ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து தற்காலிக குடியிருப்பாளர்களும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி (மேற்கு மாகாணம்) தேசபந்து தென்னக்கூன் தெரிவித்தார். "வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்கள் இல்லாதவர்கள் காவல்துறையில் பதிவு செய்ய வேண்டும்" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.. கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்கள் குறித்த தரவு தளத்தை பொலிஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கி பராமரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். "சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள், போதைப்பொருள், பாதாள உலக செயற்பாடுகளை அடையாளம் காணவும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் …
-
- 0 replies
- 346 views
-
-
-க. அகரன், நடராசா கிருஸ்ணகுமார் வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொதுமக்களின் பல ஏக்கர் காணிகளைப் பிடித்து, விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்காக, படையினர் வேலியிட்டுள்ளார்களென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலாநிதி சிவமோகன் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதற்கு நடவடிக்கை எடுக்காத வனவளப்பிரிவு, தமிழ் மக்கள் தங்களுக்கு உரித்தான காணிகளை அபிவிருத்தி செய்ய முற்படும் போது, அவர்களுக்கு இடையூறு செய்து, நீதிமன்றங்கள் மூலம் வழக்குத் தொடுத்து வருவது எதற்காக எனவும் வினவினார். அப்படி எனில், இலங்கையின் நீதி படையினருக்கு ஒன்றாகவும் தமிழ் மக்களுக்கு ஒன்றாகவும் உள்ளதா என்பதை உரியவர்கள் தெளிவுபடுத்த வேண்டுமெனவும், அவர் கூறினார். h…
-
- 1 reply
- 504 views
-
-
நீதிமன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரிடம் அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டும் என கூறி 50 ஆயிரம் ரூபாயை சட்டத்தரணி ஒருவர் மோசடி செய்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாவட்டத்திலுள்ள நீதவான் நீதிமன்றங்களில் ஒன்றின் நியாயதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறு குற்றம் ஒன்றினை புரிந்தார் என கூலி தொழிலாளி ஒருவர் மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் அந்நபரை 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் செல்வதற்கு அனுமதித்து வழக்கினை ஒத்திவைத்தார். அதனையடுத்து அவரது பிணை நடவடிக்கைகள் முடிவடைந்து மன்றினை விட்டு அந்நபர் வெள…
-
- 7 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறி நிவாரணம் வழங்கலில் ஈடுபட்ட 6 பேருக்கு விளக்கமறியல் மட்டக்களப்பு- கரடியனாறு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில், நிவாரண பொதி வழங்கலில் ஈடுபட்ட 6 பேரையும் எதிர்வரும் ஜுன் 4 ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுவிஸ் நாட்டிலுள்ள தமிழ் நீலப் பறவைகள் விளையாட்டுக் கழகத்தின் அனுசரனையுடன் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்ட உணவுப் பொதி வழங்கல் என பொறிக்கப்பட்ட பதாதையுடன் மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் கடந்த மாதம் 18 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில் நிவாரண பொதிகளை 6 பேர் வழங்கி கொண்டிருந்தனர். இந்…
-
- 0 replies
- 310 views
-
-
யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக நிராகரித்துவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ள அவர், அதனை நியாயப்படுத்தவும் முயன்றுள்ளார். இந்தியாவின் முன்னணி பத்திரிகையொன்றில் பிரசுரமான கட்டுரையொன்றுக்கு காரசாரமான முறையில் பதிலளித்துள்ள கோட்டாபய ராஜபக்ஸ, யுத்தத்தில் ஒரு நபரின் மனித உரிமை மீறல்களை பாதுகாப்பது சாத்தியமற்றது என கூறியுள்ளார். யுத்ததின் போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, போரில் ஒரு நபரின…
-
- 1 reply
- 788 views
-
-
வடக்கின் திருமண மண்டபங்களுக்கான விசேட அறிவிப்பு! திருமண, வரவேற்புபசார மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான கொரோனா சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரால் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று (01) விடுக்கப்பட்ட அறிக்கையில், குறித்த இடப்பரப்பினுள் அனுமதிக்கப்படக் கூடிய ஆகக் கூடிய பங்குபற்றுனர் தொடர்பான தகவல், பின்பற்றப்பட வேண்டிய சுகாதார நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். நடைபாதைகள், ஆசனங்கள், அலங்கார அமைப்புகள் மற்றும் ஏனைய நோக்கங்களுக்கான இட ஒதுக்கீடுகளைக் கருத்திற் கொண்டு மண்டபத்தின் இடப்பரப்பிற்கு ஏற்ற வகையில் ஆசனங்களின் அனைத்துப் பக்க…
