankar Published: Monday, March 31, 2014, 10:44 [iST] சென்னை: பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த மனோரமா கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த அவரை மருத்துவர்கள் சிகிச்சையளித்துக் காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து படங்களில் நடிக்கவும் தயாரானார். ஆனால் இப்போது மீண்டும் உடல்நிலை மோசமடைந்துள்ளது …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.