ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
மனித உரிமைகளைப் பாதுகாக்க இலங்கை தவறிவிட்டது 08.05.2008 நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் அதிகரித்திருக்கும் மனிதஉரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற தவறியிருப்பதால் சிறிலங்கா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் ஆதரவு வழங்கக்கூடாது என சர்வதேச மற்றும் உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. ஐ.நா.மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கொண்டிருக்கும் உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்நிலையில் சிறிலங்காவிற்கு ஆதரவு வழங்கவேண்டாமெனக் கோரி 21 அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஐ.நா உறுப்பு நாடுகளுக்குக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன. கடந்த இரண்டு வருடங…
-
- 0 replies
- 944 views
-
-
ரவிராஜ் படுகொலை வழக்கில் பொய் சாட்சி? தமிழ்த் தேசியக் கூட்டiமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அரச தரப்பு சாட்சியாளராக சாட்சியமளித்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ப்ரிதிவிராஜ் என்பவர், பொய்யான சாட்சியமளித்துள்ளார் என எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள், இன்று (29) கொழும்பு நீதவான் திலின கமகே முன்னிலையில் தெரிவித்தனர். முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) உதவியாளர் ஒருவரும் மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிளும், இந்த படுகொலையில் தொடர்புபட்டுள்ளனர் என்றும் தற்போது அவர்கள், அவர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அரசாங்க தரப்பு சாட்சியாளர்களாக மாறியுள்ளனர் என்றும் சட்டத்தரணிகள், மன்றில் தெரி…
-
- 0 replies
- 429 views
-
-
16 MAR, 2025 | 02:12 PM (எம்.நியூட்டன்) கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறைப் பேராசிரியர் க.சசிகேஷ் தெரிவித்தார். சட்டத்தரணி செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (15) தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர் துரையப்பாப்பிள்ளை மண்டபத்தில் நடைற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினரீக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது. இது கவலையான விடயமாக உள்ளது. கணித விஞ்ஞான …
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. தொர்ந்து படிக்க...
-
- 5 replies
- 1.1k views
-
-
காலிமுகத்திடலில் 68 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் : கூட்டமைப்பு பங்கேற்பு, மகிந்த அணி புறக்கணிப்பு இலங்கையின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் இன்று வியாழக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பில் 4,025 இராணுவம், 984 கடற்படை, 1,216 விமானப்படைச் சிப்பாய்களும், 887 பொலிஸார், 674 சிவில் பா…
-
- 0 replies
- 297 views
-
-
திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்! கரையோரப் புகையிரத மார்க்கத்தின் மொரட்டுவை, எகொடஉயன புகையிரத நிலையத்தில் பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது. எவ்வாறாயினும், பாலம் இடிந்து விழும் போது பாலத்தின் மீது யாரும் நடமாடவில்லை எனவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், மொரட்டுவையில் இருந்து பாணந்துறை வரை செல்லும் புயிரத மார்க்கம் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு பாதை மாத்திரமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. தற்போது ரயில்வே துறை தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் ரயில் பாதையின் குறுக்கே இடிந்து விழுந்த பாலத்தின் குப்பைகளை அகற்றும் ப…
-
- 0 replies
- 182 views
-
-
05 APR, 2025 | 06:42 AM சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது. இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் ஹகவ, மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் வுன்தல போன்ற இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், தென் மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் கரையோரப் …
