ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143684 topics in this forum
-
முன்னாள் போராளி பங்களாதேஷில் மரணம்; ஐரோப்பா செல்ல முயன்ற வேளையில் பரிதாபம் August 20, 2020 முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் பங்களாதேஷில் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் செல்வதற்காக இலங்கையிலிருந்து வெளியேறி பங்களாதேஷில் தங்கியிருந்த போதே அவர் மரணமானதாக அறிவிக்கப்படுகின்றது. கால் ஒன்றை இழந்த 44 வயதான குமரன், அல்லது சுடர் என்ற இவர் மாரடைப்பினால் மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://thinakkural.lk/article/63618
-
- 0 replies
- 353 views
-
-
இவர்கள்தானா கொள்கை, உரிமைக்காகப் போராடப் போகிறார்கள்? கேள்வி எழுப்பும் மணிவண்ணன் August 21, 2020 “நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்காக எத்தகைய ஏமாற்று வேலைகளையும் செய்யக்கூடியவர்கள்தான் இன்று எமது தலைவர்களாகவுள்ளார்கள். இவர்கள்தானா கொள்கை, உரிமைக்காகப் போராடப் போகிறார்கள்?” என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டுறவாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசாவின் நினைவு தினம் நேற்று தெல்லிப்பளை கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “மாமனிதர் சிவமகாராசா தனது கொள்கையி…
-
- 4 replies
- 726 views
-
-
அரச ஊழியர்களின்.. ஆடை தொடர்பான, புதிய சட்டம் விரைவில்! அரச ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பத்திக் அல்லது உள்நாட்டு ஆடையை அணிந்து வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு கிடைத்த அமைச்சு தொடர்பில் ஊடகவியலாளர்கள் நாடாளுமன்றத்தில் வைத்து வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பத்திக் கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பத்திக் ஆடை அணிந்தே நாடாளுமன்ற்திற்கு வருகைத்தந்திருந்தார். இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு ஆடை தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும…
-
- 2 replies
- 452 views
-
-
19வது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது – ரிசாட் 9வது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்பதில் தங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மக்கள் வழங்கியுள்ள ஆணையை மதித்து பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மக்கள் எல்லோரும் திருப்திபடக்கூடிய முறையில் அவர்களுடைய ஆட்சியினை முன்னெடுத்து செல்வார்களாக இருந்தால் அது நாட்டிற்கு நல்லது எனவும் அவர் தெரிவித்தார். http://athavannews.com/19வத…
-
- 6 replies
- 753 views
-
-
இலங்கைக்கு 92 பில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் நன்கொடையாக வழங்கிய இந்தியா இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 517 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஒட்டுமொத்த திட்டங்களில் 92 பில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த திட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அலகினை நிர்மாணிப்பதற்கான திட்ட வழிநடத்தல் குழுக் கூட்டடொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அலகினை நிர்மாணிப்பதற்கான திட்ட வழிநடத்தல் குழுவின் கூட்டம், பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப் தலைமையில் கடந்த புதன்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. …
-
- 5 replies
- 533 views
-
-
கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்றுவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை – சுமந்திரன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரை மாற்றுவது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போதும் இதுகுறித்து பேசப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பு உருவாக்க பணிகளில் …
-
- 3 replies
- 423 views
-
-
யாழ்ப்பாணத்தில்.. இராணுவத்தினர், திடீர் சுற்றிவளைப்பு யாழ்ப்பாணம்- கோண்டாவில் பகுதியில் இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு, கோண்டாவில் மேற்கு பகுதியிலேயே இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர். அதாவது, குறித்த பகுதியிலுள்ள அனைத்து வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு இருந்தனர். குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில், இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் மற்றும் ஏராளமான இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்ப்பாணத்தில்-இராணுவத/
-
- 4 replies
- 663 views
-
-
-
- 0 replies
- 442 views
-
-
சிறிசேனாக்கு பதவி கிடைக்குமா? – தயாசிறி பதில்! முன்னாள் ஜனாதிபதியும் இப்போதைய எம்பியுமான மைத்திரிபால சிறிசேனவிற்கு தற்போதைய அரசாங்கத்தில் எவ்வாறான பதவி வழங்கப்படும் என்பது தொடர்பில் இந்நாட்களில் பலராலும் பேசப்படுகிறது. இதுவரை அமைச்சரவையில் எந்தவொரு பதவிகளும் கிடைக்கப்பெறாமல் சிறிசே தவித்து வருகின்றார். இந்நிலையில் இது குறித்து சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, “கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. சில காரணங்கள் உள்ளமையால் தௌிவாகக் கூற முடியாது. அதற்கு தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார். https://newuthayan.com/சிறிசேனாக்கு-பதவி-கிடைக்/
