Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ரத்தம் தெறிக்க, அலறல் சத்தம் ஒலிக்க, வெறி அடங்கும் வரை தேடித் தேடி நடத்தப்படும் பழிவாங்கும் படலம்தான் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'சாணிக் காயிதம்' படத்தின் ஒன்லைன். கடலை வெறித்துப் பார்த்தபடி, பீடியை பற்றவைத்துக்கொண்டு ஆசுவாசமாக நின்றுகொண்டிருக்கிறார் சங்கய்யா (செல்வராகவன்). அருகிலிருந்த அறையிலிருந்து சங்கரய்யாவை நோக்கி பொறுமையாக நடந்து வருகிறார் பொன்னி (கீர்த்தி சுரேஷ்). எந்த வித பதற்றமும் இல்லாமல், 'உயிரோட எரிக்கணும் மண்ணெண்ணய கொடு' என கேட்கிறார். பொறுமையாக சம்பந்தபட்டவரை எரித்து முடித்து அவர்கள் அங்கிருந்து நடந்து செல்லும் வரை அந்த 'சிங்கிள் ஷாட்' நீண்டுகொண்டேயிருக்கிறது. திரையிலிருந்து அகலாமல் பார்த்துக்கொள்ளும் அந்த 'சிங்கிள் ஷாட்' மூலமாக ந…

    • 7 replies
    • 702 views
  2. இரண்டு வெவ்வேறு இழப்புகளுக்கு காரணமாகிறது இரண்டு வெவ்வேறு இறைச்சிகள். ஏன்? எப்படி? எதனால்? - இதுதான் 'சேத்துமான்' சொல்லும் செய்தி. பொட்டல் காட்டில், உச்சி வெயிலில் தன் தாத்தாவுடன் நடந்து செல்லும் குமரேசன், 'பள்ளிகூடத்துல டீச்சர் என்கிட்ட, நீ எல்லா கறியும் சாப்பிடுவியா?'னு கேட்டாங்க, அதுக்கு நான் 'எல்லாமே சாப்பிடுவேன்'னு சொன்னதும் சிரிச்சாங்க. 'ஏன் தாத்தா கறி சாப்பிட்றது தப்பா?' என கேட்கிறான். சமகால சாதிய, மத, அரசியலுடன் பிணைக்கப்பட்ட முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்வியை மையமாக கொண்டு அழுத்தமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது 'சேத்துமான்'. மேற்கு தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு நடக்கிறது கதை. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில…

  3. முதல் பார்வை | பன்னிக்குட்டி - ஒரு ‘டீசன்ட்’டான நகைச்சுவைப் படைப்பு! பன்னிக்குட்டியை மையமாக வைத்து நிகழும் சம்பவங்களை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கும் படைப்பு இந்தப் படம். உத்ராவதிக்கு (கருணாகரன்) வாழ்க்கையில் எல்லாமே பிரச்சினைதான். தனது தங்கை நிலாவதி (ஷாதிகா) கணவருடன் சண்டையிட்டு தாய்வீட்டிலேயே தங்கிவிடுகிறார். அந்த சோகத்தில் அப்பா பெரிய கருப்பு (டிபி கஜேந்திரன்) எப்போதும் குடித்துக் குடித்து மதுவுக்கு அடிமையாகவிடுகிறார். தவிர, கருணாகரனுக்கு காதல் கைகூடவில்லை என்ற விரக்தி ஒருபுறம். பிரச்சினைகள் சூழ்ந்த இந்த வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து தற்கொலைக்கு முயல்கிறார். அதனைப் பார்த்த சிலர் அவரைக் காப்பாற்றி, பிரச்சினைகளுக்கு …

