வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பாட்டுடைத் தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இன்று பிறந்த நாள்.. இதையொட்டிய பகிர்வு இது! எஸ்.பி.பி 25! களிப்பும் காதலும் ததும்பும் எஸ்.பி.பி-யின் குரல் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று. பல்லவிகளும் சரணங்களும் வாழ்வான எஸ்.பி.பி-யின் பெர்சனல் பக்கங்கள்... பாலு பிறந்த ஊர் ஆந்திராவில் உள்ள கொணேட்டாம் பேட்டை. திருப்பதியில் படித்து முடித்து, பாடும் வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம். பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்! முதன்முதலாக எஸ்.பி.பி. திரைப்பாடலாகப் பாடியது…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சிக்கு சென்ற கவர்ச்சிப் புயல் நமீதா வழியில் நடந்த ஒரு திருமணத்துக்கு முன்னறிவிப்பின்றிப் போய் கலந்து கொண்டதோடு, மணமக்களுக்கு ரொக்கப் பரிசும் கொடுத்து அசத்தியுள்ளார். தமிழில் முன்னணி கவர்ச்சி நாயகியாக வலம் வந்த நமீதா, சமீப காலமாக கொலிவுட்டில் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் விளம்பரங்களிலும், கடை திறப்பு விழாக்களிலுமே கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு, கரூரில் உள்ள ஈமு கோழிப்பண்ணை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் நமீதா சென்றார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கரூருக்கு போய்க்கொண்டிருந்த வழியில், திருச்சி முக்கொம்பு என்ற கிராமத்தில…
-
- 3 replies
- 1.7k views
-
-
எனது படத்திற்கு ஷாருக்கானும் சல்மான்கானும் தேவையில்லை தனது படத்தை வெளியிட பொலிவுட் ஹீரோக்களான சல்மான்கானும், ஷாருக்கானும் தேவையில்லை என்று உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். கமல் ஹாசன் தற்போது விஸ்வரூபம் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து ஊழலை மையமாக வைத்து அமர் ஹை என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க அவர் பொலிவுட் ஜாம்பவான்களான சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஆகியோரை அணுகியதாக தகவல்கள் வெளியாகின். ஆனால் இதை கமல் மறுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், நான் இரு கான்களையும் சரி, ஜாக்கி சான், டாம் க்ரூஸையும் சரி எனது புதிய படத்திற்காக அணுகவில்லை. அது வெறும் வதந்தி. எனது படத்தை வெளியிட சல…
-
- 0 replies
- 1.1k views
-
-
இசையமைக்க ரூ.1.5 கோடி : ஏ.ஆர். ரஹ்மான் சாதனை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கன்னட படம் ஒன்றுக்கு இசையமைக்க ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். அஜீத் குமார் நடித்த வரலாறு படத்தின் கன்னட ரீமேக்கான இந்த படத்திற்கு ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி சம்பளம். இது எந்த இசையமைப்பாளரும் இதுவரை வாங்காதது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் உபேந்திரா அஜீத் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 31ம் திகதி நடப்பதாக இருந்தது. ஆனால் அன்று பாரத் பந்த் என்பதால் விழா தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள சான்சலரி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ரஹ்மான் கலந்து கொண்டு பேசினார். ஏ.ஆர்.ரஹ…
-
- 0 replies
- 576 views
-
-
தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நயன்தாரா பிரபுதேவாவுடன் திருமணம் செய்வதற்காக நடிப்பதை நிறுத்தினார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், காதலுக்காக இந்துவாக மாறினார். சென்னையில் உள்ள ஆரிய சமாஜ மடத்துக்கு சென்று வேதமந்திர சடங்குகள் செய்து வேள்வி வளர்த்து மதம் மாறினார். அதன்பிறகு இந்துக்கோவில்களுக்கு பயபக்தியுடன் சென்று வந்தார். நெற்றியில் விபூதி, குங்குமம் பூசுவதையும் வழக்கமாக கொண்டார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் காவி சேலை, ருத்ராட்ச மாலையுடன் சீதை வேடத்தில் நடித்தார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பு முடியும் வரை சைவம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்தார். பிரபுதேவாவுடனான காதலை முறித்து விட்டு பிரிந்த பின்பு, அவரிடம் இன…
-
- 3 replies
- 799 views
-
-
நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் பாட்சா படத்திற்கு முக்கிய இடம் உண்டு. மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் அது. நடிகர் ரஜினிகாந்தின் „சுப்பர் ஸ்டார்' பட்டத்தை மேலும் வலுவாக்கிய படம். ரஜினிகாந்திற்கு என்றே உருவாக்கப்பட்ட பாத்திரம் மற்றும் திரைக்கதையை கொண்டிருந்த படம். வேறு யார் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவ்வளவிற்கு எடுபட்டிருக்காது. படம் வெற்றி பெற்றதோடு மட்டும் அல்லாது ரஜினிகாந்தை அரசியலில் குரல் கொடுக்கவும் செய்த படம் அது. பாட்சா படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் தமிழ் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புக்களை கண்டித்துப் பேச அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதன் பிறகு „ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என்க…
-
- 13 replies
- 1.5k views
-
-
இளையராஜாவின் 69 ஆவது பிறந்தநாளை (born - 2 june 1943) முன்னிட்டு வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்து தமிழர் ஒருவர் முகநூலில் எழுதியதை அப்படியே இணைக்கிறேன்.... இளையராஜா - ஆம் இது தமிழனின் சரித்தரத்தில் ஒரு மைல் கல், இவரின் இசையை இன்று வெளிப்படையாக ரசிப்பதை விட ரகசியமாக ரசிக்கும் ஆட்கள் தான் அதிகம் ஏன் என்றால் இளையராஜா பாட்டு பிடிக்கும் என்றால் நீ அவ்வளவு ஓல்ட் ஜெனரேஷனா என்று நக்கலாக கேட்டு அவர்களின் ஐபாட் அல்லது போனை பார்த்தால் கண்டிப்பாக இளையராஜாவின் இசை இருக்கும். இவரின் பிறந்த நாள் இன்று (june 2). அதனால் எனக்கும் அவருக்கும் இருக்கும் பழக்கத்தில் சில துளிகள். அவரை எல்லோரும் போல் 2005 ஆண்டு வரை போஸ்டரிலும், புகைப்படத்திலும் தான் பார்த்திருக்கிரேன். அடித்தது ஜாக்பாட்…
-
- 24 replies
- 2.7k views
-
-
இலவச மருத்துவமனையிலிருந்து கைக்குழந்தையுடன் வெளியே வருகிறாள் அழகான இளம்பெண் ஒருத்தி. அவளுக்கு ஆதரவு தர எவருமே இல்லாத நிலையில் குழந்தையை ஒரு மாளிகையின் முன்னால் நிற்கும் காரில் போட்டுவிட்டு சென்று விடுகிறாள். அதேசமயம் இரண்டு திருடர்கள் அந்தக் காரை திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். பிறகு குழந்தை இருப்பதை அறிந்து கொள்ளும் அவர்கள், குறுகலான தெரு ஒன்றில் குழந்தையை போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். ஒரு பூங்காவில் சோகமாக அமர்ந்திருக்கும் குழந்தையின் தாய்க்கு மனது மாறிவிட அவள் மாளிகைக்கு திரும்பி வருகிறாள். அந்த வீட்டின் கதவை தட்டி குழந்தையை பற்றி விசாரிக்கிறாள். காருடன் சேர்த்து குழந்தையும் காணமால் போனதை அறிந்து மயக்கமாகி விழுகிறாள். வாழ்க்கையில் எவ்வித குறிக்கோளும் இன்றி …
