வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
‘சிங்கம்’ படத்தின் கதை விவாதம், சென்னையில் நடந்து வருகிறது. ஏப்ரலில் ஷ¨ட்டிங் தொடங்குகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிக்கிறார். ‘காக்க காக்க’ படத்துக்குப் பிறகு மீண்டும் காக்கிச்சட்டை போடுகிறார், சூர்யா. தற்போது ‘அயன்’ படத்துக்கான விடுபட்ட காட்சிகளின் ஷ¨ட்டிங்கில் இருக்கும் அவர், அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டே ‘சிங்கம்’ படத்தில் நடிக்கிறார். இவ்விரு படங்களுக்குப் பின், மிஷ்கின் டைரக்ட் செய்யும் படம், சம்பத் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் என, மேலும் இரு படங்களில் நடிக்கிறார் சூர்யா. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=429
-
- 0 replies
- 1.4k views
-
-
ரயில் பயணத்தைக் கதைக்களமாகக் கொண்டு நிறையப்படங்கள் வெளிவந்துள்ளன, அந்த வரிசையில் மிக முக்கியமானதொரு படம் John Frankenheimer இயக்கிய The Train, 1964ம் ஆண்டு வெளியான கறுப்பு வெள்ளைப் படமிது, இரண்டாவது உலக யுத்த காலத்தில் புகழ்பெற்ற ஒவியங்களைக் கடத்திச் செல்லும் ஜெர்மனிய ரயில் ஒன்றினை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளபடும் தீவிர முயற்சிகளே படத்தின் கதைக்கரு, 133நிமிஷங்கள் ஒடுகின்ற இப்படத்தில் ரயில் கிளம்பிய மறுநிமிசம் முதல், கடைசிக்காட்சி வரை நம்மால் அடுத்து என்ன நடக்குமென என்று யோசிக்க முடியாது. விறுவிறுப்பான திரைக்கதை என்பது இப்படத்திற்கே பொருத்தமானது, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் திருப்பங்கள், வெற்றி தோல்வி என்று மாறிமாறிச் சுழலும் விதியின் பகடையாட்டம், படம் பா…
-
- 0 replies
- 379 views
-
-
சென்னை: நடிகை ரம்பா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு செய்துள்ளார். தனக்கும், கணவர் இந்திரனுக்கும் இடையிலான திருமண பந்தத்தை முறித்து அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு டிசம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. கனடாவைச் சேர்ந்த இந்திரன்- ரம்பா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தம்பதிக்கு கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. http://tamil.oneindia.com/news/tamilnadu/actress-rambha-files-divorce-265684.html சென்னை: நான் விவாகரத்து செய்யப் போகிறேனா.. நிச்சயம் இல்லை என்று கடந்த 2012ம் ஆண்டு மறுத்திருந்தார் நடிகை ரம்பா. அப்போதே அவர் விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் அடிபட்டன. ஆனால் அவர் அதை மறுத்தார். அதன…
-
- 36 replies
- 6.9k views
-
-
ஈழத்தமிழர் சினிமா வரலாற்றில் மற்றுமொரு பெருமைமிகு படைப்பு, இயக்குநர் சுஜித் ஜீ அவர்களின் 'கடைசி தரிப்பிடம்' ( The Last Halt) எமது வாழ்வை எமது மொழியில் பதிவு செய்யும் எமது சினிமாவாக பலரது பாராட்டையும் பெற்ற இத்திரைப்படத்தை, ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் எதிர்வரும் நவம்பர் 13 நாள் சிறப்புத் திரையிடலாக காண்பிக்கின்றது. பிரித்தானியாவிலிருந்து வருகைதரும் படக்குழுவினரும் கலந்து சிறப்பிக்கும் இவ்விழாவுக்கு பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரும் வருகை தந்து பேராதரவுதர வேண்டுகிறோம். நன்றி. Lift
-
- 1 reply
- 422 views
-
-
