ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143649 topics in this forum
-
கொழும்பில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அபாயமானவை – தொற்று நோயியல் பிரிவு கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் அபாயமுடையவை என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பிரதேசங்களில் இனங்காணப்படாத தொற்றாளர்கள் இருக்கக் கூடும் என்பதன் காரணமாகவே அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என அந்தப் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனி வீதி மற்றும் டாம் வீதி ஆகிய தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்…
-
- 0 replies
- 399 views
-
-
இலங்கைக்கு இந்தியா, அமெரிக்க போன்ற நிலைவரும்
-
- 0 replies
- 712 views
-
-
வல்லரசுகளை கையாள இராஜதந்திரமே தேவை-சிவசக்தி ஆனந்தன் இலங்கையை மையப்படுத்திய அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான போட்டி வலுத்துள்ளது. இந்தப்போட்டி எதிர்வரும்காலத்தில் மிகவும் தீவிரமடைந்து தொடரத்தான் போகின்றது. ஆகவே இந்த நாடுகளை தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட்டு இராஜதந்திர மூலோய வியூகங்களுடன் கையாள வேண்டும் என்பதே எமது கட்சியினது நிலைப்பாடாகவும் உள்ளது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் ரொசான் நாகலிங்கத்திற்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கேள்வி:- பத்துக்கட்சிகளின் கூட்டும் அடுத்தக்கட்டச் செயற்பாடுகளும…
-
- 1 reply
- 495 views
-
-
புலமைப்பரிசில் பரீட்சையில் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்த இருவர்! இலங்கையில் இன்று வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி இரண்டு மாணவர்கள் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதித்துள்ளனர். காலி சங்கமித்த கல்லூரி மாணவி சியதி சந்துன்டி கருணாதிலக என்ற மாணவியும் பிறிதொரு பாடசாலையில் கல்விகற்கும் எம்.எப்.மொஹமட் அம்மார் ஆகிய மாணவனும் இந்த சாதனையை புரிந்துள்ளனர். இதேவேளை இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு இவ்வாறு மாணவர் ஒருவர் 200 புள்ளிகளை பெற்றுச் சாதித்திருந்தமை குறிப்ப்டத்தக்கது. https://samugammedia.com/scholarship-exam-result-two-students/
-
- 12 replies
- 1.9k views
-
-
கருணா தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும் - வியாழேந்திரன் மட்டக்களப்பு , கிழக்கு மாகாணத்தில் கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதால் இவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என. இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார் மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரனின் பிறந்த நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை 15.11.2020ம் திகதி இடம்பெற்ற இரத்ததான முகாமில் இரத்ததானம் வழங்கிய பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், வினாயகமூர்த்தி முரளிதரன் என்பவரை…
-
- 6 replies
- 856 views
-
-
இலங்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லை.. : விளக்குகிறார் கமலா ஹரிஸின் மாமனார் *உலகத்தில் உள்ள மக்கள் குழுமங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கமலா அதுபற்றி கரிசனை கொண்டு நிச்சயமாக குரல் கொடுப்பார் *சர்வதேசத்தில் உள்ள நாடுகளின் இருதரப்பு மூலோபாய அடிப்படையில் அமெரிக்காவின் அணுகுமுறைகள் மாற்றமடைவதற்கே வாய்ப்புக்கள் அதிகமுள்ளன *ட்ரம்பின் நிருவாக முறைக்கு நேர் எதிரான தாராளவாத ஜனநாயக அடிப்படையிலான ஆட்சியையே பைடன்-கமலா கூட்டணி முன்னெடுக்கும் 'அவர் அவருடைய தாயாரைப் போன்றவர். அவருடைய தாயாரான சியாமளாவும் தான் எடுக்கும் தீர்மானங்கள் வெற்றியடைய வேண்டும் என்று உறுதியான நம்பிக்கையுடனேயே செயற்படுவார். அதில் வெற்றியும் காண்பார். அப்படியொரு தீர்மானத்தினை எடுத்தே அவர் 1958இல் …
-
- 3 replies
- 1.6k views
-
-
யாழ். பல்கலைக் கழக பேரவைக்குப் புதிய உறுப்பினர் நியமனம் 41 Views யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பீடங்களின் பீடாதிபதிகள் எண்ணிக்கைக்கேற்ப பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஈடு செய்யும் வகையில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறையின் முன்னாள் தலைவரும், வாழ் நாள் பேராசிரியருமான அருட்பணி ஞானமுத்து பிலேந்திரன், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக பல்கலைக கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான அறிவித்தல் நேற்று முன்தின…
-
- 0 replies
- 942 views
-
-
குருகுலம் தொலைக்காட்சி சேவைக்கான நேர அட்டவணையை அறிவிப்பு! கல்வி நடவடிக்கைகளை வீட்டில் இருந்தவாறே தொடரும் வகையில், கல்வி அமைச்சினால் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ள குருகுலம் தொலைக்காட்சி சேவைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் இந்த தொலைக்காட்சி சேவை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாளை மறுதினம் அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்த கல்வி சேவைக்கான நேர அட்டவணை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை பட்டியலிடப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 வரை இந்த கல்வி சேவை ஒளிபரப்பாகும் என கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது. 3ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தொலைக்கா…
-
- 0 replies
- 327 views
-
-
அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக புறகோட்டை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசியமான பொருட்களுடன் வந்த மிகப்பெரிய கப்பலில் பொருட்களை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக துறைமுக சேவைகள் ஊழியர்கள் தொழிலுக்கு செல்ல தாமதமாகியுள்ளது. இதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கப்பல்கள் அருகில் உள்ள துறைமுகங்களை நோக்கி சென்றுள்ளது. அதனை இலங்கைக்கு மீண்டும் கொண்டு வர தாமதம் ஏற்படுவதுடன் மேலதிக செலவுகளையும் ஏற்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/community/01/261260?ref=imp-news
-
- 0 replies
- 307 views
-
-
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கும் தடையா..? வெறும் அரசியல் இலாபத்திற்காக மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் நுழைந்த தமிழ் தேசியவாதிகள் - குதுகலிக்க போகும் தென்னிலங்கை.! தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி நினைவு கூரப்படவுள ்ள நிலையில் மாவீரர் நாள் நினைவு கூரலுக்காக துயிலும் இல்லங்களை துப்புரவு செய்ய சென்றிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதுடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக யாழ்.கோப்பாய் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதே வேளை துப்பரவு பணிகள…
-
- 2 replies
- 467 views
-
-
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். இன்று இரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வாகனத்தில் வருகை தந்துள்ளார். இதன் போது கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவோன்று அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர். அதனையடுத்து வாகனத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கீழே இறங்கி அவ் இளைஞர்களுடன் கலந்துரையாட முற்பட்ட சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்த அந்த இளைஞர் குழு முயன்றுள்ளது. அவரின் வாகனத்திற்கும் சேதம் விளைவித்துள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக பாத…
-
- 5 replies
- 824 views
-
-
தீபாவளி பண்டிகை நாளில் இறைச்சி வாங்க சென்றவர் மீது கத்திக்குத்து..! யாழ்.கோப்பாயில் சம்பவம். தீபாவளி பண்டிகை நாளில் கோப்பாய் சந்தியில் மாட்டிறைச்சி கடைக்காரனின் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்த சுன்னாகத்தில் வசிக்கும் இறைச்சிக்கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இறைச்சி வாங்கச் சென்றவர் பசு மாட்டு இறைச்சிபோல் உள்ளது என்று தெரிவித்ததால் உரிமையாளர் கோபமடைந்து கத்தியால் க…
-
- 6 replies
- 1.3k views
-
-
உதயமாகிறது தமிழர் தேசிய சபை.! தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார் ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை வினைத்திறன் மிக்கதாகப் பெற்றுக் கொள்வதற்காகவும் தேசிய சபை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஒன்றுபட்டு செயற்படுவதற்காக இப்போது தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளை ஒன்றிணைத்துப் பயணிக்க ஆரம்பித்துள்ளோம். இது தொடர்பில் நான் விடுத்த கோரிக்கைக்கு அனைத்து தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சி…
-
- 4 replies
- 1.3k views
-
-
இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியா இங்கிலாந்துடன் தகவல்ப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருக்கிறது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் தடைநீக்க வேண்டுகோள்களினைப் பரிசீலிக்கும் தீர்ப்பாயம் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக எடுத்த முடிவிவினையடுத்தே இந்தியா அத்தடை நீட்டிக்கப்படவேண்டும் என்கிற அழுத்தத்தினை இங்கிலாந்து மீது திணித்திருக்கிறது. இந்திய ஒன்றியம் இத்தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்மானம்பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, பயங்கரவாதிகள் எனும் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தொடரப்படுவதை தமது நாடு விரும்புகிறதென்று அறிவித்தி…
-
- 6 replies
- 823 views
-
-
இலங்கைப் பயணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை 42 Views இலங்கை அல்லது எந்தவொரு மூன்றாம் நாட்டுக்கு நுழைவு அனுமதி வழங்குவதற்காக பணம் அல்லது எந்தவொரு நிதிக் கட்டணத்தையும் கோரும் நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. உள்வரும், வெளிச்செல்லும் அனைத்து இலங்கைப் பயணிகளுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிவித்தலில், சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களைத் தவிர இலங்கைக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ எந்தவொரு நபரும் அல்லது நிறுவனமும் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மேலதிக மற்றும் உண்மைத் தகவல்களுக்கு தமக்கு அருகிலுள…
-
- 0 replies
- 441 views
-
-
கொரனாவால் இறந்த உடல்களை மன்னாரில் புதைக்கும் போது மக்கள் தொடர்பிலும் கரிசனை தேவை : செல்வம் கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைப்பதற்காக மன்னார் முசலியில் இடம் ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொடர்பிலும் கரிசனை கொள்ள வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மன்னார், முசலிப்பகுதியில் கொரனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்வேறான வாதபிரதிவாதத்திற்கு பின்னர் கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின்…
-
- 1 reply
- 408 views
-
-
மட்டு. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முக்கிய விடயங்கள் ஆராய்வு November 14, 2020 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் நேற்று (13) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவனேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற…