  4. தீவிரவாதி உமர் ஃபாருக்கை கைது செய்து அழைத்துவரும் ஸ்பெஷல் ஆபரேஷனில் ஈடுபடுகிறார் 'ரா' பிரிவு ஏஜெண்ட் வீரராகவன். கைது செய்யப்பட்ட உமர் பாரூக்கை விடுவிக்க வலியுறுத்தி மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். மக்களை வீரராகவன் (விஜய்) மீட்டாரா? அவர் கையாண்ட உத்திகள் என்னென்ன? கைது செய்யப்பட்ட உமர் ஃபாருக் என்ன ஆனார்? - இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது 'பீஸ்ட்'. வீரராகவனாக விஜய். படத்துக்கு படம் வயதைக் குறைக்கும் மேஜிக்கை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார். அதே ஃபிட்னஸுடன் மிடுக்கும் கூடிக்கொண்டே செல்கிறது. தனது லுக்கில் ரசிகர்களைக் கவரும் விஜய், எனர்ஜியுடன் நடனக் காட்சிகளில் தெறிக்க விடுகிறார். ஒட்டுமொத்த படத்தையும் 'ஒன்மேன் ஆர்மி'யாக சும…

  5. முதல் பார்வை | மாமனிதன் - டைட்டிலின் ஆன்மாவுக்கு நியாயம் சேர்க்க ‘விரும்பிய’ படைப்பு தன் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் ஒரு சராசரி தந்தையின் வாழ்க்கையில் நிகழும் சிக்கல்களும், போராட்டமுமே படத்தின் ஒன்லைன். தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி), அதே ஊரைச் சேர்ந்த சாவித்ரி (காயத்ரி) திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் தன் குழந்தைகளை, எப்படியாவது தனியார் பள்ளியில் சேர்ந்து நன்கு படிக்க வைத்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு ரியல் எஸ்டேட் மூலமாக அதிக பணம் ஈட்டும் ஒரு வாய்ப்பு கிட்டுகிறது. அந்த ரியல் எஸ்டேட் …

  6. கணவரைப் பிரிய வழிதேடும் மனைவி, இன்னொரு பெண்ணை தனது கணவரைக் காதலிக்குமாறு நடிக்கச் சொன்னால், அதுவே 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான், அதிதி ராவ் இருவரும் முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். இரண்டு வருட இல்லற வாழ்க்கைக்குப் பிறகு துல்கரின் அதீத காதல் மற்றும் நியாயமான செயல்களால் சலிப்படையும் அதிதி, அவரை பிரிய நினைக்கிறார். அதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கும்போது, உளவியல் நிபுணரான காஜல் அகர்வாலை சந்திக்கிறார். அவரிடம் கணவரை விவாகரத்து செய்ய ஐடியா கேட்கும் அதிதி, ஒருகட்டத்தில் காஜலையே கணவரைக் காதலிக்குமாறு நடிக்கச் சொல்கிறார். இதன்பிறகு இவர்கள் மூவர் வாழ்க்கையிலும் என்ன நடக்கிறது என்பதே 'ஹே சினாமிகா' திரைக்கதை. யாழன் கதாபாத்திரத்தில் துல்கர்…

  7. காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' வரிசையில் மணிகண்டனின் மற்றுமொரு சர்வதேச தரத்துக்கு இணையான நம்பிக்கை படைப்புதான் இந்த 'கடைசி விவசாயி'. பல வருடங்களுக்குப் பிறகு குலதெய்வ வழிபாட்டை நடத்த நினைக்கும் கிராமம். குல தெய்வத்துக்கு படைப்பதற்காக நெல் விளைவிக்கும் கிராமத்தின் கடைசி விவசாயி மாயாண்டி எதிர்பாராத ஒரு சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார், கிராமத்தின் குலதெய்வ வழிபாடு எப்படி நடக்கிறது என்பதே ’கடைசி விவசாயி’ படத்தின் ஒன்லைன். முதியவர் மாயாண்டி கதாபாத்திரம்தான் கதையின் மையம். படத்தின் மிகப்பெரிய பலம் கதையின் நாயகன் விவசாயி மாயாண்டி கேரக்டரில் நடித்துள்ள நல்லாண்டி. மின்சார வசதிகூட இல்லாத வீட்டில், நவீன வாழ்க்கை அண்டாத ஒரு த…