-
- 1 reply
- 578 views
-
-
இதுவரை காலமும் ஏன் தமிழ் சினிமாவிட்கோ இல்லை தமிழ் நடிகர்களுக்கோ சர்வதேச விருது கிடைக்கவில்லை?? இப்பிடி படம் எடுத்தா எப்பிடி கிடைக்கும்? அனைத்து ஆங்கில படங்களையும் கொப்பி அடித்தால் எப்பிடி விருது கிடைக்கும். படம் மட்டுமா கொப்பி!!!!! தற்போதைய தமிழ் பாடல்கள் இசை எல்லாமே கொப்பி. எந்த நாதாரி தனம் பண்ணினாலும் நாசுக்கா பண்ணனும். பிளான் பண்ணாமல் செய்தால் இப்பிடி தான் எதையும் பிளான் பண்ணி பண்ணனும் ஔஊஊஊஊஊ நீங்களும் பாருங்கள்
-
- 5 replies
- 1k views
-
-
அண்மையில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன் பல ஆண்டுகளுக்குப் பின்பு லாரன்ஸ் ராகவேந்திரா நடிப்பில் „உயிரெழுத்து' என்று படத்தை இயக்கி இருப்பதாகவும், படம் விரைவில் வெளிவர இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவித்திருத்தது. லாரன்ஸ் ராகவேந்திரா ஒரு சிறந்த நடன இயக்குனராகவும், திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பவர். கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிக அதிக அளவிலான விகித இலாபம் இவர் நடித்து, இயக்கியிருந்த „காஞ்சனா' (முனி 2) படத்திற்கே கிடைத்திருந்தது. இந்த வெற்றி இவருடைய அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பையும் கொடுத்திருந்தது. இந்த நிலையில் „உயிரெழுத்து' படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகியது. இதை அடுத்…
-
- 4 replies
- 8.7k views
-
-
ஈழத் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜபக்சேவின் விருந்தினராக இலங்கையில் உறவாடி வந்தவரான நடிகை ஆசின், விக்ரம் நடிக்கும், ஷங்கர் இயக்கும் படத்திலிருந்து தூக்கப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் பாணா காத்தாடி பட நாயகி சமந்தாவை புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் போர் முடிந்து, பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பி்ன்னர் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பலரும் முண்டியடித்துக் கொண்டு இலங்கைக்கு ஓடினர். அத்தனை பேரையும் ராஜபக்சேவும் அவரது அரசும் இரு கரம் நீ்ட்டி வரவேற்று விருந்து வைத்து அனுப்பினர். சல்மான் கான் முதல் பலரும் அங்கு போய் விருந்தாடி வந்தனர். அவர்களில் ஒருவர் தான் ஆசின். சல்மானுடன் ரெடி படத்தில் நடித்த அவர்…
-
- 12 replies
- 1.3k views
-
-
மிகச் சிறந்த கதாநாயகியாக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நயன்தாரா, பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து எழுந்து தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அஜித்துடன் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா, சமீபத்தில் நடந்த ஆர்யாவின் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் மிக முக்கிய விருந்தாளியாக நடத்தப்பட்டார். `வெல்கம் பேக் நயன்தாரா' என்று எழுதிய பெரிய கேக் ஒன்று வரவழைக்கப்பட்டு அதனை நயன்தாரா வெட்டினார். உடனே நமது மூளையில் ஒரு பல்ப் எரிந்தது. அதான் எரிந்த பல்பை கையிலேயே எடுத்துக் கொண்டு ஆர்யாவிடம் ஓடோடிச் சென்றோம். ஆனால், நாம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் இதுதான், " எங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு ஏராளமான நடிகர், இயக்குநர்கள் என பலரும் வந்திருந்தனர். ஆனால்…
-
- 16 replies
- 1.5k views
-
-
