ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
புதிய அரசமைப்பு உருவாகாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வோம் என்றவர்களுக்கு யாழில் வணபிதா சாட்டை July 25, 2020 புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு செய்திருக்கவேண்டும் என வணபிதா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வொன்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் வணபிதா ஜெயக்குமார் இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு வராவிடின் பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு இராஜினாமா செய்து தங்கள் நேர்மையை வெளிப்படுத்தியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் அதன் பின்னர் தேர்தலை சந…
-
- 0 replies
- 385 views
-
-
நல்லூர் திருவிழாவை தடையின்றி நடத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் I by : Litharsan நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை தடையின்றி நடத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஆலய உற்சவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “நாளை நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாக இருக்கின்றது . யாழ். மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு பேணப்பட்டுவரும் நிலையில் இ…
-
- 1 reply
- 484 views
-
-
நாங்களும் மலையகத்தில் பிறந்தவர்கள்தான் - மக்களுக்கு சேவையாற்றவே பிரபு தேர்தலில் போட்டியிடுகின்றார் - முத்தையா முரளிதரன் தெரிவிப்பு" நாங்களும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள்தான். கண்டியில்தான் பிறந்தோம். எனது அப்பா மஸ்கெலியா பகுதியில் வாழ்ந்தவர். அவரின் முயற்சியால் நாம் இன்று பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றோம்.எம்மிடம் பணம், புகழ், பெயர் எல்லாம் இருக்கின்றது. அரசியலுக்குவந்ததான் அவற்றை சம்பாதிக்கவேண்டும் என்றில்லை. எனினும், மக்களுக்கு சேவையாற்றவே எனது சகோதரர் தேர்தலில் போட்டியிடுகின்றார். முத்தையா பிரபு வெற்றிபெற்றாலும், பெறாவிட்டாலும் வழங்கிய உறுதிமொழிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்."இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா ம…
-
- 0 replies
- 360 views
-
-
ஒன்றையாட்சிக்குள்ளேயே தீர்வு; ஒருமித்த நாட்டுக்குள் முடியாது! – மஹிந்த ஒருமித்த நாடு என்ற சொற்பதத்துக்குள் சமஷ்டி தீர்வை – தன்னாட்சி தீர்வை – உருவாக்க முடியும். எதிரணிகளின் இந்த திருட்டுத்தனம் பற்றி நாம் மிகவும் அவதானமாக இருக்கின்றோம். அதனாலேயே ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்” இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், “ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு. இந்த சொற்பதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டோம். சம்பந்தர் அணியினரும் சஜித் அணியினரும் கூறும் ஒருமித்த நாடு என்ற சொற்பதத்தை ஏற்கமாட்டோம். அதுதான் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். சொற்பதங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியாவது …
-
- 0 replies
- 408 views
-
-
-விஜயரத்தினம் சரவணன் பொலிஸாரின் தடையைத் தகரத்து, முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் வருடாந்த பொங்கல் விழா, நாளை (24) நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. கோவில் நிர்வாகத்தினர், ஊர் மக்கள் இணைந்து, பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளில், இன்று (03) ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக, இன்றைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வுக்காக, கோவில் நிர்வாகத்தினர், கோவில் சூழலில் தகரப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும், கோவில் சூழலில், தகரப் பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடைவிதித்தனர். தகரப்பந்தலை கோவில் சூழலில் அமைக்கக்கூடாதென்றால், அதை எழுத்துமூலம் அறிவிக்குமாறு கோரினர். …
-
- 3 replies
- 673 views
-
-
