வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார்! Posted by: Shankar Published: Monday, April 15, 2013, 9:26 [iST] சென்னை: உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கலந்து கொண்டு கோச்சடையான் பட டிரைலரை வெளியிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச படவிழா நடைபெறுகிறது. இதில் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களுடன், இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. வழக்கமாக பாலிவுட் திரை நட்சத்திரங்கள்தான் இந்த விழாவில் பெருமளவு கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு, கேன்ஸ் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதற்காக மே மாதம் அவர் பிரான்ஸ் செல்கிறார். அவர் இரு வேடங்களில் நடித்து திரைக்கு வ…
-
- 0 replies
- 342 views
-
-
யாதும் ஊரே யாவரும் கேளிர்: திரை விமர்சனம். இலங்கைத் தமிழரான புனிதன் (விஜய் சேதுபதி), லண்டனில் நடக்கும் இசைப் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இருக்கிறார். கொடைக்கானலில் இருக்கும் தேவாலயத்துக்கு வரும் அவர், தன் இசையால் அங்கிருப்பவர்களைக் கவர்கிறார். அங்குள்ள இசைக்குழுவைச் சேர்ந்த மெடில்டா, புனிதனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். இதற்கிடையே கேரட் தோட்டத்தில் வேலைபார்க்கும் இலங்கை அகதியான கனகவள்ளி (கனிகா)யின் தம்பி கிருபாநிதி என்று தன்னைச் சொல்லிக் கொண்டு அவளைத் தேடுகிறான். அந்தப் பகுதி போலீஸ் அதிகாரி (மகிழ் திருமேனி) தன் தந்தையைக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்ட கிருபாநிதியைத் தேடிப் பிடித்து கொல்ல முயல்கிறார். புனிதன் யார்? அவனுக்கும் கிருபாநிதிக்கும் என்ன தொடர்பு? லண்டன்…
-
- 3 replies
- 342 views
-
-
ஜூலை 18: கவிஞர் வாலியின் நினைவு தினம்
-
- 2 replies
- 342 views
-
-
இயக்குநர் ஆனந்த மூர்த்தி விடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கிப் பின்பு முக்கிய உறுப்பினராக மாறியவர் திலீபன். 1987-ல் இலங்கை - இந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது. அதனிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார் திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் உண்ணாவிரதம் தொடங்கிய 11- வது நாள் போராட்டப் பந்தலிலேயே உயிர் துறந்தார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றிய திலீபனின் வாழ்வையும் மரணத்தையும் விறுவிறுப்பான திரைப்படமாக வடித்தெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த மூர்த்தி . அவரைச் சந்தித்தோம். திலீபனைத் தெரியும். அந்தத்…
-
- 0 replies
- 342 views
-
-
பொன்னியின் செல்வன்- 2: லைகா கொடுத்த அப்டேட்! Dec 28, 2022 16:44PM IST ஷேர் செய்ய : பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாகத் திரைப்படமாக எடுத்துள்ளார். இப்படத்தில், கார்த்திக், விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், சரத்குமார், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லைகா புரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட …
-
- 0 replies
- 340 views
-
-
பெருமையாக இருக்கிறது நயன்தாரா: விஜய் அவார்ட்ஸ் வென்றது குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பெருமையாக இருக்கிறது நயன்தாரா என்று விஜய் அவார்ட்ஸ் வென்றது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார். 10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஜுன் 3) கோலகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றார்கள். இவ்விழாவில் ‘மக்கள் மனம் கவர்ந்த நடிகை’ மற்றும் ‘சிறந்த நடிகை’ என்ற இரண்டு விருதுகளை ‘அறம்’ படத்துக்காக வென்றார் நயன்தாரா. இரண்டு…
-
- 0 replies
- 340 views
-
-
இந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி
-
- 0 replies
- 339 views
-
-
-
"விஸ்வரூபம்" டி டி எச் வருமானம் 300 கோடியா? கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 டிசம்பர், 2012 - 19:12 ஜிஎம்டி நடிகர் கமலஹாசனின் “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் எனப்படும் நேரடியாக தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்பும் முறையில் 300 கோடி வருமானம் ஈட்டமுடியும் என்று சில திரைத்துறை நிபுணர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இதுவரை சுமார் 30 லட்சம் டி டி எச் சந்தாதாரர்கள் தலா ரூ 1000 முன்பணம் கட்டி, “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் மூலம் பார்ப்பதற்கு தம்மை பதிவு செய்துகொண்டிருப்பதாக டி டி எச் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்திருப்பதாகவும், இதன் மொத்த வருமானம் 300 கோடி என்பதும் இவர்களின் கணக்காக இருக்கிறது. தமிழ் திரைத்துறை வரலாற்றில் 300 கோடி என்பது இதுவரை காணாத…
-
- 0 replies
- 339 views
-
-
