Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை தெரிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற செயலாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் இந்த அரசியலமைப்பு தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 21 நாட்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்தால், அதன்பின்னர் 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்பிற்காக விவதாத்திற்கு எ…

  2. தமிழர்களுக்கு அழிவுதான் – மட்டு. சுமணரத்ன தேரர் எச்சரிக்கை! தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அழிவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்னதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். செங்கலடி ரஜமஹாவிகாரையில் காணிகள் தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றன என்று குற்றம் சுமத்தியுள்ள தேரர், இன்னும் ஒரு வாரத்திற்குள் இது நிறுத்தப்படாவிடின் மட்டக்களப்பு பெரும் விளைவினை எதிர்நோக்கும் என்று மிரட்டியுள்ளார். செங்கலடி பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றிற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றிருந்த அவர், அங்குள்ள வெட்டாந்தரைகளைக் காண்பித்து வீடியோ ஒன்றையும் சமூக வலைத்…

  3. தமிழர் தாயகத்தில் திடீர் மாற்றம்! மிரண்டுபோயுள்ள ராஜபக்ஷ அரசு தமிழ் கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு ராஜபக்ஷ அரசு மிரண்டுபோயுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு விதித்த தடையால், தமிழர் தாயகத்தில் மிகப்பெரிய மாற்றம் நடந்தேறியிருக்கின்றது. தமிழ் தேசியத்தை உயிர்நாடியாகக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஓர் புள்ளியில் இணைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்க அரசு விதித்துள்ள தடை குறித்து செய்தியாளர்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், ஆயுதப் போராட்டத்தின் பின்னரான தமிழ் அரசியலில் பி…

  4. விடுதலைப்புலிகளின் தலைவரின் நிலைப்பாடும் இதுவே! விக்னேஸ்வரனுக்கு பதில் தனித்தாயகம் வேண்டுமென்ற கருத்திற்காகவே 30 வருடமாக யுத்தம் செய்து அந்த நிலைப்பாட்டை இல்லாது செய்தோம் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனின் கருத்துக்களால் மீண்டும் இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட்டு, அது மீண்டுமொரு யுத்தத்தை தோற்றுவிக்கும் என்பதாலேயே நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாடாளுமன்றில் விக்னேஸ்வரன் கூறிய தமிழ் மொழி தொடர்பான வரலாறு குறித்து எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. …

  5. மக்கள் மீது கவனத்தை திருப்பிய சுமந்திரன் அரசியல்வாதிகளுக்கு தோல்வியேற்படும் போது தான் மக்கள் மீதான கரிசனைகள்; அவர்களுக்கு வருவதுண்டு. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரனும் விதிவிலக்கில்லை. அண்மையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு சந்தித்த தோல்வியை தொடர்ந்து மக்களின் தேவைகள் தொடர்பில் அதன் கவனம் திரும்பியுள்ளது. யாழ் மாநகரசபையில் உள்ள வசந்தபுரம் கிராமத்தில் உள்ள 86 குடும்பங்களுக்கு 10 கழிவறைகளை கட்டிக்கொடுக்கும் பணியை சுமந்திரன் மேற்கொண்டு வருகின்றார். தற்போது அங்கு இரண்டு கழிப்பறைகளே உள்ளன. இதற்கான செலவான ஒரு மில்லியன் ரூபாய்களை சமூகவலைத்தளங்களின் ஊடாக அவர் சேகரித்து வருகின்றார். இதனிடையே> புலம்பெயர் சமூகத்த…

  6. நாமலுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த கோட்டாபய - உடன் நிறைவேற்ற உத்தரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் மதுரங்குளி நகருக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை அவசரமாக புனரமைத்துக் கொடுக்குமாறு மாணவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அத்துடன், மதுரங்குளி சிங்கள பாடசாலையையும் வீதியின் மறுபுறம் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் ஒன்றையும் அமைத்து தருமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்க…

  7. செம்மணி பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு- பலர் கைது செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பன இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். குறித்த சம்பவங்கள் தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை காலை விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நாயன்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர், பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்…

  8. ஜனாதிபதிக்கு பௌத்த ஆலோசனை சபை பாராட்டு மகா சங்கத்தினரின் உபதேசங்கள் மற்றும் ஆலோசனைகளை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பௌத்த ஆலோசனை சபை தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி பின்பற்றுகின்ற வழி முறைகள் சிறந்த மற்றும் நியாயமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு காரணமாக அமையுமென்று ஆலோசனை சபையின் உறுப்பினர் நாயக்க தேரர் தமது நம்பிக்கையை வெளியிட்டார். இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6வது தடவையாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய பௌத்த ஆலோசனை சபையின் மூலம் இதுவரை முன்வைத்த ஆலோசனைகளை செயற்படுத்துதல் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது. தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த புராதன இடங்களை பாதுகாத்தல், குறைபாடுகள…