-
- 1 reply
- 399 views
-
-
இலங்கை | மின்சாரம் தடைப்பட்டமைக்கு நாச வேலை காரணம்? ஆகஸ்ட் 20, 2020: ஆகஸ்ட் 17 அன்று இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டமைக்கு நாச வேலை காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது நுரைச்சோலை மின்சார நிலையத்தில் நடைபெற்றிருக்கலாம் எனவும், இச் சம்பவத்தின் பின்னணியில் ‘டீசல் மாஃபியா’ எனப்படும் டீசல் மூலம் மின்னுற்பத்தி செய்யும் நிறுவனங்கள் காரணமாகவிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. மின்னுற்பத்தி செய்யும் நிலையங்களில் இருந்து வழங்கல் கோபுரங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்போது அதன் பரிமாணங்கள் இரண்டு வகைகளில் கொடுக்…
-
- 0 replies
- 335 views
-
-
எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் கன்னி உரை
-
- 4 replies
- 568 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் தற்காலத்தில், சிறுதானியங்களுக்கான பயிர்ச்செய்கையானது விவசாயிகளிடையே அருகிவரும் நிலையில் காணப்படுவதால், சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயநிலைக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளதாக, மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சி - செல்வாநகர் கிராமத்தில், நேற்று (19) நடைபெற்ற குரக்கன் செய்கை அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், கொரேனா வைரஸ் தாக்கா்தின் பின்னர் எழக்கூடிய உணவுப் பாதுகாப்பை எதிர்கொள்ளும் முகமாக, கிளிநொச்சி மாவட்டத்தில், விவசாயிகளிடையே சிறுதானியப் பயிர்ச்செய்கையானது ஊக்குவிக்கப…
-
- 0 replies
- 360 views
-
-
-எஸ்.நிதர்ஷன் மாதகல் பகுதியில், தனியார் காணியொன்றில் நில அளவைத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நில அளவீட்டுப் பணி, பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தடுத்து நிறுத்தப்பட்டது. மாதகல் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை, அளவிடுவதற்கு, இன்றுக் காலை நில அளவைத் திணைக்களத்தினர் அப்பகுதிக்கு வருகை தந்தனர். இந்தக் காணியை கடற்படையினர் சுவீகரிப்பதற்கு முயன்று வரும் நிலையில், நில அளவைத் திணைக்களத்தினர், நேற்று அப்பகுதிக்கு விரைந்து, அக்காணியை அளவிடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன்போது, அப்பகுதியில் ஒன்றுகூடிய மக்கள், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டமான சூழ்ந…
-
- 0 replies
- 296 views
-
-
பல்கலைக்கழக மாணவர்களுக்கான அடிப்படை உதவிகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பல்கலைக்கழக பேரவையிடமும் துணைவேந்தர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தனர். மேலும், “கொரோனோ அபாய காலத்தில் பல்கலைக்கழகத்தில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறாததால் விடுதிகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கியிருந்த மாணவர்கள் வெளியேறியிருந்த நிலையில் தற்போது அதற்கான வாடகைகளை தருமாறு உரிமையாளர்கள் கோருகின்றனர். பல்கலைக்கழகத்தில் மிகவும் வறுமைக்குட்ப்பட்ட மாணவர்களே கல்வி கற்கின்ற நிலையில் இந்த வாடகைகத் தொகையைக் கூட செலு…
-
- 0 replies
- 298 views
-
-
அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தில் பெயர் பலகை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு, அதில் “இதேபோன்றுதான் உனக்கும் செய்வோம்” என்று எழுதப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி செல்வராணி தெரிவிக்கையில், “தம்பிலுவில் மத்திய சந்தை கட்டடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தின் பெயர் பதாதையை, இனந்தெரியாத நபர்கள், நேற்று இரவு அடித்து உடைத்துள்ளதுடன், அதில் ஒரு துண்டுபிரசுரத்தை ஒட்டிவைத்துவிட்டு சென்றுள்ளனர் இதேபோன்றுதான் உனக்கும் செய்வோம் என அத்துண்டு பிரசுரத்தில் எழுதப்பட்டு உள்ளது. …
-
- 3 replies
- 498 views
-
-
'19ஆவது திருத்தம் நீக்கப்படும்; புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்' J.A. George / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:43 - 0 - 209 AddThis Sharing Buttons ஜே.ஏ.ஜோர்ஜ் பல்வேறு அரசியல் முரண்பாடுகள் காரணமாக 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (20) உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியதுடன், நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் கூறி…
-
- 2 replies
- 404 views
-
-
(எம்.மனோசித்ரா) கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரு காரணமாக கடந்த நான்கு நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த மின் விநியோகத்தடை நாளை முதல் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரினால் அன்றைய தினம் நாடு முழுவதும் பல மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அத்தோடு அதன் பின்னர் அடுத்த நான்கு நாட்களுக்கு கட்டம் கட்டமாக தினமும் ஒரு மணித்திலாயம் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அந்த நடைமுறை நாளையுடன் நிறைவுக்கு வருகிறது. இதே வேளை கடந்த திங்களன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின் வெட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகு…
-
- 1 reply
- 415 views
-
-
