ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து விலகுவது எளிதல்ல – மஹிந்த சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து விலகுவது எளிதான காரியமல்ல. தாரைவார்க்கப்பட்டுள்ள தேசிய வளங்களை எதிர்கால சந்ததியினருக்காக மீட்டெடுப்பதற்கான முயற்சியை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மஹியங்கனையில் இன்று (18) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இதனை குறிப்பிட்டார். மேலும், சர்வதேச நாடுகளுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து விலகுவது எளிதான காரியமல்ல. உரிய வழிமுறைகளை எவ்வித முரண்பாடுகளும் இல்லாத விதத்தில் முன்னெடுக்க வேண்டும். ஒப்பந்தத்தினால் தாரை வார்க்கப்பட்டுள்ள தேசிய வளங்களை மீட்டு அதனை எதிர்கால தலை முறையினருக்கு பொறுப்பாக்க வேண்டும் என்பதில் உறுத…
-
- 3 replies
- 556 views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ “பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்த நாட்டை பேனாவால் எழுதிக்கொடுக்க நாங்கள் தயார் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று வெல்லவாய, செவனகல, தன்தும சந்தியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செவனகல என்றவுடன் எங்களுக்கு நினைவுக்கு வருவது கரும்பு பயிர் செய்கையாகும். இதுவரையில் செவனகல சீனி தொழிற்சாலையில் 1200 டன் கரும்பு சாறு பிழிந்து சீனி உற்பத்தி செய்தோம். 2400 டன் கரும்பு பிழியும் வசதி கொண்ட சீனி தொழிற்சாலையை தேசிய தொழிற்சாலையாக கட்டியெழுப்புவோம். நாங்கள் தேசிய தொழிற்சாலைக்கு முதன்மைத்துவம் வழங்குவோம். வெள…
-
- 1 reply
- 514 views
-
-
புங்குடுதீவில் 25 வீட்டுத்திட்ட தொகுதி திறந்துவைப்பு! தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புங்குடுதீவு வீட்டுத்திட்ட குடியிருப்புக்கள் இன்று (18) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ருவான் வணிகசூரிய உள்ளிட்டோர் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்ததுடன், வீட்டுத்திட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தனர். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தில் காணி அற்ற வறிய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, 25 குடும்பங்களிற்கு 25 வீடுகள் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டன. …
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
பொருட்களின் விலையை குறைக்க கோரி போராட்டம் ஜெட் வேகத்தில் உயர்வடைந்துள்ள பொருட்கள், சேவைகளின் விலையைக் குறைக்குமாறும், எரிபொருள் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்துமாற வலியுறுத்தியும் தேசிய மக்கள் சக்தி அமைப்பினர் ஹட்டனில் இன்று (19) போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இந்த போராட்டத்தில், நாடாளுமன்ற வேட்பாளர்களும் பங்கேற்றிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிடுகையில், “கொரோனா வைரஸ் உட்பட மேலும் பல பிரச்சினைகளால் மக்கள் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில் நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக மனிதநேயமற்ற இந்த அரசாங்கம் பொருட்களின் விலைகளை தொடர்ச்…
-
- 0 replies
- 350 views
-
-
நாங்கள் நாடாளுமன்றம் சென்ற பின்பும் எமது கூட்டணி என்பது இன்னும் விரிவுபடுத்தப்படும்; சுரேஷ் July 19, 2020 தமிழரசுக் கட்சிக்குள் ஒருமித்த கொள்கையோ ஒருமித்த கருத்தோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முகங்கொடுத்து பேச முடியாதவர்களாக முரண்பட்ட நிலையில் குழப்பங்களுடன் சிதறுப்பட்ட நிலையில் தான் அந்தக் கட்சியினர் இருக்கின்றனர். அந்தக் கட்சியில் இருக்கக் கூடிய சகல வேட்பாளர்களும் நவக்கிரகங்கள் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலைகளுக்குள் நிற்கின்ற நிலை தான் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் பல பேருடைய நாக்கில் சனி துள்ளி விளையாடுகின்றது. இவ்வாறு தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் மக்களைப்…
-
- 0 replies
- 367 views
-
-