போர் முற்றுப்புள்ளி இல்லை!- ஈழத்திலிருந்து மற்றுமொரு ஆவணம் மே 2009, இனப்போரும் படுகொலைகளும் எங்கேயோ தூர தேசத்தில் நிகழ்ந்து வருவதைப் பற்றி மட்டுமே செய்தியாகப் படித்த வந்த தமிழக மக்களுக்கு தங்கள் அருகிலேயே ஈழத்தில் அப்பாவிப் பொதுமக்கள் உடைமையும் உயிரும் துண்டாடப்பட்டு உரிமைக்கான போர் முடிவுக்கு வந்த மாதம், அங்கே இலங்கையில் மக்கள் சிந்திய ரத்தம் கடல்வழியே தமிழகக் கறைகளை அடைந்து பல்லாயிரக்கணக்கான மக்களை இந்த இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்க செய்தது. போருக்கு பிறகு சூறையாடப்பட்ட அந்த மக்களின் நிலங்களை திருப்பித் தருவதாக அரசு அறிவித்தது ஆனால் இராணுவ ஆக்கிரமிப்புகள் இன்றளவும் அந்த பகுதியில் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. மேலும் சிங்கள மக்களின் குடியேற்றம…
-
- 1 reply
- 339 views
-
-
-
ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இம்முறை கோல்டன் குளோப் விருதை வெல்லும் வாய்ப்பை இழந்தார். டானி பாயிலின் இயக்கத்தில் உருவான '127 ஹவர்ஸ்' படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான பிரிவில் கோல்டன் குளோப் விருதுக்கு ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இப்பிரிவுக்கான விருதை 'தி சோஷியல் நெட்வொர்க்' படத்துக்காக இசையமைப்பாளர்கள் டிரெண்ட் ரெஸ்னர் - ஆட்டிகஸ் ரோஸ் வென்றனர். இதனால், ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என்ற இந்திய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு இம்முறை நிறைவேறவில்லை. முன்னதாக, டானி பாய்லின் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக 2009-க்கான கோல்டன் குளோப் விருதை ரஹ்மான் பெற்றார். அதே படத்துக்காக அவர் இரண்டு ஆஸ்கர்களை அள…
-
- 0 replies
- 339 views
-
-
‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ் திடீர் நிறுத்தம் தமிழில் தொடர்ந்து 36 ஆண்டு களாக வெளியாகிவந்த ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ், தனது வெளி யீட்டை திடீரென நிறுத்திவிட்டது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத்தின் சார்பில் 1980-ம் ஆண்டு ஜனவரியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டது. முதல் இதழை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் வெளியிட்டார். ஒரு லட்சம் பிரதிகள் விற்ற முதல் சினிமா பத்திரிகை என்ற பெருமை இந்த இதழுக்கு உண்டு. இந்த இதழ் சார்பில் தென்னிந்திய திரைக் கலைஞர் களுக்கு ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்’ வழங்கப்பட்டு வந் தன. இந்த விருதை திரையுல கினர் பெருமையாக கருதினர். தொடர்ந்து 36 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருந்த இந்த இதழ், திடீரென நிறுத்தப் பட்டுவிட்டத…
-
- 0 replies
- 338 views
-
-
திரை விமர்சனம்: எய்தவன் பெற்றோருடன் சென்னையில் வசிக்கும் கிருஷ்ணா (கலையரசன்) நடுத்தரக் குடும் பத்தை சேர்ந்தவர். இவரது தங்கைக்கு (சவுமியா) மருத்துவராக வேண்டும் என்று சிறுவயது முதலே கனவு. நான்கு மதிப்பெண்கள் குறைவதால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் போகிறது. தங்கையின் கனவை நிறைவேற்ற இடைத்தரகர்களை நாடும் கிருஷ்ணா, தனியார் மருத்துவக் கல்லூரியில் ரூ.50 லட்சம் விலை கொடுத்து சீட் வாங்குகிறார். எதிர்பாராத விதமாக, அந்தக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாகிவிடுகிறது. மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர். அதிர்ச்சியடையும் கிருஷ்ணா, கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில் இறங்கு கிறார். அதுவே அவரது குடும…
-
- 0 replies
- 338 views
-
-
பிரியங்காவின் 'பேவாட்ச்' போஸ்டர் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹொலிவூட் நடிகர் டுவென் ஜோன்சன் உடன் ‛‛பேவாட்ச்'' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா, கறுப்பு நிற உடையில், பின்னணியில் இறக்கைகளுடன், உதட்டின் ஓரத்தில் சிறிது இரத்தம் வடிந்தபடியும், தொடையில் துப்பாக்கியுடனும் போஸ் கொடுத்திருக்கிறார். பிரியங்கா சோப்ராவின் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/185310/ப-ர-யங-க-வ-ன-ப-வ-ட-ச-ப-ஸ-டர-#sthash.MWsXtAC9.dpuf
-
- 0 replies
- 338 views
-
-
உள்ளொழுக்கு : விமர்சனம்! christopherJun 26, 2024 12:35PM இப்படியெல்லாம் எப்படிப் படமெடுக்க முடியுது?! மழை எப்படிப் பெய்தாலும் பிடிக்கும் என்று சொல்பவர்கள் மிகச்சிலரே. தூறல், சாரல், வெயில் மழை, அடைமழை, சூறைக்காற்று அல்லது இடி மின்னலுடன் கூடிய பேய் மழை, புயல் மழை என்று ஒவ்வொருவரின் மன இயல்புகளுக்குத் தகுந்தவாறு ஒரு சில வகை பொழிதல் மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். அப்படிப்பட்டவர்களும் கூடத் திரைப்படங்களைப் பார்க்கும்போது, அதில் வரும் திருப்பங்கள் இடி மின்னலைப் போலத் தாக்கம் தர வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அவ்வாறில்லாமல் பூகம்பம் போன்ற பேரிடர் தன்மையிலான திருப்பங்களையும், மழை நீர் மௌனமாக வடிவதைப் போலச் சொல்வதென்பது ரொம்பவே அரிது. அப்படியொரு படமாக அமைந்திரு…
