ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் வியாழன் நண்பகலுக்கு முன்னர் வெளிவரும்; அரச அதிபர் தகவல் August 4, 2020 யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகலுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு விடும் என மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் க. மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்றுக் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- “யாழ். தேர்தல் மாவட்டத்தில் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள்அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும். இம்…
-
- 0 replies
- 404 views
-
-
மட்டக்களப்பில் முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது! மட்டக்களப்பில் சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த பதவியில் இருந்து இடை நிறுத்திப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது திருகோணமலை இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த கடமையில் இருந்து இடை நிறுத்திப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் முருகன்சிலையை கைப்பற்றியுள்ள சம்பவம் நேற்று (திங்கட்கிழமை ) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை இரவு திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக ஜம்பொன்…
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு முனை தென்படும் விதமாக அழகான ஒளிபடமொன்றை நாசா வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24ஆம் திகதி, விண்வெளி வீரர்களான பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோரால் எடுக்கப்பட்ட ஒளிபடங்களை நாசா வெளியிட்டு இருந்தது. அதிலேயே இலங்கை மற்றும் இந்தியாவின் பிரகாசமான ஒளிரும் தெற்கு முனையும் காட்டப்பட்டுள்ளன. மேலும் பொப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு மாதங்கள் கழித்த பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பூமியை வந்தடைந்தனர். இதேவேளை நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் நிற…
-
- 0 replies
- 511 views
-
-
இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தீர்மானம் இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும் இந்திய கடற்படையின் தலைவருமான விகாஸ் சூட், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை கடந்த ஜூலை 27-ஆம் திகதியும் இலங்கை கடற்படையின் துணைத் தலைவா் நிஷந்தா உல்கிடேனியை ஜூலை 29ஆம் திகதியும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இரு நாட்டு பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்…
-
- 0 replies
- 317 views
-
-
பொதுத்தேர்தல் – வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன. இதற்கமைய குறித்த பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரின் கண்காணிப்பின் கீழ் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 2020 பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த முறை பொதுத்தேர்தலில் 22 மாவட்டங்களில் அங்கிகரிக்கப்பட்ட 20 அரசியல் கட்சிகளும் 34 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளன. அவற்றில் 7 ஆயிரத்து 452 வேட…
-
- 0 replies
- 292 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்திற்கு, அருகே.. மற்றுமொரு தீவு கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடற்பரப்பில் மண்மேட்டை உருவாக்கி இன்னுமொரு துறைமுக நகரத்தை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரத்தின் பணிகளை இவ்வருடத்தின் இறுதிக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆகவே புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள துறைமுக நகரத்தின் பணிகளை துரிதப்படுத்தவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் கொழும்பு தலைநகரில் புதிதாக ஒரு நிலப்பரப்பு தோற்றம் பெறும் அத்தோடு துறைமுக நகரம் மற்றும் புதிய துறைமுக நகரம் அபிவிருத்தி ஊடாக அதிக தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அ…
-
- 1 reply
- 612 views
-
-
தொல்பொருள் ஆலோசனைக்குழு உறுப்பினராக உபாலி தேரர் நியமனம் தொல்பொருள் ஆலோசனைக்குழு உறுப்பினராக அஸ்கிரிய மஹா விகாரை பீடத்தின் வணக்கத்திற்குரிய அனுநாயக்கர் உபாலி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) தங்காலை கால்டன் இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் குறித்த நியமனத்துக்கான பத்திரம் உபாலி தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது. நேர்மையான சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நடத்தப்படும் அமா தம் சிசிலச தர்ம உபதேசத் தொடரின் 200ஆவது தர்ம உபதேசம், தங்காலை கால்டன் இல்லத்தில் இன்று நடத்தப்பட்டது. இதன்போதே இந்த நியமனம் பிரதமரினால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளின் குறைபாடுகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் அக்ரஹ…
-
- 4 replies
- 583 views
-
-
தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் வாக்களிப்பு நடைபெறாது கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தவர்கள் ஓகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 4 மணிக்குப் பின்னர் வாக்களிக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்குள் வாக்களிப்பு நடைபெறாது என்றும் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,”கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான சுகாதார ஏற்பாடுகள் அனைத்தும் பூரணமாகியுள்ளன. மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. இந்த பொது…
-
- 0 replies
- 301 views
-
-
பதிவு செய்துள்ள ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே தேர்தல் முடிவுகளை வெளியிட அனுமதி கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்துள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்சமயம் பிரதான ஊடக நிறுவனங்கள் சில இதற்கான பதிவை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு.. https://athavannews.com/பதிவு-செய்துள்ள-ஊடக-நிறு/
