ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142943 topics in this forum
-
கொரோனாவால் உயிரிழந்த 10ஆவது இலங்கையரின் சடலம் தகனம் செய்யப்பட்டது கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த 10ஆவது இலங்கையரின் சடலம் தகனம் செய்யப்பட்டது. குறித்த பெண்ணின் சடலம் உரிய பாதுகாப்புக்களுடன் நேற்று (திங்கட்கிழமை) இரவு 10.00 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து பொது மயானத்திற்கு எடுத்துவரப்பட்ட சடலத்தினை மயானத்திற்குள் கொண்டுவருவதற்கு மயான வாயில் கதவின் திறப்பு கொண்டுவர தாமதம் ஆனதால் சடலம் தகனம் செய்யப்படாமல் பல மணி நேரம் வாகனத்திலேயே வைக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மயானத்தில் தகனம் செய்பவருக்கு உரிய பாதுகாப்பு அங்கி இன்மையால் தனக்கு பாதுகாப்பு அங்கி தரப்படும்வரை சடலத்தை எரிப்…
-
- 0 replies
- 445 views
-
-
எங்களை உங்கள் அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்காதீர்கள்- அரசியல்வாதிகளிற்கு அனில்ஜசிங்க வேண்டுகோள் Rajeevan Arasaratnam May 25, 2020எங்களை உங்கள் அரசியல் சர்ச்சைகளுக்குள் இழுக்காதீர்கள்- அரசியல்வாதிகளிற்கு அனில்ஜசிங்க வேண்டுகோள்2020-05-25T21:40:12+00:00 இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்ஜசிங்க தன்னையும் ஏனைய அரச அதிகாரிகளையும் அரசியல் சர்ச்சைகளிற்குள் இழுக்கவேண்டாம் என பொதுமக்களையும் அரசியல்வாதிகளையும் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்க எதிர்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் மத்தியில் விவாதங்களை முன்…
-
- 2 replies
- 611 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது இலங்கையில் பதிவான 6ஆவது மரணமாகும். கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று இவர் உயிரிழந்துள்ளார். 80 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க சற்றுமுன் இதை தெரிவித்தார். https://www.ibctamil.com/srilanka/80/140718?ref=home-imp-parsely
-
- 5 replies
- 753 views
-
-
நாட்டை சிங்களமயமாக்கவே தொல்லியல் துறை கையாளப்படுகிறது – துரைராஜசிங்கம் by : Dhackshala நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடைமுறையாகவே தொல்லியல் துறை இலங்கையில் கையாளப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். தொல்லியல் துறை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். “கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கையாளுவதற்கான ஜனாதிபதி செயல…
-
- 4 replies
- 864 views
-
-
மன்னாரில் பிறந்து, கல்வி கற்ற தமிழரே அரசாங்க அதிபராக நியமிக்கப்பட வேண்டும் - முருங்கன் ரஜமஹா விகாரை விகாராதிபதி மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உற்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்பட வேண்டும் என்று மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தார். மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) அலுவலகம் நேற்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தா…
-
- 5 replies
- 845 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில், இன்று (19) நண்பகல் 12 மணியளவில், விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர் இதன் போது சமகால நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலின் பின்னர், போராட்டத்தை விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான கண்டன அறிக்கையை முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினர், மா…
-
- 5 replies
- 1.2k views
-
-
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 157 பேருக்கு கொரோனா – கட்டாரிலிருந்து வரவிருந்த விமானம் இரத்து வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகைத் தந்தவர்களில் 157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 90 பேரும் டுபாயில் இருந்து இலங்கை வந்த 18 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான 41 பேரில் 40 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மற்றைய நபர் டுபாயில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட…
-
- 0 replies
- 492 views
-
-
“ஜனநாயகவாதியான தந்தை செல்வாவின் பெயரை சொல்லிக்கொண்டு, வேடிக்கை பார்க்காமல் தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், இரா.சம்பந்தனையும், சுமந்திரனையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், தன்னுடைய கட்சி சார்ந்த விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தால், அது அவர் கட்சியின் பிரச்சினை என்று எனது கருத்தை கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் அவர் என்னையும் சுமந்திரனையும் ஒப்பிட்டு என்னை விட ஒரு மோசமான கருத்தை சுமந்திரன் கூறியுள்ளதாக தெரிவித்துள்…
-
- 18 replies
- 2.3k views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் நோயில் இருந்து தற்காத்து கொள்வதற்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய தனது மகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நேற்றும் நேற்று முன்தினமும் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார். வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார். தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தம…
-
- 41 replies
- 3.8k views
-
-
