Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கைத் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வந்துள்ள இசையமைப்பாளர் இசையமைப்பாளர் வர்ஷன், இலங்கைத் தமிழர்களுக்கு தான் இசையமைக்கும் படங்களில் வாய்ப்பளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ”புறம்போக்கு” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான வர்ஷன், தனது புதிய படத்தில் ஈழத்தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வந்துள்ளார். அவர் அது பற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ”கடந்த 2006 ஆம் ஆண்டு முதற்கொண்டு 10 வருடங்களாக கடல்கடந்து வாழும் தமிழர்கள், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் ஏற்பாடு செய்த பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். எனவே, அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக, எனது திரைப்படங்களில் ஒரு பாடகர் மற்றும் பாடகிக்கு வாய்ப்பளிக்க …

  2. ரஜினிகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை! monishaJan 28, 2023 21:55PM நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக பல்வேறு படங்களில் நடித்து என்றும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெயர், புகைப்படங்கள், குரலை அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என ரஜினிகாந்த சார்பில் அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பரிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய சினிமாவில் குறிப்பாகத் தென் இந்திய சினிமாவில் சிற…

  3. ஒளிரும் நட்சத்திரம்: விஜய் சேதுபதி ஓவியம்: ஏ.பி.ஸ்ரீதர் 1. கடந்த சில ஆண்டுகளாக அதிகப் படங்களில் நடிக்கும் கதாநாயகன் என்ற பெயரைத் தக்கவைத்திருக்கும் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தைச் சூட்டியவர் இயக்குநர் சீனு.ராமசாமி. காளிமுத்து- சரஸ்வதி தம்பதியின் மகனாக 16.01.1978-ல் ராஜபாளையத்தில் பிறந்தவர் விஜய் சேதுபதி. 2. விஜய் சேதுபதியின் தந்தை சிவில் இன்ஜினீயர். பணி நிமித்தம் சென்னைக்குக் குடும்பம் குடிபெயர்ந்ததால், தனது உயர்நிலைக் கல்வியைச் சென்னையில் பயின்றார். பள்ளிக்காலத்தில் விளையாட்டிலோ பிற தனித்திறமைகளிலோ ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி, அதிகம் கேள்வி கேட்பவராக வளர்ந்தார். சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரி…

  4. நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த பெருவாரியான வசனங்கள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டன. அவரது காமெடி வசனம் சினிமாக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. சிலர் அவரது காமெடிகளை எடுத்து தங்கள் படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தை அமைத்து காமெடி செய்திருந்தார் வடிவேலு. தற்போது அந்த வசனத்தையே சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர். ஆனால், வடிவேலுவின் தலைப்பை படத்திற்கு பயன்படுத்தி விட்டு அவரை நடிக்க வைக்காமல் இருந்தால் நன்றாக இருக்காதே என்ற நட்பிற்காக படத்தில் ஒரிரு காட்சிகளில்தோன்றுமாறு அவரைக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.http://www.dinaithal.com/index.php?option=com_…

    • 0 replies
    • 380 views
  5. ரயில் பயணத்தைக் கதைக்களமாகக் கொண்டு நிறையப்படங்கள் வெளிவந்துள்ளன, அந்த வரிசையில் மிக முக்கியமானதொரு படம் John Frankenheimer இயக்கிய The Train, 1964ம் ஆண்டு வெளியான கறுப்பு வெள்ளைப் படமிது, இரண்டாவது உலக யுத்த காலத்தில் புகழ்பெற்ற ஒவியங்களைக் கடத்திச் செல்லும் ஜெர்மனிய ரயில் ஒன்றினை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளபடும் தீவிர முயற்சிகளே படத்தின் கதைக்கரு, 133நிமிஷங்கள் ஒடுகின்ற இப்படத்தில் ரயில் கிளம்பிய மறுநிமிசம் முதல், கடைசிக்காட்சி வரை நம்மால் அடுத்து என்ன நடக்குமென என்று யோசிக்க முடியாது. விறுவிறுப்பான திரைக்கதை என்பது இப்படத்திற்கே பொருத்தமானது, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் திருப்பங்கள், வெற்றி தோல்வி என்று மாறிமாறிச் சுழலும் விதியின் பகடையாட்டம், படம் பா…

