ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிதி மோசடி – பலர் பாதிப்பு கடந்த ஆறு வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்கலாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் இன்று காலை மாளிகைக்காடு பேர்ல்ஸ் மண்டபத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நியாஸ் என்பவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். அங்கு கருத்துத் தெரிவித்த அவர், கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கிய இவர்கள், கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும் நாடு முழுவதிலும் 1200…
-
- 0 replies
- 661 views
-
-
கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடுகின்றது; புதிய பேச்சாளர் தெரிவு இடம்பெறும்? கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பில் ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. இதன் அடிப்படையில் பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது . இதன் போது புதிய ஊடகப்பேச்சாளர் நியமனம் மற்றும் புதிய கொரடா நியமனம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இப்போது கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக உள்ள சுமந்திரன் தேர்தல் காலத்தில் நடந்துகொண்ட விதம் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதுடன் இம்முறை தமக்கு ஊடகப்பேச்சாளர் பதவி மற்றும் கொரடா பதவி நிலைகளை வழங்கவேண்ட…
-
- 7 replies
- 749 views
- 1 follower
-
-
திவுலபிட்டியவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கொரோனா கொத்தணி உண்மையா பொய்யா என்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார். இன்றுவரையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மூடி மறைப்பதற்காக கொரோனா பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை கொரோனா பரவல் குறித்து கூறும் போது அது குறித்து மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். எப்படியிருப்பினும் இது உண்மை என்றால் எதிர்கட்சி என்ற ரீதியில் அதனை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இட…
-
- 1 reply
- 653 views
-
-
பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்செய்கை அவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் மேற்கொண்டார். https://www.virakesari.lk/article/91440
-
- 0 replies
- 701 views
-
-
யபழ்.இணுவில் துரை வீதியில் உள்ள ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று அங்கு உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீவைத்து எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. யபழ்.இணுவில் துரை வீதியில் உள்ள வீட்டிலேயே இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பெருமாள் கோவிலடியில் மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞனை வாளால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஆவா வினோதன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரண்டைந்த நிலையில் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமற்றியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே ஆவா வினோதனின் வீட்டில் வன்முறைக் கும்…
-
- 1 reply
- 765 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) திருகோணமலை சீனக்குடா எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இருதரப்பு உடன்படிக்கைகளை ஒரு தரப்பினருக்கு சாதகமாக மாற்றியமைக்க முடியாது. எனினும் இந்தியா பயன்படுத்தும் எண்ணெய் குதங்களை தவிர்ந்து ஏனைய எண்ணெய் குதங்களை பெற்றுக்கொள்ள இந்திய அரசாங்கத்துடனும், இந்திய எண்ணெய் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து மீண்டும் பெற்றுக்கொள்வது குறித்த நகர்வுகள் தொடர்பில் சபையில் கேள…
-
- 0 replies
- 442 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் இப்போது விடுவிக்கப்பட்டாலும் கூட அவர் நிரபராதி என அர்த்தம் கொள்ள வேண்டாம். இந்த தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதிய சாட்சியங்கள் கிடைத்தால் தேவைப்பட்டால் மீண்டும் கைது செய்யப்படுவார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார். இன்று காலையில் பாராளுமன்றம் கூடிய வேளையில், வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகள், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது மற்றும் அவ…
-
- 1 reply
- 399 views
-
-
வெட்கக் கேடான விடயம்..ஸ்ரீலங்கா குறித்து அமெரிக்க தூதுவர்.! ஸ்ரீலங்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே அமெரிக்கா எம்.சி.சி உதவித் திட்டத்தை வழங்க முன்வந்தது. எனினும் அது இவ்வளவு தூரம் அரசியலமயமாக்கப்பட்டமை வெட்கக் கேடான விடயம் என்று அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்பிளிட்ஸ் சாடியுள்ளார். எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஆங்கில இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், ஸ்ரீலங்காவின் வேண்டுகோளை தொடர்ந்தே அமெரிக்கா எம்.சி.சி உதவிதிட்டத்தை வழங்க முன்வந்தது. வறுமையை ஒழிப்பதும் அனைவரையும் உள்வாங்கிய பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் இலக்கை நோக்கமாக கொண்டே இந்த வேண்டுகோளை ஏற்றோம் என்று அம…
-
- 7 replies
- 1.3k views
-
-
