Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. புத்தாண்டின் முதல் சுப நிகழ்ச்சியாக தேவயானி ராஜகுமாரன் தம்பதிகள் இணைந்து நடித்த திருமதி தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அரங்கேறியது. ஜெயா தொலைக்காட்சிக்காக நடந்த வீ4 விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நடுவில் இந்த நிகழ்ச்சியையும் வைத்துக் கொண்டார் ராஜகுமாரன். எவர்கிரீன் நாயகி தேவயானியின் 75 வது படம் என்ற அடையாளத்தோடும் பெருமிதத்தோடும் நடந்த இந்த நிகழ்வு, ராஜகுமாரனை பொருத்தவரை இன்னொரு அதிர்ஷ்டம். (முதல் அதிர்ஷ்டம் தேவயானி என்பதை நாம் சொல்ல தேவையில்லை) இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். மனைவியுடையான் பைனான்சுக்கு அஞ்சான் என்பதை தட்டு தடுமாறி நிரூபித்த ராஜகுமாரன், 'இப்ப தேவயானி மேடம் பேசுவாங்க' என்று பவ்யம் காட்டியதையெல்லாம் வெகுவாக ரசித்தது கூட்டம். …

  2. 2012 இல் அதிக வசூல் குவித்த ஆங்கிலத் திரைப்படங்களில் டிஸ்னி தயாரித்த 'The Avengers', லயன்ஸ்கேட் தயாரித்த 'The Hunger Games' என்பன முக்கியமானவை. சுமார் 220 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்ட The Avangers 607.2 மில்லியன் அமெரிக்க டாலர் குவித்தது. 152.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட The Hunger Games 403.8 மில்லியன் டாலருக்கு வசூல் குவித்தது. இவற்றை விட The Lorax, 21 Jump Street, Journey 2: The Mysterious Island, Chronicle என்பனவும் நல்ல படங்களாக பெயர் வாங்கின. 2013ம் ஆண்டுக்கான ஹாலிவூட் திரையுலகம் என்ன மாதிரியான திரைப்படங்களுக்காக காத்திருக்கிறது என தற்போது பார்ப்போம். கடந்த 80 வருடங்களாக நாம் பார்த்து வரும் அனைத்துவகையான திரைப்படங்களும் செக்கனுக்கு 24 Fram…

  3. எல்லோரும் புத்தாண்டை சரக்கு, கூத்து, கும்மாளம் என குஷியோடு கொண்டாடிக் கொண்டிருக்க, நம்ம ‘தல’ அஜித் மட்டும் மிகவும் பொறுப்பான தனது புதிய படத்துக்கான படப்பிடிப்பில் கலந்து கொளவதற்காக மும்பைக்கு கிளம்ப ரெடியாகிக் கொண்டிருக்கிறார். அஜித் நடித்து வரும் 53-வது படத்தை டைரக்டர் விஷ்ணுவர்தன் டைரக்ட் செய்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்தப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, ராணா, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அதுல்குல்கர்னி, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடித்து வருகிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்தப்படத்தின் 15 நாட்கள் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கிறது. இந்தப்படப்பிடிப்ப…

  4. சசிக்குமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஹீரோயினாக நடித்த தெலுங்கு நடிகை சுவாதி சொந்தமாக புரொடக்‌ஷன் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறாராம். தமிழில் சசிக்குமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சுவாதி தெலுங்கில் பிரபல ஹீரோயின்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். அந்தப் படத்துக்குப் பிறகு அதே சசிக்குமாரின் ‘போராளி’ உட்பட ஒன்றிரெண்டு தமிழ்ப் படங்களில் மட்டும் நடித்து விட்டு மீண்டும் அவரது சொந்த ஏரியாவான ஆந்திராவுக்கே போய்விட்டார். ஆந்திராவில் சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளினியாக வாழ்க்கையை ஆரம்பித்த சுவாதி இப்போது சில தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கிடையே புதிதாக படங்களை தயாரிக்க முடிவெடுத்திருக்கும் அவர் ஒரு புரொடக்‌ஷன் கம்பெனி …

