வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
“சூரரைப்போற்று” படத்திற்கு தடையில்லை! சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்திற்கு தடையில்லா சான்று கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தை வருகிற 30ம் தேதி நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த போதும் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா, சூரரைப்போற்று படம் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய கதைக்களத்தை கொண்டது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற வேண்டி உள்ளதாகவும் இன்னும் சில என்.ஓ.சி. எனப்படும் தடையில்லா சான்றிதழ்களுக்கு ஒப்புதல் பெற வேண்டியுள்ளதால் படம் திட்டமிட்டபடி 30ஆம் திகதி வெளியாகாது என கூறி இருந்தார். …
-
- 0 replies
- 745 views
-
-
ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் - மத்திய அரசு விருது அறிவிப்பு இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவித்துள்ளது. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இருந்தார். இந்திய சினிமாவில் இது புதிய முயற்சி என்று பலரும் பாராட்டினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வ…
-
- 1 reply
- 641 views
-
-
நடிகர் கவுண்டமணி உடல் நலம் குறித்து வதந்தி பரப்பிய யூரியூப் சேனல் மீது காவல்நிலையத்தில் புகார் ! ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக தொடர்ந்து வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவி வந்தன. இந்நிலையில் இன்று நடிகர் கவுண்டமணி உடல்நலம் குறித்து வதந்தி பரப்பிய யூரியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது வழக்கறிஞர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், தான் நலமுடன் உள்ளதாகவும், இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கவுண்டமணி விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையி…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாடல் பதிவுக்கு முன் SPB இதைத்தான் செய்வார் - ரகசியம் உடைக்கும் யுகபாரதி
-
- 0 replies
- 524 views
-
-
“புத்தம் புதுக் காலை” (அமேசான் பிரைம் - OTT வெளியீடு) ஆர். அபிலாஷ் ஐந்து குறும்படங்களையும் படங்களையும் பார்த்தேன். பலரும்சொல்வதைப் போல பழமை வீச்சம், தேய்வழக்குகள் அதிகம். எனக்கு அதை விட இப்படங்களின் திரைக்கதை அவசரமாய்உருவாக்கப்பட்டதைப் போலத் தோன்றுகிறது. ஓரளவுக்குநன்றாக வந்த Coffee, Anyone? கூட கிளைமேக்ஸை கோட்டைவிட்டதை போலத் தோன்றுகிறது. அப்படத்தைப் பற்றி முதலில்சொல்லுகிறேன். சுஹாசினி எழுதி இயக்கிய இப்படத்தில் மற்ற படங்களை விடதிரைக்கதை மேலாக இருக்கிறது. மூன்று சகோதரிகளின்வாழ்வில் வரும் சிறிய நெருக்கடிகள், அதை அவர்கள் ஒரேசம்பவத்தின் - அம்மா கோமாவுக்கு சென்று, வீட்டில் வைத்துஅப்பாவால் கவனிக்கப்பட்டு, அதிசயமாய் மீண்டு …
-
- 0 replies
- 678 views
-
-
ஜோதிகா வழங்கிய ரூ.25 லட்சம் நிதி உதவியால் புத்துயிர் பெற்ற அரசு மருத்துவமனை நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து ஒரு விருது விழாவில் பேசிய ஜோதிகா, “கோவிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோவிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்திற்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோவிலுக்கு செல்ல ம…
-
- 5 replies
- 1.4k views
-
-
உலக சினிமா - அப்பாஸ் கிராஸ்தமி.! உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் திருப்பியதில் முக்கியமானவர் அப்பாஸ் கிராஸ்தமி (Abbas Kiarostami). 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவர் ஆரம்பகாலத்தில் விளம்பரப் படங்களை வடிவமைக்கும் ஓவியராக இருந்தார். 1969-ல் இவர் இயக்கிய 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமே இவரது முதல் திரைமுயற்சி. ‘Taste of Cherry’, ‘Where is the friends Home’, ‘Through the Olive trees’, ‘Close up’, ‘Life and nothing more’, ‘Ten’ ஆகியவை அப்பாஸ் கிராஸ்தமி இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் சில. டெஹ்ரானை சுற்றியுள்ள கிராமங்களே இவரது படங்களின் முக்கிய கதைக் களன்களாக இருந்து வருகின்றன. கிராமத்து மனிதர்களையே இவர் பெரும்பாலும் தனது படங்களில் நடிக்க வைக…
-
- 0 replies
- 454 views
-
-
எள்ளு வய பூக்கலையே’ பாடலுக்கு பின் இருக்கு ரகசியம் எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா சாவையும் கூறு போட்டு கொல்லய்யா கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும் அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு தலைச்சம் புள்ளை இல்லாம சரிஞ்சது எத்தன ஆட்சி நீயே எங்க ராசா வா வா களத்துக்கு…
-
- 0 replies
