ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142934 topics in this forum
-
கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 12 ஆம் ஆண்டு நினைவு! ஈழத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு வாழும் தெய்வமாக இருந்த சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 12 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். ஈழத்தமிழர்களால் வாழும் தெய்வமாக கணிக்கப்பட்டு எல்லோராலும் அன்புடன் அம்மா என்று அழைக்கப்பட்ட பொதுச்சேவைக்கு இலக்கணமாக திகழ்ந்து தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து காட்டியவர். தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றுவதுதான் தன் பணி என்று நின்று விடாது, அதற்கு அப்பால் தான் வாழும் சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்தார். அதுதான் இறைவனுக்கு செய்யும் பணி என்று எடுத்துக்காட்டினார். 1925 ஆம் ஆண்டு பிறந்த அவர் அக்காலத்தில் அமெரிக்க மிசனறிமார் நடத்தி வந்த மல்லாகம் அ…
-
- 0 replies
- 270 views
-
-
“மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள்” ஆய்வு நூல் வெளியீடு! “மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள்” எனும் பெயரில் காத்தான்குடி – ஆய்விற்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தினால் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அங்கத்துவம் பெறும் பெண்கள் தொடர்பான ஆய்வறிக்கை நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (13) காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் நடைபெற்றது. ஆய்விற்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றிய பணிப்பாளர் திருமதி அனீஷா பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் திருமதி ஜெம்குத் நிசா மசூத், காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிர…
-
- 1 reply
- 381 views
-
-
காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் பலி! யாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (14) உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு பகுதியினை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து வயது 80 என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 12ம் திகதி மேற்படி முதியவரும் அவரது மகனும் எழுதுமட்டுவாழுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். இதன்போது இவர்கள் கோப்பாய் பாலத்திற்கு அருகில் கடும் காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் இரும்பு கேடறுடன் அடியுண்டு தலையில் காயமடைந்துள்ளார். இந்நிலையிலேயே சிகிச்சை பெற்…
-
- 0 replies
- 350 views
-
-
ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை சட்ட நடவடிக்கை இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இயக்குநர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது. மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே, தனது சட்டத்தரணி ஊடாக இவ்விடயம் தொடர்பாக ஜஸ்மின் சூக்காவிற்கும் அவரது அமைப்பிற்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். குறிப்பிட்ட கடிதம் தொடர்பாக புலனாய்வு அதிகாரியின் சட்டத்தரணி பசன் வீரசிங்க தெரிவித்துள்ளதாவது, “மேஜர் ஜெனரல் சால்லேயிற்கு எதிராக பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளீர்கள். இவ்வாறு முன்வைக்கப்ப…
-
- 0 replies
- 320 views
-
-
அரச ஊடகம் பிரதமருக்கு ஆதரவாக பிரச்சாரம்- கபே குற்றச்சாட்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரச ஊடகமொன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றதென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கபே இதனை குறிப்பிட்டுள்ளது. குறித்த கடிதத்தில் கபே தெரிவித்துள்ளதாவது, ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 50 வருடகால அரசியல் வாழ்க்கை பற்றிய தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் குறித்த அரச ஊடகம் அவரை ஊக்குவிக்கின்றது. இது அரச வளங்களை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கை ஆகும். எனவே இவ்விடயத்தில் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/அ…
-
- 0 replies
- 189 views
-
-