  9. பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி- எதிர்கிறது தொழிற்சங்கம். September 18, 2020 ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அண்மையில் பொதுச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்படுவதற்கு, நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்களில் ஒன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதானது பொது சேவையை தவறான கலாச்சாரத்திற்கு வழிநடத்துவதாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படைத் தலைமையகம், ரெஜிமென்ட் மையங்கள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகள் உட்பட நாடு முழுவதும் 51 இராணுவ பயிற்சி நிரலையங்களில் அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ள…

  10. மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும்; உறுதியாகக் கூறுகின்றார் அங்கஜன் BharatiSeptember 18, 2020 மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தற்போதுள்ள அரசாங்கத்தினால் நிச்சயம் தீர்வு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 14 திகதி யாழ்.வருகை தந்த வீடமைப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வீட்டுத்திட…

  11. நினைவுகூரும் அடிப்படை உரிமையை மறுத்தால் போராட்டம்; தமிழ்க் கட்சிகளின் கூட்ட முடிவு குறித்து சுரேஷ் BharatiSeptember 19, 2020 “30 வருடகால போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவு கூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும். அதற்குத் தடை விதிப்பது தமிழர்களின் உரிமைகளை மறுதலிப்பதாகும். எனவே அரசு இந்தத் தடைகளை அகற்றவேண்டும். இதற்கான, கோரிக்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு பதிலளிக்கவேண்டும். பதிலளிக்க தவறினால் தமிழர் தாயகத்தில் அரசின் செயற்பாடுகளை கண்டித்து தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன். திலீபனின் …

  12. இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை – அரசாங்கம் Rajeevan ArasaratnamSeptember 19, 2020 இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உண்மை நீதி இழப்பீடுமற்றும் மீளாநிகழாமை ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளருடனான கலந்துரையாடலின் போது இலங்கை பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர். கடந்த நான்கரை வருடங்களாக உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறியுள்ள இலங்கைக்கு வெளியே இருந்துமுன்வைக்கப்பட்ட நல்லிணக்க கட்டமைப்பினை தொடர்வதை கைவிட்டுவிட்டு இலங்கையின் நலனை கருத்தில் கொண்டு பயனளிக்க கூடிய நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவத…

  13. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’- க.வி. விக்னேஸ்வரன் அறிக்கை கௌரவ மாவை சேனாதிராஜா மற்றும் கூட்ட ஏற்பாட்டாளர்கள், ஜனநாயகம் மற்றும் மனிதநேய பண்புகளுக்கு கிஞ்சித்தும் இடமளிக்காமல் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக எல்லா அரசியல் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி எவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என்று தமிழரசு கட்சியின் தலைவர் கௌரவ மாவை சேனாதிராசா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நான் வரவேற்கின்றேன். இத்தகைய செயற்பாடுகள் இன்றைய காலத்துக்கு மிகவும் அவசியமானவை. அத்தோடு, இத்தகைய செயற்பாடுகள் அரசியல் கட்சிகளை மட்டுமன்றி ஏனைய பொது அமைப்புக்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கி, அரசியல் சாராத வகையில் முன்னெடுக்கப்…

  14. (இராஜதுரை ஹஷான்) மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் மக்களின் நலன் கருதி தேவைக்கேற்ப வழங்கப்படுமே தவிர ஒருபோதும் வேறுப்படுத்திக் கொடுக்க முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சில் இன்று அரச அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாகாணசபை முறைமையை இரத்து செய்ய வேண்டும் என நான் குறிப்பிட்ட தனிப்பிட்ட கருத்தை அரசியல்வாதிகள் அரசியல் மட்டத்தில் பிரதான பேசுபொருளாக மாற்றியமைத்து விட்டார. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட போது நான் கடுமையாக எதிர்த்தேன். அன்றிலிருந்து இன்று வரை அதற்கு எதிராகவே க…

    • 3 replies
    • 848 views
  15. பெரும்பான்மையினரின் இனவாதம் தேசியவாத போர்வையை போர்த்திக்கொண்டு வந்துள்ளது இது மிகவும் ஆபத்தானது-ரவூப் ஹக்கீம் முகப்பு இருபதாம் ஆண்டு நிறைவு தொகுதி வெளியீட்டிற்கான கட்டணம் எம்மைப்பற்றி தொடர்புகளுக்கு விளம்பரம் Thinakkural Friday ,18 Sep 2020,12:33:21pm Today's E-Paper உலகம் உள்ளூர் கட்டுரை சினிமா தொழில்நுட்பம் விளையாட்டு வீடியோ பெரும்பான்மையினரின் இனவாதம் தேசியவாத போர்வையை போர்த்திக்கொண்ட…

  16. காணி ஆவணம் இல்லாதவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க கோரிக்கை! நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போதிலும் அக் காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத் தீவுக்கான ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது பகுதிகளில் பாரியளவு காணிப் பிரச்சினை காணப்படுகிறது. வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள காணிப் பிரச்சினைகளே அதிகமா…