தமிழர்களை அச்சத்தில் வைத்திருப்பதில் தீவிரமாக இருக்கும் கோட்டாபய அரசு; அனந்தி சசிதரன் குற்றச்சாட்டு July 19, 2020 தமிழ் மக்களை அச்சத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் கோட்டாபயவின் அரசு தீவிரமாக இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடமராட்சி-கலிகையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்- “மிருசுவில் படுகொலையாளி இன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு குற்றமிழைத்த பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றமே செய்யாத பல தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் சிறைகளில் வாடுகின்றனர். …
-
- 0 replies
- 351 views
-
-
யாழில் பல பாடசாலைக் கட்டிட நிர்மாணங்களை ஓரேநாளில் திறந்து வைத்தார் வடக்கு ஆளுநர் July 19, 2020 யாழ்.குடாநாட்டில் உள்ள பாடசாலைகளில் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த கட்டிடத்தொகுதிகளை வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவற்றை பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். ஓரேநாளில், நான்கு பாடசாலைகளின் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டிடதொகுதி நிர்மாணங்கள் மாணவர் பயன்பாட்டிற்காக உத்தியோக பூர்வமாக வழங்கியமை உட்பட வடக்கு கல்வி மேம்பாட்டிற்காக யாழ்.கல்விச் சமூகத்தினர் வரவேற்று பாராட்டியுள்ளனர். இந்நிலையில், யாழ்.சென்.ஜோன் பொஸ்கோ வித்தியாலத்தின், புதிதாகக் கட்டப்பட்டுள்ள கேட்போர் கூடத்துடன் கூடிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதியை த…
-
- 0 replies
- 495 views
-
-
வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் – யாழில் இராணுவத் தளபதி தெரிவிப்பு.! தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் தேவையேற்பட்டால், வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்துள்ள அவர், “யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தால் முடிந்தளவிலான காணிகளை நாம் விடுவித்துள்ளோம். இப்போது இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட 10 இற்கு 2 வீதமான காணிகளே எஞ்சியுள்ளன. சில இடங்களில் பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டு முகாம்களை அப்படியே வைத்துள்ளோம். இந்த முகாம்களை எதிர்காலத்திலும் அகற்ற மாட்டோம். ஏனெனில்…
-
- 0 replies
- 338 views
-
-
யாழ்.மாவட்ட பெண்களுக்கு காவல்துறை வேண்டுகோள்..! அளவாய் இருந்தால் ஆபத்து குறைவு.! யாழ்.மாவட்டத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள், தங்களது ஆபரணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு குறிப்பாக அதிகளவு ஆபரணங்கள் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி நிஹால் பிரான்சிஸ் கேட்டுள்ளார். யாழ்.குடாநாட்டில் அண்மைய நாட்களில் வீதிகளில் செல்லும் பெண்களிடம் நகைகள் கொள்ளையிடும் சம்பவம் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்களினால் பதியப்பட்டுள்ளன. அவை தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்ட…
-
- 0 replies
- 358 views
-
-
கூட்டமைப்பின் ஆசனங்களை பறிக்கவே பலரும் களமிறங்கியுள்ளனர் – கமலநேசன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் பிரதிநிதித்துவ ஆசனத்தினை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் களமிறங்கப்பட்டுள்ளனர் என வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார். மேலும், “வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்பதற்காக தற்போதைய அரசாங்கத்தின் உதவி மூலம் சில கட்சிகளும், பல சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கப்பட்டுள்ளது. இவர்களால் எந்தவித ஆசனத்தையும் பெறமுடியாது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் க…
-
- 3 replies
- 573 views
-
-
கடந்த ஐந்து வருட அனுபத்திலிருந்து வருகின்ற ஐந்து வருடத்திற்கு வாக்களியுங்கள்; மு.சந்திரகுமார் July 18, 2020 வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கடந்த ஐந்து வருட காலத்தில் ஆதாவது 2015 தொடக்கம் 2020 வரையான காலத்தின் அனுபவத்திலிருந்து இனிவருகின்ற ஐந்து வருடத்திற்கான வாக்கினை அளிக்க வேண்டும் என கேடயச்சின்னத்தில் சுயேச்சைக் குழுவாக போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2015 தொடக்கம் 2020 வரையான காலத்தில் மக்கள் வெறுமைக்குள் வாழ்ந்துள்ளனர். இ…
-
- 1 reply
