ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
எழுத்தாணிக்கான அலுவலகம் திறப்பு ஊடகத்துறை, இலக்கியத்துறை, சமூகசேவைகள் எனும் மூன்று பிரிவுகளில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் திருகோணமலை எழுத்தாணி கலைப் பேரவை, தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தை, திருகோணமலை மின்சார நிலைய வீதி நேற்று (27) திறந்து வைத்தது. இந்த விழாவில் அதிதிகளாக திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி ஜீவிதன் சுகந்தினி, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் கோணேஸ்வரன், திருகோணமலை நகராட்சி மன்றத்தின் உப தலைவர் கா.கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணரும் தளமாகவும், ஊடக மாநாடுகள் நடத்தவும் இவ்அலுவலகம் …
-
- 0 replies
- 553 views
-
-
மீண்டும் நாளைய தினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது! கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 105 நாட்களுக்கு பின்னர் நாளைய தினம் (29) மீளவும் திறக்கப்படவுள்ளது. இதன்படி பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் சேவையாளர் மாத்திரம் நாளைய தினம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீள திறக்கப்படுவதால் நாளைய தினம் முதல் கட்டமாக மாணவர்களை தவிர்த்தே பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 6ம் திகதி இரண்டாம் கட்டமாக மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/மீண்டும்-நாளைய-தினம்-பாட/
-
- 0 replies
- 374 views
-
-
கோத்தாபய மீதான தமிழ் மக்களின் பயத்தை நீக்குவது உறுதி – ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான சிறுபான்மை மக்களின் ஆதரவு அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் திலக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘அம்பாறையில் பொதுஜன பெரமுனவை ஆதரிக்க பெரும்பாலான மக்கள் முன்வந்துள்ளனர். அந்தவகையில் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக போட்டியிடுகின்ற என்னை, நாடாளுமன்றம் அனுப்புவதன் ஊடாக சிறுபான்மை மக்களாகிய உங்களுடைய பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்றால் இனம் தெ…
-
- 0 replies
- 391 views
-
-
பாலம் அமைத்து தருவோம் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புஸ்வானமாகிவிட்டது..! மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல்கள் வரும்போது பொய்வாக்குறுதிகளை நாடாளுமன்ற தேர்தல் அபேட்சகர்கள் மக்களுக்கு அளிப்பது சர்வ சாதாரணமான விடயம். இதற்கு ஒரு சான்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குறுமன்வெளி மண்டூர் படகுத்துறை பாலமேயாகும். பாலம் அமைத்து தருவோம் என நான்கு தசாப்தகாலமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புஸ்வானமாகிவிட்டது. நான்கு தடவைகள் பாலத்திற்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டன. அடிக்கற்கள் நாட்டப்பட்ட இடமே தெரியாமல் போய்விட்டது. ஆனால் இம்முறை மக்கள் தெளிவாக உள்ளனர். திடமான கொள்கை கட்சி மாறாத உறுதி பொய் அற்ற வாக்குறுதி அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மக்களோடு மக்…
-
- 0 replies
- 309 views
-
-
கைப்பற்றிய போதை பொருட்கள் விற்பனை – பொலிஸாரிடம் விசாரணை நாட்டில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீண்டும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு விற்கப்பட்டாதா என்பது தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் பணியக அதிகாரிகள் ஐவரை சிஐடியினர் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர். https://newuthayan.com/கைப்பற்றிய-போதை-பொருட்கள/
-
- 4 replies
- 669 views
-
-
ஏழாலையில் வீடுடைத்து 14 பவுன் நகை கொள்ளை! யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் இன்று (28) அதிகாலை வீடொன்று உடைக்கப்பட்டு 14 பவுன் நகை திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழாலை களவாடை அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்று இன்று அதிகாலை திருடர்களினால் உடைத்து திருடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயம் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளனர். இதன்போது வீட்டில் இருந்த 14 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்து எழும்பி பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு நகைகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில…