கேகாலையில் பாரிய தீ விபத்து – 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேகாலை வர்த்தக மத்திய நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 4 மணியளவில் இவ்வாறு திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கேகாலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸார் தீயணைக்கும் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது கண்டி மற்றும் மாவனெல்ல தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த நிலையில், சுமார் 4 மணித்தியால போராட்டங்களுக்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீப்பரவலி…
-
- 0 replies
- 206 views
-
-
இலங்கையில் 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் உள்ளன இலங்கையில் 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். உயிர்த்த பயங்கரவாள ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (13) சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘இலங்கையில் அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை கொண்ட தப்லிக் ஜமாஅத் வாதம், வகாப் வாதம், சலஃபி வாதம், ஜமாஅத்தே இஸ்லாம் ஆகிய பிரதான 4 குழுக்கள் காணப்படுகின்றது. அதாவது பல்வேறு பெயர்களில் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் அதற்கு கோதுமை மாவே பயன்படுத்தப்படும். அதேபோன்று இந்த குழுக்களும் வெவ்வேறு …
-
- 1 reply
- 400 views
-
-
கடந்தகால தவறுகளை உணர்ந்து கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாகும் – டக்ளஸ் கடந்த காலத் தவறுகள் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றைதினம் வடமாராட்சி பகுதிக்கு சென்றிருந்த அமைச்சர் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுடனான சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார். இந்நிலையில் தம்பசிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார ரீதியிலான செயற்பாட்டாளர்களுடன் நடத்திய சந்திப்பிலேயே குறித்த கருத்தினை வெளிப்படுத்தி இருக்கின்றார். https://newuthayan.com/கடந்தகால-தவறுகளை…
-
- 5 replies
- 787 views
-
-
கருணா யாரென்பது கிழக்கு மக்களுக்கு நன்றாகத் தெரியும் - அம்பாறையில் சுமந்திரன் கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற போது அண்மைக்காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சமந்திர்ன ஒரு அரசியல் வியாபாரி என கருணா விமர்சிப்பது தொடர்பில் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார். “கருணாவின்…
-
- 1 reply
- 495 views
-
-
வவுனியாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 10 வயது சிறுமி தினமும் காட்டுப்பகுதிக்கு அருகாமையில் உள்ள வீதியினூடாக செல்வதை தொடர்ந்து அவதானித்த நபர் ஒருவர் வீரபுரம் காட்டுப்பகுதியில் வைத்து சிறுமியை மறித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்து இன்று நீதிமன்றில் முற்படுத்தியதன் …
-
- 0 replies
- 338 views
-
-
வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நாவற்குழியில் ஏழு பேர் கைது! யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏழு பேர் இன்று (14) மாலை நாவற்குழி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டிலு என்ற பெயருடைய வாள் வெட்டுக்கு குழுவின் தலைவர் எனக் கருதப்படும் நபர் ஒருவர் உடபட ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நாளை (15) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். https://newuthayan.com/வாள்வெட்டுத்-தாக்குதல்/
-
- 0 replies
- 281 views
-
-
இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் விதமான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்பட்டால்- அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். இன்று யாழில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 இல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தில் நாமும் ஓரளவு பங்களித்திருந்த நிலையில், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மீட்சிக்கும் நான்கரை வருடங்களில் பல விடயங்களை மேற்கொண்டோம். …
-
- 6 replies
- 1.3k views
-
-
கல்முனையில், கருணாவுக்கு... ஆதரவான விளம்பர பதாதைகள் எரிப்பு. கல்முனையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஆதரவு தெரிவித்து காட்சிப்படுததப்பட்ட விளம்பர பதாதைகள் இனந்தெரியாதவர்களால் எரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை – கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான விளம்பர பதாதைகளை முக்கிய சந்திகளில் வைத்திருந்தனர். அத்தோடு, அம்பாறை – கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிட…
-
- 18 replies
- 2.1k views
-
-