பறந்து செல்ல வா - திரை விமர்சனம் காதலே கைகூடாத விளையாட்டுப் பையனை ஒருசேர இரு பெண்கள் காதலித்தால் என்ன ஆகும்? நாயகன் லூத்ஃபுதின் பாஷா விளை யாட்டுப் பிள்ளை. சிங்கப்பூரில் அவ ருக்கு வேலை கிடைக்கிறது. அங்கு நண் பர் அறையில் தங்குபவருக்குப் பார்க் கும் பெண்கள் மீதெல்லாம் காதல் பொங்குகிறது. தனது முயற்சிகளில் ‘பல்பு’ வாங்கும் அவரை, ‘உன் முகத் துக்கெல்லாம் காதலா’ என்று நண்பர் கள் கலாய்க்கிறார்கள். நண்பர்களை ஏமாற்ற, முகநூலில் கற்பனைக் காதலியை உருவாக்கி உலவவிடுகிறார். இடையே உண்மையிலேயே அவருக்கு ஒரு காதலி கிடைத்துவிடுகிறார். காதல் சுமுகமாகச் சென்றுகொண்டிருக்கும் போது கற்பனைக் காதலி நிஜமாகவே நேரில் வந்த…
-
- 0 replies
- 300 views
-
-
‘அந்த’ இடத்தில் சத்திர சிகிச்சை செய்துக் கொண்ட அஜித் பட நாயகி திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் தங்களின் அழகை மேலும் அதிகரித்துக் கொள்ள கொஸ்மெடிக் சத்திர சிகிச்சையை செய்து கொள்வார்கள். நடிகை ஸ்ரீதேவி, நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களின் முக அழகிற்கு இடையூறாக இருந்த மூக்கை கொஸ்மெடிக் சத்திர சிகிச்சை மூலம் சீராக்கிக் கொண்டு நடித்து வருகிறார்கள். அந்த பட்டியலில் தற்போது அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்து வரும் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலும் தன்னுடைய மூக்கை சத்திர சிகிச்சை மூலம் சீராக்கிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி அவர் தெரிவிக்கும் போது, ‘50 படங்களில் நடித்து முடித்துவிட்டேன். ரசிகர்களுக்கு என்னுடைய முகம் பிடிக்…
-
- 0 replies
- 440 views
-
-
கரகம் என்ற படத்தை தயாரித்த எஸ்.கே.எம்.மீடியா என்ற பட நிறுவனம் அடுத்து தயரிக்கும் படத்திற்கு “அப்பாவுக்கு கல்யாணம்” என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக எம். பாண்டியன் நடிக்கிறார். கதாநாயகியாக ரசிகப்ரியா நடிக்கிறார். மற்றும் எஸ்.எஸ்.மீனாட்சி ,தேவி சரவணன்,சங்கர், கிருஷ்ணமூர்த்தி, அற்புதம், வனிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். இசை - சார்லஸ்தனா ஒளிப்பதிவு - சி.கணேஷ்குமார் நடனம் - ஜி.சம்பத் , நிர்மல் கலை - ஜி.பாபு தயாரிப்பு நிர்வாகம் - என்.ஜனார்த்தனம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ஆறுமுகசாமி படம் பற்றி இயக்குனர் ஆறுமுகசாமி..... ஒரு வெட்டியான் தான் ஆசையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற நினைப்பில் இருக்கிறான்.…
-
- 0 replies
- 592 views
-
-
ரஜினியின் வயது 162.. கமலுக்கு 158! ரஜினியின் வயது 162. இப்படி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. டிசம்பர் 12 ந் தேதி ரஜினிக்கு பிறந்த நாள். அதற்கு முன்னதாக தமிழகமெங்கும் இப்படியொரு போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. ரஜினி மட்டுமல்ல, உலகின் முன்னணி பிரபலங்கள் பலரது புகைப்படத்துடன் அவர்களின் வயதை தாறுமாறாக அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த சுவரொட்டியை பார்த்து, ரசிகர்கள் என்னவென்று புரியாமல் வியந்தபடியும் தங்களுக்குள் விவாதித்தபடியும் செல்கிறார்கள். ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு' படத்திற்கான பிரமோஷன் போஸ்டர்தான் அது என்றாலும், படத்தில் இதுகுறித்த விளக்கங்கள் காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தோடு பத்திரிகையாளர்களும் படத்த…
