வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் - 2: காப்பியடிக்கப்பட்டதா படத்தின் போஸ்டர்? பட மூலாதாரம்,TWITTER/ GETTY IMAGES நடிகர் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்று இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணி கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியிருந்த இந்த படம் அப்போது கலவையான விமர்சனங்களை பெற்றது. வெகுஜன மக்களிடம் படம் மிகப்பெரிய வரவேற்…
-
- 0 replies
- 398 views
-
-
தாதா சாகேப் பால்கே விருது! மின்னம்பலம் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் நடிகர்கள் அஜித், தனுஷ், நடிகை ஜோதிகா உள்ளிட்டோர் விருது பட்டியலில் உள்ளனர். சிறந்த படமாக செழியன் இயக்கிய "டூ லெட்" படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசுரன் திரைப்படத்துக்காக தனுஷ் இந்த விருதைப் பெற உள்ளார். பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ராட்சசி படத்துக்காக நடிகை ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இச…
-
- 0 replies
- 422 views
-
-
வீரமங்கை வேலுநாச்சியார் ஆகிறார் நயன்தாரா.! சுசிகணேசன் இயக்கும் படத்தில் வேலுநாச்சியாராக நயன்தாரா நடிக்க உள்ளார். விரும்புகிறேன், பைவ் ஸ்டார், திருட்டுப் பயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசிகணேசன். அவர் அடுத்ததாக 17ம்...நூற்றாண்டில் சிவகங்கை சீமையை ஆண்ட வேலுநாச்சியார் கதையை படமாக்க ஆய்வில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர் வீரமங்கை வேலுநாச்சியார். அவரது கதையில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளனர். விரைவில் இந்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. https://vanakkamlondon.com/cinema/2020/12/96689/# டிஸ்கி : நல்லதொரு தேர்வு..👍
-
- 4 replies
- 683 views
-
-
கொரோனாத் தொற்றுக்கு இலக்கானார் பிரபல தெலுங்கு நடிகர் `ராம் சரண்`! Ilango BharathyDecember 29, 2020 கொரோனாத் தொற்றுக்கு இலக்கானார் பிரபல தெலுங்கு நடிகர் `ராம் சரண்`!2020-12-29T08:52:11+05:30சினிமா FacebookTwitterMore பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜாவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாதநிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனத…
-
- 0 replies
- 470 views
-
-
சைக்கோபாத் : பாலு மகேந்திரா (By நட்சத்திரன் செவ்விந்தியன்) பாலு மகேந்திரா மிகத்தவறாக உயர்த்தி மதிப்பிடப்பட்ட( Over rated) கலைஞன். ஆள் ஒரு அசலான கலைஞனே கிடையாது என்கிறார் பின் இணைப்பாக ஆங்கிலத்தில் இணைக்கப்பட்ட அரிய கட்டுரையின் ஆசிரியர். கிறிஸ்தவரும் நவீனகால ஈழத்தவருமான பாலு இலண்டனில் கல்விகற்றுவிட்டு இந்தியா வரும்போது தமிழகம் அப்போதும் ஒரு நிலப்பிரபுத்துவ சமூகமாகவே இருந்தது. பாலு இந்தியாவின் நவீன நகரமொன்றான பூனே திரைப்படக்கல்லூரியில் Cinematography கற்று தமிழகத்துக்கு வரும்போது அங்கு Sofa கலாச்சாரமே வரவில்லை. பாய்தான். ஒரு Stylist ஆன பாலு ஆங்கிலத்தை இந்திய ஆங்கில உச்சரிப்பிலன்றி standard ஆக உச்சரிக்கத்தெ…
-
- 1 reply
- 1k views
-
-
பிரசாத் ஸ்டூடியோ: காணாமல் போன இளையராஜாவின் கூடம் - வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட ஒரே அரங்கு பட மூலாதாரம்,ILAYARAJA FB இசை அமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்வது தொடர்பாகவும், அங்கு இருந்த அவரது இசைக்குறிப்புகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை பெறவும் அந்த ஸ்டூடியோவுக்கு சென்ற இளையராஜா தரப்புக்கு திங்கட்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், அந்த ஸ்டூடியோவுக்குள் இளையராஜா முன்பு பயன்படுத்திய இசை அரங்கு மற்றும் தியான அறை இரண்டுமே அங்கு இல்லை. அந்த இடம் மாற்றப்பட்டிருப்பதாக இளையராஜா தரப்பு கூறுகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி இளையராஜா தரப்பு, அவரது பொருட்களை திரும்பப்பெறுவது தொடர்பாக …
