Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்க நடவடிக்கை ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கம்பஹா மற்றும் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிப்பதற்குரிய மாதிரி விண்ணப்பப்படிவம் மற்றும் வழிகாட்டுநெறிகளை உள்ளடக்கிய மேற்படி வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இம்மாதம் 30ஆம் திகதி (2020/09/30) வரை ஏற்றுக்கொள்ளப்படும். பயனாளிகளைத் தெரிவுசெய்வதற்கான…

  2. கள்ளத்தோணிகள் நாங்கள் அல்ல, நாமே இலங்கையின் மூத்த குடி என நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் என்னிடமுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றிற்கு அண்மையில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், பல அறிஞர்களுடன் கலந்துரையாடி, புத்தகங்களினை படித்து ஆய்வு செய்தே நாடாளுமன்றத்தில் நிலவுரிமை குறித்துப் பேசினேன். இலங்கையின் ஆதிக்குடிமக்கள் பேசியது தமிழ் மொழிதான் என நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உண்டு. கள்ளத்தோணிகள் நாமல்ல. நீங்கள் எம்மைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட முள்ளிவாய்க்காலில் தான் அதிகளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எமக்கு இழைக்கப்…

    • 17 replies
    • 1.2k views
  3. ரவிராஜ் படுகொலை விவகாரம் – போலி ஆதாரங்களை உருவாக்குமாறு ரணில் கூறியதாக குற்றச்சாட்டு யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போலியான ஆதாரங்களை உருவாக்குமாறு சிஐடியினருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஓய்வுபெற்ற கடற்படை புலனாய்வு அதிகாரி காமினி செனவிரட்ண தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் ஜோன் அமரதுங்க நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்களிடமிருந்து தொடர்ச்சியாக தனக்கு தொலைபேசி அழைப்பு வருவதாக சிஐடியைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரி அமரவ…

  4. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா திருகோணமலைக்கு விஜயம்! இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (வியாழக்கிழமை) திருகோணமலைக்கு விஜயம் செய்தார். திருகோணமலையில் அமைந்துள்ள இராணுவத்தின் 22வது படைப்பிரிவின் தலமைக் காரியாலயத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இராணுவத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”கோவிட் 19 இன் தாக்கம் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியில் இலங்கை இராணுவமானது சிரமங்களை பாராது கடமைகளில் ஈடுபட்டிருந்தது. இதன் காரணமாக நாட்டில் குறித்த நோய்த்தொற்றானது சமூகபரவலடையாது பாதுகாக்க முடிந்தது. அதற்காக நன்றி தெரிவிக்குமுகமாக எனது இந்த விஜயம் அமைந்துள்ளது. போ…

  5. ஞானசார தேரரின் வாக்குமூலத்தை தொலைபேசியில் பதிவு செய்த மௌலவி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சி வழங்கி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் பதில் செயலாளர் அதனை தனது தொலைபேசியில் பதிவு செய்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சி வழங்குவதற்காக வருகை தந்திருந்தார். அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை உட்பட 10 குழுவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த சாட்சி விசாரணை இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகள் ஆ…

  6. 20 ஆவது திருத்தம் நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரபடவில்லை http://athavannews.com/wp-content/uploads/2020/08/G.L.Peiris-1.jpg அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முன்மொழியப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற விதி நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரபடவில்லை என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த அதிகாரம் பொதுமக்களுக்கு தடையற்ற சேவையை வழங்க ஜனாதிபதிக்கு உதவும் என குறிப்பிட்டார். மேலும் 19 ஆவது திருத்தம் இருக்கும் வரை, ஜனாதிபதி நீதிமன்றங்களுக்கு பதில் வழங்க வேண்டியவராக இருப்பதனால்…

  7. இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, https://www.virakesari.lk/article/89637 Tags

  8. (செ.தேன்மொழி) 'வியத்மக ' அமைப்பினூடாக புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஆட்சிமுறையை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு அரசாங்கத்தை அமைத்தவர்கள், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கி உலகச்சாதனை புரிந்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல கூறினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தன்னை மாறுப்பட்ட பண்புக் கொண்ட ராஜபக்ஷ ஒருவராகவே காண்பித்துக் கொண்டிருந்தார். வியத்மக அமைப்பின் ஊடாக புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஆட்சி முறையை முன்னெடுக்கப்போவதாகவே தெரிவித்து வந்தார். அதன் காரணமாகவே மக்கள் அவரை …

