ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
வீரகேசரி நாளேடு - இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு கடந்த சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வாயிலில் பெரும் அதிர்ச்சி காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிலவிய த வறே இதற்குக் காரணமாகும். சார்க் மா நாடு முடிவடைந்த கையோடு, தெற்காசிய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதிகளைச் சென்றடைந்து விட்டனர். இருந்தபோதிலும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மாத்திரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்ட வாசலில் காத்து நின்றுள்ளார். தனது காருக்கும் அதற்குப் பாதுகாப்பாக வரும் வாகன தொடரணிக்குமாகவே அவர் அங்கு காத்து நின்றுள்ளார். என…
-
- 8 replies
- 1.9k views
-
-
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் முகாம்களை விட்டு வெளியேறமுடியாத நிலையில் இருப்பதாக மன்னார் தகவல் தொடர்பாடல் ஊடக வலைப்பின்னல் நிலையம் தெரிவித்துள்ளது. மக்களைத் தேடிய ஊடகப் பயணம் இரண்டாம் கட்டத்தின் ஒரு அங்கமாக மன்னார் தகவல் தொடர்பாடல் ஊடக வலைப்பின்னல் நிலையத்தின் ஏற்பாட்டில் மன்னார் பகுதி ஊடகவியலாளர்கள் நானாட்டான் பிரதேச செயலாளர் பகுதியிலுள்ள முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர். முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் முகாம்களை விட்ட…
-
- 0 replies
- 781 views
-
-
அணுஉலைக்கெதிரான போராட்டம் தொடர்பான இலங்கைத்தமிழ் அரசியலாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதப்பிரதிநிதிகளின் கூட்டறிக்கை. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிராக கடந்த பல வருடங்களாகவே எதிர்ப்புணர்வுகள் இருந்து வரும் சூழலில், அணுமின் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாகவே இடிந்தகரையில் தன்னெழுச்சியாக உருவான அறவழிப் போராட்டங்கள் தற்பொழுது உச்சநிலையை அடைந்துள்ளன. அணு மின்நிலையத்திற்கெதிரான எதிர்ப்புணர்வு இடிந்தகரையையும் அதனையண்டிய பிரதேசங்களையும் கடந்து பெரும்பாலான தமிழகத் மக்களிடமிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. தமது வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் அணுஉலை சிதைத்துவிடுமென்ற நியாயமா…
-
- 0 replies
- 681 views
-
-
நாட்டின் தேசிய பாதுகாப்பை சீரழிக்கும் செயற்பாட்டிற்கு அரசாங்கம் இடமளிக்காது (ஆர்.யசி) போர்க் குற்றங்கள் என்ற பெயரில் இராணுவத்தின் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக எக்காரணத்தை கொண்டும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளாது எமது இராணுவத்தை கைதுசெய்ய முடியாது. நாம் உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாண்டு உண்மைகளை கண்டறிந்து வருகின்றோம். அதற்கமையவே இராணுவத்தின் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பை சீரழிக்கும் வகையிலோ அல்லது நாட்டில் பிளவு ஏற்படுத்தும் வகையிலோ எவரது செயற்பாட்டிற்கும் அரசாங்கம் இடமளிக்காது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை பெற்றுத்தருவதே நல…
-
- 0 replies
- 316 views
-
-
-
[size=5]தள்ளுவண்டியில் பயணிக்கும் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் [/size] [size=5](1890-இல் எடுக்கப்பட்ட படம்)[/size] [size=3]க் கண்காட்சி 19-ம் நூற்றாண்டின் இறுதி முதல் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் பாண்டிச்சேரியில் (இன்றைய புதுச்சேரியில்) புகைப்படக் கலையின் வளர்ச்சி பற்றி காண்பிக்கிறது. தள்ளுவண்டியில் பயணிக்கும் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் (1890-இல் எடுக்கப்பட்ட படம்)[/size][size=1] [/size] [size=1][size=3]இந்தக் கண்காட்சி 19-ம் நூற்றாண்டின் இறுதி முதல் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் பாண்டிச்சேரியில் (இன்றைய புதுச்சேரியில்) புகைப்படக் கலையின் வளர்ச்சி பற்றி காண்பிக்கிறது. தள்ளுவண்டியில் பயணிக்கும் அதிகாரிகள் மற்றும் குடு…
-
- 1 reply
- 684 views
-
-
