ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143684 topics in this forum
-
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் 9 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/எதரககடசத-தலவரக-சஜத/175-254539
-
- 15 replies
- 1.9k views
-
-
9 ஆவது நாடாளுமன்ற அமர்வில் இடம்பெறும் சிறப்பு அம்சங்கள்! புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு விசேட பல அம்சங்களைக் கொண்டுள்ளது அந்த வகையில், இம்முறை நாடாளுமன்றத்துக்கு முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 81 ஆக காணப்படுகின்றது. 25 – 40 வயதுக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுள் 81-90 இற்கும் இடைப்பட்ட வயது பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். வாசுதேவ நாணயக்கார, ஆர். சம்பந்தன், சீ. வீ. விக்னேஸ்வரன் ஆகியோரே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள். …
-
- 0 replies
- 343 views
-
-
ஐந்து ராஜபக்ஷர்களுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தார்மீக கடமை இருக்கின்றது- வீ.ஆனந்தசங்கரி ஐந்து ராஜபக்ஷர்களும் இணைந்து பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் தார்மீக கடமை காணப்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் இன்று (வியாழக்கிழமை) எழுதியுள்ள கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்ததில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதற்கு எனது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள். இப்பதவி தங்களுக்கு புதிதல்ல என்பதையும் அனைவரும் அறிவோம். 2007ஆம் ஆண்டு மாசி மாதம் 4ஆம் திகதி காலி முகத்…
-
- 4 replies
- 506 views
-
-
நாடாளுமன்றுக்கு படகில் வந்த எம்.பி பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான மதுர விதானகே, இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு படகில் வந்துள்ளார். தியவன்னா ஓயாவின் ஊடாக அவர் படகில் வந்ததுடன், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பினை தவிர்த்துக்கொள்வதற்காக இவ்வாறு செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நடளமனறகக-படகல-வநத-எம-ப/175-254543
-
- 6 replies
- 706 views
-
-
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் விசேட பயிற்சி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் நேற்று (19) இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். 9 ஆவது பாராளுமன்றம் ஜனநாயமிக்கது எனவும் அதனால் ஜனநாயக விரோத செயற்பாடுகள் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்தார். http://tamil.adaderana.lk/news.php?nid=132485
-
- 1 reply
- 389 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த பிரச்சினையில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை என தபால் தொடர்புகள் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இப்போது தமிழ்ப்பிரதிநிதித்துவம் இல்லாதிருக்கிறது. தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கலையரசனின் பெயரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்த நிலையில் மாவை சேனாதிராஜாவுக்கு அந்த பதவி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்த அவர், “இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்ந்த பிரச்சினை, இதில் நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. இருந்தாலும…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ச எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு எமதுஆதரவு தொடர்ந்து இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/politics/01/253972?ref=ls_d_tamilwin
-
- 3 replies
- 563 views
-
-
வரலாற்றில் இருந்து பாடம் படிப்போம் ; மனோ கணேசன் August 20, 2020 “வரலாற்றில் இருந்து பாடம் படிப்போம்” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு, “முதலாவது நிரந்தரமானது. இரண்டாவது வந்து போவது. சிலருக்கு இந்த அரசியல் விஞ்ஞானம் விளங்குவதில்லை. வந்து போகும் அரச வரம் கிடைத்தவுடன் நாட்டுக்கு தாம் மாத்திரமே “நிரந்தர சொந்தக்காரர்” என நினைத்து விடுகிறார்கள். அதிலும் இனவாதச் சாயமும் சேர்ந்து விட்டால் நாடு நாசம்தான். இதற்குள் இத்தகைய அரசுக்குள் இடம்பிடித்து, குறுக்கு நெடுக்காக ஓடித்திரியும் சில (எல்லோரும் அல்லர்.!) சிறுபான்மைக் குழந்தைகளின் இரைச்சல் தாங்க ம…
-
- 1 reply
- 505 views
-
-
நான் ஜனநாயகத்தை தழுவியுள்ளேன்- நாடாளுமன்றத்தில் பிள்ளையான் August 20, 2020 நான் ஜனநாயகத்தை தழுவியுள்ளேன் என நாடாளுமன்றத்தில் தனது முதலாவது உரையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என்ற போதிலும் தான் ஜனநாயகத்தை தழுவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பதின்மவயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்ததாக தெரிவித்துள்ள அவர் பின்னர் ஜனநாயகத்தை தழுவியதாக தெரிவித்துள்ளார். 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பிரதமரின் முயற்சிகளுக்கும முழுமையான ஆதரவை வழங்கப்போவதாக பிள்ளையான் தெ…