கொழும்பு பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது! பல நாட்களாக சாதகமான வளர்ச்சியைக் காட்டிய கொழும்பு பங்குச் சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி, அனைத்து பங்கு விலை குறியீடு 7.65 சதவீதம் சரிந்து 462.99 புள்ளிகளாக காணப்பட்டுள்ளது. இன்றைய நாள் முடிவில் அனைத்து பங்கு விலைக் குறியீடும் 5587.18 புள்ளிகளில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் S&P குறியீட்டு எண் 165.92 புள்ளிகளாக சரிந்து 2288.51 ஆக முடிந்தது. இது 676 சதவீதம் குறைந்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு பங்குச் சந்தை 2020 மே முதல் வழக்கமான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொழும்பு-பங்குச்-சந்தை-ச/
-
- 1 reply
- 539 views
-
-
வடமராட்சி மக்களுக்கு சுகாதாரப் பிரிவினரின் அவசர அறிவித்தல் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தில் பயணித்த 50பேர் வரை அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனவே அந்தப் பேருந்தில் பயணித்தவர்கள் உடனடியாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது பிரதேசத்தில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமனைக்கோ தகவலளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்குள்ளானோர் பிரதேசத்தில் காணப்படலாம் என்ற அடிப்படையில் வடமராட்ச…
-
- 0 replies
- 319 views
-
-
‘முடக்கம்’ மக்கள் பிழைப்புக்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் – இராணுவத் தளபதி ‘முடக்கம்’ என்பது எளிதான முறையாக இருந்தாலும் அது இலங்கை மக்கள் பிழைப்புக்கு விதிக்கப்படும் அடக்குமுறையாக அமையும் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (செ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் இணைந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டதுடன் உடனடியாக நாட்டை முடக்குவது முக்கியமானதல்ல எனவும் மாறாக குறித்த தொற்றாளியை இனங்கண்டு அதனூடாக சமூக பரவலை தடுப்பதே அவசியம் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார். மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா தொற்…
-
- 0 replies
- 415 views
-
-
தியாகி திலிபனின் தியாகத்தை நான் ஒரு போதும் கொச்சை படுத்தியதில்லை இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் மட்டக்களப்பில் தெரிவிப்பு......
-
- 1 reply
- 413 views
-
-
கறுப்பு சந்தையில் ‘மஞ்சள்’; இறக்குமதிக்கான அரசின் தடை ஏற்படுத்திய பாதகமான விளைவுகள் Bharati October 6, 2020 கறுப்பு சந்தையில் ‘மஞ்சள்’; இறக்குமதிக்கான அரசின் தடை ஏற்படுத்திய பாதகமான விளைவுகள்2020-10-06T06:05:55+05:30Breaking news, கட்டுரை ”மஞ்சள் இறக்குமதிக்கு தடைவிதிக்க முன்னர், மஞ்சள் உற்பத்தியை அரசு ஊக்குவித்திருக்க வேண்டும். அதனை செய்யாது திடீரென அதன் இறக்குமதிக்கு தடை விதித்து உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நன்மையளிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் கறுப்புச்சந்தை வர்த்தகர்களும் மஞ்சள் மாபியாக்களும் மஞ்சள் கடத்தல்காரர்களுமே பெரும் நன்மையடைந்துள்ளனரே தவிர உள்ளூர் மஞ்சள் உற்பத்தியாளர்களுக்கு தற்போதைக்கு எந்த வித இலாபமும் கிடையாது. 400 ரூபாவுக்கு விற்…
-
- 0 replies
- 395 views
-
-
கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாட்களில் வருகை தந்த 9 மாணவர்களின் மாதிரிகள் இன்று பெறப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியால் இந்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிபவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த 9 மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நாளை செவ்வாய்க்கிழமையே கிடைக்கப்பெறும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை தொழிற…
-
- 0 replies
- 389 views
-
-
ஆணைமடுவிலுள்ள தெனன்குரிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞருக்கு கொரோனா தொற்று மூன்றாவது முறையாக கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த இளைஞன் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பியவர் எனவும், வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே முதலாவது முறை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹானா தெரிவித்துள்ளார். வெலிகந்த வைத்தியசாலையிலிருந்து குணமடைந்து வெளியேறிய பின்னர், இளைஞர் தெனன்குரியவிலுள்ள அவரது இல்லத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டார். அவர் தனது தாயுடன் தனிமைப்படுத்தலில் இருந்தபோது வைரஸின் அறிகுறிகள் தென்பட்ட பின்னர் மீண்டும் செப்டம்பர் 17 ஆம் திகதி ச…
-
- 0 replies
- 332 views
-
-
(ஆர்.யசி) முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் குறித்து பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்ததாக கூறிய கருத்துக்களை அவர் முழுமையாக நிராகரித்துள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் புகழ்பாட எனக்கு எந்த அவசியமும் இல்லை எனவும், திரிபுபடுத்தப்பட்ட செய்தியே வெளியிடப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார். அவர் மேலும் கூறுகையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்து நான் புகழாரம் சூட்டி பேசியதாக ஊடகம் ஒன்றின் திரிபுபடுத்தப்பட்டு செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியை அடிப்படையாகக்கொண்டு ஊடகங்களில் குறித்த செய்தி பரவி வருகின்றது. இது உண்மைக்கு புறம்பான செய்து என்பதுடன் எனது பெ…