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
கட்சிக் கிளைகளைப் புனரமைக்க ஜே.வி.பி. தலைவர் ஐரோப்பா பயணம் Friday, 30 May 2008 ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஐரோப்பாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை பயணமானார். ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளராகவும், நாடாளுமன்றக்குழுவின் தலைவராகவும் இருந்த விமல் வீரவன்சவின் வெளியேற்றத்தின் பின்னர் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக கட்சியின் சர்வதேசக் கிளைகளுக்கு விளக்குவதும் அவற்றை மீள ஒழுங்கமைப்பதும்தான் அவருடைய விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சுவீடன், டென்மார்க், ஜேர்மனி மற்றும் பிரத்தானியா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் சோமவன்ச அமரசிங்க, அந்த நாடுகளிலுள்ள ஜே.வி.பி.யின் கிளைகளை புனரமைப்புச் செய்யும் நடவட…
-
- 0 replies
- 538 views
-
-
திருகோணமலையை தனிச் சிங்கள மாவட்டமாக மாற்ற 30 ஆண்டுத் திட்டம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் [Monday 2016-02-15 07:00] திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்ற அரசாங்கம் 30 ஆண்டு திட்டம் ஒன்றை 2011 ஆம் ஆண்டில் திட்டமிட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கு வடமத்திய மாகாண அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, மாத்தளை உட்பட பல மாவட்டங்கள் உள் வாங்கப்பட்டுள்ளன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். திருகோணமலையை தனிச்சிங்கள மாவட்டமாக மாற்ற அரசாங்கம் 30 ஆண்டு திட்டம் ஒன்றை 2011 ஆம் ஆண்டில் திட்டமிட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்று செயற்படுத்தி வ…
-
- 0 replies
- 391 views
-
-
கொழும்பில் மாயமான கடல் சிங்கம் – பாதுகாப்பிற்காக 4 குழுக்கள் நியமனம் தெற்கு கடற்கரை பகுதியில் உலாவிய கடல் சிங்கத்தை கடந்த ஒருவார காலமாக அவதானிக்க முடியவில்லை என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறுதியாக குறித்த கடல் சிங்கம், பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் அண்மையில் அவதானிக்கப்பட்டதாக அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த உயிரினத்தின் பாதுகாப்புக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் நான்கு குழுக்கள் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி காலி – உனட்டுவன கடற்கரை பகுதியில் குறித்த கடல் சிங்கம் முதன்முறையாக அவதானிக்கப்பட்டது. இதையடுத்து, சில சந்தர்ப்பங்களில் தென்மேற்கு கட…
-
- 0 replies
- 603 views
-
-
திசைமாறும் வடக்கு - கிழக்கு வீட்டுத்திட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட 65,000 வீட்டுத்திட்டத்தில் அநுராதபுரம், பொலனறுவை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரினால் வீடுகளை இழந்த மக்களிற்கு வடக்கு, கிழக்கில் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 2.1 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களிற்கே இந்த வீட்டுத்திட்டம் முழுமையாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்ப…
-
- 1 reply
- 496 views
-
-
[size=4]சட்டபூர்வமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடுகளை செய்துவிட்டு நாடுதிரும்புவோர் ௭வ்வாறான முறைப்பாடுகளை செய்துள்ளனர் ௭ன்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்டும்௭ன்பதுடன் அகதிகள் நாடு திரும்பும் போது செங்கம்பளம் விரிக்கமுடியாது ௭ன்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.[/size] [size=4]ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் ௭ழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size] [size=4]அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய அகதியொருவரை இலங்கை குற்றப்புலனா…
-
- 4 replies
- 908 views
-
-