கொழும்பிலிருந்து வந்த உத்தரவு: விஷேட சி.ஐ.டி. குழு விக்கினேஸ்வரனிடம் 2 மணி நேரம் கடும் விசாரணை July 24, 2020 உயர் பொலிஸ் சி.ஐ.டி. குழு ஒன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் இரண்டு மணி நேரம் கடும் விசாரணை நடத்தியுள்ளது. கொழும்பிலுள்ள உயர் அதிகாரிகளின் உத்தரவையடுத்தே இந்த விசாரணை இடம்பெற்றதாகத் தெரிகின்றது. யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியிலுள்ள முன்னாள் முதலமைச்சரின் இல்லத்துக்கு இன்று காலை திடீரெனச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தலைமையிலான சி.ஐ.டி. குழுவினரே இந்த விசாரணையை நடத்தியுள்ளனர். கடந்த டிசெம்பர் மாதம் முதலமைச்சரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தொடர்பாகவே இவர்கள் விசாரணையை அமைந்திருந்தது. கேள்வி …
-
- 2 replies
- 810 views
-
-
எதிர்காலத்தை காக்க நிகழ்காலத்தில் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் - இரா.சாணக்கியன் எதிர்காலத்தினைக் காப்பதற்கு நிகழ்காலத்தில் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் கூறுகையில், “எதிர்வரும் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இன்றிலிருந்து 12 நாட்களே உள்ளன. இந்த 12 நாட்களே எம் எதிர்காலத்தினை தீர்மானிக்கவுள்ளன. இந்த தீர்க்கமான காலகட்டத்தில் நாம் அனைவரும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். நாங்கள் ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் இ…
-
- 0 replies
- 428 views
-
-
சர்வதேசச் சட்டப் படி வடகிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள்; மஹிந்தவுக்கு விக்கி பதில் July 24, 2020 “வட கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தம்மை தாமே ஆள்வதென்பது அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் ஒரு சட்ட உரித்து. சர்வதேசச் சட்டப் படி வடகிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள். அதைக் கொடுக்க வேண்டியது மகிந்தரின் கடப்பாடு” எனக் கூறியிருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன். கூட்டணியின் கருத்துப் பரப்புரைக் கூட்டம் வல்வெட்டித்துறையில் இன்று மாலை இடம்பெற்ற போது தலைவருரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆவர் தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு; “ஆகஸ்ட் 5ம் திகதிக்கு மிகச் சொற்ப நாட்கள…
-
- 0 replies
- 469 views
-
-
சர்வதேசம் ஒருபோதும் தீர்வு வழங்காது என சம்பந்தனுக்கு அரசாங்கம் அறிவுரை.! "சர்வதேசம் ஒருபோதும் இலங்கைத் தமிழர்களுக்குத் தீர்வு வழங்கமாட்டாது. சர்வதேசத்தை நம்பி ஏமாந்துபோக வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்." - இவ்வாறு ராஜபக்ச அரசின் பேச்சாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 'தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்படவில்லை. அவர்களின் பின்னால் சர்வதேசம் நிற்கின்றது' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "சமஷ்டி முறைமையிலான தீர்வை ஒருபோத…
-
- 2 replies
- 927 views
-
-
போராட்டங்களே என் அரசியல் வாழ்வாக மாறிவிட்டது ´´போராட்ட காலத்திலே தான் எனது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், போராட்டங்களாகவே எனது அரசியல் வாழ்வு மாறிவிட்டது´´ என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நகர சபைத் தலைவர் நஹுஸீன் தலைமையில், மன்னார், உப்புக்குளத்தில் நேற்று (23) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட், 19 வருட அரசியல் பயணத்தில், எல்லாக் காலமும் போராட்டத்துடனேயே நீச்சலடித்து வருகிறேன். உங்கள் ஊரான …
-
- 1 reply
- 844 views
-
-
O/L, A/L மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்! ஜூலை மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 வைரஸ் பரவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக பாடசாலைகளை திறக்கும் தினம் மற்றும் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சி இதனை தெரிவித்துள்ளது. ஏனைய மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ளது. மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்…
-
- 0 replies
- 548 views
-
-
புலிகளை தோற்கடிக்க உதவிய பாகிஸ்தானை மறக்க முடியாது – கமால் நீண்ட தசாப்தங்களாக நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையின் போதும் மனித உரிமைகள் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இலங்கைக்கு எதிராக சுமத்திய சந்தர்ப்பத்திலும் பாகிஸ்தானினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பை ஒருபோதும் மறக்க முடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரால் ஏற்பாடு செய்யப்பட்ட நூற்றாண்டு பதக்கங்கள் வழங்கும் வைபவத்தில் நேற்று கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், “ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன். அதன்படி இலங்கை பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுத்த சமய…