மத்திய மாகாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக இருவர் பலியாகியுள்ளதாக கண்டி வைத்தியசாலையின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டபிள்யூ.கே.எஸ். குலரத்ன தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு மத்தியில் மீண்டும் எலிக்காய்ச்சலும் தலைதூக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட 20 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் இருவரே எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்தும் 12 பேர் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 24 நோயாளர்கள் மத்திய மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/143977
-
- 1 reply
- 502 views
-
-
யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, “மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடிப்பட்டு படுகாயமடைந்துள்ளார். அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்தவேளை, குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில்…
-
- 3 replies
- 990 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையில் இவ்வாறு தொலைபேசியில் உரையாடல் இடம்பெற்றதாக இந்தியப்பிரதமர் மோடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை ஜனாதிபதியுடன் சிறப்பான முறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாகவும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போராடுகின்றது. இலங்கைய எமது அயல்நாடு என்ற வகையில் வைரஸ் தாக்கம் மற்றும் பொருளாதாரத் தாக்கத்திலிருந்து இலங்கை மேலெழுவதற்கு இந…
-
- 11 replies
- 1.3k views
-
-
தியாகி பொன். சிவகுமாரன் நினைவுநாளை முன்னிட்டு தமிழ் தேசிய வானொலி கட்டுரைப் போட்டி ஒன்றை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. முதல் பரிசாக முப்பதாயிரம் ரூபாவும் இரண்டாவது பரிசாக 20ஆயிரம் ரூபாவும் முன்றாவது பரிசாக 10ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது. பரிசு பெறும் கட்டுரைகளுடன் பிரசுரத்துக்கு தேர்வாகும் கட்டுரைகளுக்கு 2500ரூபா விகிதம் வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் ஜூன் 03ஆம் திகதிக்குள் போட்டிக்கான கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழ் தேசிய வானொலி அறிவித்துள்ளது. போட்டி விபரம் இதோ! தியாகி பொன். சிவகுமாரன் நினைவுக் கட்டுரைப் போட்டி 2020 மாவீரன் தியாகி பொன். சிவகுமாரன் நினைவுநாளை (ஜூன்05) முன்னிட்டு, தமிழ் தேசிய வானொலி திறந்த கட்டுரைப் போட்டியொன்றை நடாத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
முன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் – ரவி கருணாநாயக்க by : Benitlas முன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி இருந்துவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சித்தார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இதனால் என்ன லாபம் கிடைத்தது? ஐக்கிய தேசியக் கட்சி என்பது பழமைவாய்ந்த ஒரு கட்சியாகும். டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன போன்றோர் வளர…
-
- 1 reply
- 523 views
-
-
கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்கள் சார்பில் வாதாடிய அச்சலா செனிவிரத்னவுக்கு உயிர் அச்சுறுத்தல்! 2008-2009 காலப்பகுதியில் கொழும்பில் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்பங்கள் சார்பாக வழக்காடிவரும் வழக்கறிஞர் அச்சலா செனிவிரத்ன, தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்டிருக்கிறது எனக் குற்றவிசாரணைப் பொலிசிடம் முறைப்படு ஒன்றைச் செய்துள்ளார். DKP தசனாயக்கா தமிழர்கள் உள்ளிட்ட 11 பேரைக் கடத்தி,சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சமபவத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டு, 2007 இல், கடற்படைக் கொமொட…
-
- 3 replies
- 768 views
-
-
யாழ்.இந்து திறன்பேசி வசதியில்லாத O/L -A/L மாணவர்களுக்கு ரப்லெட் கணினி வழங்க நடவடிக்கை May 25, 2020 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் சாதாரண தர, உயர்தர மாணவர்களில் நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மடிக்கணினி (லப்ரொப்), வரைபட்டிகை(ரப்லெட்), திறன்பேசி (ஸ்மார்ட் போன்) வசதிகளைக் கொண்டிராத – வசதி குறைந்த மாணவர்களுக்கு ரப்லெட் கணினிகளை வழங்குவதற்கு கல்லூரியின் முதல்வர் இரட்ணம் செந்தில்மாறன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். கல்லூரி முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானியக் கிளையின் நிதி அனுசரணையில், ரூபா 1.2 மில்லியன் பெறுமதியான 60 ரப்லெட் கணினிகள் (வரைபட்டி…
-
- 0 replies
- 452 views
-
-
திருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு Bharati May 25, 2020திருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம்; வரையறை விதிக்கிறது சுகாதார அமைச்சு2020-05-25T09:01:19+00:00 கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோய் பரவலை தடுப்பதற்காக திருமணம் மற்றும் விசேட விழாக்களில் பங்கும் கொள்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டால், அதில் அதிகபட்சம் 100 விருந்தினர் மாத்திரமே இடம்பெற வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. திருமண விழா மற்றும் பிற அனைத்து விழாக்களும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களி…
-
- 0 replies
- 438 views
-
-
வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, லசித் மாலிங்க, சனத் ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர். 40 மில்லியன் டொலர்கள் செலவில் ஹோமாகமவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைக்க போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதனையடுத்து மஹேல ஜயவர்த உள்ளிட்ட தரப்பினர் இதற்கு பாரிய எதிர்ப்பை வெளியிட்டிருந்ததை அடுத்து நாட்டில் பெரும் பேசும் பொருளாக இந்த விடயம் காணப்பட்டது. …
-
- 7 replies
- 778 views
-
-
In இலங்கை April 9, 2020 10:50 am GMT 0 Comments 1989 by : Litharsan மன்னார், பரப்பான்கண்டல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். பரப்பான்கண்டல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர். சகோதரிகளான மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தியோகு லிண்டா (வயது-40) என்பவரும் அஞ்சல் அலுவலகத…
-
- 38 replies
- 3.8k views
-
-
(செ.தேன்மொழி) நாட்டுக்கும், மக்களுக்கும் நலனை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன்,நாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தியில் டைக்கோட் மற்றும் சால்வை அணிந்த மோசடிதாரர்கள் கிடையாது. அதனால் யாருக்கும் துணைப்போக வேண்டிய தேவை எமக்கில்லை என்றும் அடக்குனுமுறை ஆட்சிக்கு எதிராக குறல் எழுப்புவதற்கு ஒருபோதும் அச்சமாட்டோம் என்றும் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தி…
-
- 23 replies
- 2.6k views
-
-
யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல் Leftin May 5, 2020 யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்2020-05-05T10:50:39+00:00உள்ளூர் யாழ்.உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது. வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொள்ளைக் கும்பல் சித்திரவதை செய்துள்ளது. அதனால் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், தெல்லிப்பழை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த…
-
- 34 replies
- 3.1k views
- 1 follower
-
-
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக ஓய்வு பெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார் என நம்பகரமாகத் தெரிய வருகின்றது. வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் இருக்கிறார். தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார். அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வு பெறவுள்ளார் என்பது நம்பகமாக அறிய வருகின்றது. அடுத்து யார் என்பதில் குழப்பம் சிறிது இருந்தாலும், அவர் இராணுவ முகமே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பதவிக்கு வந்த புதிதில் சகோதரர் மகிந்த ராஜபக்ச வழங்கிய அழுத்தத்தால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனக்கு நம்பகமான சிவில் அதிகாரிகளை தேடிப் பிடித்து பதவிகளில் அமர்த்தினார். இப்போது எந்தத் தலையீடும் இல்லாமல் இராணுவத்தினரைப் …
-
- 3 replies
- 1.1k views
-
-
“சிறிலங்கா அரசாங்கத்துடனோ, எதிர்க்கட்சியினரிடமோ, சிங்களத் தரப்புக்களுடனோ நாங்கள் பேரம் பேச வேண்டியதில்லை. வல்லரசுகளுடனேயே பேரம் பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, இதற்கான அறிவுள்ள, ஆளுமையுள்ளதொரு தலைமைத்துவத்தையே தமிழ்மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் ஊடாக நிச்சயம் நாங்கள் முன்னோக்கிச் செல்லலாம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை” எனக் கூறியிருக்கின்றார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தினக்குரலுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான நேர்காணல்…. கேள்வி:- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் உங்களுக்கு நடந்த விடயங்கள் தொடர்பில…
-
- 2 replies
- 568 views
-
-
இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் செயற்படுவது யார்? கேள்வி எழுப்புகின்றார் விக்கினேஸ்வரன் Bharati May 22, 2020 இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் செயற்படுவது யார்? கேள்வி எழுப்புகின்றார் விக்கினேஸ்வரன்2020-05-22T18:47:54+00:00Breaking news, உள்ளூர் “இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்?” என வடமாகாண முள்ளாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: முள்ளிவாய்க்கால் நினைவுதினம் மே 18 அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந்தேன் ; “ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெ…
-
- 4 replies
- 924 views
-
-
யாழ்ப்பாணத்தில் பெண் சட்டத்தரணி ஒருவருடன் இராணுவத்தினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ள சம்பவெமான்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. யாழ்.நகரை அண்மித்த பகுதியில் குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனிஸ்ட பெண் சட்டத்தரணி தனது சிரேஸ்ட சட்டத்தரணியின் அலுவலகத்தில் கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 7 மணியளவில் வீடு திரும்பிய போது வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குறித்த பெண் சட்டத்தரணியை மறித்து சோதனையிட்டுள்ளனர். இதன்போது தான் சட்டத்தரணி என , தனது அடையாள அட்டையை அவர் இராணுவத்தினரிடம் காண்பித்துள்ளார். அவ்வேளை அவருடைய கைப்பையை தாம் சோதிக்க வேண்டும் என கோரிய இராணுவத்தினர் …
-
- 7 replies
- 958 views
-