-
- 0 replies
- 338 views
-
-
விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் டிரைலர் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. கமலின் விஸ்வரூபம் 2 படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதன் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட்டனர். See more at: http://vuin.com/news/tamil/under-water-action-sequence-in-viswaroopam-2
-
- 0 replies
- 338 views
-
-
''அவர் என்ன பண்ணாலும் தங்கம்'' லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் விக்ரம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விக்ரம் படத்துக்கு நல்ல வரவேற்பை கிடைத்துவருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இந்தப் படம் ரூ.25 கோடி வசூலித்துள்ளதால் விநியாகிஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விக்ரம் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை சிரஞ்சீவி…
-
- 1 reply
- 337 views
-
-
அரசியலுக்குள் நுழையத் தயாராகிவிட்டாராம் நமீதா. அவர் அரசியல் சேவையாற்றப் போகும் கட்சி பாஜக. படங்களில் நடிக்க பெரிதாக ஆர்வம் காட்டாத நமீதா சொந்தப் படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும் என்று ஓரமாக வைத்துவிட்டு, வேறொரு முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் நமீதா. அது அரசியல். சமீபத்தில் இரு பெரிய தேசிய கட்சிகள் அவரிடம் இதுகுறித்து பேச்சு நடத்தியதாகத் தெரிகிறது. அவற்றில் காவிக் கட்சிதான் நமீதாவை அள்ளிக் கொண்டு போவதில் அதிக ஆர்வம் காட்டுகிறதாம். தமிழக பாஜகவை வலுப்படுத்தப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஐடியா இது என்கிறார்கள். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட நமீதாவும், சீக்கிரமே தமிழக மேடைகளில் தோன்றி மச்சான்ஸ்…
-
- 0 replies
- 337 views
-
-
சென்னை: விஜய்யின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23-ம் தேதி வெளியிடலாம்... என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிவிட்ட இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகாததால், திருட்டு டிவிடிகள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார். திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்தப் படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜய்யும் அவரைச் சார்ந்தவர்களும் கூறிவருவது அரசுத் தரப்புக்கு கடும் அதிருப்தியை உரு…
-
- 0 replies
- 337 views
-
-
2018 வசூலில் ரஜினியை தோற்கடித்த விஜய் ஆதாரத்துடன் P.T செல்வகுமார்
-
- 0 replies
- 337 views
-
-
நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம் - நயன்தாரா . சமீபத்தில் இடம்பெற்ற சினிமா விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நயன்தாரா காதலிப்பதால் நிம்மதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.நிம்மதி யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இரசிகர்கள் அன்புக்கு நன்றி. இதற்கு மேல் என்ன வேண்டும்? சமீப காலமாக ஜோடியாக சந்தோஷமாக படங்கள் பகிர்வது பற்றி கேட்கிறீர்கள். சந்தோஷமாக இருப்பதால் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோஷத்தைவிட இப்போது நிம்மதியாக உணர்கிறேன் எனக் கூறியுள்ளார். http://www.vanakkamlondon.com/நிம்மதி-யாரிடம்-இருந்து/
-
- 0 replies
- 337 views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக நடத்திய சென்னை மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகளையும், தனது தீவிர ரசிகர்களையும், புத்தாண்டையொட்டி திங்கள் கிழமை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த மாதம் 12-ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி, ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், பங்கேற்று பேசும்போது: புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால். தனது உடல் நலம் பாதித்தது என்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ரசிகர்கள். அதனை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்…
-
- 0 replies
- 337 views
-
-
அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய ஜோதிகா நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை …
-
- 0 replies
- 337 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் உருவாகியிருக்கும் "ஒக்காடு மிகிலாடு" Okkadu Migiladu என்ற திரைப்படத்தின் முன்னோடி காட்சி (trailer) வெளியாகியுள்ளது. குறித்த திரைப்படமானது "நான் திரும்ப வருவேன்" என தமிழ் மொழியில் வெளியாகவுள்ளதுடன், தமிழ் மொழி மூலமான இந்த திரைப்படத்தின் காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்றைய தினம் வெளியாகியுள்ள "நான் திரும்ப வருவேன்" திரைப்படத்தின் முன்னோடி காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Twitter Ads info and privacy …
-
- 0 replies
- 336 views
-