புத்தளம், பதுளை பகுதியில் 25 தமிழ் பொதுமக்கள் கைது வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] செவ்வாய், புதன் கிழமைகளில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளினபோது 25 தமிழ் பொதுமக்கள் உள்ளடங்கலாக 35 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐந்து தமிழ் இளைஞர்கள் பதுளை காவல்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் ஏனைய 30 பேரும் புத்தளம் காவல்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. கைதுசெய்யப்பட்ட தமிழ்பொதுமக்கள் புத்தளம் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஏனைய கைது செய்யப்பட்ட பொதுமக்கள் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எ…
-
- 0 replies
- 497 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் இஸ்ரேல் உள்விவகார அமைச்சின் நடவடிக்கைகளை அந்நாட்டு நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. காலம் கடந்த விண்ணப்பம் என்ற அடிப்படையில் விண்ணப்பங்களை நிராகரிக்க உள்விவகார அமைச்சிற்கு அதிகாரம் கிடையாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒவ்வொரு புகலிடக் கோரிக்கையாளரின் புகலிட விண்ணப்பமும் மிகவும் நிதானமாக பரிசீலனை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. நாட்டுக்குள் பிரவேசித்து ஒராண்டுக்கு பின்னர் விண்ணப்பம் செய்தாலும் அதனை உரிய முறையில் பரிசீலனை செய்ய வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டில் இஸ்ரேலிற்குள் பிரவேசித்த இலங்கையர் ஒருவரின் புகலிடக் கோரிக…
-
- 0 replies
- 289 views
-
-
கொரோனா தொற்றுடன் சுவிஸ் நாட்டில் இருந்து அரியாலை தேவாலயத்திற்கு வந்திருந்த மத போதகரை பாதுகாத்தது யாழ்ப்பாணம் பொலிசாரே என குற்றம் சாட்டியுள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ல்ஸ் இந்த சம்பவத்தின் பின்னணியில் பல சம்பவங்கள் உள்ளன விசாரணைகளின் பின்னர் வெளிப்படுத்தப்படுத்துவேன் என்று குறிப்பிட்டார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அவர் இன்று (254.03.2020) நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கொரோனா வைரஸ் தோற்று அபாயம் ஏற்பட்டவுடன் மத மக்களை அதிகமாக கூட்டி கூட்டங்கள் பிரார்த்தனைகள் நடத்த வேண்டாம் என அரசாங்கம் அறிவுருத்தியிருனத்து. எனினும் அந்த கட்டளையை மீறி யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் உள்ள தேவாலயம…
-
- 14 replies
- 1.1k views
-
-
[size=4]மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிபாளையம் கிராமத்திலுள்ள தனது வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறி நேற்று திங்கட்கிழமை அதிகாலை களுவாஞ்சிக்குடி பொலிஸார் திட்டமிட்ட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கிழக்கு மாகாணசபையின் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினரான கே.கருணாகரன் (ஜனா) தெரிவித்தார். தன்னையும் தனது குடும்பத்தவரையும் அச்சுறுத்துவதற்காகவே இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதெனவும் அவர் கூறினார். கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில் நேற்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'என்னுடைய வீட்டில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால்; தேடுதல் நடத்தவேண்டுமெனக்…
-
- 0 replies
- 607 views
-
-
தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. …
-
- 51 replies
- 3.7k views
-
-
அரசாங்கம் தற்போது வடக்கை மீட்கெடுக்கும் நோக்கில் தொடுத்திற்கும் யுத்தம் வெகுவிரைவில் முடிவுக்கு வந்து, வட பகுதி மீட்டெடுக்கப்பட்டு அங்கு வாழும் மக்களும் மீட்டெடுக்கப்பட்டு நாட்டின் பிற பகுதிகளில் வாழும் அவர்களது சகோதரர்களுடன் உறவாடுமாறு, 25 வருடகால அவலங்களை அவர்கள் மத்தியிலிருந்து அகற்றி அவர்கள் மகிழ்விக்கப்படுவர் என சிறி லங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொக்ரர். பாலித்த ஹோகன தெரிவித்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு அதிதியாக கலந்தகொண்டு அங்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பாலித்த ஹோகன, வெகுவிரைவில் பயங்கரவாதிகளிடமிருந்து வடபகுதி மக்கள் இராணுவத்தினரால் முற்றுமுழுதாக விடுவிக்கப்பட்டுவிடுவ…
-
- 0 replies
- 728 views
-
-
தன்னையும், தனது கைக் குழந்தையையும் கைவிட்டு, விவாகரத்துப் பெற வேண்டாமென மன்றாடினாள் மனைவி. ஆனால் விவாகரத்துப் பெற்று, மற்றொரு பெண்ணை மீண்டும் மண முடிப்பேன் என அடம்பிடித்தான் கணவன். நான் தவறு செய்திருந்தால் பகிரங்கமாக இங்கு மன்னிப்புக் கோருகிறேன் எனவும் கெஞ்சிப்பார்த்தாள். கல்நெஞ்சுக் கணவனோ சிறி தும் நெகிழ்ந்து கொடுக்கவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றாள் மனைவி, தான் கொண்டுவந்திருந்த கத்தி ஒன்றை தன் கைப்பையிலிருந்து எடுத்து ஆவேசத்துடன் கணவனைக் குத்தி விட்டு தன் கைக்குழந்தையுடன் அங்கிருந்து சென்று விட்டாள். இது கற்பனைக் கதையல்ல, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர் காதி நீதிமன்றத்தில் நடந்த உண்மைச் சம்பவம். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது: நிந்தவ…