  8. Published : 25 Jan 2019 20:16 IST Updated : 25 Jan 2019 20:16 IST பிரபுதேவாவின் வாழ்வில் சாரா என்ற பெயரில் இருவர் குறுக்கிடுகிறார்கள். சந்தர்ப்ப சூழலால் இருவரையும் காதலிப்பதாகவே பிரபுதேவா கூறுகிறார். இறுதியில் யாரைக் கரம் பிடிக்கிறார் என்பதே 'சார்லி சாப்ளின் - 2'. மேட்ரிமோனியல் இணையதளம் நடத்துகிறார் பிரபுதேவா. 99 திருமணங்களை நடத்திய தன் மகன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற ஏக்கமும் கவலையும் பிரபுதேவாவின் பெற்றோருக்கு ஏற்படுகிறது. இந்த சூழலில் சாராவை (நிக்கி கல்ராணி) பார்க்கிறார். அவரது உதவும் உள்ளத்தால் காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் திருமணத்துக்க…

  9. Published : 04 Oct 2018 19:08 IST Updated : 04 Oct 2018 19:31 IST 1994-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தால், அதில் நாயகன் தன் காதலியைத் தேடினால் அதுவே '96'. டிராவல் போட்டோகிராபர் கே.ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புகைப்படக் கலையைக் கற்றுத் தருகிறார். தன் மாணவியுடன் காரில் பயணிக்கும்போது பிறந்து, வளர்ந்து…

  10. முதல் பார்வை: C/O காதல் பள்ளிக் காலம், பதின்ம வயது, நடுத்தர வயது, 40 வயதுக்கு மேல் என நான்கு பருவங்களில் நடக்கும் காதல் கதைகள். இதில் எந்தக் காதல் கை கூடியது, எது தோல்வியடைந்தது என்பதே 'C/O காதல்'. காதல் என்பதைத் தாண்டிய பொதுவான விஷயம் ஒன்று இந்த நான்கு காதல்களுக்கு இருக்கிறது. அதுவே படத்தின் முக்கியமான திருப்புமுனை. ஒரு காதலைத் தவிர மற்ற மூன்று காதல் கதைகளிலும் ஏதோ ஒரு விஷயம் கண்டிப்பாக நம்மைப் பாதிக்கிறது. பள்ளி நாட்கள் காதல் கதையில் சிற்பி கதாபாத்திரத்தின் முடிவும், நடுத்தர வயதுக் காதலில் சலீமா கதாபாத்திரத்தின் முடிவும் அதிர்ச்சியைத் தர, 40 வயதைக் கடந்த இருவர் காதலிக்கும் கதையில் அதன் வெகுளித்தனமும், நடக்கும் சம்பவங்களின் நகைச்சுவையும் ஆச்சரியத்தை…

  11. உதிரன் சென்னை ஒரு கதைக்காக ஒருவர் எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தால் அதுவே 'K-13'. அருள்நிதி படம் இயக்கத் துடிக்கும் ஓர் இயக்குநர். ஷூட்டிங் தொடங்கிய 10 நாளில் அவரது படம் டிராப் ஆகிவிடுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அருள்நிதி மனநல நிபுணரிடம் கவுன்சிலிங் செல்கிறார். அந்த சூழலில் நண்பன் ரமேஷ் திலக் இரண்டாவது படம் இயக்க ஒப்பந்தமாகிறார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக ரமேஷ் திலக், அருள்நிதி உள்ளிட்ட சில நண்பர்கள் பாரில் மது அருந்துகின்றனர். அங்கு வரும் எழுத்தாளர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அருள்நிதியைச் சந்திக்கிறார். இருவரும் ஷ்ரத்தாவின் வீட்டுக்குச் செல்கின்றனர். மறுநாள் காலையில் பார்த்தால் அருள்நிதி நாற்…