-
- 0 replies
- 467 views
-
-
கதிர்காமம் நோக்கிய யாத்திரைக்கு அனுமதி கிடைத்துள்ளது May 23, 2020 யாழிலில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்கவுள்ளதாக யாத்திரைக்கு தலமை தாங்கி செல்லவுள்ள சி. ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் , இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம். ஆனால் முருகனின் அருளால் இம்முறை யாத்திரைக்கு அருள் கிடைத்துள்ளது. எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து , மோகனதாஸிடம் வேல் பெற்று , கதிர்காமத்தை ந…
-
- 15 replies
- 2.4k views
-
-
இலங்கை குறித்து ஜெனீவாவில் மற்றொரு தீர்மானம்; பிரிட்டன் தலைமையில் ஐந்து நாடுகள் முடிவு Bharati June 1, 2020இலங்கை குறித்து ஜெனீவாவில் மற்றொரு தீர்மானம்; பிரிட்டன் தலைமையில் ஐந்து நாடுகள் முடிவு2020-06-01T07:24:50+00:00 ஜெனிவா தீர்மானத்தில் இருந்து இலங்கை விலகியமை குறித்து கவனத்தில் எடுக்காமல், மீண்டும் தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மாநாட்டில் கொண்டு வர பிரிட்டன் தலைமையிலான ஐந்து நாடுகள் தீர்மானித்துள்ளன. புலம்பெயர் தமிழர்களின் கடும் அழுத்தங்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படுவதாக சிங்களப் பத்திரிகையான திவயின தெரிவித்துள்ளது. இந்தத் தீர்மானத்தில் இருந்து விலகியதாக இலங்க…
-
- 2 replies
- 635 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை சுமந்திரன் நிறுத்த வேண்டும்: சம்பந்தனுக்கு சார்ள்ஸ் கடிதம் by : Dhackshala தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இன்று (திங்கட்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்…
-
- 1 reply
- 557 views
-
-
தீர்வையே தமிழர்கள் கேட்கின்றனர் – பிரதமர் மஹிந்தவிற்கு விக்னேஸ்வரன் பதில் by : Jeyachandran Vithushan தீர்வையே தமிழர்கள் விரும்புகின்றார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிவைத்துள்ள கேள்விக்கான பாதியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தாம் ஒரு தேசம் என்ற முறையில் தம்மைத்தாமே ஆளும் உரிமை படைக்க வேண்டும் என்பதையே தமிழர்கள் நாடுகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிலில் “தமிழ் மக்களைத் தவறாக மாண்புமிகு பிரதம மந்திரி எடை போட்டுள்ளார். தமிழ் மக்களின் ஏகோபித்த உந்துதலே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வெளிக்கொண்டு வந்த…
-
- 1 reply
- 560 views
-
-
சஹரானின் சகோதரி உட்பட 63 பேருக்கு15 ஆம் திகதி வரை விளக்கமறியல் by : Yuganthini உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் ஜுன் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி ஊடாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டார். கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்…
-
- 0 replies
- 493 views
-
-
இலங்கை இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும்! by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை தணிக்கும் முயற்சியில், இலங்கை இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கான தடைகளை குறைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2020 ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி 82 சதவீதம் குறைந்துள்ளது, ஆடை ஏற்றுமதி 81.78 சதவீதமாக குறைந்துள்ளது. அமைதிக்கு பெயர் பெற்ற தெற்…
-
- 0 replies
- 419 views
-
-
சுமந்திரனின் தமிழ்த்தேசிய நீக்க அரசியல்! - விளக்கமளிக்கிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தந்தை செல்வாவின் அடிப்படைக் கொள்கைகளை தமிழரசுக் கட்சி கைவிட்டு விட்டதா? என கேள்வியெழுப்பியுள்ள அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் சர்ச்சைக்குரிய சுமந்திரனின் நேர்காணல் தொடர்பில் விளக்கமளிக்கிறார். http://www.jaffnavision.com/2020/05/23/political-analyst-jothilingam-explains-the-controversial-sumanthirans-interview/
-
- 1 reply
- 739 views
-
-
