ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143685 topics in this forum
-
புதிய பேச்சாளர்கள் நியமனம் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு புதிய பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அமைச்சரவை பேச்சாளராக கெஹலிய ரம்புக்வெல்ல , அமைச்சரவையின் இணை பேச்சாளர்களாக ரமேஷ் பத்திரண மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததினை நீக்கி, 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே 19ஆவ…
-
- 2 replies
- 554 views
-
-
மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழிவாய்ப்பு – அமைச்சரவை அனுமதி! மேலும் பட்டதாரிகள் பத்தாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை இன்று (19) அனுமதி வழங்கியுள்ளது. கன்னி அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற போது ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்து ஜனாதிபதி வெளியேறிய சந்தர்ப்பத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பட்டதாரிகள் தங்களது முறைப்பாடுகளை ஜனாதிபதியிடம் தெரிவித்தபோது, அதனை செவிமடுத்த ஜனாதிபதி, அனைவருக…
-
- 1 reply
- 348 views
-
-
மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைகள் ஒத்திவைப்பு நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரனைகளை எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (19) கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதி மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனினும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். அதன் காரணமாகவே இன்றைய தினம் அவரா…
-
- 1 reply
- 640 views
-
-
அதிபர் ஒருவரின் நெகிழ்ச்சி செயல்! மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமமொன்றில் தொடர்ந்து பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் காரணத்தினை அறிந்த ஆசிரியர் சலூன்காரராக மாறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய கட்டுமுறிவு கிராமத்திலுள்ள கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஜே.ஜீவனேஸ்வரன் (ஜீவன்) தமது பாடசாலை மாணவர்கள் ஒரு வார காலமாக பாடசாலைக்கு வரவில்லை என்பதால் வீடு தேடிச் சென்று காரணம் கேட்ட போது முடி வெட்டவில்லை. அதனால் பாடசாலைக்கு வரவில்லை. அத்தோடு முடி வெட்டுவதானால் 20 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் கதிரவெளி கிராமத்திலுள்ள சலூன் கடைக்குப் போக வேண்டும். அதற்கு …
-
- 1 reply
- 359 views
-
-
கூட்டமைப்பின் புதிய ஊடகப் பேச்சாளர் – செல்வம் மற்றும் சித்தார்த்தன் தயார்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய ஊடகப்பேச்சாளர் பதவியை ஏற்பதற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளோட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகிய இருவரில் ஒருவர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் புதிய உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றக்குழுவை கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில், சுமந்திரன் அப்பதவியைப் பயன்படு…
-
- 19 replies
- 1.7k views
-
-
பாட்டளி சம்பிக்க ரணவக்கவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு கவனயீனத்துடன் வாகனம் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை இம்மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று (19) உத்தரவிட்டார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி அவர்களை நாளைய தினம் (20) நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்து இதற்கு முன்னர் அழைப்பாணை வௌியிட்டிருந்தார். எனினும், …
-
- 0 replies
- 300 views
-
-
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) சிறைச்சாலை அதிகாரிகளால் மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார். இந்த ந…
-
- 0 replies
- 197 views
-
-
19ஐ நீக்கி, 20ஐ உருவாக்க அமைச்சரவை அனுமதி அரசியலமைப்பின் 19ஆவது திருத்ததினை நீக்கி, 20ஆவது திருத்தத்தினை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/19ஐ-நீக்கி-20ஐ-உருவாக்க-அமைச்சரவை-அனுமதி/150-254507 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச் செய்வதற்கும் மற்றும் 20 ஆவது அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ளவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளத…
-
- 0 replies
- 322 views
-
-
வடகிழக்கு தமிழ்மக்களின் அரசியலை தென்பகுதியுடன் ஒப்பிடுவது மூடத்தனம்; அரியநேத்திரன் August 19, 2020 பா.மோகனதாஸ் அபிவிருத்தி அரசியலுக்காக உரிமையை அடவு வைக்காதீர்கள், வடக்கு கிழக்கு தாயக மக்கள் உரிமைக்காக பல தியாகங்களையும் உயிரழிவுகளையும் சந்தித்த இனம் என்பதை சகல அரசியல் தலைவர்களும் உணர்ந்து கொள்ளுங்கள் என, இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார். பாராளுமன்ற பொதுத்தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடகிழக்கு தமிழ்மக்களின் அரசியலை தென்பகுதி சிங்கள …
-
- 2 replies
- 550 views
-
-