- 559 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் அமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் "புத்தம் புது காலை", ஐந்து குறும்படங்களின் தொகுப்பு. கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பாஸிட்டிவான உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட படங்கள் இவை. பட மூலாதாரம், PUTHAMPUTHUKALAI படக்குறிப்பு, இளமை இதே இதோ பட காட்சி முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இருவருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் …
-
- 0 replies
- 367 views
-
-
நடிகை குஷ்பு மீது மாற்றுதிறனாளிகள் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் மதுரை, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் தான் 6 ஆண்டுகள் இருந்ததாகவும், தனக்கு அங்கு மரியாதை தரப்படவில்லை என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சியில்லாத கட்சி என்று அவர் விமர்சனம் செய்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நி…
-
- 0 replies
- 312 views
-
-
விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் அருமையான கிராமிய மணம் கமழும் ஓர் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் P.விருமாண்டி. ஏற்கெனவே நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை இது. இவ்வாறான பல சம்பவங்கள் நிஜமாகவே நிகழ்ந்திருந்தாலும், இத்திரைப்படத்தின் மையக்கருவை ஒத்த கதையினை வேறெந்தத் திரைப்படத்திலும் இதுவரை நான் பார்த்ததில்லை. தமிழகத்தில் கிராமத்து மக்களின் கடினமான வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான சவால்களையும் இத்திரைப்படம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. கலகலப்பும், கலக்கமும் நிறைந்த காட்சிகள் மாறிமாறி இத்திரைப்படத்தின் முதற்பாதியை சற்று மசாலாத்தனத்துடன் நிறைத்திருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. பரப…
-
- 14 replies
- 1.5k views
-
-
இரண்டாம் குத்து: ஆபாசத்தை ஒழித்து இளைஞர்களைக் காப்போம்! மின்னம்பலம் இரண்டாம் குத்து என்கிற இருட்டு அறையில் முரட்டுக்குத்து - பாகம் 2 திரைப்படம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. முதல் பாகம் ரிலீஸானபோதே இப்படிப்பட்ட பஞ்சாயத்துகளை சளைக்காமல் எதிர்கொண்ட அத்திரைப்படம் கட்டுக்கடங்காத பார்வையாளர்களை தியேட்டரிலும், சோஷியல் மீடியாக்களிலும் பெற்றது. அந்தப்படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் 20 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான். நல்ல லாபத்தையும் சம்பாதித்தது. அப்படி இருந்தும், இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் ரிலீஸானதிலிருந்து இந்தப்படத்தை எதிர்த்துப் பேசுபவர்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். இயக்குநர் பாரதிராஜா தொடங்கிவைத்த …
-
- 14 replies
- 1.7k views
-
-
-
-
- 0 replies
- 458 views
-
-
விஜய் சேதுபதி நடிக்கவுள்ள முத்தையா முரளிதரன் பயோபிக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்த் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதிதான். அவருடைய நடிப்பில் 'கடைசி விவசாயி', 'மாஸ்டர்', 'மாமனிதன்', 'உபென்னா', 'இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் தயாராகியுள்ளன. 'லாபம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'லால் சிங் சத்தா', 'துக்ளக் தர்பார்', 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன. இந்தப் படங்கள் போக முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற…
-
- 1 reply
- 487 views
-
-
படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல ஹீரோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி எர்ணாகுளம் மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டொவினோ தாமஸ். இவர் நடித்த கோதா, அபியம் அனுவம் மற்றும் மாயநாதி போன்ற படங்கள் பெறும் வரவேற்பை பெற்றன. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். இதனிடையே அவர் தற்போது வரவிருக்கும் காலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் காலப்பட படபிடிப்பின் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக டொவினோ தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கேரள் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் டொவினோவ…
-
- 3 replies
- 1.1k views
-
-
`காணக்கூடாத சாதி'யும் பெண் தெய்வமும்... லீனா மணிமேகலையின் `மாடத்தி' பேசும் அரசியல் என்ன? சுகுணா திவாகர் மாடத்தி திரையரங்குகளிலோ ஓடிடி தளங்களிலோ 'மாடத்தி'யைக் காண இயலாத சூழலில் நீங்கள் 'மாடத்தி'யை இணையத்தின் மூலம் பார்ப்பதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. சாதிய ஒடுக்குமுறையும் தீண்டாமையும் இந்தியாவின் நூற்றாண்டுகால துயர வரலாறு. தீண்டப்படாத சாதிகள் இருப்பதைப்போலவே 'காணக்கூடாத சாதிகளாக' இருப்பவர்கள் புதிரை வண்ணார்கள். இவர்கள் பகலில் நடமாடக்கூடாது. இரவில் மட்டும்தான் வெளியில் வரவேண்டும். எப்படி பட்டியலினச் சாதிகள் பிற ஆதிக்கச்சாதிகளால் ஒடுக்கப்படுகிறார்களோ, அதைப்போல பட்டியலினச் சாதிகளால் ஒடுக்குமுறைக்கு உள்…