-
- 1 reply
- 370 views
-
-
சமூகத்தில் காணப்படும் தீமை எனும் இருளை விரட்டி நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்துவதாக இத் தீபாவளிப் பண்டிகை அமைய வேண்டும் – அங்கஜன் இராமநாதன் சமூகத்தில் காணப்படும் தீமை எனும் இருளை விரட்டி நன்மை எனும் வெளிச்சத்தை ஏற்படுத்துவதாக இத் தீபாவளிப் பண்டிகை அமைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமாகிய அங்கஜன் இராமநாதன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தீபாவளி இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரனை வதம் செய்த தினத்தையே தீபாவளியாக இந்துக்களாகிய நாம் கொண்டாடுகிறோம். இருளில் இருந்து வெளிச்சத்திற்கும்,தீமையில் இருந்து நன்மைக்கும் மீண்டு, அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை ப…
-
- 1 reply
- 385 views
-
-
(நா.தனுஜா) அமெரிக்காவில் தற்போது டொனால்ட் ட்ரம்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் ஒரு 'சதிமுயற்சியை' போன்று இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஆசியாவில் அல்லது ஆபிரிக்காவில் தேர்தலில் தோல்வியுற்ற தலைவர் ஒருவர் அதனை ஏற்க மறுத்திருந்தால் ஜனநாயக நாடுகளின் மத்தியிலிருந்து பாரிய கண்டனங்கள் வெளிப்பட்டிருக்கும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஆசியாவிலோ அல்லது ஆபிரிக்காவிலோ தேர்தலின் பின்னர் ஒரு தலைவர் தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு மறுப்பாராக இருந்தால், அதற்கு…
-
- 0 replies
- 621 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான இ.ஸ்ரீஞானேஸ்வரனை விசேட புலனாய்வுப்பிரிவினர் விசாரணை செய்துள்ளனர். அதனை உறுதிப்படுத்திய அவர் அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கந்தளாய் காவல்துறைக்கு வருமாறு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் அவ்வழைப்பை எழுத்துமூலமாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அதனையடுத்து கடந்த 09.11.2020 அன்று கடித மூல அழைப்பின் பேரில் 10.11.2020 அன்று விசாரணைகளுக்கு கந்தளாய் விசேட புலனாய்வுப் பிரிவில் தான் சமுகமளித்திருந்தாகவும் தெரிவித்துள்ளார். இந்தவருட மாவீரர் தின நினைவேந்தல் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருப்பதாக விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரி…
-
- 0 replies
- 687 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றிக் காணப்படுவதுடன், தற்பொழுது காணப்படும் கொரோனா சூழ்நிலையில் அவர்கள் அச்சுறுத்தல்களின் கீழ் உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் காங்கிரஸ்ஸின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார். பாரளுமன்றத்தில் இன்று நாட்டின் கொவிட் -19 நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றிக் காணப்படுவதுடன், தற்பொழுது காணப்படும் கொர…
-
- 1 reply
- 335 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் கொவிட் -19 நிலைமைகளை காரணம் காட்டி வடக்கு கிழக்கில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை தடுக்க சூழ்சிகள் இடம்பெற்று வருகின்றது. எனினும் எமது மக்கள் யுத்தத்தில் உயிரிழந்த மாவீர்களை நினைவுகூர அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக பாராளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நாட்டின் கொவிட் -19 நிலைமைகள் குறித்து பிரதான எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போதே அவர் இந்த காரணிகளை கூறினார். அவர் மேலும் கூறுகையில், பொது சுகாதார அவசர நிலைமைகளை கையாளக்கூடிய போதுமான சட்டங்கள் இல்லை, நாம் இன்னமும் காலாவதியான தனிமைப்படுத்தல் சட்டங்களை …
-
- 1 reply
- 459 views
-
-
வடக்கு கடல் பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை (16.11.2020) தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார். எனினும் குறித்த அனுமதியானது ஸ்கின் டைவிங் எனப்படும் சாதாரண சுழியோடி முறையின் ஊடாக மாத்திரமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஸ்கியூபா எனப்படும் சிலிண்டர் பயன்படுத்தி கடலட்டை பிடிக்க அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் ஒன்றாக வட…
-
- 0 replies
- 408 views
-
-
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை! யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும், தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதாக எடுக்கப்படும் என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (வியாழக்கிழமை) மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த விடயம் தொடர்பில் பரிசீலிக்க பட்டதோடு இறுதியில் முதல்வரினால் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபையில் சாரதிகள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ப…
-
- 0 replies
- 418 views
-
-
சிறைச்சாலைகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ள முடியாது! வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலைகளில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர்களை சபை அமர்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையால், இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரேமலால் ஜயசேகர மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் ஆகிய மூவரையும் சபைக்குள் அழைத்து வராமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது, http://athavannews.com/சிறைச்சாலைகளில்-உள்ள-நாட/
-
- 1 reply
- 463 views
-