நல்லூர் தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது! நல்லூர் கந்தசுவாமி தெற்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. தெற்கு புறமான வீதி வளைவு கோயில் வீதியில் கைலாச பிள்ளையார் கோவிலடியில் அமையவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாயில்களான நான்கு பிரதான வீதிகளிலும் வீதி வளைவுகள் அமைக்கப்படவுள்ளன. இதன் முதல் கட்டமாக கிழக்கு புறம் செம்மணி வீதியில் வீதி வளைவு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. http://athavannews.com/நல்லூர்-தெற்கு-நுழைவாயில/
-
- 0 replies
- 433 views
-
-
பிள்ளையானின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவீரர் குடும்பத்திற்கு வீடு! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் குடும்பத்திற்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. குறித்த அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (செவ்வாக்கிழமை) மட்டக்களப்பு கோரகல்லிமடு கிராமத்தில் இடம்பெற்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாவீரர் குடும்பங்களின் இணைப்பாளர் எஸ்.குமரேசன், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜே.ஜெயராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார் வைத்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜே.ஜெயராஜ்…
-
- 1 reply
- 650 views
-
-
பிள்ளையானைத் தொடர்ந்து மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கும் நாடாளுமன்றம் செல்ல அனுமதி கடந்த பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட எச்.எல்.பிரேமலால் ஜயசேகரவிற்கும் நாளை ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னான்டோ தெரிவித்தார். தற்பொழுது தடுப்புக் காவலில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) நாடாளுமன்றில் கலந்துகொள்ள மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எல்.பிரேமலால் ஜய…
-
- 4 replies
- 497 views
-
-
காரைதீவு சகா- கிழக்கு மாகாணம் தமிழருக்குரியது. எதிர்வரும் மாகாணசபைத்தேர்தலில் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் நாம் போட்டியிடுவோம். எனினும் அனைத்ததமிழ் தரப்புகளும் ஓரணியில் போட்டியிடுவதன்மூலம் ஆட்சியைத்தீர்மானிக்கின்ற சக்தியாக நாம் விளங்கமுடியும். அதற்கான சகல தரப்புகளையும் ஓரணியில் சேர அழைக்கின்றோம். இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் அம்பாறை மாவட்ட பேராளர்கள் முன்னிலையில் பேசுகையில் அழைப்புவிடுத்தார். அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் புத்திஜீவிகள் கலந்துகொண்ட மாவட்டமட்டக்கூட்டம் நேற்றுமுன்தினம் சொறிக்கல்முனையில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தலைமையில் அவரது வாசஸ்தலத்தில் நடைபெற்றது. கட்சியின் முக்க…
-
- 7 replies
- 910 views
-
-
யாழ்ப்பாணம் – கொட்டடி மீனாச்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் உள்ள தனியார் காணியில் பெண் ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் நிலத்துக்கடியிலிருந்து வெளிப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் இன்று (18) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில் கால்ப் பகுதி எலும்புகள் மீட்கப்பட்டன. அத்துடன் பற்பசை பக்கட், பல் விளக்கும் பிறஸ், சீப்பு, பவுடர் பேணி, 3 மேற்சட்டைகள், பாவடை ஒன்று உள்ளிட்டவை துணியிலான கைப்பையில் காணப்பட்டுள்ளன. அவற்றை வைத்து ஒப்பிடும் போது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் நிபுணத்துவ ஆய்வு ஊடாகவே மனித எச்சங்கள் எந்தக் காலப் பகுதிக்கு உரியவை என்பது உறுதிப்படுத்தப்பட்டு விசார…
-
- 4 replies
- 600 views
-
-
பௌத்த சின்னமாகக் கருதப்படும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்ட துணியிலான ஆடையை அணிந்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு எதிராக இலங்கை போலீஸார் தொடர்ந்திருந்த வழக்கை மீளப் பெற்றுள்ளனர். மஹியங்கண நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபரின் அறிவுரைக்கு அமைவாக, இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாதென்றும், அதனால் வழக்கை மீளப் பெற்றுக் கொள்வதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்தும், வழக்கிலிருந்தும் மேற்படி பெண்ணை விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார். கண்டி மாவட்டம் - கொலங்கொட எனு…
-
- 12 replies
- 1.1k views
-
-
அரசாங்கம் திட்டமிட்டு முன்னாள் போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர். எனவே அனைத்து முன்னாள் போராளிகளும் ஒன்றினைந்து தனித்துவத்தோடு எங்களுடன் இணைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன் ஊடகம் ஒன்றிற்கு இன்று (18) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “வெளி நாடுகளில் விடுதலைப்புலிகள் மீண்டும் வருவதற்கான முயற்சிகள் இடம் பெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார். அதன் பிண்ணனியில் இங்கு இருக…
-
- 2 replies
- 539 views
-
-
(நா.தனுஜா) கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் கடந்த ஜுன் மாதத்தில் ஓரளவு முன்னேற்றகரமான நிலையைப் பதிவுசெய்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. உற்பத்தி மற்றும் சேவைத்துறை இரண்டினதும் கொள்வனவு முகாமைச் சுட்டெண்கள் கடந்த ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஓரளவிற்கு இயல்புநிலைக்குத் திரும்பியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலினால் வியாபார நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிப்படைந்திருந்த நிலையில் கொள்வனவு முகாமைச் சுட்டெண்ணில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றமானது தயாரிப்பு செயற்பாடுகள் கொவிட் - 19 தொற்றுக்கு முன்னரான மட்டத்தை நோக்கிச்செல்வதை அறியமுடிகின்றது. …