-
- 5 replies
- 731 views
-
-
ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பு – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றவர்களில் இருந்து நாடு முழுவதும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு அறிவித்தது. எனினும் தற்போது வடக்கு, கிழக்கில் மட்டும் அதனை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு வழங்குவதனை இடைநிறுத்துவதற்கான உத்தரவு வடக்கு கிழக்கின் 8 மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலகங்களிற்கு நேற்று மாலை தொலை நகல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம்…
-
- 5 replies
- 851 views
-
-
9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று! ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. புதிய அரசாங்கத்தின் முதல் நாடாளுமன்ற அமர்வு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுக்கு முன்னதாக இன்று காலை 9.30 மணிக்கு புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. சபாநாயகர் பதவிக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ள நிலையில், முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 223 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இன்றைய தினம் 80 நாடாளுமன்ற உறுப்பினர்க…
-
- 2 replies
- 527 views
-
-
9வது நாடாளுமன்றில் 11% இளைஞர் எம்பிகள் இலங்கையின் 9வது நாடாளுமன்றம் 11 வீதம் இளைஞர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதாக நாடாளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. 25 முதல் 40 வயதுக்குட்பட்ட இருபத்தைந்து உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதேவேளை 04 உறுப்பினர்கள் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதில் 9 பேர் முதல் முறையாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41-50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 54 உறுப்பினர்கள் 5…
-
- 2 replies
- 450 views
-
-
மன்னார் விசேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி கைது August 19, 2020 மன்னார் விசேட அதிரடிப்படை முகாமின் புலனாய்வு மற்றும் விசேட நடவடிக்கை பிரிவு பொறுப்பதிகாரியான உப காவல்துறை இன்ஸ்பெக்டர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாரியளவு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவுடனும் இணைந்து போதைப்பொருட்களைக் கடத்தி விற்பனை செய்து ஆயுதங்களை சேகரித்தமை தொடர்பிலேயே அவர் இவ்வறு கைது சஇவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் குழுவொன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரி…
-
- 1 reply
- 636 views
-
-
கிளிநொச்சியில் விபத்து – இரு இளைஞர்கள் பலி – ஒருவருக்கு படுகாயம் August 19, 2020 கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வீதி வளைவில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்…
-
- 0 replies
- 401 views
-
-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக விசனம் வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிய அரசாங்கத்திற்கு இதுவரை அவ்வாறான நோக்கங்கள் எதுவும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை யாரும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை இன்று நடைபெற்ற நிலையில், கடந்த ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை களையும் வகையில் 20 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்க…
-
- 5 replies
- 613 views
-
-
மஹிந்த யாப்பா அடுத்த சபாநாயகர், குழுக்கள் பிரதித் தலைவர் அங்கஜன்! இலங்கையின் 09 வது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு தனது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது தனது பெயர் முன்மொழியப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குழுக்கள் பிரதித் தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் மஹிந்…
-
- 0 replies
- 407 views
-
-
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் பிள்ளையான். -காணொளி- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) சிறைச்சாலை அதிகாரிகளால் மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார். இந்த நிலையில், சிறைச்ச…
-
- 0 replies
- 405 views
-
-
தென்மராட்சி வரணிப் பகுதியில் வீடு புகுந்து குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கொடிகாமம் பொலிஸார் தயக்கம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் நபர் ஒருவர் பொல்லு கோடரியோடு வீடு புகுந்து வீட்டிலிருந்த பெண் ஒருவருக்கும் வயோதிபர் இருவருக்கும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதுடன் வீட்டுப் பொருட்களையும் கோடாரியால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார். குறித்த தாக்குதலுக்கு உள்ளானவர்கள் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் கொ…