  5. டைரக்டர் விஜய் டைரக்‌ஷனில் ‘இளையதளபதி’ விஜய் ஹீரோவாக நடித்து வரும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத புதிய படத்துக்காக மும்பையிலுள்ள பிஸியான ஏரியாவான மாஹிம் ஏரியாவை செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் டைரக்டர் விஜய். ‘துப்பாக்கி’ படத்துக்குப் பின் இளையதளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பை மும்பையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்திய டைரக்டர் விஜய் அந்தப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பையும் மும்பையில் எப்போதுமே பிஸியாக இருக்கும் பிரபல ஏரியாவான மாஹிம் ஏரியாவில் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்தப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தினால் ரசிகர்களால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று போலீஸார் எச்ச…

  6. கும்கியின் வெற்றியில் முதல் பலனை அனுபவிப்பது அதன் ஹீரோ விக்ரம் பிரபு தான். ஏற்கனவே எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் 'இவன் வேறமாதிரி' என்ற படம் துவங்கப்பட்டு சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது 'தூங்கா நகரம்' படத்தை இயக்கிய கௌரவ் இயக்கத்தில் யூடிவி தயாரிப்பில் 'சிகரம் தொடு' என்ற படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். மற்ற டெக்னீஷியன்கள், நடிகர் நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. விக்ரம் பிரபுவும் இன்னொரு கார்த்தி போல முதல் பட வெற்றியில் சிகரத்தை தொட்டு விட்டார். வாழ்த்துக்கள் அவருக்கும், கௌரவ்விற்கும். http://www.soundcameraaction.com/cinema-news/item/1187-vikram-prabhu-signs-3rd-film-with-utv-titled-sigaram-thodu

  7. தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று இரண்டு முறை திருமணம் புரிந்து மணமுறிவும் கண்ட நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் பிரபல ஊடகமொன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் "திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை; நான் திருமணமே செய்யாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னோடு வாழ்ந்த வாணி, சரிகா ஆகியோரின் வசதிக்காக திருமணம் செய்யவேண்டிவந்தது" என்று கூறியுள்ளார். "சேர்ந்துவாழ்தல் (லிவிங் டுகெதர்) முறைக்கு வாணி ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்; அச்சமயம் அவரை ஒப்புக்கொள்ள வைக்கும் நிலையிலும் நான் ஆயத்தமாக இல்லை" என்றும் கமல் கூறியுள்ளார். மேலும் "சரிகாவுடனான வாழ்க்கை 17 ஆண்டுகள் நீடித்தது ஆச்சரியம் தான். 12 ஆண்டுகள்தான் நீடிக்கும் என்று கருதியிருந்தேன். பிள்…

  8. தமிழகத்தில் திரையரங்குகளை நம்பி சுமார் 30 இலட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும், 3,000 திரையரங்குகள் இருந்த இடத்தில் இப்போது வெறும் 1,500 திரையரங்குகள் தான் உள்ளன. இந்த நிலை நீடித்தால் விரைவில் தமிழகத்தில் திரையரங்குகளே இல்லாமல் போகும்!, என்பது திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் வாதம். விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் வெளியிடும் தனது முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் டி.டி.ஹெச். மூலம் வெளியிட்டால் இனிமேல் தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் கமல்ஹாசன் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம். இதை மீறி விஸ்வரூபத்தை ஏதாவது திரையரங்கு வெளியிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது தொழில் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இப்போது அவர்கள் உ…

  9. ஏஆர் முருகதாஸ் விஜய் காம்பினேஷன் துப்பாக்கி சரியாய் குறி பார்த்து சுட்டிருக்குமா ? ஆவலுடன் நுழைந்தோம் .. நடிப்பு : Vijay as Jagadish Kajal Aggarwal as Nisha Jayaram Vidyut Jamwal Akshara Gowda Anupama Kumar Sathyan Manobala Prashanth Nair Mangala Radhakrishnan Deepthi Nambiar Gautham Kurup Steven Clarke A. R. Murugadoss in Cameo Appearance Santhosh Sivan in Cameo Appearance துப்பாக்கி தொழில்நுட்ப குழு : Producer : S Thanu Camera : Santoash Sivan Music : Harris Jeyaraj Story Screenplay Direction : AR Murugadoss துப்பாக்கி கதை : ராணுவத்திலிருந்து விடுப்பில் இருக்கும் விஜ…