-
- 0 replies
- 363 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது – வாசுதேவ நாணயக்கார வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ள கருத்து தொடர்பாக தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் வரலாற்று காலம் தொடக்கம் வாழ்ந்துள்ளமைக்கான ஆதாரங்கள் மத ஸ்தலங்களின் ஊடாகவும் மத வழிப்பாடுகளுடனும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு அனைத்து இன மக்களின் உரிமை மற்ற…
-
- 2 replies
- 711 views
-
-
13வது திருத்தத்தை கைவிடுவது குறித்து அரசியல் கட்சிகள் ஆராயவேண்டும் – மிலிந்த மொராகொட June 28, 2020 அரசியல் கட்சிகள் 13 வது திருத்தத்தையும் மாகாணசபை முறையையும் கைவிடுவது குறித்து சிந்திக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொராகொட வேண்டுகோள் விடுத்துள்ளார். மாகாணசபை முறையை நீக்கவேண்டும்,அதிகாரங்களை மறுசீரமைக்கப்பட்ட மாநாகர சபைகள்,நகரசபைகள் போன்ற உள்ளுராட்சி அமைப்புகளிற்கு வழங்கவேண்டும் என அவர் கருத்துவெளியிட்டுள்ளார். இந்த அமைப்புகள் மக்களிற்கு நெருக்கமாக உள்ளதன் காரணமாக சமூகமட்டத்தில் மக்களிற்கு எழும் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான சிறந்த நிலையில் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணும் ந…
-
- 5 replies
- 729 views
-
-
கூட்டமைப்புக்குள் இருக்கும் புலி எதிர்ப்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்; செல்வம் அதிரடி June 28, 2020 கிழக்கு மாகாணத்தில் தமிழ் எம்.பி.க்களின் மனைவி, பிள்ளைகளை கடத்தி வைத்து அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டும் என மிரட்டியவர் கருணா என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில் தெரிவித்ததாவது; “தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தியாகங்கள…
-
- 36 replies
- 2.2k views
-
-
முஸ்லிம் காங்கிரசின் கடந்த. 20 வருட காலத்தில் கிழக்கு முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும் முஸ்லிம் காங்கிரஸுக்கு தொடர்ந்தும் வாக்களித்து வரும் கல்முனை மக்கள் மிகப்பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் எனவும் உலமாக்கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் குற்றம் சாட்டியுள்ளார் அவரது அலுவலக்த்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் வாழ்விட பற்றாக்குறை. பல்லாயிரக்கணக்கான ஏழைகளுக்கு சொந்தமாக வீடுகள் இல்லை. ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்கின்றனர். வீடில்லாமை காரணமாக திருமணம் செய்ய முடியாத ஏழைகள் பல்லாயி…
-
- 2 replies
- 438 views
-
-
கொல்லப்பட்டார்கள் என்றால் யார் கொன்றது? – சவேந்திரவிடம் சுரேஸ் கேள்வி காணாமல் போனவர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியிருக்கும் கருத்து உண்மையானால் அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக சொல்லப்பட்டார்கள் என்பதை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கட்டப்பிராயில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (28) முற்பகல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், ‘இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தனது கருத்தில் சில விடையங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஒன்று தாம் எந்த இராணுவ முகாம்களையும் வடக்கில் இருந்து அகற்ற மாட்டோம் என்பதாகும். தொடர்ச்சியாக இங்குள்…
-
- 1 reply
- 484 views
-
-
புலிகளில் இருந்து பிரிந்தது வேதனைதான்
-
- 0 replies
- 663 views
-
-
புதிய அரசுடன் நாம் பேச்சு நடத்துவதற்கு முன்னர் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவோம் – இரா.சம்பந்தன் நாம் பலமான அணியுடன் நாடாளுமன்றம் சென்றால்தான் அரசுடன் காத்திரமான பேச்சுக்களை மேற்கொள்ள முடியும் என்றும் எனவே, இம்முறை தேர்தலில் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் கடந்த முறையையும் விட அதிகரிக்கப்பட வேண்டும்.அந்தப் புனிதமான கடமையை எமது மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாகத் தவறாது செய்ய வேண்டும் என்றும் எமது மக்களின் ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானது.இதேவேளை புதிய அரசுடன் நாம் பேச்சு நடத்துவதற்கு முன்னர் அது தொடர்பில் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவோம் என தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் அனைவருடைய ஆலோசனைகளையும் பெற்று அதற்கமையவே பேச்சைத் தொடர்வோம் என்றும் கடந்தகால வரலாறுகளை நாம் மறக்க…
