ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
மைத்திரி, ரணில் ஊழல்வாதிகள் இல்லை: சம்பந்தன் ஐக்கிய தேசியக்கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியையும் ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர் எனினும் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஊழல்வாதிகள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஊழல் பற்றி நீங்கள் பேசி வருகின்றனர். அவ்வாறு பேசிபேசியே நீங்கள் மக்களை முட்டாளக்குகின்றீர்களா? ஊழல் பற்றி பேசுகின்றீர்கள் அப்படி இடம்பெற்றிருந்தால் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது நபர் யார்? ஒரு நபர் இருக்கிறார்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்…
-
- 0 replies
- 354 views
-
-
நடேசன் அண்ணாவின் செவ்வி கருத்து பகிர்வில் http://www.pulikalinkural.com/ சிறீலங்கா அரசு மேற்கொண்டுள்ள போர்நடவடிக்கை காரணமாக எழுந்துள்ள மக்கள் இடர் தொடர்பாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்கள் வழங்கிய செவ்வி நன்றி தமிழ்நாதம் / புலிகளின் குரல்
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதநேய உதவிகளை நிறைவேற்றுவதற்கு ஐ.நா. முகவர் அமைப்புக்களும், ஏனைய சர்வதேச உதவி அமைப்புக்களும் 8,000 மில்லியன் ரூபா (71.2 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான நேரடி நிதியுதவிகளைப் பெற்றுள்ளன. இந்த 71.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு மேலதிகமாக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் அந்த அமைப்புக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான இணைப்பகம் அறிவித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஐ.நா.முகவர் நிறுவனங்களான உலக உணவுத் திட்டம், யூ.என்.எச்.சி.ஆர். மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றன. தற்பொழுது கிடைக்கப்பெற…
-
- 0 replies
- 526 views
-
-
பிரிட்டனில் புகலிடத் தஞ்சம் கோரிய இலங்கையர்களை நாடு கடத்தும் செயல் ஐ.நா. பிரகனடத்தை மீறிய ஒன்றாகும் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளன தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். இது குறித்து அவை தெரிவித்துள்ளதாவது: பிரிட்டனில் இருந்து இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ச்சியாக நாடு கடத்தப்பட்டு வருவது ஐ.நா. அமைப்பின் சித்திரவதைகளுக்கான குழு கவனம் செலுத்தி வருகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்படுகிறார்களா என்பது குறித்து விளக்கும் படியும், இனிமேல் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் என்றும் பிரிட்டனிடம் ஐ.நா. கேட்டுள்ளது. அதையும் மீறி தொடர்ந்தும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவார்களேயானால் பிரிட்டன் ஐ.நா.வின் பிரகடனத்தை மீற…
-
- 0 replies
- 1.2k views
-
-
எம்.மனோசித்ரா மகா சிவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்து மத விவகாரம் , கலாசார திணைக்களத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது , இந்துக்களின் விஷேட தினமான மகா சிவராத்திரி இம்மாதம் 11 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான தயார்படுத்தல்களை சிறப்பாக முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்துக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேச செயலகப்பிரிவுகளில் இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது இந்து மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்கள் கோவில்களுக்குச் சென்று கலாசார நிகழ்வுகளை முன்னெடுக்க தீர…
-
- 4 replies
- 501 views
-
-
இலங்கைக்கு சீனா வழங்க முன்வந்துள்ள 2.2 பில்லியன் டொலர் கடனில், இராணுவத் தளபாடங்களை வழங்கும் இணக்கப்பாடும் உள்ளடங்கியுள்ளதாக பாதுகாப்புத்துறை இணையத்தளமான strategy page தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=15245
-
- 0 replies
- 271 views
-
-
