ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
(செ.தேன்மொழி) ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் தெளிவான ஆணையை அளித்துள்ளனர். எனவே எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் தொலைபேசி சின்னத்தின் ஊடாகவே முன்னெடுக்கவிருக்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சி உட்பட எந்தவொரு தரப்பானாலும் எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இணைந்து செயற்பட வருவதாக இருந்தால் அதற்கு வெளிப்படை தன்மையுடன் வாய்ப்பளிக்க தயாராகவே உள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அமனுமதியுடனே ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும் , தேர்தல் நெறுங்கிய தருணத்த…
-
- 0 replies
- 380 views
-
-
அங்கஜன் இராமநாதனுக்கு யாழ்ப்பாணத்தில் சிறப்பான வரவேற்பு Aug 08, 20200 ஸ்ரீறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாழிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாழ் மாவட்ட இளைஞரணியின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ள அங்கஜன் இராமநாதனின் வரவேற்பு நிகழ்வு இன்று யாழில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, பொன்னாடைகள் போர்த்தி அங்கஜனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/அங்கஜன்-இராமநாதனுக்கு-ய/
-
- 0 replies
- 505 views
-
-
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பிர்களாக தெரிவு செய்யப்பட்டோர் விபரம் இன்று (07) சற்றுமுன் வெளியிடப்பட்டுத்தது. இதன்படி, ரஞ்சித் மத்தும பண்டார ஹரின் பெர்ணான்டோ இம்தியாஸ் பாகீர் மாக்கார் திஸ்ஸ அத்தநாயக்க எரான் விக்ரமரத்ன மயந்த திஸாநாயக்க தயானி கமகே ஆகியோர் தேசிய பட்டியலுக்கு தெரிவாகினர். https://newuthayan.com/சஜித்-அணியின்-தேசிய-பட்ட/
-
- 2 replies
- 666 views
-
-
தேர்தலுக்கு பின்னர் அடக்குமுறைகள் அதிகரிக்கலாம் – மனித உரிமை கண்காணிப்பகம் கவலை August 8, 2020 தேர்தலுக்கு பின்னர் மாற்றுக்கருத்துடையவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுடன் முரண்படுபவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரிக்கலாம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அச்சம் வெளியிட்டுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள்,பத்திரிகையாளர்கள் சட்டத்தரணிகள் மற்றும் அரசாஙகத்தின் கொள்கைகளுக்கு சவால்விடுபவர்களுக்கு எதிராக கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் அச்சத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சமீபகாலங்களில் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள என தெரிவித…
-
- 4 replies
- 769 views
-
-
அரசமைப்பு திருத்தங்கள் தற்போதைக்கு இல்லை- சுயாதீன ஆணைக்குழுக்களில் கைவக்கப்போவதில்லை- பொதுஜனபெரமுன August 8, 2020 அரசமைப்பு திருத்த நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது. அரசமைப்பை முற்றாக மாற்றுவதையோ அல்லது 19வது திருத்தத்தினை நீக்குவதையோ உடனடியாக முன்னெடுக்கப்போவதில்லை ஆழ்ந்து ஆராய்ந்து கவனமாக பரிசீலனை செய்த பின்னரே அதனை முன்னெடுப்போம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளும் போது மாற்றுநடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிச்சயமாக சில திருத்தங்கள் அவசியம்,நாட்டை ஆளும்விடயத்தில் தற்போதுள்ள விடயங்களை தொடர முடியாது என அவர் தெரிவி…
-
- 1 reply
- 481 views
-
-
நாளை மகிந்த பதவியேற்கிறார் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ மீண்டும் நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். இதற்கான நிகழ்வு நாளை காலை 8.30 மணியளவில் களனி ரஜமகா விகாரையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதேவேளை புதிய அமைச்சரவை பதவியேற்பு எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.samakalam.com/செய்திகள்/நாளை-மகிந்த-பதவியேற்கிறா/
-
- 1 reply
- 499 views
-
-
இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் என மொத்தம் 25 தமிழர்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்: இரா. சம்பந்தன் விக்னேஸ்வரன் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் டக்ளஸ் தேவானந்தா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மனோ கணேசன் சுமந்திரன் சிவஞானம் ஶ்ரீதரன் அங்கஜன ராமநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஜெயராஜலிங்கம் குலசிங்கம் தீபன் பிள்ளையான் - சந்திரகாந்தன் சாணாக்கிய ராகுலன் கோவிந்தன் கருணாகரன் வேலுகுமார் வியாழேந்திரன் பழனி திகம்பரம் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் உதயகுமார் ஜீவன் தொண்டமான் மருதபாண்டி ராமேஸ்வரன் வடிவேல் …
-
- 18 replies
- 1.5k views
-
-
புதய நாடாளுமன்றம் எதிர்வரும் 13ஆம் திகதி கூடவுள்ளது. கடந்த 5 மாதங்களிற்கு பின்னர், நாடாளுமன்றம்- நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். யாழில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வியடைந்தார். இம்முறை நாடாளுமன்றத்தில் 28 தமிழ் பேசும் தமிழர்கள் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 25 பேர் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்கிறார்கள். முன்னாள் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவா…
-
- 4 replies
- 677 views
-
-