-
- 0 replies
- 434 views
-
-
ஒரு பக்க கதை மேகா ஆகாஷ் - காளிதாஸ் ஜெயராம் இளம் காதலர்கள். காளிதாஸ் தனது அரியர்ஸை முடித்து வேலைக்குச் சென்று சம்பாதிக்க ஆரம்பித்ததும் திருமணம் என இருவர் குடும்பமும் சம்மதமும் சொல்லியிருக்கிறது. இந்நிலையில் மேகா ஆகாஷ் கர்ப்பமாக இருக்கிறார் என்கிற தகவல் தெரிய வர, இதனால் மேகா, காளிதாஸ் என இருவருமே அதிர்ச்சியாகிறார்கள். ஏன் அந்த அதிர்ச்சி, அந்த கர்ப்பத்தால் என்னென்ன நடந்தது என்பதே 'ஒரு பக்க கதை'. நிஜமாகவே ஒரு பக்கத்தில் சொல்லியிருக்க வேண்டிய கதை. அதை நீட்டித்து, கூடுதலாகச் சமுதாயத்துக்காக ஒரு கருத்தையும் சொல்ல வேண்டும் என்று நினைத்த நேரத்தில் பக்கத்தில் இடம் காலியாகிவிட்டிருக்கிறது. ஆனால் இந்த நீளம் மட்டுமே படத்தின் ஒரே பிரதானப் பிரச்சினை. …
-
- 0 replies
- 663 views
-
-
அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனா: தனிமைப்படுத்தலில் ரஜினி.! அண்ணாத்த படக்குழுவில் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கதாநாயகனாக நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பித்து நடைபெற்று வந்த நிலையில் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர்-14ம் திகதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அண்ணாத்த படக்குழுவில் எட்டுப் பேருக்கு தொற்று உறுத…
-
- 0 replies
- 487 views
-
-
சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உலக அளவில் கவுரவமிக்கதாகக் கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருதுப் போட்டியில் மலேசியா சார்பாக பங்கேற்க தகுதி பெற்றுள்ளது 'பரமதம்' திரைப்படம். 24 வயதான இளைஞர் விக்னேஷ் பிரபு, தன் சகோதரர் தனேஷ் பிரபுவுடன் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார். கடந்த ஆண்டே வெளியீட்டிற்கு தயாராகிவிட்ட போதிலும், கோலிவுட், ஹாலிவுட் உள்ளிட்ட இறக்குமதி படங்களின் தொடர் வெளியீடுகள், கொரோனா விவகாரம் ஆகிய காரணங்களால் இப்படம் இன்னும் மலேசியாவில் திரை காணவில்லை. எனினும் 18 அனைத்துலக விருதுகள் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது. இதை அங்கீகரிக்கும் வகையில் மலேசிய சாதனைப் புத்தகத்திலும் ஆசிய சாதனைப் புத்தகத்திலும் இ…
-
- 1 reply
- 397 views
-
-
"இவ்வளவு பிற்போக்கு போலித்தனமா?!"- கெளதம் வாசுதேவ் மேனன்களுக்கு ஒரு தாயின் கடிதம்! எம்.எஸ்.அனுசுயா பாவக் கதைகள் நானும் ஒரு மகளுக்குத் தாய் என்பதால் கெளதம் என்ன தீர்வை முன்வைக்கிறார் என்கிற ஆர்வத்தோடு பார்த்தேன். மனைவி, மகன், இரு மகள்கள் என மதுரையில் வாழும் மத்திய வர்க்க குடும்பத் தலைவர் சத்யா. அவரின் செல்ல மகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறை குடும்பத்தை எவ்விதம் பாதிக்கிறது, அந்த அசம்பாவிதத்தை அந்தக் குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது, எப்படி அதைக் கடந்து வந்தார்கள் என்ற கருவை மையப்படுத்தியப் படம். நானும் ஒரு மகளுக்குத் தாய் என்பதால் கெளதம் என்ன தீர்வை முன்வைக்கிறார் என்கிற ஆர்வத்தோடு பார்த்தேன். …
-
- 1 reply
- 500 views
-
-