  10. சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சர்ச்சைகளுக்கு பின், வெற்றிகரமாக, தன் இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ள, நயன்தாரா, சமீபத்தில் தெலுங்கில் வெளியான, “கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்என்ற படத்தை, பெரிதும் நம்பியிருந்தார். இந்த படத்தின் மூலம், தெலுங்கில், உச்சத்துக்கு போய் விடலாம் என, நினைத்திருந்தார். ஆனால், படம், ஊற்றிக் கொண்டது மட்டுமல்லாமல், இதில், நயன்தாராவின் நடிப்பு, அவ்வளவாக, ரசிகர்களை ஈர்க்கவில்லை. விமர்சனங்களும், நயனுக்கு எதிராகவே வந்தன. இதனால், கவலையடைந்துள்ளார், அவர். “என்னுடைய திரையுலக வாழ்க்கையை, ஏதாவது ஒரு படத்தை வைத்து, முடிவு செய்வது சரியல்ல. பல படங்கள், இன்னும் கைவசம் உள்ளன. அவை அனைத்துமே, நல்ல கதையம்சம் உடைய படங்கள். அந்த படங்கள் வெளியான பின் பாருங்கள். தெலுங்கிலும்…

  11. “ஏண்டா இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்தோம்...” என்று புலம்பித்தவிக்கும் அளவுக்கு ஜெயம்ரவிக்கு டென்ஷனை உண்டு பண்ணிய டைரக்டர் அமீர் ஒருவழியாக ‘ஆதிபகவன்’ படத்தை முடித்து விட்டார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேல் புரொடக்‌ஷனில் இருந்த இந்தப்படத்தின் டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் எல்லாமே முடிந்து விட்டது. ஜெயம்ரவிக்கு ஜோடியாக இந்தப்படத்தில் நீதுசந்திரா நடித்திருக்கிறார். அதிபயங்கரமான சண்டைக்காட்சிகளிலும் துணிச்சலுடன் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார் நீது. நிஜ வாழ்க்கையில் தற்காப்புக் கலைகளை கற்றுவரும் நீது சமீபத்தில் தான் கொரிய தற்காப்புக்கலையில் மூன்று ப்ளாக் பெல்ட்டுகளை வாங்கியிருந்தார். அந்த பயிற்சி அனுபவம் இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்தபோது என…

  12. உலகப்புகழ் பெற்ற பிரபல பாப் இசைப்பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ் விரைவில் ஒரு புதிய ஹிந்திப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தனது இனிமையான குரலாலும், இளமையான கவர்ச்சியாலும் உலக இசை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் பிரபல பாப் இசைப்பாடகி ஸ்ப்ரிட்னி பியர்ஸை ஒரு புதிய ஹிந்திப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘சால்ட் அண்ட் பெப்பர்’ என்ற மலையாளப் படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சதானந்தம் ஹிந்தியில் தயாரிக்கப்போகும் ஒரு புதிய படத்தில் தான் ஸ்பிரிட்னியை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத அந்தப்படத்தில் படத்தின் கதைப்படியே ஸ்ப்ரிட்னியின் ஒரு பாடல் இடம்பெறுகிறது. படத்தின் டைட்டில் பாடலாக அமையும…