-
- 0 replies
- 677 views
-
-
கொரோனா: மருத்துவமனையில் தமன்னா மின்னம்பலம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்றால் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன், சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டத…
-
- 8 replies
- 896 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் வெளிநாடுகளில் வேலைக்காகச் செல்பவர்களின் துயரங்களைச் சொல்லும் படங்கள் தமிழில் ஒன்றிரண்டு வந்திருக்கின்றன. ஆனால், க/பெ ரணசிங்கம் வெளிநாடுகளில் வசிப்பவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் மிகக் கொடூரமான ஒரு சிக்கலை விவரிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் ரணசிங்கம் (விஜய் சேதுபதி), அரியநாச்சியை (ஐஸ்வர்யா ராஜேஷ்) கல்யாணம் செய்த பிறகு வேலை பார்ப்பதற்காக வளைகுடா நாடு ஒன்றுக்குச் செல்கிறார். அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் அவர் இறந்துவிட, அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர அரியநாச்சி நடத்தும் போராட்டம்தான் படம். சிறையில் இருக்கும் கணவனை மீட்க, கடத்தப்பட்ட கணவனை மீட்க, கு…
-
- 3 replies
- 890 views
-
-
தமிழில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படமாகிறது! மின்னம்பலம் சில்ஸ் ஸ்மிதாவின் வாழ்க்கை கதை தமிழில் ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் படமாகிறது. 1980, 90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. பல்வேறு படங்களில், தனிப் பாடல்களில் நடனத்தாலும், நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்தார். இப்போதும் சில்க் ஸ்மிதாவுக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் மிகவும் சிரமப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். பல்வேறு திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘தி டர்டி பிக்சர்’ என்ற பெயரில் இந்தியில் படமாக்கினார்க…
-
- 0 replies
- 406 views
-
-
காம வெறியர்களை தூக்குலபோடுங்க ! கோபத்தில் கொந்தளித்த Madhubala
-
- 1 reply
- 560 views
-
-
-
தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை: திரையுலகம் அதிர்ச்சி தோனி பயோபிக்கில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 34. இவர் பாலிவுட்டில் Kai Po Che என்ற படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக சிச்சோர் படத்தில் நடித்தார். M.S. Dhoni: The Untold Story படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவரது "Dil Bechara" என்ற படம் மே 8ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. கரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. ஏற்கெனவே இர்பான் கான், ரிஷிகபூரை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள பாலிவுட் உலகம் தற்போது இவரைப்போன்ற ஒரு சிறுவயது நடிகரையும் …
-
- 27 replies
- 4k views
-
-
பூப்போலே உன் புன்னகையில்… குமரன் கிருஷ்ணன் செப்டம்பர் 27, 2020 மரணத்தை வெல்லும் உரிமம் மானுடத்திற்கு இல்லை. இருப்பினும், மரணத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு மாற்றுப்பாதையில், மாற்றுருவில் பயணிக்கும் வித்தையை இயற்கை இவ்வுலகிற்கு வரமாக்கியிருக்கிறது. ஆம். கலையின் ஏதேனும் ஒரு வடிவத்தை கற்றறிந்து அதை மற்ற உயிர்களின் உணர்வுகளுக்கு உணவாக அளிக்கும் ஆற்றல் பெற்ற எவரும் காலத்தின் மீதேறி கணக்கற்ற ஆண்டுகள் தங்கள் கலையின் வடிவில் வாழ்வதால் காலனை புறந்தள்ளும் வாய்ப்பு பெற்றவர்கள் ஆவர். எஸ்.பி.பி என்னும் குரலும் அதை வார்த்த அவர் ஜீவனும் அத்தகையதே. யோசித்துப் பார்க்கிறேன்…காலத்தின் தூசு படிந்த நினைவின் நொடிகளை ஆங்காங்கே துடைத்து பளபளப்பாக்கிப் பார்க்கிறேன்…பெற்றோரு…
-
- 7 replies
- 1.4k views
-
-
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் எவ்வளவு வற்புறுத்தினாலும் எஸ்.பி.பி-யின் வாயால் யாரையும் அன்போடுகூட குட்டு வைக்க முடியவில்லை. "ஏன் திட்டணும். Every soul is potentially divine. யாரும் உயர்ந்தவங்களும் இல்லை. தாழ்ந்தவங்களும் இல்லை." தமிழ் திரை இசை உலகின் அடையாளம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்துவிட்டார். எஸ்.பி.பி ஒரு தெய்வக் குழந்தை. கர்னாடக சங்கீதம் கற்காமல், பொறியியல் படிக்கப்போன ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவர்! எல்லாமே கேள்வி ஞானம்தான். அப்பா திரு.சாம்பமூர்த்தியின் ஹரிகதைகளை (பாடலோடு கோயில்களில் கதை சொல்வது) சிறுவயதில் கேட்டு வளர்ந்தவர். ஆனால், அப்போதெல்லாம் பாடகர் ஆகவேண்டுமென்ற விருப்பம் இவருக்கு இருந்ததில்லை என்பது ஆச்சர்யம்த…
-
- 4 replies
- 1.5k views
-