-
- 3 replies
- 817 views
-
-
அதிபர்களின் கைபேசிகள் ஹக் செய்யப்படுகிறது – அதிபர்கள் சங்கம் தெரிவிப்பு அதிபர்களுடைய தொலைபோசி இலக்கங்களை ஹக் செய்து தரவுகளை திருடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கு தவறான பொருத்தமில்லாத தகவல்கள், படங்களை அனுப்பி அதிபர்கள், ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு கலங்கம் ஏற்படுத்தப்படுவதாக வட மாகாண அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வட மாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் வே.த.ஜேயந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், “கொரோனா வைரஸ் காரனமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சூம் மற்றும் வைபர் ஊடாக முன்னெடுத்திருந்தோம். அந்த மூன்று மாத காலத்திலே அதிப…
-
- 2 replies
- 654 views
-
-
ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் இவ்வாறு இராணுவப் படைவீரர்களை கொன்றொழித்ததாகத் தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். கருணா அம்மான் கொரோனா வைரஸ் தொற்றை விடவும் அபாயமானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தேர்தல் பிரச்சாரக்…
-
- 225 replies
- 25.5k views
- 2 followers
-
-
கொவிட் 19 கடமையில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவிப்பு இன்று (17) மதியம் 12.30 முதல் நாடளாவிய ரீதியில் தமது கடமையில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யு.ரோஹணவால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் பாதுகாப்பு இல்லாமல் கடமைகளைச் செய்ய இயலாமையின் காரணமாக அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=131019
-
- 5 replies
- 737 views
-
-
ஐ.டி.எச்.வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளர் தப்பியோட்டம் : தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கொட ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கண்டுப்பிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்தவரே இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். திருகோணமலை சீனன்குடாவைச் நேர்ந்த முகமட் நசீம் என்ற குறித்த சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தப்பிச்சென்றவரின் ஒளிபடத்தையும் அவர்தொடர்பான விபரங்களையும் ச…
-
- 0 replies
- 294 views
-
-
பயங்கரவாதியை கைது செய்யாமல் தகவல் தருபவராக நம்பி ஏமாந்ததை ஒப்புக்கொண்ட சிஐடி அதிகாரி! ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் சந்தேகநபர்களான பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் மைத்துனர் அன்சார் மற்றும் ஆமி மொஹைதீன் ஆகியோர் தகவல் தருபவர்களாக பயன்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் தொடர்பில் ஆராயத் தவறியதையும் 2019ம் மார்ச்சில் மொஹைதீனை கைது செய்ய பிடியாணையிருந்தும் கைது செய்யாமல் விட்டதையும் முன்னாள் சிஐடி பொலிஸ் இன்ஸ்பெக்டர் டயஸ் பத்மசிறி ஒப்புக்கொண்டுள்ளார். ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (23) சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். ஆமி மொஹைதீன் தொடர்பில் தாம் செயற்பட்ட விதம் சட்டத்தை மீறியதாக அமைந்துள்ளது என்றும்…
-
- 1 reply
- 600 views
-
-
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் வடமராட்சி மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது இந்தக் கூட்டத்தில் தேர்தல் கண்காணிப்புக் குழு பிரதிநிதிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசம், வடமராட்சி கடற்தொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். பொலிஸாரும் மற்றும் கடற்படையினர் இக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கடலட்டை பிடித்தல் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான மீன்பிடிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை மற்றும் அவற்றைத் தடுக்க கடற்தொழில் அமைச்சர், அதிகாரிகள் தவறியமையைக் கண்டித்து வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசத்துக்கு உள்பட மீனவர்கள் தொ…
-
- 0 replies
- 404 views
-
-