-
- 1 reply
- 474 views
-
-
வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது; தேர்தல் விதி முறை மீறல் August 3, 2020 தேர்தல் விதியை மீறி இடம்பெற்ற வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கை நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களம் நேற்று இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. கடந்த வாரம் முல்லைத்தீவுக்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட்டுவாகல் ஆற்றை ஆழப்படுத்த நடவடிக்கையை முன்னெடுத்தார். தேர்தல் காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்றபோதிலும், வாக்குகளை கவர்வதற்காக இத்தகைய செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்தே இந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன் தேர்தல் நிறைவடைந்த பின்னர் இந்தப் பணியை முன…
-
- 0 replies
- 326 views
-
-
அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் இன்று நடைபெறுகின்றது; முக்கிய விடயங்கள் ஆராய்வு August 3, 2020 அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் அதன் தலைவரும், எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்,ஷ முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதன் போது மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்கள் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அரசியலமைப்பு பேரவையின் செயலாளரும், பாராளும…
-
- 0 replies
- 294 views
-
-
வடக்கு மாகாணத்திலேயேஅதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவு- வீவ் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி (வீவ்) தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சியின் ஒன்றிணைந்த செயற்குழு உறுப்பினர் ஆதில் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சட்ட விரோத பரப்புரை நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கு பணம் வழங்குதல், வாக்காளர்களை மத ரீதியான சுற்றுலாக்கள் அழைத்துச் செல்லல், கட்சியின் பெயர்,இலக்கம் பொறிக்கப்பட்ட பத்திரங்களை விநியோகித்தல், தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்க…
-
- 0 replies
- 383 views
-
-
இந்திய இராணுவத்தின் வல்வை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு வல்வைப் படுகொலையின் 31ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (02) வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு, எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாலை ஏழு மணியளவில் ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. 1989ம் ஆண்டு இந்திய இராணுவத்தால் அப்பாவிப் பொதுமக்கள் 84 பேர் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். https://newuthayan.com/இந்திய-இராணுவத்தின்-வல்வ/
-
- 4 replies
- 629 views
-
-
ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் மாற்றத்தை ஏற்படுத்தாது.! இந்தியா வந்தாலென்ன.? அமெரிக்கா வந்தாலென்ன.? ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது. இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் அரசியல் தீர்வு காணப்படும். சமஷ்டி என்ற வார்த்தைக்கே இங்கு இடமில்லையென தெரிவித்துள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன, கூட்டமைப்பு விரும்பினால் அரசுடன் பேசலாமென்றும் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற ஒரே காரணத்துக்காகவே சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரை எமது புதிய ஆட்சியில் பேச்சுக்கு அழைப்போம். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை கூட்டமைப்பினர் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். சர்…
-
- 0 replies
- 575 views
-
-
எதிர்வரும் தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் கருணா அம்மானின் கரங்களை பலப்படுத்தி அவரை வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் நிலைமை தொடர்பாக காரைதீவு பகுதியில் இன்று(2) முற்பகல் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கருத்துக்களை தெரிவித்தார்.மேலும் தனது கருத்தில்; முப்பது வருடமாக போராடிய எமது போராளிகளின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நாம் எமது புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட போராளிகளின் நலனுக்காக அம்பாறை மாவட்டத்தில் கருணா அம்மானை ஆதரிக்குமாறு மக்களை கேட்கின்றோம். புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை…
-
- 2 replies
- 846 views
-
-
பருத்தித்துறையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையில் இடம்பெற்றநிலையில் பெருந்திரளான மக்கள் திரண்டனர். பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:30 மணியளவில் குறித்த கூட்டத்தை மாவீர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தனர். இந்தக் கூட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரை ஆற்றினார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பா…
-
- 37 replies
- 3.2k views
-
-
யாழ்.மாவட்டத்தில் புத்திஜீவிகள், மற்றும் சாதாரண மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர் பவதாரணி முன்னிலை பெற்றிருக்கின்றது. இம்முறை இலங்கை பாராளுமன்ற தேர்தல் களத்தில் அண்ணளவாக 7400வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 319பெண்வேட்பாளர்கள் உள்ளடங்குகின்றனர். வடக்கு மாகாணத்தில் இம்முறை 7 ஆசனங்களுக்காக 325பேர் போட்டியிடுகின்றனர் . இதில் சுமாராக 35பெண்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை இந்த தேர்தல்களம் யாழ்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்சியும் தமது கட்சியின் பெண்வேட்பாளரை முதன்மைப்படுத்தி நிற்பதாக உள்ளது. அது பலம் பலவீனம் என வேறுபட்ட அடிப்படையில் மக்களை அணுகுவதாக அமைந்துள்ளது. இம்முறை பெண்வேட்பாளர்கள் பலர் புதிதா…
-
- 1 reply
- 740 views
-
-
