ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142936 topics in this forum
-
வட மராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம் வட மராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்து இருபது கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று (06) அதிகாலை கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கடற்படையினர் புதைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டு பளை பொலீஸாரிடம் கையளித்துள்ளனர்.பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இதன்போது எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை. பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://globaltamilnews.net/archives/26130
-
- 0 replies
- 324 views
-
-
மலேசியாவின் புலனாய்வு அமைப்பின் சிறப்பு படைப்பிரிவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதனை கைதுசெய்து - தாய்லாந்து கொண்டுசென்று சிறிலங்கா அதிகாரிகளிடம் கையளித்துள்ளது என கொழும்பு ஊடகமான 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 747 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த போதே ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலில் ஒரு கட்டமாகவே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீதான நெருக்கடிகள் அமைந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகளைக் கண்டறியாது இவ்வாறான பழிவாங்கல்களிலேயே அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப…
-
- 0 replies
- 372 views
-
-
வடக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்றும் தென்கிழக்குப் பகுதிகளிலேயே பயிற்சியளிப்பதற்கான சாத்தியம் அநேகமாக இருப்பதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பயிற்சி வழங்குமாறு அந்நாடு விடுத்துள்ள கோரிக்கைக்கு இலங்கை சாதகமான விதத்தில் பதில் அளிக்கும் என்றும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளை இலங்கை தோற்கடித்ததையடுத்து தனது இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பிடம் இஸ்லாமாபாத் கோரிக்கை விடுத்திருக்கின்றது. கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாகத் தனது படையினருக்குப் பயிற்சியளிக்க அவர்களை இலங்கைக்கு அன…
-
- 0 replies
- 715 views
-
-
கொழும்பிலிருந்து முதற்தடவையாக மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தை ஒருவரின் கமராவில் சிக்கியது தான் இந்தப் படம். பரந்த இந்த நிலப்பரப்பில் நீல நிறமாக காணப்படும் வானில் ஏதாவது உங்களுக்குத் தென்படுகிறதா…? உங்களிடம் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா…? அப்படியானால் கூர்ந்து அந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயம் அந்தப் படத்தில் ஒரு உருவம் தென்படுவதை காண்பீர்கள். நிச்சயமாக அது புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தான் என்கிறார் செல்வி லாவண்யா பகீரதன். இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. வெள்ளவத்தையைச் சேர்ந்தவர். இந்தப் புகைப்படம் குறித்தும் அதில் தென்படும் அந்த அம்மன் உருவம் குறித்தும் லாவண்யா மெய்சிலிர்க்க எம்மிடம் பின்வருமாறு கூறினார். கொழும்பைச…
-
- 39 replies
- 5k views
-
-
நாம் வீடுகளில் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றோம். இதை யாராலும் தடுக்கமுடியாது. இப்படி இருக்கையில் கிளிநொச்சியில் கீதாஞ்சலி அம்மையார் மாவீரர் தினம் கொண்டாட அரசிடம் அனுமதி பெற்றுத் தருவேன் என்கிறார். இவர் யார் எமக்கு அனுமதி பெற்றுத்தர? காணாமற் போன தன் கணவரைத் தேட முயற்சிக்காத இவர் வாக்குப் பெறுவதற்காக கதைவிடுகிறார். இவரிடம் ஒரு சவால் விடுக்கிறேன் முடிந்தால் சிங்கள அரசினால் தரை மட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டி எழுப்பி மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். தென்மராட்சி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக்…
-
- 1 reply
- 404 views
-
-
வடக்குப் பாதை வலையமைப்பை விருத்தி செய்வதில் டில்லி ஆர்வம் நேரில் வந்து ஆராயவுள்ளார் அமைச்சர் நிதின் கட்கரி ‘வடக்கு மாகாண பாதை வலையமைப்பை அபிவிருத்தி செய்வதில் இந்தியா வெகு ஆர்வமாக உள்ளது. இந்தியாவின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கு வந்து ஆராயவுள்ளார்’ இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘பலமிக்கதோர் இலங்கை’ பொருளாதாரக் கலந்துரையாடலின் தலைமை உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது நான் அண்மையில் இந்…
-
- 4 replies
- 402 views
-
-
‘பிளக் லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வைத்திய நிபுணர்கள் டெல்டா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் உடனடியாக ‘பிளக் லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பான ஆவணங்களை வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர், சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளனர். டெல்டா வைரஸ் தொற்றின் தாக்கம் குறித்து குறைத்து மதிப்பிட வேண்டாம். நாட்டில் அமுலிலுள்ள கட்டுப்பாடுகளும் போதுமானதாக இல்லை. ஆகவே ‘பிளக் லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்வதே சிறந்தது என வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது நாட்டை 3 …
-
- 2 replies
- 354 views
-
-