விரிவுரையாளர் கொழும்புக்கு மாற்றம் AddThis Sharing Buttons -எம்.றொசாந்த் கிளிநொச்சியில், அண்மையில், யானைத் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்ஷி, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, மேலதிக சிகிச்சைக்காக விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு, நேற்று மாலை மாற்றப்பட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிர…
-
- 3 replies
- 912 views
-
-
பெற்றோரின் திருமண விபரங்களை நீக்கி டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை! பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு பதிவாளர் நாயக திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெற்றோரின் திருமண விபரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் புதிய பிறப்புச் சான்றிதழ்களில் இலங்கையர் என குறிப்பிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிறப்புச் சான்றிதழ்களில் பெற்றோர் திருமணமானவர்களா அல்லது திருமணமாகாதவர்களா என்ற விடயம் உள்…
-
- 6 replies
- 981 views
-
-
நல்லை ஆதீன முதல்வருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமச்சாரிய சுவாமியை சந்தித்துக் கலந்துரையாடினர். கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் யாழ். நல்லூரில் அமைந்துள் நல்லை ஆதீனத்தில் குரு முதல்வரை இன்று (23) சந்தித்தனர். இச்சந்திப்பில், வேட்பாளர்களான, ஈ.சரவணபவன், சசிகலா ரவிராஜ், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன், இமானுவேல் ஆனோல்ட், தபேந்திரன் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். https://newuthayan.com/நல்லை-அதீன-முதல்வருடன்-க/ கூட்டமைப்பினர் யாழ் ஆயரயும் சந்தித்தனர் …
-
- 0 replies
- 483 views
-
-
போராட்டத்தினை பலவீனப்படுத்தியது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்க கருணா முயற்சி ! by : Vithushagan விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்தி தோல்வி அடையச்செய்தது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்கும் வகையிலேயே கருணாவின் பிரச்சாரம் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில், இன்று (வியாழக்கிழமை) காலை அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எந்தவொரு தேர்தலும் நீதியாக,நியாயமாக நடைபெறவேண்டும்.அதனையே நா…
-
- 0 replies
- 487 views
-
-
அமைதியான தேர்தலுக்காக கஃபே அமைப்பின் கிராமத்திற்கு கிராமம் வேலைத்திட்டம் ஆரம்பம்! by : Vithushagan அமைதியான தேர்தலுக்காக மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டத்தை கஃபே அமைப்பு இம்மாதம் 24ஆம் திகதிமுதல் நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் ஆரம்பிக்கவுள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று ( வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சித்திட்டமானது 24ஆம் திகதி வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் நாட்டின் சகல மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள அ…
-
- 0 replies
- 613 views
-
-
கண்டி மாவட்ட தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வங்குரோத்து வேட்பாளர்களின் சேறுபூசும் அரசியலானது, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சவாலாக அமையாது. வாக்காயுதம் மூலம் இம்முறையும் சாதனை படைக்க கண்டி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டுவிட்டனர். அதுமட்டுமல்ல வெத்து வேட்பாளர்களுக்கும் தக்கபாடம் புகட்டுவார்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். கம்பளை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது, “ 2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தல் மூலம்தான் 15 ஆண்டுகளுக்கு பி…
-
- 0 replies
- 464 views
-
-
ஆயுள் தண்டனை கைதி கண்ணதாசனை விடுவித்து கட்டளை! – விசாரணை நியாயமற்றது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போராளியும், யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறையின் முன்னாள் விரிவுரையாளருமான கண்ணதாசனை விடுவித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) கட்டளை வழங்கியுள்ளது. தண்டனையை எதிர்த்து கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டின் அடிப்படையில் அவரை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. இந்த மேன்முறையீட்டு வழக்கின் விளக்கம் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் எழுத்தில் வழங்கப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் 13ம் திகதி வழக்கு வ…
-
- 15 replies
- 1.8k views
- 1 follower
-