  9. புதிதாக 6 தூதுவர்கள் - இந்திய உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட 6 நாடுகளுக்கான இராஜதந்திரிகளை நியமிப்பது தொடர்பில் உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. குறித்த பதவிக்காக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் தகுதிகள் பரிசோதனை செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் ஆப்கானிஸ்தானிற்கான இலங்கை தூதவராக ஓய்வு பெற்ற அத்மிரல் கே.கே.வீ.பீ ஹரிச்சந்திர த சில்வாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானுக்காக இலங்கை தூதவராக சஞ்சீவ குணசேகரவின் பெயரும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதவராக ரவிநாத் ஆரியசிங்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸிற்கான இலங்கை தூதவராக பேராசிரியர் ஷானிக ஹிரிபுரேகமவின் பெயரும் சீனாவிற்கான இலங்…

  10. புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புகள், எந்தவித அச்சமுமின்றிஎம்முடன் இணைந்துப் பணியாற்ற வாருங்கள்” என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.அங்கு, இலங்கையின் முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், “கடந்த ஆட்சிக் காலத்தில், இலங்கையில் பல முதலீடுகளை மேற்கொள்ள வருகைதந்த புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களாகிய நீங்கள் அனுபவித்த சிரமங்களை நாம் நன்கறிவோம். குறிப்பாக, இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு, உள்ளுர் முகவர்கள் தரகுப் பணம் பெற முற்பட்டதால், நீங்கள் பலர், நாட்டில் முதலீடு செய்வதைத் தவிர்த்து வெளியேறியுள்ளமை, எமக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.“எமது அரச…

  11. ஐ.நா சிறுவர் நிதியம் உருவாக்கும் சிறுவர் சினேக மாநகர் தெற்காசியாவில் முதன்முறையாக இலங்கையில் சிறுவர் சினேக மாநகரை உருவாக்கும் செயற்றிட்டத்தினை மட்டக்களப்பு மாநகரசபையில் ஐ.நா சிறுவர் நிதியம் (யுனிசேப்) ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மணிவண்ணன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசேப்) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தீம் சட்டன்,சிரேஸ்ட திட்ட வரைஞர் லூயிஸ் மொரீரா டானியல்,மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,செரி நிறுவனத்தின் தேசிய திட்ட பணிப்பாளர் வி.தர்சன,மாநக…

  12. இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் – கனடா எம்.பி. தகவல் இலங்கையில் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்த 40 வருடங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis தெரிவித்துள்ளார். இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி கனடாவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் நீண்ட நடைபவனிக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “வலிந்து காணாமலாகப்படுதல், கடத்தல் என்பன சர்வதேச உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும் சமூகங்களிலும் முக்கியமான ஒரு மனித உரிமைப் பிரச்சினையாக உள்ளது. …

  13. தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவிப்பு தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை இலங்கையின் கடற்பரப்பில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு குறித்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அறிவிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக குறித்த ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லங்கதபுர தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கிழக்கே சங்கமன்கண்டி இறங்குதுறையில் 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி. நியூ டயமன் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணி…

  14. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழு கட்டுப்பாட்டையும் இழந்ததற்கு அரசாங்கம் இன்று கவலை வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கைக்கு ஒரு சொத்து என துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஏனைய நாடுகளின் முக்கிய துறைமுகங்கள் போன்ற உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஏனைய நட்பு நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும். எனினும், ஒரு முக்கியமான துறைமுகத்தின் கட்டுப்பாட்டை இழப்பது வருந்தத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனாவிடம் ஒப்படைக்க கடந்த அரசு எ…

  15. நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கியது தவறு – முன்னாள் என்ஐடி பிரதானி! தான் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்த காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்காது நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கியது தவறு என முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (08) சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது நீங்கள் தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியாக இருந்த காலத்தில் தேசிய பாதுகாப்பை விட நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கினீர்களா என ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த…

  16. புத்த பிக்குவுக்கு காணிமீது உள்ள உரிமை ஏன் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடாது? – விக்கினேஸ்வரன் மாகாண சபைக்கு காணி அதிகாரங்கள் கொடுக்கக் கூடாது என்று எம்மவர் சிலர் கூறி வருகின்றார்கள். இந்த விடயத்தை அவர்கள் கருத்தில் எடுக்க வேண்டும். எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களைத் தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா? என சிறீலங்கா பாராளுமன்றத்தில் இடைக்கால கணக்கு மீதான விவாதம் மீது இன்று (9) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்கினேஸ்வரன் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார். அவரின் உரையின் முழு வடிவம் வருமாறு: மாண்புமிகு சபாநாய…

    • 1 reply
    • 409 views
  17. வடகிழக்கு மாகாணங்கள் இன்று பிரிந்து நிற்பதற்கான காரணம் தமிழ் அரசியல் தலைவர்களே – தாயக இளைய சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் வடகிழக்கு மாகாணங்கள் இன்று பிரிந்து நிற்பதற்கான காரணம் தமிழ் அரசியல் தலைவர்களேயன்றி அங்குள்ள மக்கள் அல்ல என தாயக இளைய சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழன் ராகவாயது தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து அவர், தாயக இளையோர் சமூகத்தினால் தியாக தீபம் திலீபனின் 33வது நினைவு தினத்தினையொட்டி நடைபெறவுள்ள நடைபவனிக்கு தலைமையேற்கின்றேன்.எமது இந்த நடைபயணமானது தாயகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து தமிழ் தேசியத்தினை தாங்கி நிற…