ஈழத் தமிழர்களை கொடூரமாக சுட்டுக்கொல்லும் சிங்களப் படையினருக்கு தமிழர்களே தண்டனை தந்தால்தான் உண்டு என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார ஏடு தெரிவித்துள்ளது. பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் - 4' வெளியிட்ட காணொலியில் தமிழர்களை கொடூரமாக சுட்டுக்கொல்லும் காட்சி தொடர்பாக குமுதத்தில் வெளிவரும் அரசு கேள்வி - பகுதியில் இளையான்குடியைச் சேர்ந்த இப்ராகிம் என்பவர் கேள்வி கேட்டுள்ளார். அந்தக் கேள்வியும் பதிலும் வருமாறு: ஈழத் தமிழர்களை சிங்கள இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லும் கொடூரக்காட்சியைப் பார்த்தீர்களா? அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சொல்லியிருக்கிறாரே நம்பலாமா? கிருஷ்ணாக்கள், நாராயணன்கள், மேனன்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை யுத்தம் குறித்த அறிக்கை மீளாய்வு செய்யப்படுவதாக ஐக்கிய நர்டுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அண்மையில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர், பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். மீளாய்வின் பின்னர் முழு அறிக்கையும் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்…
-
- 2 replies
- 649 views
-
-
முல்லைத்தீவு கோட்டையை வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 218 ஆம் ஆண்டு வெற்றி நாளான (25) இன்று முல்லைத்தீவில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் பண்டாரவன்னியனுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டது. கொவிட் 19 பரவல் காரணமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலைமையால் வருடந்தோறும் பண்டாரவன்னியன் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்படும் முல்லைத்தீவு நகர்ப்பகுதிக்கு செல்ல முடியாத நிலையில் ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் பண்டாரவன்னியனின் திரு படத்துக்…
-
- 0 replies
- 417 views
-
-
செப்டம்பர் மாதத்தின் பின்னர் ஏற்படும் கடும் மழையுடன் கூடிய பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஒரு லட்சம் பேரின் உயிருக்கு ஆபத்து அல்லது கடும் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாக முகாம்களில் பணியாற்றி வரும் 17 அரசசார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை பிரதானிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளன. கெயார் இண்டர்நே~னல், டென்மார்க் அகதிகளுக்கான பேரவை, ஃபோரூட், ஒக்ஸ்பார்ம் அவுஸ்திரேலியா, வேர்ல்ட் வின் லங்கா, ஒக்ஸ்பார்ம் பிரித்தானியா, சேவ் த சில்ரன் உள்ளிட்ட அமைப்புகள் இதில் அடங்குகின்றன. இந்த நிலைமையை தவிர்க்க வேண்டுமாயின் குறைந்தது ஒரு லட்சம் மக்களை முகாம்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அந்த …
-
- 0 replies
- 782 views
-
-
கூட்டமைப்பை நசுக்குவது பெரிய வேலையில்லை – மிரட்டுகிறார் சிறிலங்கா அமைச்சர் [ புதன்கிழமை, 18 செப்ரெம்பர் 2013, 00:12 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] புலிகளையே தோற்கடித்த சிறிலங்கா அரசாங்கத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நசுக்குவது ஒன்றும் பெரிய விடயமல்ல என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, அந்தக் கட்சி ஏன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவில்லை என்பதை தெளிவாக காட்டியுள்ளது. அரசியல் தீர்வு எட்டப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆயுதமேந்த நேரிடலாம் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. நாட்டைப் பிளவுபடுத்த முனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிறிலங்கா அரசா…
-
- 0 replies
- 333 views
-
-
நாவற்குழியில் சிங்களக் குடியேற்றத்தின் பிதாமகன் மாவை சேனாதிராஜா! நாவற்குழியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தை நிரந்தர சிங்களக் குடியேற்றமாக மாற்றியதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவே பதில் சொல்லவேண்டுமென நாவற்குழி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கடந்த அரசாங்கத்தினால் நாவற்குழியில் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டனர். அவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பாக இராணுவத் தளமொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் வழிபாட்டினை மேற்கொள்வதற்கு விகாரையொன்றுக்கு அண்மையில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அத்துடன் நாவற்குழி என்ற பெயரினை சாந…
-
- 1 reply
- 362 views
-
-
பதுக்கப்பட்டுள்ள நெல், சீனி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும் - அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் (எம்.மனோசித்ரா) சட்டத்திற்கு முரணான வகையில் சேகரிக்கப்பட்டுள்ள நெல், சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை மீட்டு அவற்றை மக்களுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் இது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தனக்கு தொடர்ச்சியாக அறியத்தருமாறும் மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பொலிஸ்மா அதிபர், சகல மாவட்ட அதிபர்கள், நுகர்வோர் அலுவ…
-
- 0 replies
- 179 views
-
-