  13. பூ ஒன்று புயலானது என்கிற படத்தின் மூலம்தான் நடிகை விஜயசாந்தி கொஞ்சம் அதிரடி நாயகியாக மாறினார். அது தெலுங்கு பட ரசிகர்களுக்குப் பிடித்து போகவே, வைஜயந்தி ஐ பி எஸ், லாக்கப் என்று தொடர்ந்து அதிரடிப் படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற இடத்தைப் பிடித்தார். அந்த சமயத்தில் நடிகை விஜயசாந்தியின் தெலுகு படங்களை தமிழில் டப் செய்தாலும் அந்த படம் சூப்பர் ஹிட்தான். இதே பார்முலாவை இப்போது, நடிகை அனுஷ்காவுக்காக கையில் எடுத்துள்ளனர் தெலுகு திரைப்படத்துறையினர். அனுஷ்காவும் பல வருடங்களாக உள்ள தெலுங்கு லேடி சூப்பர் ஸ்டார் இடம் காலியாக உள்ளதை ராணி ருத்ரமாதேவி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மூலம் மிக நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டார். டெல்லி, சிறீவைகுண்டம் பா…

  14. ஹைதராபாத்தில் தெலுங்கு மொழியில் விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய கமல், விஸ்வரூபம் படத்தை டிடிஹெச் தொழில் நுட்பத்தில் ஒளிபரப்புவது குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விஸ்வரூபம் பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் தாசரி நாராயணராவ் கலந்து கொண்டு, பாடல் சி டி யை வெளியிட, தயாரிப்பாளர் ராமாநாயுடு பெற்றுக் கொண்டார். தாசரிநாராயணராவ் பேசும்போது, விஸ்வரூபம் படத்தை டி டி ஹெச்சில் ஒளி பரப்புவத்தின் மூலம், கமல்ஹாசன் புரட்சிக்கு வித்திட்டுள்ளார். இதை நான் மகிழ்ச்சியாக வரவேற்கிறேன். இப்படிப்பட்ட தைரியம் நிச்சயம் யாருக்கும் வராது. டெல்லி, சிறீவைகுண்டம் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு எதிரான கலையுலக பிரமுகர்களின் கவனயீர்ப்பு நிகழ்வு : புக…

  15. "விஸ்வரூபம்" டி டி எச் வருமானம் 300 கோடியா? கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 டிசம்பர், 2012 - 19:12 ஜிஎம்டி நடிகர் கமலஹாசனின் “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் எனப்படும் நேரடியாக தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்பும் முறையில் 300 கோடி வருமானம் ஈட்டமுடியும் என்று சில திரைத்துறை நிபுணர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இதுவரை சுமார் 30 லட்சம் டி டி எச் சந்தாதாரர்கள் தலா ரூ 1000 முன்பணம் கட்டி, “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் மூலம் பார்ப்பதற்கு தம்மை பதிவு செய்துகொண்டிருப்பதாக டி டி எச் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்திருப்பதாகவும், இதன் மொத்த வருமானம் 300 கோடி என்பதும் இவர்களின் கணக்காக இருக்கிறது. தமிழ் திரைத்துறை வரலாற்றில் 300 கோடி என்பது இதுவரை காணாத…

    • 0 replies
    • 339 views
  16. இந்துவாக மதம் மாறிய நடிகை நயன்தாரா தான் செய்த பாவங்களை போக்கும்படி தேவாலயம் சென்று பாவமன்னிப்பு கேட்டுள்ளார். கிறித்தவ பெண்ணான நயன்தாரா, நடிகர், இயக்குனர் பிரபுதேவாவுடனான தனது காதலுக்காக இந்து மதத்திற்கு மாறினார். பிரபல நடிகையின் இந்த செயலினால் பல எதிர்ப்புகள் எழுந்தபோது, "இது என் வாழ்க்கை என் உரிமை" என்று அனைவரது வாயையும் கட்டினார். இந்த நிலையில் பிரபுதேவாவுடன் தனது நட்பை முறித்துக் கொண்டதால் மீண்டும் தன்னை கிறிஸ்தவ மதத்திலேயே இணைத்துக்கொண்டார். இதற்காக அவர் கேரளாவில் உள்ள ஒரு சர்ச்சிக்கு சென்று பாவ மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் நயன்தாரா, தற்போது துபைக்கு சென்று தன் குடும்பத்தினருடன். கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடியுள்ளார். http://www.inneram.com/news/ci…