-
- 0 replies
- 2k views
-
-
இசைப்பிரியா பற்றிய திரைப்படம் "போர்க்களத்தில் ஒரு பூ" - இயக்குனர் கணேசன் கனடாவில் கலந்துரையாடல் கலந்துரையாடல் [Tuesday, 2014-03-18 20:15:49] ஈழ மண்ணில் ஊடகப்போராளியாய் இருந்து 2009 ஆண்டு இடம்பெற்ற இனவழிப்புப் போரின் பின்னர் சிங்கள அரசினால் கைது செய்யப்பட்டு மிகவும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட ஊடகப்போராளி இசைப்பிரியா பற்றிய திரைப்படம் "போர்க்களத்தில் ஒரு பூ" எனும் பெயரில் உருவாகி வருவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் திரு. கு.கணேசன் அவர்கள், கனடிய மக்களையும், ஊடகங்களையும் சந்தித்து தன்னுடைய திரைப்படம் பற்றி கலந்துரையாட விரும்புவதனாலும், ஈழத்தமிழர்கள் செறிந்து வாழும் கனடிய நாட்டில் திரைப்பட முன்னோட்டக் காட்சி அறிமுகத்தை ச…
-
- 0 replies
- 1.6k views
-
-
இரவின் நிழல்: பார்த்திபனின் 'ஒரே ஷாட்' - ஊடக விமர்சனம் எப்படி இருக்கிறது? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BIOSCOPE USA, AKIRA PRODUCTIONS PVT LTD நடிகர்கள்: பார்த்திபன், ஜோசுவா பரிசுத்தம், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ஆனந்தகிருஷ்ணன், சாய் பிரியங்கா ரூத் ; இசை: ஏ.ஆர். ரஹ்மான்; இயக்கம்: பார்த்திபன். பார்த்திபன் இயக்கி, நடித்து உருவாகியிருக்கும் 'இரவின் நிழல்' திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. ஒரே ஷாட்டில் Non-linear பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. நந்து என்ற பாத்திரத்தின் …
-
- 3 replies
- 375 views
- 1 follower
-
-
ஆனந்தராஜ் முதல் ரவி மரியா வரை... காமெடியன்களாக மாறிய டெரர் வில்லன்கள்! தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது முரட்டு வில்லன்களாக இருந்த சில நடிகர்கள், காலப்போக்கில் காமெடிப் படங்களுக்கு மார்க்கெட்டும் மவுஸும் கூடிக்கொண்டிருப்பதை அறிந்து அந்த ட்ராக்கில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி முரட்டு வில்லன் டு காமெடியன்களாக மாறியவர்கள் யார் யார்? ஒரு சின்ன அலசல்! `நான் கடவுள்' ராஜேந்தர்: சமீபகாலமாக `இவரிடம் கால்ஷீட் வாங்குவதே அபூர்வமாக உள்ளது' என, பல இயக்குநர்கள் தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர். சினிமா துறையில் இவர் முதலில் ஸ்டன்ட்மேனாகத்தான் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். அதற்குப் பிறகு `நான் கடவுள்' பட…
-
- 0 replies
- 281 views
-
-
வெந்து தணிந்தது காடு விமர்சனம்! Sep 16, 2022 07:06AM IST தமிழ் சினிமாவில் வந்த கேங்ஸ்டர் படங்களில் ஆங்கிலப் படங்களின் பாதிப்பு இருக்கும். 1987 ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, நாசர், ஜனகராஜ், நிழல்கள் ரவி நடித்து ” நாயகன்” திரைப்படம் வெளியானது. அதன் பிறகு இந்த படத்தின் திரைமொழியாக்கத்தை முறியடிக்க கூடிய வகையில் எந்தப் படமும் கடந்த 35 ஆண்டுகளில் வெளிவரவில்லை. தமிழ்நாட்டின் கடைகோடி, கடலோர பகுதிகளான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து பிழைப்புக்காகவும், தொழில் செய்வதற்காகவும் தினந்தோறும் மும்பை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்பவர்கள் இன்றும் உள்ளனர். அப்படி சென்று தாதாக்களின் தலைவனாக மாறுபவர்களும் உண்டு. இதில…
