Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்... யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றது. அனைவரும் கவனமாக செயற்பட வேண்டும், யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாகி யிருக்கிறார்கள். கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இருந்து த…

  2. (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனை கைதுசெய்ய பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளதாக தெரிவித்த, பொதுபலசேனா அமைப்பினர் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், சிறிய குற்றச்சாட்டை முன்னிலைப்படுத்தி பாரதூரமான குற்றச்சாட்டை மூடிமறைக்க வேண்டாம். தவறுகளை திருத்திக் கொண்டு தண்டனை வழங்கவே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி நுகர்வோர் அதிகார சபையில் வழங்கப்பட்ட தொழில் நியமணத்தில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளன. இம்முறைக்கேடு தொடர்பில் உரிய விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக இன்ற…

  3. (செ.தேன்மொழி) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் அமரபுர , ராமான்ய பீடங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து , கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவற்றுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நெருங்கி தொடர்பைக் கொண்டுள்ளார். இந்நிலையில் 20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான பிரதமரின் பிரதிப்பளிப்பையா இந்த அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளது ? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்கார கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது , அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயகத்திற்கு…

  4. ( எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து உரிய நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று (13 ) மாலை ஆலோசனை வழங்கிய நிலையில், அவரை கைது செய்ய இரு குழுக்கள் அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மன்னார் வீட்டுக்கு ஒரு குழுவும் கொழும்பிலுள்ள வீட்டுக்கு மற்றொரு குழுவும் அவரைக் கைது செய்ய அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளதாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன. அரச பணம் தவறாக பயன்படுத்தப்ப்ட்டமை தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தல் சட்ட விதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பிலும் அவரையும் மேலும் இருவரையும் இவ்வாறு சந்தேக நபர்…

  5. (நா.தனுஜா) இலங்கையில் சராசரியாக வருடாந்தம் சுமார் 25,000 பேர் புற்றுநோயாளர்களாக அடையாளங்காணப்படும் அதேவேளை சுமார் 14,000 பேர் வருடாந்தம் புற்றுநோயினால் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புற்றுநோயை முன்கூட்டியே இனங்காணல், அதற்கு முறையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளல், புற்றுநோய் வருவதைத் தடுக்கக்கூடிய வகையில் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் செயற்படல் உள்ளடங்கலாக மக்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் 'ஆயூ' என்ற சமூகவலைத்தளங்களின் மூலமான விழிப்புணர்வு செயற்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இரத்தவங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதன் போதே…

  6. விடுதலைப்புலி உறுப்பினரின் உறவினராலேயே பிரச்சனை -சிறிசேன குற்றச்சாட்டு இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் உறவினர் நியமிக்கப்பட்டதே பிரச்சினைகள் எழுந்தமைக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சுமத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தனது ஆட்சிக்காலத்தில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பபெறுகின்றன என சிறீலங்காவின் மனித உரிமை ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவைக்கு அறிவித்தது. படையினரும் பொலிஸாரும் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுவதாக மனித உரிமை ஆ…

  7. விடுதைப்புலிகள் அழைத்ததன் பேரிலேயே நோர்வே சமாதான பேச்சுவார்த்தையில் நடுநிலைமை வகித்தது- எரிக் சொல்ஹெய்ம் விடுதைப்புலிகள் விரும்பி தம்மை அழைத்ததன் காரணத்தாலேயே தமது நாடு இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுக்களில் நடுநிலைமை வகித்ததாக நோர்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அவர் வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார் . அதேவேளை அந்த நேர் காணலில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் இலங்கைக்கான சமாதான அனுசரணை பணியில் பிரான்ஸ் பங்கேற்க வேண்டுமென அப்போதைய அரச தலைவர் சந்திரிகா விரும்பியதாகவும் எரிக் சொல்ஹெய்ம் க…

    • 3 replies
    • 545 views
  8. அரசு திருந்தாவிட்டால் சர்வதேச சட்டம் பாயும்! - இரா.சம்பந்தன்.! இலங்கையில் ஆட்சியிலிருக்கும் ராஜபக்ச அரசு, தமிழ் - முஸ்லிம் சமூகம் மீதான அடக்குமுறைகளையும், பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடன் நிறுத்த வேண்டும். சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். இந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தையும் அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் சர்வதேச சட்டங்கள்தான் அரசு மீது பாயும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமான நாடு. ஓர் …

  9. ஆனந்தசங்கரி அவசர சிகிச்சைப் பிரிவில்! தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி வெள்ளவத்தையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதான அவர், திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக தெரியவருகின்றது. பல தசாப்த காலமாக தமிழ் அரசியல் பரப்பில் நிலைபெற்றுள்ள ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டவர். விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அடிக்கடி தேசியத் த…