கீர்த்தி சுரேஷின் பாராட்டை பெற்ற குறும்படம் டீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில் வெளியான குறும்படம் "பெண் உறுப்பு". அருண் மிஜோ எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.ஆர்.வினோத் நடித்திருந்தார். பெண்களுக்கான சமூக கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த குறும் படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த படம் ஒரு விழிப்புணர்வாக கருதப்படுகிறது. தற்போது இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பார்வையை அறம் பட இயக்குனர் கோபி நாயனார் வெ…
-
- 0 replies
- 436 views
-
-
தனுஷின் ஹொலிவூட் பாய்ச்சல் | றூசோ சகோதரர்களின் இயக்கத்தில் தயாராகும் ‘The Gray Man’ இல் நடிக்கிறார் ஹொலிவூட்டில் நடக்கப் புறப்பட்ட சில நடிகர்களில் தனுஷ் கொஞ்சம் வேகமாக நடக்கவாரம்பிதிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். 2018 இல் வெளியான The Extraordinary Journey of the Fakir என்ற ஆங்கில மொழிப்படம் அவரது முதலாவது. கென் ஸ்கொட்டின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட இக் ஹொலிவூட் படம் பிரன்ச் சிரிப்புச் சாகசக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. பக்கிரி ஒருவர் (இந்தியர்களைப் பக்கிரிகள் என்று பரிகாசம் செய்வது வின்ஸ்டன் சேர்ச்சில் காலத்தில் ஆரம்பமானது) ஐக்கியா தளபாடத்துக்குள் மாட்டிக்கொள்வதைச் சிரிப்பாக்குவது இப்படத்தின் சாகசம். (இந்த இடத்தில் தீபா மேத்தாவின் ஞாபகம் வந்தால் கொம்பனி பொறு…
-
- 2 replies
- 568 views
-
-
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான அசுரன் இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சர்வதேச கோவா திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனு…
-
- 0 replies
- 402 views
-
-
நடிகை ஷகிலா வாழ்க்கை படம் - "நான் செய்த தவறை செய்யாதீர்கள்" 18 டிசம்பர் 2020 நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது. அந்த படத்துக்கு "ஷகிலா" என்றே பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 1990களில் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த நாயகியாகவும், வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர் வட்டத்தை சேர்த்தவர் நடிகை ஷகிலா. அந்த காலகட்டத்தில் இவரது படங்கள் திரையரங்கில் ஓடியதால் வெள்ளிக்கிழமையன்று புதிய படங்களுக்கு திரையரங்கு கிடைக்க முடியாத நிலை நிலவியது. முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கே அது பெரும் சவாலாக இருந்தது. இதன் பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை முற்…
-
- 0 replies
- 375 views
-
-
சினிமா 2020 : இந்த வருடம் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள்! மின்னம்பலம் புதிய நார்மலுக்குள் இருக்கிறோம். கொரோனா எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. சராசரிகள் அசாதாரண நிலைக்குள்ளாக சிக்கித் தவிக்கிறது. இதில் சினிமாவும் விதிவிலக்கில்லை. கடந்த வருடம் சுமார் 250க்கும் மேல் படங்கள் வெளியானது. இந்த வருடம் சுமார் 50 படங்கள் கூட வெளியாகியிருக்காது என்பதே உண்மை. ஆனாலும், இந்த வருடம் ரிலீஸான படங்களில் ரசிர்களின் மனதில் நின்ற, ரசிகர்கள் கொண்டாடிய டாப் 10 படங்களை மீள் பதிவாக இங்கே பட்டியலிடுகிறோம். தர்பார் இந்த வருடத்தின் ஓபனிங் திரைப்படமாக ரஜினி நடிப்பில் தர்பார் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் படத்துக்குப் …
-
- 1 reply
- 472 views
-
-