-
- 4 replies
- 872 views
-
-
வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு (மயூரன் ) புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் இன்று வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளனர். மாணவியின் தாயார் கடந்த 4 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது தன்னை சந்தேகநபர்களின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து மிரட்டியதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இந்நிலையில் நீதிமன்ற நீதிவான் வித்தியாவின் தாயாரை சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்த முறைப்பாட்டையட…
-
- 0 replies
- 372 views
-
-
15 Oct, 2025 | 01:25 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) உலக உணவு தினம் 2025 ஐ “ சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் – கைக்கோர்ப்போம் ” என்ற மையக்கருத்தில் இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து கொண்டாடுகிறது. அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும் சிறந்த போசாக்கையும் உறுதிப்படுத்த, நிறுவன வரம்புகள், துறைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்ற செய்தி தெளிவாகிறது. இந்நிலையில், ஒக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின்(FAO ) பிரதிநிதி விம்லேந்திர ஷரன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் ( IFAD ) பணிப்பாளர் ஷெரீனா தபஸ்ஸூம் மற்றும் உலக உணவுத் திட்டத்திற்…
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
வவுனியா படைத்தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானத்தை செலுத்திச் சென்றவர்கள் வெளிநாட்டு விமானிகளாகவிருக்கலாம் எனும் சந்தேகம் பாதுகாப்புத் தரப்பினருக்கு எழுந்துள்ளதாக டெய்லி மிறர் பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசிறி தெரிவித்துள்ளார். விமானப் படை விமானங்கள், புலிகளின் விமானத்தைப் பின்தொடர்ந்து சென்று தாக்குதல் நடாத்திய சமயம், புலிகளின் விமானங்கள், கடல் மட்டத்திற்கு தாழப்பறந்து சென்றதாகவும், சுப்பர் சொனிக் விமானத்தினைச் செலுத்தக்கூடியவர்களாலன்றி அவ்வாறு தாழப்பறந்து சிறிய ரக விமானங்களை செலுத்த முடியாது எனவும், புலிகளின் விமானங்களைப் பின்தொடர்ந்து சென்ற எப்-7 விமானத்தின் விமானி விமானப்படைத் தலைமையகத்துக்கு அற…
-
- 6 replies
- 3.5k views
-
-
மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மலையாளபுரம், கிருஷ்ணபுரம் விவசாய நிலங்களைப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ளனர். கிளிநொச்சி மாலையாளபுரம், கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் சுமார் 300 ஏக்கர் வரையான வயல் நிலங்களை படையினர் சிவில் பாதுகாப்புக் குழுவின் பண்ணைப் பயிர்ச் செய்கைக்கெனப் பறித்தெடுத்துக் கொண்டனர். இதனை அடுத்து நேற்று வியாழக்கிழமை அங்கு திரண்ட மக்கள் கடும் எதிர்ப்பைக்காட்டியதால் குறித்த பகுதிகளைப் படையினர் கைவிட்டுத் திரும்பியுள்ளனர். 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைக்குரிய விவசாயச் செய்கையை மேற்மேற்கொள்ளும் பொருட்டு பழைய ஐயன்குளத்தின் கீழ் உள்ள மலையாளபுரம், கிருஷ்ணபுரம் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற…
-
- 0 replies
- 432 views
-
-
ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 15 ஆயிரம் பேர் கைது! by : Jeyachandran Vithushan நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 14 ஆயிரத்து 966 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,751 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 86 வாக…
-
- 1 reply
- 351 views
-
-
27 Oct, 2025 | 06:48 PM (இராஜதுரை ஹஷான்) மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகிறார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, பூகோள காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டது. நாட்டுக்கு சேவையாற்றிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்கள், மோசடியாளர்கள் என்று சித்தரிக்கப்பட்டார்கள். தேச…