  17. சென்னை: சிவாஜி கணேசன், கமல்ஹாசன், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமல்ஹாசன் அவரை வாழ விடுங்கள், சீண்டிப் பார்க்காதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கடுமையாக கூறியுள்ளார். கமல்ஹாசனை எதிர்க்கும் திரையரங்க உரிமையாளர்களையும் அவர் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விஷப் பரீட்சை உண்டு. கமல் இப்போது அந்த பரீட்சையில் இறங்குகிறார். விஸ்வரூபம் படம் டி.டி.எச்.யில் வரக்கூடாது என்கின்றனர். இந்த படத்தை கமல் செலவு செய்து எடுத்துள்ளார். அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு உள்ள உரிமை. அதில் யாரும் தலையிடக்கூடாது. சிவாஜி, கமல், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமலை கோவணம் கட்டி நடிக்க வைத்தேன…

  18. தீவிரவாதத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கமல் ஹாஸனின் புதிய படம் இந்த விஸ்வரூபம். சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார். கமல் ஹாஸன் தயாரித்து இயக்கி ஹோராவாக நடித்துள்ள படம். ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அமெரிக்கா என பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ரூ 95 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம் என அடிக்கடி கமல் கூறி வருகிறார். உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம் பற்றிய கதை இது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது. வரும் ஜனவரி 11-ம் உலகமெங்கும் தமிழில் வெளியாகிறது. அதற்கும் 10 மணி நேரங்கள் முன்பு, இந்தப் படத்தை இந்தியா முழுவதும் டிடிஎச் எனும் வீட்டுக்கு வீடு உள்ள ஹோம் தியேட்டர்கள் அல்லது டிஷ் ஆன்டெனா கனெக்ஷன் வைத்திருப…

  19. எப்போது வெளிவரும் பாலாவின் 'பரதேசி' என்பது தான் கோலிவுட்டின் தற்போதைய கேள்விக்குறி. அதர்வா, தன்ஷிகா, வேதிகா மற்றும் பலர் நடித்த ' பரதேசி ' படத்தினை இயக்கினார் பாலா. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதினார். படத்தை தனது ' B ஸ்டூடியோஸ் ' நிறுவனம் மூலம் பாலாவே தயாரித்தார். 'பரதேசி' டிசம்பர் 21ம் தேதி வெளிவரும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார் பாலா.படம் சென்சார் ஆகிவிட்டது. ஆனாலும் படத்தினை பாலா வெளியிடவில்லை. தொடர்ச்சியாக படம் வெளிவருவதால், ஜனவரி 26 ம் தேதி வெளிக்கொண்டு வரலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.அதுமட்டுமன்றி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பாடல் ஒன்றை சேர்க்கலாம் என்று தீர்மானித்து இருக்கிறார். அதற்கான பணிகள…

  20. பதிவு செய்த நாள் : Dec 31 | 12:14 pm சென்னை, ‘‘சூர்யா, கார்த்தி இரண்டு பேரில் யார் சிறந்த அழகன், யாரை உங்களுக்கு பிடிக்கும்?’’ என்ற கேள்விக்கு அனுஷ்கா பதில் அளித்தார். இசை விழா கார்த்தி–அனுஷ்கா ஜோடியாக நடித்து, சுராஜ் டைரக்டு செய்துள்ள ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தின் இசை விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. அதில், திரளான ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். படத்தின் பாடல் காட்சிகள், ரசிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பாடல்களுக்கு கார்த்தி, நடிகைகள் நீது சந்திரா, தன்ஷிகா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோர் நடனம் ஆடினார்கள். டைரக்டர் சுராஜ் எழுதி, மனோபாலா, மனோகர் நடித்த நகைச்சுவை நாடகமும் நடந்தது. அனுஷ்காவிடம் பேட்டி விழாவில் நடிக…