சம்பந்திகள் இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகினர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒரு ஆசனம் கிடைக்கப் பெற்றது. 21,554 விருப்பு வாக்குகளைப் பெற்ற அக்கட்சியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் அந்த ஆசனத்தைப் பெற்றார். அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மஹிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜென பெரமுன சார்பில் போட்டியிட்ட வாசுதேவ நாணயக்கார பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். அவர் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 66,991. இதன் மூலம், இருவேறு கொள்கைரீதியான கட்சிகளில் போட்டியிட்ட சம்பந்திகள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிறார்கள். விக்னேஸ்வரனின் மகன் வாசுதேவநாணயக்காரவின் புத…
-
- 1 reply
- 568 views
-
-
புதிய நாடாளுமன்றில் தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதற்கு தார்மீக உரிமை உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தர்க்கம் செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (07) பிற்பகல் நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், “கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை பெற்றிருந்த நிலையில், இந்த முறை 10 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது. தமிழ் மக்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதலான கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கை கிடைத்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்த…
-
- 1 reply
- 595 views
-
-
(தி.சோபிதன்) தமிழரசுக் கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ள கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (07.08.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் நாம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளோம் என்பது உன்மை. தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். எமது கட்சியின் தலைமையும் நிர்வாக கட…
-
- 4 replies
- 852 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) இடம்பெற் று முடிந்த பொதுத்தேர்தலில் 68 இலட்சத்து 53ஆயிரத்து 693 வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனக்கு கிடைத்த 17 தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இன்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளித்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இப் பெயர்பட்டியல் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அதில் மூன்று முஸ்லிம்கள். ஒரு தமிழர் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வடமாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் , ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலிசப்ரி , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்பில், வர்த்தகர் மொஹமட் பலீல் மர்ஜான் ஆகியோரே அந்த தேசிய பட்…
-
- 3 replies
- 1.5k views
-
-
(இராஜதுரை ஹஷான்) புதிய பாராளுமன்றத்துக்கு; இம்முறை மூன்று தந்தைமார்களும், அவர்களின் மகன்மார்கள் மூவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். நாமல் ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும விருப்பு வாக்கு பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்கள். அத்துடன் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் சஷிந்ர ராஜபக்ஷ ஆகியோரும், முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனும் அவரது மகன் பிரமித தென்னகோனும் முறையே விருப்பு வாக்குப்பட்டியில் இடம்பிடித்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மொட்டு சின்னத…
-
- 3 replies
- 556 views
-
-
கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் ; கருணா குழு மீது குற்றச்சாட்டு August 6, 2020 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான இரா.சயனொளிபவன், அவரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருணா குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இரா.சயனொளி பவன் மற்றும் அவரது சகோதரர் மரண வீடு ஒன்றுக்கு சென்று திரும்பியபோதே அவர்களை வழிமறித்த கும்பல் தாக்குதலைநடத்தியது. இதில் வேட்பாளரின் சகோதரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்திய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வேறு சிலர் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது …
-
- 11 replies
- 1.1k views
-
-
வாழ்த்துக்களால் நிறைந்த தியாக தீப முன்றல் Posted on August 7, 2020 by தென்னவள் 29 0 இலங்கைப் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றமையினை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் தூபியில் இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திர குமார் பொன்னம்பலம் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கு கட்சி ஆதரவாளர்கள் மலர்க் கொத்து வழங்கி தங்கள் வாழ்த்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர். மேலும் வேட்பாளர்களாக. போட்டியிட்ட க.சுகாஷ், திருமதி வாசுகி சுதாகர், க.காண்டீபன், டிலான் பத்மநாதன், ஆகியோருடன் கட்சி ஆதரவாளர்களும் செயற்பிட்டாளர்களும்…
-
- 0 replies
- 757 views
-
-
40வருடம் போராடியதற்காக வருத்தப்படுகிறேன். எமது இளமைகாலத்தை தொலைத்து விட்டோம். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும், எமது இளைய சந்ததியினருக்காகவும் அவர் நீண்டகாலப் பார்வையுடன் செயற்படுகிறார். பிரபாகரன், பொட்டு அம்மான் தலைமை தாங்கிய காலங்கள் முடிந்து விட்டன. இந்த நாட்டில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை இனி ஆரம்பிக்க முடியாது. அப்படியானதொரு சித்தாந்தத்தை நோக்கிப் போவது நேரத்தை விரயம் செய்யும் செயல் என தெரிவித்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு விவகாரங்களிற்கான பொறுப்பாளராக செயற்பட்டு, தற்போது இராணுவப்பிடியில் உள்ள கே.பி என அழைக்கப…
-
- 102 replies
- 10.1k views
-
-