  6. சமந்தாவுடன் காதல் முதல் திருமணம் வரை: மனம் திறந்த நாக சைதன்யா சமந்தாவுடனான காதல் மலர்ந்தது, திருமணம் மற்றும் மதம் மாற்றம் சர்ச்சை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் நாக சைதன்யா மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ப்ரேமம்' படம் தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. தெலுங்கிலும் 'ப்ரேமம்' என்ற பெயரிலேயே அக்டோபர் 7-ம் தேதி வெளியாக இருக்கிறது. நாக சைதன்யா, ஸ்ருதிஹாசன், மடோனா செபஸ்டின், அனுபமா பரேமஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை சந்து இயக்கி இருக்கிறார். இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக அளித்துள்ள பேட்டியில் சமந்தாவுடனான காதல் மலர்ந்தது எப்படி, சமந்தா மதம் மாறுகிறாரா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு…

  7. The Kerala story, படத்தைப் பார்க்க இப்பொழுதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப் படத்துக்கு வந்த கண்டனங்கள் அதிகமாக இருந்ததால், அப்பொழுதே படத்தைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். இந்திப் படமான The Kerala Story ஐ இப்பொழுது இணையத்தில் தமிழில் பார்க்க முடிகிறது. படத்தில் நாயகர்களே இல்லை. நாயகிகள்தான் படம் முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள். முஸ்லீம்களை இவ்வளவு தீவிரமாக வேறு எந்தப் படத்திலும் சித்தரிக்கவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு நல்ல முஸ்லீமையும் படத்தில் காட்டுவதில்லை என்றே கதாசிரியர் தீர்மானித்து விட்டார் போலும். மதம் மாற்றும் பகுதிகளை அழகாகக் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல் செய்பவருக்கு, போதை மாத்த…

    • 1 reply
    • 379 views
  8. ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில், விக்ரம்பிரபு நடித்துவரும் படம் வாகா. காஷ்மீர் பகுதியில் 69 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. காஷ்மீர் எல்லைப் பகுதியான வாகா என்னும் இடத்தில்தான் படத்தின் முக்கால் பகுதிக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுள்ளன. திடீரென்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதியென்பதால், அந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்திய திக் திக் அனுபவங்களை படத்தின் ஹீரோ விக்ரம்பிரபு நிருபர்களிடம் பகிர்ந்துகொண்டார். “படப்பிடிப்பு நடந்த 69 நாட்களுமே, ராணுவ அதிகாரிகள் எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்தனர். தங்குமிடத்திலிருந்து படப்பிடிப்புக்குச் சென்று, திரும்பிவரும் வரையிலும் அவர்கள் எங்களுக்குத் துணையாக இருந்தனர். இதற்கான ஏற்…

  9. கமலி from நடுக்காவேரி இந்த படத்தின் ட்ரைலர் பார்த்தேன். பார்க்கும் போதே, படத்தின் தரம், நேர்த்தி தெரிகிறது. கட்டாயம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.

    • 0 replies
    • 378 views
  10. பின்னணி பாடுவதில் ஜேசுதாஸ் குடும்பத்தின் புதிய வாரிசு பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசின் பேத்தி அமேதா மலையாள சினிமாவில் பாடி, தனது இசைக் குரலை பதிவு செய்திருக்கிறார். அந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அமேதா, கானகந்தர்வன் ஜேசுதாஸ் குடும்பத்தின் நான்காவது தலைமுறை பின்னணி பாடகியாவார். அவரது தந்தை அகஸ்டின் ஜோசப் 1950-ம் ஆண்டு நல்லதங்காள் சினிமாவில் பாடினார். அந்த படத்திற்கு இசை அமைத்தவர், பிரபல இசை அமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி. 1962-ம் ஆண்டு அதே இசை அமைப்பாளரின் விதி தந்த விளக்கு என்ற சினிமாவில் கே.ஜே.ஜேசுதாஸ் பாடினார். 25 வருடங்கள் கழித்து 1987-ல் ‘இடநாழியில் ஒரு காலோச்ச’ என்ற படத்தில் அவரது மகன் விஜய் ஜேச…