குட்பை சில்ட்ரன் - உலக சினிமா அது இரண்டாம் உலகப்போர் நடக்கின்ற காலம். ஜூலியன் குவிண்டன் என்கிற பதினோரு வயது சிறுவன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழித்துவிட்டு, திரும்பவும் விடுதியுடன் கூடிய தனது பள்ளிக்கு செல்ல ரயிலேறுகிறான். ஆனால் வேண்டா வெறுப்பாக இருந்த அவனை, அவனுடைய அம்மா மேடம் குவிண்டன் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறாள். பள்ளிக்கூடம் இருப்பது பிரான்ஸ் நாட்டில்! ஆனால் அந்தப்பகுதி ஹிட்லரின்நாஜிப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கிறது. சிறுவன் பள்ளிக்கு வந்து சேருகிறான். வகுப்புகளும் துவங்குகின்றன. அச்சமயத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் புதிதாக நான்கு சிறுவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். அவர்களில் ஒருவன்தான் ழான் பானட் (lean bonnet) என்கிற ஜூலியனின் வயதையத்த …
-
- 0 replies
- 648 views
-
-
நடிகர் , இயக்குனர் என்ற பல திறமைகளைக் கொண்டவர்தான் பார்த்திபன். இப்பொழுது பார்த்திபன் தனது புதிய பாதை திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளாராம். எண்பதுகளின் இறுதியில் பார்த்திபன் முதலில் இயக்கிய திரைப்படம் புதியபாதை. அந்தக் காலத்தில் புதிய கதைக்களம், புதிய ஹீரோயிஸம் என்று உருவாக்கப்பட்டு வெற்றிபெற்ற திரைப்படம் என்பதோடு, சிறந்ந திரைப்படத்திற்கான தேசியவிருதையும், சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை மனோரம்மாவிற்கும் பெற்றுக்கொடுத்தது இந்த புதிய பாதை. அதேவேளை இதில் பார்த்திபன் , சீதா ஜோடிப் பொருத்தம் , மற்றும் சந்திரபோஸின் இசை என்பன பேசப்பட்டன. இதனோடு பார்திபன், சீதா நிஜ ஜோடியாகியதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இருபது வருடங்களுக்குப் பின்னதாக அதனை ரீமேக் செய்யவுள்ளாராம் பார்த்திபன…
-
- 1 reply
- 1.1k views
-
-
சினிமா வாழ்க்கையில் எவருடைய உதவியும் இல்லாமல் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நம் தல அஜித். முதல் முறையாக தனது மனதில் இருக்கும் ஆதங்கங்களை ஆனந்த விகடன் வார இதழிற்கு பேட்டியாக கொடுத்துள்ளார். அதில் இருந்து சில முக்கிய பகுதிகள்: செல்ப் புரமோஷன் கிடையாது... 'நான் 'மங்காத்தா'வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா௨'-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!' மனதை பாதித்த விமர்சனம்... 'படம் நல்லா இருக்காஇ இல்லையானு சொல்லாமஇ சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு …
-
- 0 replies
- 1.2k views
-
-
நந்தினி திமிர் பிடித்தவள். விஜயகுமாரின் “ஈகோ பிடிச்ச கழுதை”! சந்திரன் ஒரு subtle இளைஞன். An elusive! கட்டேல போக, சரியான தமிழ் சொல்லு மாட்டுதில்ல. யாழ்ப்பாணத்தமிழில் ஒரு சொறியன் என்று சொல்லலாம்! எதற்கும் சக்திவேல் அண்ணேயிடம் கேட்கவேண்டும்! இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணமாகி ஒரே வீட்டில் வாழ ஆரம்பிக்கிறார்கள். சாதாரண கதை தான். எலியும் பூனையுமாக சண்டை பிடித்து கடைசியில் கவிதையாய் “பூம்” என்று காதலிக்க படம் முடிகிறது. தியேட்டரை விட்டு நாம் வெளியே வந்த பின்னர், இந்த இரண்டும் எப்படி கலியாணம் கட்டி சமாளிக்க போகுதுகள்? என்று யோசிப்பதற்குள் மட்டக்குளி பஸ் வந்துவிட ….. ஏறிவிட்டேன்! சாதா கதை ராதா மோகன் கை பட, சான்ஸே இல்லாத சினிமாவாக மாறிவிட்டது. வசனங்கள், உ…
-
- 0 replies
- 1k views
-
-