-
- 2 replies
- 446 views
-
-
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்: சுமந்திரன் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தளவான வாக்குகளை பெற்றுக்கொண்டால், தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்வீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இல்லை அவ்வாறு செல்ல மாட்டேன். அதைவிட சிறப்பான வெற்றி ஒன்றை பதிவு செய்வேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தேசியப்-பட்டியல்-ஊடாக-நா/
-
- 12 replies
- 1k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு இயதசுத்தியுடன் செயற்படவில்லை – அனந்தி சரணடைந்த விடுதலைப் புலிகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் விடுதலை செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வட்டுக்கோட்டையில் நேற்று (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், ‘விடுதலைப் புலிகளின் அரசியல் பலமாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலிகளின் மௌனிப்புக்கு பின்னர் நீதி கேட்கின்ற பயணத்தை அவர்களாகவே முன்னெடுத்திருக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை எந்த இடத்தில் முடிக்கப்பட்டதோ அந்த இடத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை. …
-
- 2 replies
- 504 views
-
-
ஆதாரமற்ற தகவல்களை வைத்து பிரச்சாரம் செய்யாதீர்கள் – கபே சாட்சியங்கள் இல்லாத தகவல்களை முன்வைக்க வேண்டாமென நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு கபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவிக்கையில், ‘தேர்தல் காலப்பகுதியில் பொய்யான பிரசாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லாத பிரசாரங்கள் அதிகளவு பேசப்படுகின்றன. இவ்வாறு சாட்சியங்கள் இல்லாத விடயங்களை தேர்தல் மேடைகளிலும் அதேபோன்று சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் முன்வைக்கின்றப்போது வாக்காளர்களின் மனோநிலை திருப்பப்படும். அதாவது இனபேதங்கள், மத பேதங்கள் மற்றும் குல பேதங்கள் உண்டாக்கப்பட்டு தேர்தல் வன்முறைக்கு இட்டுச் செல்லக்கூடிய சூழ்நிலை க…
-
- 0 replies
- 427 views
-
-
அதிகாலையில் அதிரடிப்படையல் நால்வர் கைது! மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவு, வெள்ளாமைச்சேனை பகுதியில் இருந்து ஓட்டமாவடி பிரதேசத்திற்கு கொண்டு செல்லத் தயாரான நிலையில் இருந்த ஒரு தொகை மரங்களுடன் நால்வரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். வாகரை காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மரங்கள் கடத்தல் இடம்பெறுவதாக வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தவகவலையடுத்து இன்று (28) அதிகாலை வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ளாமைச்சேனை பகுதியில் அதிரடிப்படையினர் சுற்றிவலைப்பினை மேற்கொண்டனர். இதன்போது முதுரை, தேக்கு, கல்ஓதிய, கட்டாக்காலை வகை அடங்கலாக 34 மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன், நான்கு சந்தேக நபர்களையும் கைது…
-
- 0 replies
- 367 views
-
-
ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கம்! நாட்டில் இதுவரை காலமும் அமுலாகி வந்த ஊடரங்கு சட்டம் இன்று (28) முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இதற்மு முன்னர் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊடரங்கு சட்டம் அமுலானமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/ஊரடங்கு-சட்ம்-முழுமையாக/
-
- 0 replies
- 541 views
-
-