-
- 0 replies
- 407 views
-
-
(நா.தனுஜா) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் முதற்தடவையாக அவரைச் சந்தித்த அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், முந்தைய அரசாங்கத்தின் மீதான மக்களின் நிராகரிப்பை தேர்தல் முடிவுகள் காண்பிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். 2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக்கொண்ட பின்னர் முதற்தடவையாக நேற்று முன்தினம் அலரிமாளிகையில் அவரைச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், இருநாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது குறித்தும் கலந்துரையாடியிருக்கிறார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வரலாற்று வெற்றிக்குப் பின்னர் முதற்தடவையாக …
-
- 3 replies
- 777 views
-
-
யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவன்-மனைவி மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய கடை உரிமையாளர் ஆகியோர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வயோதிபர்கள் வாழும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றன. குறிப்பாக சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள வயோதிபர்களின் வாழும் வீடுகளில் அண்மைய நாட்களாக உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. இந்த சம்பவங்கள் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படைய…
-
- 17 replies
- 2.2k views
-
-
பட்டதாரிகள் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல் தகுதிவாய்ந்த பட்டதாரிகளுக்கு அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 150,000 பேருக்கான தொழில்வாய்ப்பு திட்டம் குறித்து ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் வறுமைக் கோட்டின் கீழுள்ள பொருத்தமானவர்களை இதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 316 views
-
-
20 ஆவது திருத்தத்தை கொண்டுவரவுள்ளமைக்கான காரணம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை ஐக்கிய மக்கள் சக்தி மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவிற்கு பதவியும் பசில் ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றத்திற்கு நுழையும் வாய்ப்பும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு திருத்தைத்தை கொண்டுவருவதாயின் தாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை எனவும் அவ்வாறு இல்லாவிடின் தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 317 views
-
-
’15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தை பயன்படுத்த முடியவில்லை’ -மு.தமிழ்ச்செல்வன் 2016ஆம் ஆண்டில், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள பாடசாலையில், சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மலசலக் கூடங்கள், இன்று வரை மாணவர்கள் பயன்படுத்த முடியாதுள்ளது என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்துக்குச் சொந்தமான காணியில், பொதுமக்கள் அடாத்தாக பிடித்து குடியிருந்த நிலையில், அவர்களுக்கு நக…
-
- 2 replies
- 513 views
-
-
அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை: பல அரசியல்வாதிகளுக்கு அழைப்பு அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அடுத்த மாதம் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் உட்பட பலருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர, பட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர குமார திசாநாயக்க, இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம் மற்றும் மேலும் ஒரு சிலருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 07 ஆம் திகதி அன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவர்கள் கோரப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 288 views
-
-
‘சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு இராணுவத்தின் உதவியை நாடவுள்ளோம்’ -மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு, இராணுவத்தினரின் உதவியை நாடவுள்ளதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (18) நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். http:/…
-
- 2 replies
- 405 views
-
-
புதிய உறுப்பினரை நியமிக்க டெலோ நடவடிக்கை -எஸ்.றொசேரியன் லெம்பேட் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகர சபையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பாக எழுத்தூர் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் கட்சியில் இருந்து விலகி, நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட மனோ ஐங்கர சர்மாவுக்குப் பதிலாக புதிய நகர சபை உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு டெலோ நடவடிக்கை எடுத்துள்ளது. மன்னார் நகர சபை தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பாக எழுத்தூர் வட்டாரத்தில் மனோ ஐங்கர சர்மா போட்யிட்டு வெற்றி…
-
- 1 reply
- 372 views
-