வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5546 topics in this forum
-
மேலை நாட்டிற்கு வந்த ஆரம்பத்தில் இருந்த குறைவான நேரத்தில் சிறந்த படங்களை பார்க்கும் நோக்கில் வேலையில் ஒரு வேலை நண்பரிடம் சிறந்த படம் ஏதாவது கூறுங்கள் என கூறிய போது அவர் கூறிய திரைப்படம் இந்த திரைப்படம். முதல் தடவை இந்த திரைப்படத்தினை பார்த்தபோது அது எனது எதிர்பார்ப்பினை எட்டியிருக்கவில்ல்லை என்பதுதான் உண்மை, ஆனால் பின்னர் ஒரு தடவை தொலைக்காட்சியில் பார்த்தபொது அது ஈர்த்தது, பல தடவை வேலை இடைவேளைகளில் இந்த திரைப்படத்துணுக்குகளை இன்றுவரை பார்ப்பதுண்டு அவ்வாறு இந்த திரைப்படம் பாதிப்பினை ஏற்படுத்தும் படம். பொதுவாக ஒரு தடவை பார்த்த படத்தினை திரும்ப பார்க்கும் பொறுமை இருப்பதில்லை ஆனால் இந்த திரைப்படம் எனதளவில் ஒரு வித்தியாசமான படம். இந்த திரைப்படத்தின் கரு நம்பிக்கை ( அவ்வ…
-
-
- 5 replies
- 245 views
-
-
“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா” கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு! கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியரான பூவை செங்குட்டுவன் (90) இன்று மாலை சென்னை பெரம்பூரில் காலமானார். வயது மூப்பே அவரது மரணக்காரணமாகக் கூறப்படுகிறது. செங்குட்டுவன் தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 4,000-க்கும் அதிகமான சுயாதீனப் பாடல்களையும், 5,000 பக்திப் பாடல்களையும் இயற்றி தனது கவிதை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். அவரது வரிகளில் இலக்கிய நயமும், ஆன்மீக உணர்வும், பொதுமக்களின் வாழ்வியல் மொழியும் கலந்து காணப்பட்டதால் பரவலான வரவேற்பைப் பெற்றது. அவரது படைப்புகளில் சில பாடல்கள் காலத்தால் அழியாத புகழை பெற்றன. “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை…
-
- 3 replies
- 186 views
-
-
சூப்பர் சிங்கர் சூப்பர் சிங்கர், பாடல் திறமையுள்ள கலைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிக்காட்டும் மேடையாக உள்ளது. பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி எபிசோடுகள் ஒளிபரப்பாகும், இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவ்வப்போது புதிய கான்செப்டுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள், ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் 11வது சீசனின் கான்செப்ட் மொத்தமாக மாற்றப்பட்டது. 4 குரூப், அதற்கு 4 நடுவர்கள் என வித்தியாசமான கான்செப்ட், நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஹிட்டாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்பெஷல் எபிசோட் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சூப்பர் எபிசோட் இடம்பெற உள்ளது. அதாவது மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், I.V CINE PRODUCTIONS படக்குறிப்பு, இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம். கட்டுரை தகவல் கார்த்திக் கிருஷ்ணா பிபிசி தமிழுக்காக 25 ஆகஸ்ட் 2025, 06:12 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளை(ஆகஸ்ட் 25) முன்னிட்டு அவரது 100வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்', 4கே தரத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படமே, விஜயகாந்துக்கு கேப்டன் என்கிற அடைமொழி நிரந்தரமாக அமையக் காரணம். 1990ஆம் ஆண்டு, விஜயகாந்தை நாயகனாக வைத்து, 'புலன் விசாரணை' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.கே.செல்வமணி. அந்தத் திரைப்படத்தில் 'ஆட்டோ' சங்கர் என்கிற உண்மை கதாபாத்திரத்தை அடிப்படையாகக் க…
-
- 1 reply
- 171 views
- 1 follower
-
-
ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து! சென்னை: சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ரஜினிகாந்தின் புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லா உச்ச நட்சத்திரமாக, தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் ரஜினிகாந்த் தம்முடைய திரைவாழ்வின் பொன்விழா ஆண்டினை காண்பது மிகுந்த மனமகிழ்வை தருகின்றது.நீண்ட நெடிய தம் கலைப்பயணத்தில் இரண்டு தலைமுறை இளையோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக திகழ்ந்து, தொடர்ந்து 50 ஆண்டுகளாக உ…