    • 0 replies
    • 378 views
  11. ஏ ஆர் ரகுமானின் செவ்வி

  12. பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானா பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் : கோப்புப்படம் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது71. பாலிவுட்டில் இன்னும் மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் 'ஏக் தோ தீன்', 'தாக் தாக்', 'ஹவா ஹவா', 'தம்மா தம்மா' போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குனராக இருந்தவர் சரோஜ்கான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடிகை மறைந்த நடிகை ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித்தின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குனராக சரோஜ் கான் பணியாற்றியுள்ளார் மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற சரோஜ் கான், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட…

  13. பெட்டைக்கோழி கூவி என்பது விருதுபெற்ற இயக்குனர் நவயுகா குகராஜா இயக்கிய சமூக விழிப்புணர்வு திரைப்படமாகும். பெண்கள் மீதான இணைய துன்றுபுத்தல்கள் பற்றிய குறும் படமாகும். இந்த நாட்களில் இணையவழி கல்வி காரணமாக இணையத்தை அதிகமான பள்ளி பிள்ளைகள் உபயோபிப்பதால் அவர்களை இணையம் வழியாக தன்புறுத்துவதும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்த படத்தில் பூவிகா ராசசிங்கம் மற்றும் ஐஸ்வரியா எஸ். வர்மன் நடித்துள்ளனர். படத்திற்கான இசை எம் சி ராஜ் ஒளிப்பதிவு மாதுனி அழககோன் புஸ்ஸேவெல எடிட்டிங் ஜோசுவா ஹெபி. முழுக்க முழுக்க நம் நாட்டு கலைஞர்களால் உருவாக்கப்பட்ட குறும் படமாகும்.

    • 1 reply
    • 378 views
  14. நம் நாட்டு கலைஞர்கள் மற்றும் புலம் பெயர் இலங்கைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் வெளியாகியுள்ள "வாராய்" என்ற காதல் பாடல் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் இலங்கையின் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதுடன் இந்திய திரை இசைப் பாடல்களுக்கு இணையாக நம்மவர்களாலும் முடியும் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது. வாராய் என்ற இப்பாடலின் இசையமைப்பாளர் ராஜ்குமார் அவர்கள் இலங்கையின் குறிப்பிடத்தக்க கலைஞர்களின் வரிசையில் வித்தியாசமான பாடல்களை வழங்கும் ஒருவர்.அத்துடன் ராஜ்குமாரின் தேசம் பாடல் முதன்முறையாக இலங்கையின் உள்நாட்டு கலைஞர்கள் 14 கலைஞர்களை ஒன்றிணைத்த பாடல் என்பதும் குறிப்பிடத் தக்க விடயம் ஆகும். இம் முயற்சியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக பிரான்ஸ் ம…

  15. தமிழ்த் திரைப் பாடல்களில் நவீன வாழ்க்கையை, நவீன கவிதை ஆக்க முறையைப் பயன்படுத்தியவன் ரொம்ப வளத்தியான முத்துக்குமார் உறங்கிக்கொண்டிருக்கிறான். யார் வந்தார்கள், யார் போனார்கள் என்று எதையும் சட்டைசெய்யாமல். அகிரா குரோசோவாவின் ‘ராஷோமோன்’படத்தைப் பல முறை பார்த்த அவனுக்கு தன்னைப் பார்த்துச் செல்லும் ஒவ்வொருவரும் தன்னுடைய இனி கலையவே முடியாத உறக்கம் குறித்து ஒவ்வொரு கதை சொல்வார்கள் என்பது தெரிந்துதான் இருக்கும். தெரிந்தவர், தெரியாதவர் எனப் பலர் அவனுக்காக இரங்குவர் என்பதும் அவனை முன்வைத்து மற்ற காரியங்களைச் சொல்வர் என்பதும் அவனுக்கு உறுதியாகத் தெரிந்திருக்கும். ஏனெனில், அவன் இருக்கும்போதே அவனைக் குறித்த கதைகளைக் கேட்டுச் சிரித்திருக்கிறான். அவன் இறந்ததாய் தவறுதலாய் செய்திகள் ம…