  21. நயன்தாராவை நான் மறந்து விட்டேன், என்று நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா கூறியுள்ளார். பிரபுதேவா அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கிறேன். இந்தி பட வேலைகள் காரணமாக தான் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டேன். ஒரு படம் தொடங்குவதற்கு முன்பு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நடிகர்–நடிகைகள் தேர்வு, மேக்கப் டெஸ்ட், உடையலங்காரத்துக்கு அனுமதி என நிறைய வேலைகள் இருக்கிறது. அதையெல்லாம் சென்னையில் இருந்து கொண்டு செய்ய முடியாது. என் சொந்த வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டது உண்மை. ஆனால், அது என் தொழிலை பாதிக்கவில்லை. கடவுள் அருளால், தொழில் நன்றாகவே நடக்கிறது. நயன்தாரா விஷயத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. மனமுதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. நட…

  22. அரசியலுக்கு வந்தால் என்வழி தனிவழி - ரஜினிகாந்த் அ‌திரடி ஞாயிறு, 30 டிசம்பர் 2012( 09:46 IST ) ''அரசியலுக்கு வந்தால் என்வழி தனிவழியாக இருக்கும்'' என்று நடிகர் ரஜினிகாந்த் பரபர‌ப்பாக பே‌சியு‌ள்ள அவரது ‌ர‌சிக‌ர்க‌ள், அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள் இடையே பெரு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று மாலை நட‌ந்த மத்திய நிதியமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம் பற்றிய சான்றோர்களின் கருத்துகள் 'ப.சிதம்பரம் ஒரு பார்வை' என்ற ஒரு நூ‌ல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசுகை‌யி‌ல், பல ஆண்டுகளுக்கு முன்னர் இதே அரங்கில் நடைபெற்ற ஒரு விழாவில், ப.சிதம்பரம் பற்றி 2 வரிகள் பேச வேண்டும் என்று சொன்னார்கள். அவரைப் பற்றி 2 வரிகளில் பேசிவிட முடியாது. 10 வரிகள் பேச வேண்டும் …

  23. நித்தியானந்தாவிடம் போனால் கவலை எல்லாம் போய் விடுகிறது - ரஞ்சிதா சென்னை: நாட்டில் எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரது போதனைகள் பிடித்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அவரிடம் சென்றால் கவலைகள் போகும் என்று கூறியுள்ளார் நடிகை ரஞ்சிதா. நித்தியானந்தா குறித்தும், சிடி சர்ச்சை குறித்தும் ரஞ்சிதா ஒரு டிவி சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் நித்தியானந்தாவுடன் இன்னும் நல்ல தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது... நித்தியானந்தாவையும் என்னையும் பற்றி வந்த சி.டி. போலியானது. அதை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டார்கள். பணம் தராவிட்டால் விபசார வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டினர். அவர்களை சும்மா…

  24. துலாபாரம் படம் முதலில் மலையாளத்திலும் பின்னர் தமிழிலும் 1969ம் ஆண்டு எ வி எம் ராஜன் சாரதாவின் நடிப்பில் வெளிவந்த படம்.இப்படத்தில் நடித்ததற்காக நடிகை சாரதாவிற்கு ஊர்வசி வருது மலையாளத்திலும் தமிழிலும் கிடைத்திருந்தது. அந்த நேரத்தில் இரத்தம் ஓடஓட அடி அடியென்று அடித்தாலும் கண்ணீரே வராது.அப்படிபட்ட வயதில் இந்த படம் பார்த்த போது அழுகையே வந்துவிட்டது.அந்த இருட்டுக்குள்ளும் சுற்றுமுற்றும் பார்த்தால் தெரிந்த வரை அழாத ஆட்களே இல்லைப் போல் இருந்தது. இங்கு பலர் அந்த நேரம் பிறந்தேயிருக்கமாட்டார்கள்.இது கறுப்பு வெள்ளை படம் என்பதால் இப்போது பார்க்கவும் முடியாது. இப்படி நீங்களும் பார்த்த சோகப்படங்களைப் பற்றி எழுதலாமே. http://www.youtube.com/watch?v=uNVeKrzBbr0

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.