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் குழந்தை பெற்றுக்கொண்டதன் பின்பு ஊடகங்கள் பக்கம் தன்னை வெளிப்படுத்தாமல் இருந்தார். ஆனால் கமராக்கள் அவரைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் அண்மையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் விழாவொன்றில் கலந்துகொள்ள ஐஸ் சென்ற போது கமராக்களில் சிக்கினார். இதனைத் தொடர்ந்து அவர் குழந்தை பெற்றுக்கொண்டதன் பின்பு உடலைக் கவனிக்கவில்லை, குண்டாகிவிட்டார், இப்படியே போனால் சினிமா, விளம்பரம் போன்றவற்றை ஐஸ் மறக்கவேண்டியதுதான் என்றெல்லாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இப்போது "கேன்ஸ்" திரைப்பட விழாவில் ஊடகங்களின் முன் உடல் எடையை ஓரளவு குறைத்துக் கொண்டு சேலையில் வந்து அசத்தியிருக்கிறார் ஐஸ்... வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 1 reply
- 1.2k views
-
-
சஞ்ஜே லீலா பன்சாலியின் இயக்கத்தில் 2002 வெளிந்த தேவதாஸ் ஹிந்தி திரைப்படம் டைம் சஞ்சிகையின் சிறந்த 10 படங்களுக்குள் 8வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அத்தோடு இந்தப் படம் வெளிவந்து ஒரு தசாப்தம் ஆவதால் தேவதாஸ் திரைப்படத்தை 3டி தொழில்நுட்பத்தினூடாக வெளியிட திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் சஞ்ஜே லீலா பன்சாலி. வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 2 replies
- 989 views
-
-
சிறுவயதிலிருந்தே நண்பர்களாக வளரும் எழுத்தாள தந்தை மற்றும் தீவிர கம்யூனிசவாதியான அண்ணன் என்கிற குடும்பப்பின்னணி கொண்ட சரத், சதா குடித்துவிட்டு தாயையும் தன்னையும் அடிக்கும் ஒரு குடிகார அப்பா இப்படியான பின்புலத்துடன் சன்னி மற்றும் மனைவியைப் பிரிந்து மகள் வயதுடைய ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் வாழும் அப்பா, ஓடிய கணவன் திரும்ப வருவான் என்கிற நம்பிக்கையில் வாழும் அம்மா இவர்களின் மகளான வர்ஷா, இந்த மூன்று நண்பர்களையும், அவர்களது கனவையும் கூடவே கார்ப்பரேட் வாழ்க்கையையும் சொல்கிற படம்தான், ரிது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இந்த மூவரில், நண்பர்களைப் பிரிய மனமில்லாமல் அமெரிக்கா சென்ற சரத் இந்தியாவிற்கே திரும்பி வருகிறான். மீண்டும் சொந்த ஊரில், தன் மனதிற்கு இணக்கமா…
-
- 0 replies
- 521 views
-
-
பலவிதமாக பாடல்களைப் பாடும் வல்லமை கொண்டவர் ஜானகி. இடைக்காலத்தில் இளையராஜாவின் இசையில் பாலாவோடு பாடிய பாடல்கள் இன்றும், என்றும் கேட்கத் தெவிட்டாதவை..... ஆனால் மெல்லிசை மன்னரின் இசையில் பாடும் போது என்ன நடந்தது தெரியுமா... வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 0 replies
- 1.3k views
-
-
கையில் கமரா. பிங்க் கலர். மேலே ஒரு பட்டன் இருக்கும். அமத்தினால் “பிய்ச் பிய்ச்” என்று தண்ணி சீரும்! கிணற்றடிக்கு இரண்டு படிக்கட்டுகள். ஒரு எட்டு எட்டினால் தோய்க்கிற கல்லு. மூன்றடி உயரம். அப்படியே ஒரு கை ஊன்றி டைமிங்குடன் ஜம்ப் பண்ணி நிற்கவேண்டும். அக்கா குசினிக்குள் இருந்து “டேய் தோய்க்கிற கல்லு, வழுக்கும், விழுந்து கிழுந்து எதையும் தேடிக்கொண்டு வராம, கால கைய வைச்சுக்கொண்டு சும்மா இரு!”. போன வருஷம் நல்லூரில் எட்டாம் திருவிழாவுக்கு வாங்கிய நீலக்கலர் ஐஞ்சு ரூபாய் கூலிங் கிளாஸ். அப்பிடியே ஒரு சுழற்று சுழற்றிக்கொண்டே போட்டுக்கொண்டு, ஒரு காலை சின்னதாக மடித்து மற்றக்காலில் ஊன்றிக்கொண்டு வானத்தை ஒரு ஆங்கிளில் பார்த்துக்கொண்டே இருக்க பாட்டு ஆரம்பிக்கும்! சிலு சிலுவென குளி…
