ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143685 topics in this forum
-
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு பிள்ளையானுக்கு அனுமதி நாடாளுமன்ற உறுப்பிராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதனடிப்படையில் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றம் …
-
- 7 replies
- 722 views
-
-
கல்வி முறையை திருத்தியமைக்க வேண்டும் தற்போதைய கல்வி முறையை திருத்தியமைக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக மாணவர்களுக்கு உரிய முறையில் கல்வியை வழங்க முடியாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=132385
-
- 0 replies
- 287 views
-
-
சுரேனுக்கு தேசிய பட்டியல் வழங்கியதால் சுதந்திர கட்சி கொந்தளிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கியமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து மேலும், “தேசிய பட்டியலுக்கான ஒரு ஆசனத்துக்கு நான்கு பெயர்களை சுதந்திரகட்சி பரிந்துரை செய்திருந்தது. ஆனால்இஎங்களுடைய பரிந்துரையை புறக்கணித்துவிட்டு, தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு சுரேன் ராகவனின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பொதுஜனபெரமுன அனுப்பியுள்ளது. எனினும் இவ்விடயம் தொடர்பாக பொ…
-
- 2 replies
- 443 views
-
-
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ; வடக்கு - கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான எதிர்வரும் ஆவணி 30ஆம் திகதி வடக்கு - கிழக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் காலை 11மணிக்கு முன்னேடுக்கப்படவுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி யாழ்மாவட்ட செயலகத்தில் ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் கையளித்தவுடன் நிறைவுபெறும். அதேபோல் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடியில் ஆரம்பமாகி காந்திபூங்கவரை சென்று ஐக்கியநாடுகள் சபைக்கான மகஜர் கையளித்தவுடன் நிறைவுபெறும். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அவர்களது உறவுகள் மழை,வெயில்,பனி பாராது தமது உறவுகள் கிடைப்…
-
- 0 replies
- 313 views
-
-
தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி | எடுத்துரைப்பார்களா தமிழ் எம்பிக்கள்? 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வழங்கும் திட்டத்தில், தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன. இதில் சுமார் 1500 தமிழ் பட்டதாரிகளின் விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கற்கை நெறியை இலங்கையில் பூர்த்தி செய்தமைகாக இவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் இலங்கை பல்கலைகக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் அங்கீகரிக்கப…
-
- 8 replies
- 1.3k views
-
-
கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி, தேசிய பட்டியல் ஆசனம் ரெலோவின் புதிய ஆசை..! 20ம் திகதி நிறைவேற்றப்படுமா..? தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பதவி மற்றும் தேசிய பட்டியல் ஆசனத்தின் இறுதி இரண்டரை ஆண்டுகள் தமது கட்சிக்கு வழங்கப்படவேண்டும். என எதிர்வரும் 20ம் திகதி கட்சியின் நாடாளுமன்ற குழுவில் கோருவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளது. ரெலோவின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன் தினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட ரெலோ இம்முறை 3 ஆசனங்களை பெற்றுள்ள நிலையில் புளொட் கட்சியும் ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் முதல் தடவை எதிர்வரும்…
-
- 0 replies
- 350 views
-
-
நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்! நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விசேட கரிசனையின் அடிப்படையில் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக் கட்ட கள ஆய்வுப் பணிகள் நேற்று முன்தினம் இடம்பெற்றன. கடற்றொழில் திணைக்களம், மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனம், வன வளத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கடற்றொழிலாளர…
-
- 0 replies
- 428 views
-
-
ஞானசார தேரர்தான் என்னை கடத்தினார்- ரதனசார தேரர் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆகியோரால் நான் கடத்தப்பட்டேன் என அரம்பேபொல ரதனசார தேரர் தெரிவித்துள்ளார். எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளரான வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் வசிக்கும் விகாரையில் இருந்த அரம்பேபொல ரதனசார தேரர், இனந்தெரியாத குழுவினரினால் தாக்கப்பட்டதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்ற அரம்பேபொல ரதனசார தேரரே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எங்கள் சக்தி மக்கள் கட்சியில் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை மையமாக …
-
- 5 replies
- 844 views
-
-
வடக்கு ஆளுநராக முன்னாள் கட்டளைத் தளபதி நியமனம்? வடக்கு மாகாண ஆளுநராக வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் வெகுவிரைவில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவ பின்னணியைக் கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டு வருகின்ற சூழல் தற்போது நாட்டில் நிலவுவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வியத்மக அமைப்பின் செயற்பாட்டளராக இருந்த மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற பொனிபஸ் பெரேராவை வடக்கு ஆளுநராக ஜனாதிபதி நியமிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் 5ஆவது ஆளுநராக செயற்பட்ட ரெஜினோல்ட் குரேவுக்குப் பின்…