(இராஜதுரை ஹஷான்) 20ம் அரசியலமைப்பு திருத்தம் உருவாக்கப்படும் போது அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவலறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொது மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் விடயங்களுக்கு முழுமையான பாதுகாப்பினை அரசாங்கம் வழங்கும் என அமைச்சரவை இணைபேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை தொடர்பான தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும்கு றிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல, இத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கடந்த காலங்களில் அரச நிர்வாகத்தி…
-
- 1 reply
- 383 views
-
-
யாழ். கொழும்புத்துறை பகுதியில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தயசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வழிமறித்து வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தது. முன் பகையைத் தீர்க்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.https://www.virakesari.lk/article/88435
-
- 2 replies
- 629 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இன்று கூடிய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் சம்பிரதாய நிகழ்வுகளின் போது சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டார். அவரது தெரிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வாழ்த்துச்செய்தியில் புதிய அரசியல் அமைப்பிற்கான தேவையையும் வலியுறுத்தியிருந்தனர். அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் கூறுகையில், ரிஷாத் பதியுதீன் அமைச்சரவையின் கன்னி அமர்வில், தற்போதைய அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர முடிவெடுத்து, அதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. காலத்துக்குக் காலம் அதிகாரத்துக்கு வருகின்ற அரசாங்கங்கள், அரசியலமைப்பில் மாற்றங்களை செய்துள்ளன. அதேபோன்று, இனிவரும் காலங்கள…
-
- 0 replies
- 211 views
-
-
என் மீது கொண்ட நம்பிக்கையால் கிடைத்த மக்கள் ஆணையை வீணடிக்கேன் – கொள்கை விளக்கம் தந்த கோத்தாபய! “ஜனாதிபதித் தேர்தலில் சிறப்பான ஆணையை மக்கள் பெற்று கொடுக்க காரணம் என் மீதான நம்பிக்கையே ஆகும். அதனை ஒருபோதும் வீணடிக்க மாட்டேன்.” இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (20) கூடிய 9வது நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் தனது கொள்கை விளக்க உரையை ஆற்றிய போது தெரிவித்தார். மேலும் அவரது உரையின் சுருக்க முறையிலான சாராம்சம், “எமது ஆட்சி முறை தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி கொண்டிருப்பதையே எமது நாடாளுமன்ற தேர்தல் வெற்றி குறிப்பிடுகின்றது. நாட்டின் ஒற்றையாட்சியை, புத்தசானத்தை பாதுகாப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதன்படி பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங…
-
- 10 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு சி.வி. வேண்டுகோள்! தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். மேலும் இதன்போது புதிதாக நியமிக்கப்பட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் வடக்கு – கிழக்கில் வாழும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு செயலுக்கும் அதன் எதிர்வினை இருக்கும் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். b…
-
- 2 replies
- 1k views
-
-
மாகாண சபைத் தேர்தல் – மனோ வெளியிட்டுள்ள அறிவிப்பு நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் எந்தெந்த மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடவுள்ளதென்ற அறிவிப்பை அதன் தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ளார். அதற்கமைய நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தளை, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒவ்வொரு மாவட்டங்களின் களநிலைமைகளையும் தனித்தனியாக ஆராய்ந்து, தனித்தோ அல்லது, ஐக்கிய மக்கள் சக்தியில் கூட்டணியாகவோ அல்லது வேறு நட்பு கட்சிகளுடன் கூட்டாகவோ தமிழ் முற்போக்கு கூட்டணி களமிறங்கும் எனவு…
-
- 3 replies
- 707 views
-
-
ஷானி அபேசேகரவிற்கு விளக்கமறியல் நீடிப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம், உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன மெண்டிஸையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த இருவரையும் இன்று (வியாழக்கிழமை) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. by : Dhackshala https://athavan…
-
- 0 replies
- 355 views
-
-
ஐ.தே.க.வுக்கு யார் தலைவராக தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டுக்கு நல்லதல்ல: சரத் பொன்சேகா ‘ஐக்கிய தேசியக்கட்சிக்கு யார் தலைவராக தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டுக்கு நல்லதல்ல’ என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக , “ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் ஊடாகத்தான் நாம் நாடாளுமன்றத்துக்கு செல்ல இருக்கின்றோம். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் பின்புலமொன்று இல்லாமலேயே இம்முறை நாடாளுமன்றத்துக்கு நுழைய இருக்கின்றோம். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, 25 வருடங்க…
-
- 1 reply
- 405 views
-