  10. 20 ஆவது திருத்தத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டாம்; கத்தோலிக்க ஆயர்கள் போர்க் கொடி Bharati October 14, 202020 ஆவது திருத்தத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டாம்; கத்தோலிக்க ஆயர்கள் போர்க் கொடி2020-10-14T06:27:05+05:30 FacebookTwitterMore அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டாம். அதனை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இலங்கைக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிக்கு முன்னுரிமை வழங்குவதே சிறப்பு எனவும், 20 ஆவது திருத்தச்சட்டவரைவு பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் மீள் பரீசிலனை செய்யவே…

  11. தரம் 5 புலமைப் பரீட்சை எழுதாத மாணவர்கள் வடக்கில் அதிகம் 74 Views சிறீலங்காவில் இம்மாதம் 11ம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்து 387 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையிலும் 488 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 897 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 4 ஆயிரத்து 818 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 46 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 3 ஆயிரத்து 14 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 570 மாணவர்கள் விண்ணப்பித்த ந…

  12. செல்வம் – டக்ளஸை சந்தித்தார்… October 13, 2020 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (12.10.20) இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் 20 ஆம் திருத்தம் தொடர்பிலோ அல்லது 13 ஆம் திருத்தம் தொடர்பிலோ கலந்துரையாடப்படவில்லையெனவும், வன்னியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலேயே கலந்துரையாடியதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்…

    • 1 reply
    • 776 views
  13. பிரதமரின் இணைப்பாளராக கருணா October 13, 2020 கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13) அலரிமாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 30000 அளவிலான வாக்குகளைபெற்ற அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டிருந்தார். இதற்கமைய விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு இப்பதவியை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது #கருணா #மகிந்தராஜபக்ச #இணைப்பாளர் https://globaltamilnews.net/20…

  14. மீனவர்களுக்கு கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை..! மீறினால் எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்திக்க நோிடும்.. இலங்கை மீனவர்கள் வெளி நாட்டு மீனவர்கள் மற்றும் கப்பல் ஊழியர்களுடன் தொடர்புகளை பேண கூடாது. பேணினால் எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்திக்க நோிடும். என கடற்றொழில் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்றோழில் அமைச்சு மேலும் கூறியுள்ளதாவது, நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாவிடின், எதிர்காலத்தில் மீன் பிடி நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://jaffnazone.com/news/20961

  15. இலங்கை – இந்திய உறவுகளை எந்தத் தரப்பும் பிரிக்க முடியாது.! “இலங்கையும் இந்தியாவும் சரித்திர ரீதியில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை எந்தத் தரப்பும் அல்லது எந்த நாடும் பிரிக்கவே முடியாது. அதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கவும் மாட்டோம்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் காணொளி ஊடாக அண்மையில் கலந்துரையாடல் நடத்தியிருந்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார். 13ஆவது திருத்…

  16. திருத்தத்துக்கு எதிராக பெளத்த மத பீடங்கள் போர்க்கொடி நெருக்கடியில் அரசு.! ஜனாதிபதி கோட்டாபய அரசு கொண்டு வரும் அரசமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு எதிராக பெளத்த மத பீடங்கள் திடீரெனக் கிளர்ந்துள்ளன என்ற செய்தி கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் இந்த அரசமைப்புத் திருத்த முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு பெளத்தத்தின் நான்கு பிரதான மத பீடங்களில் இரண்டான அமரபுர பீடமும், ராமன்ய பீடமும் இன்று பகல் பகிரங்க செய்தியாளர் மாநாடு கூட்டி, அறிக்கை வெளியிட்டு அரசியல்தலைவர்களையும் பொதுமக்களையும் கோரியிருக்கின்றன. பெளத்தத்தின் மற்றைய இரு மதபீடங்களான அஸ்கிரிய பீடமும், மல்வத்தை பீடமும் கூட இந்த நிலைப்பாட்டைக் கைக்கொள்ளக் கூ…

    • 3 replies
    • 1k views
  17. யாழ்.மாநகர சபை உறுப்புரிமை; மணிவண்ணனுக்கு எதிரான மனுவை மீளப் பெற்றார் சுமந்திரன்.! யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்காத ஒருவர் யாழ்.மாநகரச சபை உறுப்பினராக அங்கத்துவம் வகிக்க முடியாது என்பதால் அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த மனுவுக்கு அமைவான விசாரணையின் அடிப்படையில் மணிவண்ணன் மாநகரசபை அமர்வுகளில் பங்கேற்க கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. குறித்த இடைக்காலத் தடைக்கு ஆட்சேபனை தெரிவித்து வி.மணிவண்ணனால் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாகவும…