  12. முதல் பார்வை: அடங்க மறு உதிரன்சென்னை சட்டப்படி தன் கடமையைச் செய்ய முடியாத போலீஸ் அதிகாரி அந்த வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு குற்றவாளிகளைத் தண்டித்தால் அதுவே 'அடங்க மறு'. சென்னை அண்ணா நகரில் காவல் உதவி ஆய்வாளராக வேலைக்குச் சேர்கிறார் சுபாஷ் (ஜெயம் ரவி). உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஒரு மதுக்கடையை மூடக் கோரி நடைபெறும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தச் செல்கிறார். ஆனால், எஸ்.ஐ. சுபாஷின் நூதன ஆலோசனையால் மாணவர்கள் மதுக்கடையைச் சூறையாடுகின்றனர். ஓர் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்க, அதை தற்கொலை என்று சொல்லி வழக்கை முடித்து வைக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் (மைம் கோபி) முடிவெடுக்கிறார். சுபாஷ் அதையும் முறியடிக்கிறார். அந்தக் கொலை வழக்கு சம்பந…

    • 4 replies
    • 928 views
  13. ஒரு தப்பான போலீஸ் நல்ல போலீஸ் ஆனால், அந்த மாற்றத்துக்கு கொடூரமான ஒரு பாலியல் பலாத்காரம் இருந்தால் அதுவே 'அயோக்யா'. சென்னையில் சில முறையற்ற தொழில்களில் ஈடுபடுகிறார் ரவுடி பார்த்திபன். தனக்குச் சாதகமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அமைச்சரின் பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் விஷாலை சென்னைக்கு மாற்றலாகி வரவழைக்கிறார். பார்த்திபனும் விஷாலும் ராசியாகின்றனர். இருவரும் அண்ணன் - தம்பி அளவுக்குப் பழக, பார்த்திபனின் எந்தத் தொழிலுக்கும் விஷால் இடையூறாக நிற்கவில்லை. இதனிடையே ராஷி கண்ணாவைப் பார்க்கும் விஷால் அவரைக் காதலிக்கிறார். தன் பிறந்த நாளில் வித்தியாசமான பரிசு ஒன்றை ராஷி கண்ணா, விஷாலிடம் கேட்கிறார். இதனால் பார்த்திபனுக்கும் விஷாலுக்கும் மோதல் வெடிக்க…

  14. முதல் பார்வை: ஆண் தேவதை உதிரன் பெருநகர வாழ்க்கையில் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் சிக்கிய மனைவிக்கும், தேவைகளைச் சுருக்கிக்கொண்டு வாழ நினைக்கும் கணவனுக்கும் இடையே பிரச்சினை வெடித்தால் அதுவே 'ஆண் தேவதை'. மெடிக்கல் ரெப்பாக பணிபுரியும் இளங்கோ (சமுத்திரக்கனி) மாதாமாதம் இலக்கைத் தொட வேண்டி வேலையைத் துரத்திக் கொண்டே ஓடுகிறார். அவரது மனைவி ஜெஸ்ஸிகா (ரம்யா பாண்டியன்) நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை, பிள்ளைகளுக்கான நல்ல கல்வி ஆகியவற்றுக்காக ஐடி வேலையில் மிளிரத் துடிக்கிறார். இருவரும் பரபரப்பு மிகுந்த வேலையிலேயே கவனம் செலுத்துவதால் இவர்களின் இரட்டைக் குழந்தைகளானா ஆதிரா, அகர முதல்வனை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்சினை எழுகிறது. பிள்ளைகளின் நலனுக்காக வேலையை விட்ட…