-
- 0 replies
- 368 views
-
-
படையினரை ஒருபோதும் கைவிடமாட்டோம்- அரசாங்கம் நாட்டின் அரசியலமைப்பை மீறும் அல்லது படையினரை காப்பாற்றுவதனை எக்காரணத்துக்காகவும் கைவிடமாட்டோமென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக தினேஸ் குணவர்த்தன மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை நெருக்கடியான அல்லது மகிழ்ச்சியான சந்தர்ப்பம் என எதுவாயினும் அனைத்து நாடுகளுடனும் நட்புறவையே பேணும். மேலும் ஜனாதிபதியும் அணிசேரா பக்கச்சார்பற்ற நட்புறவை கொண்ட வெளிவிவகார கொள்கையைதான் அறிவித்துள்ளார். ஆகவேதான், எங்களுக்கு எதிரிகள் இல்லை. நண்பர்கள் மாத்திரமே உள்ளனர். இதனால்தான் உலகம் முழுவதும் …
-
- 0 replies
- 375 views
-
-
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் கொழும்பில் – பதவிநிலைகளில் மாற்றம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான தீர்மானம் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய செயற்குழு நேற்று கூடியவேளையில் நிறைவேற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்ததீர்மானம் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் மு…
-
- 0 replies
- 375 views
-
-
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்தார் நாமல் விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையில் காணப்பட்ட தமிழ் பிழையை உடனடியாக திருத்தி தமிழ் மொழிக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முக்கியத்துவம் வழங்கியுள்ளார். இதற்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சர்களாக இருந்த எவரும், பெயர் பலகையில் காணப்பட்ட தமிழ் பிழையை சரிசெய்ய முன்வராத நிலையில் நாமல் ராஜபக்ஷ இதனை செய்துள்ளமையை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். மேலும் நாட்டில் மும்மொழி கொள்கை நடைமுறையில் இருக்கின்றது என்பதை நாமலின் செயற்பாடு உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ஷ கடந்த 18ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 426 views
-
-
காணி விவகாரத்தில் பொதுமக்களின் நியாயத்திற்கே முதலிடம் – சமல் காணி விவகாரத்தில் பொதுமக்களின் பக்கமுள்ள நியாயத்திற்கே முதலிடம் வழங்கப்படும் என நீர்பாசன துறை அமைச்சு மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, வடக்கு கிழக்கு காணி பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துவோம் எனவும் அவர் கூறினார். நீர்பாசன துறை அமைச்சு மற்றும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரச காணி அபகரிப்பும் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்துள்ளது. …
-
- 0 replies
- 458 views
-
-
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் இந்தியாவுக்கு கடுமையாக அழுத்தம் கிடைத்து வருவதாக இலங்கை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அமையப் பெற்றுள்ள போதிலும், அது இன்று கடும் சவாலுக்கு உட்பட்டுள்ளதை காண முடிகின்றது. இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக இந்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோரினால் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது…
-
- 2 replies
- 579 views
-
-
அரசமைப்பின் 19ம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் எனறு வடக்கின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதனை அவர் தெரிவித்தார். மேலும், 19ம் திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல. ஆனால் அதனை உருவாக்கிய விதம், உருவாக்கப்பட்ட வேகம் தான் இன்று நாட்டில் பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது என்றும் தெரிவித்தார். https://newuthayan.com/19ம்-திருத்தத்தை-முழுமையா/
-
- 0 replies
- 654 views
-
-
(எம்.மனோசித்ரா) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. வழமையைப் போன்று கோலாகல வைபங்கள் மற்றும் மரியாதை அணிவகுப்புக்கள் இன்றி எளிமையான முறையில் புதிய பாராளுமன்றம் கூடவுள்ளது. அணிவகுப்புக்கள் எவையும் இன்றி எளிமையான முறையில் முதலாவது பாராளுமன்ற அமர்விற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். புதிய பாராளுமன்றம் ஓகஸ்ட் 20ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்குக் கூடவுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70வது உறுப்புரை…
-
- 0 replies
- 305 views
-
-
(நா.தனுஜா) ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் முக்கிய மூன்று கொள்கைகளான தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, வெளிநாட்டு உறவு ஆகியவற்றை முன்னிறுத்தி நாட்டிற்கும் பிரஜைகளுக்கும் முக்கியத்துவமளித்து, சர்வதேசத்துடனான தொடர்புகளை வலுப்படுத்தி எதிர்வரும் 5 - 10 வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச்செல்வதை நோக்காகக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே உறுதியளித்தார். அதேவேளை, காலமாற்றங்களுக்கு ஏற்ப வெளிநாட்டுக்கொள்கைகளும் மாற்றமடைந்து வந்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டுக்கொள்கைகள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு அவற்றில் மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய அவச…