அனைவருக்கும் இனிய பொங்குதமிழ் வணக்கங்கள்! நேற்று நோர்வேயில் நிகழ்ந்த பொங்குதமிழ் நிகழ்ச்சியை தொலைக்காட்சியூடாக காணும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அங்கு உரையாற்றிய ஒருவர் (பெயர் தெரியவில்லை மன்னிக்கவும்) எமது தலைவரைப் பற்றி கூறிய ஒரு கதைகேட்டு உண்மையில் மனம் நெகிழ்ந்துவிட்டேன். இந்தக்கதையை பலரும் அறிந்து இருப்பது நல்லது போல தோன்றுகின்றது. எனவே, அதன் முக்கியத்துவம் கருதி இந்த சம்பவத்தை பற்றி அறியாதவர்களுக்காக அதை இங்கு பதிகின்றேன். முன்னொரு பொழுது ஒரு சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவன் விடுதலைப்புலிகளிடம் பிடிபட்டு இருந்தான். விடுதலைப் புலிகள் அவனை யுத்தகைதியாக சிறைப்பிடித்து வைத்து இருந்தனர். காலங்கள் கடந்தது. வழமையாக நடைபெறுவதுபோல்... சிப்பாய் சிறைப்பிடிக்கப்பட்ட…
-
- 11 replies
- 4.5k views
-
-
[size=3][size=4]ஈழக் கவிஞரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வனுக்கு நெருக்கடிச் சூழலில் செய்தி சேகரித்தமைக்கான 2011ஆம் சிறந்த ஊடகவியலாளர் விருதை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வழங்கியுள்ளது. நேற்றைய தினம் கொழும்பில் மவுனட்லெனியா விடுதியில் நடந்த 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்தரிகையாளர் விருது வழங்கும் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.[/size] [size=4]வன்னியில் கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளராக செயற்பட்டவர். யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை மற்றும் வளநிலையத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.[/size] [size=4]ஈழத் தமிழ் மக்களின் போ…
-
- 19 replies
- 1.6k views
-
-
(நா.தனுஜா) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய உயர்மட்ட அதிகாரியான ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான ஆதரவு குறித்து வெளிப்படையாக எதனையும் கூறவில்லை. இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் அக்கறைக்குரிய விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐ.நாவின் அமைப்புக்களில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயலாற்றும் என்று இன்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். எனினும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்றோவ் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தமது நாட்டினால் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு இலங்கை வழங்கிவரும் ஆதரவிற்கு …
-
- 0 replies
- 521 views
-
-
இணைந்த வடக்கு - கிழக்கு ஈழத்தமிழர்களின் "பிராந்தியம்" என்று தாம் ஏற்றுக்கொள்வதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு சென்றுள்ள சிறப்புத் தூதுவர் இந்தியத் தூதுக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
கனடா, டொரன்டோ நகரில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஐந்து நாள் விடுமுறையைக் கழிக்கச் சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. ஜயந்த விஜேரத்ன (49), எலீஸா விஜேரத்ன (19) ஆகியோரே விபத்தில் மரணமடைந்துள்ளனர். http://virakesari.lk/article/local.php?vid=55
-
- 4 replies
- 808 views
-
-
தனது விரலால் தனது கண்ணையே குத்திக் கொள்கின்றதா இந்தியா? -தாயகத்திலிருந்து மு.திரு- சிங்கள ஆட்சியாளர் தமது பிரதான பாரம்பரிய எதிரியாக கருதுவது இந்தியாவையே. இந்த வகையில் சிங்கள அரசியல்வாதிகள் ஈழத்தமிழரை இந்திய விரிவாக்கத்திற்கான கருவியாகக்கண்டு அச்சமடைகிறார்கள். ஆதலால் ஈழத்தமிழரை தோற்கடிப்பதிலிருந்தே இந்தியாவிற்கு எதிரான தமது போரை சிங்கள ஆட்சியாளர் ஆரம்பித்துள்ளார்கள். இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை ஒடுக்குவதற்கு சிறிலங்கா அரசுக்கு உதவுவதன் மூலம் அது தனக்கு எதிராகத் தானே போர் புரியும் நிலைக்குப் போய்விட்டது எனலாம். இதனை சற்று விரிவாக நோக்குவோம். ஈழத்தமிழரை தமிழகத்தின் நீட்டமாகவே சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள பௌத்த மகா …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத் தமிழர்கள் அனைவரும் தனது பக்கம் என்பதைச் சர்வதேசத்திற்குக் காட்டுவதற்காக சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற இந்த வேளையில் மகிந்தருக்கு எதிராக வெளிநாடுகளில் மட்டுமன்றி உள்நாட்டிலும் எதிர்ப்பு அலைகள் தோற்றம் பெற்றுள்ளன. தமிழர்கள் மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியிலேயே மகிந்தவுக்கு எதிரான செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன. நாம் எல்லோரும் ஒரே நாட்டு மக்கள், நாம் ஒரே தேசத்தில் ஒற்றுமையாக வாழ்வோம் என்றெல்லாம் மகிந்த ராஜபக்ச கூறிவருகின்றார். ஆனால், ஒரே நாட்டுக்குள்ளேயே மகிந்த பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை மகிந்தவின் துரதிஷ்டமாகவே நோக்கப்படுகிறது. தமிழர் தாயகத்திலுள்ள மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மைகள…