  15. காணாமல் போன மாடுகளைத் தம்பதியர் கண்டுபிடித்தார்களா என்பதே 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்'. தனது இரண்டு மாடுகளையும் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்கிறார் குன்னிமுத்து. ஆனால், காவல் துறையினர் புகாரை எடுக்க மறுக்கிறார்கள். உயிருக்கு உயிராகக் குழந்தைகள் மாதிரி வளர்த்த மாடுகளை அவர் தேடிக் கண்டிபித்தாரா, இல்லையா, அந்த மாடுகள் காணாமல் போனது ஏன், எப்படிக் காணாமல் போனது, மாடுகள் தொலைந்ததால் அந்த ஊர் எப்படி மாறுகிறது என்பதே 'இராமே ஆண்டாளும் இராவணே ஆண்டாலும்' திரைக்கதை. நாயகன் குன்னிமுத்துவாக 'மிதுன் மாணிக்கம்'. புதுமுகம் என்பதால் கதைக்கு ரொம்பவே உபயோகமாக அமைந்துள்ளது. அவருடைய வெகுளித்தனம் இந்தக் கதைகளத்துக்கு அருமையாகப் பொருந்தியுள்ளது. பார்வை…

  16. முதல் பார்வை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உதிரன்சென்னை அளவுக்கு அதிகமாக நேசித்த காதலியை விட்டு காதலன் விலக நேர்ந்தால் அதுவே 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட இளைஞன் கௌதம் ( ஹரிஷ் கல்யாண்). ஃபேஷன் டிஸைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). தமிழ் சினிமாவின் எழுதப்படாத 555-வது விதிப்படி இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு மோதலில் முடிய, அடுத்தடுத்த சந்திப்புகள் நட்பாகவும் காதலாகவும் மலர்கிறது. ] அம்மாவின் பிரிவை ஹரிஷ் கல்யாணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஏக்கத்துடனும் காயத்துடனும் வாழும் ஹரிஷ், காதலி ஷில்பா எந்த சமயத்திலும் தன்னை விட்டு விலகிப் போய்விடுவாரோ என்று அஞ்சுகிறார். அதனால் ஏற்படும் பதற்றத்திலு…

  17. உதிரன் சாதாரண இளைஞர் அரசியலில் சாதிக்க நினைத்து சாவுடன் சண்டையிட்டால் அவரே நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே). ஸ்ரீவில்லிபுத்தூரில் இயற்கை விவசாயம் செய்து கொண்டு சில சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படுகிறார் சூர்யா. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் சூர்யாவுக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டைகள் எதிரிகளால் முளைக்கின்றன. தான் ஒருவராக எதையும் இங்கே மாற்ற முடியாது என்று பிரச்சினைகளைத் தீர்க்க எம்.எல்.ஏவிடம் உதவி கேட்கிறார். அந்த உதவிக…

  18. முதல் பார்வை: எல்கேஜி உதிரன் லால்குடியில் சாதாரண வார்டு கவுன்சிலராக இருக்கும் இளைஞன் வியூகம் வகுத்து தமிழக முதல்வராக உயர்ந்தால் அதுவே 'எல்கேஜி'. லால்குடி கருப்பையா காந்தி (ஆர்ஜே பாலாஜி) வார்டு கவுன்சிலராக இருக்கிறார். தன் அப்பா அழகு மெய்யப்பன் (நாஞ்சில் சம்பத்) மாதிரி தோற்றுப்போன அரசியல்வாதியாக இல்லாமல் வெற்றிபெற்ற அரசியல் தலைவராக வலம் வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக கார்ப்பரேட் கம்பெனியுடன் பேசி தமிழகத்தின் ஆளுமையாக குறுகிய காலத்திலேயே வளரத் திட்டமிடுகிறார். முதல்வர் ஆவுடையப்பன் (அனந்த் வைத்தியநாதன்) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் முதல்வருக்கு வந்த நோயை எதிர்த்து நூதனப்…