  18. 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக இருந்து நல்லூர் வரையில் பேரணியொன்றினை நடத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும் குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளருமான ஜானுஜன் பொலிஸில் அனுமதி பெற முற்பட்ட நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தினை உறுதிப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஜானுஜன் இவ்…

  19. மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற விக்கியின் கருத்துக்கு, டயனா கமகே கடும் எதிர்ப்பு மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் கருத்துக்கு, இன்று நாடாளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினரான டயனா கமகே கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். நாடாளுமன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அன்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேர்க்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போது, மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றதொரு கருத்தை அவர் கூறியிருந்தார். அத்தோடு, வடக்குக் கிழக்கில் பௌத்தர்கள் இல்லாத காரணத்தினால், புத்தர் சிலைகளை நிறுவி வழிப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவரது…

    • 50 replies
    • 4.1k views
  20. (எம்.மனோசித்ரா) இலங்கை கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் , இந்திய கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் , இலங்கை துறைமுக அதிகார சபை உள்ளிட்ட அனைவரது ஒத்துழைப்புடனும் விமானப்படையும் இணைந்து சுமார் 100 மணித்தியால போராட்டத்தில் நியு டயமன் கப்பலின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை விமானப்படை வரலாற்றில் முக்கிய அம்சமாகும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விமானப்படை ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சங்கமன்கண்டி கரையிலிருந்து 38 கடல் மைல் தூரத்தில் பனாமா அரச்சிற்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை விமானப்படை தளபதி எயா…

  21. (ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்) வடக்கு கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் முறையிட்ட வேளையில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர வாக்குறுதியளித்தார். எனினும் சபையில் இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவோ வேறு விதத்தில் பதிலொன்றை கூறினார். "வடக்குக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இதனையும் அவர்களிடமே சென்று தீர்வு காணுங்கள் " என கடும் தொனியில் கூறினார். இதற்கு பதில் தெரிவித்த சார்ல்ஸ் எம்.பி, …

  22. யாழ்.மாவட்டத்தில் 3027 ஏக்கர் காணி முப்படை மற்றும் பொலிஸாரின் ஆக்கிரமிப்பில்..! இனியாவது பேசுவார்களா..? சுமார் 3027.85 ஏக்கர் தனியார் காணிகள் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படுவதாக யாழ் மாவட்ட செயலக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்.மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 23850. 72 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு 16775.50 ஏக்கராகவும் , 2015ம் ஆண்டு 7075.22 ஏக்கராகவும் , 2019ம் ஆண்டு 4047 .37 ஏக்கராகவும் , குறைவடைந்துள்ளது. தற்போது அது 3027.85 ஏக்கராக காணப்படுகின்றது. இதன்படி தனியார் காணிகளில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 21.91 ஏக்கரும், வேலணை பிரதேச செ…

  23. யாழ்.நாவற்குழி விகாரை வளாகத்தில் புதிதாக கட்டிடம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..! தமிழ் அரசியல்வாதிகளை துாக்கத்திலிருந்து எழுப்புங்கள்..! யாழ்.நாவற்குழி - விகாரை அமைந்துள்ள காணியில் பிறிதொரு கட்டிடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றிருக்கின்றது. விகாரைக்கு தேவையான கட்டிடம் ஒன்றை அமைப்பதற்காகவே இவ்வாறு கட்டிடம் அமைக்கப்பட்டதாக இன்று காலை இவ்வாறு அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே விகாரை அமைப்பதில் எழுந்துள்ள சர்ச்சைகளை மக்களும், அரசியல்வாதிகளும் மறந்த நிலையில் புதிதாக கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. https://jaffnazone.com/news/20324 டிஸ்கி :

    • 6 replies
    • 933 views
  24. குடாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து வருவோர் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் – வைத்தியர் கேதீஸ்வரன் by : Jeyachandran Vithushan யாழ் குடாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரேதமாக வருவோர் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் , “இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளிற்கு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருபவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் …

  25. பொய்யான கதைகளைக்கூறி பிரேமலால் அனுதாபத்தைத் தேடுகிறார் – தலதா அத்துகோரல by : Dhackshala பொய்யான கதைகளைக்கூறி, அனுதாபத்தைத் தேடிக்கொள்ளவே நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர முற்படுகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, நேற்றைய அமர்வின்போது என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 2001 ஆம் ஆண்டு அவரது உறவினர் ஒருவரின் உயிரிழப்புக்கும் நான் தான் காரணம் எனக் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும். இது உண்மையெனில் அவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.