-
- 0 replies
- 423 views
-
-
யாழ். குடாநாட்டில் இன்று மாலையிலிருந்து சுகாதார நடைமுறைகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு பொதுமக்கள் அநாவசியமாக வீதிகளில் நடமாடாது பாதுகாப்பாக தங்கள் வீடுகளில் இருக்குமாறும் ஆ.கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இன்றையதினம் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/91371
-
- 0 replies
- 432 views
-
-
(ஆர்.யசி) கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாதுகாப்பு செயலாளரிடம் கொவிட் -19 பரவல் நிலைமைகளை கையாள முன்னெடுக்கும் வேலைத்திட்டம் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் கட்ட பரவலாகவே நாம் இதனை பார்க்கின்றோம். முதல் முதலில் இலங்கையில் மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோதும், பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டாம் அலையொன்று பரவ ஆரம்பித்த போதும் துரிதமாக நாம் செயற்பட்டோம். இராண…
-
- 3 replies
- 399 views
-
-
மட்டக்களப்பில் மண் அகழும் பிரச்சினையால் பாதிப்படையும் விவசாயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழும் பிரச்சினை காரணமாக மாவட்டம் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நேற்றைய தினம் சுற்றுச் சூழல் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் தந்தபோது அவரை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதன்போது மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச் சூழல் சம்பந்தமாக அவருடன் கலந்துரையாடியிர…
-
- 0 replies
- 355 views
-
-
20 தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்து 20 வது அரசியலமைப்பு தொடர்பில் முற்றுமுழுதான இனக்கப்பாடு இல்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தங்களுக்கு கூறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த அரசியலைமைப்பை பாராளுமன்றத்தில் தடுப்பதற்கான நடவடிக்கையை நிச்சயம் எடும்போம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரிடம் பேசி இருக்கின்றோம். அவர்களும் எங…
-
- 0 replies
- 437 views
-
-
இருபதாவது திருத்தம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் – சுரேஸ் எச்சரிக்கை! by : Vithushagan http://athavannews.com/wp-content/uploads/2020/09/விடுதலைக்காக-உயிரை-அர்ப்பணித்த-தியாகிகளை-நினைவுகூருவது-தமிழரின்-அடிப்படை-உரிமை-சுரேஸ்-720x450.jpeg இருபதாவது திருத்தம் சிறுபான்மை தேசிய இனங்கள் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் செயல். இதனை நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தம் தொடர்பில் அவர் வெ…
-
- 0 replies
- 349 views
-
-
அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியது அரசாங்கம் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/08/government.jpg கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) முதல் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் சமூகத்திலிருந்து பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முறையான சுகாதார வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்க…
-
- 4 replies
- 748 views
-
-
உயர்தரப் பரீட்சை திட்டமிட்டப்படி நடைபெறும் 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் கொவிட்-19 நிலைமையை பரீட்சைகள் திணைக்களம் பரிசீலித்து வருவதாகவும், உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையானது ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறும். பரீட்சைகள் தொடர்பான உத்தியோகபூர்வ அட்டவணையானது கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முன…
-
- 0 replies
- 452 views
-
-
20ஆவது திருத்தத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து ஐ.நா.வில் எடுத்துரைத்த அருட்தந்தை இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்ச் சட்டமூலம் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையுமென அருட்தந்தை ஆ.குழந்தைசாமி, ஐ.நா.வில் எடுத்துரைத்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெற இருக்கின்றது. அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 6 தொடர்பான பொது விவாதத்தில் தமிழ் உலகம் என்ற அமைப்பு சார்பாக உரையாற்றிய அருட்தந்தை ஆ.குழந்தைசாமி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் க…
-
- 0 replies
- 408 views
-
-
ஒரு பிள்ளை, இரண்டு தாய்மார்; அம்பாறையில் சர்ச்சை ஒரு பிள்ளையை, ஒரே நேரத்தில் உரிமை கோரிய பல தாய்மார்கள் பற்றிய கதைகளை, பாடப் புத்தகங்களிலும் பக்கத்துத் தெருக்களிலும் அவ்வப்போது பார்த்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம். 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர், கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தையொன்றுக்கு, ஒன்பது பெற்றோர் உரிமை கோரிய சம்பவத்தை மறந்துவிட முடியாது. நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையை அடுத்து, ‘சுனாமி பேபி - 81’ எனப் பெயரிடப்பட்டிருந்த அக்குழந்தை, உரிய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவத்தையும் அறிவோம். இப்போது, அது போன்றதொரு சம்பவம், நம் முன்னே மீண்டும…
-
- 1 reply
- 447 views
-