-
- 2 replies
- 560 views
-
-
கமலின் தசாவதாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, இலங்கைத் தமிழ் ஆகிய மொழிகளில் பேசி நடித்த கமல் இப்போது தசாவதாரம் படத்தில் பிரெஞ்சு மொழி பேசி நடிக்க இருக்கிறார். நடிகர் திலகம் ஒன்பது வேடங்களில் நடித்த சாதனையை முறியடித்து பத்து வேடங்களில் இப்படத்தில் நடிப்பது இன்னொரு சிறப்பம்சமாகும். மகாநதி, தேவர்மகன், குருதிப்புனல் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதி, பாலமுரளி கிருஷ்ணாவிடம் முறையாக சங்கீதம் பயின்று, குற்றாலம் விஸ்வநாத ஐயரிடம் மிருதங்கம் பயின்று, ராஜபார்வை படத்தின் எடிட்டராக இருந்த கமலின் அடுத்த பெரும் சாதனையே தசாவதாரம் படமாகும். நாடகத்தில் அவ்வை சண்முகத்தையும், திரைப்படத்தில் கே. பாலசந்தரையும் குருவாக ஏற்ற கமல் தான் எவ்வளவுதான் செய்தாலும…
-
- 19 replies
- 6k views
-
-
"அடுத்து நான் பாலா படத்தில் நடிக்கிறேன்": 'காலா' ஈஸ்வரி ராவுடன் பிரத்யேக நேர்காணல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்கு பிறகு மூலம் தமிழ் சினிமாவில் காலா படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி ஆகியுள்ளார் ஈஸ்வரி ராவ். குறிப்பாக, மிகப் பெரிய இடைவெளிக்கு பிறகான இந்த முதல் படத்திலேயே ரஜினியின் மனைவியாக நடித்து பாராட்டுகளையும் பெற்…
-
- 0 replies
- 497 views
-
-
பட மூலாதாரம்,SRI VENKETESWARA CREATIONS கட்டுரை தகவல் எழுதியவர்,சாஹிதி பதவி,பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் அபிஞான சாகுந்தலம் என்பது காளிதாசரால் எழுதப்பட்ட ஒரு காதல் நாடகம். சிறந்த கவிதைகளை கொண்டுள்ள இந்த படைப்பிற்கு இலக்கிய உலகில் முக்கிய இடம் உள்ளது. அபிஞான சாகுந்தலத்தில் காதல் இருக்கிறது, விரகம் இருக்கிறது. இது வேதத்தில் உள்ளது. குழந்தைக்காக ஏங்கும் தாயின் ஏக்கம் இருக்கிறது. பெண்களின் அதிகாரம், சுயமரியாதை போன்றவையும் இந்த காவியத்தில் உள்ளன. தெலுங்கில் ஹிட் அடித்த ஒக்குடு, ருத்ரமாதேவி போன்ற படங்களை இயக்கிய குணசேகர் தற்போது இந்த காவியத்தை திரைப்படமாக்க முயன்றுள்ளார். …
-
- 0 replies
- 710 views
- 1 follower
-
-
'வீராப்பு' படத்தில் சுந்தர் சி. யுடன் நடித்துக் கொண்டிருந்தார் கோபிகா. மலையாளத்தில் ஊர்வசி நடித்த வேடமாக்கும் என்ற பெருமை முகத்தில் தெரிந்தது. "இந்த வருஷம் எனக்கு ரொம்ப நல்லா தொடங்கியிருக்கு" என்றார் தனது பச்சரிசி பற்களை காட்டி. இவர் மம்முட்டியுடன் இணைந்து நடித்த 'மாயாவி' படமே இந்த வருடத்தின் மெகா ஹிட். சென்னையிலும் ஹவுஸ்புஃல்லாக ஓடுகிறது படம். மம்முட்டி, மோகன்லால், சுந்தர் சி. என முதிர்ந்த நடிகர்களுடன் நடிப்பது ஏன் என்று கேட்டதற்கு, அவங்கயெல்லாம் பெரிய நடிகர்கள் என்றார். மேலும், கதையையும் கேரக்டரையும் பார்ப்பேனே தவிர கதாநாயகனின் வயசை பார்க்க மாட்டேன் என்றார். 'வீராப்பு' படத்தில் கோபிகாவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து டெவலப் செய்திருக்கிறார்க…
-
- 0 replies
- 759 views
-
-
'இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உங்கள் இரவுகளை ரணமாக்க வருகிறார்கள்' இப்படி மிரட்டுவது நாமல்ல. திக் திக் பட அழைப்பிதழ்தான் அக்கா புருஷன் மீது தங்கை ஆசைப்படுவதாக கதை சொன்ன 'கலாபக் காதலன்' படத்தை எடுத்து பரபரப்பூட்டிய இகோர் அடுத்து பயமுறுத்தும் படம்தான் 'திக்..திக்..' தலைப்பிலேயே திரில்லர் சஸ்பென்ஸ் தெரியும்போது கதைக்கருவைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. பாக்யராஜின் மகள் சரண்யாவும், மும்தாஜும்தான் நாயகிகள். நாயகனாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார். குரு.முனீஸ்வரன் தயாரிப்பில் உருவாகவுள்ள 'திக்திக்'ல் இமான் இசையமைக்க, சண்டோனியோ ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள பழைய பிள்ளையார் கோவிலில் இன்று காலை நடந்தது. பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, த…
-
- 0 replies
- 833 views
-
-
முருகதாஸ் இயக்கத்தில் 7ஆம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். கமலின் மகள் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் சொன்னதை நன்றாக உள்வாங்கிக்கொண்டு சிறப்பாக நடிக்கிறார் என்று ஸ்ருதி ஹாசனுக்கும் சர்டிபிகேட் தருகிறார் இயக்குனர் முருகதாஸ். அதனால் 7ஆம் அறிவு முடித்தபிறகு விஜய்யை வைத்து தான் இயக்கும் படத்திற்கும் ஸ்ருதி ஹாசனையே ஹீரோயினாக போடலாம் என்று யோசித்து வருகிறாராம் முருகதாஸ். http://pirapalam.net/cinema/4462.html
-
- 1 reply
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,MANSOOR ALI KHAN/INSTAGRAM கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் திரிஷா, குஷ்பூ, ரோஜா உள்ளிட்ட சக நடிகைகள் குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சமூக வலைதளத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியது ’அநாகரிகமான’ முறையில் இருந்ததால் அவர் என்ன பேசினார் என்பது இங்கே முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. சக நடிகைகளுடன் பாலியல் வன்புணர்வு காட்சிகள் குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு திரிஷா, குஷ்பூ உள்ளிட்டோர் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். தன்னை குறித்து மன்சூர் அலி கான் பேசியிருப்…
-
- 16 replies
- 1.3k views
- 1 follower
-
-
மேலும் புதிய படங்கள்மருமகள் ஐஸ்வர்யா ராயின் பெயரில் அமையவுள்ள மகளிர் கல்லூரிக்கு மாமனார் அமிதாப்பச்சன் அடிக்கல் நாட்டினார். உ.பி. மாநிலம் பாரபங்கியில் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் புதிய மகளிர் கல்லூரியை அமிதாப் பச்சன் கட்டுகிறார். இக்கல்லூரிக்கு ஐஸ்வர்யா பச்சன் மகளிர் கல்லூரி என பெயரிடப்பட்டுள்ளது. இக்கல்லூரி அமையவுள்ள நிலம் குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் கடந்த 2 மாத காலமாக கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது தாமதமாகி வந்தது. சமீபத்தில் அமிதாப்புக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவை முடுக்கி விட்டார் அமிதாப். நேற்று அடிக்க…
-
- 0 replies
- 803 views
-
-
சிம்பு வெளிநாடு தப்பிக்காமல் இருக்க விமான நிலையங்கள் உஷார்: பாஸ்போர்ட் முடக்கம்? சென்னை: நடிகர் சிம்பு வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லாமல் இருக்க, முக்கிய விமான நிலையங்களை போலீசார் உஷார்படுத்தி உள்ளதுடன், சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து உருவாக்கிய பீப் பாடல், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிம்பு, அனிருத் மீது பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிம்பு மீது வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், அவரை கைது செய்வதற்காக, 5 த…