-
-
- 4 replies
- 302 views
-
-
படக்குறிப்பு, இந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழர்கள் குறித்த சித்தரிப்புகள் அவ்வபோது சர்ச்சையாகி வருகின்றன. கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 16 ஆகஸ்ட் 2025, 08:00 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'கிங்டம்' எனும் தெலுங்கு திரைப்படத்தில், இலங்கை தமிழர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாட்டில் சர்ச்சை எழுந்தது. 'கிங்டம்' திரைப்படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் 'முருகன்'. இலங்கையின் ஒரு தீவையும் அதில் வாழும் பழங்குடி மக்களையும் கட்டுப்படுத்தும் ஒரு தமிழ் குடும்பத்தின் வாரிசாக இந்த 'முருகன்' கதாபாத்திரம் இருக்கும். இந்த பழங்குடி மக்கள் 1920இல் …
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
‘கூலி’ விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம். சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங…
-
-
- 5 replies
- 443 views
-
-
-
-
- 360 replies
- 57.7k views
- 1 follower
-
-
தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய வெப் தொடரை இயக்கியுள்ளார். புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் புத்தத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. Published:20 Jun 2025 9 PMUpdated:20 Jun 2025 9 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகோணங்…
-
-
- 4 replies
- 460 views
-
-
பட மூலாதாரம்,X/@THEDEVERAKONDA 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிங்டம் படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கவுதம் தின்னனூர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கவுதம் தின்னனூர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு தெலுங்கில் வெளியான ஜெர்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார். விஜய் தேவரகொண்டா கல்கி படத்தில் கேமியோ பாத்திரத்தில் தோன்றிய பிறகு, வெளியாகியிருக்கும் அடுத்த படம் இது. இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் சூரி (விஜய் தேவரகொண்டா) சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி போன தனது அண்ணன் சிவாவை ( சத்யதேவ்) தேடி செல்கிறார். அவரது அண்ணன் இலங்கையில் பழங்குடியினரின் தீவில் வாழ்ந்து வருகிறார். அந்த தீவில் சூரி ஒரு அண்டர்கவர…
-
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
-
- 4 replies
- 246 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_ 4 மணி நேரங்களுக்கு முன்னர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான மாரீசன் திரைப்படம் இன்று (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வடிவேலு, ஃபகத் ஃபாசில், கோவை சரளா, லிவிங்ஸ்டன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'மாமன்னன்' படத்தில் எதிரும் புதிருமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில், இந்தப் படத்தில் இணக்கமாக இருப்பது போன்ற காட்சிகளைக் கண்ட ரசிகர்களுக்கு படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இருவரும் தங்களுக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களை கச்சிதமாக கையாளக் கூடியவர்கள் என்பதும் எதிர்பார்ப்புக்கான மற்றொரு காரணம். இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ம…
-
- 1 reply
- 173 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,@BEEMJI/X படக்குறிப்பு, உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் கட்டுரை தகவல் கார்த்திக் கிருஷ்ணா பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாகப்பட்டினத்தில் ஜூலை 13, 2025 அன்று, அனுபவமிக்க ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் (எஸ்.எம். ராஜு) ஒரு ஆபத்தான கார் சாகசக் காட்சியின் போது உயிரிழந்தார். திரை மறைவு நாயகர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள், சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படப்பிடிப்பில் நடந்த துயரச் சம்பவத்தால் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இல்லை என இந்தச் சம்பவம் குறித்து அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் குப்தா கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது போதிய ப…