-
- 4 replies
- 979 views
-
-
கொழும்பு மயூரபதி பத்ரகாளி அம்மன் கோயில், அறங்காவலர் குழு மோசடிகள் இந்த ஆலயம் சாதாரண தமிழ், சிங்கள மக்களை மட்டுமல்ல, பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும் கூட பக்தர்களாக கொண்டது. 2014ம் ஆண்டில் விஸ்தரிப்பு, மற்றும் புனரமைப்பு வேலைகளை தொடங்கி, பக்த கோடிகளிடம் பெரும் பணத்தை திரட்டியது. ஆனாலும் இன்று வரை வேலைகள் முடியவில்லை. காரணம் பணமோசடி. இந்த மோசடியின் அளவு பெரும் அதிர்சிகளை தந்துள்ளது. இலங்கை பொலீசார், இந்திய பொலீசார், அமெரிக்க FBI என்று கிளறக் கிளற பெரும் பூதங்கள் கிளம்புகின்றன. கோவில் விஸ்தரிப்பதாக பக்தரிடம் பணம் பறித்து, அந்த பணத்தை ஆட்டையைப் போட்டு, இந்தியாவில் பெரும் மோசடித் திட்டத்துக்கு முதலீடாக்கி உள்ளனர் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது. …
-
- 29 replies
- 3k views
-
-
(நா.தனுஜா) மனித உரிமைகளை வலுப்படுத்தல், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் போன்றவற்றைக் காரணங்களாகக்கூறி பலம்வாய்ந்த நாடுகள் வறிய அல்லது அபிவிருத்தியடைந்துவரும் சிறிய நாடுகளின் மீது தமது வல்லாதிக்கத்தைச் செலுத்த முற்படுகின்றன. மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டியவையே என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. எனினும் அவை எமது நாட்டின் சுயாதீனத்துவத்தைப் பாதிக்காத வகையில், எமக்கு ஏற்புடையதாக அமைந்திருக்க வேண்டும் என்று பிராந்திய உறவுகள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் தார…
-
- 0 replies
- 380 views
-
-
(எம்.மனோசித்ரா) சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுவதற்கான வசதிகள் காணப்படும் பட்சத்தில் 200 க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளிலும் அனைத்து வகுப்புக்களுக்கும் கல்வி நடடிக்கையை ஆரம்பிக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் இது தொடர்பில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அனைத்து அரச பாடசாலைகளையும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் பாடசாலைகளையும் மீண்டும் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய பாடசாலையொன்றில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 …
-
- 0 replies
- 304 views
-
-
(நா.தனுஜா) வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோருடன் இந்திய உயர்ஸ்தானிகரும் பதில் சீனத்தூதுவரும் சந்திப்புக்களை நடத்தியிருப்பதுடன், இலங்கையுடன் தத்தமது நாடுகளின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடியிருக்கின்றனர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை அமைச்சர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்த இலங்கைக்கான பதில் சீனத்தூதுவர் ஹு வே, அவர் மீண்டும் வெளிவிவகார…
-
- 2 replies
- 466 views
-
-
(இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 20வது திருத்தம் உருவாக்கத்துக்கான சட்டமூல வரைபை தயார்படுத்த ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் அலிசப்ரி, கல்வியமைச்சர் பேராசிரியர். ஜி .எல். பீறிஸ், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன, சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது. அரசியலமைப்பின் 19வது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20வது திருத்தம் உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதை தொடர்ந்து. சட்ட வரைபு நடவடிக்கைகளை …
-
- 1 reply
- 416 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ்யின் மூத்த சகோதரர் கந்தையா சந்திரசேகரம் காலமானார். முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்துவந்த சந்திரசேகரம் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்று (18) உயிரிழந்துள்ளார். இவர் தமிழர்களது பூர்வீக பகுதிகளான கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் மணலாறுப் பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக செயற்பட்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றையநாள் கொக்குத்தொடுவாயில் அமைந்துள்ள, அவருடைய இல்லத்தில் இறுதிக் கிரிகைகள் இடம்பெற்று, பின்னர் கொக்குத்தொடுவாய் இந்துமயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளது. http…
-
- 11 replies
- 1.1k views
-
-
புதிய பேச்சாளர்கள் நியமனம் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு புதிய பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அமைச்சரவை பேச்சாளராக கெஹலிய ரம்புக்வெல்ல , அமைச்சரவையின் இணை பேச்சாளர்களாக ரமேஷ் பத்திரண மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததினை நீக்கி, 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே 19ஆவ…
-
- 2 replies
- 554 views
-