-
- 0 replies
- 310 views
-
-
2015-ன் நட்சத்திரம்: மர்ம வசீகர ‘மாயா’ ஜால நாயகி! தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் வெற்றியாளர்களில் முதல் இடம் சந்தேகமில்லாமல் நயன்தாராவுக்குத்தான். ‘தனி ஒருவன், ‘மாயா’, ‘நானும் ரவுடி தான்’ என்று மூன்று வெற்றிப் படங்கள்! முதல் வரிசைக் கதாநாயகர்களோ (ஜெயம் ரவியைத் தவிர) இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ அடைந்திராத வெற்றி இது. நயன்தாராவின் வெற்றி இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்கு வெளியிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை. சமீபத்தில் சேலத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு நயன்தாரா சென்றபோது அவரைக் காண்பதற்குத் திரண்ட கூட்டத்தின் அளவுக்கு வேறு எந்தக் கதாநாயகிக்கும் திரண்டிருக்குமா என்பது சந்தேகமே. இவ்வளவு ஏன், முன…
-
- 4 replies
- 672 views
-
-
சினிமா வாழ்க்கையில் எவருடைய உதவியும் இல்லாமல் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நம் தல அஜித். முதல் முறையாக தனது மனதில் இருக்கும் ஆதங்கங்களை ஆனந்த விகடன் வார இதழிற்கு பேட்டியாக கொடுத்துள்ளார். அதில் இருந்து சில முக்கிய பகுதிகள்: செல்ப் புரமோஷன் கிடையாது... 'நான் 'மங்காத்தா'வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா௨'-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!' மனதை பாதித்த விமர்சனம்... 'படம் நல்லா இருக்காஇ இல்லையானு சொல்லாமஇ சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு …
-
- 0 replies
- 1.2k views
-
-
படித்தால் புல்லரிக்கும் இந்த வைர வரிகள் இடம்பெறும் படத்துக்கு வைத்திருக்கும் பெயர், தமிழகம்! ஆம், தமிழகமேதான்! மாதா மூவிமேக்கர்ஸ் சார்பில் ஏ.ஜி.அருள், பி.சந்திரசேகர் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர். கே.சுரேஷ்குமார் என்பவர் இயக்கம். படம் குறி்த்த இந்த தகவல் வெளியாகும் நேரம், பாதி படம் முடிந்துவிட்டது. இதுவரை என்னென்ன எடுத்தர்கள் என்ற பட்டியல் வேஸ்ட். எத்தனைப் பாடல்கள் எடுத்தார்கள் என்பது டேஸ்ட். படத்தின் நாயகன் ரிஷி (ரிச்சர்ட்) நாயகி அர்ச்சனாவுடன் ஆடிப்பாடும் பாடலொன்று படமாகக்ப்பட்டுள்ளது. பாடல், 'ஆடிப்பாடும் அரபிக்குதிரை' என்றே தொடங்குகிறது. வில்லன்களுடன் லக்ஷா போட்டிருக்கும் கெட்ட ஆட்டத்தை ஊட்டி, கொடைக்கானல் என குளிர்ப்பிரதேசமாகப் பார்த்து படம் பிடித்துள்ளா…
-
- 3 replies
- 1.3k views
-
-
‘வில்லு’ ஷ¨ட்டிங்கிற்காக நேற்று, சுவிட்சர்லாந்து சென்றுள்ள விஜய், அடுத்து 2 படங்களில் நடிக்கிறார். ஒன்று ஏவி.எம் பாலசுப்ரமணியம் தயாரிக்கும் படம். அடுத்து அவர் நடிக்கும் 50-வது படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் வி.வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இயக்குனர் முடிவாகவில்லை. தற்போது வி.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பந்தயம்’ தயாராகி வருகிறது. வில்லு படம் நடித்து முடிந்தவுடன் அடுத்த படம் பற்றி அறிவிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=250
-
- 0 replies
- 775 views
-