டென்மார்க் இந்தியத் தூதரகத்தை தாக்கிய மக்கள் திகதி: 16.05.2009 // தமிழீழம் டென்மார்க்கின் தலைநகரில் அமைந்துள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக 14-05-2009 அன்று முற்பகல் 10 மணியளவில் டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் ஒன்றுகூடி, தாயத்தில் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு சீன அரசு ஆயுதங்களையும் உதவிகளையும் ஆதரவினையும் வழங்குவதைக் கண்டித்து மிகவும் ஆவேசத்துடன் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சீனத் தூதரகத்திடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இதனைத்தொடர்ந்து இவர்கள் இந்தியத் தூதரகத்தை நோக்கி நடந்து சென்றனர். அங்கும் மக்கள் இந்திய அரசு தமிழின அழிப்பிற்கு துணைபோவதைக் கண்டித்து கோசங்களை எழுப்பியதுடன் மகஜர் ஒன்றையும் இந்தியத் தூதரகத்திடம் கையளித்தனர். …
-
- 1 reply
- 906 views
-
-
அஸ்ரப் மரணம் குறித்து திடீர் குண்டு போடும் தேசிய சுதந்திர முன்னணி! ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஸ்ரபின் திடீர் மரணத்தின்பின் தலைமைத்துவத்தை மிக சூழ்ச்சியாக ரவுப் ஹக்கீம் கைப்பற்றியதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முசம்மில் தெரிவித்தார். அஸ்ரபின் மரணத்திலும் ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் சந்தேகம் உள்ளதென அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பிரபாகரனுடன் ரவுப் ஹக்கீம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாகவும் தமிழ்ச்செல்வன் கொலைக்கு இலங்கை பாராளுமன்றில் அனுதாபம் தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஏறாவூர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் முஸ்லிம்களை விட…
-
- 1 reply
- 518 views
-
-
-
- 0 replies
- 418 views
-
-
உயிருடன் உள்ளார் பிரபாகரன்! ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது. களத்…
-
- 0 replies
- 5.8k views
-
-
யாழ். குடாநாட்டில் கடந்த 6 ஆறுமாத காலத்திற்குள் 16 வயதுக்குட்பட்ட 11 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என தெரிவித்த யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.முகமட் ஜிப்ரி, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரையும் இளைஞர்கள் காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளனர் எனவும் தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலத்திற்குள் 16 வயதிற்குட்பட்ட 11 சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது எம்மிடம் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டின…
-
- 0 replies
- 468 views
-
-
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் எதுவும் தலையிடக்கூடாது என ஐ.நா.வைக் கோருவதற்காக கொழும்பு தயாரித்துள்ள நகல் யோசனைக்கு மலேசிய அரசாங்கம் ஆதரவளிக்கக்கூடாது என அந்த நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான டத்தோ சிறி எஸ்.சாமிவேலு வலியுறுத்தியிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 403 views
-
-
அரசியல் தீர்வு விடயத்தில் உறுதியான நிலைப்பாடு தேவை அமெரிக்க காங்கிரஸ் குழுவிடம் சம்பந்தன் வலியுறுத்தல் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) உங்களின் கோரிக்கைகள், இலங்கை குறித்த அவதானங்கள் உள்ளிட்ட விடயதானங்களடங்கிய முழுமையான அறிக்கையொன்றை வாஷிங்டனுக்கு சமர்ப்பிப்போம் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க காங்கிரஸ்குழு எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜ யம் மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை அமெரிக்க காங்கிரஸ் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. அமெரிக்க சபை ஜனநாயக …
-
- 0 replies
- 326 views
-
-
போரில் பாதிக்கப்பட்ட மக்களின் சிறுதோட்டப் பயிற்செய்கையையாவது அரசு ஊக்குவிக்குமா..? 71 Views 1990 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடப்பெயர்வுகளைச் சந்தித்த மக்கள் வவுனியாவில் பூந்தோட்டம், அடப்பங்குளம், சிதம்பரபுரம் போன்ற பல கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களிலும், இந்தியாவிலும் அகதிகளாக வாழ்ந்தனர். அவர்களின் ஒரு தொகுதியினருக்கு மதவாச்சியையும், வவுனியாவையும் இணைக்கும் பிரதான வீதியில் வவுனியா நகர்ப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவில் 2000ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டு 100 குடும்பங்களுக்கு தலா அரை ஏக்கர் காணி வழங்கப்…