அவென்ஜர்ஸ்' இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் தனுஷ் நடிகர் தனுஷ் சகோதரர் செல்வராகவன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்கம் எனப் படிப்படியாக உயர்ந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். தற்போது மூன்றாவது பாலிவுட் படமான 'அட்ரங்கி ரே' படத்தில் நடித்து வருகிறார். கென் ஸ்காட் இயக்கிய சர்வதேச திரைப்படமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பாகி…
-
- 0 replies
- 591 views
-
-
பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன் - சாந்தன் பாலுமகேந்திராவுக்குப் பின்னர் இந்தியச் சினிமாவில் ஒளிப்பதிவாளராக உள் நுழையும் ஈழத்துக் கலைஞன்- “சாந்தன்” மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் “பிசாசு -2” பட ஒளிப்பதிவாளர் ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் எனபவர் நாளுக்குநாள் வளர்ந்து வரும் தொழில் நுட்ப உத்திகளை உள்வாங்கக் கூடியவராக இருக்க வேண்டும். அதே நேரம் தான் படம் பிடிக்கும் காட்சிகள் பார்ப்பவரின் கண்ணுக்குள் குத்தாமல் இயல்பாக தோற்றம் அளிக்கும் வகையில் தன் தொழில்நுட்ப ஞானத்தைப் பயன்படுத்தக் கூடிய நுண்ணறிவு கொண்டவராக இருக்க வேண்டும். இதுதான் சாந்தனின் படப்பிடிப்புகளில் நான் கண்ட Miracle! “உரு” …
-
- 2 replies
- 1.1k views
-
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை. சித்ரா கன்னத்தில் இருந்த இரத்த காயம்! ஹொட்டலில் கணவருடன் நடந்தது என்ன? கசிந்த முக்கிய தகவல் - நடிகை சித்ரா மரணமடைந்துள்ள நிலையில் அவருடன் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த குமரன் இரங்கல் தெரிவித்துள்ளார். சித்ராவின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவர் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தான் சித்ரா மிகவும் பிரபலமானார். அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். அவருக்கு ஜோடியாக குமரன் என்பவர் கதிர் கதாபாத்திரத்தில் நடித்தார். சித்ராவின் மரணம் குமரனுக்கு பெ…
-
- 27 replies
- 3.8k views
-
-
மைத்திரேயி ராமகிரிஷ்ணன் | இந்த வருடத்துக்கான சிறந்த நடிகர்களில் ஒருவர் – நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகை மிசிசாகா, ஒன்ராறியோவைச் சேர்ந்த 18 வயது தமிழ்க் கனடிய நடிகையான மைத்திரேயி ராமகிரிஷ்ணன், நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிண்டி கேலிங்கின் இணைத் தயாரிப்பான Never Have I Ever என்னும் நெற்ஃபிளிக்ஸ் நகைச்சுவைத் தொடர் ஒன்றில் நடித்துப் புகழ்பெற்ற மைத்திரேயிக்கு இதுவே முதல் நடிப்பு அனுபவம். 15,000 இளம் நடிகைகளுடன் போட்டி போட்டு இத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் சந்தர்ப்பத்தை அவர் பெற்றிருந்தார். Never Have I Ever தொடரின் முதலாவது அங்கம் முடிவடைந்து தற்போது இரண்டாவது அங்கத்துக்கான (S…
-
- 0 replies
- 341 views
-
-
உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் ஓபரா ஹவுஸில் மிகப்பெரும் சண்டையுடன் படம் தொடங்குகிறது. அப்போது ‘ப்ரோட்டோகனிஸ்ட்’ என்ற அழைக்கப்படும் நாயகன் (ஜான் வாஷிங்டன்) எதிரி ஒருவனிடம் விநோதமான முறையில் ரிவர்ஸில் சுடும் துப்பாக்கி ஒன்று இருப்பதை காண்கிறார். அந்த சண்டையில் எதிர்களின் கையில் நாயகனை மீட்டு தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறது ‘டெனெட்’ என்ற ரகசிய இயக்கம். காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் புல்லட்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்படுவதாகவும், மேலும் கடந்த காலத்தையே அழிக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய ஆயுதம் ஒன்றும் இருப்பதாகவும் நாயகனிடம் விஞ்ஞானி ஒருவர் சொல்கிறார். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக மும்பை வருகிறார் நாயகன். அங்கே அவருக்கு அறிமுகமாகும் நீல் என்பவரின் உதவியுடன் ஆயுத விய…