  19. Published : 22 Feb 2019 18:02 IST Updated : 22 Feb 2019 18:02 IST காதலியின் தீராத நோயைத் தீர்க்க முயற்சிகள் எடுக்கும் இளைஞனின் கதையே 'கண்ணே கலைமானே'. அப்பா, அப்பத்தாவின் சொல்லுக்குக் கட்டுப்படும் இளைஞன் கமலக்கண்ணன் (உதயநிதி). மதுரை மாவட்டம் சோழவந்தானில் மண்புழு உரம் தயாரிக்கும் பண்ணையை நடத்தி வருகிறார். ஊரில் உள்ள உறவுக்காரர்களுக்கும் இயற்கை விவசாயம் குறித்து வகுப்பெடுக்கிறார். முதியோர் இல்லம் திறக்க உதவுவது, வங்கிக் கடன், கல்விக் கடனுக்கு தன்னால் இயன்றதைச் செய்வது என்று ஊருக்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறார். …

  20. முதல் பார்வை: கர்ணன் ஊர் மக்களின் நன்மைக்காக நாயகன் உரிமைக் குரல் எழுப்பினால், அதனால் போராட்டங்களைச் சந்தித்தால் அதுவே 'கர்ணன்'. நெல்லை மாவட்டத்தில் உள்ள பொடியங்குளம் ஒரு குக்கிராமம். பஸ் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அந்த ஊர் மக்கள் அல்லல்படுகின்றனர். பக்கத்து ஊரான மேலூருக்கு நடந்து சென்று போய் பஸ் ஏறினால்தான் வெளியூருக்குப் போக முடியும். அப்படிப்பட்ட நிலையில் மேலூர்க்காரர்கள் பொடியங்குளம் மக்களைச் சம்பந்தமில்லாமல் சண்டைக்கு இழுக்கின்றனர். இளம்பெண்ணை கேலி செய்கின்றனர். அதைக் கண்டிக்கும் ஆண்களை இழுத்துப் போட்டு அடிக்கின்றனர். இதனால் வெகுண்டெழும் கர்ணன் (தனுஷ்) மேலூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரின் அகந்தைக்குத் தகுந்த பாடம் ப…

  21. முதல் பார்வை: காற்றின் மொழி உதிரன் பரிசுப் பொருளை வாங்குவதற்காக பண்பலை அலுவலகம் செல்லும் பெண், அதே இடத்தில் ஆர்.ஜே. ஆகப் பணிபுரியும் சூழல் வந்தால், அவர் அன்பு வழி நின்று ஆறுதல் மொழி பகிர்ந்தால் அதுவே 'காற்றின் மொழி'. கணவர் விதார்த், மகன் சித்து ஆகியோருடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஜோதிகா. குடும்பத் தலைவியாக வீட்டைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டாலும் உடன் பிறந்த இரட்டைச் சகோதரிகளாலும், அப்பாவாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். பிளஸ் 2-வில் மூன்று முறை முயன்றும் தோல்வியைச் சந்தித்ததால் ஜோதிகாவை உடன்பிறந்தவர்களே ஏளனமாகப் பார்ப்பதும், எந்த வேலை செய்தாலும் விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் ஒரு நாள் மின் கட்டணம் செலுத்து…

  22. முதல் பார்வை: கே.ஜி.எஃப் உதிரன்சென்னை தங்கச் சுரங்கத்தைக் கையகப்படுத்தி அதிகாரம் செலுத்தும் மிகப்பெரிய எதிரியுடன் மோதும் இளைஞனின் கதையே 'கே.ஜி.எஃப்'. 1951-ல் பெங்களூரில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடைபெறுகின்றன. தங்கச் சுரங்கம் கண்டெடுக்கப்பட்ட அதே நாளில் ராக்கி பிறக்கிறான். வறுமையில் வளர்ந்த ராக்கியால் உடல்நிலை சரியில்லாத தன் தாயைக் காப்பாற்ற முடியவில்லை. இறக்கும் தருவாயில் தாய் தன் மகனிடம், ''நீ சாகும்போது பெரிய பணக்காரனாகத்தான் சாகணும்'' என்று சத்தியம் வாங்கிக்கொண்டு கண்ணை மூடுகிறார். தாயின் மறைவுக்குப் பிறகு தனித்து விடப்பட்ட ராக்கி சிறிய வயதிலேயே இந்தப் பெரிய உலகை ஆள வேண்டும் என்று கனவு காண்கிறார். அந்தக் கனவை நனவாக்க முயற்சி செய்கிறார். பவர் இருக்க…