-
- 1 reply
- 366 views
-
-
"தமிழ் மக்கள் எதிர் காலத்தில் அரசியல் ரீதியாக தமது பலத்தை கட்டியெழுப்புவதன் மூலமே இனத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் " என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவிக்கின்றார். இன்று வாழைச்சேனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை பிரதேச சபைத் தலைவரான எஸ்.உதய ஜீவதாஸ் தலைமையில் நடை பெற்ற இவ் வைபவத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- "தற்போது 15 தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளன. அக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருந்தாலும் அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை.இதன் காரணமாகத் தான் அரசியல் தீர்வு உட்பட எந்த விடயத்திலும் ஒரு முடிவை எட்ட முடியவில்ல…
-
- 0 replies
- 969 views
-
-
முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த துமிந்த சில்வா தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என பொலிஸ் விஷேட அதிரடிப்படையை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=20157
-
- 2 replies
- 518 views
-
-
இலங்கை நீதித்துறை வரலாற்றில் 2 ஆவது தமிழ் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் நாளை ஓய்வு பெறுகிறார்.! (எம்.எப்.எம்.பஸீர்) பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் நாளை 28 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார். இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் கடமையாற்றிய நிலையிலேயே கே.ஸ்ரீபவன் நாளை ஓய்வுபெறவுள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அறிவித்துள்ளார். இந் நிலையில் இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசரை தெரிவு செய்யும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்படும் நபர்களில் ஒருவரை அரசிய…
-
- 1 reply
- 608 views
-
-
சிங்கள அதிகாரிகள் தமிழ் பிரதேசங்களுக்கு பணியாற்ற செல்லவேண்டும் என்று மஹிந்த பணித்துள்ளார். ஏற்கனவே ராணுவத்தினர் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தினை நடத்திவருகின்றனர். இவர்களில் அடக்குமுறை ஒருபக்கம் இருக்க இப்போது சிங்கள அதிகாரிகளும் வந்தால் எப்படி இருக்கும். . ராணுவ குடியிருப்புக்களை நிறுவியதுபோல இப்போது சிவில் நிர்வாக அதிகாரிகளுக்கு என மேலும் சிங்கள குடியேற்றஅங்களை அமைக்கும் ஒரு நடவடிக்கையே மஹிந்தவின் இந்த திட்டமாகும். . மேற்படி நடவடிக்கைக்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இனங்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதில் முதன்மையான அமைச்சாக இருக்க வேண்டும் எனவும் ஜனாத…
-
- 0 replies
- 509 views
-
-
13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதையோ அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரும் மட்டக்களப்பு குடியியல் சமூகத்தின் போசகருமான கலாநிதி ஜோசப் பொன்னைய்யா தெரிவித்தார். http://tamilworldtoday.com/?p=22415
-
- 1 reply
- 528 views
-
-
முஸ்லிம் செயற்பாட்டாளர்களை விடுவிக்க சர்வதேச மனுக்கள்! April 29, 2021 பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்தி ஒரு வருடத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம் சிவில் செயற்பாட்டாளர்கள் வழக்குகளை நீக்கிக்கொள்வதற்காக, உலகெங்கிலும் உள்ள மக்களின் ஆதரவைக் கோரி சர்வதேச மன்னிப்புச் சபை இரண்டு மனுக்களை வெளியிட்டுள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, 2020 ஏப்ரல் முதல் குற்றச்சாட்டுகள் இன்றி தடுப்புப் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் 2020 ஏப்ரலில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற அரச அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான ரம்சி ராசிக் 2020 செப்டம்பரில் பிணையில் விடுவிக்கப்பட்டார். மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு குறித்த நன்கு அறியப்பட்ட சட்டத்தரணி…