-
- 1 reply
- 1.3k views
-
-
@teakkadai1 என்னும் முரளிக்கண்ணன் பதிவு. கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன். ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவி…
-
- 0 replies
- 685 views
-
-
நெஞ்சமெல்லாம் பல வண்ணம் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் - சமந்தா, அஞ்சலி நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டுள்ள `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ள படம் `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்'. தெலுங்கில் “ சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிய இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இசை - மிக்கி ஜே.மேயர், பாடல்கள் - அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண…
-
- 0 replies
- 571 views
-
-
யூடியூப் தளத்தில் 1 பில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்தது ரௌடி பேபி பாடல்! நடிகர் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் அட்டகாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ரௌடி பேபி பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம், யூடியூபில் 900 மில்லியன் அதாவது 90 கோடி பார்வைகளை பெற்ற குறித்த பாடல் தற்போது 100 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. தென்னிந்திய மொழிகளில் வேறு எந்தப் பாடலும் யூடியூப் தளத்தில் இந்த எண்ணிக்கையைத் தொட்டதில்லை. இதுகுறித்து நடிகர் தனுஷ் தெரிவிக்கையில், “கொலைவெறி பாடல் வெளியான 9-வது வருடத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது ரௌடி பேபி பாடல். 100 கோடி பார்வைகளைத் …
-
- 8 replies
- 1.3k views
-
-
தமிழ் சினிமாக்களில் அம்பேத்கர்... ஏன், எதற்கு, எப்படி?! #Ambedkar சுகுணா திவாகர் அம்பேத்கர் அம்பேத்கரின் நினைவுதினமான இன்று அவரை தமிழ் சினிமா எவ்வாறு கையாள்கிறது, எவ்வாறு கையாளவேண்டும் என்பதை அலசுகிறது இக்கட்டுரை. அரசியல் சார்பற்றது என்று சொல்லப்பட்டாலும்கூட, தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே அது ஏதோ அரசியலைச் சார்ந்துதான் இருக்கிறது, படத்தின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, சமயங்களில் பாடலாசிரியரின் அரசியல்கூட திரைப்படங்களில் பிரதிபலிப்பது உண்டு. 'சிவகாமியின் மகனிடம் சேதி சொல்லடி' என்று காங்கிரஸில் சேர காமராஜரிடம் கண்ணதாசன் 'பட்டணத்தில் பூதம்' பாடலின் மூலம் தூதுவிட்டார். …
-
- 0 replies
- 568 views
-
-
நடிகர் விஜயின் சொத்துகளை இலங்கை அரசு சுவீகரிப்பு.? - விஜய் தரப்பு பதில்.! தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிவரும் இளைய தளபதி விஜய்க்கு சொந்தமாக இலங்கையில் உள்ள சொத்துகள் சுவீகரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் குறித்து விஜய் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான சங்கீதாவையே இளைய தளபதி விஜயின் திருமணம் செய்திருந்தார். அந்த வகையில் இலங்கையில் பல சொத்துகள் இளைய தளபதி விஜய் குடும்பத்தின் பெயரில் ஏறங்கனவே வாங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த சொதுகளை இலங்கை அரசு சுவீகரித்துள்ளதாக தகவல்கள் இணைய வெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தகவலை நடிகர் விஜய் தரப்பு மறுத்திருப்…
-
- 0 replies
- 398 views
-