-
- 1 reply
- 98 views
- 1 follower
-
-
வன்னியில் நடைபெற்றுவரும் போரில், விடுதலைப் புலிகள் விஷவாயு ஆயுதங்களை பயன்படுத்தியதாக இராணுவத் தரப்புக் குற்றஞ்சாட்டியுள்ளது. கிளிநொச்சியில், அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது விடுதலைப் புலிகள் மூச்சுத் திணறல் உண்டாக்கக் கூடிய C.S.GAS எனப்படும் விஷ வாயுவைக்கக்கும் கிரனேட் குண்டுகளைக் கொண்டு படையினர் மீது தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். அக்கராயன் மோதலின் போது மூச்சுத் திணறல் காரணமாக 6 இராணுவத்தினர் அனுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புலிகளின் விஷவாயு கக்கும் கிரனேட் குண்டுகளாலேயே பாதிக்கப்பட்டனர் என்று கருதப்படுவதாகவும…
-
- 1 reply
- 1.2k views
-
-
வலிகளைச் சுமந்த மண்ணிலிருந்து முதல் படைப்பாளி உருவாகவேண்டும்! கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பெரும் வலிகளையும் வேதனைகளையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர இந்த மண்ணிலிருந்து ஒரு சிறந்த படைப்பாளி உருவாகவேண்டும் என்றால் அவர் ஈழத்திலிருந்தே உருவாகவேண்டும் எனத் தென்னிந்திய திரைப்படநடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான நாசர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஒரு படைப்புக்கு வலி என்பது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முத்தமிழ் கலை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழர்களது கலையை உலகிற்கு எடுத்துச் ச…
-
- 0 replies
- 177 views
-
-
07 Nov, 2025 | 11:33 AM 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.9 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. அதேநேரம், நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மொத்தம் 32,815 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 1,923,502 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளனர். இந்த காலப்பகுதியில், அதிகபட்ச தினசரி வருகை 7,412 சுற்றுலாப் பயணிகளாக நவம்பர் முதலாம் திகதி பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அதன்படி இந்தியாவிலிருந்து 431,…
-
- 0 replies
- 43 views
-
-
ஓர் இனததிற்கான விடுதலைக்காக பல தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாதம் என்ற இலக்கணத்தை கற்பிப்பதற்கு மஹிந்தவும், கூட்டமைப்பு அரசும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். என்று த.தே.கூபின் பா.உ. மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தமிழர்களின் விடுதலைப் போரட்டத்தை பயங்கரவாதம் எனும் இலக்கணத்திற்குள் கொண்டு வந்து பயங்கரவாதத்தை அழிப்பதாகவும் அதற்கு சாவதேசத்தின் ஆதரவை பெற்றறுக் கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் மேலும் சொன்னார். ஐ.நா சபையின் 63ம் கூட்டத் தொடரில் மஹிந்த ஆற்றிய உரை தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் கருத்தைக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் : இலங்கையில் தமிழர்களுக்கான உரிமைகளை …
-
- 0 replies
- 731 views
-
-
ஓற்றுமை என்பதும் ஒற்றையாட்சி என்பதும் வேறுபட்டவை, இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘புதிய அரசியல் சாசனம் தயாரிப்பதற்காக மக்களின் கருத்துக்களை அறிவதற்கு நியமிக்கப்பட்ட குழு, அரசாங்கத்திடம் கையளித்துள்ள இறுதி அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘ஓற்றையாட்சி வேறு, ஒற்றுமை வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரம் தனிப்பட்ட ஒரு இனத்திற்கு அதாவது பெரும்பான்மை இனத்திற்கு போய்ச் சேரும். இதன்மூலம் அவர்கள், சட்டங்களை காலத்திற்கேற்ப அவர்களின் தேவைக்கமைய மாற்றம் செய்வார்கள். இதற்கு அமையவ…
-
- 0 replies
- 318 views
-
-
இலங்கை தமிழர்கள் மீதான இராணுவ தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்,இலங்கை ராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கக்கூடாது, இனப்பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றது.இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.ஆனால் இந்த உண்ணாவிரதத்தில் தமிழகம் முழுவதும் பங்கேற்கப் போவதாகஅறிவித்திருந்த அதிமுக திடீரென புறக்கணிப்பு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ள தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க வேண்டு…
-
- 2 replies
- 3.4k views
-