-
- 0 replies
- 334 views
-
-
கொள்ளையடிக்கப்படும் வன்னி மக்களின் வளங்கள்! போர் முடிவுக்கு வந்து விட்டது. மக்களுக்கும் புலிகளுக்கும் சேர்த்து இராணுவத் தீர்வைக் கொடுத்து விட்ட மகிழ்ச்சியில் அவர்கள் எக்காளமிட்டுச் சிரிக்கிறார்கள். மூன்று லட்சம் மக்களை கால்நடைகளைப் போல நான்கு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஆசியப் பிராந்தியத்தின் இடது வலது வல்லரசுகள் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே முடமாக்கிய பெருமையில் திளைக்கின்றன. மேற்குலகமோ இலங்கையில் பெரும் நாடகத்தனமான பாவனைகளை நடித்துக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த இலங்கைத் தீவின் சிறைக்குள்ளும் வெளியிலும் வாழும் தமிழ் மக்கள் பேரினவாதிகளின் பரிகாசப் பொருளாகியிருக்கிறார்கள். நாம் புலத்தில் அழுத…
-
- 1 reply
- 1.3k views
-
-
சபாஸ் நல்ல போட்டி - மாநில காவற்துறையின் இயலாமையே புத்தகாயா தாக்குதல் - விமல் - 19 ஜூலை 2013 ஜனாதிபதி ஆட்சியில் இலஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது மஹிந்த திருடரா - றவி - மாநில காவற்துறையின் இயலாமையை இந்தியாவின் புத்தகாயா தாக்குதல் எடுத்து காட்டுவதாக அமைச்சர் விமல் வீரவங்ச கூறுவாரேயானால், ஐக்கியமான நாட்டில், நிறைவேற்று அதிகாரம் கொணட ஜனாதிபதி ஒருவரின் கீழ், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இருக்கும் போது, நாட்டில் அப்படியான சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறுவது, ஜனாதிபதி ஒரு திருடர் என்ற காரணத்தினாலா என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் தற்போது, ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடி வருகிறது. அவற்றில் அதிகளவான ஊழல், மோ…
-
- 0 replies
- 331 views
-
-
விசாரணைக்காக அழைத்துச்சென்ற எனது மகளை ஒரு தடவையேனும் காட்டுங்கள் கொழும்பில் போராட்டத்தில் கலந்துகொண்ட தாய் கண்ணீருடன் கோரிக்கை (எம்.ஆர்.எம்.வஸீம்) எனது மகளை விசாரணை செய்துவிட்டு விடுதலைசெய்வதாகக் கூறி இராணுவமே கூட்டிச் சென்றது. அவர் பல்வேறு இடங்களில் இருக்கின்றார் என கூறப்படுகின்ற போதும் இதுவரையில் அவரை பார்க்க முடியவில்லை. தயவு செய்து ஒரு தடவையேனும் எங்கள் கண்முன்னே காட்டுங்கள் என தாயொருவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார். கொழும்பு புறக்கோட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை காணமலாக்கப்பட்டவர்களை விடுதலைசெய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தொடர்ச்சிய…
-
- 0 replies
- 169 views
-
-
கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருதமிழ் இளைஞர்கள் கைது திகதி: 18.06.2009 // தமிழீழம் கடந்த ஞாயிறு காலை கட்டார் இல் இருந்து சிறீலங்காவிற்கு விடுமுறையில் சென்ற இரு இளைஞர்கள் கட்டுநாயக்கா சர்வதேச நிலையத்தில் வைத்து எதுவித காரணங்களும் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் உறவினர்களால் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் செல்ல இருந்த நேரத்தில் அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் பின்னர் வாகன சாரதியையும் வாகனத்தையும் விடுதலை செய்ததாக தெரியவரகிறது. [sankathi]
-
- 3 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால்நினைவேந்தலிற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்றவர்களையும் பொலிசார், இராணுவம் தடுத்து நிறுத்தி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த அனுமதிக்கக் கூடாதென தடைவிதிக்க கோரி 27 பேரின் பெயர் குறிப்பிட்டு பொலிசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.அதற்கமைவாக கடந்த 13 ஆம் திகதி நீதிமன்று நினைவேந்தலில் ஈடுபட தடையுத்தரவு வழங்கியிருந்தது. இந்த தடையுத்தரவுக்கு எதிராக இன்று நகர்த்தல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், சுகாதார விதிமுறைகளை மீறாமலும், பயங்கரவாத நடவடிக்கைகளை அனுசரிக்காது அஞ்சலியை நடத்த நீதிமன்றம் அனுமதித்தது. அத்துடன், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பிலும் முள்ளிவாய்க்கால் அஞ்…
-
- 2 replies
- 548 views
-