-
- 0 replies
- 408 views
-
-
மன்னாரில் இருந்து யாழ். நோக்கி சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி பயணம் by : Dhackshala மன்னாரைச் சென்றடைந்துள்ள ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி’ பயணம் தற்போது யாழ்ப்பாணம் பருத்தித்துறையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. இந்த பயணத்தை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இன்று (வியாழக்கிழமை) காலை 8.15 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த ஜீ.எச்.பீரிஸ் என்பவர் கடந்த 28ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்த ‘சுதந்திர தின சமாதான துவிச்சக்கர வண்டி பயணம்’ நேற்று மாலை மன்னாரை சென்றடைந்தது. இ…
-
- 1 reply
- 306 views
-
-
[size=3][size=4][size=5]தெய்வீக சுக அனுபவம் என்ற பெயரில் [/size]யாழ்ப்பாணத்தில் தமிழக கலைஞர்களின் மூன்று நாள் கலாசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு, மறுவாழ்வு விடுதிகளில் தங்கியிருக்கும் ஏராளமான சிறுமியர் இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கேற்றனர்.[/size][/size] [size=3][size=4]கலை நிகழ்ச்சி: யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் துவங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை-இந்திய உறவு தொடர்பாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழக - யாழ்ப்பாண மக்களின் கலை உறவை மேம்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மூன்று நாள் கலாசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இந்த நிகழ்ச்சி வழக்கத்துக்கு மாறான அமைப்புடன் திட்டமிடப் …
-
- 0 replies
- 690 views
-
-
மஹிந்த அரசு தமிழர்களை காணாமல் ஆக்கியதற்கு விமல் வீரவன்ச சாட்சி- செல்வம் எம்.பி. by : Litharsan மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் வகை தொகையின்றி காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதற்கு விமல் வீரவன்சவே சாட்சியென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அண்மையில் காணாமல் போனவர்களை மண்ணுக்குள் தோண்டிப் பார்க்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “தமிழர்களின் ஆறாத வடுவாக உள்ள காணாமால் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு காணாமல், தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் ஏமாற்றி வருகின்றன. இந்ந…
-
- 0 replies
- 274 views
-
-
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்! பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இன்று (18) உத்தரவிட்டார். அதன்படி, சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்…
-
-
- 2 replies
- 256 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாந்தை கிழக்குப் பிரதேசத்தை நோக்கி நேற்று சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 540 views
-
-
[size=3][size=4]எதிர்வரும் 8ம் திகதி நடைபெற இருக்கும் கிழக்கு மாகாணசபை தேர்தல் பற்றி சர்வதேச சமூகம் ஆர்வம் கொள்வதாகக்[/size][/size] [size=3][size=4]கருதமுடிகிறது. இது தொடர்பில் நடந்த வரும் அரசியல் காய் நகர்த்தல்கள் குறித்த பார்வையினனப் பதிவு செய்ய முனைகிறது பின் வரம் குறிப்புக்கள்.[/size][/size] [size=3][size=4]கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் இவ்வேளையில் தேர்தல் பிரச்சாரங்கள் இப்பிரதேசங்களில் சூடு பிடித்துள்ளன.[/size][/size] [size=3][size=4]கிழக்கில் தமிழர்களை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பக்கமும் , ஆட்சியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஒரு பக்கமும் , முஸ்லிம்கள் என்கின்ற பெயரில் சிறில…
-
- 1 reply
- 604 views
-