எமது உரிமைகளை நாம் பெற்றுக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபயவினாலும் தடுக்க முடியாது. ஆயுதப் போராட்டம் பழைய கதை. அதைப்பற்றி பேசி பலனில்லை. இப்போது நாம் ஜனநாயகத்தின் அடிப்படையில், மனித உரிமைகளின் அடிப்படையில் பயணிக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இன்று (30) தனியார் வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது என்ற கருத்தையும் நிராகரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், சமத்துவத்தின் அடிப்படையில் எமக்கு தீர்வு கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய …
-
- 11 replies
- 1.2k views
-
-
இப்போது பேச்சுவார்த்தை நடத்தி கிடைக்கப்போகும் பலன் என்ன? Bharati May 30, 2020 இப்போது பேச்சுவார்த்தை நடத்தி கிடைக்கப்போகும் பலன் என்ன?2020-05-30T13:29:32+00:00Breaking news, ஆசிரியரின் சிந்தனையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவையும் வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலரையும் சந்தித்துப் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது. வெளிநாட்டுத் தூதுவர்கள் என்று சொல்லும் போது குறிப்பாக இந்தியாவின் புதிய தூதுவர் கோபால் பால்கேயைச் சந்திப்பது கூட்டமைப்புத் தலைமையின் திட்டம் எனச் சொல்லப்படுகின்றது. இவற்றின் மூலம் எதனைச் சாதிப்பதற்கு கூட்டமைப்புத் தலைமை முற்படுகின்றது என்ற கேள்வி முக்கியமானது. கூட்டமைப்ப…
-
- 1 reply
- 570 views
-
-
யாழ். திருநெல்வேலி பொதுச்சந்தை மீண்டும் வழமைக்குத் திரும்பியது கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச்சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன.இந்நிலையில் நல்லூர் பிரதேச சபையினரால் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற கூடியவாறான ஏற்பாடுகள் ஏற்கனவே ஒழுங்குசெய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்கு திரும்பியது.அதன் அடிப்படையில் 70 நாட்களின் பின்னர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை மீள வழமைக்குத் திரும்பியுள்ளது.அதிகாலை 5 மணி முதல் சந்தை திறக்கப்பட்டு சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் சந்தை நடவடிக்கையில் …
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது- அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது. தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.” – என்று அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நோர்வூட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் பங்கேற்று நன்றியுரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ” கொரோனா வைரஸ் பிரச்சினையால் தகுதியான முறையில் இறுதி அஞ்சலியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இவ்விடயம் கவலையளித்தாலும் நாட்டின் நலனும், பாதுகாப்பும் எமக்கு முக்கியம். அப்பா இருந்திருந்தால் அவரும் இதனையே ஆசைப்பட்டிருப்பார். எனவே, கொரோனா பிரச்சினை எல்லாம் முடிவடைந…
-
- 0 replies
- 375 views
-
-
ஹஸ்பர் ஏ ஹலீம்_ இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். இந்த அடையாளத்தைக் கூட இந்த அரசாங்கம் இல்லாமலாக்கியுள்ளது என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் இன்று (01)விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணசபையின் கீழ் முன்பள்ளிப் பணியகம் செயற்பட்டு வருகின்றது. இந்தப் பணியகத்திற்கான தவிசாளர் மற்றும் மாவட்டங்களுக்கான செயலாற்றுப் பணிப்பாளர்கள் ஆகியோர் ஆளுநரினால் நியமிக்கப்படுவார்கள். எமது நல்லாட்சி அரசாங்கத்தில் எல்லா இன மக்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன. அக்கரைப…
-
- 0 replies
- 370 views
-
-
குருநாகல் - மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W.வீரகோன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கிருமிநாசினியை பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எச்சரிகையாக இருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந…
-
- 0 replies
- 356 views
-
-
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் துரித வேகத்தில் பறிக்கப்படுகின்றன- மக்கள் உரிமைகளிற்கான குழு கவலை Rajeevan Arasaratnam June 1, 2020சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் துரித வேகத்தில் பறிக்கப்படுகின்றன- மக்கள் உரிமைகளிற்கான குழு கவலை2020-06-01T08:11:01+00:00 தன்னிச்சையான கைதுகள் கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் உரிமைகள் குழுவென்ற அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை விவகாரங்கள் குறித்த பரப்புரைகளை மேற்கொண்டுள்ள மக்கள் உரிமை குழு அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. கருத்துச்சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் உரிய நடைமுறைகளை பின்பற்றப்படுதல் நியாயமான விசாரiணைகள் போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளிற்கு …