    • 0 replies
    • 378 views
  16. ''கறிக்கொழம்பு இடியாப்பம், எம்.ஜி.ஆர் படம், அப்பு..!" - கமல் வளர்ந்த கதை சொல்கிறார் 85 வயது ராமசாமி ''இமயமலைக்குப் பக்கத்துல அப்புவின் அக்கா, நளினியின் பரதநாட்டியம் நடந்துச்சு. நாங்க எல்லாம் போயிருந்தோம். அந்த மலைப்பிரதேசத்தில் தங்கியிருந்த பங்களாவில் கரன்ட் இல்லே. அகல்விளக்கு மட்டுமே வெளிச்சம். குரங்குகள் அட்டகாசம் தாங்கமுடியலை. சின்னப் பையனான அப்பு அழ ஆரம்பிச்சுட்டான். அவன் அழுதா எனக்கு மனசு தாங்காது. கதவைத் திறந்து வெளியே வந்தால், குரங்குகள் சூழ்ந்திருச்சு. பிள்ளையைக் காப்பாத்துணுமேனு அப்புவைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு மலையிலிருந்து உருண்டுட்டேன். கீழே பனி ஆறு ஒடுது. எப்படியோ அப்புவைக் காப்பாத்திக் கொண்டுவந்து சேர்த்துட்டேன். இல்லேன்னா அன்னைக்…

  17. ஆஸ்கர் பேசும் "கறுப்பு" அரசியல் ! ஆஸ்கர் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் இவருக்குத் தான் என்ற ஹாலிவுட் கணிப்பில் முன்னணியில் இருப்பது " கறுப்புச் சிங்கம் " டென்சல் வாஷிங்டன் ( Denzel Washington) . இவர் நடித்து இயக்கியிருக்கும் " ஃபென்சஸ் " ( Fences ) படத்தின் சிறப்புக் காட்சியை, சமீபத்தில் ஆஸ்கர் கமிட்டி மற்றும் ஹாலிவுட்டின் முக்கிய பிரமுகர்கள் பார்த்தனர். இதில் டென்சலுடன் நடித்திருக்கும் வயோலா டேவிஸ் ( Viola Davis ) யின் நடிப்பும் பெரியளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நிச்சயம் இவர்கள் இருவருக்கும் ஆஸ்கர் கிடைக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் ஆஸ்கரின…

  18. ரஜினியை தாக்கி பேசிய சுந்தர்ராஜன்

  19. இக் காணொளியில், மறைந்த நடிகர் குமரிமுத்து அவர்கள் தனது மாறு கண் காரணமாக வாழ்க்கையில் தான் சந்தித்த வேதனையான சம்பவங்கள் பற்றிச் சொல்கின்றார். அவர் சொல்வதைக் கேட்ட பின்பாவது, மற்றவர்களின் உடல் பாகங்களிலுள்ள குறைபாடுகளைச் சமூக வலைத் தளங்களில், வேலைத் தளங்களில், கல்லூரிகளில், பாடசாலைகளில் கேலி செய்வதைப் பலர் நிறுத்துவார்களென நம்புகிறேன். தனது குறைபாட்டையே சாதகமாகவெடுத்து, வாழ்க்கையில் எப்படி முன்னேறினாரென்று அவர் சொல்வது, உடல் குறைபாடுகளாலும், கேலிப் பேச்சுகளாலும் மனமுடைந்து போன பலருக்குக், குறைபாட்டை மீறி வாழ்க்கையில் வெற்றி பெற உத்வேகம் கொடுக்குமென நம்புகிறேன். குமரிமுத்து அவர்களின் தமிழ் இலக்கியப் புலமையும், அவர் தமிழ் பேசும் சிறப்பும் என்னை வியப்பில் ஆழ்த்தின.