- 462 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு July 18, 2020 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று சனிக்கிழமை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவினால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. யாழ். மாட்டீன் வீதியில் உள்ள தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் முற்பகல் 11 மணிக்கு இந்தவெளியீடு இடம்பெறவுள்ளது. இந்த வெளியீட்டின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இன்றைய தினம் விஞ்ஞாபனம் வெளியிடப்படுவதையடுத்து எதிர்வரும் 26ஆம் திகதி முதல் யாழ்.மாவட்டத் தொகுதி ரீதியிலான பிரசாரக் கூட்டங்களும் ஆரம்பமாகின்றன. இறுதிப் பிரசாரக் கூட்டம் 2ஆம் திகதி நல்லூர் சங…
-
- 3 replies
- 875 views
-
-
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அத்தனை அழிவுகளுக்கும் ஒருவகையி்ல் தானும் காரணம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வவுனியா, பூரசங்குளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் சார்பான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலப் போராளிகளில் ஒருவன் என்ற வகையில் அத்தனை அழிவுகளுக்குமான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக நெரிவித்த அமைச்சர் அவர்கள், மக்கள் தன்னோடு கைகோர்த்து வருவார்களாயின், எதிர்கொள்கின்ற ப…
-
- 8 replies
- 1.4k views
-
-
பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை தகவலை பகிர்வது தடைப்பட பிளவே காரணம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் புலனாய்வுத்துறை தகவலை பகிர்ந்து கொள்வதற்கு இரண்டு பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை பிரிவுகளுக்கு இடையிலான பிளவு தடையாக இருந்தது என்று பிரமுகர்கள் கொலை சதி சந்தேக நபரான முன்னாள் பயங்கரவாத தடுப்பு பிரிவு பணிப்பாளர் நாலக டி சில்வா சாட்சியமளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் (16) இரண்டாவது நாளாகவும் சாட்சியமளித்த போது இதனை தெரிவித்தார். மேலும், “அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கபில வைத்யரத்னவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு காரணமாக, 2017ம் ஆண்டு செப்டம்பர் ம…
-
- 0 replies
- 378 views
-
-
வெளியானது விசேட வர்த்தமானி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (17) இரவு வெளியிடப்பட்டுள்ளது. https://newuthayan.com/வெளியானது-விசேட-வர்த்தமா/
-
- 0 replies
- 371 views
-
-
திருகோணமலையை சிறப்புமிக்க நகரமாக மாற்றிக்காட்டுவேன்: ஒருமித்து தனக்கு வாக்களிக்குமாறு ரூபன் வேண்டுகோள் திருகோணமலையில் நடைபெற்றுவரும் செயற்கையான இன விகிதாசார மாற்றம் மற்றும் நில அபகரிப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்துவதற்கு திட்டமிட்ட நடவடிக்கைகளை தன்னால் மேற்கொள்ளமுடியும் என்றும் திருகோணமலையை சிறப்புமிக்க நகரமாக மாற்றிக்காட்ட முடியும் என்றும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சாட்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஆத்மலிங்கம் ரவீந்திராவின் (ரூபன்) தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த ரூபன், தான் போட்…
-
- 1 reply
- 498 views
-
-
இளைஞர்களைத் தாக்கிய, பொலிஸ் பொறுப்பதிகாரியால் வவுனியாவில் பதற்றம்! வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இளைஞர்கள் இருவரை தாக்கியதால் அப்பகுதியில் குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கையில், “இன்று மாலை குறித்த பகுதியில் நின்றிருந்த சமயம் அவ்வீதியால் வந்த ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்மை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்துவிட்டுச் சென்றார். சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் வந்த அவர், திடீரென்று எம்மைத் தாக்கினார். நாம் எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் அவர் எம்மை தாக்கினார்” என தெரிவித்தனர…
-
- 0 replies
- 422 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவரச காலச்சட்டத்தின் கீழ் கடந்த 10 முதல் 24 வருடகாலமாக கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் சிறைகளில் பலவருட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாவை சேனாதிராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தற்போது நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளின் …
-
- 8 replies
- 1.3k views
-
-
இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது- பிரிட்டன் by : Yuganthini இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் கவலை வெளியிட்டுள்ளார். பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில், டொமினிக் ரப் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றது. மேலும் முக்க…
-
- 1 reply
- 449 views
-
-
திருகோணமலையில் சம்பந்தன் ஐயா தோற்கடிக்கப்படக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது – எம்.கே.சிவாஜிலிங்கம் நல்லாட்சி அரசாங்கத்தில் நிஜப் பிரதமராக இருந்த சுமந்திரன் நிழல் பிரதமராக இருந்த ரணிலை வைத்து எதனைச் சாதித்தார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் சுமந்திரனுக்கு இதுவரை 6 விசேட அதிரடிப்படை, 4 அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவினர். தற்போது மேலும் பத்துப் பேர் அதிகரிக்கப்பட்டுள்ளது.5 மோட்டார் சைக்கிள் படையணி பாதுகாப்பு கொடுக்கிறது. பிறகு ஏன் சுமந்திரன் இராணுவ ஆட்சி பற்றி கவலைப்படுகிறார். அவர் வரும் போதே அந்த இடத்தில் மக்கள் கலங்குகிறார்கள்.இம்முறை திருகோணமலையில் சம்பந்தன் ஐயா தோற்கடிக்கப்படக் கூடிய சூ…
-
- 0 replies
- 646 views
-
-
வேற்றுமை கடந்து தமிழர்கள் விழித்தெழ வேண்டும்- சாணக்கியன் by : Litharsan தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாக்கவும் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழர்களாகிய நாம் வேற்றுமை கடந்து விழித்தெழ வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “தமிழ் தேசியத்தைக் காத்து விலைமதிக்க முடியாத தமிழர் உரிமைகளை வென்றெடுக்க நாம் எல்லோரும் ஒன்றாய் இணைவோம். இ…
-
- 1 reply
- 551 views
-
-
சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து வர்த்தமானியை அரசு வெளியிட வேண்டும்..! கபே வலியுறுத்து! கொரோனா தொற்று காலப்பகுதியில் தேர்தல்களை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பான வர்த்தமானியை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மீண்டும் கொவிட்-19 அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்த சூழலில், இவ்விடயம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அறிக்கையில், ”சுகாதார நடைமுறைகள் தொடர்பான இந்த தாமதமானது, பிரசாரங்கள் நடத்துவதை மிகவும் பாதித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல…
-
- 2 replies
- 363 views
-
-
‘வியத் மக’ உறுப்பினர்களை நாட்டுக்கு அழைத்துவர முயற்சி – பிரிவினைவாதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்கிறார் ஜனகன் by : Varothayan வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்துவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘வியத் மக’ அமைப்பின் உறுப்பினர்களை நாட்டுக்குள் அழைத்து வர ஏற்பாடுகள் இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் பலர் தாய்நாட்டுக்கு வருவதற்காக வெளிநாடுகளில் தவித்து வரும் நிலையில், அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று…
-
- 0 replies
- 427 views
-
-
ரணில் கட்சியை காப்பாற்றுவதில் மும்மூரமாக இருந்தார் - மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை! பிரபா கணேசனுக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கினை சகித்துக் கொள்ள முடியமால் அனைத்து கட்சியினரும் எனக்கு எதிராக தேவையில்லா பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட தலைமை வேட்பாளருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொழும்பில் இருந்து வந்தவன் என்ற குற்றச்சாட்டினை வைக்கின்றார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகளாக நான் வன்னியில் இருக்கின்றேன், வன்னியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கணக்கிட்டுபார்த்தால் அவர்கள் கொழும்பில் தான் அதிகம் இருந்துள்ளார்கள். வன்னி மாவட்ட மக்களின் வாக்குகளை பெற்…
-
- 0 replies
- 443 views
-
-
அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் by : Dhackshala அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பொலிஸ் நிலையத்தை நோக்கி கற்களை வீசியெறிந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குறித்த பகுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மொறட்டுவை – லுனாவ பகுதியில் அண்மையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அங்குலான பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில்,…
-
- 3 replies
- 611 views
-