காவற்துறையினர் மூளையற்றவர்கள்: சிறிலங்கா ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன காவற்துறையினர் மூளையற்றவர்கள் என்பது என்னைவிடவும் உங்களுக்கு நன்றாகத் தெரியும் என சிறிலங்கா ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தெனியாய பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் போது சிறிலங்கா காவற்துறையினர் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். லங்கா இரிதா பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் செய்து செய்யப்பட்டார்கள் என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஊடக சுதந்திரம் மீறப்படவில்லை என்பதனை அனை…
-
- 0 replies
- 429 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (05/06/2017)
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை பெற்று வெளியே வர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரிம் றோமர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரிம் றோமர் நேற்று புதன்கிழமை பிற்பகல் முதல்வரின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பின்போது அமெரிக்கத் தூதுவருடன் தூதரக அதிகாரிகளும் உடன் இருந்தனர். சுமார் ஒரு மணிநேரம் வரை நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்கத் தூதுவர் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்தார். இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் வருமாறு: கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினை குறித்…
-
- 2 replies
- 720 views
-
-
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் சிறிலங்கா அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், “மூன்று மாகாணசபைகளுக்கு செப்ரெம்பர் 21ம் நாள் நடத்தப்பட்ட தேர்தல் வெற்றிகரமாக அமைந்ததற்கு சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு மாகாணசபைக்கு முதல் முறையாக நடந்துள்ள இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது மக்கள் தமது விருப்பங்களுக்கேற்ப, மாகாணசபைகளுக்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்…
-
- 0 replies
- 261 views
-
-
சந்திரகாந்தன் எம்.பி ( பிள்ளையான் ) குழுவினரால் கொலை அச்சுறுத்தல் ! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் முகநூல் குழுவினர் ஊடாக தமக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமது தொழிற்சங்கத்திற்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன் முகநூல் ஊடாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில…
-
- 0 replies
- 330 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு ஆயுத வர்த்தக நடவடிக்கைகளுக்கு தரகராகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 662 views
-
-
இலங்கைக்கு வழங்கப்பட உத்தேசித்துள்ள போர்க் கப்பல்கள் வழங்குவதற்கு தடை விதிக்குமாறு கோரி தமிழகத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் இந்தியா இரண்டு போர்க் கப்பல்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ஒருவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், குறித்த போர்க் கப்பல்கள் வழங்கப்படக்கூடாது எனக் கோரி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போர்க் கப்பல்கள் வழங்கப்படுவதற்கு தமிழக மக்கள் விரும்பவில்லையென குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கைக் கடலில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்தக் கப்பல்கள் வழங்கப்படுவதற்கு எதிராக தடை விதிக்க வேண்டும் எனவும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது. http://tamil…
-
- 0 replies
- 287 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளர் சேனரத் கப்புகொட்டுவ தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட்சியின் மீளமைப்புகளுக்கு இடம் தரும் வகையில் தாம் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இந்தநிலையில் தலைமை பதவிக்கு தகுதியானவர் வரும் போது தாம் பதவி விலகத்தயார் என்று கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=94323&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 223 views
-
-
ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்து செயற்பட எமிரேட்ஸ் பேச்சுவார்த்தை ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய கிழக்கு ஊடகங்கள் இன்று வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், இலங்கையிலுள்ள விமான நிறுவனம் அல்லது விமான நிலையத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கான எவ்வித திட்டமும் தமக்கு இல்லை என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. arabianbusiness.com என்ற இணையத்தளத்திற்கு அந்நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்தால் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் 70 மில்லியன் …
-
- 0 replies
- 289 views
-
-
அரசுத் தலைவர் பதவிக்கான அடுத்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள ஜே.வி.பி, நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட அரசுத் தலைவர் பதவியை இல்லாதொழிப்பதற்கான அரசியல் செயற்றிட்டம் ஒன்றையும் தாம் வகுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது தற்போதைய காலகட்டத்தில் அரசுத் தலைவர் பதவிக்கு திடீர்த் தேர்தல் ஒன்றை நடத்துவதை தாம் எதிர்ப்பதாகவும் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்குத் தெரிவித்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இதனைத் தடுப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இருந்த போதிலும், அரசாங்கம் எமது கோரிக்கையைக் கவனத்திற்கொள்ளாமல் இவ்வாறான ஒரு தேர்தலுக்கான அறிவித்…
-
- 0 replies
- 364 views
-