நல்லூரிலுள்ள பாரதியார் சிலை மீது தேர்தல் சுவரொட்டிகள்- மக்கள் விசனம் யாழ்.மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் பொது இடங்களிலும் ஒட்டப்படும் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் கிழித்தெறியப்படும் நிலையில், யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் அருவருப்பை உண்டாக்கும் வகையில் பாரதியார் சிலை மீது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றவேண்டும். என பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். தேர்தல் காலத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது வழமை என்ற போதும் அவ்வாறு ஒட்டப்படும் சுவரொட்டிகள் அவை மற்றவர்களை கவரும்படி இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு அருவருப்பை உண்டாக்கும் வகையில் அமையக் கூடாது. இவ்வாறு அருவருப்பை உண்டாக்கும் வகையில் நல்லுார் ஆலய சுற்றாடலில் பாரதியார் சிலை மீது வேட்பாளர் …
-
- 3 replies
- 614 views
-
-
கோண்டாவிலில் திடீர் சுற்றிவளைப்பு! யாழ்ப்பாணம் – கோண்டாவில், அன்னங்கை பகுதியில் இன்று (27) மாலை இராணுவத்தினரால் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பகுதி வீதிகள் முடக்கப்பட்டு இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://newuthayan.com/கோண்டாவிலில்-திடீர்/
-
- 1 reply
- 665 views
-
-
தீயணைப்பு வாகனம் தருக; ஜனாதிபதியிடம் யாழ் மாநகர சபை கோரிக்கை! யாழ்ப்பாணம் மாநகர சபைத் தீயணைப்பு படையின் தீயணைப்பு வாகனம் விபத்துக்கு உள்ளாகி முற்றாக சேதமடைந்துள்ளதால் தமது சபைக்கு அவசர தேவையாகவுள்ள தீயணைப்பு வாகனத்தை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு யாழ் மாநரக சபை பதில் முதல்வர் து.ஈசன் கடிதம் மூலம் கோரியுள்ளார். அக்கோரிக்கைக் கடிதத்தில், ‘கடந்த 16ம் திகதி கடமையின்நிமித்தம் அவசரகால சூழ்நிலைக்கு பதிலளிக்க முயன்றபோது விபத்துக்குள்ளாகி ஒரு தீயணைப்பு வீரர் பலியானதுடன் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது வருந்தத்தக்க விடயம். இதனால் எமது தீயணைப்பு வாகனம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. எனவே தீயணைப்பு சேவையை வழங்குவதற்கு எங…
-
- 0 replies
- 339 views
-
-
சிறிதரனுக்கு சரியான பாடம் புகட்டுவோம் – எச்சரித்தார் விமலேஸ்வரி முன்னாள் எம்பி சி.சிறிதரனின் சந்தர்ப்பவாத அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் அவரின் உண்மை முகத்தையும் காண்பித்துள்ளது என்று தமிழரசு கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், ‘சிறிதரன் ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சி சார்பில் அரசியலுக்குள் நுழைந்தபோது தமிழ் பெண்கள் அனைவரும் அவரை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வடிவமாகவே பார்த்தார்கள். ஆனால் இன்று அவரின் நிலை தலைகீழாக மாறியதையிட்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். சிறிதரன் தற்போது தமிழ் மக்களின் விடுதலைப் ப…
-
- 0 replies
- 488 views
-
-
சம்பள உயர்வுக்கு தான் தடையாக இருக்கவில்லையாம் – கூறுகிறார் நவீன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுக்கு நான் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இன்று (27) நுவரெலியா – கொத்மலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும், ‘கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது. எனவே இவ்விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பெருந்தோட்ட அமைச்சுக்கு கிடையாது. ஆகவேதான் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பணிகள் இடம்பெற வேண்டுமென கூறினேன். தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கு நான் ஒருபோதும் தடைய…
-
- 0 replies
- 314 views
-
-
இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம்! நாட்டின் த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கான இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 63 இலங்கை மத்திய வங்கி கிளைகளில் குறித்த இழப்பீட்டு பணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://newuthayan.com/இழப்பீடு-வழங்கும்-வேலைத்/
-
- 0 replies
- 301 views
-
-
அரச வைத்திய சங்க தலைவராக மீண்டும் அனுருத்த பாதனிய இலங்கை அரச வைத்திய சங்கத்தின் தலைவராக மீண்டும் அனுருத்த பாதனிய தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்படி தொடர்ந்தும் 10வது ஆண்டாக அரச வைத்திய சங்கத் தலைவராக இவர் தேர்ந்தொடுக்கப்பட்டுள்ளார். இதற்கான தேர்தல் இன்று (27) இடம்பெற்றது. https://newuthayan.com/அரச-வைத்திய-சங்க-தலைவராக/
-
- 0 replies
- 526 views
-