  20. பாகு­ப­லிக்கு 6 விரு­துகள்; சிறந்த வில்­ல­ன் அர­விந்­­சாமி Published by Rasmila on 2016-01-27 09:16:18 சர்­வ­தேச இந்­திய திரைப்­பட அகா­டமி நடத்­திய' ஐபா உற்­சவம்’ விழாவில் பாகு­பலி திரைப்­ப­டத்­துக்கு 6 விரு­துகள் கிடைத்­துள்­ள­தோடு கடந்த வரு­டத்தின் சிறந்த வில்லன் நடி­க­ராக அர­விந்சாமி தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். இவ் விழா நேற்­று­முன்­தினம் ஹைத­ரா­பாத்தில் ஆரம்­ப­மா­கி­யது. இதில் தமிழ், தெலுங்கு, மலை­யா­ளத்தில் வெளி­யான ‘பாகு­பலி’ சிறந்த திரைப்­ப­ட­மாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. இத்­தி­ரைப்­ப­டத்தில் நடித்த சத்­யராஜ், ரம்­யா­கி­ருஷ்ணன் ஆகி­யோரும் விருது பெற்­றனர். ‘தனி ஒருவன்’ திரைப்­ப­டத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு சிறந்த நடி­க­ருக்­கான விரு…

  21. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே. சிக்கிய 'லட்சுமிகாந்தன் கொலை' வெப் தொடராகிறது - கதை என்ன? நபில் அஹமது பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2022, 12:21 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NFAI படக்குறிப்பு, தியாகராஜ பாகவதர் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய கொலை வழக்காக கருதப்படும் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லிவ்- ல் வெப் தொடராக உருவாகி வருகிறது. 1940-களில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் பின்னணி, இது தொடராக எடுக்கப்படுவதன் காரணம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது. யார் இந்த ல…

  22. 'ஆபாச படங்கள் எடுக்க பயப்படத் தேவையில்ல’ ரா.பார்த்திபன் 360° | ஒத்த செருப்பு

    • 0 replies
    • 376 views
  23. நிஜமும்... நிழலும்... மெழுகு சிலையாக காஜல் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள காஜல் அகர்வால், ‛இந்தியன் 2 படத்தில் கமல் உடன் நடித்து வருகிறார். உலகளவில் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு மெழு சிலை வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் காஜலின் உடல் அங்கங்களை அளவீடும் பணி நடந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. குடும்பத்தாருடன் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த காஜல், தனது சிலையைப் பார்த்து மெய்மறந்து போனார். …

    • 0 replies
    • 375 views
  24. சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் தமிழ் அடையாளம் ஜூலை 21 சிவாஜிகணேசன் நினைவு நாள்: தமிழர்களின் 50 ஆண்டுகால அடையாளமாகத் திகழ்பவர்களின் பட்டியல் ரொம்பவும் நீளமானது. அதில் சிவாஜி கணேசனும் ஒருவர். சில ஞாபகங்களுக்கு நரைப்பதே இல்லை. சினிமா மட்டுமே நம் மக்களின் பொழுதுபோக்கு, சாயங்கால சந்தோஷமாக இருந்த வேளைகளில் சிவாஜி எனும் கலைஞன் தமிழர்களின் நெஞ்சங்களில் ஏற்படுத்திய பிம்பம் அளவிட முடியாதது. இன்று 40 வயதைத் தாண்டிய தமிழர்களுக்குள் அந்த பிம்பம் ஏற்படுத் திய விளைவுகள் கலைடாஸ்கோப் புக்கு இணையானது. இதை இன்று தியேட்டரில் படம் பார்த்துக்கொண் டிருக்கும் அந்த நிமிடத்திலேயே ‘படம் மொக்கை’, ‘படம் சூப்பர்’ என்று மெசேஜ் தட்டு…

  25. ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள் Getty Images தலைமுறைகள் கடந்தும் ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டாராக' நிலைத்து நிற்கிறார் "பலரும் அற்புதங்களை நம்புவதில்லை, ஆனால் அற்புதங்கள் நிகழ்கின்றன. ஒரு சாதாரண பேருந்து நடத்துனர் மிகப்பெரிய மனிதர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது ஓர் அற்புதம் தான்." கடந்த 2013ஆம் ஆண்டு என்டிடிவி ஊடக விருது (Greatest Global Living Indian Legends) வழங்கும் விழாவில், அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் விருது வாங்கிய பிறகு நடிகர் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை. கடந்த 1975ஆம் ஆண்டில், 'அபூர்வ ராகங்கள்' எனும் திரைப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.