தேசிய முச்சக்கரவண்டி சங்க தலைவர் படுகொலை கொழும்பு – மிரிஹான பகுதியில் வைத்து நேற்று (10) இரவு நாடாளுமன்ற வேட்பாளரும், இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவருமான சுனில் ஜயவர்த்தன (53-வயது) குழு ஒன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பகுதியிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில் முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான இவர், முச்சக்கரவண்டி சாரதிகளை பாதிக்கும் “லீசிங் மாபியா” தொடர்பில் பல்வேறு விமர்சன காணொளிகளை வெளியிட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவரது…
-
- 11 replies
- 1.6k views
-
-
'இலங்கையில் இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிரிக்கும் அபாயம்' - கேர்ணல் ஹரிகரன் தகவல் (ஆர்.ராம்) இலங்கையில் சிவில் நிருவாகம் உட்பட பல்வேறு கட்டமைப்புக்களிலும் இராணுவ மயமாக்கல் தொடருமாயின் பொதுத்தேர்தல் நெருக்கும்போது இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிரிக்கும் அபாயமுள்ளதாக இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவரும் இராஜதந்திர மூலோபாயங்கள் பற்றி எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார். தற்போதைய பூகோளச் சூழலில் இலங்கை ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் நல்லிணக்க அரசியல் காணப்படுவதால் இலங்கை விடயங்களில் இந்தியா தலையிடுவதற்…
-
- 1 reply
- 515 views
-
-
யாழில் கொரோனாவின் தாக்கத்தையடுத்து வேகமாகப் பரவும் காசநோய் யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய்த் தொற்றுடையவர்கள் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், மேலும் 20 நோயாளர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் பரவல் என்பது இலங்கையில் குறைந்தளவே காணப்படுகின்றது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் இவ்வைரஸின் தாக்கம் பெரிதளவில் காணப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் 3 தொற்று நோ…
-
- 1 reply
- 484 views
-
-
திருமலை பேருந்து நிலையத்தில் சிறுமியை கடத்திய மர்மநபர் -தீவிர தேடுதலில் பொலிஸார் திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று நண்பகல் சிறுமியை இழுத்துச் சென்ற மர்மநபர் ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தனது உறவினருடன் பேருந்து நிலையத்திற்கு வந்த 8 வயது மதிக்கத்தக்க சிறுமி தாகமாக இருப்பதாக தனது உறவினரிடம் தெரிவித்ததை அடுத்து, சிறுமியின் உறவினர்கள் அங்குள்ள கடை ஒன்றில் தண்ணீர் போத்தல் வாங்குவதற்காக சிறுமியை ஓரிடத்தில் நிற்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். குறித்த கடையில் தண்ணீர் போத்தலை வாங்கியபின்னர் வந்து பார்த்தபோது சிறுமி அவ்விடத்தில் இல்லாததால் பதற்றமடைந்த சிறுமியின் உறவினர்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். …
-
- 4 replies
- 584 views
-
-
சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை…! திர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்க காவல்துறையினர் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்படி துண்டு பிரசுரங்கள், பிரசார சுவரொட்டிகள், வேட்பாளர் படங்கள், சின்னங்கள் மற்றும் கட்சியின் கொடிகளை காட்சிபடுத்துவது தொடர்பிலான விசேட செயற்பாடு ஒன்று இன்று (14) ஆரம்பிக்கவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பதில் காவல்துறைமா அதிபரின் உத்தரவின் கீழ், இந்த நடவடிக்கையானது நாட்டிலுள்ள அனைத்து காவற்துறை பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படவுள்ளது. வீதித் தடைகள், நடமாடும் சேவைகள் மற்றும் மோட்டார்சைக்கிள் போக்குவரத்தின் ஊடாக …
-
- 0 replies
- 379 views
-
-
இனவாதிகளின் சிறைப்பிடிக்குள் ரணில், சஜித் : பொதுஜன பெரமுனவின் பிரதியே ஐக்கிய மக்கள் சக்தி - மங்கள (ஆர்.ராம்) தென்னிலங்கை வாக்குகளுக்காக சிங்கள, பேரினவாதத்தினை முன்னிலைப்படுத்தும் பொதுஜனபெரமுனவின் பிரதியாகவே ஐக்கிய மக்கள் சக்தியும் காணப்படுகின்றது என்று முன்னாள் நிதி மற்றும் வெகுஜன, தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை, அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து தலைமைத்துவம் வழங்கும் வகையிலான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவோ அல்லது வலுவான எதிர்க்கட்சி என்ற வகிபாகத்தினை வகிப்பதற்காக வெளிப்படையான கருத்துக்களை வெளியிடவோ, செயற்பாடுகளை முன்னெடுக்கவோ தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார். மாற்று சக்தி என்பதற்கான கொள்கைகள் உட்பட எந்தவிதமான இலட்சணங்க…
-
- 1 reply
- 495 views
-
-