-
- 1 reply
- 157 views
- 1 follower
-
-
Published By: VISHNU 17 JUL, 2025 | 08:11 PM தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால், வியாழக்கிழமை (ஜூலை 17) மதியம் அவர் உயிரிழந்தார். வேலு பிரபாகரன் 1980 ஆம் ஆண்டு வெளியான 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' என்ற படத்தின் மூலம், ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வேலு பிரபாகரன். தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டு வெளியான நாளைய மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம், இயக்குநராக அவதாரம் எடுத்தார். அதைத்தொடர்ந்து, நெப்போலியன், சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்த படங்களை இயக்கியுள்ளார். மேலும், வேலு பிரபாகர…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ANI ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். வயோதீகம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (ஜூலை 13) அதிகாலை காலமானார். வில்லன், குணச்சித்திர நடிகர் என எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று அதற்கு தக்க வகையில் நடிக்கும் திறமை உடையவர் என்று திரையுலக பிரபலங்கள் தங்களின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளனர். கோட்டா சீனிவாச ராவ் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நாற்பதாண்டு கால திரையுலக வாழ்வில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் பெயர் வாங…
-
- 4 replies
- 246 views
- 1 follower
-
-
நடிகை சரோஜா தேவி காலமானார்! நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக தனது 87 ஆவது வயதில் காலமானார். https://athavannews.com/2025/1439016
-
- 3 replies
- 240 views
- 1 follower
-
-
அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்? 24 Jun 2025, 9:34 AM போதைப் பொருள் வழக்கில் தற்போது சிக்கியுள்ள நிலையில் மீண்டும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் அவரது பின்னணி, சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ஆந்திராவின் சித்தூரைத் சேர்ந்த தந்தைக்கும், தமிழ்நாட்டின் கும்பக்கோணத்தைத் சேர்ந்த தாய்க்கும் மகனாக கடந்த 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீகாந்த். ஹைதராபாத்தில் பிறந்த இவர், அவரது தந்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் பணிபுரிந்ததால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஸ்ரீகாந்திற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் டெங…
-
- 15 replies
- 1.6k views
- 2 followers
-
-
சென்னையில் மளிகை அங்காடி தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு ஓடிக்கொண்டிருக்கும் கோகுலை (சிவா), மாத இஎம்ஐ-க்களும் துரத்திக்கொண்டிருக்கின்றன. அவரின் மனைவியான குளோரி (கிரேஸி ஆண்டனி) தன் சேலை விற்பனை தொழிலால் ஓரளவிற்குக் குடும்பப் பணப் பிரச்னையைச் சமாளிக்கிறார். பெற்றோரின் இந்த இயந்திரத்தனமான பொருளாதார ஓட்டத்தால், அவர்களின் ஒரே மகனான அன்பு (மிதுல் ரயான்) பகல் வேளையில் பூட்டிய வீட்டிற்குள் தனிமையில் ஆன்லைன் க்ளாஸ்களோடு பொழுதைக் கழிக்கிறார். Parandhu Po review | பறந்து போ விமர்சனம் இந்தத் தனிமையால், பெற்றோரின் மீது பிடிப்பின்மையும், குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையும் அன்புக்கு வருகின்றன. இந்நிலையில், அலுவல் நிமித்தமாக குளோரி கோவை செல்ல, எதிர்பாராத தருணத்தில், கோ…
-
- 0 replies
- 153 views
-
-
சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம். மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது. மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்…
-
- 0 replies
- 123 views
-
-