  23. முதல் பார்வை: சத்ரு உதிரன்சென்னை குழந்தைகளைக் கடத்தும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் காவல் உதவி ஆய்வாளரின் கதையே 'சத்ரு'. ராயபுரத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார் கதிரேசன் (கதிர்). அவர் நேர்மைக்குப் பரிசாக பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளில் 2 முறை சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பிரபாகரன் (லகுபரன்) தன் நண்பர்கள் 4 பேருடன் இணைந்து பணத்துக்காகப் பள்ளிக் குழந்தைகளைக் கடத்துகிறார். லகுபரன் 5 கோடி பணம் வேண்டும் என்று டீல் பேசுகிறார். இந்த சூழலை சாமர்த்தியமாகக் கையாண்டு குழந்தையையும், பணத்தையும் மீட்கிறார் கதிர். இதில் லகுபரனின் நண்பன் கொல்லப்படுகிறார். இதனால் ஆவேசமாகும் லகுபரன், கதிர் குடும்பத்தைக் கொலை செய்யப் போவதாக சவால் விடுக்கிறார். கதிர் தன் குடும்பத…

  24. முதல் பார்வை: சிலுக்குவார்பட்டி சிங்கம் உதிரன்சென்னை காவல் ஆணையரின் என்கவுன்ட்டர் குறியிலிருந்து தப்பிய ரவுடி சாதாரண கான்ஸ்டபிளிடம் சிக்கி அவஸ்தைப்பட்டால் அதுவே 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'. காவல்துறைக்குத் தொடர் தொல்லைகள் தரும் சைக்கிள் ஷங்கரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லத் திட்டமிடுகிறார் காவல் ஆணையர் நரேன். ஆனால், அதிலிருந்து தப்பிக்கும் சைக்கிள் ஷங்கர் (ரவிஷங்கர்) அடையாளம் மறைத்து தலைமறைவு ஆகிறார். முன்னாள் அமைச்சரைக் கொல்ல இந்நாள் அமைச்சர் ஒருவர் சைக்கிள் ஷங்கரிடம் அசைன்மென்ட் கொடுக்கிறார். அதை முடிப்பதற்காகச் செல்லும் சைக்கிள் ஷங்கர் ஒரு நாள் இரவு போலீஸ் காவலில் இருக்க நேரிடுகிறது. அதற்குப் பிறகு தன் அடியாட்களால் காவல் நிலையத்திலிருந்து தப்பும் சைக…

  25. சமந்தாவும், அவருடன் கல்லூரியில் படிக்கும் ஒரு பையனும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஆனால், பெற்றோர்கள் சம்மதிக்காததால், ஃபஹத் ஃபாசிலுக்கும் சமந்தாவுக்கும் திருமணம் நடைபெற்று விடுகிறது. திடீரென ஒருநாள் பழைய காதலனிடம் இருந்து சமந்தாவுக்கு போன். அவன் கஷ்டத்தில் இருப்பதாகச் சொல்ல, அவனுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்கும் சமந்தா, வீட்டுக்கு வரச் சொல்கிறார். வந்த இடத்தில் இருவருக்கும் இடையே உடலுறவு நடந்துவிடுகிறது. சமந்தா இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கும்போது, அவன் இறந்துவிடுகிறான். என்ன செய்வதென்று தெரியாமல், அவனை ஃப்ரிட்ஜுக்குள் வைத்துவிடுகிறார் சமந்தா. வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும் ஃபஹத், ஃப்ரிட்ஜுக்குள் ஒருவன் பிணமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.