யாழில் இன்று இடம்பெற்ற தேர்தல் ஒத்திகை (தி.சோபிதன்) யாழ்ப்பாணத்தில் பொதுத் தேர்தலுக்கான பரீட்ச்சார்த்த தேர்தல் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் வாக்களிப்பு நடைபெற்றது. நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த வாக்காளர்கள் பரீட்ச்சார்த்த தேர்தலில் வாக்களித்தனர். இந்த வாக்களிப்பு இன்று காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை நடைபெற்றது. வாக்காளர்களுக்கன அறிவுறுத்தல்கள் ஏற்கனவே கிராம அலுவலர்கள் ஊடாக வளக்கப்பட்டிருந்தன. குறித்த வாக்களிப்புக்கு வருகை தந்த வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து வந்ததுடன் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமும் கொண்டு வந்தனர் .அத்துடன் வாக்களிக்க வருபவர்கள் கறுப்பு அல்…
-
- 0 replies
- 333 views
-
-
வடக்கை இலக்கு வைக்கும் ஜனாதிபதி செயலணி : அனுராதபுரம் முதல் வடக்கில் நாக விகாரை வரையான பாரம்பரியத்தை தக்கவைக்க நடவடிக்கை கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை கண்காணிப்பதைப்போன்றே வடக்கிலும் தொல்பொருள் பிரதேசங்களை கண்காணிக்கும் பொறுப்பை ஜனாதிபதி செயலணிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவின் தலைமையில் இந்த வாரம் கூடும் செயலணிக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நியமித்த விசேட ஜனாதிபதி செயலணி கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை முற்றுமுழுதாக கண்காணித்து அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் கடந்த செயலணிக் கூட்டத்த…
-
- 0 replies
- 272 views
-
-
கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்தாலும் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – தேர்தல்கள் ஆணையாளர் இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸின் பரவல் ஏற்பட்டாலும் பொதுத்தேர்தல் நிச்சயம் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காணப்படும் பகுதிகளில் விசேட வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதன் மூலம் வாக்களிப்பு இடம்பெறும் என்றும் இது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை மீண்டும் ஒத்திவைப்பதற்கு பதில் அதனை நடத்துவதற்கான அவசர சூழ்நிலை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பரவினால் முடக்கப்பட்டுள்ள பகுதிக்குள் தேர்தல…
-
- 0 replies
- 242 views
-
-
மங்கள அரசியலை விட்டு விலகவில்லை June 14, 2020 முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தேர்தல் போட்டியிலிருந்து விலகல் எனக்கு கவலையை தந்தாலும், அவர் அரசியலை விட்டு ஓய்வு பெறவோ, வேறு கட்சியில் சேரவோ போவதில்லை, சிவில் சமூகத்தில் பணியாற்ற போகிறேன் என்று எனக்கு கூறியதில் மகிழ்ச்சி. அவரது சிவில் சமூக பணியின் மூலம், இலங்கையர் அடையாளமும், பல்லின பன்மைதன்மை அடையாளமும் இன்னமும் வலுவடைய வேண்டுமென அவருக்கு தான் கூறினேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீட்டர் தளத்தில் கூறியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் ஊடகங்களுக்கு மேலும் கூறியுள்ளதாவது, இந்த அரசாங்கம் இன்று பகிரங்கமாக “சிங்கள பெளத்தம் மட்டும்” என்ற கொள்கையை கடைபிடிக்கின்றது…
-
- 0 replies
- 356 views
-
-
தேர்தல் ஒத்திகை தொடங்கியது – (படங்கள்) கொரோனா வைரஸ் தொற்று அபாயத்துக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்ற பரீவ்சார்த்த தேர்தல் ஒத்திகை இன்று (10) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்று வருகின்றது. இந்த ஒத்திகையின் போது, வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம், வாக்காளர் ஒருவருக்கு வழங்கப்படும் கால எல்லை மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது குறித்த காரணிகள் ஆராயப்படவுள்ளது. https://newuthayan.com/தேர்தல்-ஒத்திகை-நடவடி/
-
- 2 replies
- 937 views
-
-
தமிழ் மக்களிள் ஆதரவை ஒருபோதும் மறக்கப்போவதில்லை- மைத்திரி தன்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர் எனவும் அதனைத் தான் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய ஆட்சியில் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என தான் நம்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆனால் தான் வழங்கிய சலுகைகள் இவர்களால் வழங்க முடியுமா என்பதை தெளிவாகக் கூறமுடியாது எனக் கூறியுள்ளார். தற்போதைய அரசியல் செயற்பாடுகள், புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து தமிழ் தேசிய பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் …
-
- 3 replies
- 473 views
-