ஆஸ்கர் குழுவில் இணைய கமலுக்கு அழைப்பு… ஸ்டாலின் வாழ்த்து! 28 Jun 2025, 8:00 AM 2026-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது மார்ச் 15-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்ட 543 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருதுக்கான அகாடமி வாக்களிப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழாவில் இருந்து கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்ததற்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்ப…
-
- 0 replies
- 147 views
-
-
கண்ணீரும் இசையும் கலந்த சினிமா காவியங்கள்: ஏ. பீம்சிங்கும் தமிழ்சினிமாவின் மெலொடிராமாவின் ஆன்மாவும் சொர்ணவேல் ஜூன் 22, 2025 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே யானைப் படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா தங்கக் கடிகாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் சிறகில் எனை மூடி …
-
-
- 1 reply
- 191 views
-
-
குபேரா : விமர்சனம்! 20 Jun 2025, 6:11 PM ஹீரோயிசம் காட்டுவது நாகார்ஜுனாவா, தனுஷா? ’ஹீரோ ஸ்கிரீன்ல வந்தாலே தன்னால தீப்பிடிக்கும்’ என்று கதை சொல்கிற தெலுங்கு மசாலா பட இயக்குனர்களில் இருந்து நிறையவே வேறுபட்டவர் சேகர் கம்முலா. இவரது திரைப்படங்களில் ஹீரோயிசம் ‘அதீதமாக’த் தென்படாது. அதேநேரத்தில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தந்து திரைக்கதையை நகர்த்துவதில் பெயர் பெற்றவர். இப்படியொரு இயக்குனரின் கையில் தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இரண்டு நாயகர்கள் கிடைத்தால் என்னவாகும்? அவர்களில் ஒருவர் சீனியராகவும் இன்னொருவர் ஜுனியராகவும் இருந்தால் கதை சொல்லலில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்? அப்படியொரு படமானது முழுக்க இயக்குனரின் பாணியில் அமையுமா அல்லது வழக்கமான ‘கமர…
-
- 0 replies
- 119 views
-
-
பட மூலாதாரம்,@RKFI படக்குறிப்பு, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார் 50 நிமிடங்களுக்கு முன்னர் கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கர்நாடகாவில் "தக் லைஃப்" திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. "தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்" என 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. வரும் ஜூன் 5ஆம் தேதி, தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இதுகுறித்து பேசிய கர்நாடகாவின் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர், "கமல்ஹாசனின் க…
-
- 4 replies
- 337 views
- 2 followers
-
-
‘நாயகன்’ என்ற ஒரு க்ளாசிக் படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. பிறகு டைட்டில் டீசர், ட்ரெய்லர், சமூக வலைதளங்களில் ஹிட் அடித்த பாடல்கள் என இப்படத்துக்கு பெரிய ஓபனிங்கை கொடுத்தது. இந்த பெரும் எதிர்பார்ப்பை கமல் - மணிரத்னம் கூட்டணி பூர்த்தி செய்துள்ளதா? டெல்லியில் கேங்ஸ்டராக இருக்கும் ரங்கராய சக்திவேலுக்கும் (கமல்ஹாசன்), போலீஸுக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் பேப்பர் போடும் ஒருவர் தவறுதலாக சுடப்பட்டு இறக்கிறார். இதனால் அவரது மகனான சிறுவன் அமரன் (சிலம்பரசன்) ஆதரவின்றி நிற்கிறார். அவருடைய தங்கை சந்திராவும் காணாமல் போகிறார். பின்னர் அமரனை தத்தெடுத்து தன் சொ…
-
-
- 43 replies
- 2.3k views
- 1 follower
-
-
நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்! 14 Jun 2025, 1:18 PM நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி இன்று (ஜூன் 14) வயது மூப்பு காரணமாக காலமானார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்தவர் கருப்பாயி. நாட்டுப்புறப் பாடகியான இவர் சிறிது காலம் வானொலியில் பணியாற்றினார். இவரது திறமையை அறிந்த நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன் கொல்லங்குடி கருப்பாயியை ஆண் பாவம் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்தார். தொடர்ந்து, ஆண்களை நம்பாதே, கோபாலா கோபாலா, கபடி கபடி, ஏட்டிக்கு போட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக சசிக்குமார் நடித்த காரி படத்தில் நடித்திருந்தார். 1993-ஆம் ஆண்டு இவரது கலை சேவையை பாராட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…
-
- 2 replies
- 296 views
-