  17. பொதுமக்கள் முறைப்பாட்டு பெட்டிகள் வழங்கிவைப்பு by : Yuganthini பொதுமக்கள் முறைப்பாடு மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல், இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் அனுசரணையில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளது . வன்னிப்பிராந்தியத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளான பேருந்து நிலையம், பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் ஆலோசனை மற்றும் முறைப்பாட்டு பெட்டிகள் பொருத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இப்பெட்டிகளில் பொதுமக்கள்…

  18. கிரிக்கெட்டா, கொரோனாவா என நாமல் தீர்மானிக்க வேண்டும் – மனோ! by : Benitlas http://athavannews.com/wp-content/uploads/2020/09/mano-ganesan-1.jpg கிரிக்கெட்டா, கொரோனாவா என நாமல் தீர்மானிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். “நாட்டில் கொரோனா நோயாளரில் பெரும்பாலோர் வெளிநாடு சென்று வந்தோர். இந்நிலையில், இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, நமது சுகாதார துறையின் 14 நாள் தனிமைபடுத்தல் பரிந்துரையை ஏற்க மறுக்கிறார்கள். ஆகவே விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச, கிரிக்கெட்டா, கொரோன…

  19. தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி வேறு பிரிவினரிடம் ஒப்படைப்பு போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டிற்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரியை மேலதிக விசாரணைகளுக்காக கோயம்புத்தூர் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதீப் குமார பண்டார எனும் குறித்த பொலிஸ் அதிகாரி அண்மையில் இராமநாதபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் கொஸ்கொட தாராக தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரியே இந்த சம்பவம் தொடர்பிலிம் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. அண்மையில் சபுகஸ்கந்த பகுதியில் கண்…

  20. கடந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கவில்லை: இராஜதந்திரமே நடந்தது- செல்வம் எம்.பி. by : Litharsan கடந்த அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முண்டுகொடுக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கூட்டமைப்பு தமிழரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இராஜதந்திர முயற்சியையே மேற்கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தேசியத் தலைவருடையது. அந்த உருவாக்கத்தில்தான் நாம் எல்லோரும்…

  21. புலிகளின் தலைவரால் முடியாதது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழப் போகிறது! எச்சரிக்கிறார் ஞானசார தேரர் புலம்பெயர் புலிகளும் அதிகளவில் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என்றும் பிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த ஞானசார தேரர் அங்கிருந்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில…

    • 21 replies
    • 1.6k views
  22. இலங்கை சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி.! இலங்கையின் விமான நிலையங்களை திறப்பதற்கான எண்ணம் தற்போதை சூழ்நிலையில் கிடையாது என்று சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவி்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலில் இருந்து இலங்கையிலுள்ள சுமார் 2.20 கோடி பேரின் சுகாதார பாதுகாப்பு, 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிக்கையை வழங்கும் வரை விமான நிலையங்கள் எதுவும் திறக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்காணிப்பு மேலும் இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடல் மார்க்கமாக வருபவர்கள் தொடர்பாக கடற்படையினர் மிகவும் கவ…

  23. பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து விலகுவது எதற்காக? விக்கினேஸ்வரன் கருத்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு நிதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தீர்மானித்திருக்கின்றார். தேசிய ரீதியான நெருக்கடிகள் தமிழ் மக்களுக்கு உருவாகும் போது, கட்சி சார்பற்ற வகையில் அதனை தமிழ் மக்கள் பேரவை கையாள்வதற்கான ஏதுநிலையை ஏற்படுத்துவதற்காகவே அதன் இணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு தான் தீர்மானித்ததாக நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் சற்று நேரத்துக்கு முன்னர் தினக்குரல் இணையத்துக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்த்தர்களுடன் இது தொடர்பாக தான் இன்று காலையில் பேசியதாகவும், தமிழ் மக்கள் …

  24. ஐ.நாவைப் பகைத்தால் பேராபத்தைச் சந்திக்க நேரிடும் - அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை.! "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரிப்பதால் எவ்வித பயனையும் பெறாது. மாறாக பாதகமான பின்விளைவுகளையே சந்திக்கும். எனவே, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் முட்டிமோதுவதை இந்த அரசு நிறுத்த வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியே தீரவேண்டும். இல்லையேல் பேராபத்தை அரசும் நாடு சந்திக்கும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 45 ஆவது அமர்வின் ஆரம…

  25. பகிடிவதை விவகாரம்; மாணவர்கள் நால்வரை இடைநிறுத்தியது யாழ்.பல்கலைக்கழகம்.! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இணையவழி ஊடாக பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் நால்வர் அடையாளம் காணப்பட்டு கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இணையவழியில் மாணவர்கள் பாலியல் ரீதியிலான பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மா…

    • 50 replies
    • 4.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.