  18. உச்ச நீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகளை 20 ஆவது திருத்தச் சட்டத்தினில் உள்ளடக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றினை நடத்துவதென்பது அவசியமற்றது - கல்வியமைச்சர் ஜி எல் பீரீஸ் 20 ஆவது திருத்தச் சட்டவரைபில் உச்சநீதிமன்றத்தினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளைச் சேர்ப்பதுபற்றி பொதுமக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவதற்கான சட்டத் தேவை எதுவும் இல்லையென்று கல்வியமைச்சர் ஜி எல் பீரீஸ் இன்று தெரிவித்திருக்கிறார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வாராந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த பீரீஸ், இந்த சட்டவரைபிற்கான உச்சநீதிமன்றத் திருத்தங்களை அரசாங்கம் சபாநாயகர் ஊடாக இம்மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கும் என்று மேலும் தெரிவித்தா…

  19. நான் யாரையும் கொலை செய்யவில்லை! கூட்டமைப்பு என்மேல் பழிபோடுகிறார்கள்! தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும்! October 12, 2020 எனது சிறைவாசத்திற்கு ஐந்து வருடங்கள். நல்லாட்சி தந்த பரிசு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டு நிறைவை முன்னிட்டு முகநூலில் மேற்கண்டவாறு தனது உள்ளக்குமுறலை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், 11.10.2020ம் திகதி என்னுடைய சிறை வாசத்திற்கு ஐந்து வயது. நல்லாட்சி தந்த பரிசு. நாங்கள் தான் த…

    • 31 replies
    • 3.5k views
  20. எனது உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ரணில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்; மைத்திரி சாட்சியம் Bharati October 13, 2020எனது உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ரணில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்; மைத்திரி சாட்சியம்2020-10-13T06:05:38+05:30 FacebookTwitterMore நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தன்னால் வழங்கப்படும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல…

  21. முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் 23 Views முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முறிப்புக் கிராமத்தில் மாபியாக்கள் போல செயற்படும் நான்கு பேர் கொண்ட வன்முறைக் குழு ஒன்று, ஊடகவியலாளர்கள் இருவரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் அவர்களிடம் இருந்த சொத்துக்களையும் அபகரித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது குறித்து விரிவாக தெரியவருவதாவது, முறிப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தலைமையிலான குறித்த குழு சட்டவிரோத மரக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. அந்தப் பகுதியில் காணப்படுகின்ற தேக்கு மற்றும் முதிரை மரங்களைக் கடத்தும் நடவடிக்கையை வழமையாகக் கொண்டு செயற்ப…

  22. மிகிந்தலையில் உள்ள அச்சகம் ஒன்றில் “இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட சஞ்சிகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய கோன்வெவ பிரதேசத்தில் இயங்கும் அரபு பாடசாலை ஒன்றில் நடைபெற இருந்த ஆண்டு விழாவுக்காகவே இந்த சஞ்சிகை அச்சிடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய குறித்த சஞ்சிகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://thamilkural.net/newskural/news/80225/

  23. துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலையில் நால்வர் கைது… October 12, 2020 அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்ட விரோ துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று நேற்று (11.10.20) தேசிய புலனாய்வு பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது. இங்கு துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டதாக கருதப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாகவும், இதன்போது 10 துப்பாக்கிகள் மீட்கப்பட்டு, காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பிதான வீதியிலுள்ள அம்மன் கோவிலுக்கு முன்னாள் இயங்கிவரும் ஒரு கடையினை தேசி…

  24. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர், முஸ்லிம்களுக்கு மறைமுக ஆதவு? 32 Views தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் முஸ்லிம்களுக்கும் மறைமுகமாக ஆதரவினை வழங்குகின்றார்கள்,சிங்கள மக்களுக்கும் மறைமுகமாக ஆதரவினை வழங்குகின்றார்கள் எனத் தெரிவித்த சீ.யோகேஸ்வரன், இவ்வாறு ஆதரவினை கொடுத்துவிட்டு எவ்வாறு கிழக்கின் தனித்துவம் பேணமுடியும்.கிழக்கினை பாதுகாக்கமுடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்தபோத…

  25. கொரோனா பரவலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம் கொரோனா பரவலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் இன்று (திங்கட்கிழமை) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்த பரீட்சைகள் இன்று முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும் 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாவர். எஞ்சிய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர். உயர்தர பரீட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.