-
- 0 replies
- 278 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) எனக்கு கிடைத்த நீதி அமைச்சுப்பதவி சமுதாயத்துக்கு கிடைத்த கெளரவம். இதனை எனக்கு வழங்கக்கூடாது என எம்மில் இருக்கும் தீய சக்திகள் செயற்பட்டனர். அதனை ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரித்து எமது சமூகத்தை கெளரவப்படுத்தி இருக்கின்றனர். நீதி அமைச்சுப்பதவியை பெற்றுக்கொண்டு ஒருபோதும் சமூகத்தை காட்டிக்கொடுக்கமாட்டேன். அவ்வாறான நிலை ஏற்பட்டால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வேன் அத்துடன் அடுத்துவரும் 20வருடங்களுக்கு இந்த அரசாங்கமே பதவியில் இருக்கப்போகின்றது. அதனால் முஸ்லிகள் சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியில் பாராளுமன்றத…
-
- 3 replies
- 451 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) வட மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் வன்னி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனம் வெகுவிரைவில் இடம்பெறவுள்ளது. இராணுவ பின்னணியை கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டு வருகின்ற சூழலில் , ஜனாதிபதி கோத்தாபயவின் வியத்மக அமைப்பின் செயற்பாட்டளராக இருந்த மேஜர் ஜெனரல்(ஓய்வு) பொனிபஸ் பெரேராவை வடக்கு ஆளுநராக ஜனாதிபதி நியமிக்கவுள்ளார். மத்திய அரசாங்கத்தின் அதிகார ஆளுமை மாகாண சபைகள் உள்ளிட்ட அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் குறைந்து விடாது, முழு அளவில் காணப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ குறிக்கோளுடன் செயற்படுகின்றார். https://www.virakesari.lk/articl…
-
- 1 reply
- 398 views
-
-
(செ.தேன்மொழி) ஐக்கிய தேசியக் கட்சியில் எஞ்சியிருக்கும் சிறுகுழுவினரின் தலைமத்துவ பதவியின் மீதான மோகத்தின் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சியினால் மக்கள் ஆணையுடன் ஒரு ஆசனத்தை கூட வெற்றிக் கொள்ள முடியாமல் போயிருப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நளின்பண்டார, ஐ.தே.க.விற்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசியப்பட்டியலில் கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் பெயரே பரிந்துறைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு தாம் அதரவளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ப…
-
- 0 replies
- 259 views
-
-
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையையடுத்து பல பிரதேசங்களில் நீர் விநியோகத் தடையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வத்தளை, கெரவலபிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்தின் மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டில் பல மணி நேர மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பல பிரதேசங்களில் நீர் விநியோக நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போது நிலவும் மின்சார துண்டிப்பு இன்னும் சில மணி நேரங்களில் சீர் செய்யப்படும் எனவும் மின்சார நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்ப இரவு 8 ஆகும் எனவும் மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இந்ந…
-
- 3 replies
- 1k views
-
-
தமிழரசுக் கட்சிக்கு எதிராக 20 முறைப்பாடுகள் -மு.தமிழ்ச்செல்வன் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழரசுக் கட்சிக்கு எதிராக, 20 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகளும், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் 2 முறைப்பாடுகளும், பளை பொலிஸ் நிலையத்தில் 4 முறைப்பாடுகளும், பூநகரி பொலிஸ் நிலையத்தில் 2 முறைப்பாடுகளும், முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் 1முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னர், கிளிந…
-
- 2 replies
- 457 views
-
-
சிறைச்சாலைகளுக்கு விசேட அதிரடிப் பாதுகாப்பு! சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலை ஆகியவற்றுக்கே விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துஷார உபுல்தெனிய மேலும் கூறியுள்ளதாவது, “21 உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 15 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிரான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் நிர்வாக ரீதியிலான உதவிகளை வழங…
-
- 1 reply
- 400 views
-
-
பிரதேச சபை தவிசாளர் பதவியை இராஜினாமா செய்த கலையரசன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றில் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன் சட்டப்படி தற்போதைய தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்யவேண்டும் என்பதற்காக இராஜினாமாச் செய்துள்ளார். கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தது மாத்திரமல்லாமல் தமிழ்ப் பிரதிநிதித்துவமும் இழக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் த.தே.கூட்டமைப்பிற்குக் கிடைக்கப் பெற்ற ஒரேயொரு தேசியபட்டியல் ஆசனம் கலையரசனுக்கு வ…
-
- 0 replies
- 345 views
-
-
பட்டதாரிகளின் பெயர் பட்டியல் வெளியானது தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் இணையதளத்தில் இந்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் நியமனக்கடிதங்கள் அமைச்சினால் எதிர்காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர…
-
- 3 replies
- 1k views
-