-
- 0 replies
- 279 views
-
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை சன்று முன்னர் நோர்வூட் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச மரியாதையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. அன்னாரின் பூதவுடலுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்று சுகாதர இடைவெளியை பேணி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் அக்னியுடன் சங்கமமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144385
-
- 1 reply
- 871 views
-
-
2021 இல் 1 ஆம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோருகிறது கல்வியமைச்சு Bharati May 28, 20202021 இல் 1 ஆம் தர மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோருகிறது கல்வியமைச்சு2020-05-28T22:06:40+00:00 2021 ஆம் ஆண்டு முதலாந் தரத்தில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை 15 ஆம் திகதி ஜுலை மாதம் 2020க்கு முன்னர் பூர்த்தி செய்து பதிவுத்தபாலில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விபரங்கள் யாவும் ஜுன் மாதம் 30 ஆம் திகதி 2020 க்கு பொருத்தப்பாடு உடையதாக இருப்பதோடு உரிய ஆவணங்கள் யாவும் இணைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 600 views
-
-
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு, மலையக மக்களுக்காக பல திட்டங்களை மகிந்தவுடன் சேர்த்து, வழக்கத்தினை விட மிக நீண்ட நேரம் ஒன்றாக இருந்து பேசி, நிறைவேற்றி வீடு திரும்பிய ஆறுமுகம் தொண்டைமான் மரணச்செய்தி கிடைத்ததும், முதலில் நம்ப மறுத்த மகிந்த, மிகுந்த மனக்கிலேசத்துக்கு ஆளானார். உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று, பார்த்த மகிந்தா, மிகவும் மனக்கவலையில், உணர்வு பூர்வமாக இருந்ததை பார்க்கக்கூடியதாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது. சில மணிநேரங்களுக்கு முன்னர், தன்னுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவர், இறந்து போனதை அவரால் நம்பவோ, ஜீரணிக்கவோ முடியவில்லையாம். பல மலையகத்தலைவர்கள், அங்கும், இங்கும் பாய்ந்தாலும், என்றும் தனது உறுதியான, அரசியல் ஆதரவாளராக, வடக்கில் டக்ளஸ் போல, இருந்த…
-
- 4 replies
- 858 views
-
-
வடமேற்கு மாகாணத்தில் குருணாகலில் மாவத்தகம பகுதியிலுள்ள பல விவசாய நிலங்களை இலட்சக்கணக்கான வெட்டுகிளிகள் தாக்கியுள்ளன. இலங்கையில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இந்தியா, பாகிஸ்தானை தாக்கும் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை என்றும் அவை உள்ளூர் வெட்டுக்கிளிகளே என்றும் விவசாயப் பணிப்பாளர் நாயகம் எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்துள்ளார். மேலும், வெட்டுக்கிளிகளின் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாலைவன வெட்டுக்கிளிகள் மிகப்பெரியது மற்றும் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யா போன்ற பலவீனமான உணவுப் பாதுகாப்பு உள்ள நாடுகளில் பயிர்களை அழித்துள்ளன. பாலைவன வெட்டுக்கிளிகள் மிகவும் அழிவுகரமான புலம்பெயரும் பூச்சிகளில் ஒன்றாக கருதப…
-
- 0 replies
- 375 views
-
-
கனகராசா சரவணன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சரியானது என விளங்கிக் கொண்டு, வடக்கு, கிழக்கை இணைக்க முஸ்லிம்கள் இனியாவது ஒத்துழைக்க வேண்டுமென, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் கிழக்கிலே தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் இருப்புக்கு கேள்விக் குறியான நிலை ஏற்படுமெனவும் அவர் தெரிவித்தார். கிழக்கில் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக ஜனாதிபதியால் அமைக்கப்பட் செயலணியை கண்டித்து, ஊடகங்களுக்கு நேற்று (30) அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். “கிழக்கிலே தமிழர்களின் பூர்வீக இடங்களை ஆக்கிரமப்பை மேற்கொள்ளுவதற்காகவே தொல்லியல் திணைக்கள அனுசரனையுடன், இந்த ஜனாதிபதி …
-
- 0 replies
- 507 views
-