கிளிநொச்சி மக்கள் இம்முறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை புறக்கணிக்க உள்ளதாக, கிளிநொச்சி முன்நாள் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி குருகவேல் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள பெரும்பாலான புத்திஜீவிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, “கிளிநொச்சியில் உள்ள 110 பாடசாலைகளில் 90 வீதமான பாடசாலைகள் முற்றாகவே சிதைவடைந்து காணப்பட் நிலையில் மாணவர்கள் ஓலைக் குடிசைகளிலும், சிறுசிறு கூடாரம் அமைத்தும், மின்சாரம், தண்ணீர் வசதிகள் இல்லாத நிலையில்தான் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். தனி மனிதர்களாக இருந்து வைத்தியர் சத்தியமூர்த்த…
-
- 4 replies
- 765 views
-
-
மட்டக்களப்பில் மூன்று வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் வாக்களிப்தற்கு வசதியாக இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியின் மத்தியில் அமைந்துள்ள மாந்தீவு எனும் தீவுத் திடல் பகுதியில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் தொழு நோயாளர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக அங்கு ஒரு தொழுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டு அது தற்போது வரை இயங்கி வருக…
-
- 0 replies
- 349 views
-
-
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு! பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் செல்லுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், விளம்பர பலகைகளைக் காண்பித்தல், சுவரொட்டிகளைக் காண்பித்தல், தேர்தல் தொடர்பான விளம்பரம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்திற்கும் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தடை விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று நள்ளிரவுக்குப் பின் ஆரம்பமாகும் அமைதிக் காலத்தில், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அனைவரும் ஆதரவளிக்க வேண்ட…
-
- 4 replies
- 949 views
-
-
கூட்டமைப்பினை பலப்படுத்துவன் மூலமே தமிழர்கள் வலிமை அடைய முடியும்; கனேடிய தமிழ்ப் பேரவை August 1, 2020 நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தமிழர்களையும் புத்திசாலித்தனமாக வாக்களிக்குமாறு கனடியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கனடியத் தமிழர் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் ஜனநாயக உரிமைகளிற்கான தமிழ் மக்களின் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. சுதந்திரத்திற்குப் பின்னர் அவர்கள் எதிர்கொண்ட பல பின்னடைவுகள் இருந்தபோதிலும் நீதி, கண்ணியம் மற்றும் சமத்துவம் குறித்த அவர்களின் விருப்பம் குறையவில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளிற்காகவும் சுதந்திரத்…
-
- 0 replies
- 433 views
-
-
சட்டபூர்வமான அரசியல் சாசனம் இங்கு இல்லை! இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு; வவுனியாவில் சம்பந்தன் August 2, 2020 “இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை ஜனநாயகத் தீர்ப்பின் ஊடாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்திருக்கிறார்கள். எனவே, இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வவுனியாவுக்கு நேற்றுப் பயணம் செய்த அவர் தமிழரசுக் கட்சி காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்- “நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று இடம்பெறப் போகின்றது. நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஒன…
-
- 0 replies
- 428 views
-
-
இனஅடிப்படையில் நாட்டை பிரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள்களுக்கு அடிபணியமாட்டோம்- மகிந்த August 2, 2020 விடுதலைப்புலிகள் ஆயுதங்களை பயன்படுத்தி பெற முடியாமல் போனதை பெறுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு முயல்கின்றது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சண்டே ஒப்சேவருக்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இனஅடிப்படையில் நாட்டை பிரிக்கவேண்டும் என்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோள்களுக்கு நாங்கள் அடிபணியமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் அரசாங்கத்தின் கீழ் தனிநாட்டுக்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தங்களாக எங்கள் தேசத்தை பாதித்த பயங்கரவாதத்தை நாங்கள் தோற்கடித்தோம் என குறிப்பிட்டுள்ள …
-
- 3 replies
- 660 views
-
-
இலங்கையில் 2020 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் 05.08.2020 அன்று அறிவன்(புதன்) கிழமை நடைபெறவிருக்கின்றது. அதில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த குமரிநாடு.கொம் இணையம் முனைகின்றதாக சுவிட்சர்லாந்தினை சேர்ந்த கட்டுரையாசிரியர் பூநகரி.முருகவேல் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். சிங்களமொழி அகரவரிசைப்படி கட்சிகளின் பட்டியல்கள் சின்னங்களுடன் மேலிருந்து கீழாக இடப்பட்டிருக்கும்,அதே நாளில் பத்து சதுரங்கள் அடங்கிய நீள் சதுரப்பெட்டியும் அதன் கீழே இருக்கும். இதில் வாக்காளர்கள் மிகக்கவனமாக தாம் விரும்பும் கட்சியின் சின்னத்திற்கு பக்கத்தில் புள்ளடி இடவேண்டும். அதன் மூலம் தாம் விரும்பிய கட்சியை தெரிவு செய்துவிட்டார். அடுத்து தாம் விரும்பும் வேட…
-
- 0 replies
- 479 views
-
-
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை: கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன் பதில் August 1, 2020 “கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்ய தயார் இல்லை” என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தன்னை அரசியலுக்குள் கொண்டுவந்த நன்றியை மறந்து விக்னேஸ்வரன் அவரை விமர்சிப்பதாகவும் எதிராக செயற்படுவதாகவும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கடந்த சில நாட்களாக விக்னேஸ்வரனுக்கு எதிராக செய்துவரும் விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.…
-
- 0 replies
- 446 views
-