மாவை, துரைராஜசிங்கம் பதவிகள் பறிபோகின்றன.? "மக்களின் ஆணையின் படி தமிழரசுக்கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மிக மோசமாகத் தோற்றிருக்கிறார்கள் அதனை நாங்கள் கருத்திலே எடுத்து உரிய நடவடிக்கை எடுப்போம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கின்ற எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு தமிழரசுக்கட்சியின் தலைமையும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டுள்ளதே இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன.? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெ…
-
- 15 replies
- 1.8k views
-
-
ரவிராஜின்.. உருவ சிலைக்கு, கறுப்பு துணியால் கட்டி போராட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் இ.ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் இ.ரவிராஜின் பாரியார் சசிகலா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடடார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்யப்பட்டு திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் என சமூக வலைத்தளங்களில் குற்றசாட்டுகள் எழுந்ததையடுத்து, சசிகலாவும் தான் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங…
-
- 2 replies
- 757 views
-
-
2020 பாராளுமன்றத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 39, 570 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஓர் ஆசனத்தை இம்முறையும் தக்கவைத்துள்ளது. அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதிகூடிய ஆசனங்களை பெற்று தனது ஆசனத்தை தக்க வைத்துள்ளார். 86 ஆயிரத்து 394 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, 68 ஆயிரத்து 681 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை சிங்களவர்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கடந்த முறையையும் விட இம்முறை அதிக வ…
-
- 8 replies
- 2k views
-
-
நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றம் செல்லவுள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களின் விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், 9 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம் பின்வருமாறு குருணாகலல் மாவட்டம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மஹிந்த ராஜபக்ஷ – 527,364 ஜொன்ஸ்டன் பெரேரா – 199,203 குணபால ரத்னசேகர – 141,991 தயாசிறி ஜயசேகர – 112,452 அசங்க நவரத்ன – 82,779 சமன்பிரிய ஹேரத் – 66,814 டீ.பி.ஹேரத் – 61,954 அநுர பிரியதர்ஷன யா…
-
- 0 replies
- 519 views
-
-
(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய உண்மையான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இம்முறை பொதுத்தேர்தல் வெற்றியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியிருக்கின்றார். நாட்டின் ஒன்பதாவது பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காகக் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரு வெற்றியைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. எனினும் எந்தவொரு கட்சியும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுமாக இருந்தால், அது குறித்த கட்சிக்கு மட்டுமீறிய அதிக…
-
- 0 replies
- 411 views
-
-
மனோ கணேசன் கொழும்பில் வெற்றி August 7, 2020 கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் 62,091 வாக்ககளைப் பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து தமது முகநூல் குறிப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “நான் அல்ல, நாம் வென்றோம்..! மகிழ்ச்சி. நன்றி. நம்பி வாக்களித்த மக்களுக்கும், உத்வேகத்துடன் உழைத்திட்ட கட்சி உடன்பிறப்புகளுக்கும், கடைசி தருண பரபரப்பில் பதட்டமடைந்து உலகெங்கும் இருந்து தொடர்பு கொண்ட நண்பர்களுக்கும் நன்றி. கடும் வெளியக, உள்ளக சவால்களுக்கு மத்தியில், தலைநகரில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தோம்.” ஐக்கிய மக்கள் சக்தியின் சா…
-
- 2 replies
- 1k views
-
-
ரணில் எம்.பி பதவியை இழந்தார் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 42 வருடங்களின் பின்னர் தனது எம்.பி பதவியை இழந்துள்ளார். கொழும்பில் போட்டியிட்ட அவரின் ஐக்கிய தேசிய கட்சி 30,875 வாக்குகளையே மொத்தமாக பெற்றுக்கொண்டுள்ளது. இது 2.61 வீதமாகும். இவ்வாறான நிலைமையில் அந்த கட்சி ஆசனங்களை ஒதுக்குவதற்கான மொத்த வாக்கு எண்ணிக்கையிலிருந்து கழிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த கட்சிக்கு ஆசனம் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போயுள்ளது. இதனால் ரணில் விக்கிரமசிங்க தோல்வியை தழுவியுள்ளார். இதேவேளை இந்த மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 674,603 வாக்குகளையும் , ஐக்கிய மக்கள் சக்தி 387,145 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன் தேசிய மக்கள் சக்தி …
-
- 12 replies
- 1.6k views
-
-
சிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான் August 7, 2020 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 54,198 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெிவாகியுள்ளார். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த வெற்றியைப் பெறறிருக்கின்றார். http://thinakkural.lk/article/60686
-
- 1 reply
- 743 views
-
-
இணைந்து செயற்பட வருமாறு... கஜேந்திரகுமார், விக்கிக்கு.. சுமந்திரன் பகிரங்க அழைப்பு வடக்கில் தெரிவு செய்யப்பட்ட சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இல்லையெனில் நாடாளுமன்றில் தாம் அவர்களோடு இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாகவும் கூறினார். http://athavannews.com/இணைந்து-செயற்பட-வருமாறு/
-
- 2 replies
- 1.1k views
-