-
- 17 replies
- 2.2k views
-
-
தனுஷ்- ஸ்ருதி நெருக்கம்: உச்சகட்ட கோபத்தில் ஐஸ்வர்யா.. தனுஷ்- ஸ்ருதிஹாசன் இடையிலான நெருக்கம் ஐஸ்வர்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதால், தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் தனுஷ் தென் ஆப்ரிக்காவுக்குப் போயிருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. தனுஷ் - ஐஸ்வர்யா - ஸ்ருதி விவகாரம் குறித்து, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கூறுகையில், தனுஷ் - ஐஸ்வர்யா இடையே சண்டை இருப்பது உண்மைதான். ஆனால் அது சாதாரணமாக கணவன் - மனைவி போட்டுக் கொள்ளும் சண்டையே. எந்த வீட்டில் தான் சண்டை இல்லாமல் இருக்கு. தனுஷ் - ஐஸ்வர்யா சண்டைக்கு ஸ்ருதியைக் காரணம் காட்டுவது சரியல்ல. ஸ்ருதியுடன் …
-
- 12 replies
- 4.2k views
-
-
என்னுடன் நடித்தால் சீக்கரமே கல்யாணமாகிவிடும்: தமன்னா... தமன்னாவுடன் நடிக்கும் நாயகன்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று திரையுலகில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. கொலிவுட்டில் வெற்றிப்படங்களை கொடுத்த தமன்னா, தற்போது டோலிவுட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். அங்கு சிரஞ்சீவி குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமான தமன்னா, அவர்களிடம் விசாரித்தே அங்குள்ள இளம்நாயகர்களுடன் நடிக்கின்றார். இந்நிலையில் தமன்னாவை பற்றி இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. தமன்னாவுக்கு கல்யாண ராசியாம். அதாவது, அவருடன் ஜோடி சேரும் திருமணமாகாத நாயகன்களுக்கு விரைவில் திருமணமாகி விடுகிறதாம். இதை அவரே பெருமையாக செல்லி வருகிறாராம். என் கூட நடிக்கும் நாயகர்களுக…
-
- 9 replies
- 1.1k views
-
-
பாலிவுட்டிற்கு பயணமாகும் அமலாபால்.. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் கலக்கிக்கொண்டிருக்கும் அமலா, பாலிவுட்டிற்கு செல்ல உள்ளார். கொலிவுட்டில் அமலாபால், சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி திரைப்படம் பாலிவுட்டில் உருவாக உள்ளது. தமிழில் இயக்கிய பாலாஜியே, பாலிவுட்டிலும் இயக்க உள்ளார். இதற்கான நடிகர், நடிகைகளை தெரிவு செய்துகொண்டிருக்கும் பாலாஜியிடம், பாலிவுட்டிலும் தன்னை நடிக்க வையுங்கள் என அமலா பால் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் இதை பாலாஜி உறுதி செய்ததாக தகவல் எதுவும் வெளிவரவில்லை. சமீபத்தில் தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டிற்கு பயணமாகின்றனர். இருப்பினும் சொல்லும் படியான ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. காதலில் சொதப்…
-
- 1 reply
- 923 views
-
-
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.... என்ற பழமொழிக்கேற்ப தனது திறமையை சினிமாவில் வெளிப்படுத்தி வருகின்றார் நடிகர் கமல் ஹாசனின் மகள் சுருதி ஹாசன். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று பல மொழிகளிலும் நடித்து வருகின்றார். தற்போது தெலுங்கில் இவர் நடித்த "கபார் சிங்" என்ற படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இது ஹிந்தியில் வெற்றி பெற்ற "தபாங்" திரைப்படத்தின் ரீமேக். தமிழில் "ஒஸ்தி" என்று வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. வீடியோ செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்
-
- 0 replies
- 1.1k views
-